சனி, 30 மே, 2020

இனவெறுப்பு...

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் போலீஸாரின் பிடியில் உயிரிழந்ததால் அங்கு மூன்று நாட்களாக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஒரு காருக்கு அடியில் ஒரு மனிதர் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி இரண்டு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

"என்னால் மூச்சு விட முடியவில்லை" - ஜார்ஜ் ஃப்ளாய்ட்

அந்தக் காணொளியில் போலீஸாரின் பிடியில் இருந்தவரின் பெயர் ஜார்ஜ் ஃப்ளாய்ட். அவருக்கு வயது 46.

அந்தக் காணொளியில் ஜார்ஜ் "என்னால் மூச்சு விட முடியவில்லை; தயவு செய்து என்னைக் கொல்லாதீர்கள்" என்று கூறுகிறார்.

Image copyrightTWITTER/RUTH RICHARDSONஜார்ஜ் ஃப்ளாய்ட்
Image captionஜார்ஜ் ஃப்ளாய்ட்

அமெரிக்காவில் கருப்பினர்த்தவர்கள் போலீஸாரால் கொல்லப்படுவது குறித்து ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு போலீஸாரின் மீதும் கொலைக்குற்றம் சுமத்தப்பட வேண்டும் என ஜார்ஜின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். விசாரணை அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா முழுவதும் தீவிர போராட்டம்

ஜார்ஜ் உயிரிழந்த இடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையம் ஒன்றை சூழ்ந்தனர் போராட்டக்காரர்கள். அவர்களை கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் கொண்டு போலீஸார் கலைக்க முயன்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், சிகாகோ, டென்வர், ஃபீனிக்ஸ் மற்றும் மெம்ஃபிஸ் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மினியோபொலிஸின் மேயர் ஃப்ரே புதன்கிழமையன்று, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கிரிமினல் குற்றம் பதியப்பட வேண்டும் என தெரிவித்தார். காணொளியில் தெரிந்த போலீஸ் நபர் ஒருவரும் மற்ற மூன்று போலீஸ் நபர்களும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

Image copyrightEPAஅமெரிக்கா முழுவதும் தீவிர போராட்டம்

சிஎன்என் தொலைக்காட்சியிடம் பேசிய ஜார்ஜின் சகோதரர், "எனது சகோதரர் திரும்பி வரப்போவது இல்லை. எங்களுக்கு நீதி வேண்டும்," என்று தெரிவித்தார்.

கண்ணீர் மல்கப் பேசிய அவர், "பட்டப்பகலில் எனது சகோதரரை கொன்ற போலீஸார் கைது செய்யப்பட வேண்டும்" என்றும் "கருப்பினத்தவர்கள் தொடர்ந்து கொல்லப்படவதை பார்த்து சோர்ந்து போய்விட்டேன்," என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற சிஎன்என் தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் ஒமர் ஜிமென்ஸ் மற்றும் அவரின் கேமரா மேன் மின்னெசோட்டா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உணவகம் ஒன்றில் கள்ளப்பணம் செலுத்தப்படுகிறது என்ற தகவலின் அடிப்படையில் ஜார்ஜ்ஜை விசாரிக்க போலீஸார் அவரை தொடர்புகொண்டனர்.

போலீஸார் அவரை நெருங்கியபோது அவர் காரை விட்டு இறங்க மறுத்ததால் அவரின் கையில் விலங்கு போடப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் வந்த காணொளியில் அந்த மோதல் எப்படி தொடங்கியது என்ற தகவல் இல்லை.

Image copyrightGETTY IMAGESபோலீஸார் கூறுவது என்ன?

டிரம்பின் ட்விட்டர் பதிவு

இந்நிலையில் மினியாபொலிஸில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "மினியாபொலிஸ் போன்ற சிறந்த அமெரிக்க நகரில் இவ்வாறு நடைபெறவதை நான் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டேன். தீவிர இடதுசாரி கொள்கையுடைய மேயர் ஃப்ரே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேசியப் படையை அனுப்பி நடவடிக்கை எடுப்பேன்.

ரவுடிகள் ஜார்ஜ்ஜை அவமதிக்கின்றனர். நான் அதை நடக்க விட மாட்டேன். ஆளுநர் டிம் வால்சிடம் பேசியுள்ளேன். அவருடன் ராணுவம் துணை நிற்கும் என்று தெரிவித்தேன். ஏதாவது பிரச்சனையென்றால் நாங்கள் கட்டுப்படுத்துவோம். ஆனால் கொள்ளையடிப்பது தொடர்ந்தால் துப்பாக்கிச் சூடு நடக்கும்" என பதிவிட்டுள்ளார் டிரம்ப்.

ஆனால் இந்த ட்விட்டர் பதிவு "வன்முறையை தூண்டுவதாக" உள்ளது என்ற எச்சரிக்கை வாசகங்களைக் கொண்டு அந்த பதிவை ட்விட்டர் மறைத்துள்ளது. எனினும், அப்பதிவு இன்னும் ட்விட்டரால் நீக்கப்படவில்லை.

வாஷிங்டன்அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், கடந்த 25-ஆம் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார்.இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்னபொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.

மினசோட்டா,ஜார்ஜியா,ஓஹியோ,கொளராடோ,விஸ்கான்சின்,கென்டக்கி,உட்டா,டெக்சாஸ்,கொலம்பியா ஆகிய மாநிலங்களில் நிலமை மோசமாக உள்ளது போராட்டங்கள் வெடித்து உள்ளனஇந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டை கொன்ற போலீஸ் அதிகாரி டெரெக் சவுவின், 44, கைது செய்யப்பட்டு, அவர்மீது, கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, நேற்று முன்தினம் இரவு, 8:௦௦ மணி முதல், நேற்று காலை, 6:௦௦ மணி வரை, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.இருப்பினும் ஊரடங்கை பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மக்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். உணவகம், வங்கி ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல மணி நேரமாக எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுப்படுத்தினர்.இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க இராணுவத்தின் போலீஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.ஆனாலும் லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட பல நகரங்களில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. புரூக்ளினில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.ஹூஸ்டனில் நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.அவர்களைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.


-----------------------------------------------------

11 ஆண்டுகளில் இல்லாத சரிவு.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டதால் அரசுக்கு வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. இந்த ஊரடங்கால் மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் தளர்வுகள் அளித்தாலும் நிறுவனங்கள் முழுமையாகச் செயல்படமுடியாத சூழலே உள்ளது. தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 44 காலாண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்திருப்பதாக மத்திய புள்ளியல் துறை தெரிவித்துள்ளர்.

இதுதொடர்பாக மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019-20ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் நாட்டின் தயாரிப்புத் துறையின் வளர்ச்சி 1.4 சதவீதமாக பின்னடைவை சந்தித்துள்ளது.

அதேப்போல் கட்டுமானத் துறையின் வளர்ச்சி 2.2 சதவீதம் முடங்கியது. ஒட்டுமொத்த அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜனவரி மார்ச் காலாண்டில் 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல், 2019-20-ஆம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 சதவிதமாக குறைந்துள்ளது.

அதற்கு முந்தையை 2018-19-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.1 சதவிதமாக இருந்தது. இது கடந்த 44 காலாண்டுகள், அதாவது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

--------------------------------------------------

இந்திய மக்கள்தொகையில் பாதிப் பேருக்குக் கொரோனா பரவும்..?

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸை எதிர்த்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை 4 கட்ட ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டன. இருந்தும் இங்கு வைரஸ் பரவலின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.


நாளையுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடியவுள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 - ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,971- ஆகவும் உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய மக்கள் தொகையில் பாதிப் பேருக்கு அதாவது 67 கோடி பேருக்குக் கொரோனா பரவியிருக்கும் என தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறும் எனவும் ஆனால் அதில் 90% பேர் தங்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியாமல் வாழ்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இவர்களில் 5% பேர் மட்டுமே ஆபத்தான நிலையில் இருப்பார்கள், 67 கோடி பேரில் 5% என்பது 30 மில்லியனாக இருக்கும் எனக் கணித்துள்ளனர்.


எப்படியிருப்பினும், கோவிட் -19 அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்தியா போதுமான சுகாதார நடவடிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். தற்போதுவரை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்தியாவில் 1.30 லட்சம் படுக்கைகள் மட்டுமே உள்ளன. வரும் நாள்களில் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்கப் படுக்கைகள் இருக்காது. உண்மையில் பல மாநிலங்களின் கிராமப்புறங்களில் ஏற்கெனவே இந்தச் சூழ்நிலை நிலவுகிறது.


மே 16-ம் தேதி நிலவரப்படி இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் மொத்தக் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 21%, இதைக் கணக்கிட்டால் சுமார் 3.5 கோடி மக்கள் கொரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே வருங்காலத்துக்குத் தேவையான அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் அந்தந்த மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


நமது நாட்டைப் பொறுத்தவரை, வைரஸின் இறப்பு விகிதம் 5% -க்கும் குறைவாக உள்ளது. அப்படியானால் 95% பேர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். ஜூலை தொடக்கத்தில் இந்தியாவில் வைரஸ் பரவலின் நிலை உச்சத்தை எட்டும் எனச் சில விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் விரைந்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--------------------------------------------------

வியாழன், 28 மே, 2020

மாநில சுயாட்சியின் தேவை.

கேரளா அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரயில்களை அனுப்புவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: கேரளாவிடம் தெரிவிக்காமல் மஹாராஷ்டிராவிலிருந்து மேலும் ஒரு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் விவரங்களைப் பெறுவதற்காக அதை ரத்துசெய்து அதன் பயணத்தை வேறொரு தேதிக்கு திட்டமிட அரசு தலையிட வேண்டும்.


தனிமைப்படுத்த ஏற்பாடு செய்ய மாநிலத்திற்கு வருபவர்கள் இணையதள போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் எங்கள் கொரோனா கட்டுப்பாட்டு முயற்சிகள் வீணாகிவிடும்

எங்கள் மாநிலத்திற்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே உள்ளது. அதாவது வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும், இது மாநிலத்திற்கு வரும் கேரள மக்களுக்கு எதிரானது அல்ல.

பயணிகள் ‘கோவிட் -19 ஜாக்ரதா போர்ட்டலில்’ பதிவு செய்வது கட்டாயமாகும். வெளிநாட்டினர், வெளிமாநிலத்தில் இருந்து இங்கு வரும்போது மாநிலத்தில் சில ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியம்.

நோய் பரவக்கூடிய பகுதிகளிலிருந்து மக்கள் வருகிறார்கள். இதனால் இயற்கையாகவே இங்குள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதுவரை மஹா.,வில் 72 பேர், தமிழகத்தில் 71 பேர், கர்நாடகாவில் 35 பேர் என அங்கிருந்து வந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து சுமார் 3.80 லட்சம் பேர் கேரளாவுக்கு வருவதற்கு பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் 2.16 லட்சம் பாஸ் வழங்கப்பட்டுள்ளது, இதுவரை 1,01,779 பேர் ஏற்கனவே கேரளா வந்துள்ளனர். அதேபோல், வெளிநாட்டிலிருந்து திரும்பி வர 1.34 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர், இதில் 11,189 பேர் மே 25 வரை கேரளா வந்துள்ளனர். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

இந்தியா முழுக்க ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இருக்கையில் மத்திய அரசு தான்தோன்றித்தனமாக அதுவும் கொரோனா பேரிடர் காலத்தில் கொரோனா பரவும் அபாயத்தில் உள்ள மாநில அரசுகளை மதிக்காமல் நடந்து கொள்வது மிகக் கேவலமான செயல்.

தி.மு.க வின் மாநில சுயாட்சி கோரிக்கையின் தேவையை எல்லா மாநில அரசுகளையும் உணர வைக்கிறது மோடி அரசு.


-------------------------------------------------------------------

சீனாவில் இருந்து தொழில் நிறுவனங்கள்

இந்தியா வருகிறதா?

டந்த ஏப்ரல் 28 அன்று கொரோனா தாக்குதலால் ஏற்பட்டுள்ள நிலைமையைப் பற்றி மாநில முதல்வர்களுடன் விவாதித்த பிரதமர் நரேந்திர மோடி, வழக்கத்துக்கு மாறானதொரு பெருமையை உரிமையுடன் கூறிக் கொண்டார். அதாவது, பல நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறும் என்றும், அவற்றை வரவேற்று இந்தியாவில் முதலீடு செய்யவைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, ஏராளமான மனித ஆற்றல், தொழில் திறமை, மேம்பட்ட அடிக்கட்டுமானம் ஆகியவற்றை இந்தியா கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உடனே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “ஒட்டுமொத்த உலகத்தில் சீனாவுக்கும் சீனப் பொருளாதாரத்துக்கும் எதிரான வெறுப்புணர்வு நீடிக்கிறது… அத்தகைய அருவருப்பினூடாக இதுவொரு மகிழ்ச்சியான செய்தி… இந்தியாவுக்கும் இந்திய முதலீட்டாளர்களுக்கும், குறிப்பாக குறுந்தொழில், சிறுதொழில், நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் (micro,small and medium enterprises – MSME) ஒரு நல்வாய்ப்பு… இந்தியாவுக்கு ஒரு நல்வாய்ப்பு; அந்நிய முதலீட்டுக்கு நல்வாய்ப்பு” என்று ஒரு தொலைக்காட்சியில் தொழில் வர்த்தகம் தொடர்பான செய்தியில் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, “சீனாவிலிருந்து புலம்பெயர ஆலோசித்துவரும் நிறுவனங்களைக் கவர்ந்திழுக்க இந்தியா தனது நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது” என்று நாளேடுகளில் செய்திகள் வெளிவரத் தொடங்கின. உலகளாவிய முதலீடுகளை இந்தியாவில் செய்யுமாறு ஊக்கமளித்தும், இடர்ப்பாடுகளை எளிதாக்கும் கொள்கையையும் ஆயுதமாகக் கொண்டுள்ள “இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்” என்ற இந்திய அரசின் கொள்கையின் மூலமாக, ஏற்கெனவே ஏறத்தாழ 1,000 உலகளாவிய நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

“சீனாவிலிருந்து வெளியேறும் தொழில் – வர்த்தக நிறுவனங்களைக் கவர்ந்திழுக்க, ஐரோப்பாவின் லக்சம்பர்க் நகரத்தைப் போல இரு மடங்கு நிலத்தை அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்தியா ஒதுக்கீடு செய்து, அபிவிருத்தி செய்து வருகிறது. …நாடு முழுவதும் 4,61,589 ஹெக்டேர் பரப்பளவுக்கு நிலங்கள் இனங்காணப்பட்டுள்ளன” என்று பிசினஸ் ஸ்டாண்டர்டு நாளேட்டில் ஒரு செய்தித் துணுக்கு வெளிவந்தது. அசாம் மாநிலத்தில் உற்பத்தியைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து, சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களைக் கவர்ந்திழுக்கத் திட்டமிட்டுள்ளதாக அசாம் மாநில அரசாங்கம் அறிவித்தது.

திடீரென பா.ஜ.க. ஆளும் உ.பி மற்றும் ம.பி அரசாங்கங்கள் அடுத்த நான்காண்டுகளுக்கு ஒரு டஜனுக்கும் மேலான அனைத்து தொழிலாளர் சட்டங்களைக் கிட்டத்தட்ட முடக்குவதாகவும், சில சட்டங்களை முற்றாக ரத்து செய்வதாகவும் அறிவித்தன. ஏனெனில், முதலாளிகள் கடும் சுமையாக உள்ள தொழிலாளர் சட்டங்களைப் பற்றி புகார் கூறினார்களாம்; அவர்களது ஆட்சியின் கீழ் “இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம்” (தொழிற்சாலைக் கண்காணிப்பாளர்கள் மூலம் சோதிக்கும் முறை) ஓங்குவதால், அது வளர்ச்சியைத் தடுக்கிறதாம்; எனவே, தொழிலாளர் சட்டங்களை முடக்குவதன் மூலம் அரசாங்கம் பல்லாயிரம் கோடி டாலர்களைக் கவர்ந்திழுக்கப் போகிறதாம்.

அப்படி நடக்குமா என்ன? ஒரு கடுகளவான அந்நிய முதலீடு சீனாவிலிருந்து முட்டிமோதி வெளியேறி இந்தியாவுக்கு வருகிறது என்று வைத்துக் கொண்டால் கூட, அது எனக்கு ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்தும். அதற்கான காரணங்கள் இவை:

  1. உண்மையில்எந்த முதலாளியாவது சீனாவிலிருந்து வெளியேறுகிறாரா?

நாடுகள் என்பன, வேறுபட்ட விலையில் ஒரே பொருளை விற்கின்ற பலசரக்குக் கடைகள் அல்ல; நுகர்வோரை ஊக்குவித்து, ஒரு கடைக்குப் பதிலாக வேறு கடைக்கு மாற்றுவதைப் போன்றதுமல்ல என்று பொருளாதாரவாதியும், சீன விவகாரத்தில் நிபுணருமான டாக்டர் சுப்பிரமணியசாமி குறிப்பிடுகிறார்.

ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கான இத்தகைய முடிவுகள் உணர்ச்சிவயப்பட்டதல்ல. ஒரு நிகழ்வின் உந்துதலுமல்ல. மாறாக, இவை மிகவும் சிக்கலானவையாகும்.

சீனாவிலுள்ள அமெரிக்க முதலாளிகள் சங்கம் (AmCham China), கடந்த மார்ச் மாதத்தில் தமது சங்கத்தில் அங்கம் வகிக்கும் முதலாளிகளிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இதன்படி, சீனாவில் கொரோனா தாக்குதல் நிலவும் சூழலில், 70 சதவீதத்துக்கும் மேலான நிறுவனங்கள் தங்களது உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி நடவடிக்கைகளை சீனாவிலிருந்து இடம் மாற்றப் போவதில்லை என்றும், சீனாவுக்கு வெளியே அவற்றைத் தொடங்கும் திட்டம் ஏதுமில்லை என்றும் அறிவித்துள்ளன. இதில் வியப்படைய ஒன்றுமில்லை.

அந்நிய முதலாளிகள் சீனாவை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள் எனப்படும் இந்த எல்லா அனுமானக் கட்டுக்கதைகளும் பொய்யானது. இதற்கான காரணம் என்ன?

பெருமளவிலான விநியோகச் சங்கிலிகளின் செயல்திறன், தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் மற்றும் உலகத் தரமான அடிக்கட்டுமானம் ஆகியவையே அந்நிய நிறுவனங்கள் சீனாவுக்குச் செல்ல முதன்மையான காரணங்களாகும். மேலும், சீனாவில் மிகப் பெரிய உள்நாட்டுச் சந்தை இருப்பதால்தான் அந்நிய முதலாளிகள் அங்கே செல்கிறார்கள். ஒரு தொற்றுநோய் இதனை மாற்றிவிட முடியாது என்பது மட்டுமல்ல; நடைமுறையில், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வெளிப்பட்ட சீன அரசின் திறமை ஆகியவற்றையும் பன்னாட்டுக் கம்பெனிகள் பார்த்தன.

சீனாவிலுள்ள அமெரிக்க முதலாளிகள் சங்கத்தின் தலைவரான ஆலன் பீபி, “கொரானா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்குக்குப் பிந்தைய மாதங்களில் சீனா தனது பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்து, குறுகிய காலத்தில் பழைய நிலைக்குக் கொண்டு வந்ததில் பிற நாடுகளைவிட சீனா முன்னணியில் இருந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, எந்தக் காரணங்களுக்காக அந்நிய நிறுவனங்கள் சீனாவை நாடி வந்தனவோ, அந்தக் காரணங்கள் இன்னமும் நீடிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய மக்கள் அனைவரும் உற்சாகமாக இருப்பதற்காகத்தான், சீனாவிலிருந்து தொழிலும் வர்த்தகமும் வெளியேறி இந்தியாவுக்கு வருகின்றன என்று கூறப்படுகிறதா? ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில், பெருமளவில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள தானியங்கித் (ஆட்டோமொபைல்) தொழில் போன்ற நிறுவனங்கள், திடீரென சீனாவிலிருந்து கிளம்பி வேறொரு நாட்டில் தம்மை நிறுவிக் கொள்வதென்பது ஒருக்காலும் சாத்தியமே இல்லை. மேலும், ஒருக்கால் சில தொழில் – வர்த்தக நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறினாலும், அவை பிற நாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவுக்குத்தான் வந்தாக வேண்டுமா என்ன?

  1. அந்நிய முதலீட்டாளர்களின் கவனத்தைக் கவரக்கூடிய நாடாக இந்தியா இல்லை

உலகின் முன்னணி 1,000 நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடு (FDI) பற்றியும், பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ள முதல் 25 நாடுகளின் தரவரிசையைக் கணக்கீடு செய்த பட்டியலையும் ஏ.டி. கியார்னே (A.T. Kearney) என்ற அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ள முன்னணியிலுள்ள முதல் 10 நாடுகள் என்ற வரிசைப் பட்டியலில் முதன்முறையாக 2015-இலிருந்து இந்தியா இல்லாமல் போய்விட்டது. அதேசமயம், தென்கிழக்காசிய நாடுகள் அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் முன்னணியில் இருப்பதோடு, கடந்த 2018-இல் அவை 11 சதவீத அளவுக்கு அதிகரிப்பையும் கொண்டுள்ளன. அதன் பிறகு இந்தப் புள்ளிவிவரமானது, தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையால் (DPIIT) கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அது, 2018-19ஆம் ஆண்டில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு சரிவைச் சந்தித்துள்ளதைப் படம் பிடித்துக் காட்டியதோடு, முதன்முறையாக கடந்த ஆறு ஆண்டுகளில் இவ்வாறு நிகழ்ந்துள்ளதையும் வெளிப்படுத்தியது.

இல்லை; இந்தியாவானது அந்நிய முதலீட்டாளர்களைக் கவரக்கூடியதாக இல்லவே இல்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவையனைத்தும் சமமான முக்கியத்துவமுடையவை. இது வெறும் நில ஒதுக்கீடு அல்லது கடுமையான விதிகளைக் கொண்ட தொழிலாளர் சட்டங்களால் ஏற்பட்டதல்ல. மாறாக, சிவப்பு நாடாத்தனம் (கடுமையான விதிமுறைகளைக் காட்டி இழுத்தடிப்பது), மிரட்டிப் பணம் பறிப்பது, கடந்தகால நோக்கிலான பின்னோக்கிய சட்டத் திருத்தங்கள், விதிகளில் மனம்போன போக்கிலான மாற்றங்கள், வரி பயங்கரவாதம், மோசமான உற்பத்தித் திறன், துறைமுகங்களில் பைத்தியக்காரத்தனமான தாமதங்கள், இறையாண்மைக்கு ஆபத்து என்ற பெயரில் தடைகள், இன்னும் பலவாறானவற்றால் உருவானவை.


  1. உள்நாட்டு முதலாளிகளுக்குக்கூட கவரக்கூடிய நாடாக இந்தியா இல்லை

நல்லது. அந்நிய முதலீடு பற்றிய இத்தகைய எல்லா வண்ணமயமான விவாதங்களும் வெறும் வேடிக்கைப் பேச்சுதான். ஏனெனில், இந்திய முதலாளிகள் கூட இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்ய விரும்புவதில்லை என்பது யாவரும் அறிந்ததுதான். கடந்த ஆறு ஆண்டுகளில் உள்நாட்டில் முதலீடு மிகவும் மந்தமான நிலையில் உள்ளதை பொருளுற்பத்திக்கான இயந்திரச் சாதனங்கள், மின்சார சாதனங்கள், பொறியியல் சாதனங்கள் முதலானவற்றை உற்பத்தி செய்யும் மூலதன அழுத்தம் கொண்ட நிறுவனங்கள் துறையில் நிலவும் மந்தநிலைமைகளே படம் பிடித்துக் காட்டுகின்றன.

உள்நாட்டில் தேவை (demand) மிகவும் குறைந்து வற்றிப்போன நிலைமை, மறுபுறம் ஆலைகள் அதிகத் திறன் கொண்டுள்ள நிலைமை, பொதுத்துறையில் அரசின் மிகக் குறைவான முதலீடு – ஆகியன இதற்குக் காரணங்களாக உள்ளன. இதன் விளைவாக, உள்நாட்டுத் தொழில் – வர்த்தகத்தில் முதலாளிகள் கூடுதலாக முதலீடு செய்வதில் ஊக்கமற்ற நிலைமையே உள்ளது. எவ்வாறாயினும், தனியார் முதலீட்டில் நிலவும் வறட்சியால் இந்திய நாடானது பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய மூன்று அம்சங்களும், குறிப்பாக கடைசி இரண்டு அம்சங்களும் யாவரும் அறிந்தவைதான். நிலைமை இப்படியிருக்க, சீனாவிலிருந்து வெளியேறி அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வரும் என்ற நம்பிக்கை எங்கிருந்து வருகிறது? அதேபோல, பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளின் நடவடிக்கைகள் எங்கிருந்து ஊற்றெடுக்கின்றன?


இது, கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள அரசாங்கம் எத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துகிறது என்ற கேள்விகளையும் நிர்பந்தங்களையும் தடுக்கும் நோக்கத்துடன், ஊடகங்கள் மூலம் பரபரப்பான செய்திகளை வெளியிட வைத்து, பொருத்தமற்ற செய்திகளின் பின்னே நாட்டு மக்களை ஓடவைக்க அரசியல்வாதிகள் கையாளும் உத்தியாகவே தெரிகிறது. இது, பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்நிய நேரடி முதலீடுகள் சீனாவிலிருந்து புலம்பெயரப் போவதாகவும், இதுவொரு நல்வாய்ப்பாக அமையும் என்றும் அவர் மாநில முதல்வர்களிடம் கூறினார். இருப்பினும், இதற்கு எந்த அடிப்படையும் இல்லை. ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் உடனே களத்தில் குதித்தன. இதேபோன்ற கூச்சலை எழுப்பி பக்கமேளம் வாசிக்கத் தொடங்கின.

இங்கே ஒரு சுவையான முரண் உள்ளதை நாம் கவனிக்கத் தவறிவிடக் கூடாது. கடந்த 2014-15ஆம் ஆண்டின் அந்நிய நேரடி முதலீடுகளின் எண்ணிக்கையை வைத்து பெருமிதம் கொண்ட பிரதமர், மகிழ்ச்சியில் பூரித்துப் போனார். அதன் பிறகு, அந்நிய முதலீடுகளின் எண்ணிக்கையில் தொய்வு ஏற்பட்டபோது, அரசின் சாதனைப் பட்டியலிலிருந்து அந்நிய நேரடி முதலீடு பற்றிய செய்திகள் கைவிடப்பட்டன. முட்களால் மூடப்பட்டிருக்கும் இந்தப் பாதையில் சென்று, கூடுதலாக அந்நிய நேரடி முதலீட்டைக் கவர்ந்திழுக்க மத்திய அரசின் பல்வேறு அமைச்சர்கள் முயற்சித்து தோல்வியடைந்துள்ள நிலையில், சீனாவிலிருந்து வெளியேறுவதாகச் சொல்லப்படும் அந்நிய நேரடி முதலீடுகளைக் கவர்ந்திழுக்க, இப்போது மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

– புதியவன்

(11.5.2020 தேதியிட்ட பிசினஸ் ஸ்டாண்டர்டு ஆங்கில நாளேட்டில் தேபஷிஸ் பாசு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)


கோடிகளை ஏப்பம்விட்ட ஸ்மார்ட் போன்! மோடி அரசு தகிடுதத்தம்!

 

ஃப்ரீடம் 251’ இந்தப் பெயரை நினைவிருக்கிறதா? பிரதமர் மோடியின் பிரஸ் மீட்டைப் போலவே, இந்தியர்கள் இதுவரை பார்த்திராத ஸ்மார்ட்போன் மாடல்தான் அது.

ffdd

உலக ஸ்மார்ட்போன் சந்தை யாக இந்தியா மாறிக்கொண்டிருந்த சமயம். யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ரூ.251 என்ற மலிவான விலையில், இந்த ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது நொய்டாவில் இயங்கிவந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம். அன்றுவரை உள்ளூரில்கூட தெரியாமலிருந்த இந்த நிறுவனத்தைப் பற்றி, சர்வ தேச ஊடகங்களே தலைப்புச்செய்தி எழுதின. பா.ஜ.க.வினர் கொடுத்த ஃப்ரீ புரமோஷனில், இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் ஃப்ரீடம் மொபைலைப் பற்றித்தான் பேச்சு. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா என மோடி அரசின் திட்டங்களை இதற்காக வரிசைப்படுத்தினார்கள்.

2016, பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த இதன் அறிமுக விழாவில், பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கலந்துகொண்டார். தொடக்கநிலை ஸ்மார்ட்போனுக்குரிய எல்லா வசதிகளும் இதில் இருக்குமென்று இதனை அறிமுகம் செய்த ரிங்கிங் பெல்ஸ் சி.இ.ஓ. மோகித் கோயல், “தூய்மை இந்தியா, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களோடும் இந்த போன் இருக்கும்’ என்றார். பிப்ரவரி 18ந்தேதி முதல் ஆன்லைனில் புக்கிங் தொடங்கியது. முன்கூட்டியே பணம் செலுத்தவேண்டிய கட்டாயம் இருந்தாலும், சொற்பக் காசுதானே என்ற மிதப்பில் நான்கைந்தாக ஆர்டர் செய்தார்கள் பலர்.

புக்கிங் தொடங்கிய சில மணிநேரத்தில், ஃப்ரீடம் மொபைல் இணையதளம் திணறியது. புக்கிங் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதில் செய்தி வெளியானது. இந்த புக்கிங்கில் 30 ஆயிரம் போன்களுக்கான பணம் மட்டுமே வசூலிக்கப் பட்டதாகவும், ஏழுகோடி பேர் இதனை வாங்குவதற்காக ரெஜிஸ்டர் செய்திருப்பதாகவும் ரிங்கிங் பெல்ஸ் நிர்வாகம் தெரிவித்தது. உண்மையில் பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை இதைவிட பலமடங்கு அதிகமாக இருக்கும் என்றே பேசப்பட்டது.

பிப்ரவரி மாதம் முடிந்தது. புக்கிங் செய்தவர்களுக்கு ஸ்மார்ட்போன் கிடைக்கவில்லை. பிறகு ஜூன் 30க்குள் 25 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பதாகக் கூறி, பின் அதை 2 லட்சமாக சுருக்கியது ரிங்கிங் பெல்ஸ். ஜூலை 2க்கு டெலிவரி தேதி மாற்றப்பட்டது. அப்போதும் எதுவும் நடக்க வில்லை. பணத்தைச் செலுத்தியவர்கள் கொதிக்கத் தொடங்கியதும், முன்கூட்டியே பணம் செலுத்தியவர்களின் அக்கவுண்டுக்கு பணத்தைத் திருப்பி அனுப்பிவிட்டோம் என்றார்கள். அதற்கும் அதிகாரப்பூர்வ தகவலில்லை.

dd

ஜூலை 8ந்தேதி மீண்டும் மோகித் கோயல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ""பிரதமர் மோடிக்கு இலவசமாக ஒரு போன் வழங்குவோம். மற்றவர்களில், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை ஆர்டர் செய்திருப்பதால், இனி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து வெற்றியாளருக்கு போனை வழங்கப் போகிறோம். முதற்கட்டமாக 5 ஆயிரம் யூனிட்டுகள் கொடுக்கப் படும்'' என தெரிவித்திருந்தார். குலுக்கலும் கலகலப்பை ஏற்படுத்தவில்லை.

இதற்கிடையே, மோகித் கோயல் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். “குறித்த தேதியில் ஸ்மார்ட்போன்களை டெலிவரி செய்ய அரசின் உதவி தேவைப்படுகிறது. இதற்காக இந்த ப்ராஜெக்டில் ரூ.50 ஆயிரம் கோடியை அரசு முதலீடு செய்யவேண்டும். இதன்மூலம், இந்தியா வின் 75 கோடி பொதுமக்களிடம் ஸ்மார்ட்போன் வசதி சென்றடையும். உங்கள் அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும் ஊக்குவிக்கலாம் என்று அதில் குறிப்பிடுகிறார். அரசு கண்டு கொள்ள வில்லை.

இந்நிலையில், ஃப்ரீடம் மொபைலுக்கான விநியோகஸ்தர்கள் சிலர், தங்களிடம் பணமோசடி செய்து கொலை மிரட்டல் விடுப்பதாக மோகித் கோயல் மீது புகாரளித்தனர். இதில் ஆறுமாத சிறை தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது. இன் னொருபுறம், இந்திய செல்லுலார் அசோசியேஷன், குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமாவது விலை வைத்தால்தான், ஃப்ரீடம் போன் கட்டுப்படியாகும். எனவே, தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் இதுபற்றி விசாரிக்க வேண்டுமெனக் கூறியது.

மேலும், ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்போனின் அறிமுக விழாவில், தங்களது செல்போனில் ஸ்டிக்கர் ஒட்டித்தான் ரிங்கிங் பெல்ஸ் விளம்பரப் படுத்தியது என்றொரு குண்டைப் போட்டது ஆட்காம் நிறு வனம். அதேபோல் ஆப்பிள் ஐபோனின் ஐகான் களைத் திருடி அதைக்கொண்டு டிசைன் செய்து, ஃப்ரீடம் போனுக்கு விளம்பரம் செய்ததும் அம்பலமானது.

இன்று இந்த போனுக்காக பணம் செலுத்தி விட்டு, காத்திருந்து ஏமாந்துபோன பலருக்கு தெரி யாது, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தை 2018லேயே கோ-டாடி என்ற நிறுவனம் விலைக்குவாங்கிய தகவல். ‘2016ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில் நுட்ப ஊழல், டிஜிட்டல் காலத்து பெரு மோசடி’என்று சர்வதேச ஊடகங்கள் இதுபற்றி மீண்டும் எழுதின. ஒவ்வொருவரிடமும் நூறுரூபாய் வாங்கிக்கொண்டு வடிவேலு பணக்காரர் ஆவதைப் போலவே, மக்களை ஏமாற்றி பலநூறு கோடிகளை ஏப்பம் விட்டிருக்கிறது மோகித் கோயல் மற்றும் அவரது கும்பல்.

தங்களது திட்டங்களைச் சொல்லியே ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மோசடி செய்தது என்றாலும், இதில் பெரியளவில் கவனம் செலுத்தாத அரசுத்தரப்பு, தற்சார்பு பாரதம் என்றொரு புதிய பர்னிச்சரை இப்போது கையில் எடுத்து உடைக்க ஆரம்பித்திருக்கிறது.

- ச.ப.மதிவாணன்

செவ்வாய், 26 மே, 2020

நீ தனித்திரு. நாங்கள் இந்தியாவையே தனியாராக்குகிறோம்.

கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் இருந்தால் மக்கள் அனைவரும் வீட்டில் முங கிய நிலையில்  மத்திய பா.ஜ.க. அரசு இந்தியாவின் பொருளாதர கட்டமைப்பையே சீரழிக்கும் நடவடிக்கையில் கடுமையாக செயல்பட்டு வருகிறது.
லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு விற்று வருகிறது.

நிதியில்லை எனக் கூறி மக்கள் கொரோனா கால வேலையிழப்பு,வருமானமின்மைகளுக கு உதவாத வெற்று அறிக்கைகளை வாரக்கணக்கில் தொலைக்காட்சியில் நிதியமைச்சர் அறிவிக்கிறார்.
ஆனால் பொதுத்துறை நிறுவனங்களை கையகப்படுத்த பணமுதலைகளுக்கு,ஏற்கனவே வாராக் கடன்தார் பட்டியலில் உள்ளவர்களுக்கு வங்கிகள் மேலும் பலகோடிகளை கடனாக வாரி வழங்க நிதியமைச்சகம் ஆணையிட்டுள்ளது.
பெட்ரோல்,காப்பீடு,ரெயில்,விமானம் என ஆரம்பித்து ராணுவ தளவாடங்களையும் தனியார் மயமாக்கிய மோடி தற்போது வனங்களையும்,பசுமைக் காடுகளையும் தனியாருக்கு சத்தமே இல்லாமல் விற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.
 மத்திய சுற்றுச்சூழல் வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், உயிரியல் முக்கியத்துவம்வாய்ந்த 30 காடுகளை தனியார் திட்டங்களுக்காக தாரை வார்த்துள்ளது. 
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி தொடங்கி தேசிய அளவில் பொது முடக்கம் அமலில் இருந்து வருகின்றது. இதன் காரணமாக அரசு பணிகள் பெரிதும் முடங்கியுள்ளது. ஆனால் இந்த ஊரடங்கு காலத்திலும் மத்திய சுற்றுச்சூழல் வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகமானது உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த காடுகளை தனியார் திட்டங்களுக்காக அளிப்பது தொடர்பான 30 திட்டங்கள் குறித்து ஆலோசித்து அனுமதி அளித்துள்ளது. சுரங்கம் மற்றும் நெருஞ்சாலை துறை குறித்த திட்டங்களும் இதில் அடங்கும்.
தனியார் மயமாக்குவது குறித்து வீடியோ கான்பரன்சிங் மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனால் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. அருணாசலப் பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கில் உள்ள இடு மிஷ்மி சமூகத்தின் கலாச்சார நடைமுறைகள் ஆச்சரியம் மிகுந்தவை. மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையே வலுவான கலாச்சார தொடர்புள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் திபாங் பள்ளத்தாக்கில் அதிக அளவில் புலிகள் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வுகள் கூறுகின்றன.

சுற்றுச்சூழல் மற்றும் கலாசாரம் அடிப்படையிலும் வளமான இந்த பள்ளத்தாக்கானது நாட்டின் மிகப்பெரிய எட்டலின் நீர்மின் திட்டத்துக்காக அணை அமைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ளது. பொது முடக்கத்தின்போது கடந்த மாதம் 23ம் தேதி நடந்த வீடியோ கான்பரன்சிங மாநாட்டின்போது இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக இரண்டு அணைகள், வேறுவழியில் திருப்பும் இரண்டு சுரங்கங்கள், பென்ஸ்டாக் குழாய், சுரங்க மின்நிலையம், 50கி.மீ. தொலைவுக்கு மேல் சாலை உள்ளிட்டவை அமைக்கப்படும். இதற்காக சுமார் 8 மீட்டர் சுற்றளவு மற்றும் 1,178 ஹெக்டேர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்படும் மேலும் 2.8 லட்சம் மரங்கள் அகற்றப்படும் சூழல் உள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலின்போது திட்டத்துக்கு அனுமதி தருவதற்காக காட்டிய இந்த அவசரமானது 2017ம் ஆண்டு வன ஆலோசனை குழு கூறியுள்ள வனகொள்கையில் இருந்து விலகி செல்வதாக உள்ளது. சத்தமின்றி திபாங் நீர்மின் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்த செய்தியானது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எட்டலின் நீர்மின் திட்டத்தை நிறுத்துங்கள், திபாங்குக்கு பாதுகாப்பு தாருங்கள், அருணாச்சலப் பிரதேச பசுமை காடுகளை பாதுகாப்பு கொடுங்கள் என்ற ஹேஷ்டேக்குகள் அனுமதிக்கு எதிரான பிரசாரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதுமட்டுமின்றி திபாங்கில் உள்ள இடு மிஷ்மி சமூகத்தின் குறும்படங்கள், பாடல்கள், உள்ளிட்டவையும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இதனிடையே அறிவியலாளர்கள் பலர் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எட்டலின் நீர்மின் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வன ஆலோசனை குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மக்கள் கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக மின்துறை அமைச்சகம், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வனவிலங்கு பிரிவு ஆகியவற்றிடமிருந்து வனஆலோசனை குழுவானது திட்டம் குறித்த கருத்துக்களை கேட்டுள்ளது. அசாமில் உள்ள டெஹிங் பட்காய் யானை ரிசர்வ் பகுதியில் நிலக்கரி சுரங்க திட்டம், கோவாவின் பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயம் வழியாக நெடுஞ்சாலை, கிர் தேசிய பூங்காவின் வழியாக சுண்ணாம்புகல் சுரங்கம், கர்நாடகாவில் ஷராவதி சரணாலயத்தில் புவிதொழில்நுட்ப விசாரணை மையம் அமைத்தல் உள்ளிட்ட 30 திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் மூலமாக 15 புலிகள் ரிசர்வ் பகுதி, சரணாலயங்கள், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் மற்றும் ஏராளமான வனபகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கடந்த 12ம் தேதி திபாங் கூட்டம் குறித்த தகவல்கள் வெளியான நிலையில், ஒரு வாரத்திற்கு பின் 291 அறிவியலாளர்கள் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் அடங்கிய குழுவானது பொது முடக்கத்தின்போது,தனியார் திட்டங்களுக்கு அவசர அவசரமாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து சுற்றுசூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதில் வீடியோ கான்பரன்சிங்கின்போது டிஜிட்டல் ஆவணங்களை மட்டுமே நம்பி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கள ஆய்வுகள் என்பது திட்டம் குறித்த மதிப்பீட்டின் முக்கிய அங்கமாகும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

------------------------------------------------------------

ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொய்னா மரத்தின் பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மாத்திரை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இத்தாலி ஸ்பெயின் நாடுகளை வீழ்த்திவிட்டு அமெரிக்கா பக்கம் திரும்பிய போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை அங்கே கொரோனா சிகிச்சைக்கு பலன் தரும் என சொல்லப்பட்டது.

ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மருந்துகள் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை குறைப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் உலக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தேவை திடீரென அதிகரித்தது.

ஆனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பின் விளைவுகளை உண்டாக்கக் கூடியதாகும்.

இதனாலேயே இம்மாத்திரையை அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருந்தன.

கொரோனா வைரசை இம்மாத்திரை ஒழிப்பதாக அமெரிக்கா கூறியதால் இம்மாத்திரையை பயன்படுத்த ஆரம்பித்தன. மோடியை மிரட்டி இம்மாத்திரையை அமெரிக்கா வாங்கியது.


ஆனால் அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஒரு காரணம் என உலக சுகாதார நிறுவனம் கூறி வந்தது.

கொரோனாவில் இருந்து நலமடைந்தவர்கள் பலர் திடீரென இறக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பக்க விளைவுகளே காரணம் என தெரிகிறது.

சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் ,பிரன்ஸ் ,அமெரிக்கா போன்ற நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்தி ஆய்வுகள் செய்துவருகின்றன.

அமெரிக்காவை கொரோனா தாக்குதலில் இருந்து காக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அதிகம் தேவை என இந்தியாவிடம் கோரிக்கை வைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டலும் விடுத்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்தை அதிக அளவில் பெற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் நான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தினமும் சாப்பிடுகிறேன் , உங்கள் முன் நலமாக இருக்கிறேன் எனவும் அறிவித்தார் டிரம்ப்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனா வைரஸ் எண்ணிக்கையை கட்டுப்படுத்தினாலும் மாரடைப்பு போன்ற சிக்கல்களுக்கு இட்டுச்செல்வதால் கவனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டது.இந்நிலையில், லான்சட் மருத்துவ ஆய்விதழ் கடந்த வெள்ளிகிழமை வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பாதுகாப்பானதல்ல என்றும், இருதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வெண்டிலேட்டர் பயன்படுத்த வேண்டிய தேவையை குறைக்கவில்லை என்றும் இதன் மூலம் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவன நிர்வாக குழு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

முன்னதாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் 40,000 மருத்துவ பணியாளர்களுக்கு கொடுத்து பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தியாவில் 4000 மருத்துவ பணியாளர்களுக்கும் இந்த மருத்து கொடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தி ஆய்வுகள் தொடங்கியுள்ளன.


------------------------------------------------------

இயற்கை- செயற்கை அழிவுகளில் இந்தியா.

வெட்டுக்கிளிகளில் மிகவும் ஆக்ரோஷமானது பாலைவன வெட்டுக்கிளிகள். ஒரு சதுர மைல் பரப்பளவுக்கு இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக வந்திறங்கினால் ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் உண்ணும் உளவு அளவுக்கு பயிர்களை சாப்பிடக் கூடியது. இந்த வெட்டுக்கிளிகள்தான் தற்போது இந்தியாவிற்குள் நுழைந்து தங்களது விளைநிலங்களை சூறையாடி வருகின்றன.

இதன் பூர்வீகம் ஆப்ரிக்கா. எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் பருவமழைக்கு பிந்தைய பசுமையான வயல்களில் பல்கிப் பெருகிய இந்த வெட்டுக்கிளிகள் ஏமன் வழியாக ஈரானுக்குள் நுழைந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின. பின்பு அங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று தங்களது படையை இன்னும் விஸ்தரித்து இம்மாதத் தொடக்கத்தில் எல்லை தாண்டி ராஜஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தன.

தொடக்கத்தில் எல்லையோர மாவட்டங்களில் பூ, காய், பழம், தண்டு என பயிர்களை மொத்தமாக தின்று தீர்த்துக் கொண்டிருந்த இந்த வெட்டுக்கிளிகள் படிப்படியாக முன்னேறி இன்று ராஜஸ்தானின் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் பாதி மாவட்டங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

ஜெய்ப்பூரில் குடியிருப்புகள் இவை வழியாக பறந்து சென்றதைப் பார்த்து நகரத்து மக்களே மிரண்டு போனார்கள்.

பூச்சி மருந்து அடித்து கொள்வதற்காக சிறப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டாலும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளை ஒழிக்க அதுபோதுமானதாக இல்லை. ராஜஸ்தானில் 50 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வெட்டுக்கிளி கூட்டத்தில் ஒரு பிரிவு சத்தமே இல்லாமல் மத்திய பிரதேசத்திற்குள் புகுந்துவிட்டது.

வெட்டுக்கிளிகள்

அங்கே சுமார் 3 கிலோ மீட்டர் அளவுக்கு பறக்கும் இந்த வெட்டுக்கிளிகள் இதுவரை 16 மாவட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தியிருக்கின்றன. வருவாய், தீயணைப்பு உள்ளிட்ட அனைத்து முக்கியமான அரசு துறைகளுக்கும் இவற்றை கொல்வதே பெரும் தலைவலியாய் மாறியிருக்கிறது.

அடுத்தபடியாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்திலும் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பூச்சி மருந்துடன் தீயணைப்புத் துறையினர் தயாராக உள்ள நிலையில், ராஜஸ்தானில் இருந்து வெட்டுக்கிளி ஒழிப்பு நிபுணர்களும் வரவழைக்கப்ட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கில் விவசாயம்,உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெட்டுக்கிளிகள் மீதமுள்ள பயிர்களையும் தின்று அழித்து வருவது இயற்கையின் கொடூரம்.மறுபுறம் பா.ஜ.க. அரசு மக்களை கொரோனாவின் பெயரால் கசக்கிப் பிழிந்தெடுகும் செயற்கைக் கொடூரம்..

-------------------------------------------------------------------