ஞாயிறு, 21 டிசம்பர், 2014

வா[விமா]னம் தொட்ட ஊழல்...?
காங்கிரசு தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி,தற்போதைய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களுக்கு சொந்தமான விமானங்களில் அடிக்கடி பயணம் செய்த தகவல் அம்பலமாகியுள்ளது. 
இதில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, பலர், தனியார் விமானங்களில் பயணம் செய்ததும், இதற்கான செலவு கணக்கை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யாத அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
பிரபலமான, புலனாய்வு இணையதளமான, 'கோப்ரா போஸ்ட்' மத்திய விமான நிலையங்கள் ஆணையமான, ஏ.ஏ.ஐ., விடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அரசியல்வாதிகளின் விமான பயணங்கள் குறித்த தகவல்களை சேகரித்து, அதில் நடந்துள்ள விதிமுறை மீறல்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
============================================================
கோப்ரா போஸ்ட் பற்றி:

* 'கோப்ரா போஸ்ட்' என்பது, பிரபலமான புலனாய்வு இணையதளம்.

* 'தெஹல்கா' புலனாய்வு இணையதளத்தின் நிறுவனர்களில் ஒருவரான, அனிருத்தா பால் தான், கோப்ரா போஸ்ட்டின் நிறுவனர்.
* கடந்த, 2005ல், பார்லிமென்ட்டில் கேள்வி கேட்க, 11 எம்.பி.,க்கள் லஞ்சம் கேட்டதை, 'ஆபரேஷன் துரியோதனா' என்ற பெயரில், கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தியது.

* கடந்த, 2013ல், 'ஆபரேஷன் ரெட் ஸ்பைடர்' என்ற பெயரில், 'ஸ்டிங் ஆபரேஷன்' நடத்தி, கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிய வங்கிகளின் மோசடியையும், கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தியது.
============================================================

பல முக்கியமான அரசியல்வாதிகள், பெரும் தொழில் அதிபர்களுக்கு சொந்தமான விமானங்களில் தான், அடிக்கடி பயணித்துள்ளனர்.
 கட்சி தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமல்லாமல், சொந்த வேலைக்காகவும், தனியார் விமானங்களை இவர்கள் பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு பயணிக்கும் போது, சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனங்களுக்கு, இவர்கள் கட்டணம் அல்லது வாடகை செலுத்தினரா என்ற விவரம் இல்லை.
அமைச்சர் ராஜ்நாத் சிங்

தனியார் விமானங்களில் அடிக்கடி பயணித்தவர்கள் என, 'கோப்ரா போஸ்ட்' வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றவர்கள்.


1. சோனியா

2. ராகுல்

3. வீரப்ப மொய்லி

4. விஜய் பகுகுணா

5. கிரண் குமார் ரெட்டி

6. ஜோதிராதித்ய சிந்தியா

7. முகுல் வாஸ்னிக் (அனைவரும் காங்.,)

8. ராஜ்நாத் சிங்

9. அத்வானி

10. சுஷ்மா ஸ்வராஜ்

11. நிதின் கட்காரி

12. ஜெகதீஷ் ஷெட்டர்

13. சதானந்த கவுடா

14. எடியூரப்பா

15. சிவ்ராஜ் சிங் சவுகான்

16. ரமண் சிங் (அனைவரும் பா.ஜ.,)

16. சரத் பவார்

18. பிரபுல் படேல் (தேசியவாத காங்.,)

19. மாயாவதி (பகுஜன் சமாஜ்)

20. சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்)

21. பிரகாஷ் சிங் பாதல் (அகாலி தளம்)
அரசியல்வாதிகள் பயணிப்பதற்கு, தங்களின் விமானங்களை தொழில் அதிபர்கள் கொடுத்தால், அதற்கு கைமாறாக, அரசியல்வாதிகள், தொழில் அதிபர்களுக்கு சலுகை காட்டினரா என்பதை, விசாரிக்க வேண்டிய கடமை அரசுக்கும், விசாரணை அமைப்புகளுக்கும் உள்ளது.
 இவ்வாறு, அரசியல்வாதிகள் பயணித்த விமானங்களில் பல, உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையத்தின் முறையான அங்கீகாரம் பெறாதவை. அரசியல்வாதிகளின் பயணத்துக்கு விமானங்களை கொடுத்த தொழில் நிறுவனங்களில் பல, கடும் நிதி இழப்பில் சிக்கியுள்ளவை. 
அப்படி இருக்கும்போது, அரசியல்வாதிகள் பயணிப்பதற்கு, இலவசமாக விமானங்களை கொடுக்க வேண்டிய அவசியம், இந்த நிறுவனங்களுக்கு ஏன் வந்தது?

இது போன்ற முறைகேடான உதவிகளால்தான் கிங் பிஷர் போன்ற விமான நிறுவனங்கள் நட்டமடைந்த போது ஆளுவோர் 500 கோடி,1000 கோடிகள் என்று வங்கி மூலமாக  வரா கடன் கணக்கில் மக்கள் பணத்தை அள்ளி கடனாகக் கொடுக்க வைக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் பயணிப்பதற்கு, அடிக்கடி விமானங்களை கொடுத்த நிறுவனங்கள்


1. ஏர் ஒன் ஏவியேஷன்

2. இந்தோ பசிபிக் ஏவியேஷன்

3. இந்தியன் ஸ்டீல் ஒர்க்

4. ஜி.வி.கே., ஏவியேஷன்

5. அதானி குரூப்

6. கிங் ரோடர் அண்ட் ஏர்

7. பினாக்கிள் ஏர் சர்வீஸ்

8. ஜி.எம்.ஆர்., குரூப்

9. லைகர் ஏவியேஷன்

10. பிசினஸ் ஜெட்ஸ் இந்தியா

11. எஸ்.ஆர்.சி., ஏவியேஷன்

12. ஜெ.பி., குரூப்

13. ஆர்பிட் ஏவியேஷன் கிராப்ட்

14. இந்தியா பிளைசேப்

15. ஏரோடெக் ஏவியேஷன் இந்தியா

16. ஏர் சார்டர் சர்வீஸ்

17. பிரபாதம் ஏவியேஷன்
காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், வெளியுறவு அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான சுஷ்மா சுவராஜ் போன்ற அரசியல்வாதிகள், தனியார் நிறுவனங்களின் விமானங்களில் அடிக்கடி பயணித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். 
'தேர்தல் நேரங்களில் பிரசாரத்துக்காக தனியார் விமானங்களை பயன்படுத்தினால், அதற்கான செலவு கணக்கை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும்' என்ற விதிமுறை உள்ளது.
 ஆனால், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், விமான பயணத்துக்கான கணக்கு காட்டாத அரசியல்வாதிகளில் முக்கியமானவர்கள். 
இது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலும் கூட.அதை தெரிந்தும் கண்டு கொள்ளாத வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் குற்றவாளிகள்தான்.
=========================================================================================================
 தோழர் ஸ்டாலின் !
------------------------------------------------------
1924-ல் லெனின் மறைவுக்கு பின் பொறுப்பை ஸ்டாலின் தன் தோளில் 
ஏந்திக்கொண்டார்.
 பொருளாதாரத்தின் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச 
பொருளாதாரத்தை கட்டி உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக
 மாற்றினார். அதற்கான ஐந்தாண்டு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்தபோது
 மேலை நாடுகள் இத்திட்டம் தேறாது என தூற்றினர். 
ஆனால் அடுத்தடுத்து ஐந்தாண்டு திட்டங்களை வெற்றிகரமாக 
நிறைவேற்றினார் ஸ்டாலின். 
உலகிலேயே முதலாவதும் மிகப் பெரிய கூட்டுப்பண்ணைகளை ஸ்டாலின்
 உருவாக்கியதும் அந்த ஐந்தாண்டு திட்டத்தில்தான்.இந்தியாவில் நேரு வும் 
இதனைப்பார்த்தே ஐந்தாண்டு திட்டங்களை கொண்டு வந்தார்.
ஸ்டாலின் ஆட்சியில் ரஷியாவில் சோசலிச பொருளாதார வளர்ச்சியை 
பார்ப்பதற்காக முதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் 
சோவியத் யூனியனிக்கு பயணம் செய்தனர்.
இந்தியாவில் இருந்து இரவிந்தநாத் தாகூர், கலைவாணர், பெரியார் என பலர்
 பயணம் செய்தனர். 
இதில் தாகூர் சென்ற போது, மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்
 பாடத்திட்டத்தை பரிசோதிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்றார்.
தாகூர் தனது பேனாவைக்காட்டி ” இதை ஐந்து ரூபாய்க்கு வாங்கி 10 
ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும்” என்றார்.
உடனடியாக குழந்தைகள் “ஆறுமாதம் சிறை கிடைக்கும்” என்றனர். 
ஒரு பொருளை அதன் உள்ளடக்க விலையினை விட அதிகமான விலைக்கு
 விற்பது அங்கு குற்றமாக கருதப்பட்டது.
ஸ்டாலின் ஆட்சியில் ரஷ்ய முதலாளித்து பூதம் அரண்டு போயிருந்ததை
அவர்கள் உணர்ந்து கொண்டனர்..
அந்த முதலாள்த்துவ பூதம்தான் இன்று ஸ்டாலினை கொடுங்கோலராக 
காண்பிக்க முயற்சித்து வருகின்றன.

அருகம்புல் சாறின் மருத்துவ குணம்!!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாசுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்
1.நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
2.இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
3.வயிற்றுப் புண் குணமாகும்.
4.இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
5.நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
6.சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
7.நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
8.மலச்சிக்கல் நீங்கும்.
9.புற்று நோய்க்கு நல்ல மருந்து.
10.உடல் இளைக்க உதவும்
11.இரவில் நல்ல தூக்கம் வரும்.
12.பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
13.மூட்டு வலி நீங்கும்.
14.கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
15.நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.
அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்தமருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடை கொடுக்கலாம்.
கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம். அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்
சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு தாவரம் அருகம்புல்லாகும். அருகம்புல் சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் சிறந்த மருந்து. உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும், உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும்.
உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.
சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.
ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் பளபளப்பாகும்.

=======================================================================================================.