திங்கள், 30 டிசம்பர், 2019

இணைய சேவை முடக்கம்

இணைய சேவை முடக்கம்

இந்தியாவில் கடந்த ஆண்டு 134 முறை

  பாகிஸ்தானில் 12 முறைதான்


"குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றிய பிறகு எது குறித்தும் கவலைப்பட வேண்டாம் என்று நான் அசாமிலுள்ள சகோதர, சகோதரிகளிடம் உறுதியளிக்க விரும்புகிறேன். உங்களது உரிமைகள், தனித்துவமான அடையாளம், அழகான கலாசாரம் உள்ளிட்ட எதையும், யாராலும் உங்களிடமிருந்து பறிக்க முடியாது என்று உங்களிடம் உறுதியளிக்கிறேன். அவை தொடர்ந்து செழித்து வளரும்" என்று டிசம்பர் மாதம் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 
ஆனால், அப்போது நிலவிய பிரச்சனை என்ன தெரியுமா? மேற்கண்ட பதிவின் மூலம் தனது கருத்தை அசாம் மக்களிடம் தெரிவிக்க பிரதமர் விரும்பினார்; ஆனால், அப்போது அசாம் மக்களால் இணையத்தையே பயன்படுத்த முடியவில்லை.

கடந்த புதன்கிழமை, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், அதற்கு எதிரான போராட்டங்கள் அசாம், மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமல்ல, உத்தரப் பிரதேசத்திலுள்ள அலிகார் உள்ளிட்ட இடங்களிலும் கடந்த 13ஆம் தேதி மாலை 5 மணிவரை இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 91 முறை இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டிருப்பதாக 'இன்டர்நெட் ஷட்டவுன்ஸ்' என்ற இணையத்தின் தரவு கூறுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவில் வெறும் 15 இணைய சேவை முடக்கங்களே பதிவாகியுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை படிப்படியாக, 2016இல் 31, 2017இல் 79, 2018இல் 134 என அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 134 இணைய சேவை முடக்கங்களில் 65 சம்பவங்கள் ஜம்மு & காஷ்மீரில் மட்டும் நிகழ்ந்தன. இந்த ஆண்டு இதுவரை நடைபெற்றுள்ள 91 இணைய சேவை முடக்க சம்பவங்களில் 55 ஜம்மு & காஷ்மீரில் நிகழ்ந்துள்ளன.

2018ல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் 134 முறை இணைய சேவை முடக்கப்பட்டிருந்தது; இதுதான் அந்த ஆண்டில், உலகளவில் பதிவான அதிக எண்ணிக்கை ஆகும். இரண்டாமிடத்தை பிடித்துள்ள பாகிஸ்தானில் வெறும் 12 இணைய சேவை முடக்க சம்பவங்களே அதே காலகட்டத்தில் பதிவாகியுள்ளன. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்னதாக வெளிவந்த அயோத்தி வழக்கு தீர்ப்பின்போதும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டிருந்தது.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து இணைய சேவை முடக்கத்தில் இராக் (7), யேமன் (7), எத்தியோப்பியா (6), வங்கதேசம் (5), ரஷ்யா (2) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இன்டர்நெட் ஷட்டவுன்ஸ்' இணையதளத்தின் தரவுகளை பார்க்கும்போது, இணைய சேவை முடக்கங்கள் தொடங்கியதிலிருந்து இதுவரையிலான காலம் வரை, அதிகபட்சமாக ஜம்மு & காஷ்மீரில் புர்கான் வாணி இறப்பை தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களின் காரணமாக அங்கு கடந்த 2016ஆம் ஆண்டு தொடர்ந்து 133 நாட்கள் இணைய சேவை முடக்கப்பட்டது. 

அப்போது, மூன்றரை மாதங்களில் போஸ்ட்பெய்டு பயன்பாட்டாளர்களுக்கு இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்ட நிலையில், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் சுமார் ஆறு மாத காலம் இணைய சேவைக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

ஜம்மு & காஷ்மீரில் மற்றொரு இணைய முடக்கம் கடந்த ஆகஸ்டு மாதம் 4ஆம் தேதி விதிக்கப்பட்டது, அப்போதுதான் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சுயாட்சி அளித்த இந்திய அரசமைப்பின் 370வது பிரிவு இந்திய நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது. இதுவரை நூறுக்கும் மேற்பட்ட நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அங்கு இணைய சேவை முடக்கம் திரும்ப பெறப்படவில்லை.
ஜம்மு & காஷ்மீர் தவிர்த்து பார்த்தோமானால், நாட்டிலேயே மூன்றாவது மிக நீண்ட இணைய சேவை முடக்கம் 2017 ஜூன் 18 முதல் 2017 செப்டம்பர் 25க்கு இடைப்பட்ட காலத்தில், மேற்குவங்கத்தில் அமலில் இருந்தது. கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, டார்ஜிலிங்கில் நடைபெற்ற போராட்டத்தை ஒட்டி விதிக்கப்பட்ட இந்த தடை சுமார் 100 நாட்கள் நீடித்தன.

அதிக இணைய சேவை முடக்கங்களை கண்ட பகுதி

2012ஆம் ஆண்டு முதல் இதுவரையில், இந்தியாவிலுள்ள பல்வேறு இடங்களில் 363 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது; இதில் ஜம்மு & காஷ்மீரில் மட்டும் 180 சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. 67 இணைய சேவை முடக்கங்களுடன் ராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும், 18 சம்பவங்களுடன் உத்தரப் பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தியாவில் இணைய சேவையை முடக்குவதற்கு வழிவகை செய்வதற்கு பல்வேறு சட்டப்பிரிவுகள் உள்ளன. குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 (சிஆர்பிசி), இந்திய டெலிகிராஃப் சட்டம் 1885, தொலைத்தொடர்பு சேவைகளின் தற்காலிக இடைநீக்கம் (பொது அவசர நிலை அல்லது பாதுகாப்பு) விதிகள், 2017 ஆகியவை இந்தியாவிலுள்ள மாநிலங்கள், மாவட்டங்கள் ஆகியவற்றில் இணைய சேவையை முடக்குவதற்கான அதிகாரத்தை அரசு முகமைகளுக்கு வழங்குகிறது.
குற்ற நடைமுறைச் சட்டம் பிரிவு 144 "பொது அமைதியைப் பேணுவதற்கான தற்காலிக நடவடிக்கைகள்" என்ற அத்தியாயத்தின் கீழ், மாநில அரசுகள் "அவசரகால பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுக்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரத்தை" வழங்குகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

 உத்தரப்பிரதேச அடக்கத்துக்கு காரணம் 

காவல்துறை மீதான அச்சம்?

உத்தரப்பிரதேசத்தில் டிசம்பர் 20 அன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர், பல நகரங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமான இந்து மற்றும் முஸ்லிம்கள் வீதிகளில் திரண்டனர். ஆனால் அமைதியாக தொடர்ந்த ஆர்ப்பாட்டங்கள், கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் வன்முறையாக உருவெடுத்தது.
முசாஃபர்நகர், மீரட், பிஜ்னோர், சம்பல், மொராதாபாத், கான்பூர் போன்ற நகரங்களில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. அதில் 16 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்,
கிட்டத்தட்ட அனைவரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவர்கள். ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளர்; நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முசாஃபர்நகர், மீரட் மற்றும் பிஜ்னோர் ஆகிய மூன்று மாவட்டங்களின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் நாங்கள் கள ஆய்வுகளை மேற்கொண்டோம். எங்கள் சக பணியாளர் சமீரத்மஜ் மிஸ்ரா கான்பூருக்கு சென்றார்.
எல்லா இடங்களிலும் சில விஷயங்கள் ஒன்று போலவே இருந்தன.
மரணங்கள் அனைத்தும் துப்பாக்கிச் சூட்டால் நிகழ்ந்தவை. இறந்த அனைவரும் முஸ்லிம்கள். தாக்குதல் சம்பவங்கள் நடந்த வீடுகள் மற்றும் மாநில அரசு நிர்வாகம் சீல் வைத்த கடைகள் அனைத்தும் முஸ்லிம்களுடையது.
உயிர் மற்றும் சொத்து இழப்புக்களை சந்தித்த அனைவருமே ஏழை மக்கள். அரசு நிர்வாகத்தையோ, கிராமத் தலைவர்களையோ அணுகும் இடத்தில்கூட அவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முசாஃபர்நகரை சேர்ந்த ஓர் இளம் வழக்கறிஞரிடம் பேசியபோது, "காவல்துறையும் நிர்வாகமும் எங்களை (முஸ்லிம்களை) குறிவைத்துள்ளன," என்றார். முஸ்லிம்களின் பகுதிகளில் உள்ள பலரிடம் பேசியபோது, அரசாங்கம் அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக தெரிவித்தனர்.
முசாஃபர்நகரில், முஸ்லிம் குடியிருப்புகளில் பல வீடுகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. வீதிகளில் இருந்த வாகனங்கள் மற்றும் பிற உடைமைகள் அழிக்கப்பட்டன.

இதை பார்க்கும்போது, எதோ ஒரு விஷயத்திற்காக தண்டனை கொடுக்கும் நடவடிக்கையா என்ற கேள்வி எழுகிறது. மக்களின் வெறுப்புணர்வுகளை இந்த நாசவேலைகள் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
இந்த நகரத்தின் பிரதான சாலையில் முஸ்லிம்களின் 52 கடைகள் மட்டுமே சீல் வைக்கப்பட்டுள்ளன.
இதை, அரசு நிர்வாகத்தின் தரப்பில் இருந்து தங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பொருளாதார ரீதியிலான தாக்குதலாக முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டும் அவர், அதில் ''அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்தும் போராட்டக்காரர்கள் பழிவாங்கப்படுவார்கள்,'' என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு பகுதியிலும் காவல்துறையின் மீதான அச்சத்தை நாங்கள் உணர்ந்தோம். முசாஃபர்நகரில் ஒரு வீட்டின் மீதான தாக்குதலின்போது அங்கு இருந்தவர்களுடன் பேச முயற்சித்தோம்.
ஓர் இளைஞர் முகத்தில் மஃப்ளரை வைத்து மறைத்துக் கொண்டு எங்களிடம் பேசினார்.
"இந்த பகுதியும், இந்த வீடுகளில் வாழும் மக்களும் எங்களுடையவர்கள், வரவிருக்கும் காலத்தில் அது எங்களுடையதாகும். இங்கிருந்து நீங்கள் வெளியேறுங்கள் என்று அவர்கள் கூறினார்கள். தாக்குதல் நடத்தியவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கங்களை எழுப்பிக் கொண்டே, பொருட்களை சேதப்படுத்தினார்கள்," என்று அவர் தெரிவித்தார்.

வேறு பல வீடுகளில் வசிக்கும் பலரிடமும் பேசினோம். அவர்களும் இதேபோன்றுதான் சொன்னார்கள்.

நகரின் எஸ்.பி. சத்பால் அந்திலின் அலுவலகத்திற்கு சென்றோம், இந்த குடிமக்களின் புகாரை அவர்கள் முன் வைத்தோம். முதலில் அவருக்கு கோபம்தான் வந்தது. அவருடன் நேர்காணல் எடுத்து முடித்த பிறகு, எங்கள் சக செய்தியாளர் தீபக்கிடம் இருந்து தொலைபேசியைப் பறித்து, அதில் பதிவு செய்யப்படிருந்த உரையாடலை அழித்துவிட்டார்.
மக்களைத் தூண்டிவிடும் செயல்களில் பிபிசி ஈடுபடுவதாக எஸ்.பி. குற்றம் சாட்டினார். எங்களிடம் வீடியோக்கள் உள்ளன என்றும், அதில் மக்களின் குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்றும் நாங்கள் கூறினோம். அவர்களுக்கு உங்களிடம் இருந்து பதிலை பெற்றுத் தருவதற்காக வந்திருக்கிறோம் என்று கூறினோம். ஆனால் நாங்கள் தவறாக சொல்வதாக எஸ்.பி கூறினார்.
எனது 30 ஆண்டுகால ஊடகப் பணியில் காவல்துறையினரிடமிருந்து இதுபோன்ற எதிர்வினையை நான் பார்த்ததேயில்லை. கலவரம், தீவிரவாத தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், மும்பை பயங்கரவாத தாக்குதல் போன்ற பல தீவிரமான சம்பவங்கள் குறித்து நாங்கள் செய்திகளை கொடுத்துள்ளோம், ஆனால் எந்த ஒரு காவல்துறை அதிகாரியும் இதுபோன்று நடந்து கொண்டதில்லை. எங்கள் வீடியோக்களை யாரும் அழிக்கவில்லை.
காவல்துறையின் ஆற்றலையும் அதன் வலிமையையும் நான் அறிவேன், ஏனென்றால் எனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலும் நான் கிரைம் ரிப்போர்டிங் செய்துள்ளேன். காவல்துறையினரின் பிரச்சனைகள் பற்றியும் எனக்கு கவலை இருக்கிறது, ஆனால் சத்பால் அந்தில் தேவைக்கு அதிகமாக கடுமையான எதிர்வினைகளைக் காட்டியதாக தோன்றியது.
உள்ளூர் பத்திரிகையாளர்கள் அவரிடம் கடுமையான கேள்விகளைக் கேட்பதைத் தவிர்ப்பார்கள், அவரிடம் கடினமான கேள்விகளைக் கேட்பது பழக்கமில்லை என்றும் எங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் அவருடைய அதிகப்படியான எதிர்வினையை புரிந்து கொள்ள முடியவில்லை.

கோபம் குறைந்தபிறகு எஸ்.பி மீண்டும் எங்களுடன் பேசத் தயாரானாலும், சில கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்தார்.
 காவல்துறை மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
காவல்துறையினர் அழிவுச் செயல்களில் ஈடுபட்டதான புகார் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்று அவர் கூறினர். மக்கள் புகார் அளித்தால், அது விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
நிர்வாகத்திடமும் காவல்துறையினரிடமும் நாம் கூர்மையான கேள்விகளைக் கேட்கவில்லை என்றால், வேறு யார் இதை செய்வது?
ஆனால் காவல்துறையை எவ்வளவு விமர்சிப்பது?
போராட்டத்தை சீர்குலைக்க, எதிர்ப்பாளர்களை அடிப்பது, கைது செய்வது, மிகக் கடுமையான பிரிவின் கீழ் வழக்குத் தொடர்வது என, உத்தரபிரதேசத்தின் அனைத்து நகரங்களிலும், காவல்துறையின் அணுகுமுறை ஒரே மாதிரியாக இருந்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மீண்டும் போராட்டஙக்ள் நடத்தக்கூடாது என்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.
 
முசாஃபர்நகர் தவிர, மற்ற நகரங்களிலும் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் பேசினோம். எதிர்ப்பாளர்கள் வன்முறையின் பாதையை எடுத்தார்கள். அதனால் கண்ணீர்ப்புகை, பெல்லட் குண்டு துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டியிருந்தது. அதோடு, துப்பாக்கிச் சூடும் நடத்த வேண்டியிருந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அனைத்து தரப்பினருடனும் பேசிய பின்னர், முதலில் ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடந்தன என்ற முடிவுக்கு வந்தோம். பிறகு, காவல்துறை அவர்களைத் தடுக்க முயன்றபோது, இருபுறமும் நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தத் தொடங்கினர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எல்லா பேரணிகளிலும் இதே மாதிரி நிலைமையை பார்க்கமுடிந்தது.
வெள்ளிக்கிழமை நடந்த சம்பவங்களுக்கான உண்மையான பொறுப்புக்கூறல் உத்தரப்பிரதேச அரசுக்குத்தான் உள்ளது. ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க காவல்துறை அதிக சக்தியைப் பயன்படுத்தியது ஏன்?
காவல்துறையினர் கூறுவது போல் போராட்டக்காரர்கள் வன்முறைக்கு திரும்பினார்களா?
இந்த கேள்விகளுக்கு விடையை சுதந்திரமாகவும் , நியாயமான முறையிலும் விசாரணையின் மூலம் கண்டறிய வேண்டும். காவல்துறை என்ற போர்வையில், இந்து அமைப்புகளின் ஆர்வலர்கள் போராட்டக்காரர்களைத் தாக்கியதை நாங்களே நேரடியாக பார்த்தோம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிம்மதி கொடுக்க விரும்பினால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அனைத்து குடிமக்களுக்குமானது என்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------


-------------------------------------------------------------------------------------------------------------------------------ஞாயிறு, 29 டிசம்பர், 2019

வாயைத்திறந்தாலே

பொய் .பொய்யைத் தவிர வேறில்லை.
இந்தியாவில் தடுப்பு காவல் மையம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோதி புது டெல்லியில் ஏன் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பு மையம் இங்கு (மாட்டியா) கட்டப்படுவதை நீங்கள் காணலாம்."
அசாமின் குவால்பாடா மாவட்டத்தின் மாட்டியா கிராமத்தில் வசிக்கும் சமூக செயல்பாட்டாளர் ஷாஜகான் அலி இவ்வாறு கூறுகிறார்.
சட்டவிரோத வெளிநாட்டினரை வைத்திருக்க இந்த பிரமாண்டமான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது, அதற்கான நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் கொடுக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களுக்கான தடுப்புக்காவல் மையம் இல்லை என்றும், அது ஒரு வதந்தி என்றும் கூறினார்.
ஆனால், பிரதமர் மோதி கூறியதற்கு மாறாக, நாட்டின் முதல் மற்றும் மிகப்பெரிய தடுப்பு மையம் அசாமின் மாட்டியா கிராமத்தில் இரண்டரை ஹெக்டேர் நிலத்தில் கட்டப்பட்டு வருகிறது.அசாமில் தடுப்பு மையம் கட்டப்படுவதை நீங்கள் பார்த்தீர்களா?படத்தின் காப்புரிமைDILIP SHARMA/BBC

தடுப்பு மைய கட்டுமான பணிகள்

இந்த தடுப்பு மையத்தின் கட்டுமானத்தை மேற்பார்வையிடும் தள பொறுப்பாளர் ராபின் தாஸிடம் பிபிசி பேசியது.
"இந்த தடுப்பு மையத்தை டிசம்பர் 2018 முதல் நான் மேற்பார்வை செய்து வருகிறேன். கடந்த ஆண்டு டிசம்பர் முதல் மாட்டியா கிராமத்தில் இந்த தடுப்பு மைய நிர்மாணப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த தடுப்பு மையத்தில் மூவாயிரம் பேரைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன," என்கிறார் ராபின் தாஸ்.
"ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. 70 சதவிகித தடுப்புக்காவல் பணிகள் முடிந்துவிட்டன. சுமார் 300 தொழிலாளர்கள் எந்த விடுப்பும் இன்றி இந்த கட்டுமானப் பணிகளை முடிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இந்த கட்டுமானப் பணிகளை முடிக்க 2019 டிசம்பர் 31 என்று காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. "
"ஆனால் இந்த பிரமாண்டமான கட்டடத்தின் கட்டுமானம் தொடர்பான அனைத்து பணிகளும் 2020 மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடியும் என்று நான் நம்புகிறேன். உண்மையில், மழை நாட்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக, பணிகள் சற்று மந்தமாகிவிட்டன."
இந்த தடுப்பு மையத்தை நிர்மாணிப்பதற்கான செலவு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ராபின் தாஸ், "இந்த கட்டுமானத்தில் மொத்தம் 46 கோடி ரூபாய் செலவிடப்படும், அதை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்குகிறது" என்றார்.தள பொறுப்பாளர் ராபின் தாஸ் தடுப்பு மையத்தின் கட்டுமானத்தை மேற்பார்வையிடுகிறார்படத்தின் காப்புரிமைDILIP SHARMA/BBC
Image captionதள பொறுப்பாளர் ராபின் தாஸ் தடுப்பு மையத்தின் கட்டுமானத்தை மேற்பார்வையிடுகிறார்

'உலகின் இரண்டாவது பெரிய தடுப்புகாவல் மையம்'
அமெரிக்காவின் தடுப்பு காவல் மையத்திற்குப் பிறகு, இது உலகின் இரண்டாவது பெரிய தடுப்பு மையமாக இருக்கும் என்று தள பொறுப்பாளர் தாஸ் கூறுகிறார். இதன் உள்ளே மருத்துவமனையும், வாயிலுக்கு வெளியே தொடக்கப்பள்ளி ஆடிட்டோரியம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கவனிப்பு உட்பட அனைத்து வசதிகளும் இருக்கும்.
தற்போது, அசாமின் ஆறு வெவ்வேறு மத்தியச் சிறைகளில் அமைக்கப்பட்ட தடுப்பு மையங்களில், வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்ட 1133 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இந்த தகவலை ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் ஜி.கே.ரெட்டி வழங்கினார், இது ஜூன் 25 வரை உள்ள தரவு.
மாட்டியா கிராமத்திற்கு அருகில் வசிக்கும் அஜீதுல் இஸ்லாம், இந்த இடத்தை கடந்து செல்லும் போதெல்லாம், உயரமான சுவர்களால் சூழப்பட்ட தடுப்பு மையத்தைப் பார்த்துப் பயப்படுகிறார்.
அவர் கூறுகிறார், "நான் இந்த பகுதியில் வளர்ந்திருக்கிறேன், ஆனால் இவ்வளவு பெரிய கட்டடத்தை நான் பார்த்ததில்லை. மனிதர்களை அதற்குள் வைத்திருந்தால், கண்டிப்பாக பயம் ஏற்படும். அசாமில் சட்டவிரோத குடிமக்களின் பிரச்சினை மிகவும் தீவிரமானது என்பது உண்மைதான். ஆனால் வெளிநாட்டவர் என அறிவிக்கப்பட்ட நபரை இவ்வளவு செலவு செய்து தடுப்பு மையத்தில் வைத்துப் பராமரிப்பதைவிட அவரது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவிடலாம்.நரேந்திர மோதி சொன்ன அஸ்ஸாம் தடுப்பு மையம் பற்றிய உண்மைபடத்தின் காப்புரிமைDILIP SHARMA/BBC

வெளிநாட்டு குடிமக்கள்

இந்தக் கட்டுமானம் தொடங்கப்பட்டதிலிருந்தே இங்கு 24 வயதான தீபிகா கலிதா தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். எதுபோன்ற நபர்கள் இங்கு வைக்கப்படுவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
அவர் கூறுகிறார், "இங்கே என்.ஆர்.சி.யில் பெயர் இடம்பெயராதவர்கள் அல்லது வாக்காளர்கள் இல்லாதவர்கள் வைக்கப்படுவார்கள். நான் ஆரம்பத்திலிருந்தே இங்கு பணியாற்றி வருகிறேன். நாங்கள் ஏழைகள், இங்கு வேலை செய்துதான் வயிறு வளர்க்கிறோம். இங்கு வேலை செய்பவர்களுக்கு ஒப்பந்தக்காரர் தினமும் 250 ரூபாய் கூலி கொடுக்கிறார். என்.ஆர்.சி.யில் எனது பெயர் வந்துவிட்டது, ஆனால் எத்தனை பேர் இங்கு வைக்கப்படுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்கிறார் தீபிகா கலிதா.The truth of Assam at the Detention Center, which PM Modi said was a lieபடத்தின் காப்புரிமைDILIP SHARMA/BBC

இந்த தடுப்பு காவல் மையத்தில் தொழிலாளியாக பணியாற்றும் 30 வயதான கோகுல் விஸ்வாஸ் என்பவரின் பெயர் என்.ஆர்.சி-யில் இடம்பெற்றவர் தான். வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டவர்கள் இந்த இடத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
கோகுல் கூறுகிறார், "நான் கடந்த சில நாட்களாக இங்கு வேலை செய்கிறேன். நாளொன்றுக்கு 500 ரூபாய் கூலி கிடைக்கிறது. இது தடுப்பு மையத்தின் கட்டடம். வெளிநாட்டு மக்கள் இங்குத் தங்க வைக்கப்படுவார்கள். என்.ஆர்.சி.யில் எனது பெயர் இடம்பெறவில்லை என்றால், என்னையும் இந்த சிறையில் தானே வைத்திருப்பார்கள் என்று இங்கு வேலை செய்யும் போது பல முறை பயந்திருக்கிறேன்."

'குடும்பங்கள் சிதறடிக்கப்படும்'

உண்மையில், இந்த தடுப்பு மையத்தின் கட்டுமானத் தொழிலாளர்கள் பலரின் பெயர் என்.ஆர்.சி.யில் இடம்பெறவில்லை என்று கோகுல் தனது சக தொழிலாளிகளிடமிருந்து கேள்விப்பட்டிருக்கிறார்.
இந்த தடுப்பு மையத்திற்கு வெளியே சிறிய அளவிலான தேநீர் மற்றும் உணவகத்தை நடத்தி வரும் அமித் ஹாஜோங், தனது மனைவி மம்தாவின் பெயர் என்.ஆர்.சி.யில் சேர்க்கப்படவில்லை என்று மிகவும் வருத்தப்படுகிறார்.அமித் ஹாஜோங், மனைவி மம்தாபடத்தின் காப்புரிமைDILIP SHARMA/BBC

தனது பிரச்சினையை விவரிக்கிறார் அமித். "நான் எனது குடும்பத்துடன் அருகிலுள்ள எண் 5 மாட்டியா முகாமில் வசிக்கிறேன். என் பெயர், அம்மாவின் பெயர், மகனின் பெயர் என எனது முழு குடும்பத்தின் பெயரும் என்.ஆர்.சி.யில் வந்துவிட்டது... ஆனால் என் மனைவி மம்தாவின் பெயர் வரவில்லை. இது எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. "
"நானும் என் மனைவியும் சேர்ந்து இந்த சிறிய தேநீர் கடையை நடத்துகிறோம். இதில் தான் எங்கள் வாழ்க்கையே கழிகிறது. நாள் முழுவதும் இந்த கடையில் வேலை செய்கிறோம், எனவே எதையுமே யோசிக்க முடியவில்லை. ஆனால் இரவில் வீட்டிற்குச் செல்லும்போது, இந்த விஷயங்களை நினைத்து கவலை ஏற்படுகிறது. இந்த பிரமாண்டமான கட்டடம் கண்ணுக்கு முன்னால் கட்டப்படுவதை ஒவ்வொரு நாளும் நாங்கள் காண்கிறோம். "
"என் மனைவியைப் பிடித்து ஒரு தடுப்பு மையத்தில் வைத்தால், எங்கள் குடும்பம் சிதைந்துவிடும். மனைவி இல்லாமல் குழந்தைகளை எப்படி வளர்ப்பது. மகனுக்கு ஐந்து வயது, மகளுக்கு 2 வயது. இதை நினைக்கும் போதெல்லாம் எனக்குப் பயமாக இருக்கிறது."

பிரதமரின் அறிக்கை
நரேந்திர மோதி 'பொய் 'என்று சொன்ன அஸ்ஸாம் தடுப்பு மையத்தின் 'உண்மை' நிலை என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியலில் 19 லட்சம் பேரின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதில், அளும் பாஜகவும் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடு முழுவதிலும் என்.ஆர்.சி அமல்படுத்தப்படும். அப்போது, அசாமிலும் என்.ஆர்.சி பணிகள் மீண்டும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
புதுடில்லியில் பேசிய பிரதமர் மோதி, "இந்திய மண்ணின் முஸ்லிம்களும், அவர்களின் மூதாதையர்கள் இந்தியத்தாயின் குழந்தைகள். சகோதர சகோதரிகளே, குடியுரிமைச் சட்டம் மற்றும் என்.ஆர்.சிக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நாட்டில் தடுப்பு மையங்களும் இல்லை, அங்கு முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்படுவதும் இல்லை. சகோதர சகோதரிகளே, இது ஒரு பச்சை பொய், இது ஒரு மோசமான எண்ணம் கொண்டவர்களின் விளையாட்டு, இது ஒரு கேவலமான விளையாட்டு. இந்த அளவுக்குப் பொய் பேச முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று கூறினார்.
சமூக ஆர்வலர் ஷாஜகான் கூறுகிறார், "இந்திய அரசின் பணத்தில் தடுப்பு மையம் கட்டப்படும் நிலையில், அதைக் குறித்து பிரதமர் எப்படிப் பேசுகிறார் என்று பாருங்கள்? இங்கு வரும் அனைவருக்கும் இது ஒரு தடுப்பு மையமாக இருக்கப்போகிறது என்பது தெரியும். அதுமட்டுமல்ல, ஆசியாவின் மிகப்பெரிய தடுப்பு மையமாக இது இருக்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும். "
குடி மக்கள் பதிவேடும் இல்லை என்கிறார்கள்.அதுவும் பொய்.
பதிவேட்டில் இடம் பெறாதவர்களுக்கு தடுப்புமையமே அடைக்கலம்.
---------------------------------------------------------------------++--------


வியாழன், 26 டிசம்பர், 2019

குடிமக்கள் பதிவேடு.

இந்தியாவின் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. அதாவது, என்.பி.ஆர்-ஐ மேம்படுத்த மற்றும் 2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடங்க ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
இதனால், இது குறித்து சர்ச்சைகள் தொடங்கியுள்ளன. நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) கொண்டு வருவதற்கான முதல் படி இது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இந்த கூற்றை அரசாங்கம் நிராகரிக்கிறது.
அசாமில் மேற்கொள்ளப்பட்ட என்.ஆர்.சி நடவடிக்கை மூலம் போதிய ஆவணங்கள் இல்லாத சுமார் 19 லட்சம் பேர் இந்தியக் குடிமக்கள் இல்லை என்று இந்திய அரசு கூறி இருப்பதால் இந்த அச்சம் எழுந்துள்ளது.
அமைச்சரவையின் இந்த முடிவுக்குப் பின்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "இந்திய தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) உடன் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு (என்.பி.ஆர்) எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டின் விதிகளும் வேறுபட்டவை. என்.பி.ஆர்-இன் தரவை என்.ஆர்.சி-க்கு பயன்படுத்த முடியாது. மாறாக இது 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தொடர்புடையது,'' என்று கூறினார்.
செவ்வாயன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் முதல் முறையாக என்.பி.ஆர்-ஐ உருவாக்கியது என்று கூறினார். அந்த சமயத்தில், இந்த நடவடிக்கை வரவேற்கப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லியில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, 2014 முதல் தற்போது வரை என்.ஆர்.சி என்ற சொல் தனது அரசாங்கத்தில் ஒரு முறை கூட பயன்படுத்தப்படவில்லை என்று கூறினார். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதால், இதுபோன்ற விளக்கத்தை அரசு திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

NPR the first step to bring NRCபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதோடு, குடியுரிமை திருத்த சட்டம் அமலான பிறகு தேசிய குடிமக்கள் பதிவேட்டைக் கொண்டுவருவதன் மூலம் நாட்டில் முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க விரும்புவதாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டப்படுகிறது.
என்.ஆர்.சி - என்.பி.ஆர் பற்றிய இந்திய அரசின் கூற்றுகளை பிபிசி ஆராயத் தொடங்கியது. உள்துறை அமைச்சகம் 2019 ஜூலை 31ஆம் தேதியன்று அரசிதழில் வெளியிட்ட ஓர் அறிவிக்கையின்படி, 2020 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து 2020 செப்டம்பர் 30க்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஆர்.சி செயல்முறை அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டில் முதல் முறையாக என்.பி.ஆர் உருவாக்கப்பட்டது என்பதும், அது 2015இல் புதுப்பிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. ஆனால் 2003ஆம் ஆண்டில் அடல் பிஹாரி வாஜ்பேயி அரசாங்கத்தில் நடைமுறைக்கு வந்தது .
1955ஆம் ஆண்டின் குடியுரிமை சட்டத்தை திருத்திய அன்றைய வாஜ்பேயி அரசாங்கம், அதில் புதிதாக "சட்டவிரோத குடியேறி" என்ற வரையறையையும் சேர்த்தது. 2003 டிசம்பர் பத்தாம் தேதியன்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், என்.சி.ஆர் எவ்வாறு என்.பி.ஆரின் தரவுகளின் அடிப்படையில் அமையும் என்பது மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CENSUSINDIA.GOV.INபடத்தின் காப்புரிமைCENSUSINDIA.GOV.IN

இந்த சட்டத்தின் நான்காவது விதியில் இது எழுதப்பட்டுள்ளது, "மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள இந்திய என்.ஆர்.சி தரவு சேகரிப்பு செயல்முறைக்காக வீட்டுக்கு வீடு சென்று பணியைத் தொடங்கலாம். இதை செய்வதற்கான கால வரையறைப் பற்றி, குடிமக்கள் பதிவு பதிவாளர் ஜெனரல் அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வழங்குவார்."
மக்கள்தொகை பதிவேட்டிற்காக சேகரிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பம் மற்றும் நபரின் தரவை உள்ளூர் பதிவாளர் சரிபார்ப்பார். ஒரு நபரின் குடியுரிமை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், அது மக்கள் தொகை பதிவேட்டில் குறிக்கப்படும். மேலதிக விசாரணை மற்றும் சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும் சம்பந்தப்பட்ட நபருக்கு இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும்.இதைத்தவிர, பிஐபி- இன் ஒரு ட்வீட்டில், 2014 ஜூன் 18, அன்று, அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "என்.பி.ஆர் திட்டத்தை தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்ல வேண்டும், இது என்.ஆர்.ஐ.சியின் (National Register of Indian Citizens) தொடக்கமாகும்" என்று கூறியதாக குகுறிப்பிடப்பட
2014 நவம்பர் 26ஆம் தேதியன்று, ஒரு கேள்விக்கு பதிலளித்த அப்போதைய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜு, "தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பிஆர்) என்பது ஒரு பதிவு, இதில் இந்தியாவில் வாழும் அனைத்து மக்களின் விவரங்களும் இருக்கும். அவர்கள் இந்திய குடிமக்களா இல்லையா என்பது வேறு விஷயம். இந்திய குடிமக்களின் தேசிய பதிவேட்டை (என்.ஐ.ஆர்.சி) நோக்கிய முதல் படியாக என்.பி.ஆர் இருக்கும், இதில் ஒவ்வொரு நபரின் குடியுரிமையும் சரிபார்க்கப்படும்'' என்றார்.
இது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் என்.பி.ஆர் தரவுகளின் அடிப்படையில் என்.ஆர்.சி தயாரிக்கப்படும் என்று குறைந்தது ஒன்பது முறையாவது நாடாளுமன்றத்தில் நரேந்திர மோதி அரசு கூறியுள்ளது.

National Population Registerபடத்தின் காப்புரிமைPIB INDIA

இந்த அறிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தின் தற்போதைய அறிக்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இதற்கு முன்பெல்லாம் அவர் என்.பி.ஆர் என்று குறிப்பிடப்பட்ட போதெல்லாம், அதன் தரவுகள் என்.ஆர்.சிஉடன் தொடர்புடையதாகவே இருந்தது.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக பெயர், பிறந்த தேதி, பாலினம், தாயின் பெயர், தந்தையின் பெயர், பிறந்த இடம் போன்ற தகவல்கள் கேட்கப்படுகின்றன. மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் இந்த தகவல்கள் கோரப்படுகின்றன. ஆனால் மேற்கு வங்கத்தில் ஒரு என்.பி.ஆர் 'கேள்வித்தாள்' பிபிசிக்கு கிடைத்தது. அதில் 'தாயின் பிறந்த இடம்' என்ன என்று கேட்கப்படுகிறது. இது குறித்து, கேள்வி எழுப்பும் பல மக்கள்தொகை வல்லுநர்கள், அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அதன் அறிக்கைக்கும் இடையிலான முரண்பாடுகளை சுட்டிக்காட்டுகின்றனர்.

NPR in West Bengal

இந்த விஷயத்தை புரிந்து கொள்ள, மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் மனித உரிமைகள் அமைப்பின் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் உறுப்பினர் ரஞ்சித் சுர் என்பவருடன் பேசினோம்.
"உள்துறை அமைச்சர் நாட்டை முட்டாளாக்குகிறார்" என்று அவர் கூறினார். என்.பி.ஆர் என்பது என்.ஆர்.சியின் முதல்படி என்று 2003ஆம் ஆண்டின் குடியுரிமை திருத்த சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. உண்மையில், மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகள் இந்திய அரசு கொள்கை முடிவுகள் எடுக்க மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த வழக்கில், என்.பி.ஆர்- இன் கீழ் சேகரிக்கப்பட்ட தரவு மட்டுமே நாடு முழுவதும் அமல்படுத்தப்படவிருக்கும் என்.ஆர்.சியில் பயன்படுத்தப்படும். என்.பி.ஆர் இரண்டு கட்டங்களாக இருக்கும். உங்கள் தகவல்களை நீங்களே கொடுங்கள், எங்களுக்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை என்று இப்போது அரசு சொல்கிறது, ஆனால் அதன் பிறகு இந்த தகவலை சரிபார்க்க அவர்கள் உங்கள் ஆவணங்களை கேட்பார்கள்.''2010இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முதன்முறையாக இதை செய்தபோது, ஏன் ஆட்சேபனை எழவில்லை? இந்த கேள்விக்கு பதிலளித்த ரஞ்சித் சுர், "
2010இல் அனைவரும் பதிலளிக்கவில்லை என்பது உண்மைதான், நாங்கள் இப்போது தருகிறோம். இதற்கு மிகப்பெரிய காரணம் என்னவென்றால், மக்களுக்கு என்.ஆர்.சி பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை. இப்போது அசாமில் என்.ஆர்.சி.யைப் பார்த்தபிறகு, நாங்களும் மக்களும் இந்த முழு விஷயத்தையும் புரிந்துகொள்கிறோம். 2015ஆம் ஆண்டில் இது மோதி அரசால் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. தற்போது, அசாமில் என்.ஆர்.சி பட்டியலில் இருந்து 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. குடியுரிமை திருத்த சட்டம் 2019, நாட்டில் வேறுபட்ட சூழலை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் மக்கள் என்.பி.ஆர் தொடர்பாக உணர்வுபூர்வமாக எதிர்வினையாற்றுகிறார்கள்" என்று கூறுகிறார்.
காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் 2010ஆம் ஆண்டில் உள்துறை இணையமைச்சராக இருந்தவர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலையை தெளிவுபடுத்தும அவர், "மோதி அரசாங்கத்தின் என்.பி.ஆர், எங்கள் என்.பி.ஆர்-இலிருந்து முற்றிலும் மாறுபட்டது" என்று கூறுகிறார்.

படத்தின் காப்புரிம

மத்திய அரசின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கிய மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநில அரசுகள், தத்தமது மாநிலங்களில் என்.பி.ஆர் செயல்முறையை நிறுத்தியுள்ளன.

உள்துறை அமைச்சர் என்ன சொல்கிறார்?

"இரு மாநிலங்களும் (கேரளா, மேற்கு வங்கம்) அத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அந்த மாநில முதலமைச்சர்களிடம் தாழ்மையான வேண்டுகோள் விடுக்கிறேன். அவர்கள் இது குறித்து மீண்டும் பரிசீலிக்க வேண்டும். மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களின் ஏழை மக்களின் நலனுக்கான திட்டங்களுக்கு இது அடிப்படையானது. அரசியலுக்காக ஏழைகளை வளர்ச்சித் திட்டத்திலிருந்து வெளியே தள்ளி வைக்க வேண்டாம். அவர்களையும் இதில் சேர்க்க வேண்டும்," என்று அமித் ஷா கூறியுள்ளார்.

அமித் ஷாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஅமித் ஷா

"என்.பி.ஆர் என்பது மக்கள் தொகை பதிவு, இதில் இந்தியாவில் வசிப்பவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன." இதன் அடிப்படையில் நாட்டின் பல்வேறு திட்டங்கள் எந்த அளவில் உருவாக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஒருவர் எந்த அடிப்படையில் நாட்டின் குடிமகன் என்பதை சொல்வதற்காக ஆவணங்கள் என்.ஆர்.சி.க்காக கேட்கப்படுகின்றன. இந்த இரண்டு செயல்முறைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இரண்டு கணக்கெடுப்புகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று எந்தப் பயனையும் பெறாது.''
''2015ஆம் ஆண்டில், சோதனை அடிப்படையில் குறைந்த அளவிலான தரவுகள் புதுப்பிக்கப்பட்டது. முழுமையாக செய்ய வேண்டுமானால் இது பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய ஒரு செயல். இதற்கிடையில், நாட்டில் வாழும் மக்கள் தொகையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மக்கள்தொகை கணக்கெடுப்பும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி இதே (என்.பிஆர்) நடவடிக்கையை எடுத்தது. அப்போது யாரும் கேள்விகளை எழுப்பவில்லை. அரசாங்கம் ஓர் இலவச செயலியைக் கொண்டுவரப் போகிறது, அதில் மக்கள் தங்கள் தகவல்களை பூர்த்தி செய்து, அதில் சுய சான்றளிக்க வேண்டும். எங்களுக்கு எந்தவித ஆவணங்களும் தேவையில்லை,'' என்கிறார் அமித் ஷா.
பிபிசியின் இந்த உண்மை சரிபார்க்கும் ஆய்வில், நாடு முழுவதும் என்.ஆர்.சி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தற்போதைய விதிகளின்படி, நாடு முழுவதும் என்.ஆர்.சி அமல்படுத்தப்படும். அதில், என்.பி.ஆரின் தரவு மட்டுமே பயன்படுத்தப்படும். விதிகளை மாற்றுவதன் மூலம் என்.பி.ஆர்-ஐ என்.ஆர்.சி-யில் இருந்து அரசாங்கம் பிரிக்கலாம். ஆனால் அதுவரை என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் இரண்டையும் பிரித்துப் பார்ப்பது தவறு.

----------------------------------------------------------++++----
தி.முக.வைப் பார்த்து மிரண்டுபோன
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, சென்னையில் தி.மு.க. தலைமையில் அதன் தோழமைக் கட்சிகள் நடத்திய மெகா பேரணி பற்றி மத்திய, மாநில அரசுகள் என்ன நினைக்குது என்று விசாரித்த போது, மத்திய அரசு கூறிய படி, மாநில அரசு பேரணியை தடுத்திருக்கலாம் என்று நினைப்பதாக சொல்லப்படுகிறது. பேரணியை நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எடப்பாடி அரசுக்கு பா.ஜ.க. அரசு உத்தரவு போட்டதாக கூறப்படுகிறது. எடப்பாடி அரசும் மத்திய அரசுக்கு உத்தரவாதம் கொடுத்தது என்கின்றனர். அதனால் தான் போலீஸ் அனுமதி மறுப்பு, பேரணிக்கு முந்தைய நாள் இரவு திடீர் வழக்கு என்று நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் நீதிமன்றம் தி.மு.க.வுக்குப் பச்சைக் கொடியைக் காட்டியது. ஸ்டாலின் தலைமையில் நடந்த பிரம்மாண்டமான பேரணி, சென்னை மாநகரையே குலுக்கும் வகையில் நடத்தப்பட்டிருப்பதாக சொல்கின்றனர். மேற்கு வங்கத்தில் மம்தா நடத்திய பேரணியைப் போல் இந்தப் பேரணியும் மத்திய பா.ஜ.க. அரசை ஏகத்துக்கும் மிரட்டியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

அதே போல் திமுக நடத்திய பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் அதீத ஆர்வம் காட்டியதாக சொல்கின்றனர். தி.மு.க. தலைமையிலான இந்த பேரணியில் காங்கிரஸ் சார்பில் முதலில் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி தான் கலந்து கொள்வதாக இருந்தது. மறுநாள் டெல்லியில் நடக்க இருக்கும் ஆலோசனைக் கூட்டத்துக்காக அங்கே தங்கி இருந்த ப.சிதம்பரத்தைத் தொடர்புகொண்ட சோனியா, நீங்கள் சென்னையில் தி.மு.க. நடத்தும் பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் சார்பில் கலந்து கொள்ளுங்கள் என்று கூற, அதைத் தொடர்ந்து உடனடியாக பிளைட் ஏறி, பேரணியில் கலந்துக்கிட்டார் ப.சி. காங்கிரஸைப் பொறுத்தவரை இனியேனும் அரசியல் களத்தில் தன்னை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளவேண்டும் என்று நினைப்பதாக சொல்லப்படுகிறது. ஜார்கண்ட்டில் அதற்கு தெம்பூட்டும் ரிசல்ட் கிடைக்கத் தொடங்கியதுமே, காங்கிரசின் வேகம் இன்னும் கூடியுள்து.
------------------------------------------------

செவ்வாய், 24 டிசம்பர், 2019

சரிந்த பிம்பம்

ஜார்கண்டில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியைத் தழுவி இருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்கண்டிலும் ஆட்சியை இழக்கிறது.
இதுவரை 80 தொகுதிகளின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளில் வென்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 16 தொகுதிகளில் வென்றுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் 1 தொகுதியில் வென்றுள்ளது. இதனால் 47 தொகுதிகளை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ளது.
அதேவேளையில் மாநில ஆளுங்கட்சியான பாஜக 25 தொகுதிகளில் வென்றுள்ளது.
சரி. பா.ஜ,கவின் இந்த தோல்விக்கு என்ன காரணம்? ஏன் தொடர்ந்து தோல்வியைத் தழுவுகிறது?
இந்தக் கட்டுரையில் 5 காரணங்களை தொகுத்துள்ளோம்.
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டு பா.ஜ.க ஆட்சி பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக மாநில முதல்வர் ரகுபர் தாஸ் மோசமாகப் பெயரெடுத்திருந்தார். இதுதான் பா.ஜ.க தோல்விக்கு முதன்மையான காரணம். கட்சிக்கு உள்ளேயே அவர் மீது அதிருப்தி நிலவியது. ஈகோ பார்க்கிறார், நியாயமான ஆலோசனைகளுக்கு செவிமடுக்க மறுக்கிறார் என கட்சிக்காரர்களே அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.
ஜார்கண்டில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைய என்ன காரணம்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
குறிப்பாக ஜார்கண்ட் பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சரயூ ராய் தொடர்ந்து ரகுபர் தாஸுடன் முரண்பட்டு வந்தார். கட்சியும் சரயூ ராயின் கோபத்தை தணிக்க முயலவில்லை. மோதி, அமித் ஷா என கட்சி தலைவர்கள் தொடர்ந்து ரகுபர் தாஸுக்கே ஆதரவளித்து வந்தனர். இதனால் கோபமடைந்த ராய், ஒரு கட்டத்தில் அரசியல் களத்தில் தாஸை நேரடியாக எதிர்த்தார்.

நில கையகப்படுத்தும் சட்டம்

நில கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வர முயன்றது பழங்குடி மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
ஜார்கண்டில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைய என்ன காரணம்?படத்தின் காப்புரிமைNANDINI SINHA / BBC
பெருநிறுவனங்களுக்காக பழங்குடி மக்கள், தலித்துகளிடமிருந்து அரசு நிலத்தை அபகரிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. ஒரு தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்துக்காக நிலத்தை கைப்பற்றுவதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் மக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என அந்த நிறுவனம் குற்றஞ்சாட்டியது.

கும்பல் கொலை, பசி, பட்டினி இன்னும் பிற

கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறுபான்மை மக்கள், தலித்துகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களும், கும்பல் கொலைகளும் இந்த தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணம்.
கும்பல் கொலை, பசி, பட்டினி இன்னும் பிறபடத்தின் காப்புரிமைRAVI PRAKASH
எதிர்க்கட்சிகளின் பிரசார கூட்டத்தில் இவை பற்றி பேசப்பட்டது. இதற்கு ரகுபர் தாஸ் கூறிய பதில்கள் திருப்திகரமாக இல்லை என மக்கள் நினைத்தார்கள். குறிப்பாக மதமாற்ற தடை சட்டம் குறித்து ரகுபர் தாஸ் பேசிய கருத்துகள் கிது.
இவற்றுக்கெல்லாம் மேலாக அங்குப் பரவலாக நிலவிய வறுமை மக்களிடையே கொதிப்பலைகளை உண்டாக்கியது. வெற்று வார்த்தைகள் வயிற்றை நிரப்பாது என மக்கள் கருதியதும் தோல்விக்கு ஒரு காரணம்.
வேலைவாய்ப்பின்மை
தேர்தல் பிரசாரத்தின்போது, ஒன்பது கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோதி பங்கெடுத்தார், அமித் ஷா 11 கூட்டங்களில் உரையாற்றினார், ரகுபர் தாஸ் 51 கூட்டங்களில் கலந்துகொண்டார். இவ்வளவுக்கு பின்பும் பா.ஜ.க தோல்வி அடையக் காரணம், 'வேலைவாய்ப்பின்மை'தான்.
மக்கள் வாக்குறுதிகள் வேண்டாம், வேலை தாருங்கள் என்றார்கள். ஆனால், கடந்த ஐந்தாண்டு கால ரகுபர் தாஸ் ஆட்சியின் திட்டங்களால் வேலைவாய்ப்புகளை பெருக்க முடியவில்லை.
பிரசாரங்களில் பேசிய மோதியும், ராமர் கோயில், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசினாரே அன்று, உள்ளூர் பிரச்சனைகள் குறித்து பேசவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் உள்ளூர் பிரச்சனையை முதன்மையாக்கின.

அதிருப்தி ஏற்படுத்திய சட்டத்திருத்த மசோதாக்கள்

ஜார்கண்டில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைய என்ன காரணம்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஜார்கண்டில் வாழும் பழங்குடிகளின் நிலம் சார்ந்த உரிமைகளை பாதுகாப்பதற்காக என்று கூறி சோட்டானக்பூர் குத்தகை சட்டம், சந்தல் பர்கானா குத்தகை சட்டம் ஆகியவற்றில் சட்டத்திருத்தத்தை கொண்டுவருவதற்கு பாஜக தலைமையிலான அம்மாநிலத்தின் முந்தைய அரசு முயற்சி செய்தது. இது பாஜக மீது பழங்குடி மக்கள் இடையே பெரும் அதிருப்தி ஏற்படுவதற்கு வழிவகுத்தது.
இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக நடந்த போராட்டங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலையும் மீறி, அதை விடாப்பிடியாக நிறைவேற்றிய பாஜக அரசு, மேலதிக ஒப்புதலுக்காக அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது.
அதைத்தொடர்ந்து இந்த சட்டதிருத்த மசோதாவுக்கு மென்மேலும் எதிர்ப்புகள் அதிகரிக்கவே, அதில் கையெழுத்திடாமலேயே மாநில அரசுக்கு திருப்பி அனுப்பினார் குடியரசுத் தலைவர். அதன் பிறகு, இந்த சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளும் பணிகள் கைவிடப்பட்டது. இருப்பினும், இதுகுறித்த தவறான தகவல்கள் அம்மாநில பழங்குடி மக்களிடையே பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பழங்குடிகளின் நலனுக்காகவே ஜார்கண்டில் இந்த சட்டத்திருத்தங்களை நிறைவேற்ற முனைந்தோம் என்ற கருத்தை பரப்புவதற்கு பாஜக தவறிவிட்டது.
நன்றி:பிபிசி

-----------------------------------------------+--++++++----
சசி குவித்த சொத்து.
சசிகலா சொத்துகள் குறித்து வெளியான தகவல்களால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் மன்னார்குடி உறவுகள். ` ஐ.டி அதிகாரிகளின் விசாரணையில் கிருஷ்ணபிரியாவுக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மற்றவர்களையெல்லாம் மணிக்கணக்கில் காக்கவைக்கின்றனர்' என அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவிக்கின்றனர் உறவினர்கள்.

பெங்களூரு சிறையில் சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா.
கடந்த 2017 பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டவர், தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலையாகிவிடுவார் என அவரின் உறவினர்கள் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, 1,500 கோடி ரூபாய் மதிப்பில் ஏழு பெரிய நிறுவனங்களை சசிகலா தரப்பு வாங்கியதாகத் தகவல் வெளியானது. அப்படி வாங்கிக் குவிக்கப்பட்ட சொத்துகளுக்கு முறையான பெயர் மாற்றம் செய்யப்படாமல் பணம் மட்டுமே கைமாறியிருக்கிறது.
இதுகுறித்துத் தகவல் அறிந்த ஐ.டி அதிகாரிகள், சென்னை, மதுரை, கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அந்தச் சொத்துகளின் அதிகாரவரம்புக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகங்களுக்கும் சசிகலா தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியானது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்த வருமான வரித்துறை அதிகாரிகள், `பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு ஒரு ரிசார்ட், இரண்டு ஷாப்பிங் மால்கள்,
ஒரு மென்பொருள் நிறுவனம், ஒரு சர்க்கரை ஆலை, ஒரு காகித ஆலை மற்றும் காற்றாலைகளை சசிகலா வாங்கினார். இவைகள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ளவை ஆகும்' எனத் தெரிவித்தனர். நீதிபதி அனிதா சுமந்த் தலைமையில் நடந்த விசாரணையின்போது சசிகலா தரப்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், `இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணபிரியா, வழக்கறிஞர் செந்தில் உட்பட சிலரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும். அதுவரை மதிப்பீடு தொடர்பாக வருமான வரித்துறை உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும்' என சசிகலா தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால், ``சசிகலாவின் வருமானவரிக் கணக்கு தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கெனவே முடிந்துவிட்டன. இதனால் குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல' என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதால் சசிகலா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதில், சசிகலா தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம், `வணிக நிறுவனங்களுக்குச் செலுத்திய தொகை உள்ளிட்ட விவரங்கள் இருந்ததால், அதைப் போட்டோவாக தனது மொபையில் கிருஷ்ணபிரியா சேமித்து வைத்திருந்தார், வணிக நிறுவனங்களின் பெயர்களைக் காகிதத்தில் எழுதியது வழக்கறிஞர் செந்தில்' எனவும் தகவல் வெளியானது.

இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் செந்தில்குமார் கொடுத்த விளக்கத்தில், `2016 டிசம்பரில் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோதே சசிகலா இந்தக் கம்பெனிகளை வாங்க தீர்மானித்து தன்னை அழைத்து அதற்காக அட்வான்ஸ் பணத்தை கொடுக்கச் சொன்னார். அப்படித்தான் பழைய நோட்டுகள் கொடுக்கப்பட்டன' என்றும் கூறியுள்ளார்.
மேலும், `சசிகலா உத்தரவுபடி நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட பண விவரங்களைக் காகிதத்தில் எழுதி அவற்றை சீல் வைத்த கவரில் பாதுகாப்பாக வைத்திருந்தேன்' என்றும், `2017-ல் சசிகலா பரோலில் வந்து கிருஷ்ணப்ரியாவின் இல்லத்தில் தங்கியிருந்தபோது அதை சசிகலாவிடம் ஒப்படைத்தேன்' என்றும் கூறியுள்ளார்.

`` சசிகலா வாங்கிக் குவித்த சொத்துப்பட்டியல் எனத் தகவல் வெளியானதன் பின்னணியில் கிருஷ்ணபிரியா தரப்பினர் உள்ளனர்.

நவம்பர் 9, 2017-ல் கிருஷ்ணபிரியாவின்
இல்லத்தில் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டது. அதே காலகட்டத்தில் ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் ஜெயராமன் உள்பட சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் பலரையும் ஐ.டி அதிகாரிகள் சோதனைக்குள்ளாக்கினர். விவேக் வீட்டில் 3 நாட்களுக்கும் மேலாக சோதனை நீடித்தது. ஆனாலும், சொத்து விவரங்கள் குறித்த தகவல்களை அவர் வெளியில் கசியவிடவில்லை.
இதன்பிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை ஐ.டி அதிகாரிகளின் விசாரணைக்கு சசிகலா உறவினர்கள் ஆஜராகி வருகின்றனர். மற்றவர்களை எல்லாம் 1 மணிநேரத்துக்கும் மேலாக காக்க வைத்த பிறகே அதிகாரிகள் கேள்விகளைக் கேட்பார்கள். ஆனால், கிருஷ்ணபிரியா தரப்பினர் உள்ளே சென்றால் 15 நிமிடங்களுக்குள் வெளியே வந்துவிடுகின்றனர். அவர்கள் மீது அதிகாரிகள் கரிசனம் காட்டுவதன் பின்னணி தெரியவில்லை" என விவரித்த மன்னார்குடி சொந்தங்கள் சிலர்,

`` சொத்துப் பட்டியல் வெளியான விவகாரத்தில் விவேக் தரப்பினர் மிகுந்த வேதனையில் உள்ளனர். விரைவில் சிறையில் இருந்து சசிகலா வெளியே வர உள்ள சூழலில் அவரது பெயருக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தித் தரும் செயலாகவே இதைப் பார்க்கிறோம். போயஸ் கார்டனில் சசிகலா இருந்த காலகட்டத்திலேயே இளவரசி குடும்பத்தில் உள்ள சிலர், ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். மிடாஸ் சாராய ஆலையில் தயாராகும் மதுபானங்களுக்கு பாட்டில் மூடி வாங்கிக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் பெரும் முறைகேடு நடந்தது. இந்தப் பணத்தில் சினிமா படங்களையும் சிலர் தயாரித்துள்ளனர்.

இந்தப் பணத்தில் 70 கோடி ரூபாய் வரையில் ஒருவர் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது. கிருஷ்ணபிரியாவின் கணவர் கார்த்திகேயன்தான் மிடாஸ் நிறுவனத்தின் பொறுப்பில் இருக்கிறார். இந்த ஆலையின் கணக்கு வழக்குகளை விவாரித்தாலே பல முறைகேடுகள் வெளியில் வரும். இன்று வரையில் மிடாஸ் சாராய ஆலை தொடர்பாக, வருமானவரித்துறை அதிகாரிகள் எந்தவித நெருக்கடியையும் கொடுக்கவில்லை. இவையெல்லாம் குடும்பத்தினர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றவர்கள்,

`` ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ காட்சியை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இந்த விவகாரத்தில் தினகரன் தரப்பினரைக் கடுமையாகச் சாடினார் கிருஷ்ணபிரியா. இதுகுறித்து சசிகலா கவனத்துக்குத் தகவலைக் கொண்டு சென்றார் தினகரன். அப்போதிலிருந்தே கிருஷ்ணபிரியாவிடம் சசிகலா பேசுவதில்லை. இப்போது சரியான நேரம் பார்த்து, மொபையில் எடுத்த போட்டோ வெளியாகிவிட்டது என்றெல்லாம் பேசுகின்றனர். இதையெல்லாம் சசிகலா பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்” என்கின்றனர் கொதிப்புடன்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் கிருஷ்ணபிரியா தரப்பினர், ``சசிகலாவுக்கு எதிராக எந்தவித துரோகத்தையும் அவர் செய்வதற்கு வாய்ப்பில்லை. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இருந்து சசிகலாவோடு அவர் பேசுவதில்லை என்பது உண்மைதான். சிறையில் இருந்து அவர் வெளியில் வந்ததும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறார். மிடாஸ் ஆலை நிர்வாகத்தைக் கார்த்திகேயன் கவனித்து வருகிறார். அதில், கிருஷ்ணபிரியாவுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை.

ஜெயா டி.வி நிர்வாகத்தில் சில மாற்றங்களைச் சசிகலா செய்தபோதும், இளவரசி குடும்பத்தினர் மீது அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சொத்து தொடர்பான ஆதாரம் வெளியானதற்கு வழக்கறிஞர் செந்தில்தான் காரணம். அவர் கூறியதன் பின்னணிலேயே ரெய்டு நடந்தது. தற்போதும் 15 நாளைக்கு ஒருமுறை வருமான வரித்துறை விசாரணையில் ஆஜராகி வருகிறார் கிருஷ்ணபிரியா. வருமானவரித்துறை அலுவலகத்தில் கரிசனம் காட்டுகின்றனர் என்ற தகவலிலும் உண்மையில்லை. அதேபோல், 1,500 கோடி ரூபாய் சொத்து குறித்த தகவல் வெளியில் வந்ததற்கும் சசிகலா விடுதலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கில் அபராதம் போடுவார்கள், அவ்வளவுதான். இதனால் எந்தவித பாதிப்புகளும் வரப் போவதில்லை" என்கின்றனர்.
-------------------------------------------------------------