மருந்து கொள்[ளை]கை
அத்தியாவசிய மருந்துகளுக்கு, மத்திய அரசு, விலை கட்டுப்பாடு விதித்துள்ளதால், மருந்து நிறுவனங்கள் அவற்றை தயாரித்து வழங்குவதை குறைத்துவிட்டன .
இதனால், குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்து கிடைக்காமல், வேறு நிறுவனங்களின் மருந்துகளை அதிக விலைக்கு, பொதுமக்கள் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விலை கட்டுப்பாடு சட்டத்தின் கீழ், 2013ல், 348 அத்தியாவசிய மருந்துகளை மத்திய அரசு கொண்டு வந்தது .
இதனால், நோய் எதிர்ப்பு மருந்து, வலி நிவாரணி, நீரிழிவு, தலைவலி, புற்றுநோய் உட்பட, பல நோய்களுக்கான மருந்துகளின் விலையை, மருந்து தயாரிப்பாளர்கள் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், இம்மாதம் 11ம் தேதி, மேலும், 52 மருந்துகளின் விலையை, தேசிய மருந்து விலை கட்டுப்பாடு ஆணையம் (என்.பி.பி.ஏ.,) குறைத்தது. இதனால் தங்கள் லாபக் கொள்ளையில் பாதிப்பு அடைந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், தங்களின் லாப வரம்பு குறைந்ததால், விலை குறைக்கப்பட்ட மருந்துகளை தயாரிப்பதை குறைத்துவிட்டன.
எனவே, பல மருந்துகளுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
விலை கட்டுப்பாடு பட்டியலில், மருந்துகளை கொண்டு வரும்போது, அவை தட்டுப்பாடின்றி கிடைக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மத்திய அரசோ கண்டு கொள்ளவில்லை.
'அல்பியுமின்' என்ற உயிர் காக்கும் மருந்து, சந்தைக்கு வந்து நான்கு மாதங்களுக்கு மேலாகிறது.
அதேபோல், எல்ட்ராக்சின் (தைராய்டு), ஓசிட் (அமிலத் தன்மை), சி.சி.எம்., (கால்சியம்) மற்றும் சைலோரிக் போன்ற அத்தியாவசிய மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
=====================================================================
இந்தியாவின் பிரபல இயக்குனர் கே பாலச்சந்தர் உடல்நலக்குறைவால்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கமல்ஹாசன் வெளிநாட்டில் இருந்து மருத்துவமனைக்கு பேசியதாகவும் விரைந்து வருவதாக வும்தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை
அளித்து வருகின்றனர். சமீபத்தில்
அவருடைய மகன் கைலாசம் மரணமடைந்தார்.
அதன் பின்னர், அவர் மிகுந்த
மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது.
==============================================================================================================
இது சிங்கப்பூர், ஸ்வீடன், ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள தங்கம் இருப்பை விட அதிகம்.
மற்ற நாடுகளை விட இந்தியாவில் தங்கம் வாங்கும் பழக்கம் அதிக அளவில் உள்ளது. தங்கத்தின் மீதான இந்தியர்களின் மோகமே இதற்கு காரணம்.
மற்ற நாடுகளில் தங்கம் முதலீட்டுக்கான உலோகமாக கருதப்படும் நிலையில், இந்தியர்கள் இதனை எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்கும் முதலீடாக மட்டுமின்றி புனிதமான உலோகமாகவும் கருதுகின்றனர்.
இதன் மங்காத மஞ்சள் நிறம் இதற்கு முக்கிய காரணம். இதனால்தான், வெள்ளை நிறத்தில் மாற்றப்பட்ட தங்கத்தை விட மஞ்சள் தங்கம் அதிகம் விற்பனையாகிறது.
உலகின் தங்க தேவையில் சுமார் 30 சதவீதம் இந்தியாவில் உள்ளது. தங்கம் வாங்குவது அவசரகால பண தேவைக்கு அடமானம் வைக்க உதவுவதாக உள்ளது.
இந்த வகையில் நடுத்தர மக்கள் பலர் தங்கள் அவசர தேவைக்கு தங்கத்தை அடமானமாக வைத்து கடன் வாங்குகின்றனர்.
இதில் கேரளாவை சேர்ந்த முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ், முத்தூட் பின்கார்ப் ஆகியவை தங்கத்தின்பேரில் கடன் வழங்குகின்றன.
இவ்வாறு இந்த மூன்று நிறுவனங்களிலும் அடமானம் வைக்கப்பட்டுள்ள தங்கம் 195 டன்களாகும்.
இதில் தமிழ் நாட்டில் உள்ள தங்கமும் அடங்கும்.
காரணம் இம்மூன்று நிறுவனங்களுக்கும் தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் கிளைகள் உள்ளது.
இதில் முத்தூட் பைனான்ஸ் 116 டன், மணப்புரம் பைனான்ஸ் 40 டன் தங்கம், முத்தூன் பின்கார்ப் 39 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளன.
இந்தியர்களிடையே உள்ள தங்கம் மோகம், வரதட்சணை பழக்கங்களே இதற்கு காரணம் என இந்த துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது பணக்கார நாடுகளாக கருதப்படும் ஸ்வீடன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகளின் தங்கம் இருப்பை விட அதிகம்.
சிங்கப்பூர் 127 டன், ஸ்வீடன் 126 டன், ஆஸ்திரேலியா 80 டன், குவைத் 79 டன், டென்மார்க் 66.5 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளன.
உலக தங்க கவுன்சில் புள்ளிவிரப்படி 558 டன் தங்கம் இருப்புடன் இந்தியா 11வது இடத்தில் உள்ளது.
நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 93 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பலான தங்கம் சுவிஸ் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதியாகியுள்ளது.
இந்த தகவல், சமீபத்தில் சுவிஸ் வர்த்தக கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மாற்று முயற்சியின் ஒரு பகுதியாகவே சுவிஸ் நாட்டில் இருந்து தங்கம் அதிகளவில் இந்தியாவிற்கு ஏற்றுமதியாகிறது.