சனி, 28 பிப்ரவரி, 2015

"மோடி"க்கு கார்ப்பரேட்கள் வாரி வழங்கிய நன்கொடை!

அதற்கு நன்றி தெரிவிக்கும் பட்ஜெட் ?

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 
வருமான வரியை ஒழுங்காக செலுத்துபவர்கள் மாத சம்பளக்காரர்கள்,அரசு ஊழியர்கள்தான் பெரும் நிறுவனங்கள்,தொழிலதிபர்கள்,பெரும் வியாபாரிகள் அனைவருமே வருமானவரியை செலுத்துவதில் முறைகேடுகளை செய்பவர்கள்தான்.
எனவே நடுத்தர மக்களுக்குக்குத்தான் இந்த பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை.
ார்பரேட் வரி படிப்படியாக 25% வரை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
கார்பரெட்கள் வரியை எவ்வளவு ஒழுங்காக செலுத்துவார்கள் என்பது நோக்கியா,ரிலையன்ஸ்,அதானி,அம்பானி ,விஜய் மல்லையா,சகாரா,சாரதா,டெக்கான்  போன்ற குழுமங்கள் இதுவரை  எடுத்துக் காட்டியுள்ளன.
அந்த  பெரும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை.
அதுவும் 25 சதவிகிதம்.
நாடு விளங்கிடும்.
சமையல் எரிவாயு மானியத்தை கைவிட வேண்டும். 
ஏழை மக்களுக்கான உணவுக்கான மானியம்,சமையல் வாயு உருளைக்கான மானியங்கள் படிப்படியாகக் குறைக்கப் படும். 
நிர்பயா  என்ற பெண்கள் பாதுகாப்புக்கு 1000 கோடிகள் .இந்த நிதியை என்ன வகைகளில் செலவிடுவார்கள்.?
மக்களை கொடுமைப்படுத்தும்  சேவை வரி 14% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால்கார்ப்பரேட் வரி தற்போது 30% ஆக உள்ளது. இது அடுத்த நான்கு ஆண்டுகளில் 25% ஆக குறைக்கப்படும். 
இதானால் 3000 கொடிகளுக்கு மேல் லாபம் காட்டும் டி .சி.எஸ் போன்ற நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம்.ஆனால் அவர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை குறைப்பதையும்,திடீர் என்று வேலையை பிடுங்கி தெருவில் நிற்க வைப்பதையும் இந்த அரசு கண்டு கொள்ளாது.
திட்டமிடப்படாத செலவினங்கள்- ரூ.13,12,200 கோடி
.திட்டமிடப்பட்ட செலவினங்கள்- ரூ.4,65,277 கோடி.

அது என்ன திட்டமிடப்படா செலவினம்.மோடிக்கு தங்கத்தில் பெயர் இழைத்து கோட்,சூட் தைப்பது போன்றவையா?
உற்பத்தித் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் இதை ஈடுகட்டவே வகுக்கப்பட்டுள்ளது. 
ஏப்ரல் 1 2016 முதல் (ஜி.எஸ்.டி.) சரக்கு, சேவை வரி அமலுக்கு கொண்டு வரப்படும்.  
இதனால் விலை வாசி ஏறும்.அதில் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.கண்டிப்பாக தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மோடி இவைகளை செய்வது சரியானதுதான்.
வாக்களித்த ஏழை மக்களுக்கு மானியங்கள் நீக்கம்.
பணமளித்த கார்பரெட்களுக்கு வரிச்சலுகை.
அதுதான் "மோடி'யின் ராமராஜ்யம்.
============================================
#கீழ்க்கண்ட பொருட்களை பார்த்தாலே
இந்த பட்ஜெட் யாருக்கானது என்று எளிதாக
உணர்ந்து கொள்ளலாம்.
============================================
* அழகு நிலையங்கள்,
* கேஸ் உள்ள பானங்கள்,
* செட் அப் பாக்ஸ்கள்
* எஸ்.யு.வி கார் வகைகள்
* வாகன கட்டணம் அதிகரிப்பு
* கால் டாக்சி சேவை
* குளிரூட்டப்பட்ட உணவகம்
* இறக்குமதி செய்யப்பட்ட கார்கள்
* புகையிலை பொருட்கள்
*  இருசக்கர வாகனம்
* செல்போன்கள்

போன்றவற்றின் விலை உயரும்.
============================================
* தோல் காலணிகள்
* எல்.சி.டி டிவிகள்
* இறக்குமதி தானியங்கள்
* வைரங்கள்
* கணினிகள்
* விலையுர்ந்த கற்கள்
* இறக்குமதி உடைகள்
* தரை விரிப்பு

ஆகிவற்றின் விலை குறையும்.
============================================

 பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரும் முதலாளிகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரி நிர்வாகத்தை மாற்றியமைப்பது என்றபெயரில் பெருமளவு வரிச்சலுகை கள் அளித்தல், தொழில் நடத்துவதற்கான செலவினங்களை குறைப்பதற்கான வழிமுறை என்ற பெயரில்வரி விலக்கு அளித்தல், தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிலம் தொடர்பான சட்டங்களை முழுமையாக திருத்துவது, அனைத்துவிதமான மானியங்களையும் படிப்படியாக ஒழிப்பது, முழுமையான சந்தைப்போட்டி நிலைமையை ஏற்படுத்துவது, அனைத்துவிதமான பொதுத்துறை நிறுவனங்களையும் மிக வேகமாக தனியார்மயமாக்குவது என்பன உள்ளிட்ட திட்டங்களை வரும் காலத்தில் துரிதமாக அமலாக்கிட மத்திய மோடி அரசு தீர்மானித்திருப்பது  பகிரங்கமாகவே கூறப்பட்டுள்ளது.
==========================================================================
மோடிக்கு கார்ப்பரேட்கள் வாரி வழங்கிய நன்கொடை?
ஜனநாயக சீர்திருத்த அமைப்பு  வெளியிட்ட பட்டியல் !
பாஜகவை சேர்ந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் காலத்தில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பல நூறுகோடி ரூபாய்களை நன்கொடையாக வாரி இறைத்திருக்கின்றன.
 இந்தியாவில் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது வழக்கம். அந்த வகையில் மக்களிடம் இருந்தும், கட்சி உறுப்பினர்களிடம் இருந்தும், தொழில் அதிபர்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடையை திரட்டுகின்றன.
ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எப்போதும் ஆதரவாக செயல்படும் பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் நேரத்தில் அந்த நிறுவனங்களிடம் பல நூறு கோடிக் கணக்கான ரூபாயை நன்கொடையாய் பெற்றிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. கடந்த தில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெளிநாடுகளில் இருந்தும்,
தொழில் அதிபர்களிடம் இருந்தும் கோடி கணக்கான ரூபாயை நன்கொடையாக பெற்றது என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் இதை பெரிய குற்றச்சாட்டாக தெரிவித்தார். ஆனால் அவருடைய பாரதிய ஜனதா கட்சியே தில்லி சட்டசபை தேர்தலையொட்டி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து அதிக நன்கொடை பெற்றது இப்போது தெரியவந்துள்ளது.
தில்லி தேர்தலையொட்டி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாரதிய ஜனதா கட்சி மொத்தம் ரூ.60.78 கோடி நன்கொடை பெற்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2013-2014-ம் ஆண்டில் மொத்த தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடையில் பாரதிய ஜனதா கட்சி 69 சதவிகிதம் நன்கொடை பெற்றுள்ளது.
அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்ற கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடை குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
:-பாரதிய ஜனதா கட்சி கடந்த 2012-13-ம் நிதி ஆண்டில் ரூ.83.19 கோடி நன்கொடை பெற்றது.
இது கடந்த 2013-2014-ம் ஆண்டில் ரூ.87.67 கோடியாகவும், 2014-2015-ம் ஆண்டில் 170.86 கோடியாக உயர்ந்து விட்டது.
அதாவது பாரதிய ஜனதாவின் நன்கொடை வசூல் 2012-2013-ம் ஆண்டை விட 2014-2015-ம் ஆண்டில் இரு மடங்கு மேல் உயர்ந்திருக்கிறது.
பார்தி குழுமத்தின் சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை பாரதிய ஜனதா கட்சிக்கு 3 தடவையாக கடந்த 2012-2013-ம் ஆண்டில் ரூ.41.37 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளது.
இதேபோல் சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2013-2014-ம் ஆண்டில் 36.50 கோடியை கொடுத்து உள்ளது.
சரத்பவாரின் தேசியவாத கட்சிக்கு சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை கடந்த 2013-2014-ம் ஆண்டில் அளித்து உள்ளது.
தேசிய அரசியல் கட்சிகள் கடந்த 2013-2014-ம் ஆண்டில் மொத்தம் ரூ. 247 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளன.
இது கடந்த 2012-2013-ம்ஆண்டை விட 158 சதவிகிதம் அதிகமாகும்.
மாநிலம் வாரியாக பார்த்தாலும் பாரதிய ஜனதா கட்சி தான் அதிக நன்கொடை வசூலித்தது தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ரூ.23.25 கோடியை வசூலித்து முதலிடத்தில் உள்ளது.
மராட்டிய மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ரூ. 22.24 கோடியை வசூலித்து முதலிடத்தை பிடித்து உள்ளது.
இதெல்லாம் வெளிப்படையாக தெரிந்த நன்கொடைகள் மட்டுமே ஆகும். அதானி குழுமம் போன்ற பாஜக மற்றும் மோடி விசுவாச கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரங்கோடிகளை வரி இறைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பிரதிபலனாகவே,
தற்போது நரேந்திர மோடி அரசு மக்கள் நலனை பின்னுக்கு தள்ளி, கார்ப்பரேட் நலனை முன்நிறுத்தி வருகிறார்.
மேலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் போன்று செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களையும் மோடியின் மீது சமூக ஆர்வலர்கள் வைக்கின்றனர்.
 பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பூடான், நேபாளம், பிரேசில், பல்கேரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்பட பல நாடுகளில் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் வெளிப்படைத் தன்மை உள்ளது.
ஆனால், இந்தியாவில் மட்டும் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் மறைமுகப் போக்கை கடைப்பிடிக்கின்றன என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

==========================================================================

இந்தியா விற்பனைக்கு தயார்,.....,மோடி  பாஜக அரசின் மொத்த விற்பனைசந்தை.

'புடவையைத்தானே இழுக்கிறேன் பெண்ணே! 
உன் சுந்தர தேகத்துக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே திரௌபதி!’
என்று அஸ்தினாபுரத்து இளவரசன் துச்சாதனன், சான்றோர் நிறைந்த சபையில் கூறினான்.
அதேபோலத்தான் இருக்கிறது...

 'நீங்கள் விவசாயம் செய்யும் நிலங்களைத்தானே எடுக்கிறோம். 
உங்கள் உயிருக்கு ஆபத்து ஒன்றும் இருக்காது விவசாயிகளே’ 
-என்று இப்போது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு சொல்வதும்.
முன்பு வியாபரத்துக்கு வந்து இந்தியாவையே அடிமையாக்கியது கிழக்கிந்திய கம்பெனி.
அதை விடுதலை நாடாக்க லட்சக்கணக்கில் இந்தியர்கள் உயிர் நீக்கி போராடி மீட்டனர்.
ஆனால் இன்று மோடி அரசு இந்தியாவை ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு மொத்தமாக அந்நிய கம்பெனிகளுக்கு விற்று கொண்டிருக்கிறது.
அதற்கென பல அவசர சட்டங்களை மக்களின் பலத்த எதிர்ப்புக்கு நடுவிலும் அசராமல் மக்களவையில் அதே மக்கள் தந்த வாக்கை பயன் படுத்தி நிறைவெற்றிக்கொண்டிருக்கிறது.

100 ஆண்டு காலத்துக்கும் மேலான போராட்டத்துக்குப் பிறகு, வெள்ளைக்கார காலத்து அடிமை சட்டத்துக்குப் பதிலாக, கடந்த கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஒரு புதிய சட்டம் பிறந்தது.

 அது, 100 சதவிகிதம் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் சட்டம் இல்லைதான்.

'வெள்ளைக்காரனின் கொடுங்கோல் சட்டத்துக்கு, ஏதோ பரவாயில்லை’ என்றே ஏற்றுக் கொண்டனர் விவசாயிகள்.
ஆனால், 'சுத்தம் சுயம்பிரகாசம் நாங்கள், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் மட்டுமே கொண்டு சொல்வோம், வெள்ளைக்காரர்களை விரட்டியது போதாது... கொள்ளைக்காரர்களையும் நாட்டைவிட்டு விரட்டுவோம், விவசாயிகளுக்கு எங்களைவிட்டால் வேறு தோழர்களே கிடையாது’ என்றெல்லாம் பசப்பு மொழிகளைக் கூறி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, வெள்ளைக்காரன் போட்ட சட்டத்தைவிட, மிகக்கொடுமையான ஒரு சட்டத்தை அவசர அவசரமாக கொண்டுவந்து விவசாயிகளை ஒரேயடியாக கொல்லத் துடித்தால் எப்படி?
அடிமை இந்தியாவில், 1894-ம் ஆண்டில் 'நிலம் கையகப்படுத்தும் சட்டம்’ கொண்டு வந்தது, பிரிட்டிஷ் அரசு. வெள்ளைக்காரனுக்கு பிறந்ததால், அந்தச் சட்டத்துக்கு 1000 பற்கள். யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்டுவிட முடியாது. கடித்துக் குதறிவிடும்.
தனக்கோ, தன் ஆதரவு பெற்ற தொழில் அதிபர்களுக்கோ, நிலம் வேண்டும் என்றால், எந்தக் கேள்வியும் இல்லாமல் அரசாங்கத்தால் நிலத்தை பறித்துக்கொள்ள முடியும். ஏழை நில உரிமையாளர்களால் தடுக்க முடியாது. அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை போதவில்லை என்றால், நீதிமன்றத்தை மட்டுமே நாட முடியும்.
அங்கேயும் இழப்பீடு மட்டுமே கூட்டிக் கேட்க முடியும். நிலம் பறிபோவதை ஒருபோதும் தடுக்க முடியாது.
யார் நிலமாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட நிலமாக இருந்தாலும் சரி அரசு நினைத்தால்..
. அதிகாரிகள் புகுந்து விளையாடலாம்;
 வீட்டை இடிக்கலாம்; மரங்களைப் பிடுங்கி எறியலாம்; 
 கரும்பு, நெல், பருத்தி வயல்களை அழிக்கலாம்; தடுத்தால், காவல் துறையை ஏவிவிட்டு மண்டையப் பிளக்கலாம்; 
கைது செய்து சிறையில் அடைக்கலாம்; 
அடிமை இந்திய சட்டத்துக்கு அவ்வளவு பலம்!
'ஆடுவோமே... பள்ளு பாடுவோமே... ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே...’ என்று ஆட்டம் போட்டபோதும் கூட இந்தக் கொடுங்கோல் சட்டமே தொடர்ந்தது.
ஆம், சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாய சட்டமே அரக்கத்தனமாக சிரித்தது. இதில் சிக்கி சின்னாபின்னமான விவசாய ஜீவன்களும் பரலோகம் போய்விட்டன.
 இப்போது உயிர் உதாரணம்.... மேற்கு வங்க மாநிலத்தின் சிங்கூரில் டாட்டா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலைக்காக, ஆயிரக்கணக்கான ஏக்கர் செழிப்பான நிலங்கள் சில ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்டன. எதிர்த்து நின்ற விவசாயிகளை, நாய்களைச் சுடுவதுபோல சுட்டுத்தள்ளியது, அன்றைக்கு அங்கே ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசாங்கம்.
தமிழகத்திலேயே மேற்குப் பகுதியில் இருக்கும் சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 'கெயில் இந்தியா நிறுவனம்’ எரிவாயு குழாய் பதித்ததைச் சொல்லலாம்.
விவசாயிகளிடம் எந்தவித அனுமதியும் பெறாமல், இஷ்டம்போல புகுந்து, பொக்லைன் இயந்திரங்களை வைத்து பயிர்களையும் மரங்களையும் அழித்து, வெறியாட்டம் போட்டனர்.
போலீஸை வைத்துக்கொண்டு விவசாயிகளை மிரட்டினர்.
 இன்றைக்கும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இதோ, டெல்டா பகுதியில் 'மீத்தேன்’ எடுக்கப்போகிறோம் என்றபடி செழிப்பான காவிரித்தாயின் மடியை குதறிப்போடுவதற்காக உறுமிக்கொண்டே இருக்கிறது இன்னொரு பூதம்!

சுதந்திர இந்தியாவிலும் இத்தகைய கொடுமைகள் தொடர்கதையா? என்று விவசாயிகளின் இதயங்களில் கனன்றுகொண்டிருந்த அக்னி, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 2013-ம் ஆண்டில் விஸ்வரூபம் எடுத்தது. விவசாயிகள் டெல்லியை நோக்கிப் படை எடுத்தனர்.
மௌனகுரு மன்மோகன் சிங் ஆடிப்போனார். ஆட்சியாளர்களை நகரவிடாமல், நங்கூரம் போட்டதுபோல, டெல்லி, ஜந்தர் மந்தரில் முற்றுகையிட்டனர் விவசாயிகள்.
நாள்தோறும் டெல்லி சுற்றுவட்டாரப் பிரதேசங்களான, உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாபில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள், டிராக்டரில் வருவதும், போவதுமாக தொடர் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்திலிருந்தும் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து தலைமையில் போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர்.

போராட்டம் சூடு பிடிக்கவே, அரசியல் கட்சிகள் அதிர்ந்துபோயின. 'விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தரவில்லை என்றால், வாக்குக் கேட்டு... கிராமங்களுக்குள் நுழைய முடியாது’ என்று பயந்த அரசியல் கட்சிகள், ஓடோடி வந்து ஆதரவு கரம் நீட்டின.

இதோ, இன்றைக்கு அவசர அவசரமாக சட்டம் போட்டு, விவசாயிகளை கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்பத் துடிக்கும் பி.ஜே.பியிலிருந்து ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். ஆம், உள்துறை அமைச்சராக உட்கார்ந்து கொண்டிருக்கிறாரே.... அதே புண்ணியவான்தான். மேடையேறி ஒரு மணிநேரம் முழங்கினார் விவசாயிகளுக்கு ஆதரவாக!

போராட்டம் நான்காவது நாளில் அடி எடுத்து வைத்தபோது, அன்றைய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் தலைமையில் 6 அமைச்சர்கள் போராட்ட களத்துக்கே ஓடோடி வந்தனர்.
வேண்டா வெறுப்பாக. மூன்று மணிநேரம் பேச்சு வார்த்தை நடந்தது. பிறகு, விவசாயிகளை இணைத்து கமிட்டிகள் அமைத்தனர்.
விவசாயிகளின் ஆலோசனையோடும் பி.ஜே.பியின் ஒப்புதலோடும் வந்ததுதான் புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டம்  2013. இதற்கான விவசாயிகளின் குழுவில் நானும் ஒருவனாக இடம்பிடித்தேன்.
நிலம் கையகப்படுத்துதல், மறுகுடி அமர்வு, மறுவாழ்வுச் சட்டம்-2013 (Land Aquisition Rehabilitation and Resettlement act 2013) என்று புதுச் சட்டத்துக்குப் பெயர் சூட்டினர். இந்தச் சட்டத்தில் விவசாயிகளுக்கு முழு திருப்தி இல்லை. அதேசமயம், 'இதுகாலம் வரை எதுவும் இல்லை என்ற நிலை நீடித்தது. இதுவாவது கிடைக்கிறது.
 இப்போதைக்கு ஏற்றுக்கொள்வோம். பிறகு போராடுவோம்’ என்று அரை மனதுடன் ஏற்றுக்கொண்டோம். நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் வழிகாட்டி மதிப்பீடு சதுர அடியில் கணக்கிடப்படுகிறது.
கிராமப்புறங்களிலோ ஏக்கர் கணக்கில் இருக்கிறது. இதனால் கிராமப்புற விவசாயிகளுக்குத்தான் பாதிப்பு அதிகம். இதனால், குறைந்தது அரசு மதிப்பீட்டுக்கு மேல் 10 மடங்காவது இருந்திருக்க வேண்டும் இழப்பீடு. புதிய சட்டம் இதைச் செய்யவில்லை.
'ஆடிட்டர் ஜெனரல், அரசு கணக்குகளைத் தணிக்கை செய்வதுபோல், தனிச் சுதந்திரம் பெற்ற அதிகாரி, கையகப்படுத்தப்படும் நிலங்களைக் கண்காணித்து கணக்குப் பார்க்க வேண்டும்.
பெரும்முதலாளிகள் தொழில் போர்வை போர்த்திக்கொண்டு, அடிமாட்டு விலையில் விவசாயிகள் நிலங்களைப் பிடுங்கிக்கொண்டு, பிறகு ரியல் எஸ்டேட்களாக மாற்றப்படுவதைத் தடுக்க வேண்டும்’ என்பது போன்ற கோரிக்கைகளும் நிலுவையிலேயே உள்ளன.

இப்படி குறைப்பிரசவமாக இருந்தாலும், காங்கிரஸ் கூட்டணி அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை ஏற்றுக்கொண்டோம்.
ஆனால், இந்த அரைகுறையிலும் ஆபரேஷன் என்கிற பெயரில், கொலை ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது மோடியின் அரசு. 70 சதவிகிதம் விவசாயிகளிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்கிற ஷரத்தை நீக்கியதோடு, பாசன நிலங்களையும் கையகப்படுத்தலாம் என்று படுபாதகமாக சட்டத்திருத்தம் செய்திருக்கிறது.
வெள்ளைக்காரன் சட்டம்கூட, ஆற்றுப்பாசனப் பகுதி, ஏரிப் பாசனப் பகுதி, வாய்க்கால் பாசனப் பகுதியை வேறு காரியங்களுக்குக் கையகப்படுத்த அனுமதித்தது இல்லை.
 ஆனால், மோடி அரசு, வெள்ளைக்கார அடிமை இந்திய சட்டத்தைவிட கொடூரமான சட்டத்தைப் போட்டு, 'பாதிப்பு இருக்காது’ என்று பசப்புகிறது. தேர்தல் நேரத்தில் மோடியே கொடுத்த பி.ஜே.பியின் வாக்குறுதிகளையும் குழி தோண்டி புதைக்கிறது இந்தப் புதியச் சட்டம்.

இப்படி ஒரு மாயத்திட்டத்தை கையில் வைத்துக்கொண்டுதான், 'மேக் இன் இண்டியா’ என்று கவர்ச்சி வலைவீசி, விவசாயிகளை ஒழிக்கத் துடிக்கிறார், 10 லட்ச ரூபாய்க்கு கோட் சூட் போடும் 'ஏழைப் பங்காளன்’ மோடி.
'விவசாய உற்பத்தி தேக்க நிலை அடைந்துவிட்டது...
 மேக் இன் இண்டியா கோஷத்துக்கு முன்பு குரோ இன் இண்டியா (Grow in India) கோஷத்தைதான் முன்னெடுக்க வேண்டும்’ என உணவுப் பொருளாதார நிபுணர் டாக்டர் தேவேந்திர சர்மா கூறுவதை மறுத்துவிட முடியாது.

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், 'மோடியின் இந்தப் பசப்பு வார்த்தைகள் எல்லாம் வேலைக்கு ஆகாது’ என்பதை உணர்ந்து, 'மேக் இன் இண்டியா, இருக்கட்டும்.
மேக் ஃபார் இண்டியா திட்டத்தை முன்னெடுங்கள்’ என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல கூறியிருக்கிறார்.

அளவுக்கு மிஞ்சினால், அன்னிய முதலீடு ஆபத்தே!

மோடியின் தோழர்களாக இருக்கும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள்கூட இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.
தேர்தலில் தோள் கொடுத்த தோழர்களைவிட, கரன்ஸியை அள்ளிவிட்ட பகாசுர நிறுவனங்கள் உங்களுக்கு முக்கியமாகிவிட்டன அல்லவா மிஸ்டர் மோடி?
ஆனால், சமீபத்திய டெல்லி தேர்தலில் விழுந்த மரண அடிக்குப் பிறகும் நீங்கள் பாடம் படிக்க முடியாது என்று பிடிவாதம் பிடித்தால், உங்களைக் காப்பாற்ற எந்த ராமனாலும் முடியாது, மறந்துவிடாதீர்கள்!
                                                                                                                                                                                               -தூரன் நம்பி

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 


 'பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக  'அர்சீனியம் ஆல்பம்  'என்னும் ஹோமியோபதி மருந்தைப் பயன்படுத்தலாம்.அது பன்றிக்காய்ச்சலை தடுக்கிறது." என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. '


சட்டத்திருத்தம் என்ன சொல்கிறது?

காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டத்தின் முக்கியமான சில அம்சங்களும்... இதில் பி.ஜே.பி தற்போது செய்திருக்கும் தில்லுமுல்லு திருத்தங்களும் இதோ...!

அடைப்புக்குறிக்குள் இருப்பவை இப்போது திருத்தப்பட்டவை.

1. அரசுப் பணிகளுக்காக என்றால்... அதாவது, ரயில், நெடுஞ்சாலை, மருத்துவமனை, ராணுவம் போன்ற காரியங்களுக்கு நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகளின் ஒப்புதல் தேவை இல்லை.
(ஸ்மார்ட் சிட்டி மற்றும் வீட்டுவசதி திட்டத்துக்கும் ஒப்புதல் தேவையில்லை.)

2. தனியார் தொழில் என்றால் 80 சதவிகித விவசாயிகளிடம் ஒப்புதல் பெறவேண்டும். தனியார் அரசு கூட்டுத் தொழில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நகரங்கள் அமைப்பதென்றால் 70 சதவிகிதம் விவசாயிகளிடமிருந்து ஒப்புதல் பெறவேண்டும்.
(எதற்கும் ஒப்புதல் பெறத் தேவையில்லை)

3. ஒட்டுமொத்தமாக நிலத்தை இழப்பதால் விவசாயிகள் மனது உடைந்துவிடக் கூடாது என்பதற்காக... இழப்பீடு, குடியிருப்பு, மாற்று வாழ்வாதார வசதிகள் செய்து தரவேண்டும். நிலத்தின் உரிமையாளருக்கு மட்டுமல்லாமல், அந்த நிலத்தை நம்பியே வாழும் கூலித் தொழிலாளர்களுக்கும் இழப்பீடு.
(உரிமையாளருக்கு மட்டுமே இழப்பீடு).

4. எந்த நோக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அந்தப் பணி, 5 வருடங்களில் தொடங்கப்பட வேண்டும். இல்லையெனில், நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே திருப்பிக்கொடுத்துவிட வேண்டும்.
(திருப்பிக்கொடுக்கத் தேவையில்லை)

5. பாசன வசதி பெற்ற செழிப்பான நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது.
(பாசன வசதியுள்ள, செழிப்பான நிலங்களையும் கையகப்படுத்தலாம்.)
===========================================================================

'மக்கள் தளபதி"க்கு

தளபதி ஸ்டாலின்வாழ்த்துகள்.!

கலைஞரின் குடும்பத்தில் இருந்ததால் தளபதி ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்தது.

 அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தினார் .

 அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி இவ்வமைப்பின் மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தனர். 

ஆனாலும் அவரின் அரசியல் ஈடுபாடு அவ்வளவாக இல்லையென்றாலும் 1975ம் ஆண்டு இந்திராகாந்தி அரசால் மிசா காலகட்டத்தில் தளபதி திரு ஸ்டாலின் அவர்களை கைது செய்து சித்தரவதை செய்து வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார். 

அன்று அவர் வாங்கிய அத்தனை அடிகளும் சித்தரவதைகளையும் அவர் மீதானா மக்களின் பார்வை திரும்பியது. 

இதன் தொடர்சியாக அவர் முழுநேர அரசியல்வாதியாக வலம் வந்தவர் 1980 இல் மதுரையிலே உள்ள ஜான்சிராணி பூங்காவிலே அமைப்பு ரீதியாக திமுக இளைஞர் அணி தொடங்கபட்டு தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புகுழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியை நிறுவி அதன் மூலம் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.

இன்று வரை கழகத்தின் முதுகெழும்பாய் வைத்திருக்கிறார். தளபதி பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

திமுக இளைஞரணி தலைமையகத்திற்காக அன்பகத்தை (முன்னாள் திமுக தலைமையகம்- தற்பொழுதுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்) பெறுவதற்காக திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு 11 லட்ச ரூபாய் நிதி திரட்டி தன் தலைமைப்பன்பை நிருபித்தார்.

ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை.மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.

ஆனால் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேயராக இருந்து பல மேம்பாலங்களையும் பல அரசாங்க பள்ளிகளின் நிலைகளை உயர்த்தியவர்.

.இரண்டுமுறை மேயராக இருந்து ஒரு முறை உள்ளாட்சித்துறை அமைச்சாஅமைச்சராகவும் , துனை முதல்வராகவும் இருந்து சென்னையில் பாதள சாக்கடை திட்டத்தை நிறுவி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக பல உதவிகள் செய்து சமத்துவபுரங்களை திறந்துவைத்தார்.

ஸ்டாலின்  ஒரே நாளில் கட்சியின் மிக பெரிய அந்தஸ்த்துக்கு வந்தவரல்ல..
சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்று உயர்ந்தவர்.

அவருக்கான மதிப்பு கட்சிக்குள்ளும், அதை தாண்டி பொதுமக்களிடமும் மிக பெரிய அளவில் இருப்பதை பார்க்க முடியும்.

அரசியலில் நேர் எதிர்மறை கருத்துகொண்ட துக்ளக் சோ ராமசாமி கூட ":திரு ஸ்டாலின் அவர்களை ஒரு வாரிசு அரசியல்வாதியாக பார்க்க முடியாது..
அவரின் உழைப்பு அளவிடமுடியாதது" என்றுகூறியிருக்கிறார்.

மக்களை பாதித்த சுனாமிக்கு நிவாரண நிதியை தன்னை  எதிரியாக வெறுக்கும் ஜெயாவிடமே அவர தமிழக முதல்வர் என்ற காரணத்தால் நேரில் கொடுத்து தன் மதிப்பை மக்களிடம்  மேலும் உயர்த்தியவர்.

சில நாட்களுக்கு முன் பேராசிரியரின் முன்னிலையில் கலைஞர் அவர்களே தலைவர் பதவிக்கு போட்டி என்று வந்தால் "ஸ்டாலின் அவர்களை முன்னிருத்துவேன்" என்று சொன்னது அவர் அவரின் மகன் என்பதால் அல்ல.
.அது அவரின் உழைப்பிற்க்கு கிடைத்த வார்த்தை.

"கிராமப்புற மாணவர்கள், கிராமப்புற பெண்களின் வளர்ச்சி, நகர்பகுதி ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சி, கிராமத் தில் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் சீரிய திட்டங்களைத் தீட்டுவது எனது கனவு" என்று கூறும் 'மக்கள் தளபதி"க்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.!

[மக்கள் முதல்வர் இருக்கையில் மக்கள் தளபதி இருக்கக் கூடாதா என்ன?]

===========================================================================

லெனின் ,ஸ்டாலினை பாராட்டுகிறார். 

அரசியல் களத்தில் கடுமையான சவாலை சந்தித்துக் கொண்டிருக்கும் தி.மு.கவுக்கு இன்றைய ஒரே நம்பிக்கை கழகத் தளபதி மு.க.ஸ்டாலின் மட்டுமே.

 கலைஞரின் பிள்ளை என்றபோதும் தான் கலைஞரல்ல என்பது அவருக்குத் தெரியும். அதற்கேற்றபடி தன் அரசியல் பயணத்தை மேற்கொண்டு, தொடர்ந்த உழைக்கிறார். ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு..’ என்று உழைப்பின் அடையாளமான கலைஞரிடமிருந்தே நற்சான்றிதழ் பெறுகிறார்.
தமிழகம் முழுவதும் திரும்பத் திரும்பச் சுற்றி வந்து மக்களையும் கட்சிக்காரர்களையும் சந்தித்தபடியே இருக்கிறார் கழகத்தின் தளபதி.

 ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வெற்றியை ‘வாங்கியவர்கள்’ நன்றி சொல்வதா வேண்டாமா என நாள்-நட்சத்திரம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், தோல்வியடைந்தாலும் கம்பீரமான வாக்குகளுடன் கழகத்தை நிமிர்த்திய மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டார்.

எந்த நிலையிலும் மக்களை சந்திப்பதற்கு அவர் தயங்குவதே இல்லை.

2013ஆம் ஆண்டு அவரை சந்தித்துப் பேசும் வாய்ப்பு அமைந்தபோது, “மக்களோடு நாம் எப்போதும் இருக்கணும்.

 அதனால்தான் கட்சிக்காரங்களுக்கு ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்” என்றார் கழகத்தளபதி மு.க.ஸ்டாலின்.

 நான் அவரிடம், “நீங்க உழைக்கிற மாதிரி கட்சிக்காரங்க எல்லோரும் உழைச்சா நிச்சயம் வெற்றிதாங்கண்ணே” என்றேன்.
புன்னகைத்தார்.

அந்தத் தருணத்தில் எடுக்கப்பட்ட படம்தான் இது.

மேயர்-உள்ளாட்சித்துறை அமைச்சர்- துணை முதல்வர் எனத் தனக்கு கிடைத்த பொறுப்புகளில் தன் உழைப்பையும் நிர்வாகத்திறனையும் நிரூபித்தவர் மு.க.ஸ்டாலின்.

அரசியல் கசப்புகளுக்கு அப்பாற்பட்டு, மாற்றுக்கட்சித் தலைவர்களை சந்திக்கத் தயங்காதவர். இன்றைய தமிழக அரசியலில் மிகவும் அவசியப்படுகிற இந்தப் பண்பு அவரிடம் இருப்பது ஆரோக்கியமானது.
ரத்ததானத்தை ஆதரிக்கிறார்.

தன் உடலையும் தன் மனைவியின் உடலையும் தானம் செய்து அதன் மூலமாக உடல்தானம் பற்றிய விழிப்புணர்வைக் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுத்துகிறார்.

மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், இளம்சாதனையாளர்கள் ஆகியோருக்கு உதவி செய்து ஊக்கவிக்கிறார். அதிகாரிகள் ஒத்துழைக்கிறார்களோ இல்லையோ தனது தொகுதி மக்களுக்கானப் பிரச்சினைகளைக் கேட்டறிந்து முடிந்தளவு தீர்த்து வைக்கிறார்.

தன்னுடைய பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடவேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு, அந்தத் தொகையை பெண் குழந்தைகளின் கல்விக்குச் செலவிடச் சொல்கிறார்.

தொண்டு நிறுவனங்களைப் போன்ற செயல்பாடுகள் இவை என்றாலும் இன்றைய நிலையில் மக்களிடம் நம்பிக்கையையும் செல்வாக்கையும் பெறுவதற்கு இத்தகைய செயல்பாடுகள் தேவையாக இருக்கின்றன. இதனை அவரது வழிநடப்பவர்கள் சரியாக செயல்படுத்தினாலே கழகம் பழைய வலிமையை மீண்டும் பெறும்.

கழகத் தளபதி மு.க.ஸ்டாலினுக்கு எந்தப் பதவியும் அத்தனை எளிதாகக் கிடைத்துவிடவில்லை. அதுவும் கலைஞருடன் ஒப்பிடுகையில், கலைஞர் தன் இளம்வயதிலேயே பெற்ற பெரும்பதவிகள், மு.க.ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் கிடைத்தன.


சில இடங்களை இன்றுவரை அவரால் எட்ட முடியவில்லை.

ஆனால், கலைஞருக்கு முதுமையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிச் சூழல்கள் கழகத் தளபதி மு.க.ஸ்டாலினை இப்போதே சூழத் தொடங்குகின்றன.

அதில் கவனம் செலுத்திக் களைவதுடன், கட்சியில் வளரும் குழு மனப்பான்மைக்கு அவர் இடம் கொடுக்கவே கூடாது என்பது தொண்டர்களின் பெருவிருப்பமாக உள்ளது.

மிசா சிறையையும் சித்திரவதைகளையும் எதிர்கொண்டது, கழகம் தொடர்ச்சியாக எதிர்க்கட்சியாக இருந்தபோது இளைஞரணியை உருவாக்கி புதுரத்தம் பாய்ச்சியது, கட்சி பிளவுபட்டபோது இளைஞரணியால் அதைத் தாங்கிப்பிடித்தது, தேர்தல் களப் பணிகளைத் தோளில் சுமந்தது என அவரது பொதுவாழ்வுப் பயணம் தொடர்கிறது.

எனினும், தனது தேர்தல் வியூகத்தால் கழகத்திற்குப் பெரும்வெற்றியை இன்னும் அவரால் பெற்றுத் தர முடியவில்லை.

அந்த வெற்றியை அடுத்த களத்தில் பெறவேண்டிய சுமை மிகுந்த பொறுப்பு கழகத் தளபதியான அவரையே சார்ந்துள்ளது.

எளிய மக்களுக்கான அரசியல் இயக்கமாகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் தி.மு.கழகம். அது மக்களுடனான தொடர்பில் எப்போதும் இருக்கவேண்டும் என்கிற மு.க.ஸ்டாலினின் எண்ணம் நிறைவேறினால் ஆடம்பரம்-ஊழல்-உட்கட்சிப்பூசல் இவற்றிற்கெல்லாம் இடமிருக்காது.

 தி.மு.கவுக்கு இன்று தேவைப்படுவதும்- நாளைய வெற்றிக்கு அவசியமான அடித்தளமும் அத்தகைய சூழல்தான்.


அதனைக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உருவாக்கிக் கொடுத்தால் கழகத்தளபதிக்கு அதைவிட சிறந்த பிறந்தநாள் பரிசு வேறெதுவும் இருக்கமுடியாது.


கலைஞரைப் போல கழகத் தளபதி நெடுங்காலம் வாழட்டும்.

. ஆளட்டும்.

                                                                                                                       -கோவி.லெனின்.

 
 


==========================================================================

கொழுப்பும் -ஆண் மலடும்
 மனித உடலில் ஐந்து வகையான கொழுப்புகள் உள்ளன.

 உள்ளுறுப்புக் கொழுப்பு உடலுறுப்புகளைச் சுற்றி இருப்பது. 
வெள்ளைக் கொழுப்பு ஆற்றலைச் சேமித்து வைக்கக் கூடியது. 

பழுப்புக் கொழுப்பு கலோரிகளை எரிக்க உதவுகிறது. 
தோல் அடிக் கொழுப்பு, தோலுக்கு அடியில் இருக்கக்கூடியது. 

தோல் அடிக் கொழுப்பும் உள்ளுறுப்புக் கொழுப்பும் சேர்ந்த கலவையே வயிற்றுக் கொழுப்பு. 

உணவு எப்படி பொரிக்கப்படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆலிவ், சூரியகாந்தி எண்ணெயில் பொரிக்கப்படும் உணவு வகைகளைச் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

இவர்கள், பொரித்த உணவு வகைகளை தவிர்ப்பவர்களுக்குச் சமமான இதய ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை 37 முதல் 40 அங்குலம் இடுப்பளவு இருந்தால் அதிக உடல் எடை என்று கொள்ளலாம்.

40 அங்குலத்தை தாண்டிவிட்டால் பருமன் என்று சொல்லலாம்.
பெண்களைப் பொறுத்தவரை இடுப்பளவு 31.5 முதல் 34.6 அங்குலம் இருந்தால் அதிகஉடல் எடை. இடுப்பளவு 34.6-யைத் தாண்டிவிட்டால் பருமன் என்று கொள்ளலாம்.
==========================================================================
ஆண் மலட்டுத் தன்மை 

என்பது ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை அடையாமல், இல்வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை. 
இது பல நோய்களின் தொகுப்பு. ஒரு மனிதனுக்கு மூன்று விஷயங்கள் இன்றியமையாததாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளன. 
இவை த்ரயோ உபஸ்தம்பங்கள் என்று ஆயுர்வேதப் பெரியோர்களால் கூறப்படுகின்றன. 
 உணவு - இது பித்தத்தை நிலைநிறுத்தும் செயல்.
  உறக்கம் - இது கபத்தை நிலைநிறுத்தும் செயல்.
  அப்பிரம்மச்சரியம் - முறைப்படுத்தப்பட்ட இல்வாழ்க்கை. இது வாதத்தை நிலைநிறுத்தும் செயல்.
இந்த மூன்று விஷயங்களும் ஒரு மனிதனுக்கு இன்றியமையாததாக கருதப்படுகின்றன. 
இல்வாழ்க்கை குறைபாடுகள் எனும்போது ஆண்மையின்மை, விறைப்புத்தன்மை இன்மை, இச்சையின்மை, விந்து முந்துதல் என்று பல நுண்பிரிவுகள் உள்ளன. 
ஒருவனுக்கு இல்வாழ்க்கை குறைபாடுகள் உடல் நோய்களாலோ, மனக் குறைபாடுகளாலோ அல்லது இரண்டின் காரணமாகவோ ஏற்படலாம். 
இன்றைய சூழ்நிலையில் வாழும் முறை, தவறான உணவுப் பழக்கம், படபடப்பு, பயம், மனஅழற்சி, கிலேசங்கள் ஆகியவை ஆண்மைக் குறைவுக்குக் காரணமாகின்றன. 
தாம்பத்திய உறவில் முழுமையாக ஈடுபட முடியாமல் போகும்போது, அது மேலும் மனத்துயரத்தை ஏற்படுத்துகிறது.
விறைப்புத்தன்மை இல்லாமை என்பது 'மேட்ரஸ்தப்ததா' என ஆயுர்வேதத்தில் அழைக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு விந்து வெளியே வராமல் சிறுநீர்ப்பைக்கு உள்ளே சென்றுவிடும். இதற்கு Retrograde ejaculation என்று பெயர். 
இதை ஆயுர்வேதத்தில் சுக்ரஜ உதாவர்த்தம் என்று அழைப்பர். ஒருவருடைய தாம்பத்திய உறவு மனதும், உடலும், நரம்பு மண்டலமும், ஹார்மோன்களின் இயக்கமும் சேர்ந்தது. காம இச்சை (Sex drive) எண்ணங்களாலும், வார்த்தைகளாலும், தொடு உணர்வாலும், பார்வைகளாலும் தூண்டப்படும். 
அதன் பின் உணர்ச்சித் தூண்டல் ஏற்படும். மூளைக்கும் தண்டுவடத்துக்கும் ஆண் உறுப்பின் ரத்தக் குழாயில் ஓடுகிற சுத்த ரத்தத்துக்கும் சம்பந்தம் உண்டு.
ஆண் உறுப்பில் உள்ள ரத்த நாளங்களில் ரத்தம் நன்றாக ஓட வேண்டும். இவ்வாறு ஓடும்போது அங்கு இருக்கும் தசைகள் இறுகி, ஆண் உறுப்பில் அழுத்தம் அதிகமாகி விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும். 
விந்து வெளியேறும் உச்ச நிலையை அடைந்த பிறகு, விறைப்புத் தன்மை ஏற்படாது. 20 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏற்படலாம்.
காம இச்சை குறைவதற்கு மன சோகம், மனப் படபடப்பு, மனைவியின் மீது ஈர்ப்பு இல்லாமை, சில மருந்துகள், டெஸ்டோஸ்டீரோன் (testosterone) எனும் ஆண் ஹார்மோன் குறைதல் போன்றவை எல்லாம் காரணமாகின்றன. வயது அதிகரிக்கும்போது, இது குறையலாம். 
காம இச்சைகளைத் தடுப்பதன் மூலமும் விறைப்புத்தன்மை குறையலாம்.
மனசோகத்துக்குச் சாப்பிடும் மருந்துகளால் இது உருவாகலாம். மைதுனத்தில் சுகம் கண்டு, தாம்பத்திய உறவில் சுகம் அற்றுப் போகிறவர்களும் உண்டு. மனம் சார்ந்த சிகிச்சைகளாகிய ஸத்வாஜய சிகிச்சை, மனதுக்கு பலம் ஊட்டும் சிகிச்சைகள் இதற்கு பலன் அளிக்கும்.

விறைப்புத்தன்மை இல்லாமையை Erectile dysfunction என்றும், Impotency என்றும் அழைப்பார்கள். விறைப்புத்தன்மை இருந்தால்தான் தாம்பத்திய உறவும், குழந்தைப் பேறும் சாத்தியம். 
இதற்கு ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை போன்றவற்றைச் செய்வார்கள். ஆண் உறுப்பில் சில மருந்துகளை செலுத்திக் குறைபாட்டைக் கண்டுபிடிப்பார்கள். 

மனைவியிடம் கோபம் இருந்தாலோ, மனப்பதற்றம் இருந்தாலோ,
 சோக நிலையில் இருந்தாலோ, கர்ப்பம் ஏற்பட்டுவிடும் என்ற பயம் இருந்தாலோ, 
குற்ற உணர்வு இருந்தாலோ, அறியாமை இருந்தாலோ 
தாம்பத்திய உறவு பாதிக்கப்படலாம். 

எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் விறைப்புத்தன்மை சற்று குறையும், அது ஒரு பிரச்சினையல்ல. அது தொடர்ந்து இருந்தால்தான் பிரச்சினை. 
ஒரு சிலருக்கு ஆண் உறுப்பில் நாளடைவில் கொழுப்புப் படிமானம் ஏற்பட்டு ரத்த ஓட்டம் குறைகிறது. நீரிழிவு, கொழுப்பு அதிகரித்தல், ரத்தக் கொதிப்பு ஆகியவற்றால் இப்படி ஏற்படலாம்.
தண்டுவடத்தில் அடிபட்டவர்களுக்கும், புராஸ்டேட் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கும், புற்றுநோய்க்குக் கதிரியக்க சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களுக்கும், Multiple sclerosis உள்ளவர்களுக்கும், பக்கவாத நோய் வந்தவர்களுக்கும், சிகரெட் பிடிப்பவர்களுக்கும் இந்நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இதய நோயாளிகளுக்கு, மற்ற கடினமான வேலைகளுடன் ஒப்பிடும்போது உடலுறவு கொள்ளுதல் பெரிய தீங்கை விளைவிப்பது இல்லை.
 ஓய்வாக இருக்கும் ஒரு மனிதனுக்கு மாரடைப்பு வரும் சதவிகிதத்தைவிட, உடலுறவு வைத்துக்கொள்ளும்போது மாரடைப்பு வரும் சதவிகிதம் சற்று அதிகம்தான். 
ஆனால், அனுபவத்தில் இது குறைவு. இருந்தாலும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதயத் துடிப்பு மாறுபட்ட நிலையில் உள்ளவர்கள், வால்வு பிரச்சினை உள்ளவர்கள், மருத்துவர்கள் ஆலோசனை பெற்ற பிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடுவது நல்லது.
நோயின் தன்மை சற்று மென்மையாக இருந்தால் இல்வாழ்க்கையில் ஈடுபடுவதில் தவறில்லை.
 அவ்வப்போது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அத்துடன் ve cardio myopathy நோய் உள்ளவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது. 
இந்த மாதிரி நோய் உள்ளவர்களுக்குக் காலில் நாடித் துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் பார்க்க வேண்டியது அவசியம். 
சிகிச்சைகள்
ஆயுர்வேதத்தின் எட்டு அங்கங்களில் ஓர் அங்கம் வாஜீகரணம் எனப்படும். 
வாத்ஸ்யாயனரின் காம சூத்ரம், திருக்குறளின் காமத்துப்பால் ஆகியவற்றை எல்லாம் பார்க்கும்போது,
 மலட்டுத்தன்மை சார்ந்த சிகிச்சையைக் கூச்சப்படாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதேநேரம் இந்த சிகிச்சை சார்ந்து முறையற்ற ஆலோசனைகள், 
போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம். 
அனுபவமுள்ள, அறிவியல்பூர்வமான ஆயுர்வேத மருத்துவர், 
சித்த மருத்துவர், நவீன மருத்துவரையே அணுக வேண்டும். 
மனப்பதற்றம் உடைய ஆண்களுக்கு சீக்கிரத்தில் விந்து முந்திவிடும்.
 இது இருவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தும். இதற்கு ஆயுர்வேத முறையில் தகுந்த சிகிச்சை அளிக்க முடியும்.
ஒரு மனிதனுக்கு உடலில் ஏழு தாதுக்கள் உள்ளன. 
ஏழாவது தாது சுக்ர தாதுவாகும். இந்த சுக்ர தாது 
குழந்தை பிறப்புக்குக் காரணமாக இருக்கிறது. 
இது ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
அன்ன ரஸம், சுக்ர தாதுவாக மாறுகிறது. 
இந்த சுக்ர தாது உடலுக்கு வலுவையும் தருகிறது. இந்த சுக்ர தாதுவைப் பலப்படுத்த நல்ல உணவு வகைகளை உண்ணுதல், வாரந்தோறும் எண்ணெய் குளித்தல், தினமும் நடைப்பயிற்சி, யோகா, 20 நிமிடம் தியானம், மனப் பதற்றத்தை தவிர்த்தல் போன்ற அம்சங்களுடன், சில சிறப்பான மருந்துகளையும் உட்கொள்ளலாம். 

எளிய மருத்துவம்
 
# அமுக்குரா கிழங்கு சூரணம் 10 கிராம் பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட வேண்டும். 

# அமுக்குரா கிழங்கு, நிலப்பனை கிழங்கு, சதாவரி, சாலாப்மிசிரி, முருங்கை விதை, பூனைக்காலி விதை, தாமரை விதை, அதிமதுரம், நெல்லி வற்றல், முருங்கைப் பிசின், நீர்முள்ளி விதை, மதனகாமப்பூ, திராட்சை, எள், தேற்றான்கொட்டை, அத்திப் பழம், பூமி சர்க்கரை கிழங்கு, பருத்திக் கொட்டை, பிஸ்தா, அக்ரோட் பருப்பு, வெள்ளரி விதை, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பூசணி விதை, பசும் பால் போன்றவை ஆண்மையை அதிகரிக்கும். 

# ஜாதிக்காய் மனஅழுத்தத்தைப் போக்கும், பாலுணர்வைத் தூண்டும். ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ சாப்பிடலாம். இதை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து, இடித்து பொடியாக்கி காலை, மாலை பசும்பாலில் 4 கிராம் சூரணத்தை காய்ச்சிக் குடிக்கலாம். இது நரம்புத் தளர்ச்சியை போக்கும். 

# மாதுளம் பூவைப் பசும் பாலில் வேகவைத்து, சிறிது தேன் கலந்து அருந்தினால் சுக்ர பலம் பெறும். 

# முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம். 

# வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிடலாம். 

# அத்திப்பழம் தினமும் சாப்பிட்டுவரலாம். 

# கருஞ்சீரக எண்ணெயை ஆணுறுப்பில் தடவி வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். 

# ஓரிதழ் தாமரையை பொடி செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டுவர, நல்ல பலன் கிடைக்கும். 

                                                                                                                                                                - டாக்டர் எல். மகாதேவன்

===========================================================================

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

ரயில்வே பட்ஜெட்

தமிழகத்துக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களைநிறைவேற்ற 2015- 2016-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.
அதற்கும் மேலாக அந்த திட்டங்களையே மோடி அரசு கைவிட்டுள்ளது மிக அதிர்ச்சியைதருகிறது.
 2013- 2014-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 12 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டன.
அதன் பிறகு, கடந்தகாங்கிரஸ் கூட்டணி அரசால் போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும், 2014- 2015-ம் ஆண்டுக்கான பாஜக அரசின் பட்ஜெட்டிலும் போதிய புதிய ரயில்கள் அறிவிக்கப் படவில்லை.
அதிலும், கடந்த 3 ஆண்டுகளில் தமிழக தென் மாவட்டங்களுக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்துக்கு ஏற்கனவே அறி விக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற ரூ.10 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. ஆனால், இதுவரை ரூ.679 கோடி நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி அனைத்தும் தமிழகத்தின் புதிய ரயில் பாதை திட்டங்கள், இரு வழிப்பாதை திட்டங்கள், அகலப்பாதை திட் டங்களுக்கானதாகும்.
2015- 2016-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
ஆனால், அவர் இத்திட்டங்களுக்கு சாவுமணியே அடித்தார்.
தமிழகத்திற்கான அனைத்து திட்டங்களையும்,ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் ரெயில்வே கைவிட்டுள்ளது.
 அவர் ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், ரயில்வேத் துறையில் `மறுமலர்ச்சியை’ ஏற் படுத்தப் போவதாக 7 குழுக்களை அமைத்தார். குழுக்களின் பரிந்து ரைப்படி, நாடு முழுவதும் அனுமதிஅளிக்கப்பட்ட சுமார் 160 திட்டங் கள் கிடப்பில் போடப்பட்டன.
அதில், தமிழகத்துக்கான 24 திட் டங்களும் அடங்கும்.
கடந்தகால ஆட்சிகளில் அறிவிக் கப்பட்டு செயல்படுத்தப்படாமல் இருக்கும் திட்டங்கள் தொடர் ந்து செயல்படுத்தப்பட்டு முடிக்கப் படும் என்று பாஜக அரசின் ரயில்வேஅமைச்சராக முதலில் பொறுப்பேற்ற சதானந்த கௌடா கடந்த பட்ஜெட்டில் தெரிவித்தார்.
முக்கிய ரயில் திட்டமான சென்னை- கன்னியாகுமரி இரு வழிப்பாதைத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வந்தது.
அதேபோல, சென்னை- நாகர்கோவில் வரையிலான வழித்தடத்தில் இரு வழிப்பாதை திட்டம், செங்கல்பட்டு- திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டம் முடங்கி உள்ளன.
இவற்றை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து வராமல் இழுபறியாகவே ஆண்டுகள் ஓடிக்கொண்டு இருந்தன. இவை அனைத்தையும் தற்போது ஒழித்து விட்டது மோடி அரசின் ரயில்வே பட்ஜெட்.

2012- 2013-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் சென்னை ராயபுரம் ரயில் நிலையம் 4-வது ரயில் முனையமாகவும், தாம்பரம் ரயில் நிலையம் 3-ஆவது ரயில் முனையமாகவும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற எவ்விதமுயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், 2013-2014-ஆம்ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் ராயபுரத்தை ரயில் முனையமாக மாற்றுவதற்கான எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
ஆனால், சிறப்பு திட்டத்தின் கீழ் ராயபுரம் ரயில் முனையமாக்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, நடைமேடைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.
அது இனி தொடருவதாக  தெரியவில்லை.

ஈரோட்டிலிருந்து தாராபுரம் வழியாக பழனி வரையிலான ரயில்வே திட்டம் கிடப்பில் போடப்பட்டது.ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில், ஈரோட்டிலிருந்து தாராபுரம் வழியாக பழனி வரை புதிய ரயில் பாதை அமைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இப்பகுதி மக்களின் 100 ஆண்டுகால கோரிக்கையை ஏற்ற காங்கிரஸ் அரசு இத் திட்டத்தை நிறைவேற்ற 2011-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கியது.
2011-ல் ரூ.33 கோடியும், 2012-ல் ரூ.10 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்ட பிறகும் சர்வே பணிகளைத் தவிர வேறு எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.
ஒதுக்கப்பட்ட பணம் என்னவானது என்ற கேள்விஎழுந்த போது, ரயில்வேத் துறை திடீரென திட்டத்தை நிறுத்தி வைத்தது.
காலப்போக்கில் அதைகிடப்பில் போட்டுவிட்டது.
இதனால் இப்பகுதி மக்களின் 100 ஆண்டுகால கனவு கேள்விக்குறியாகவே உள்ளது.
கைவிடப்பட்ட புதிய ரயில் பாதை திட்டங்கள்
1. சென்னை- ஸ்ரீபெரும்புதூர் (வழி - பூந்தமல்லி)
2. ஆவடி- ஸ்ரீபெரும்புதூர்
3. இராமேஸ்வரம்- தனுஷ்கோடி
4. தஞ்சாவூர்- அரியலூர்- சென்னை எழும்பூர்
5. திண்டிவனம்- கடலூர் (வழி - புதுச்சேரி)
6. மயிலாடுதுறை- திருக்கடையூர்- திருநள்ளாறு- காரைக்கால்
7. ஜோலார்பேட்டை- ஒசூர் (வழி - கிருஷ்ணகிரி)
8. சத்தியமங்கலம்- மேட்டூர்
9. ஈரோடு- சத்தியமங்கலம்
 10. சத்தியமங்கலம்- பெங்களூரு
11. மொரப்பூர்- தருமபுரி (வழி - முக்கனூர்)
12. மதுரை- காரைக்குடி (வழி - திருப்பத்தூர்)
13. வில்லிவாக்கம்- காட்பாடி
14. திருவண்ணாமலை- ஜோலார்பேட்டை
15. மதுரை- கோட்டயம்
16.அரக்கோணம்- திண்டிவனம் (வழி- வாலாஜாபேட்டை)
17. சிதம்பரம்- ஆத்தூர் (வழி - அரியலூர்)
18. திண்டுக்கல்- கூடலூர்
19. திண்டுக்கல்- குமுளி
20. காட்பாடி- சென்னை (வழி - பூந்தமல்லி)
21. கும்பகோணம்- நாமக்கல்
22. மானாமதுரை- தூத்துக்குடி
23. நீடாமங்கலம்- பட்டுக்கோட்டை (வழி - மன்னார்குடி)
24. தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை
பாதியில் கைவிடப்பட்டவை
1. சென்னை- கடலூர்2. பழனி- ஈரோடு3. திண்டிவனம்- செஞ்சி-திருவண்ணாமலை4.திண்டிவனம்- வாலாஜா- நகரி (திண்டிவனம்- வாலாஜா வரை கைவிடப்படுகிறது)5.ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி அகலப்பாதைப் பணி6. மதுரை- போடி7. திண்டுக்கல்- கோவைஇரு வழிப்பாதைப் பணி1. திருச்சி- தஞ்சாவூர்2. இருகூர்- போத்தனூர்

வியாழன், 26 பிப்ரவரி, 2015

தோழர் மாயாண்டி பாரதி.அவர் எங்கே சென்றாலும் அவரைச் சுற்றி ஒரு சிறு கூட்டமே கூடிவிடும்.
அவருடைய விமர்சனங்கள் கூர்மையாக இருக்கும்.
ஆனால் எவர் மனதையும் புண்படுத்தாது.
மார்க்சியத்தின் மீதும், அதன் இறுதி வெற்றி நிச்சயம் என்பதிலும் அவருக்கு உறுதியான நம்பிக்கையுண்டு.
‘டால்ஸ்டாயின் ஆறடி நிலம்‘, ‘அரசு என்றால் என்ன’ போன்ற சில நூல்களையும் அவர் எழுதியுள்ளார்.
ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறையினருக்கு திருமணம் நடத்திவைத்த பெருமையும் அவருக்கு உண்டு.
12 ஆண்டுகள் சிறைவாசம், பல ஆண்டுகள் தலைமறைவு வாசத்தை அனுபவித்துள்ளவர்தான்  ஐ.மா.பா.என்று அழைக்கப்படும் தோழர் மாயாண்டி பாரதி. 
மாபெரும் தேசபக்தராகவும், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்த கம்யூனிஸ்ட்டாகவும் ஏழை- எளிய மக்களிடம் மிகுந்த பரிவு கொண்ட மாபெரும் மனிதாபிமானியாகவும் விளங்கினார் .

மிகச் சிக்கலான விஷயங்களைக் கூட சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும்படி எழுதுவதிலும், விளக்குவதிலும் அவருக்கு இணை அவரேதான். ஏழை - எளிய மக்களுடன் மிகவும் ஒன்றிவிடுவார்.
கம்யூனிஸ்ட் இயக்கப் பாடகர்களாகயிருந்த பாவலர் வரதராஜன் மற்றும் அவரது தம்பிகளுக்கு ஐ.மா.பா. பல உதவிகள் செய்துள்ளார்.
அதே போன்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மீதும் அவரது தாக்கம் அதிகமுண்டு.குழந்தைகள் மீது பாச மழையைப் பெய்த ஐ.மா.பாவின் தோல் பையில் அவர்களுக்காக மிட்டாய்கள், தின்பண்டங்கள் எப்பொழுதும் இருக்கும். 
புகழ்மிக்க சுதந்திரப் போராட்ட வீரரும், தொழிலாளி வர்க்க இயக்கத்திற்காக பல்லாண்டு சிறைவாசம், சித்ரவதைகளை அனுபவித்தவரும், தனது எழுத்தாற்றலால், பேச்சாற்றலால் ஏராளமானோரை மார்க்சிய இயக்கத்தின்பால் ஈர்த்தவருமான அருமைத்தோழர் ஐ.மாயாண்டி பாரதி 1917 ஆம் ஆண்டில் பிறந்தார்.
இருளப்பன் - தில்லை அம்மாளின் புதல்வரான இவர் துவக்கக் கல்வியை ஏட்டுப் பள்ளியிலும், பின்னர் ஸ்வீடிஷ் மிஷன் பள்ளியிலும் படித்தார்.
ஐந்தாவது வகுப்பை நகராட்சி பள்ளியிலும் பின்னர் உயர்நிலைப் படிப்பை அமெரிக்க மிஷன் நடுநிலைப் பள்ளியிலும் சௌராஷ்டிரா உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார்.
பள்ளியில் படிக்கும் போதே சுதந்திரப் போராட்ட இயக்கத்தினால் ஈர்க்கப்பட்ட மாயாண்டி, காங்கிரஸ் கட்சி நடத்திய கூட்டங்களிலும், ஊர்வலங்களிலும் தவறாது பங்கெடுப்பார்.
தந்தையாருக்கு இது மிகுந்த வெறுப்பைத் தரும். ஏனெனில் அவர், சுதந்திரப் போராட்டத்தை எதிர்த்த நீதிக் கட்சிக்காரர்.
 மாயாண்டியின் அண்ணன் கருப்பையாவும், சுதந்திரப் போராட்ட ஆர்வம் மிக்கவர். வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு பிரம்படிபட்டவர்.மாயாண்டியின் அரசியல் துவக்கம் என்பது 1931 ஆம் ஆண்டில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற ஆவேச ஊர்வலத்திலிருந்து தொடங்குகிறது.

அவர் பங்கேற்ற முதல் ஊர்வலமும் இதுதான்!
இதன்பின் மாயாண்டி கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு கடுமையான அடி உதைக்கு ஆளானார்.
 உடல் முழுவதும் காயங்களுடன் வந்த அவரை, தந்தையார் ஈவிரக்கமின்றி அடித்து படுத்த படுக்கைக்கு ஆளாக்கினார். ஆனால் எத்தகைய அடி உதையும் மாயாண்டியை அசர வைக்க முடியவில்லை.
 விடுதலை இயக்கத் தீ அவர் சிந்தனையில் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது.அதே 1931 ஆம் ஆண்டில் ஜதீந்திரநாத் வாசக சாலையின் திறப்புவிழா மதுரையில் நடைபெற்றது.
வங்காளத்தின் பிரபல காங்கிரஸ் தலைவர் பி.சி.ராய் அதில்கலந்து கொண்டார். அந்த விழாவில்தான் மாயாண்டிக்கு ‘பாரதி’ என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டது. அன்றிலிருந்து அவர் மாயாண்டி பாரதி என்றும், ஐ.மா.பா. என்றும் அழைக்கப்படலானார்.
 ஜதீந்திரதாஸ் வாசக சாலை, லாலா லஜபதி வாசகசாலை, அன்சாரி வாசக சாலை, ஜவஹர் வாலிபர் சங்கம், கமலா நேரு வாசக சாலை, விஸ்வகர்மா கைத் தொழிலாளர் சங்கம் போன்றவற்றில் தலைவராகவும், செயலாளராகவும் பல ஆண்டு காலம் செயல்பட்டார்.
பள்ளிப் படிப்பு முடிந்தவுடன், எழுத்தில் ஆர்வங்கொண்டிருந்த ஐ.மா.பா., சென்னைக்குச் சென்று ‘நவசக்தி’ ஏட்டிலும், ‘லோகோபாரி’ ஏட்டிலும் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.
அச்சமயத்தில் ‘நவசக்தி’யை தமிழறிஞர் திரு.வி.க.வும், ‘லோகோபாரி’யை, பாரதியாரின் சீடர் பரலி சு.நெல்லையப்பரும் நடத்தி வந்தனர்.1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது உலகப் போர் துவங்கிய போது ஐ.மா.பா. ஏகாதிபத்திய போரைக் குறித்து பல கட்டுரைகள் எழுதினார்.
தேசபக்த ஆவேசத்தை தூண்டும் “படுகளத்தில் பாரத தேவி” என்ற சிறிய நூலை எழுதினார். இது தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. விருதுநகரில் இந்தப் பிரசுரத்தின் விற்பனையாளர், காங்கிரஸ் தலைவர் காமராசர் என்பதிலிருந்தே இதன் சிறப்பு விளங்கும்.
இப்பிரசுரத்தை எழுதி வெளியிட்டதற்காக ஆங்கிலேய அரசாங்கம் அவர் மீது பாய்ந்தது.
அவரைக் கைது செய்து ஓரிரு மாதம் சிறையிலடைத்தது. ‘லோகசக்தி’ பத்திரிகைக்கு 2 ஆயிரம் ரூபாய் ஜாமீன் கேட்கப்பட்டதால் அது நிறுத்தப்பட்டது.விடுதலையான பின் மதுரைக்கு வந்த ஐ.மா.பா. யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
சாத்தூர் அருகே உள்ள கன்னிசேரியில் 1940 ஆம் ஆண்டில் “பட்டாளத்தில் சேராதே, பணம் காசு கொடுக்காதே” என்று பேசியதற்காக ஐ.மா.பா.விற்கு 6 மாத கடுங்காவல் தண்டனையும், 250 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதம் செலுத்த மறுத்ததால் அவருக்கு 7 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூர், கோவை சிறைகளில் அவர் இருந்தபோது கம்யூனிஸ்ட் தலைவர் வி.பி.சிந்தன், மார்க்சிய அறிஞர் ஜமதக்னி ஆகியோர் நடத்திய மார்க்சிய அரசியல் வகுப்புகளில் கலந்து கொண்டு கம்யூனிஸ்டானார். தண்டனை முடிந்து வெளியே வந்த அவர், 1941 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே காமராசர், சஞ்சீவ ரெட்டி, ஏ.கே.கோபாலன், என்.ஜி.ரங்கா, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், என்.சங்கரய்யா, பட்டாபி சீத்தாராமய்யா ஆகியோருடன் ஐ.மா.பா.விற்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.
1942 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விடுதலையான ஐ.மா.பா., ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டார். 1944 ஆம் ஆண்டு இறுதியில்தான் விடுதலையானார்.
1945 ஆம் ஆண்டில் மதுரை நகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் பணிகளில் பங்கெடுத்தார்.
பின்னர் சென்னைக்குச் சென்று கட்சியின் ஏடான “ஜனசக்தி”யின் ஆசிரியர் குழு உறுப்பினரானார்.1948 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது ஐ.மா.பாவும் கைது செய்யப்பட்டார்.
 1949ம் ஆண்டில் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
தலைமறைவாகயிருந்த கட்சித் தலைமை அவரை கட்சி ஊழியர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் நடப்பு அரசியலை போதிக்கும் பணிக்காக நெல்லை மாவட்டத்திற்கு அனுப்பியது. தலைமறைவாகயிருந்து அங்கே செயல்பட்டு வரும்போது, மீளவிட்டான் அருகே கூட்ஸ் ரயிலைக் கவிழ்த்தாக ஐ.மா.பா. மீது குற்றம் சாட்டப்பட்டது.
காவல்துறையினர் அவரை அந்த மாவட்டம் முழுவதும் வலைவீசித் தேடி இறுதியில் அவரை மேலப்பாளையம் அருகே கைது செய்தனர்.ஐ.மா.பா. அங்கே மிகக் கொடூரமான சித்ரவதைக்கு ஆட்படுத்தப்பட்டார். அவரது குறுக்கு எலும்பு, கைவிரல்கள் ஒடிக்கப்பட்டன.
பின்னர் நெல்லை சதிவழக்கில் 9வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ஐ.மா.பாவிற்கு, ஆர்.நல்லகண்ணு, பி.மாணிக்கம் ஆகியோருடன் சேர்த்து இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் உயர்நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது.1954 ஆம் ஆண்டில் ஐ.மா.பா. - பொன்னம்மாள் திருமணம் மதுரையில் நடைபெற்றது. அதே ஆண்டில் அவர் ‘ஜனசக்தி’ ஆசிரியர் குழுவில் துணை ஆசிரியரானார்.அமெரிக்காவில் ரோசன்பர்க் தம்பதியை, சோவியத் ஒற்றர்கள் என்ற பழி சுமத்தி அமெரிக்க அரசாங்கம் மின்சார நாற்காலியில் வைத்து கொன்றது.
அதைக் கண்டித்து சென்னையில் அமெரிக்க அலுவலகம் முன்பு ஆவேசமான ஆர்ப்பாட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. கல்வீச்சு நடைபெற்றது. இதன் காரணமாக அன்றிரவில் ஐ.மா.பா. உள்ளிட்டு ஏராளமானோர் கைது செய்யப்பட்டு ஒரு மாத காலத்திற்குப் பின்புதான் விடுதலை செய்யப்பட்டனர்.
1964 ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவேற்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய பொழுது ஐ.மா.பாவும் தன்னை அதில் இணைத்துக் கொண்டார்.
அவ்வாண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதியன்று தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் வைக்கப்பட்டனர்.
ஐ.மா.பா.வும் அவர்களில் ஒருவர். 16 மாத காலத்திற்குப் பின் விடுதலையான அவர், மதுரை நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளர்ச்சிப் பிரச்சாரத்திலும், இளைஞர்களுக்கு அரசியல் வகுப்புகள் நடத்துவதிலும் முன்னின்றார்.
1969 ஆம் ஆண்டில் “தீக்கதிர்” நாளேடு மதுரைக்கு மாற்றப்பட்டபின் ஐ.மா.பா. அதில் இணைந்து சுமார் 20 ஆண்டு காலம் பணியாற்றினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையாளர் தூதுக்குழு சோவியத் நாட்டிற்கு அனுப்பப்பட்டபோது அதில் “தீக்கதிர்” சார்பில் ஐ.மா.பா. பங்கேற்றார்.
பின்னர் உடல்நிலை காரணமாக ஓய்வு பெற்ற ஐ.மா.பா., மதுரை மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர் சமிதியை பராமரிப்பதிலும், முதிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உதவிகள் செய்வதிலும் முழுக்க முழுக்க தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
'
ஜனசக்தி’யிலும், ‘தீக்கதிரிலும்‘ பல நூற்றுக்கணக்கான கட்டுரைகள், குறிப்புகளை ஐ.மா.பா. எழுதியுள்ளார். அவரது எழுத்தில் நகைச் சுவை கலந்த கூர்மை இருக்கும்.
ஆனால் அவரின் இழப்பு தாளா சோகத்தை மட்டுமேதரும்.
===========================================================================
புதன், 25 பிப்ரவரி, 2015

குற்றவாளியின் பிறந்த நாளை

 கொண்டாடும் அரசு. 

மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
   ஒரு சட்ட மன்ற உறுப்பினராகக் கூட இல்லாத ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவுக்காக அரசு எந்திரமும், அரசு நிதியும் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. அரசின் சாதனைக் கண்காட்சி என்ற பெயரில் சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஜெயலலிதாவின் புகழ்பாடும் கண்காட்சிக்கு அரசு செலவில் ஏற்பாடு
ஜெயலலி தாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 670 தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 
நேற்று தொடங்கி 8 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 60 முதல் 100 மருத்துவமனைகளில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு மேல் சிகிச்சை ஏதேனும் தேவைப்பட்டால், அவர்களுக்கு அதே மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின்படி இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், பொது சுகாதாரத் துறையின் சார்பில் நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன.  ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக இதையெல்லாம் செய்ய நினைக்கும் அமைச்சர்களும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் அவர்களின் சொந்த நிதியிலிருந்தோ அல்லது அ.தி.மு.க.வின் கட்சி நிதியிலிருந்தோ செய்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்வதாக இருந்தால் ஆண்டின் 365 நாட்களுக்கும் கூட அவர்கள் மருத்துவ முகாம்களை நடத்தலாம். 
மாறாக அரசு நிதியிலிருந்து ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதும், இதற்காக கடந்த கால நடைமுறைகளை மீறி தலைமைச் செயலக வளாகத்தையே கொண்டாட்டக் களமாக மாற்றுவதும் அருவெறுப்பான முன்மாதிரி.அதிலும் தலைச் செயலக சங்கத்தினர் நடந்து கொண்ட முறை கண்டிக்கத்தக்கது.ஒரு முதல்வருக்கு பிறந்த நாள் என்றால் கூட தலைமைச்செயலக ஊழியர்கள் சங்கம் கொண்டாடுவது தவ று.அதிலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஊழல்வாதிக்கு கொண்டாட்டம் மிக தவ றானது.இவர்கள் ஊழியர் சங்கத்தினரா?
 அல்லது அதிமுக அடியாட்களா??
மருத்துவ முகாம்கள் ஒருபுறமிருக்க ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும்வகையில் தமிழ்நாட்டில் 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்திருக்கிறார். மரக்கன்றுகள் நடுவது நல்ல விஷயம் தான்.
இதற்கான திட்டத்தை தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளிலோ, எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராசர் போன்ற தலைவர்களின் பிறந்த நாளிலோ அல்லது இயற்கையை காக்கவே வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்ட நம்மாழ்வாரின் பிறந்த நாளிலோ தொடங்கி வைத்திருந்தால் அது மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும். மாறாக ஊழல் குற்றவாளியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக அரசு சார்பில் புதிய திட்டத்தை அறிவித்து தொடங்குவதை ஏற்கவே முடியாது.
இன்னொருபுறம், அ.தி.மு.க. அரசின் சாதனைக் கண்காட்சி என்ற பெயரில் சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஜெயலலிதாவின் புகழ்பாடும் கண்காட்சிக்கு அரசு செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதிலும் குறிப்பாக ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறை சென்ற ஒருவருக்காக இவ்வளவையும் செய்வது அசிங்கமானது -நம் தமிழக அரசு நிர்வாகத்தையே கேவலப்படுத்துவது  .

இதுதவிர, அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பதவியில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் ஜெயலலிதாவை வாழ்த்தி நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 இதற்காக கோடிக்கணக்கில் அரசு நிதி செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக ஜெயலலிதா பிறந்த நாள் குறித்த அ.தி.மு.க.வின் செய்திக் குறிப்பை தமிழக அரசின் செய்திமக்கள் தொடர்பு இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
அரசு செய்திகளை வெளியிடவேண்டிய இந்த இயக்குனரகத்தை எப்போது அ.தி.மு.க. குத்தகைக்கு எடுத்தது என்பது தெரியவில்லை.
 தமிழக ஆட்சியாளர்கள் ஜனநாயக நடைமுறைகளையோ அல்லது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையோ மதிக்கவில்லை என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. 
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தற்போது அம்மா அடிமைகள் சபை 
தமிழக அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் உருவப்படங்களை மாட்டுவதும், அரசு சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை முன்னிலைப் படுத்தி வைப்பதும், குடியரசு நாள் கொண்டாட்டங்களில் அணிவகுக்கும் அலங்கார ஊர்திகளில் ஜெயலலிதா படங்களை இடம்பெறச் செய்ததும் ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு ஒப்பானதாகும். 
மரம் நடும் விழாக்களில் அப்பகுதி அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள் அதை ஏற்றுக் கொள்ளலாம்.அவர்களின் கட்சித்தலைவி ஜெயலலிதா.
ஆனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டு மரம் நாட்டுவதை பார்க்கையில்தான் நம் தமிழ் நாடு நிர்வாகம் எவ்வளவு தரம்தாழ்ந்து ,அதிகாரிகள் எல்லோரும் ஜெயாவின் அடிமைகளாக ,அதிமுக உறுப்பினர்களை விட தாழ்ந்து போயுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.இவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் அரசு சம்பளம் வழங்க்குகிறதா?அல்லது அதிமுக தலைமைகழகம் சம்பளம் கொடுக்கிறதா என்ற சந்தேகம் தான் வருகிறது.
இவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் ஊழல் குற்றவாளியின் பிறந்தநாளை எந்தவித வெட்கமும் இன்றி அரசு செலவில் அ.தி.மு.க.வினர் கொண்டாடி மகிழ்வது தங்களை தட்டிக் கேட்க யாருமே இல்லை என்ற ஆணவத்தையே காட்டுகிறது.

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அரசின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் செலவிடப்பட்ட தொகையை அ.தி.மு.க.விடமிருந்து வசூலிக்க வேண்டும்; உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் வழங்கப்பட்ட விளம்பரங்களுக்கான செலவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுனர் ஆணையிட வேண்டும்.


மூ முத்த வழக்குரைஞர் ராம் ஜெத் மாலினிதான்
வாரியலும்,விளக்குமாறும் ,
கோட் செலவை விட விளம்பரச்செலவுதான் தாங்க முடியலை.அடுத்த பட்ஜெட்டில் பிரதமரின் விளம்பரத்துக்கு ஒரு ஆயிரம் கோடிகளை ஒதுக்குங்க மோடி.