நீ தனித்திரு. நாங்கள் இந்தியாவையே தனியாராக்குகிறோம்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொய்னா மரத்தின் பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மாத்திரை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இத்தாலி ஸ்பெயின் நாடுகளை வீழ்த்திவிட்டு அமெரிக்கா பக்கம் திரும்பிய போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை அங்கே கொரோனா சிகிச்சைக்கு பலன் தரும் என சொல்லப்பட்டது.
ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மருந்துகள் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை குறைப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் உலக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தேவை திடீரென அதிகரித்தது.
ஆனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பின் விளைவுகளை உண்டாக்கக் கூடியதாகும்.
இதனாலேயே இம்மாத்திரையை அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருந்தன.
கொரோனா வைரசை இம்மாத்திரை ஒழிப்பதாக அமெரிக்கா கூறியதால் இம்மாத்திரையை பயன்படுத்த ஆரம்பித்தன. மோடியை மிரட்டி இம்மாத்திரையை அமெரிக்கா வாங்கியது.
ஆனால் அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஒரு காரணம் என உலக சுகாதார நிறுவனம் கூறி வந்தது.
கொரோனாவில் இருந்து நலமடைந்தவர்கள் பலர் திடீரென இறக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பக்க விளைவுகளே காரணம் என தெரிகிறது.
சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் ,பிரன்ஸ் ,அமெரிக்கா போன்ற நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்தி ஆய்வுகள் செய்துவருகின்றன.
அமெரிக்காவை கொரோனா தாக்குதலில் இருந்து காக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அதிகம் தேவை என இந்தியாவிடம் கோரிக்கை வைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டலும் விடுத்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்தை அதிக அளவில் பெற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் நான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தினமும் சாப்பிடுகிறேன் , உங்கள் முன் நலமாக இருக்கிறேன் எனவும் அறிவித்தார் டிரம்ப்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனா வைரஸ் எண்ணிக்கையை கட்டுப்படுத்தினாலும் மாரடைப்பு போன்ற சிக்கல்களுக்கு இட்டுச்செல்வதால் கவனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டது.இந்நிலையில், லான்சட் மருத்துவ ஆய்விதழ் கடந்த வெள்ளிகிழமை வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பாதுகாப்பானதல்ல என்றும், இருதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வெண்டிலேட்டர் பயன்படுத்த வேண்டிய தேவையை குறைக்கவில்லை என்றும் இதன் மூலம் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவன நிர்வாக குழு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
முன்னதாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் 40,000 மருத்துவ பணியாளர்களுக்கு கொடுத்து பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தியாவில் 4000 மருத்துவ பணியாளர்களுக்கும் இந்த மருத்து கொடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தி ஆய்வுகள் தொடங்கியுள்ளன.
------------------------------------------------------
இயற்கை- செயற்கை அழிவுகளில் இந்தியா.
வெட்டுக்கிளிகளில் மிகவும் ஆக்ரோஷமானது பாலைவன வெட்டுக்கிளிகள். ஒரு சதுர மைல் பரப்பளவுக்கு இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக வந்திறங்கினால் ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் உண்ணும் உளவு அளவுக்கு பயிர்களை சாப்பிடக் கூடியது. இந்த வெட்டுக்கிளிகள்தான் தற்போது இந்தியாவிற்குள் நுழைந்து தங்களது விளைநிலங்களை சூறையாடி வருகின்றன.
இதன் பூர்வீகம் ஆப்ரிக்கா. எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் பருவமழைக்கு பிந்தைய பசுமையான வயல்களில் பல்கிப் பெருகிய இந்த வெட்டுக்கிளிகள் ஏமன் வழியாக ஈரானுக்குள் நுழைந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின. பின்பு அங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று தங்களது படையை இன்னும் விஸ்தரித்து இம்மாதத் தொடக்கத்தில் எல்லை தாண்டி ராஜஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தன.
தொடக்கத்தில் எல்லையோர மாவட்டங்களில் பூ, காய், பழம், தண்டு என பயிர்களை மொத்தமாக தின்று தீர்த்துக் கொண்டிருந்த இந்த வெட்டுக்கிளிகள் படிப்படியாக முன்னேறி இன்று ராஜஸ்தானின் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் பாதி மாவட்டங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.
ஜெய்ப்பூரில் குடியிருப்புகள் இவை வழியாக பறந்து சென்றதைப் பார்த்து நகரத்து மக்களே மிரண்டு போனார்கள்.
பூச்சி மருந்து அடித்து கொள்வதற்காக சிறப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டாலும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளை ஒழிக்க அதுபோதுமானதாக இல்லை. ராஜஸ்தானில் 50 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வெட்டுக்கிளி கூட்டத்தில் ஒரு பிரிவு சத்தமே இல்லாமல் மத்திய பிரதேசத்திற்குள் புகுந்துவிட்டது.
வெட்டுக்கிளிகள்
அங்கே சுமார் 3 கிலோ மீட்டர் அளவுக்கு பறக்கும் இந்த வெட்டுக்கிளிகள் இதுவரை 16 மாவட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தியிருக்கின்றன. வருவாய், தீயணைப்பு உள்ளிட்ட அனைத்து முக்கியமான அரசு துறைகளுக்கும் இவற்றை கொல்வதே பெரும் தலைவலியாய் மாறியிருக்கிறது.
அடுத்தபடியாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்திலும் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பூச்சி மருந்துடன் தீயணைப்புத் துறையினர் தயாராக உள்ள நிலையில், ராஜஸ்தானில் இருந்து வெட்டுக்கிளி ஒழிப்பு நிபுணர்களும் வரவழைக்கப்ட்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கில் விவசாயம்,உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெட்டுக்கிளிகள் மீதமுள்ள பயிர்களையும் தின்று அழித்து வருவது இயற்கையின் கொடூரம்.மறுபுறம் பா.ஜ.க. அரசு மக்களை கொரோனாவின் பெயரால் கசக்கிப் பிழிந்தெடுகும் செயற்கைக் கொடூரம்..
-------------------------------------------------------------------