இனவெறுப்பு...

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் போலீஸாரின் பிடியில் உயிரிழந்ததால் அங்கு மூன்று நாட்களாக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஒரு காருக்கு அடியில் ஒரு மனிதர் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி இரண்டு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

"என்னால் மூச்சு விட முடியவில்லை" - ஜார்ஜ் ஃப்ளாய்ட்

அந்தக் காணொளியில் போலீஸாரின் பிடியில் இருந்தவரின் பெயர் ஜார்ஜ் ஃப்ளாய்ட். அவருக்கு வயது 46.

அந்தக் காணொளியில் ஜார்ஜ் "என்னால் மூச்சு விட முடியவில்லை; தயவு செய்து என்னைக் கொல்லாதீர்கள்" என்று கூறுகிறார்.

Image copyrightTWITTER/RUTH RICHARDSONஜார்ஜ் ஃப்ளாய்ட்
Image captionஜார்ஜ் ஃப்ளாய்ட்

அமெரிக்காவில் கருப்பினர்த்தவர்கள் போலீஸாரால் கொல்லப்படுவது குறித்து ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு போலீஸாரின் மீதும் கொலைக்குற்றம் சுமத்தப்பட வேண்டும் என ஜார்ஜின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். விசாரணை அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா முழுவதும் தீவிர போராட்டம்

ஜார்ஜ் உயிரிழந்த இடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையம் ஒன்றை சூழ்ந்தனர் போராட்டக்காரர்கள். அவர்களை கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் கொண்டு போலீஸார் கலைக்க முயன்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், சிகாகோ, டென்வர், ஃபீனிக்ஸ் மற்றும் மெம்ஃபிஸ் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மினியோபொலிஸின் மேயர் ஃப்ரே புதன்கிழமையன்று, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கிரிமினல் குற்றம் பதியப்பட வேண்டும் என தெரிவித்தார். காணொளியில் தெரிந்த போலீஸ் நபர் ஒருவரும் மற்ற மூன்று போலீஸ் நபர்களும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

Image copyrightEPAஅமெரிக்கா முழுவதும் தீவிர போராட்டம்

சிஎன்என் தொலைக்காட்சியிடம் பேசிய ஜார்ஜின் சகோதரர், "எனது சகோதரர் திரும்பி வரப்போவது இல்லை. எங்களுக்கு நீதி வேண்டும்," என்று தெரிவித்தார்.

கண்ணீர் மல்கப் பேசிய அவர், "பட்டப்பகலில் எனது சகோதரரை கொன்ற போலீஸார் கைது செய்யப்பட வேண்டும்" என்றும் "கருப்பினத்தவர்கள் தொடர்ந்து கொல்லப்படவதை பார்த்து சோர்ந்து போய்விட்டேன்," என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற சிஎன்என் தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் ஒமர் ஜிமென்ஸ் மற்றும் அவரின் கேமரா மேன் மின்னெசோட்டா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உணவகம் ஒன்றில் கள்ளப்பணம் செலுத்தப்படுகிறது என்ற தகவலின் அடிப்படையில் ஜார்ஜ்ஜை விசாரிக்க போலீஸார் அவரை தொடர்புகொண்டனர்.

போலீஸார் அவரை நெருங்கியபோது அவர் காரை விட்டு இறங்க மறுத்ததால் அவரின் கையில் விலங்கு போடப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் வந்த காணொளியில் அந்த மோதல் எப்படி தொடங்கியது என்ற தகவல் இல்லை.

Image copyrightGETTY IMAGESபோலீஸார் கூறுவது என்ன?

டிரம்பின் ட்விட்டர் பதிவு

இந்நிலையில் மினியாபொலிஸில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "மினியாபொலிஸ் போன்ற சிறந்த அமெரிக்க நகரில் இவ்வாறு நடைபெறவதை நான் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டேன். தீவிர இடதுசாரி கொள்கையுடைய மேயர் ஃப்ரே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேசியப் படையை அனுப்பி நடவடிக்கை எடுப்பேன்.

ரவுடிகள் ஜார்ஜ்ஜை அவமதிக்கின்றனர். நான் அதை நடக்க விட மாட்டேன். ஆளுநர் டிம் வால்சிடம் பேசியுள்ளேன். அவருடன் ராணுவம் துணை நிற்கும் என்று தெரிவித்தேன். ஏதாவது பிரச்சனையென்றால் நாங்கள் கட்டுப்படுத்துவோம். ஆனால் கொள்ளையடிப்பது தொடர்ந்தால் துப்பாக்கிச் சூடு நடக்கும்" என பதிவிட்டுள்ளார் டிரம்ப்.

ஆனால் இந்த ட்விட்டர் பதிவு "வன்முறையை தூண்டுவதாக" உள்ளது என்ற எச்சரிக்கை வாசகங்களைக் கொண்டு அந்த பதிவை ட்விட்டர் மறைத்துள்ளது. எனினும், அப்பதிவு இன்னும் ட்விட்டரால் நீக்கப்படவில்லை.

வாஷிங்டன்அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், கடந்த 25-ஆம் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார்.இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்னபொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.

மினசோட்டா,ஜார்ஜியா,ஓஹியோ,கொளராடோ,விஸ்கான்சின்,கென்டக்கி,உட்டா,டெக்சாஸ்,கொலம்பியா ஆகிய மாநிலங்களில் நிலமை மோசமாக உள்ளது போராட்டங்கள் வெடித்து உள்ளனஇந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டை கொன்ற போலீஸ் அதிகாரி டெரெக் சவுவின், 44, கைது செய்யப்பட்டு, அவர்மீது, கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, நேற்று முன்தினம் இரவு, 8:௦௦ மணி முதல், நேற்று காலை, 6:௦௦ மணி வரை, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.இருப்பினும் ஊரடங்கை பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மக்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். உணவகம், வங்கி ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல மணி நேரமாக எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுப்படுத்தினர்.இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க இராணுவத்தின் போலீஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.ஆனாலும் லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட பல நகரங்களில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. புரூக்ளினில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.ஹூஸ்டனில் நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.அவர்களைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.


-----------------------------------------------------

11 ஆண்டுகளில் இல்லாத சரிவு.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டதால் அரசுக்கு வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. இந்த ஊரடங்கால் மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் தளர்வுகள் அளித்தாலும் நிறுவனங்கள் முழுமையாகச் செயல்படமுடியாத சூழலே உள்ளது. தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 44 காலாண்டுகளில் இல்லாத சரிவை சந்தித்திருப்பதாக மத்திய புள்ளியல் துறை தெரிவித்துள்ளர்.

இதுதொடர்பாக மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019-20ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் நாட்டின் தயாரிப்புத் துறையின் வளர்ச்சி 1.4 சதவீதமாக பின்னடைவை சந்தித்துள்ளது.

அதேப்போல் கட்டுமானத் துறையின் வளர்ச்சி 2.2 சதவீதம் முடங்கியது. ஒட்டுமொத்த அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜனவரி மார்ச் காலாண்டில் 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல், 2019-20-ஆம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 சதவிதமாக குறைந்துள்ளது.

அதற்கு முந்தையை 2018-19-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.1 சதவிதமாக இருந்தது. இது கடந்த 44 காலாண்டுகள், அதாவது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

--------------------------------------------------

இந்திய மக்கள்தொகையில் பாதிப் பேருக்குக் கொரோனா பரவும்..?

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸை எதிர்த்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை 4 கட்ட ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டுவிட்டன. இருந்தும் இங்கு வைரஸ் பரவலின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.


நாளையுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடியவுள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 - ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,971- ஆகவும் உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய மக்கள் தொகையில் பாதிப் பேருக்கு அதாவது 67 கோடி பேருக்குக் கொரோனா பரவியிருக்கும் என தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறும் எனவும் ஆனால் அதில் 90% பேர் தங்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியாமல் வாழ்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இவர்களில் 5% பேர் மட்டுமே ஆபத்தான நிலையில் இருப்பார்கள், 67 கோடி பேரில் 5% என்பது 30 மில்லியனாக இருக்கும் எனக் கணித்துள்ளனர்.


எப்படியிருப்பினும், கோவிட் -19 அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்தியா போதுமான சுகாதார நடவடிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். தற்போதுவரை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்தியாவில் 1.30 லட்சம் படுக்கைகள் மட்டுமே உள்ளன. வரும் நாள்களில் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்கப் படுக்கைகள் இருக்காது. உண்மையில் பல மாநிலங்களின் கிராமப்புறங்களில் ஏற்கெனவே இந்தச் சூழ்நிலை நிலவுகிறது.


மே 16-ம் தேதி நிலவரப்படி இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் மொத்தக் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 21%, இதைக் கணக்கிட்டால் சுமார் 3.5 கோடி மக்கள் கொரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே வருங்காலத்துக்குத் தேவையான அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் அந்தந்த மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


நமது நாட்டைப் பொறுத்தவரை, வைரஸின் இறப்பு விகிதம் 5% -க்கும் குறைவாக உள்ளது. அப்படியானால் 95% பேர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். ஜூலை தொடக்கத்தில் இந்தியாவில் வைரஸ் பரவலின் நிலை உச்சத்தை எட்டும் எனச் சில விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் விரைந்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?