திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சும்மா இருத்தலே சுகம்


சும்மா இருத்தலே சுகம் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கலாம்.
சும்மா என்றால் ஒரு திரைப்படத்தில் வடிவேலு சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று கூறியிருப்பாரே அந்த சும்மா இல்லை.

தரையில் படுத்து மனதை ஒரு நினைவும்,அசை போடுதலுமின்றி ஒரு நிலைப் படுத்தி தரையில்  கை கால்களை தளர்த்தி படுத்துக் கிடப்பது.தலைக்கு தலையணை இருக்கக் கூடாது.
சுருக்கமாகக் கூறினால் சவம் போன்று கிடப்பது.

அதானால் தன இதற்கு சவாசனம் என்று பெயரும் கூட.

அப்படி சவமாகக் கிடக்கையில் நீங்கள் ஆரோக்கியமாக ,இளமையாக ,மகிழ்வாக இருப்பதாக எண்ணி மூன்று நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சை மெதுவாக விடுங்கள்.

அதன் பின்னர் பாருங்கள் அன்றைய தினம் உங்கள் மகிழ்ச்சியும்,சுறு,சுறுப்பையும்,தன்னமிக்கை எண்ணங்கள் மனம் முழக்க மலர்வதையும்.

அதிக பரபரப்பு மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்கள் அதற்காக வேறு எதையாவது செய்வதை விட, இந்த சவாசனத்தை செய்யலாம். 
இந்த ஆசனம் மூலம் உடல் தணிவடைதல், மன அமைதி, உடலுக்கு சீரான ஓய்வு கிடைக்கும். மிகவும் எளிதான ஆசனமாகவும், வீட்டில் எளிதாக செய்யவும் இயலும்.

சவாசனம்

காலையில் எழுந்து பல் துலக்கி காலைக் கடன்களை முடித்து விட்டு இந்த ஆசனத்தை செய்யலாம். தரையில் விரிப்பை விரித்து உயிரற்ற உடல் எவ்வாறு சலனமின்றி இருக்குமோ அதே போல படுக்க வேண்டும். 

பார்வைகள் சலனமின்றி உடலும்  உள்ளமும் தளர்ந்த நிலையில் மேல் நோக்கி பார்க்க வேண்டும்.

மூன்று நிமிடங்கள் வரை அவ்வாறு இருந்த பின் பாதங்களை வலது இடதாக  அசைத்து பின் எழுந்திருக்க வேண்டும். 

 இந்த ஆசனம் செய்வதால் மன இறுக்கம் அகலும். 
பெண்களுக்கு ஏற்படும் முதுகு தண்டு வலி, கழுத்து வலிகள் குணமாகும்.
இந்த ஆசனத்தை தவறாது செய்து வந்தால் ஆரோக்கியமும், சுறுசுறுப்பும் கிடைக்கும். மன அமைதி கிட்டும்.

செய்முறை


வி‌ரி‌ப்‌பி‌ல் மல்லாக்க படுக்கவும். தலை ‌வி‌ரி‌ப்‌பி‌ன் மேல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.  

கால்களை சற்றே அகல விரித்து வைக்கவும். துடைகளை விட்டு விலகியிருக்குமாறு கைகள் முழுதையும் இரு பக்கமும் நீட்டவும். உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்கவேண்டும். 
மூச்சுக்காற்றை இயல்பாக மூக்கு வழியாக சுவாசிக்கவும். உடல், மனம் ஆகியவற்றின் நினைவின்றி உறக்க நிலையில் இருக்க வேண்டும். 
இது போன்ற சாந்தமான நிலையில் நீங்கள் எதையும் உணரமாட்டீர்கள், எதையும் கேட்கமாட்டீர்கள், புலன் உணர்வு இருக்காது.

பலன்கள்

நடுத்தர வயதினோர் வேலைப்பளுவால் அடையும் மன, உடல் சோர்வுகளை போக்க இந்த ஆசனம் பெரிதும் உதவும். 

சவாசனத்தை பகல் நேரத்தில் குறைந்த இடைவெளி நேரத்தில் அதிகமாக செய்யவும். இதனால் பகலில் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியும், மேலும் இரவில் தேவைப்பட்டால் கண் விழிக்கவும் உதவிடும்.

ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். 

மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள். 
வயோதிகம் கட்டுப்படுத்தப்படும். 
சக்தி அதிகரிக்கும். தூக்கமின்மை விலகும். 
  • மனத்தையும் உடலையும் புத்துணர்வூட்டும். எந்த வகையான மன அழுத்தத்திலிருந்தும் உடனடி நிவாரணம். வேலைக்கும் ஓய்வுக்குமான சமச்சீர் நிலையை உருவாக்குவதில் உதவும்.
  • நடுத்தர வயதினோர் வேலைப்பளுவால் அடையும் மன, உடல் சோர்வுகளை போக்க இந்த ஆசனம் பெரிதும் உதவும். சவாசனத்தை பகல் நேரத்தில் குறைந்த இடைவெளி நேரத்தில் அதிகமாக செய்யவும். இதனால் பகலில் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியும், மேலும் இரவில் தேவைப்பட்டால் கண் விழிக்கவும் உதவிடும்.
  • ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள். வயோதிகம் கட்டுப்படுத்தப்படும். சக்தி அதிகரிக்கும். தூக்கமின்மை விலகும். தூக்க மாத்திரைகளின் தேவைகள் குறையும்.
  • பலவிதமான தொந்தரவுகள் உள்ள பல மணி நேர இடைஞ்சலான உறக்கத்தை விட ஒரு சில நிமிடங்களே என்றாலும் மனோ-உடல் தணிவு நிலை அதிக பலனளிக்கும். வயது முதிர்ந்தோருக்கு சவாசனம் ஒரு சிறந்த பயிற்சி.
  • மற்ற ஆசனங்களின் மூலம் விறைப்படையும் தசைகள் சவாசனத்தின் மூலம் தளர்வுறுகின்றன. எந்த யோக பயிற்சியின் போதும் இறுதியாக சவாசனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

========================================================================
இன்று,
ஆகஸ்ட்-31.

  • மலேசிய விடுதலை தினம்(1957)
  • கிர்கிஸ்தான் விடுதலை தினம்(1991)
  • வடகொரியா தனது முதலாவது செயற்கைகோளை ஏவியது(1998)


========================================================================
வைட்டமின் "சி"
வைட்டமின் சி சத்து எளிதில் ஆக்சிஜனுடன் சேரக்கூடியது. 
சராசரியாக, ஒருவருக்கு ஒரு நாளைக்கு 60 மில்லிகிராம் வைட்டமின் சி தேவை. கர்ப்பமுற்ற பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மேலும் 10-லிருந்து 30 மில்லிகிராம் வரை தேவை. 
தேவை என்றதும் வைட்டமின் சி அடங்கிய மாத்திரை, மருந்துகளைத் தேட வேண்டாம். 
நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, தக்காளி, பைனாப்பிள், தர்பூசணி, மாம்பழம், கொய்யாப்பழம், வாழைப்பழம், ஆப்பிள், பசலைக் கீரை, பொதினா, விளாம்பழம், முள்ளங்கி, பச்சை இலைகளுடன் காய்கறிகள், பால், பச்சைப் பட்டாணி, பீட்ரூட், கோஸ், காலிபிளவர், பச்சை மிளகாய், பரங்கிக்காய் போன்ற எண்ணற்ற பொருட்களில் வைட்டமின் சி உள்ளது.
உடல் நலன், மன நலனுக்கு...
வைட்டமின் சி பொதுவாக உடல்நலனுக்கு உகந்தது என்றாலும் குறிப்பாக ஆரோக்கியமான தோலினைப் பெறுவதற்கு மிகவும் தேவையானது. 
புகை பிடிப்பவர்கள், குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு 60 மில்லிகிராமைவிடக் கூடுதலாக வைட்டமின் சி தேவைப்படும். அதே போல் அதிக மனஅழுத்தம் உள்ளவர்கள், காய்ச்சல், கிருமித்தொற்று பீடித்தவர்கள், கர்ப்பமுற்ற பெண்கள், முதியவர்கள் ஆகியோருக்கு வைட்டமின் சி கூடுதலாகத் தேவைப்படும். மூளையில் செரடோனின் என்ற பொருள் உருவாக வைட்டமின் சி தேவை. 
இந்த செரடோனின் நரம்புகள் வழியாகச் செய்திகளை அனுப்பும் டிரான்ஸ்மீட்டராகச் செயல்படுகிறது. ரத்தத்தில் செரடோனின் போதுமான அளவில் இருப்பது ஒருவரை மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்க அவசியமானது. ஒருவரது நினைவாற்றலையும் கற்றல் திறனையும் தீர்மானிக்கக்கூடியதாக செரடோனின் இருப்பதால் மாணவர்களுக்கு வைட்டமின் சி அடங்கிய உணவைத் தருவது முக்கியம். 
கண்களைப் பாதுகாக்கவும் வைட்டமின் சி தேவை. 
செல்களுடைய வளர்சிதை மாற்றங்களில் வைட்டமின் சி முக்கியமான பங்கினை வகிக்கிறது. உடலின் எல்லா உறுப்புகளுக்கும் போதுமான சக்தி கிடைக்க ரத்த ஓட்டத்தில் வைட்டமின் சி கலந்திருக்க வேண்டும். 
எலும்புகள், ரத்த நாளங்கள், தசை நாண்கள் பலமாக இருக்க இந்த உயிர்ச்சத்து மிகவும் தேவை. உடலில் உள்ள கொழுப்புச் சத்தினை வைட்டமின் சி கட்டுக்குள் வைக்கிறது. இரும்புச் சத்தை உடல் உள்வாங்கும் திறனை வைட்டமின் சி அதிகரிக்கிறது. வைட்டமின் சி பற்றாக்குறை இருந்தால் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பல் வலி உண்டாகிறது. தமனிகளை விரிவடையச் செய்து மன அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து வைட்டமின் சி ஒருவரைப் பாதுகாக்கிறது. 
சாதாரண இருமலுக்கும் ஜலதோஷத்திற்கும் வைட்டமின் சி மருந்தாகிறது. புற்று நோயைத் தடுக்கவும் முதுமையைத் தள்ளிப் போடவும் கூட வைட்டமின் சி உதவுகிறது. வைட்டமின் சி கிருமிகளை அழிக்க உதவும் எதிர்ப்பொருட்களைரத்தத்தில் உருவாக்குகிறது. 
இதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
வயிற்றுப் புண், முகத்தில் தழும்புகள், பலவீனமான நுரையீரல், கண்-காது-மூக்கில் வரும் நோய்கள், ஒவ்வாமை போன்ற பல்வேறு உடல்நலக் கேடுகளை வைட்டமின் சி பற்றாக்குறை வரவழைக்கக் கூடியது. ரத்தம் உறைவதற்கு வைட்டமின் சி தேவை என்பதால், வைட்டமின் சி பற்றாக்குறை இருந்தால் காயங்கள் ஏற்படும்போது ரத்தப் போக்கு அதிக அளவில் இருக்கும். 
மொத்தத்தில் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் அற்புதமான வேதிப் பொருள்தான் வைட்டமின் சி.
                                                                                                              பேராசிரியர்.கே.ராஜு, 
========================================================================