திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சும்மா இருத்தலே சுகம்


சும்மா இருத்தலே சுகம் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கலாம்.
சும்மா என்றால் ஒரு திரைப்படத்தில் வடிவேலு சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று கூறியிருப்பாரே அந்த சும்மா இல்லை.

தரையில் படுத்து மனதை ஒரு நினைவும்,அசை போடுதலுமின்றி ஒரு நிலைப் படுத்தி தரையில்  கை கால்களை தளர்த்தி படுத்துக் கிடப்பது.தலைக்கு தலையணை இருக்கக் கூடாது.
சுருக்கமாகக் கூறினால் சவம் போன்று கிடப்பது.

அதானால் தன இதற்கு சவாசனம் என்று பெயரும் கூட.

அப்படி சவமாகக் கிடக்கையில் நீங்கள் ஆரோக்கியமாக ,இளமையாக ,மகிழ்வாக இருப்பதாக எண்ணி மூன்று நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சை மெதுவாக விடுங்கள்.

அதன் பின்னர் பாருங்கள் அன்றைய தினம் உங்கள் மகிழ்ச்சியும்,சுறு,சுறுப்பையும்,தன்னமிக்கை எண்ணங்கள் மனம் முழக்க மலர்வதையும்.

அதிக பரபரப்பு மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்கள் அதற்காக வேறு எதையாவது செய்வதை விட, இந்த சவாசனத்தை செய்யலாம். 
இந்த ஆசனம் மூலம் உடல் தணிவடைதல், மன அமைதி, உடலுக்கு சீரான ஓய்வு கிடைக்கும். மிகவும் எளிதான ஆசனமாகவும், வீட்டில் எளிதாக செய்யவும் இயலும்.

சவாசனம்

காலையில் எழுந்து பல் துலக்கி காலைக் கடன்களை முடித்து விட்டு இந்த ஆசனத்தை செய்யலாம். தரையில் விரிப்பை விரித்து உயிரற்ற உடல் எவ்வாறு சலனமின்றி இருக்குமோ அதே போல படுக்க வேண்டும். 

பார்வைகள் சலனமின்றி உடலும்  உள்ளமும் தளர்ந்த நிலையில் மேல் நோக்கி பார்க்க வேண்டும்.

மூன்று நிமிடங்கள் வரை அவ்வாறு இருந்த பின் பாதங்களை வலது இடதாக  அசைத்து பின் எழுந்திருக்க வேண்டும். 

 இந்த ஆசனம் செய்வதால் மன இறுக்கம் அகலும். 
பெண்களுக்கு ஏற்படும் முதுகு தண்டு வலி, கழுத்து வலிகள் குணமாகும்.
இந்த ஆசனத்தை தவறாது செய்து வந்தால் ஆரோக்கியமும், சுறுசுறுப்பும் கிடைக்கும். மன அமைதி கிட்டும்.

செய்முறை


வி‌ரி‌ப்‌பி‌ல் மல்லாக்க படுக்கவும். தலை ‌வி‌ரி‌ப்‌பி‌ன் மேல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.  

கால்களை சற்றே அகல விரித்து வைக்கவும். துடைகளை விட்டு விலகியிருக்குமாறு கைகள் முழுதையும் இரு பக்கமும் நீட்டவும். உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்கவேண்டும். 
மூச்சுக்காற்றை இயல்பாக மூக்கு வழியாக சுவாசிக்கவும். உடல், மனம் ஆகியவற்றின் நினைவின்றி உறக்க நிலையில் இருக்க வேண்டும். 
இது போன்ற சாந்தமான நிலையில் நீங்கள் எதையும் உணரமாட்டீர்கள், எதையும் கேட்கமாட்டீர்கள், புலன் உணர்வு இருக்காது.

பலன்கள்

நடுத்தர வயதினோர் வேலைப்பளுவால் அடையும் மன, உடல் சோர்வுகளை போக்க இந்த ஆசனம் பெரிதும் உதவும். 

சவாசனத்தை பகல் நேரத்தில் குறைந்த இடைவெளி நேரத்தில் அதிகமாக செய்யவும். இதனால் பகலில் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியும், மேலும் இரவில் தேவைப்பட்டால் கண் விழிக்கவும் உதவிடும்.

ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். 

மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள். 
வயோதிகம் கட்டுப்படுத்தப்படும். 
சக்தி அதிகரிக்கும். தூக்கமின்மை விலகும். 
 • மனத்தையும் உடலையும் புத்துணர்வூட்டும். எந்த வகையான மன அழுத்தத்திலிருந்தும் உடனடி நிவாரணம். வேலைக்கும் ஓய்வுக்குமான சமச்சீர் நிலையை உருவாக்குவதில் உதவும்.
 • நடுத்தர வயதினோர் வேலைப்பளுவால் அடையும் மன, உடல் சோர்வுகளை போக்க இந்த ஆசனம் பெரிதும் உதவும். சவாசனத்தை பகல் நேரத்தில் குறைந்த இடைவெளி நேரத்தில் அதிகமாக செய்யவும். இதனால் பகலில் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியும், மேலும் இரவில் தேவைப்பட்டால் கண் விழிக்கவும் உதவிடும்.
 • ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள். வயோதிகம் கட்டுப்படுத்தப்படும். சக்தி அதிகரிக்கும். தூக்கமின்மை விலகும். தூக்க மாத்திரைகளின் தேவைகள் குறையும்.
 • பலவிதமான தொந்தரவுகள் உள்ள பல மணி நேர இடைஞ்சலான உறக்கத்தை விட ஒரு சில நிமிடங்களே என்றாலும் மனோ-உடல் தணிவு நிலை அதிக பலனளிக்கும். வயது முதிர்ந்தோருக்கு சவாசனம் ஒரு சிறந்த பயிற்சி.
 • மற்ற ஆசனங்களின் மூலம் விறைப்படையும் தசைகள் சவாசனத்தின் மூலம் தளர்வுறுகின்றன. எந்த யோக பயிற்சியின் போதும் இறுதியாக சவாசனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

========================================================================
இன்று,
ஆகஸ்ட்-31.

 • மலேசிய விடுதலை தினம்(1957)
 • கிர்கிஸ்தான் விடுதலை தினம்(1991)
 • வடகொரியா தனது முதலாவது செயற்கைகோளை ஏவியது(1998)


========================================================================
வைட்டமின் "சி"
வைட்டமின் சி சத்து எளிதில் ஆக்சிஜனுடன் சேரக்கூடியது. 
சராசரியாக, ஒருவருக்கு ஒரு நாளைக்கு 60 மில்லிகிராம் வைட்டமின் சி தேவை. கர்ப்பமுற்ற பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மேலும் 10-லிருந்து 30 மில்லிகிராம் வரை தேவை. 
தேவை என்றதும் வைட்டமின் சி அடங்கிய மாத்திரை, மருந்துகளைத் தேட வேண்டாம். 
நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, தக்காளி, பைனாப்பிள், தர்பூசணி, மாம்பழம், கொய்யாப்பழம், வாழைப்பழம், ஆப்பிள், பசலைக் கீரை, பொதினா, விளாம்பழம், முள்ளங்கி, பச்சை இலைகளுடன் காய்கறிகள், பால், பச்சைப் பட்டாணி, பீட்ரூட், கோஸ், காலிபிளவர், பச்சை மிளகாய், பரங்கிக்காய் போன்ற எண்ணற்ற பொருட்களில் வைட்டமின் சி உள்ளது.
உடல் நலன், மன நலனுக்கு...
வைட்டமின் சி பொதுவாக உடல்நலனுக்கு உகந்தது என்றாலும் குறிப்பாக ஆரோக்கியமான தோலினைப் பெறுவதற்கு மிகவும் தேவையானது. 
புகை பிடிப்பவர்கள், குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு 60 மில்லிகிராமைவிடக் கூடுதலாக வைட்டமின் சி தேவைப்படும். அதே போல் அதிக மனஅழுத்தம் உள்ளவர்கள், காய்ச்சல், கிருமித்தொற்று பீடித்தவர்கள், கர்ப்பமுற்ற பெண்கள், முதியவர்கள் ஆகியோருக்கு வைட்டமின் சி கூடுதலாகத் தேவைப்படும். மூளையில் செரடோனின் என்ற பொருள் உருவாக வைட்டமின் சி தேவை. 
இந்த செரடோனின் நரம்புகள் வழியாகச் செய்திகளை அனுப்பும் டிரான்ஸ்மீட்டராகச் செயல்படுகிறது. ரத்தத்தில் செரடோனின் போதுமான அளவில் இருப்பது ஒருவரை மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்க அவசியமானது. ஒருவரது நினைவாற்றலையும் கற்றல் திறனையும் தீர்மானிக்கக்கூடியதாக செரடோனின் இருப்பதால் மாணவர்களுக்கு வைட்டமின் சி அடங்கிய உணவைத் தருவது முக்கியம். 
கண்களைப் பாதுகாக்கவும் வைட்டமின் சி தேவை. 
செல்களுடைய வளர்சிதை மாற்றங்களில் வைட்டமின் சி முக்கியமான பங்கினை வகிக்கிறது. உடலின் எல்லா உறுப்புகளுக்கும் போதுமான சக்தி கிடைக்க ரத்த ஓட்டத்தில் வைட்டமின் சி கலந்திருக்க வேண்டும். 
எலும்புகள், ரத்த நாளங்கள், தசை நாண்கள் பலமாக இருக்க இந்த உயிர்ச்சத்து மிகவும் தேவை. உடலில் உள்ள கொழுப்புச் சத்தினை வைட்டமின் சி கட்டுக்குள் வைக்கிறது. இரும்புச் சத்தை உடல் உள்வாங்கும் திறனை வைட்டமின் சி அதிகரிக்கிறது. வைட்டமின் சி பற்றாக்குறை இருந்தால் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பல் வலி உண்டாகிறது. தமனிகளை விரிவடையச் செய்து மன அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து வைட்டமின் சி ஒருவரைப் பாதுகாக்கிறது. 
சாதாரண இருமலுக்கும் ஜலதோஷத்திற்கும் வைட்டமின் சி மருந்தாகிறது. புற்று நோயைத் தடுக்கவும் முதுமையைத் தள்ளிப் போடவும் கூட வைட்டமின் சி உதவுகிறது. வைட்டமின் சி கிருமிகளை அழிக்க உதவும் எதிர்ப்பொருட்களைரத்தத்தில் உருவாக்குகிறது. 
இதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
வயிற்றுப் புண், முகத்தில் தழும்புகள், பலவீனமான நுரையீரல், கண்-காது-மூக்கில் வரும் நோய்கள், ஒவ்வாமை போன்ற பல்வேறு உடல்நலக் கேடுகளை வைட்டமின் சி பற்றாக்குறை வரவழைக்கக் கூடியது. ரத்தம் உறைவதற்கு வைட்டமின் சி தேவை என்பதால், வைட்டமின் சி பற்றாக்குறை இருந்தால் காயங்கள் ஏற்படும்போது ரத்தப் போக்கு அதிக அளவில் இருக்கும். 
மொத்தத்தில் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் அற்புதமான வேதிப் பொருள்தான் வைட்டமின் சி.
                                                                                                              பேராசிரியர்.கே.ராஜு, 
========================================================================

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

அம்மா 110ல் தைத்த சட்டை

இன்றும் இந்திராணி தொடர்புடைய கொலை வழக்குத்தான் .
காரணம் இன்று வெளிவரும் த்திரைப்பட்ன்களை விட பரபர திருப்பங்களுடன் கவர்ச்சியும் கலந்துள்ள கதையாகத்தெரிகிறது .
ஆனால் உண்மைக்கதை.
எப்படியும் சில நாட்களில் இந்தி,தெலுங்கு ,மலையாளம்,தமிழ் என இந்த சம்பவம் திரைப்படமாக வரப்போகிறது.அதற்குள் நாம் முந்திக்கொண்டால் குறைந்த பட்சம் கதை நம்மது என்று வழக்காவது போட்டு பரபரப்பை உண்டாக்கலாம் அல்லவா?
 மகளை பிரபல டிவி பெண் அதிபர் இந்திராணி கொலை செய்த விவகாரத்தில் அடுத்தடுத்து மர்மங்கள் தொடர்கின்றன. 
ஷீனா கொலையில் தான் சம்பந்தப்பட்டுள்ளதாக இந்திராணியின் இரண்டாவது கணவன் சஞ்சீவ் கன்னா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். அதேசமயம், கொலையில் மூன்றாவது கணவன் பீட்டர் முகர்ஜி,  அவர் மகனும் ஷீனாவின் காதலன் ராகுலுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணையை திருப்பி விட்டுள்ளது. கொலை நடந்த அன்று நானும் மும்பையில் தான் இருந்தேன்; ஆனால், எனக்கு கொலை பற்றி தெரியாது என்று கூறிய இந்திராணி மகன் மிக்கேலை இப்போது போலீஸ், ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று துருவித்துருவி விசாரித்து வருகின்றனர். 
இவ்வளவு பரபரப்புக்கு இடையே பீட்டர், திடீரென போலீஸ் நிலையம் வந்து தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுத்து பூர்வமாக கடிதத்தை வக்கீல் மூலம் தந்தார். அவரிடம்  அதை வாங்காமல் எச்சரித்த போலீஸ், சம்மன் வந்ததும் ஆஜராகும் படி உத்தரவிட்டது. 
இதுவரை ஓடிஒளிந்த ஷீனாவின் காதலன் ராகுல், நேற்றுமுன்தினம் மும்பை வந்தான்; விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை கண்டதும் ஓட்டம் பிடித்தான். 
அவனும் இந்த கொலையில் முக்கிய பங்கு இருக்குமா என்ற சந்தேகம் இப்போது  ஏற்பட்டுள்ளது. 

கார் மீட்பு: இந்திராணி மகள் ஷீனாவை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கார் நேற்று மீட்கப்பட்டது. அந்த காரில் தடயங்கள் இருக்கிறதா என்று தடயவியல் நிபுணர்கள் ஆராய்ந்துள்ளனர். இந்திராணியின் கார் டிரைவர் சியாம் ராய் தான், கடைசி வரை இருந்து  ரெய்காட் காட்டில் ஷீனாவின்  உடல் மீது பெட்ரோல் ஊற்றியவன். 
அவனை அழைத்து வந்து காரில் சில பகுதிகளை தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர். ஏற்கனவே ஷீனாவின் மிஞ்சிய எலும்பு பகுதிகளை  டிஎன்ஏ பரிசோதனைக்காக ஜேஜே மருத்துவமனை டாக்டர்  குழு தான் சம்பவ இடமான ரெய்காட் காட்டில் சேகரித்தது. 
அதை போலீசிடம் ஒப்படைத்து விட்டது. தடயவியல்  அறிக்கைக்காக தான் போலீஸ் காத்திருக்கிறது.  அது ஷீனாவின் உடல் தான் என்று தெரியவந்தால் அடுத்து விசாரணை  சூடுபிடிக்கும். இந்திராணி, சஞ்சீவ் மற்றும் டிரைவர் சியாம் ஆகியோரின் போலீஸ் காவல் 31 ம் தேதியுடன்  முடிகிறது. அதன் பின்  அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட வேண்டும். 
ஆனால், அவர்களிடம் இன்னும் விசாரிக்க வேண்டியிருப்பதால் போலீஸ் காவலை நீட்டிக்க கோர்ட்டில் போலீஸ் மனு செய்ய உள்ளது. 

மகன் தப்பியது எப்படி: ஷீனாவின் தம்பி மிக்கேல்; இவன் அசாமில் இருக்கிறான். அவ்வப்போது மும்பை வந்து தாய் இந்திராணி, ஷீனாவை சந்தித்து  போவதுண்டு. அப்படி வரும் போதெல்லாம் அவன் பீட்டர் வீட்டில் தங்குவான். கொலை நடந்த அன்று அவன் மும்பையில் தான் இருந்துள்ளான். அவனை காரில் அழைத்துகொண்டு இந்திராணி, சஞ்சீவ் இருவரும் ஒரு  ஓட்டலுக்கு சென்றுள்ளனர். 
அங்கு அறை எடுத்து மூவரும் குளிர்பானம்  குடித்துள்ளனர். சில நொடிகளில் மிக்கேல் மட்டும் மயங்கி உள்ளான். திட்டமிட்டபடி காரியம் முடிந்ததை பார்த்த இந்திராணி, சஞ்சீவ் இருவரும் சிரித்தபடி அறையை  பூட்டி விட்டு கிளம்பினர். அடுத்த சில மணி நேரத்தில் தான் ஷீனா கொலை நடந்துள்ளது. கொலையை முடித்தபின் மீண்டும் அறைக்கு வந்த அவர்களுக்கு அதிர்ச்சி. அறையில் மிக்கேல் இல்லை. போலீஸ் விசாரணையில் இது பற்றி கூறிய மிக்கேல், ‘அறையில் எனக்கு மயக்கம் தெளிந்தபின் உடனே அங்கிருந்து தப்ப முடிவு செய்தேன். ஓட்டல் ஊழியர்கள் உதவியுடன் அறை கதவை திறந்து வெளியேறினேன். அவர்கள் என்னை கொல்லும் நோக்கத்துடன் தான் இப்படி செய்துள்ளனர்’ என்று கூறினான். ஆனால், போலீசுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அறையில் மூவருக்கும் என்ன  பேச்சு நடந்தது? பிரச்னை வந்ததா? சண்டை வந்ததா? அப்போது ஷீனா பற்றி பேசப்பட்டதா?  என்றெல்லாம் சந்தேகம் வரவே, மிக்கேலிடம் விரிவாக  விசாரிக்க தனிப்படை போட்டு, அவர்களுடன்  அனுப்பி விட்டனர். மிக்கேல் இப்போது இருக்குமிடம் தெரியவில்லை. அவனிடம் எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்த தனிப்படை திட்டமிட்டுள்ளது. அவன் கைது செய்யப்படுவானா? அப்ரூவர் ஆவானா என்பது போகப்போக தெரியும். 
பீட்டர் பங்கு என்ன: பீட்டர் முகர்ஜிக்கு சொந்தமான பங்களாவில் தான் இந்திராணி, அவர் மகள் ஷீனா,  மகன் மிக்கேல், பீட்டர் மகன் ராகுல் ஆகியோர் வசித்துள்ளனர். ராகுல் டேராடூன் உட்பட சில இடங்களில் இருப்பதுண்டு  என்பதால் மும்பைக்கு எப்போதாவது வருவதுண்டு. எப்படி ஷீனாவுடன் ராகுலுக்கு தொடர்பு ஏற்பட்டது என்பதும் குழப்பமாக உள்ளது.  பீட்டருக்கு தெரிந்து தான் இவர்களின் காதல் வளர்ந்துள்ளதாக  அவர் ஒப்புக்கொண்டாலும், இந்திராணிக்கும் இதில் பங்குண்டு என்று தான் போலீஸ் சந்தேகிக்கிறது. என் மகளை வளர்ப்பு மகன் ராகுல் காதலித்து திருமணம் செய்ய எப்படி ஒப்புக்கொள்வேன்;  அதனால் கோப்பட்டேன்’ என்று இந்திராணி சொல்லி வந்தாலும் அதை போலீஸ் அறவே நம்பவில்லை. பீட்டருடன் சேர்ந்தே பல பிசினஸ் விஷயங்களை செய்துள்ள இந்திராணி, இந்த விஷயத்தில் அவருக்கு தெரியாமல் செய்ய வாய்ப்பில்லை என்று திடமாக நம்புகிறது. அதனால் பீட்டருக்கும் ‘செக்’ வைத்துள்ளது. அவர் நடமாட்டம்  தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அவர் பெரும்பாலும் வக்கீலுடன் தான் பேசி வருவதாக கூறப்படுகிறது. போலீஸ் நிலையத்துக்கு சென்ற போது இந்திராணியுடன் சண்டை போட்டதாக தகவல் உள்ளது. ஆனால், அதை பீட்டர் மறுக்கிறார்; நான் இந்திராணியை பார்க்கவில்லை. எழுத்துபூர்வமாக என் கடிதத்தை தந்தேன்; ஆனால், போலீஸ்  கூப்பிடும் போது வர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டார் என்று மட்டும் விளக்கம் அளித்தார். 

பாஸ்போர்ட் அம்பலம்: ‘என் மகளை நான் கொல்வேனா? அவள் அமெரிக்காவில் உள்ளார்’ என்று ஆரம்பத்தில் பொய் சொன்னார் இந்திராணி. டிரைவர் சியாமை பார்த்ததும் அதிர்ந்து போய், அடுத்த கட்ட விசாரணையில் அழ ஆரம்பித்து விட்டார். இந்திராணி, சியாம், சஞ்சீவ் ஆகியோரிடம் தனித்தனியாகவும், கூட்டாகவும் விசாரித்து வந்த போலீஸ் அதிகாரிகள், அவர்கள் சொன்னதை வைத்து உடனுக்குடன் பல இடங்களில் அதிரடி ரெய்டும் நடத்தியுள்ளனர். மும்பை வீடு மட்டுமின்றி, ராகுல் தங்கி வந்த டேராடூன்  நகரில் உள்ள பங்களாவிலும் போலீஸ் சோதனை செய்தது; அங்குதான் ஷீனாவின் பாஸ்போர்ட் சிக்கியது. உடனே, மும்பைக்கு வரும்படி ராகுலுக்கு போலீஸ் உத்தரவிட்டது. நேற்றுமுன்தினம் இரவு மும்பை வந்த அவரிடம் போலீஸ் விசாரித்ததாக தெரிகிறது. ஆனால், அவர் வாய் திறக்கவே இல்லை. ஷீனாவுடன் இருந்த உறவு பற்றி மட்டும் சில விவரங்களை சொல்லியிருக்கிறார். எனினும் கொலையில் பங்கு இருக்கிறதா  என்று போலீஸ் தொடர்ந்–்து விசாரணை நடத்த உள்ளது. 

இந்திராணியிடம் கிடுக்கிப்பிடி: நேற்று இரவு வரை மிக்கேலிடம் ரகசிய இடத்தில் தான் போலீஸ் குழு விசாரணை நடத்தியது.  அவருக்கு இரவு உணவும் வாங்கி தந்து பொறுமையாக விஷயங்களை கறந்தது. அவர் சொன்ன சில தகவல்களும் முன்னுக்கு பின் முரணாக உள்ளதால் அவர் மீதும் கண் வைத்துள்ளது. மிக்கேல் சொன்ன தகவல்களை  அடிப்படையாக வைத்து மும்பையில்  போலீஸ் காவலில் உள்ள இந்திராணியிடம் விசாரித்தது. புதுப்புது விஷயங்களை போலீஸ் கேட்பதால் அவர் திணறிப்போனார். பல கட்டங்களில் கதறி அழுதார்;  அவர் அழுகையை நிறுத்தும் வரை பொறுமை காத்தனர் அதிகாரிகள்.  குறிப்பாக, இளம் வயதில் நடந்த உண்மை சம்பவங்களை பற்றி வெளிப்படையாக கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கூறிய  அவர், ஷீனா கொலை பற்றி மட்டும் தொடர்ந்து உண்மைகளை மறைத்து வருவதாக போலீஸ் திடமாக நம்புகிறது. நேற்று இரவு வரை மணிக்கணக்கில் அவரிடம் விசாரணை நடத்திய போலீஸ் இன்றும் அவரிடம் விசாரணையை தொடர உள்ளது. அதை தொடர்ந்து தான் பீட்டர், ராகுல் கைதாவரா என்பது தெரியும். 

பேஸ்புக்கில் புலம்பிய சஞ்சீவ் : பேஸ்புக்கில் சஞ்சீவ் கன்னா புலம்பிய சில விஷயங்கள்  தான் அவரை  போலீசிடம் காட்டிக்கொடுத்ததாக  தெரிகிறது. தவறு செய்தவன் என்றாவது சிக்குவான்  என்றெல்லாம் அவர் தந்த பேஸ்புக் தகவல்கள் பற்றி கேட்டபோது மழுப்பிய அவர் கடைசியில் ஒரு வழியாக நேற்று முன் தினம் நள்ளிரவு கொலை பற்றிய உண்மையை ஒப்புக்கொண்டார். ‘கொலை நடந்தது  எனக்கு தெரியாது; இந்திராணியுடன் காரில் சென்றது உண்மை. அப்போது ஷீனாவும் உடனிருந்தார். ஆனால், அதன் பின்  என்ன நடந்தது என்று தெரியாது; நான் காரில் தூங்கி விட்டேன்’ என்று கூறியபோது போலீஸ் அதிகாரிகள் கடுப்பாகி விட்டனர்.   அதன் பின் சற்று கடுமையாக கேட்டபின் உண்மைகளை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. 

பணத்துக்காக நடந்த கொலையா?: இந்திராணி சொன்ன கதையை எல்லாம்  போலீஸ் நம்பவில்லை. பணம் தான் இந்த கொலைக்கு முக்கிய காரணம் என்று நம்புகிறது. ராகுலிடம் விசாரித்தால் உண்மை வரும் என்று எண்ணியுள்ள போலீஸ், அவரிடம் இன்று விரிவாக விசாரணை நடத்த உள்ளது.

போலீஸ் நிலையத்துக்கு தாயுடன் வந்த ராகுல்: போலீஸ் விசாரணையில் நேற்று மாலை ராகுல் ஆஜரானார்.  அவரிடம் கேள்வி கேட்டபோது அவரின் தாய் சப்னம் உடனிருந்தார். அவர் பீட்டருக்கு முதல் மனைவி. சில மணி நேரத்தில் ராகுல் அங்கிருந்து கிளம்பி சென்றார். அவர் நிருபர்களிடம் வாய் திறக்கவில்லை. 

காட்டிக்கொடுத்த பாஸ்போர்ட்: டேராடூனில் ராகுல் வீட்டில் பாஸ்போர் கிடைத்தது பற்றி இந்திராணியிடம் போலீஸ் காட்டியபோது, அவர் அதிர்ந்து விட்டார். அமெரிக்காவில் ஷீனா இருக்கிறார் என்று ஏன் பொய் சொன்னீர்கள் என்று கேட்டதற்கு மீண்டும் அழுது விட்டார். அவரிடம் ஷீனா கொலை தொடர்பான நேரடி கேள்விகளுக்கு இப்போது அதிகாரிகள் வந்துள்ளனர். ஓரிரு நாளில் அவர் முழு வாக்குமூலம் அளிப்பார் என்று தெரிகிறது. 

அவமானத்தால் கூனிக்குறுகும் உறவினர்: பீட்டர், இந்திராணி என்று இரு தரப்பிலும் உள்ள குடும்ப உறவினர்கள், நண்பர்கள் என்ற பலரிடமும் போலீஸ் விசாரித்து வருகிறது. பலரும் இந்திராணி விஷயத்தை பற்றி கூனிக்குறுகினர்.  ஆனால், பல உறவினர்களும் தங்களுக்கு இந்திராணி மட்டுமல்ல, அவளின் தாய் இருந்தபோதே உறவு அறுந்துவிட்டது; அவர்களும் எங்களை மதிக்க மாட்டார்கள். எங்களுக்கு இந்த கொலை தொடர்பாக அவமானம் தான் என்று தெரிவித்துள்ளனர். அதனால் விரைவில் குற்றவாளிகள் பட்டியல் சுருங்கி , உண்மைகள் வெளிவரும் என்று தெரிகிறது. 
* கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்
* மூன்றாவது கணவன் சஞ்சீவ் ஒப்புதல் வாக்குமூலம்
* மகனையும்  கொல்ல நடந்த சதி திட்டமும் அம்பலம்
* போலீஸ் நிலையத்துக்கு வந்த பீட்டர் முகர்ஜிக்கு எச்சரிக்கை
* காதலன் வீட்டில் ஷீனா பாஸ்போர்ட் பறிமுதல்.
* 2012 ஏப்ரல் 24 ம் தேதி ஷீனா கொலை செய்யப்பட்டாள். அடுத்த சில நாளில்  போலீசுக்கு தகவல் தெரியவந்துள்ளது;  ஆனால், யாரோ அப்படியே பைலை மூடி விட்டனர்; அது யார்?
* கொலை நடந்த  அன்று மும்பையில் இந்திராணி, அவளின் இரண்டாவது கணவன் சஞ்சீவுடன் காரில் பயணித்துள்ளார் மகன் மிக்கேல்; கொலை நடந்தது தெரிந்தும்  ஏன் போலீசில் சொல்லவில்லை?
* பீட்டருக்கு கொலை பற்றி தெரிந்திருக்கிறது; அமெரிக்காவில் என் மகள் இருக்கிறாள் என்று போலீசில் இந்திராணி சொல்லும் போது, ஷீனா பாஸ்போர்ட் சிக்கியது. அது கிடந்த இடம் ராகுல் தங்கிய டேராடூன் வீடு. அப்படியானால் ராகுலுக்கும் கொலை பற்றி தெரியும் தானே.
* போலீஸ் கூப்பிடும் முன்பே கர் போலீஸ் நிலையத்துக்கு வந்து எழுத்துப்பூர்வ கடிதம் தந்தார் பீட்டர். அங்கிருந்த இந்திராணியை திட்டியுள்ளார். அவருக்கும் கொலை பற்றி தெரியும்.
* பீட்டருடன் சேர்ந்த பின், சஞ்சீவ் கன்னாவுடன் உறவை தொடர்ந்துள்ளார் இந்திராணி. இருவரும் சேர்ந்து தான் ஷீனாவை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளனர். அப்படியானால் சஞ்சீவுடன் பழகுவது பீட்டருக்கு தெரியாதா? 
இப்படி அடுக்கடுக்கான முடிச்சுகள்  அவிழ்ந்தால் தான் யார்  யாருக்கு கொலையில் தொடர்பு என்பது தெரியும்.
========================================================================
இன்று,
ஆகஸ்ட்-30.

 • சர்வதேச காணாமல் போனோர் தினம்
 • ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது(1835)
 • பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் இறந்த தினம்(1957)
 • கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 
  டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.
  நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம்
  திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு இவன் என் நாடக கம்பெனி ஆள் என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.
  அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ? அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே.
  என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நாடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா .
  என்.எஸ். கே லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்
  என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். 
  நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.
  அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் .
  ” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு
  ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டு தான் இறந்து போனார்
                                                                                                                                   - பூ.கொ.சரவணன்
 • ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி
 • ---------------------------------------------------------------------------------------------------------------------------------
முழு உடல் பரிசோதனைத் திட்டம்.
திமுக திட்டத்துக்கு அம்மா 110 ல் தைத்த சட்டை.


முழு உடல் பரிசோதனைத் திட்டத்தைத் தொடங்கிட திமுக ஆட்சியிலேயே 11-6-99 அன்று ஆணையிடப்பட்டுள்ளது. “முதல் அமைச்சருக்கு சந்தேகம் இருந்தால், தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய அரசாணையை வாங்கிப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
நான்காண்டுகளுக்கு முன்பும், மூன்றாண்டுகளுக்கு முன்பும் 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் கதியே இதுவென்றால், தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா அன்றாடம் பேரவைக்கு 110வது விதியின் கீழ் அறிக்கை படிப்பதற்காக மட்டுமே வருகை தந்து, படித்து விட்டுப் போய் விடுகிறாரே, இந்த அறிவிப்புகளுக்கு ஏதாவது பொருள் இருக்குமென்று கருத முடியுமா? அதிலும் முக்கியமான திட்டம் என்னவென்றால், அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்” தொடங்கப்படும் என்பதுதான். அதுவும் ஏதாவது புதிய திட்டமா என்றால் கிடையாது. ஏற்கனவே மருத்துவமனைகளில் நடைபெற்று வரும் திட்டம்தான். அதாவது ரத்த பரிசோதனை, ரத்தக் கொழுப்புப் பரிசோதனை, இதயப் பரிசோதனை போன்றவைகளை மருத்துவமனைகளிலே செய்து கொள்ளும் திட்டம். இதைத்தான் ஏதோ புதிய கண்டுபிடிப்பைப் போல அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் முழு உடல் பரிசோதனைத் திட்டத்தைத் தொடங்கிட திமுக ஆட்சியிலேயே 11-6-1999 அன்று ஆணையிடப்பட்டுள்ளது. “முதல் அமைச்சருக்கு சந்தேகம் இருந்தால், தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய அரசாணையை வாங்கிப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
அதிலும் அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் ஆண்களுக்கான திட்டமாம்! “அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம்” என்பது மகளிருக் கான திட்டமாம். இப்படி ஒரு அறிவிப்பு. இதையே கிராமத்தில் செய்துகொண்டால், அதற்கு “அம்மா ஆரோக்கியத் திட்டம்” என்று பெயராம்! இன்னும் சொல்லப் போனால் கிராமப் பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க ஏதுவாக “வருமுன் காப்போம் திட்டம்” என்ற பெயரிலே தி.மு. கழக ஆட்சியிலேயே 1997ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

========================================================================
உங்கள் பணத்தை வங்கிகள் 
ஏழு வழிகளில் திருடுகின்றன

பெரும்பாலானவர்களுக்கு தங்களுடைய வங்கிக் கணக்கி லுள்ள பணத்தைப் பராமரிப்பது தலை வலியாக உள்ளது. 
வங்கிக் கணக்கில் பணமே இல்லாதவர்களுக்கும் அது பிரச்சனைதான். ஏனெனில் வங்கிகள் எதிர்பாரா கட்டணங்களை உங்களுடைய கணக்கிலிருந்து வசூல் செய்து விடுகின்றன.
வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர் களின் கணக்கிலிருந்து பல்வேறு வழிகளில் கட்டணத்தை வசூல்செய்கின்றன. இதில் வாடிக்கையாளர் களின் கவனத்திற்கு போகாதவையும் கூட சில அடங்கும். இது சிறு சிறு கட்டணமாக இருந்தாலும் பெரிய தொகையாக சேர்ந்து விடும்.
வங்கி கட்டணத்தை தவிர்க்க உங்கள் வங்கியின் கட்டண சேவை யை முன் கூட்டியே அறிவது அவசியமாகும். 
கணக்கு தொடங்கும் போது, வெறும் படிவத்தை மட்டுமே நிரப்பிகொடுத்தால் போதும் என்று பூரிப்படைந்து விடாமல், உங்கள் சந்தேகங் கள் மற்றும் வங்கி கட்டணம் பற்றிய கேள்விகளை வங்கி ஊழியர்களிடம் கேட்டால் முறையாக பதில்களைப் பெற முடியும்.நமக்கு மறைமுகமாக விதிக்கப் படும் சில வகை கட்டணங்கள் எவை?
வட்டி விகிதம்
கிரெடிட் கார்டு உபயோகிப்போர் களிடம் மிகவும் பிரபலமாக இருப்பது வட்டி விகிதம். 
இது கிரெடிடு கார்டு நிறுவனம் நாம் பணத்தை திரும்ப செலுத்த வேண்டிய கடைசி தேதிக்குள் செலுத்தவில்லையெனில் அப்பணத்தின் மீது வங்கிகள் சில சதவீத வட்டியை நம் தலையில் கட்டிவிடும். இது மாதம் 2.5 சதவிகி தத்திலிருந்து 4 சதவிகிதம் வரை இருக்கும். 
இதை வருடத்திற்கு கணக் கிட்டால் 30 சதவிகிதத்திலிருந்து 48 சதவிகிதம் வரை உயரும்.
கணக்கு தொடங்குவதோடு இருந்து விடக்கூடாது. 
வங்கிக் கணக்கு தொடங்கி பணம் சேர்ப்பது நல்ல எண்ணம் தான். ஆனால் தொடங்கிய பின் உபயோகிக்காமல் இருந்தால் வங்கி கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். 
சாதாரணமாக வங்கிகள் இதற்கு 250 ரூபாயை கட்டணமாகவும் மற்றும் சேவை வரியையும் வசூலிப்பார்கள் இது சிறிய தொகையாக தெரிந்தாலும் சிறு துளி பெரு வெள்ளம் போல் பெரிய தொகையாக மாறும். 
இதைத் தவிர்க்க உபயோகிக்காத வங்கிக் கணக்கை மூடிவிடலாம்.
வெளிநாடுகளுக்குபணப் பரிமாற்றம் செய்தல்
வெளிநாடுகளுக்கு பணப் பரி மாற்றம் செய்யும் போது அதை இந்திய நாணயத்திற்கு மாற்ற உள்கட்டமைப்பு விகித மதிப்பின்படி மாற்றமும் செய்யப்படும். கிரெடிட் கார்டு வழங்குபவர்கள் பண பரிமாற்றம் செய்யும் தொகையிலிருந்து ஓரு குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கட்டணத் தொகையாக வசூலிப்பார்கள். 
இது குறைந்தபட்சமாக 250 ரூபாய் அல்லது பரிமாற்றத் தொகையிலிருந்து 3.5 சதவிகிதமாக இருக்கும்.
கிரேடிட் கார்டு
லிமிட்நீங்கள் வழங்கப்பட்ட கடன் தொகைக்கும் அதிகமாக தெரியாமல் உபயோகித்து விட்டீர்களா? அப்படி யானால் உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனம் அதற்கும் கட்டணத் தொகையை வசூலிப்பார்கள். 
எவ் வளவு தொகை அதிகமாக உபயோகித் திருக்கிறீர்களோ அதில் ஒரு குறிப் பிட்ட சதவிகிதத்தை கட்டணத் தொகையாக வசூலிப்பார்கள். 
இது அதிகபட்சம் 5 சதவிகிதமாக இருக்கும். 
ஒரு சில நிறுவனங்கள் எவ்வளவு சதவிகிதம் அதிகமாக உபயோகித்திருக்கிறீர்களோ அதையே கட்டணத் தொகையாகவும், வேறு சில நிறுவனங்கள் அதிகபட்சமாக 10 சதவிகிதமும் வசூலிப்பார்கள்.
காசோலை
நிறைய வங்கிகள் கட்டணத்தின் பேரில் அனைத்து வங்கிகளும் ஏற்கும் உள்ளூர் காசோலைகளை வழங்கி வருகின்றன. 
3 மாதங்களுக்கு ஒரு முறை இலவசமாக ஒரு காசோலை புத்தகம் வழங்கும் வங்கிகளும் இதில் அடக்கம். 
ஒரு காசோலைக்கு 3 முதல் 25 சதவிகிதம் கட்டணத்தில் வழங்கும் வங்கிகளும் உண்டு. வங்கி கட்டணம் பற்றிய விவரங்களை படித்து இம்மாதிரியான காசோலை தேவையில்லை எனில் பெறாமல் இருப்பது நல்லது. 
சில வங்கிகளில் இது போன்ற காசோலை புத்தகங்களை கொடுப்பதில்லை; மாறாக வேறுவேறு நகரங்களுக்கு பணப் பரிவர்த் தனைகளை நாம் செய்யும் போது அதிகபட்சமான பணத்தை கொடுப் பதற்கு நாம் தயாராக இருக்கச் செய் கின்றன.
ஏ.டி.எம் கட்டணங்கள்
நமக்கு இருக்கும் சேமிப்புத் தொகையிலிருந்து நாம் எடுக்கும் தொகைக்கு வங்கிகள் ஒரு கட்டணம் வைத்துள்ளன.
 பணத்தை நமது கைகளில் தரும் போது இந்த கட்ட ணம் பிடிக்கப்படுகின்றது. 
இதனால் வங்கி சேமிப்பில் இருக்கும் பணம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. 
ஒருவேளை பெருமளவில் பணத்தை எடுக்க முற்பட்டால் பெருந் தொகையை கட்டணமாக செலுத்த வும் தயாராக இருங்கள். இது பணம் செலுத்தும் கட்டணங்களைப் போல்பெருமளவில் இருக்கும். சில கிரெடிட்கார்டுகளை பணம் எடுக்க பயன் படுத்தும் போது அதற்கும் வங்கிகள் கட்டணங்கள் விதிக்கின்றன.
இதர கட்டணங்கள்
நேஷனல் எலக்ட்ரானிக் பன்டு டிரான்ஸ்பர்  மற்றும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட்இதை பற்றி எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். 
இந்த அமைப்புகள் ஒரு தனிப்பட்ட நபர் அல்லது எந்த நிறுவனமாக இருந்தாலும் பண சுழற்சியை செய்ய உதவுகின்றன. 
வங்கிகள் இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி அவர் களுக்கு பிற நாடுகளிலிருந்து இந்திய நாட்டில் துவங்கப்படும் வங்கிக் கணக்கிற்கு புதிய கட்டணங்களை அறிவித்துள்ளன. 
இதன் கட்டணங் கள் பெரும் தொகை அல்ல. 
ஆனால் பெருமளவில் இத்தகைய பணப் பரிமாற்றங்களை செய்யும் போது அதிக அளவில் கட்டணங்கள் வசூல் செய்ய முற்படுகின்றன.
நன்றி:தீக்கதிர்.
========================================================================

சனி, 29 ஆகஸ்ட், 2015

மெகா காதலர்கள்.ஒரு குற்றக் கதை!

செல்லமாக வளர்த்த தன் மகள் ஷீனாவை, பிரபல டிவி பெண்  அதிபர் இந்திராணி முகர்ஜி கொலை செய்ததற்கு காரணம், பணவெறியா...? 
கள்ளக்காதல் வெறியா...? 
என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 
இந்திராணியை ரகசியமான இடத்தில் தங்க வைத்து போலீஸ் அதிகாரிகள்  பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 
டிவி தொடர்களை மிஞ்சும் வகையில் நடந்த இந்த மிக கொடூரமான கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் இந்திராணி இதுவரை எந்த தகவல்களையும் கூறாததால் போலீசார், உண்மை காரணத்தை கண்டுபிடிப்பதில் திணறி வருகின்றனர். 

இந்திராணி முகர்ஜி
வரலாறு.?
பிரபலமாகும் முன் இவர் வேலைக்கு ஆள் எடுக்கும் கன்சல்டன்சியில் பணியாற்றி வந்தார். 

அதன் பின் டிவி உலகில் புகுந்தார்; பெரிய இடத்து சகவாசங்கள் அதிகரித்தன; பணமும் குவிந்தது; பதவிகளும் தேடி வந்தன. முதல் கணவர் சித்தார்த் தாசுடன் இருந்தபோது வரை சாதாரண பெண்மணி தான். இவர்களுக்கு பிறந்த மகள் தான் ஷீனா; மகன் மிக்கேல்; பணமும், நட்புகளும் அதிகரிக்கவே, வெளியுறவுகளும் அதிகரித்தன. 
இதன் விளைவு சித்தார்த்தை விட்டு பிரிந்தார் இந்திராணி. சஞ்சீவ் கண்ணா என்பவரை மணந்தார். அவரையும் கழற்றி விட்டு, பெரிய கையான ஸ்டார் டிவி முன்னாள் தலைவர் பீட்டர் முகர்ஜியை வளைத்து போட்டார். 

போதாதா, பீட்டரின் ஐஎன்எக்ஸ் மீடியாவின் தலைவரானார் இந்திராணி. பீட்டரை மணந்தபோது, தன் மகள் ஷீனா, மகன் மிக்கேலே தன் தங்கை, தம்பி  என்று தான் அறிமுகம் செய்தார் இந்திராணி. அப்போது பீட்டருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்திருந்தன. 
மூன்றாவது தான் இந்திராணி. அவருக்கு முதல் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுல். ஷீனா, மிகவும்  சொகுசாகவே வளர்ந்த டீன் ஏஜ் பெண். 
எங்கு போனாலும் புது கார் தான்; 
லட்சக்கணக்கில் தான் ஷாப்பிங் செலவுகள்; 
தினமும் ஆயிரக்கணக்கில் ஓட்டல் பில்; 
மாதத்துக்கு நான்கு முறை வெளிநாட்டு பயணம் என்று மிகவும் வசதியாக வளரந்தவள். 
மகன் மிக்கேலோ, அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்று விட்டார். 
இந்திராணியின் சகவாசங்கள் பிடிக்காததால் தான் ஒதுங்கி இருந்தார்.   

 கடந்த 2002 ல் பீட்டரை மணந்த பின் தான் இந்திராணி வாழ்வில் கோடிகள் கொட்டின. அதுவரை கடந்து போன இரண்டு திருமண வாழ்க்கையில் அனுபவிக்காத சொகுசுகளை இந்திராணி அனுபவிக்க ஆரம்பித்தார். பீட்டர் ஸ்டார் டிவி முன்னாள் தலைவராக இருந்ததுடன், ஸ்டார் எக்ஸ் டிவி மீடியாவை நடத்தி வந்தார். 
அவரை கணவராக்கி கொண்ட போது 2002ல் கூட இந்திராணி, கன்சல்டன்சியில் தான் பணியாற்றி வந்தார். ஆனால், பீட்டருடன் சேர்ந்த பின்  பாதை மாறியது. மும்பையில் ‘மார்லோ’ என்ற பெயரில் பல கோடியில் பங்களா வாங்கினார் பீட்டர். 
ஐஎன்எஸ் மீடியாவில் இந்திராணி துணை தலைவர்; தலைவர் பீட்டர்.  பீட்டருடன் வாழ்க்கை ஓராண்டில் கசந்து விட்டதோ என்னவோ, மீண்டும் சஞ்சீவ் கண்ணாவுடன் மீண்டும் கள்ள நட்பு ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக இருந்தபோது விதி என்ற மகள் பிறந்தாள். பீட்டருக்கும் இந்திராணிக்கும் பிறந்த ஒரு மகள் இருக்கிறாள். அவள் தான் மும்பை பங்களாவில் தங்கி வருகிறார். பீட்டருக்கு ஏற்கனவே முதல் மனைவியுடன் பிறந்தவன் தான் ராகுல். 
ராகுல் - ஷீனாவுக்கு காதல் மலர்ந்தது 2008 ல் தான். படிப்படியாக வளர்ந்து 2010ல் இருவரும் மும்பையில் ஒரு ஃப்ளாட்டில் ஒன்றாகவே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். 

 2012ல் ஷீனாவை கொலை செய்த சம்பவத்தில் பீட்டர் சிக்கவில்லை. 
காரில் ஷீனாவை ஏற்றிக்கொண்டு வலுக்கட்டாயமாக தூக்கமருந்தை வாயில் திணித்து, கழுத்தை நெரித்து கொலை செய்த விவகாரத்தில் சிக்கியது இந்திராணி, அவளின் இரண்டாவது கணவன் சஞ்சீவ் கண்ணா. இதில் ஷீனாவுக்கும் இந்திராணிக்கும் கொலை நடந்ததற்கு முன் பல முறை சண்டை நடந்துள்ளது. 
ஒரு பக்கம் சஞ்சீவுடன்  கள்ள உறவு வேண்டும்; இன்னொரு பக்கம் பீட்டரின் சொத்துக்கள் வேண்டும்; இது தான் இந்தராணியின் திட்டம். 
இதற்கு குறுக்கே வந்தாரா ஷீனா என்ற கோணத்தில் போலீஸ் விசாரிக்கிறது. 

இன்னொரு கோணம்:
 பீட்டரின் சொத்துக்களையும் பறித்து, சஞ்சீவ் கண்ணாவுடன் கள்ள உறவை மீண்டும் புதுப்பித்து கணவன் மனைவியாக வாழ்வது இந்திராணி போட்ட இன்னொரு திட்டம். இதற்காக, ஷீனாவை மட்டுமின்றி, மிக்கேலையும் ெகான்று விடுவது  என்று திட்டம் போட்டுள்ளார். காரணம்,  பின்னாளில் சொத்துக்களுக்கு உரிமை  கேட்க  கூடாது  என்பது தான். 

அவன், தனக்கு வளர்ப்பு அண்ணன் முறை வேண்டும் என்று ஷீனாவுக்கு தெரியுமா என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி. ராகுல், என் கணவர் பீட்டரின் மகன்;  அவனை காதலிக்க கூடாது; அண்ணனை தங்கை காதலிக்க முடியுமா என்று டயலாக் பேசி சண்டை போட்ட இந்திராணி வாயை மூட ‘தங்கை’ விவகாரத்தை கையிலெடுத்தாள் ஷீனா. ‘ஷீனா, மிக்கேல் இருவரும் என் தங்கை, தம்பி  என்று தானே சொல்லியிருக்கிறாய்; அந்த உண்மையை உடைத்து போட்டு விடுவேன். நீ சொன்னது பொய் என்று பீட்டரிடம் சொல்வேன்; அப்புறம் உன் கள்ளக்காதலையும் உடைப்பேன்’ என்று புயலாய் ஷீனா கிளம்பியதும் தான் இந்திராணி விக்கித்து போய் விட்டாள். 
பீட்டரிடம் சொல்லி விடுவாளோ, அப்படி சொன்னால், தானும் சஞ்சீவும் போட்ட பிளான் எல்லாம் தவிடுபொடி ஆகி விடும்; பீட்டரின் சொத்துகளும் போய்விடுமே என்று பயந்து போனாள் இந்திராணி; அதன் பின் தான் சஞ்சீவுடன் சேர்ந்து ஷீனாவை கொல்ல திட்டம் போட்டிருக்கிறாள் . 
இப்போது ?
ரகசியமான இடத்தில் தங்க வைத்து மணிக்கணக்கில் இந்திராணியிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர். 
ஆனால், அவரோ வாய் திறக்கவே இல்லை. 
திரும்பி திரும்பி, ‘முறையற்ற காதல்;
 என் வளர்ப்பு மகன் ராகுல்; அவனுடன் காதல் என்றால் எப்படி பொறுத்துக் கொள்வேன்’ என்றே சொல்லி வருகிறாள். ஆனால், போலீஸ் நம்பவில்லை. தொடர்ந்து பல  கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 மும்பை அருகே காட்டில் புதைக்கப்பட்ட ஷீனாவின் உடலை  தோண்டி எடுக்க போலீஸ் முயற்சி செய்தது. ஆனால், மூன்றாண்டு கடந்த நிலையில், ஷீனாவின் உடலில் எலும்புகள் தான் மிஞ்சியிருந்தன. 
உடலின் சில பகுதிகளும் மிகவும் உருமாறிய நிலையில் கிடைத்துள்ளதாக தெரிகிறது. மும்பையில் இருந்து 84 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரெய்காட் கிராம காட்டில் ஷீனாவின் உடல் பகுதிகள்  தொண்டி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
ஷீனாவின் மண்டை ஓடும் கிடைத்துள்ளது. 
சூட்கேசில் தான் ஷீனா உடல் பகுதிகள் இருந்தன. இப்போது இந்த தடயங்கள் எல்லாம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டன.

 குழப்பம்:

 இந்திராணி, அவளது இரண்டாவது கணவன் சஞ்சீவ் கண்ணா, மூன்றாவது கணவன் பீட்டர், இவர்களுடன் குடும்பம் நடத்திய முன்னாள் மனைவிகள், இவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் என்று  எல்லாரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். 
போலீசுக்கு இந்திராணிக்கு இதுவரை உள்ள  கணவர் கள், காதலர்கள் பற்றியே சரியான விவரம் தெரியவில்லை. 
விசாரண நடத்தும் போதே அவர்களுக்கு தலை சுற்றுகிறது. யார், யாருடைய கணவன், எந்த ஆண்டுகளில் கணவராக இருந்தார்கள் என்பதை உறுதி செய்யவே முடியாமல் போலீஸ் தவிக்கிறது. சரியான தகவல்களும் கிடைக்காததால், இந்திராணியை சுற்றிய மர்ம வலைகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்திராணி கார் டிரைவர் சியாம் ராய் சாட்சியம் தான் மிக முக்கியமானது; அவரிடம் விசாரணை செய்ததில் தான் இந்திராணியின் அட்டூழியங்கள்  அம்பலம் ஆயின. பத்தாண்டாக டிரைவராக இந்திராணியிடம் இருக்கும் சியாம், பல தகவல்களை கூறியுள்ளான்.   இவனை வைத்து தான் இந்திராணி, சஞ்சீவ் ஆகியோரை போலீஸ் வளைத்தது. 

பீட்டருக்கு தெரியாமல் சஞ்சீவ் கண்ணாவுடன் மீண்டும் உறவை புதுப்பித்த இந்திராணிக்கு , ஷீனாவை ெகால்ல எல்லா உதவியையும் செய்தது அவன் தான் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த 2012  ஏப்ரல் 24ல் ஷீனா கொல்லப்பட்டாள்.  முன் தினம், சஞ்சீவ் கண்ணா, கொல்கத்தாவில் இருந்து மும்பை வந்து, காரில் ரெய்காட் காட்டு பகுதிக்கு சென்று பார்த்து திரும்பியிருக்கிறான்; ஷீனாவை எப்படி ெகான்று எரிப்பது, அல்லது புதைப்பது என்று அவன் திட்டமிட்டிருக்கலாம். 

 பீட்டர் முகர்ஜி

பீட்டரிடம் போலீசார் இன்னும் முழுமையாக விசாரிக்கவில்லை; 
அவர் ஒரு டிவி பேட்டியில், ‘ராகுலும், ஷீனாவும் என்னிடம் தங்கள் காதலை சொன்னார்கள். அப்போது ‘நான் இந்திராணியின் தங்கை இல்லை; மகள் தான்’ என்று சொன்னாள் ஷீனா;  ஆனால், நான் நம்பவில்லை. இந்திராணி சொன்னது தான் உண்மை என்று நம்பி விட்டேன். 
இதை அவளிடமும் கேட்டேன்; அவள் கோபப்பட்டாள். ஆனால் பதில் சொல்லவில்லை’ என்று கூறினார். அவரின் தகவல்களும் இந்த கொலையில் முக்கிய துப்பாக இருக்கும் என்று போலீஸ் நம்புகிறது. ஆனாலும், அவரை இன்னும் போலீஸ் தொடாமல் இருக்கிறது. 

இந்திராணி அப்பா பெயர் தான், ஷீனாவின் பள்ளி, கல்லூரி  சான்றிதழ்களில் ‘அப்பா’ என்று பதிவு செய்துள்ளார் இந்திராணி. அப்படியானால், உண்மையில் இந்திராணியின் கணவன்  சித்தார்த்துக்கு பிறந்தவர்  அல்ல ஷீனா என்பதும் தெரியவந்துள்ளது. திட்டம் போட்டு தான் இந்திராணி இப்படி செய்துள்ளாள்; மோசடியே தன் வாழ்க்கையாக மாற்றி கொண்டிருக்கிறாள் என்று போலீஸ் சந்தேகிக்கிறது.  இந்திராணியின் தந்தை உபேந்திர குமார் போராவுக்கு  இப்போது 80 வயதாகிறது. ‘நான் ஷீனாவின் தந்தை அல்ல; என் மகள் இந்திராணியுடன் நான் பேசி ஆண்டுகள் ஆனது’ என்று மட்டும் கூறினார் அவர். இந்திராணிக்கு இப்படி வஞ்சம் தீர்க்கும் எண்ணம், மோசடி எல்லாம் சிறிய வயதில் இருந்தே வந்திருக்க வேண்டும்; அதனால் அவரின் குடும்பத்தினர் பலரிடமும் விசாரணை நடத்த  போலீஸ் திட்டமிட்டுள்ளது.

கமிஷனர் ராகேஷ் மரியாவிடம் கதறி அழுது தன் இளம் வயது சம்பவங்களை சொன்னாள்  இந்திராணி. ‘நான் 17 வயது இருக்கும்போது  என் தந்தையே என்ைன பலாத்காரம்  செய்து விட்டார்; அதன் மூலம் கருத்தரித்த நான் ஷீனாவை பெற்றேடுத்தேன். அதன் பின் தான் நான் திருமணம் செய்து கொண்டேன்’ என்று கூறினார்.  தொடர்ந்து, இந்திராணி உறவு முறை, திருமணங்கள், கள்ளக்காதல் பற்றி கேட்ட போலீசுக்கு தலை சுற்றியது. ஷீனா கொலை பற்றி ஆரம்பத்தில் வாயை திறக்காத அவர், ‘என் மகள் அமெரிக்காவில் இருக்கிறாள். அவளை வரச்சொல்கிறேன்’ என்றே  கூறிவந்தாள். ஆனால், டிரைவர் சியாம் ராயை அழைத்து வந்து அவர் முன் நிறுத்தியதும் இந்திராணி நடுங்கி விட்டார்.   

 விசாரணையில் இந்திராணி சில சமயம் கதறி அழுது சில தகவல்களை சொன்னதாக தெரிகிறது. 17 வயது இருந்தபோதே, இந்திராணிக்கு பிறந்து விட்டாள் ஷீனா. அதன்  பின்னே, சித்தார்த்துடன் திருமணம் நடந்தது; அதன் பின் தான் நட்புகள், பணம் எல்லாம் இந்திராணிக்கு குவிய ஆரம்பித்தது. ‘சிறிய வயதில் இருந்தே தொடர்ந்து ஒரு தவறு மேல், இன்னொரு தவறு என்று பல தவறுகளை செய்து இப்போது கொலையில் முடிந்துள்ளது; ஷீனா மட்டும் தான் கொல்லப்பட்டாரா, இதற்கு முன் ஏதாவது சம்பவம் நடந்துள்ளதா என்றும் போலீஸ் விசாரித்து வருகிறது. இந்திராணி சொன்னதை வைத்து மகன் மிக்கேலிடமும் விசாரணை நடந்து வருகிறது. 

கொல்கத்தா தொழிலதிபருக்கு இப்போது 60 வயதாகிறது. 
அங்குள்ள கிளப் வட்டாரத்தில் இவர் மிகவும் அறிமுகமானவர். ஷீனா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் இந்திராணியின் மாஜி கணவர் சஞ்சீவ் கண்ணாவும் இந்த தொழிலதிபரும் நெருங்கிய நண்பர்கள் என கூறப்படுகிறது. இந்திராணி உறவு வைத்திருந்த அந்த தொழிலதிபர் அரசியல் தொடர்புடைய ஒரு குடும்பத்தை சேர்ந்தவர். 
அவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன என பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திராணிக்கும் சஞ்சீவ் கண்ணாவுக்கும் பிறந்த பெண்ணின் பெயர் விதி. ஷீனாவும் மிக்கேலும் தனது குழந்தைகள் அல்ல என்று சித்தார்த் தாஸ் ஏற்கனவே கூறிவிட்டதாக தெரிகிறது. இதை வைத்து பார்த்தால் இந்திராணியின் வாழ்க்கையில் நான்காவது நபர் ஒருவர் இருக்கக்கூடும் என தெரிகிறது. 
இந்திராணிக்கு ஐந்தாவது நபர் ஒருவருடனும் தொடர்பு இருப்பதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அந்த நபருக்கும் ஒரு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
தொலைக்காட்சி மெகா தொடர் போல் நீளும் காதலர்கள் எண்ணிக்கை
பயம் தருகிறது .
========================================================================
* ஸ்டார் நியூஸ் சேனல் தலைவர் பொறுப்பில் இருந்த போது தான், இந்திராணியின் நட்பு கிடைத்தது பீட்டருக்கு. அவர்களின் கள்ளக்காதல் இறுகவே, அடுத்த திட்டம் தீட்டுகின்றனர். ஸ்டார் சேனல் பதவியை உதறி விட்டு, தனியாக ஐஎன்எக்ஸ் என்ற மீடியா குரூப்பை ஆரம்பித்தார்.
 
* அந்த குரூப்பின் தலைவர் பீட்டர்; துணை தலைவர் இந்திராணி;  பங்குதாரர்களிடம் இருந்து  முதலீடு திரட்டினர்; கோடிகோடியாக பணத்தை குவித்தனர்; அந்த பணத்தில் மூன்று சேனல்கள்  ஆரம்பித்தனர். இவர்களின் பணத்தை சிறிதுசிறிதாக  வெளியே எடுத்துவிட்டு, பங்கு தாரர்களின் பணத்தையும் சூறையாட திட்டம் போட்டனர். 

* இந்த நிலையில் நியூஸ் எக்ஸ் சேனல் உட்பட மூன்று சேனல்களும் நெருக்கடியில் சிக்கின; பங்கு முதலீடு போட்டவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அவர்களை ஏமாற்ற நியூஸ் 9 ரேட்டிங்கை காட்டி, சேனல் பிரபலமாக தான் இருக்கிறது என்று  பொய் கூறினர்.
 
* ஆனால், சேனல் கவலைக்கிடமான நிலையில் தத்தளித்தது. காரணம், அதில் போட்ட பணம் பெரும்பாலும் சுரண்டப்பட்டதே காரணம்.  பல கோடிகள் சுருட்டப்பட்டது தெரியவந்தது. 

* கிட்டத்தட்ட 168 கோடி ரூபாய் வரை சுருட்டி விட்டு  இருவரும் விலகியதாக பேட்டி ஒன்றில் வேதனையுடன் கூறினார்  நியூஸ் எக்சில் பணியாற்றிய பிரபல பத்திரிக்கையாளர் வீ்ர் சிங்வி. 

* 2007 ல் ஐஎன்எக்ஸ் குரூப்பில் நுழைந்த இந்திராணி, பீட்டர் இரண்டே ஆண்டில் வெளியேறி விட்டனர். இந்த சேனல்கள் பணம் இழப்புக்கு இவர்கள் காரணமா என்றும் போலீஸ் விசாரித்து வருகிறது. 

========================================================================
இன்று,
ஆகஸ்ட்-29.
 • இந்திய தேசிய விளையாட்டு தினம்
 • செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது(708)
 • பிரேசிலை தனி நாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது(1825)
 • மைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்(1831)
========================================================================
      இன்னும் 25 ஆண்டுகளில் 2040இல் நடக்கும் போர்களின் காரணமாக குடிநீர்தான் இருக்குமாம்.


90 முதல் 95 வயது கொண்டோர் நடைப் போட்டியில் 10 கிலோ மீட்டர் துரத்தை 92 நிமிடத்தில் கடந்து 
தங்கப்பதக்கம் பெற்ற சிறிராமுலு .முன்னாள் படை வீரார்.
உலகின் இவ்வார  பரபர புகைப்படங்கள் சில.


வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

சொத்துக் குவிப்பு குமாரசாமி!"சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி, விதிமுறைகளை மீறி, பெங்களூருவிலும், மைசூருவிலும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வெண்டும் என்றும்  மனு வழங்கியுள்ளனர்.

தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து, 'கர்நாடகா பிரஷ்ட்டா நீர் மூலனா வேதிகே' என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஊழலுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி, கடந்த, 24ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், அவர் மீது, சொத்து குவிப்பு புகார் கிளம்பி உள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், குமாரசாமியிடம் விசாரணை நடத்த உத்தர விடும்படி, ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கர்நாடகா பிரஷ்ட்டா நீர் மூலனா வேதிகே அமைப்பின் தலைவர் ராமலிங்க ரெட்டி, புகார் மனு அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:-

*கடந்த, 1997ல், குமாரசாமி, கோலார் மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றியபோது, கர்நாடக வீட்டு வசதி வாரியம், கெங்கேரியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை ஒதுக்கியது. 

* பல்லாரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றிய போது, கெங்கேரி பிளாட் ஒதுக்கீட்டை ரத்து செய்து, அதற்கு பதிலாக, மைசூருவில், தனி வீடு ஒன்றை பெற்று உள்ளார்.

* கர்நாடக மாநில காதி மற்றும் கிராம தொழில் வாரியத்தில், முதல் பிரிவு உதவியாளராக பணியாற்றி வந்த குமாரசாமி மனைவி நாகரத்தினம்மா, பி.டி.ஏ.,வுக்கு விண்ணப்பித்த போது, தன் கணவர் பெயரில் உள்ள வீடு குறித்த தகவல்கள் எதையும் குறிப்பிடவில்லை. இதனால், பி.டி.ஏ., அதிகாரிகள் வீட்டு மனை ஒதுக்கீடு செய்தனர்.
சொத்து குவிப்பு விடுவித்தவரே ?
* குமாரசாமி, தானாக முன்வந்து, தன் சொத்து விவரங்களை, கர்நாடக உயர் நீதிமன்ற 
வெப்சைட்டில் வெளியிட்டபோது, குமார பார்க் மேற்கு பகுதியில் உள்ள போலஸ்குட்டஹள்ளியில் உள்ள, 'திவ்யா மேனர் அபார்ட்மென்ட்'டில், 29.47 லட்சம் ரூபாய்க்கு, பிளாட் ஒன்றை வாங்கியதாக தெரிவித்தார். 

மேலும், 2006ல், ஜூடிஷியல் ஊழியர்கள் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் மூலமாக, சிவநகர் ஜூடிஷியல் லே அவுட்டில், 4,000 சதுர அடி கொண்ட வீட்டுமனை பெற்றுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.

* பெங்களூரு உட்பட, பல இடங்களில், அசையா சொத்துகளை வாங்கியதோடு, அதை மறைத்ததற்கான தகவல்களை, நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்றுள்ளோம்.

குமாரசாமியும், அவரது மனைவியும் பெங்களூரு, மைசூருவில் வாங்கியுள்ள சொத்துகள் குறித்து விசாரணை நடத்துவதோடு, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

முன்பு நமது சுரனில் வெளியான  செய்தி:
“ஆயிரம் வழக்குகளுக்கு மேல் விசாரித்துள்ள அவர் அதில் சரிபாதி வழக்குகளில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்துள்ளார். ஆனால் பெரிய வழக்குகளிலும், பிரபல வழக்கு களிலும் விசாரணை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பையே வழங்கியுள்ளார்.
இதற்கு உதாரணமாக முத்திரைத்தாள் மோசடி மன்னன் கரீம் தெல்கி, சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, பி.டி. பருத்தி போன்ற வழக்குகளை கூறலாம். அதே போல நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கம்பாளப்பள்ளி கிராமத்தில் 7 தலித்துகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ‘தலித் படுகொலைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை’ எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்தார்.
வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெறுகிற குமாரசாமி மீது இதுவரை பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் இல்லை. இருப்பினும் தவறான ஆவணங்களை தாக்கல் செய்து இரு வீடுகள் பெற்றதாக புகார் எழுந்தது. அப்போது இவருடன் சர்ச்சையில் இடம்பிடித்த‌ ஹெச்.எல். தத்து, குமாரசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தார்.”
========================================================================
இன்று,
ஆகஸ்ட்-28.
 • வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்(1789)
 • ஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்(1609)
 • குவைத்தை தனது ஒரு பகுதியாக ஈராக் அறிவித்தது(1990)
 • சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது(1845)
 • காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்(1898)


========================================================================
உலகம் அறியாத ஒன்று!
59 வருடங்களுக்கு முன் இந்தியாவில், உலகத்தில் எவருமே அறியாமல் எட்டுபேர் கொண்ட குழு மட்டுமே அறிந்த ஒன்று நடந்தது.
ஆம்! 
இந்திய அரசாங்கத்தின் முடிவு, ஆயுள்இன்சூரன்சை தேச உடமையாக்கும் முடிவு, மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டது.இதனை நடைமுறைப்படுத்த தேவையான அவசரச் சட்டம் மிக மிக ரகசியமாக தயாரிக்கப்பட்டது.திறமையாக, எந்த சிக்கலும் ஏற்படாததாக, பார்த்துப்பார்த்து கவனமாக அமல்படுத்த திட்டம் தீட்டப்பட்டது.
அன்று இதனைச் சாதித்த நிதி அமைச்சர் சி.டி .தேஷ்முக், தன்னுடைய வரலாற்று நூலில் இதனை குறிப்பிடுகிறார்:“நான் எச்.எம் படேலை, வர்த்தக அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியாரை சந்திக்க அனுப்பினேன். 
அவருடைய சம்மதத்தை பெற -பிரதமரின் ஆமோதிப்பை பெற-அகில இந்திய ரேடியோவின் டைரக்டர் ஜெனரல் மூலமாக இன்று இரவு நிதியமைச்சர் நாட்டுமக்களுக்குஒரு அறிவிப்பு செய்யவிருக்கிறார் என்று செய்தி சொல்ல !
என்ன சொல்லவிருக்கிறேன் என்பதை டைரக்டர் ஜெனரலுக்கும் சொல்லவேண்டாமென்று கூறிவிட்டேன்.”அன்று இரவு ஒரு அவசரச் சட்டம் தயாராக இருந்தது. 
அன்று இரவு அது கையெழுத்தாயிற்று. மறுநாள் காலை 9 மணிக்கு இதற்காக பொறுக்கி எடுக்கப்பட்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள். அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அதிகார உத்தரவைக் காட்டி அலுவலகத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆயுள் இன்சூரன்ஸ் தேச உடமையாக்கப்பட்டது. இது இந்திய அரசாங்கத்தால் மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட, இனி எப்போதும் நடத்த முடியாத சம்பவமாகும்.
ஏன் இவ்வளவு ரகசியம்?
முன்னமேயே தெரிந்திருந்தால், கோடிக்கணக்கான ரூபாய் கம்பெனி பணத்தை முதலாளிமார்கள் தங்கள் சொந்த வங்கிக் கணக்கிற்குமாற்றிவிடுவார்கள் என்பதுதான் காரணம்.
எச்.எம்.படேல், பி.கே.கவுல், எ.ராஜகோபாலன் ஆகிய மூவரும்தான் தளபதியாகச் செயல்பட்டார்கள். அவர்களுக்கு உதவியாக வையாபுரி, எம்.ஐ.ராவ் ஆகியோர் இருந்தனர். இந்த நடவடிக்கையை அமைச்சரவையின் ஆமோதிப்புக்காக வைக்கவில்லை. 
பிரதமரிடம் மட்டும் சொல்லிவிட்டு -அதுவும் தேதி குறிப்பிடாமல் சொல்லிவிட்டு செய்தார்கள் !
பல்வேறு துறையைச் சேர்ந்த 47 அதிகாரிகளை முக்கிய நகரங்களுக்கு 17ம்தேதியே அனுப்பினார்கள். அவர்களுக்கு ஏன் செல்கிறோம், என்பதைச் சொல்லவில்லை. 
அவர்களிடம் சீல் வைக்கப்பட்ட கவர்கள் கொடுக்கப்பட்டன. 
அதில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.இந்த அதிகாரிகளுக்கான பயணச் செலவுக்கான பணத்தை அரசு கஜானாவிலிருந்து எடுக்கவில்லை. மூத்த அதிகாரிகள் தங்கள் சொந்த வங்கிக்கணக்கிலிருந்து கொடுத்தார்கள். ரகசியம் அந்த அளவு காக்கப்பட்டது !19-1-56 அன்று இரவு 8.30 க்கு நிதி அமைச்சர் வானொலி மூலம் இன்சூரன்ஸ் நிர்வாகம் அரசு வசம் வருவதற்கான அவசரச் சட்டம்பற்றி அறிவித்தார்.கம்பெனி முதலாளிகள் அவசரச் சட்டம் பற்றிய விதிகளை அறிய தொலைபேசியில் காத்துக் கிடந்தனர். 
மறுநாள் 20-1-1956 அன்று விடிந்ததும் அந்தந்த அலுவலக வாயிலில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கதவு திறக்க காத்திருந்தனர்.கம்பெனியின் கணக்குப் புத்தகங்களில் கோட்டைப் போட்டு கையெழுத்திட்டனர். 
வழக்கம் போல வர்த்தகம் எந்த பாதிப்புமில்லாமல் தொடர்ந்தது !
இப்படி ஒரு நடவடிக்கைக்காக 1951ம் ஆண்டிலிருந்து போராடியது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.
அப்படி நாட்டுடமையாக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டு கழகத்தின் வரவு செலவு ஆண்டுக்கு பல்லாயிரம் கோடிகள் .அவற்றை இன்றைய மோடி அரசு மீண்டும் தனியார் அந்நியர்களிடம் ஒப்படைக்கப் பாடு படுகிறது.
நேற்றைய தனியார் நிறுவனங்கள் பங்கு வீழ்ச்சியால்  இந்தியா தடுமாறிய போது பங்கு சந்தையில் தந்து கோடிகளை  கொட்டி பங்கு களை வாங்கி பங்கு சந்தையின் மூர்ச்சையை தெளிவித்தது எல்.ஐ.சி.தான்.

- காஸ்யபன்
========================================================================