சனி, 31 டிசம்பர், 2011

             2012-ஆண்டு நலமும்,வளமும் பெருக

                                         வாழ்த்துக்கள்,,,,,.!


அந்த 14 -வது நபர்,.?


அமெரிக்காவை எதிர்த்தால் புற்றுநோய் வரும்?


அமெரிக்கா தனக்கு வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு ரகசியமாக புற்றுநோயைப் பரப்பி வருகின்றது என தான் சந்தேகம் கொண்டுள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி ஹூகோ சாவேஸ் கூறிள்ளார்.
இடதுசாரியும்-அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளரான சாவேஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரைப் போன்றே இடது சாரிகளும்,அமெரிக்க எதிர்ப்பாளர்களுமான தென் அமெரிக்க நாடுகள் அதிபர்களான பரகுவே ஜனாதிபதி பெர்ணான்டோ லுகோ, பிரேசில் ஜனாதிபதி டில்மா ரௌசெப், பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வா ஆகியோரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுஆர்ஜென்டீனா ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்ணான்டஸிற்கும் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இடது சாரிகள்-அமெரிக்க எதிர்ப்பாளர்கள் என கூறப்படும் அனைவரையும் குறி வைத்து புற்று நோய் தாக்கி வருவதை அடுத்து” எவர் மீதும் குற்றச்சாட்டு கூற நான் விரும்பவில்லை.அமெரிக்கா நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இவ்வாறு நோயைப் பரப்பியிருந்தால், அது மிகக் கொடூரமான செயல். உண்மையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாதுமேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள இடதுசாரித் தலைவர்களுக்கு மட்டும்தொடர்ந்து இதுபோன்று நிகழ்ந்து வருவதை இயல்பானது என்று கூறி முற்றிலுமாக ஒதுக்கிவிடவும் முடியாதுகடந்த 1946- 48-ம் ஆண்டுகளில் கௌதமலா சிறையில் கைதிகளை வைத்து பாலியல் தொடர்பான நோய்களைப் பரப்புவது எப்படி என்று ஆய்வு செய்த நாடுதான் அமெரிக்கா .கிய்ய்பா அதிபர் காஸ்ட்ரோவை பல விடம்,கிருமிகள் பரப்பி கொல்ல முயன்றது அமெரிக்கா என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.என்று சாவேஸ் கூறியுள்ளார்.
______________________________________________________________________
அந்த 14 வது மனிதர் யாராயிருக்கும்?
அயல் நாட்டு வங்களில் கருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஒருவரின் பெயர் இடம்பெற்றுள்ளது என்று மாநிலங்களவையில் ராம் ஜெத்மலானி குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் ஊழலை ஒழிக்கும் லோக்பால் சட்ட வரைவின் மீது  பேசியபோது ராம் ஜெத்மலானி இவ்வாறு கூறினார்.வழக்கம் போல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.
“அயல் நாட்டு வங்கியில் இரகசியக் கணக்கு வைத்து அதில் கருப்பு பணத்தைப் போட்டு வைத்திருப்பவர்கள் 14 பேரின் பட்டியலை சுவிட்சர்லாந்து இதழ் ஒன்று வெளியிட்டது. அதில் வெட்கட்கேடான விடயம் என்னவெனில் அப்பட்டியலில் இருந்து 14வது மனிதர் இந்தியாவின் முன்னாள் பிரதமர்” என்று ஜெத்மலானி தகவல்வெளியிட்டார்.
ஜெத்மலானி குறிப்பிடுவது காங்கிரசின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைத்தான் என்பதைகாங்கிரஸ் உறுப்பினர்கள் அறிந்து கொண்டனர். புரிந்துகொண்ட காங்கிரஸ் கட்சியினர், அவர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கூச்சலிட்டனர்.ஆனால் பத்திரிக்கையில் வெளிவந்த ஆதாரபூர்வ செய்தியைத்தான் கூறியதாக ஜெத்மலானி அமைதியுடன் கூறிவிட்டார்.
ஆமாம்.அந்த 14 வது நபர் அதுவும் முன்னாள் பிரதமர் யாராயிருக்கும்?
________________________________________________________________________
புதிய தலைவர்,
வடகொரியாவின் தலைநகர் பியொங்யாங்கில் பெருமளவு மக்கள் முன்பாக கிம் யாங் இல் அவர்களின் இளைய மகன் நாட்டின் தலைவராக பிரகடனம் செய்யப்பட்டார்.

தனது தந்தையின் நினைவு ஆராதனைக்கு தலைமையேற்ற கிம் யாங் உன் அவர்களுக்கு இராணுவ மற்றும் கட்சியின் உயர் தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
லட்சக்கணக்கான மக்கள் முன்பாக அவரைப் போற்றும் பிரகடனம் படிக்கப்பட்டது. அப்போது மைய சதுக்கத்தில் மக்கள் எல்லாம் தலை சாய்த்து வணக்கம் செலுத்தினார்கள்.
தேசம், இராணுவம் மற்றும் ஆளும் தொழிலாளர் கட்சியின் புதிய அதியுயர் தலைவராக கிம் யாங் உன் போற்றப்பட்டார்.
தனது தந்தையைப் போன்ற கொள்கை மற்றும் குணாதிசயங்களை கொண்டவர் அவர் என்று விவரிக்கப்பட்டார்.
 முப்பது வயதுக்குட்பட்டவர் கிம் யாங் உன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகத்தான் நாட்டு மக்களுக்கு அறிமுகமானார்.
கிம் யாங் உன்னிற்கு ஒரு நாட்டை வழிநடத்தும் தகுதி, திறமை, அனுபவம் பற்றி மக்களுக்கு சந்தேகம் உள்ள போதும் இவரை தனது வாரிசாக அறிவித்திருந்தார் கிம் யாங் இல்.

நாட்டின் அதியுயர் தலைவர் பதவியில் கிம் யாங் உன் இருந்தாலும் அவரது அதிகாரம் மிக்க மாமாவான ஜங் சொங் தேக் தான் உண்மையான அதிகார மையமாக விளங்குவார் என்று தென்கொரியா கருத்து வெளியிட்டுள்ளது.
________________________________________________________________________________
அதிரவைக்கும் மின்கட்டண உயர்வுதேவையா?
         தமிழகத்தில் மின் நுகர் வோர் எண்ணிக்கையும், மின் சாரத் தேவையும் ஆண்டுக் காண்டு அதிகரித்து வருகிறது. 1996 ஆம் ஆண்டு 108 லட்ச மாக இருந்த மின் நுகர்வோர் கள் எண்ணிக்கை 2010ல் 212 லட்சமாக அதிகரித்துள்ளது. இதோடு சேர்ந்து மின்சாரத் தேவையும் அதிகரித்து வரு கின்றது. 

தமிழ்நாடு மின்சார வாரி யம், மின் நுகர்வோர்கள் 75 காசு, 85 காசு என மின்சார கட்டணத்தை செலுத்தியவர் கள், இன்றைக்கு குறைந்தபட் சம் 2 ரூபாய் செலுத்த வேண் டும் என்றும் இதுவரை மின் நுகர்வோர்கள் 5 படிகளாக பிரித்து மின்சார கட்டணத்தை செலுத்தியவர்கள், 3 படிகளாக மாற்றப்பட்டும். 600 யூனிட் வரை மின்சாரத்தை நுகர்ந்த வர்களுக்கு மின் கட்டணத் தை செலுத்துவதில் மானியம் என்று இருந்ததை 500 யூனிட் டுகளாக குறைத்தும் 600 யூனிட்டுகளுக்கு மேல் மின் சாரத்தை நுகர்ந்தவர்களுக்கு ரூ.1,100-ஐ மின் கட்டணமாக செலுத்தியவர்கள், கட்டண உயர்வுக்கு பின்னர் ரூ.2,375-ஐ மின் கட்டணமாக செலுத்த வேண்டி அதிரடி உயர்வை அறிவித்து, மின்வாரியத்திற்கு ரூ.8,200 கோடியை நிதியாக திரட்ட மின் கட்டண உயர்வை அனுமதிக்க மின்வாரிய ஒழுங் குமுறை ஆணையத்தை அணுகியுள்ளதை ஏற்று மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார் கள். 

தமிழ்நாடு மின்சார வாரியம் மாநில அரசின் பொதுத்துறை என்ற அடிப்படையில் சேவைத் துறையாக செயல்பட்டு வருகி றது. மேற்கண்ட அதிகரித்து வரும் மின் தேவையை கணக் கில் கொண்டு மாநில அரசு மின் உற்பத்திக்கு திட்டமிட வேண்டியது அவசியமாகும். 


கடந்த 15 ஆண்டுகால (1996-2010) அனுபவத்தை பரி சீலித்தால் தேவைக்கேற்ப மின் உற்பத்திக்கு திட்டமிடாத தும், இதனால் ஏற்படும் மின் பற்றாக்குறையை போக்க தனி யார் மின் உற்பத்தி நிலையங் களில் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கியதும் தான் மின்வாரிய நிதிப்பற்றாக்குறைக்கு காரண மாக அமைந்துள்ளது. 

இவைகளை எல்லாம் பரிசீலிக்காமல் மின் கட் டணத்தை 100 சதவீதத்தி லிருந்து 200 சதவீதம் வரை உயர்த்திட வேண்டுமென மின் வாரியம் ஒழுங்குமுறை ஆணையத் திற்கு மனு செய் துள்ளது ஏற்கத்தக்கதல்ல.

மின்சார வாரியத்திற்கு ரூ.42,175 கோடி நிதிப்பற்றாக் குறைஏற்பட்டிருப்பது உத்தேச மின் கட்டண உயர்வுக்கு கார ணம் என மின்வாரியம் கூறுகி றது. மேலும் இந்தப் பற்றாக் குறை அடுத்த ஆண்டு ரூ. 53,000 கோடியாக உயருமென கூறுகிறது. 

மின் பற்றாக்குறைக்கும், மின் வாரியத்திற்கு ஏற்படும் நிதி பற்றாக்குறைக்கும் நுகர்வோர்கள் காரணம் அல்ல. மின் பற்றாக்குறைக்கும், நிதிப்பற்றாக்குறைக்கும் கடந்த 15 ஆண்டுகாலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசுகள்தான் காரணம்.


அதிகரித்து வரும் மின் தேவையும், மின் பற்றாக்குறையும்

மின்சார உற்பத்தி, மின்நுகர்வோர், மற்றும் மின்உற்பத்திக்கான கடந்த 15 ஆண்டு காலத்திற்கான விவரங்கள்

1996 ஆம் ஆண்டு தமிழக மின்வாரியத்தின் மின் நிறுவுத் திறன் 6,908 மெகாவாட் ஆக இருந்தபோது, மின் பற்றாக்குறை 100 மெகாவாட். 1996 ஆம் ஆண்டு கூடுதல் மின் உற்பத்திக்கு திட்டமிடப்பட்டாலும், அடுத்த 4 ஆண்டுகளில் திட்டம் அமலாக்கப்படவில்லை. ஆனால் ஆண்டுதோறும் தேவை அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. 

2000 ஆம் ஆண்டில் மொத்த மின் உற்பத்தி நிறுவுத்திறன் 7,750 மெகாவாட்டாக இருந்த போது, மின்சாரத்தேவை என்பது 8,050 மெகாவாட்டாக அதிகரித்தது. 1996ல் 100 மெகாவாட் பற்றாக்குறையாக இருந்தது, 2000ல் 300 மெகாவாட்டாக பற்றாக்குறை அதிகரித்துவிட்டது. இதை போன்று கடந்த 15 ஆண்டுகளில் மாநிலத்தை ஆண்ட மூன்று அரசுகளும் மின் தேவைக்கேற்ப கூடுதல் மின் உற்பத்திக்கு திட்டமிடாததும், திட்டமிட்டதை குறிப்பிட்ட காலத்தில் அமலாக்காததுமே 2010ல் 2000 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. இன்றளவும் இந்த பற்றாக்குறை நீடிக்கின்றது.


மின்பற்றாக்குறைக்கும், நிதிப்பற்றாக்குறைக்கும் காரணம் யார்?

நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் யூனிட் ரூ.4.50 காசு என நிர்ணயித்து வாரியம் வசூலிக்கிறது. மின்பற்றாக்குறை உள்ளபோது தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து, அதாவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காயங்குளம் மின் நிலையத்திலிருந்து மின்சார வாரியம் யூனிட் ஒன்றுக்கு ரூ.9.40 காசுக்கும் மேலும் சில தனியார் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ.15, ரூ.17 வரை செலுத்தி மின்சாரத்தை வாங்கி, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்குவதால் வாரியத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. வேறு வகையில் சொன்னால், நடுத்தர மற்றும் உள்நாட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரியம் மானியம் அளிப்பது, வாரிய நிதிப்பற்றாக்குறைக்கு ஒரு காரணமாக உள்ளது.


உதாரணமாக
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கி பன்னாட்டு நிறுவனங்கள் 

உள்பட உயரழுத்த மின் நுகர்வோர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பதால் ஏற்படும் இழப்பு விவரம்:-

1. 2010-2011 ஆம் ஆண்டில் உயர் அழுத்த மின் 

நுகர்வோர்களின் மொத்த மின் நுகர்வு - 20,623 அர

2. உயர் அழுத்த மின் நுகர்வோர்களுக்கு வாரியம்

நிர்ணயித்துள்ள மின்சார கட்டணம் - ரூ. 4.50 

3. 2010-2011 ஆம் ஆண்டில் உயர் அழுத்த மின் 

நுகர்வோர்களிடமிருந்து வாரியத்திற்கு மின் 

கட்டணமாக வசூலானத் தொகை - ரூ.9,280 கோடி


20,623 மில்லியன் யூனிட் மின்சாரம் இதர நிறுவனங்களிடமிருந்து 

வாங்க வாரியம் செலவிடும் தொகை விவரம்


1. வெளி ஆதாரங்களிலிருந்து மின்சாரம்

வாங்குவதற்கு சராசரி 1 யூனிட்டிற்கு 

செலவிடும் தொகை - ரூ. 9

2. 20623 மில்லியன் யூனிட் மின்சாரம் வாங்க

செலவிட்ட தொகை - ரூ.18,650 கோடி

3. மின்நுகர்வோரிடமிருந்து மின் கட்டணமாக

வசூலான தொகை - ரூ.9,280 கோடி

4. வாரியத்திற்கு ஏற்ற இழப்பீடு - ரூ.9,370 கோடி 
மேற்கண்ட விவரத்திலிருந்து வாரியத்திற்கு ரூ.9,320 கோடி நஷ்டம் ஏற்படு கிறது. இந்த நஷ்டத்தை அரசு ஈடுசெய்யாத போது நிதிப்பற்றாக்குறை ஏற்படுகிறது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது வரவேற்கத்தக்கது. அதனால் வாரியத்திற்கு ஏற்படும் வருமான இடைவெளியை அரசு மானியத் தொகை யாக வாரியத்திற்கு முழுமையாக வழங்காததாலும் நிதிப்பற்றாக்குறை ஏற்படுகின்றது. இலவச மின்சாரம் என்ற கொள்கையை வகுத்திட்ட மாநில அரசு தான் மின் வாரியத் திற்கு ஏற்படும் நிதிப்பற்றாக்குறைக்கு பொறுப்பேற்க வேண்டும்.
இலவச மின்சாரம் வழங்குவதை அரசு ஈடுசெய்ய வேண்டும்.
தமிழகஅரசின் கொள்கையின்படி தமிழக விவசாயிகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் இலவச மின்சாரம் வழங்குகிறது. இலவச மின்சாரம் வழங்கிய வகையில் தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்க வேண்டிய மானியம்.
2008-2009 ஆம் ஆண்டிற்குஅரசு வழங்க வேண்டிய மானியம் - ரூ. 4,118 கோடி.
அரசு வழங்கியது - ரூ. 263 கோடி

2009-2010 ஆம் ஆண்டிற்குஅரசு வழங்க வேண்டிய மானியம் - ரூ. 5,828 கோடி.
அரசு வழங்கியது - ரூ. 267 கோடி

தேவைகேற்ப மின் உற்பத்தி செய்யாமல் கூடுதலான விலைக்கு தனியாரிடம் மின்வாரியம் மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் நிதிப்பற்றாக்குறைக்கு மின் நுகர்வோர்கள் பொறுப்பாக முடியாது. எனவே நடுத்தர உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்குவதால் ஏற்படும் நிதிப்பற்றாக்குறையையும், விவசாயிகள் மற்றும் குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு உண்டான தொகையை ஈடுசெய்யாததாலும் ஏற்படும் நிதிப்பற்றாக்குறைக்கு ஏழை, எளிய, நடுத்தர மின் நுகர்வோர்களை மின்வாரியம் தண்டிக்கக் கூடாது. 


மின்சாரத் திருட்டு, இழப்பை கட்டுப்படுத்துவதின் மூலம் பல கோடி ரூபாய் வருமானமாக வரும். கம்பியிழப்பை 17.9 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைத்திட மின் வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வேறுஒரு மனுவில் குறிப்பிட்டுள்ளது. அதற்கான ஆக்கபூர்வமான ஏற்பாட்டைச் செய்தாலே 3 சதவீத மின்சாரம் நமக்கு சேமிப்பாகும். இதனால் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் கூடுதல் விலை கொடுத்து வாங்குவது தவிர்க்கப்படும்.

வாரியத்தின் வருவாயை உறுதிப்படுத்துகின்ற வகையில் தரமான மின் அளவிகளை (மீட்டர்) தேவையான அளவிற்கு பிரிவு அலுவலகங்களுக்கு கிடைக்கச்செய்ய வேண்டும். அதேபோல் வாரியத்தின் பணிகளை அவ்வப்போது கவனிக்க தேவையான மனித உழைப்பை உறுதிசெய்ய வேண்டும். 

நிலக்கரி கூடுதல் விலை கொடுத்து 20 லட்சம் டன் வரை இறக்குமதி செய்கின்றோம். நமது உள்நாட்டு நிலக்கரி ரூ.500 ஆக இருக்கும். 8 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து வாங்குவதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.


இந்த வகையில் செலவினங்களை குறைத்து நிர்வாக திறமையை அதிகரிப்பதின் மூலம் வாரியத்தில் ஏற்பட்டுள்ள நிதி இழப்பை சரிசெய்ய இயலும்.

தமிழகத்தில் தற்சமயம் ஏற்பட்டுள்ள கட்டுக்கடங்காத விலைவாசி ஏற்றம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து நிற்கின்ற நிலை, மின்பற்றாக் குறையும், மின்வெட்டும் தமிழக மக்களை வாட்டி வதைத்துக்கொண்டுள்ள இச்சூழ்நிலையில், இந்த மின்கட்டண உயர்வு ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையாக மாறிவிடும். 


இந்த சூழ்நிலையில் மின்சார வாரியம் உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வு என்பது தமிழக மக்களுக்கு கூடுதலான சுமையாக அமைந்துவிடும் என்பதால் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண உயர்வுக்கு அனுமதி அளிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.                                                                                                                                  
                                                                                                                      ஜி.ராமகிருஷ்ணன்,
_______________________________________________________________________

              தண்ணீர் சிக்கனம் தேவைதான்.இப்படியா மூஞ்சைக் கழுவணும்?
          இதைத்தான் வானில் இருந்து தேவதூதன் இறங்குவதாகக் கூறுகின்றனரோ?
_________________________________________________________________________
இது என்ன ? கண்டு பிடிக்க முடியாதவர்கள் படத்தின் கீழே பாருங்கள்!


 

யானை.தலைப்பகுதியில் தும்பிக்கை முனை வைத்து பிளிறுகிறது.
__________________________________________________________________________________


வியாழன், 29 டிசம்பர், 2011

மாவீரன் பிரபாகரன் தபால் தலை.

பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள தபால் முத்திரைகளைக்[ஸ்டாம்ப்]மேலே காணலாம்.தமிழீழம் ,மாவீரன் பிரபாகரன்,விடுதலைப்புலிகள் கொடி,மற்றும் தமிழீழ தேசிய பறவை,மலர் ஆகியவற்றுடன் தபால் முத்திரைகளை பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.
_________________________________________________


சி.பி.ஐ.-நிலவரம்,


சி.பி.ஐ., 2011ம் ஆண்டிற்கான புள்ளிவிவரத்தின் படி, ஆகஸ்ட் மாதம் வரை, 689 வழக்குகள் மூலம், 911 அரசுப் பணியாளர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் மிக முக்கிய குற்றங்கள் அனைத்தும், மாநில அரசாலோ,நீதிமன்ற ஆணையினாலோ, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்படுகின்றன. சி.பி.ஐ.,யும், தன்னிடம் உள்ள சிறப்புப் பிரிவான, ஊழல் தடுப்புப் பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ், இந்த வழக்குகளை விசாரித்து வருகிறது.
அரசு துறைகளில் நடந்த முறைகேடு தொடர்பாக, இந்தாண்டில் மட்டும், 689 வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்துள்ளது. இதன் மூலம், 911 அரசு பணியாளர்கள் மீது, வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டில் மட்டும், 124 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதிகாரிகள் தவிர, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 1,433 பேர், வழக்குகளில் சிக்கியுள்ளனர்.
அரசு உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க, அந்தந்த துறையிடம் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்காததால், இந்தாண்டில் மட்டும், நாடு முழுவதும், 113 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், மத்திய அரசு அனுமதிக்காக, 97 வழக்குகளும், மாநில அரசு அனுமதிக்காக, 18 வழக்குகளும் காத்திருக்கின்றன. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை, சி.பி.ஐ.,யால் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில், 502 வழக்குகள், கோர்ட் நடவடிக்கையால் முடிவுக்கு வந்துள்ளன. மேலும், மாதந்தோறும், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலுவை வழக்குகள் முடிக்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில், கடந்த ஆகஸ்டில் மட்டும், 29 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வழக்குகள் விவரம் (2011 - ஆகஸ்ட் வரை)
பதியப்பட்ட மொத்த வழக்குகள் 689
அரசு ஊழியர்கள் 911 பேர்
1. "குரூப் ஏ' ஊழியர்கள் 285 பேர்
2. "குரூப் பி முதல் டி' ஊழியர்கள் 325 பேர்
3. வங்கி அதிகாரிகள் 157 பேர்
4. பொதுச்சேவை நிறுவன அதிகாரிகள் 137 பேர்
5. மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர்
தனியாட்கள் 1,433 பேர்
1. முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர்
2. தனியார் நிறுவனங்கள் 302
3. தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் 1,129 பேர்
நிலுவை வழக்குகள்
கடந்த 20 ஆண்டுகளில், சி.பி.ஐ.,யால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 9,996 வழக்குகள், கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இதில் 360 வழக்குகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றன.
முதல் ஐந்து மாநிலங்கள் [சி.பி.ஐ வழக்கு]
1 டில்லி 1,731
2 மகாராஷ்டிரா 1,094
3 உத்தரபிரதேசம் 868
4 மேற்கு வங்கம் 867
5 தமிழகம் 624
______________________________________________________________________

ஆகாஷ்.. மக்களுக்கான கணினி
-பேராசிரியர் கே. ராஜு
2011 அக்டோபர் 5 அன்று இந்திய அரசின் மனிதவள மேம் பாட்டு அமைச்சர் கபில் சிபல் ஆகாஷ் எனப் பெயரிடப்பட்டுள்ள மலிவு விலை ‘டாப்லெட்’ கணி னியை  வெளியிட் டார். அந்நிய முதலீட்டுக்கு ஆரவார மாக ஆரத்திகள் எடுக்கப்படும் இந்த யுகத்தில், இந்தியாவில் இந் திய மக்களுக்காகத் தயாரிக்கப் பட்டு வெளிவந்திருக்கும் இந்தக் கணினியை இருகரம் நீட்டி வரவேற் போம். பட்டவகுப்பு மாணவர்களுக் குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் இது வெளியிடப்பட்டுள் ளது. தகவல் தொழில்நுட்பத் துறை யில் விலை உயர்ந்த கணினிகள் நுழைவினால் அந்தத் துறையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு ஆகாஷ் மிகப் பெரும் அளவில் பயன்பட இருக் கிறது. (மத்திய அரசு அபூர்வமான சில நேரங்களில் ஏழை எளிய மக் களைப் பற்றியும் கவலைப்படு வதுண்டு).


ஏழை மாணவர்களுக்குப் பயன்பட...

மலிவு விலை காரணமாக நலிந்த பிரிவினர் அனைவருக் குமே ஆகாஷ் பயன்படும் என்றா லும், பிரதானமாக இப்பிரிவி லிருந்து வரும் மாணவர்களுக்குப் பயன்படவேண்டும் என்ற நோக்கி லேயே இது தயாரிக்கப்பட்டிருக் கிறது. ஐம்பது சத மானியம் காரண மாக தொடக்கத்தில் மாணவர் களுக்கு 1400 ரூபாய் விலையில் இது கிடைக்க இருக்கிறது. 10 லட் சத்துக்கும் மேல் ஆகாஷின் உற் பத்தி பெருகும்போது, 800-லிருந்து 1000 ரூபாய் விலையில் கூட அது கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இணையதளத் தேடல், இசைக் கருவிகளை இசைத்தல், வீடியோக் கள், வீடியோ விளையாட்டுகள், இ-புத்தகத்தோடு இணைப்பு என மாணவர்கள் ஆர்வத்துக்குத் தீனி போடக் கூடிய பல்வேறு பயன்பாடு கள் கொண்ட மென்பொருள் இணைக்கப்பட்டதாக ஆகாஷ் இருக்கும். 


கடைகளிலும் கிடைக்கும்

ஆகாஷின் வணிகப் பெயர் யுபிஸ்லேட்  அது கடை களில் 3000 ரூபாய்க்கு விரைவில் கிடைக்க இருக்கிறது. இன்று அதே அளவில் உள்ள சிறிய கணினி வாங்க வேண்டுமானால் அதன் விலை 10,000 ரூபாய். சற்று கூடு தல் விலையில் அலைபேசி, கேமரா இணைப்புகளுடன் 7 இன்ச்தொடு திரை, 4 ஜிபி நினைவாற்றலுடன் அது சந்தையில் கிடைக்கும் மற்ற கணினிகளின் தரத்திற்கு எந்த வகையிலும் குறையாமல் கிடைக்க இருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மனிதவள மேம்பாட்டுத் துறை வகுத்த திட்டத்தின் விளைவாகவே ஆகாஷ் சாத்தியமாகியிருக்கிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை மூலம் கல்விக்கான தேசியத் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களை அடைந்தபிறகு இறுதி யாக இந்த சாதனை நிகழ்த்தப்பட் டிருக்கிறது. கணினியின் வடிவ மைப்பு, பயன்பாடுகள் பற்றி முடிவு செய்தபிறகு சோதனைகள் செய்து இறுதிப்படுத்தும் பணி ஜோத்பூர் ஐ.ஐ.டி.-யிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் டேட்டாவைண்ட் என்ற பிரிட்டிஷ் கம்பெனியின் ஹைதரா பாத் கிளையில் ஆகாஷ் தயாரிப்பு தொடங்கியது.

ஐ.ஐ.டி. பட்டதாரியின் சிந்தனையில் உதித்ததிட்டம் 


ராஜஸ்தான் ஐ.ஐ.டி.யின் பட்ட தாரி ஒருவரின் சிந்தனையில் உதித்ததே மலிவு விலை கணினித் தயாரிப்புத் திட்டம் என்பது நம் மையெல்லாம் உற்சாகப்படுத்தும் தகவல். திட்டம் உருவாகி வளர்ச்சி பெறும் கட்டத்திலும் அவர் உறுது ணையாக இருந்தார். நம் நாட்டில் வளர்ந்து வரும் தொழில்முனை வோரையும் புதிய கண்டுபிடிப்பு களை உருவாக்குவோரையும் ஊக்கப்படுத்தும் செய்தி இது.

இணையதளம் மூலம் கற்பிக் கும் திட்டத்தில் 25000 கல்லூரிகளை யும் 400 பல்கலைக்கழகங்களை யும் சூஆநு-ஐஊகூ இணைக்க இருக்கி றது. ஆகாஷின் உதவியுடன் ஒரு மாணவர் 70,000 புத்தகங்கள், 2100 பத்திரிகைகளிலிருந்து தான் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடியும். இணயதளத் தக வல்களின் அடிப்படையில் ஆய்வு களை மேற்கொள்ள முடியும்.

ஆகாஷ் கணினியின் செயல் பாட்டை மேம்படுத்தும் யோசனை களை தங்களது இணையதளத்தில்  பின் னூட்டமாகத் தெரிவிக்க லாம் என மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்திருக்கிறது.

                                                                       கட்டுரை உதவி: சயன்ஸ் ரிப்போர்ட்டரில் ஆர்.டி. ரிக்காரி 

_______________________________________________________________________


           காங்கிரஸ்கொண்டு வந்த லோக்பால் மசோதா நிலைதானா மீசைக்கும்?                  _____________________________________________________________________


                                                        பூனைப் படம் நல்லாயிருக்கா?
______________________________________________________________________________


                          டென்மார்க்கில் ஒரு மாதத்திற்கு முன் பிறந்த பனிக்கரடி.
தாய்க் கரடிக்கு பால் சுரக்காததால் நம்ம ஊர் குழந்தைகள் போல் புட்டி பால்தானாம்.
_________________________________________________________________________________உலகின் 10 சிறப்பான அசுத்த நகரங்கள்,


பாக்தாத்[ஈராக்]
10 most polluted cities in the world01
புருனே[தாருஸ்லாம்]
10 most polluted cities in the world02
டாக்கா[வங்க தேசம்]
10 most polluted cities in the world03
கராச்சி[பாகிஸ்தான்]
10 most polluted cities in the world04
லாகோஸ்[நைஜிரியா]
10 most polluted cities in the world05
மெக்சிகோ[மெக்சிகோ]
10 most polluted cities in the world06
மாஸ்கோ[ரஷ்யா]
10 most polluted cities in the world07
மபுடோ[மொசாம்பியா]
10 most polluted cities in the world08
மும்பை[இந்தியா]
10 most polluted cities in the world09
புது தில்லி[இந்தியா]
10 most polluted cities in the world10
நமது இந்தியா இந்த பட்டியலில் இரு இடங்களை கைப்பற்றியுள்ளது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடியது.
_________________________________________________________________________________

புதன், 28 டிசம்பர், 2011

லோக் பால் வரைவு,


 1968 முதல் இன்று வரை 
லோக்பால் மசோதா, உணவுப்பாதுகாப்பு மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. டிசம்பர் 27ம் தேதி துவங்கி மூன்று நாட்களும் விவாதம் நடைபெற உள் ளது. இதற்காக நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டுள்ளது.


இம் மசோதாக்கள் குறித்து பரபரப்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது இயல்பான தொன்றே. பிறப்பிலிருந்து இறப்பு வரை இந் தியாவில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பது ஊழல். இந்திய மக்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து நிலை களிலும் ஊழலைச் சந்தித்து வருகிறார்கள்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தான் முன்வைத்துள்ளபடி இம்மசோதா அமைய வேண்டுமென வலியுறுத்தி மும்பையில் மூன்று நாட்கள் உண்ணாவிரதப்போராட் டத்தை துவக்கியுள்ளார். தில்லி ராம்லீலா மைதானத்தில் ஹசாரே குழுவினர் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்து கின்றனர்.

லோக்பால் மசோதாவை பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் சட்டம், நீதித்துறை தொடர்பான நிலைக்குழு செப்டம்பர் 23 முதல் டிசம்பர் 2வதுவாரம் வரை சுமார் இரண்டரை மாதங்கள் செலவிட்டு உருவாக் கியுள்ளது. நிலைக் குழுவின் முன்பு 140 பேர் ஆஜராகி இம் மசோதா குறித்து சுமார் 40 மணி நேரம் தங்களது பரிந்துரைகள், ஆலோ சனைகளை முன்வைத்துள்ளனர்.


லோக்பால் மசோதாவின் பூர்வீகம் நீண்ட நெடிய ஒன்றாகும். 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர் திருத்த ஆணையம், லோக்பால் அமைப்பு உருவாக்கவேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தியது. அதன் பின்னர் மத்திய அரசு மாநிலங்களவையிலும் மக்களவையிலும் 1968, 1971,1977,1985,1989,1996,1998 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் லோக்பால் அமைப்பிற் கான மசோதாக்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

இந்தப் பின்னணியில்தான் 2011ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி அமைச்சரவை இம் மசோதாவை உருவாக்க ஒப்புதல் அளித்தது. லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட வேண் டுமென்று இடதுசாரிக்கட்சிகள் தொடர்ச்சி யாக குரல் கொடுத்து வந்துள்ளன. அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்களும் இந்தப் பிரச்சனையை சமீபத்தில் கையி லெடுத்தனர். இவர்களது பின்னணி என்ன வென்று அறியாவிட்டாலும் கூட மக்கள் இவர்களது கோரிக்கைக்கு ஆதரவளித் தனர். ஊழலுக்கு எதிராக மக்களிடம் எழுந் துள்ள விழிப்புணர்வு மற்றும் எதிர்ப்புணர் வின் வெளிப்பாடே ஆகும் இது.

லோக்பால் மசோதாவின் நகல் டிசம்பர் 22அன்று நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு வழங்கப்பட்டது. 62 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதாவில் 15 பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. மத்திய அளவில் லோக் பால் அமைப்பையும், மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பையும் உருவாக்குவதற் கான பரிந்துரைகள் இம் மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த மசோதா நிறைவேறுமா? என்ற ஐயப்பாட்டை ஊடகங்கள் எழுப்பிக்கொண் டிருக்கின்றன. மக்களவையில் இந்த மசோதா நிறைவேற வேண்டுமானால் 543 உறுப்பினர் களில் 277 உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். மக்களவையில் மசோதாவை நிறைவேற்றுவதற்கான பலம் ஐக்கிய முற் போக்குக்கூட்டணிக்கு உள்ளது. மசோதா எந்த வடிவில் வந்தாலும் அதை ஆதரிக்க திமுக, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட் சிகள் தயாராக உள்ளன. அரசுக்கு நெருக் கடி ஏற்படும்போதெல்லாம் கை கொடுக்கும் ஆர்ஜேடி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் மசோதாவை ஆதரிக்க வில்லை என்றாலும் கூட மசோதா நிறை வேறும் வாய்ப்பு உள்ளது.


ஆனால் மாநிலங்களவையில் மசோ தாவை நிறைவேற்றுவதற்கான பலம் ஐ.மு. கூட்டணிக்கு இல்லை. எதிர்க்கட்சியான பாஜக ஆதரித்தால்தான் மசோதாவை நிறை வேற்ற முடியும். சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால் மசோதாவை எதிர்ப் பதாக பாஜக கூறியுள்ளது. ஆர்ஜேடி போன்ற கட்சிகளும் வேறு சில காரணங் களைக் கூறி மசோதாவை எதிர்ப்பதாகக் கூறுகின்றன.

மகளிர் இடஒதுக்கீடு மசேதா மாநிலங் களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் இம் மசோதாவை நிறைவேற்ற விடாமல் ஆர்ஜேடி, சமாஜ்வாதி போன்ற கட் சிகள் தடுத்துவிட்டன என்பது முந்தைய அனுபவம். இதைச் சாக்காக வைத்து, கருத் தொற்றுமை ஏற்படுத்தப்போவதாககக் கூறி மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டது மன் மோகன்சிங் அரசு.

மசோதாவை தயாரிப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடத்தக்க பங்காற் றியுள்ளது. நிலையாணைக்குழுவில் இடம் பெற்றிருந்ததின் மூலம் பல்வேறு ஆலோ சனைகளை கட்சி முன்வைத்துள்ளது. எனி னும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத் துக்கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முன்மொழிந்த சில தீர்மானங் கள் ஏற்கப்பட்டன. அது எந்த வடிவில் உள் ளது என்பது விவாதத்தின்போதே வெளிச் சத்திற்கு வரும். மார்க்சிஸ்ட் கட்சி தமது ஆலோசனைகள், திருத்தங்களை எழுத்துப் பூர்வமாக அளித்துள்ளது.

இதே போன்று பல்வேறு கட்சிகள் தங் களது திருத்தங்கள், கருத்துக்களை முன் வைத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியை பொறுத்தவரை சில முக்கியமான ஆலோசனைகளை முன்வைத்தது.

1. பிரதமர் பதவியையும் லோக்பால் விசா ரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்.

2. நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். அதற்கு தடையாக உள்ள அரசியல் சாசனத்தின் 105வது பிரிவில் உரிய மாற்றம் செய்ய வேண்டும்.

3. மத்திய மற்றும் மாநில அரசு நிலை யில் குரூப்-ஏ, குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி அதிகாரிகளை விசாரணை வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். மத்திய அரசு அதிகாரிகளை லோக்பால் வரம்பிற்குள்ளும், மாநில அரசு அதிகாரிகளை லோக் அயுக்தா விசாரணை வரம்பிற்குள்ளும் கொண்டுவர வேண்டும்.

4. லோக்பால் அமைப்பின் தலைவர் உட்பட, சுதந்திரமான தேர்வுக்குழுவின் தேர்வு அடிப்படையிலேயே நியமிக்கப்பட வேண்டும்.

5. மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்க தனி மசோதா தாக்கல் செய் யப்பட வேண்டும்.

மத்திய புலனாய்வுத்துறை இயக்குநர் நியமனம், லோக்பால் தேர்வுக்குழு பரிந்துரை அடிப்படையிலேயே நடைபெற வேண்டும்.

6.ஊழல் குறித்த வரையறையில் தெளி வில்லை. 1988ஆம் ஆண்டு உருவாக்கப் பட்ட ஊழல் தடுப்புச்சட்டத்தின் அடிப்படை யிலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே உரிய வகையில் ஊழல் குறித்த வரையறை செய்யப்பட வேண்டும்.

7. மிக முக்கியமாக பெரும் முதலாளி களையும், அவர்களது நிறுவனங்களையும் லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். தவறிழைக்கும் நிறுவனங்களின் உரிமம் மற்றும் குத்தகையை ரத்து செய்யவேண்டும். இழப்பீட்டுத் தொகையை அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். ஊழலில் ஈடுபடும் நிறுவனங் களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அரசு கஜானாவில் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியத் திருத்தங்களை மார்க்சிஸ்ட் கட்சி முன்மொழிந்துள்ளது. விவாதத்தின்போதும் முன்வைக்கும்.

இம்மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பு அரசியல் சாசன திருத்தத்தை அரசு முன்மொழிந்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. பலவீனமான லோக்பால் அமைப்பையே அரசு விரும்பு கிறதோ என்ற ஐயப்பாடு எழும்புகிறது.


எதிர்க்கட்சியான பாஜக மற்றும் சில கட்சிகள் எதிர்க்கும் வேகத்தைப் பார்க்கும் போது மசோதா நிறைவேறுமா? என்ற கேள்வி வலுவாகவே எழுகிறது.

லோக்பால் அமைப்பை உருவாக்கு வதற்கான போராட்டம் 1968ல் அதாவது 20ம் நூற்றாண்டில் துவங்கி இந்த நூற்றாண்டு வரை நடைபெற்று வருகிறது. இம் மசோதா வலுவான லோக்பால் அமைப்பை உரு வாக்கும் வகையில் நிறைவேற்றப்பட வேண்டு மென்று இந்திய மக்கள் எதிர்பார்க்கி றார்கள். அவர்களது விருப்பம் நிறை வேறுமா? என்பது இரண்டொரு நாளில் தெரிந்துவிடும்.

                                                                                                                        - டி.கே.ரங்கராஜன் எம்.பி.,
______________________________________________________________

 'ஜன கண மன'-க்கு நூறு வயது.
 கொல்கத்தாவில் மிகச் சரியாக நூறு வருடங்கள் முன்புதான் இப்பாடல் பாடப்பட்டது. பின்பு இது பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் இந்தியாவின் தேசிய கீதமாக அங்கிகரிக்கப்பட்டது.

இந்தப் பாடலை இயற்றிய வங்காள கவி ரவீந்திரநாத் தாகூர்தான், இலக்கியத்துக்காக நோபெல் பரிசு வென்ற முதல் ஆசியர் ஆவார்.
1911ஆம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில்தான் இப் பாடல் முதன்முதலில் பாடப்பட்டது.
இப்போது அரசு நிகழ்ச்சிகளிலும் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் ஒரு பாடலாக 'ஜன கண மன' இருக்கிறது.
'ஜன கண மன'வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலாச்சார அமைப்பொன்று ஏற்பாடு செய்த வேளையில், இந்தியாவின் வட கிழக்குப் பகுதி இந்தப் பாடலில் இருந்து விடுபட்டுள்ளது அதனையும் இப்பாடல் வரிகளில் சேர்க்க வேண்டுமென அசாம் மாநிலத்தில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

"பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த இந்தியப் பகுதிகள்தான் இந்தப் பாடலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வட கிழக்கு பிரதேசத்தில் பெரும் பகுதி பிரிட்டிஷ் ஆட்சிக்கு வெளியில் இருந்ததால் அப்பிரதேசம் இப்பாடலின் வரிகளில் இடம்பெறவில்லை.வட கிழக்கு பிரதேசத்தையும் பாடலில் சேர்த்தால், அப்பகுதி மக்களுக்கு இருக்கக்கூடிய தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என்ற உணர்வு தணிய உதவும்’ என அஸ்ஸாமைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குமார் தீபக் தாஸ் கூறுகிறார்.
இந்தப் பாடல் வரியில் இருந்து சிந்துவை நீக்கிவிட்டு காஷ்மீரை சேர்க்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

தேசிய கீதப் போட்டி

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகஇந்தப் பாடல் பற்றி சர்ச்சை இருந்தது.இப்பாடல்பிரிட்டிஷ்இளவரசரை வரவேற்று எழுதப்பட்ட பாடல்,பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அடி
வணக்கும் பாடல் இது என்று ஆதாரக்களுடன் வாதிடப்பட்டது.எனவே இப்பாடலை தேசிய கீதமாக ஆக்கக்கூடாது என்று வாதிட்டனர்.பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' என்ற பாடலைத்தான் தேசிய கீதமாக அறிவிக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

ஆனாலும் காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரால்தான் 'ஜன கண மன' தேசிய கீதமாகவும் 'வந்தே மாதரம்' தேசியப் பாடலாகவும் அறிவிக்கப்பட்டன.
அது சரி.கீதத்திற்கும்,பாடலுக்கும் என்ன வித்தியாசம்?
____________________________________________________________________________________________________________
இளம் மேதை.
image photo : Maths formulas
கணித மேதை சீனிவாச ராமானுஜன்
எல்லாவிதமான விஞ்ஞான தத்துவங்களுக்கும் கணக்கே அடிப்படை. அப்படியான அடிப்படை விஞ்ஞானமான கணிதத்தில் அகில உலக கவனத்தையும் ஈர்த்த மேதை ராமானுஜன்.
தமிழ்நாட்டின் ஈரோட்டில் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து, கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை துவங்கிய ராமானுஜன் ஆரம்பம் முதலே கணிதத்தில் மிகப்பெரும் புலமையை வெளிப்படுத்தினார். பள்ளி செல்லும் மாணவனாக அவர் இருந்தபோதே, கல்லூரி மாணவர்களுக்கான கணித பாடங்களை சுயமாக படித்து எளிதில் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆற்றல் பெற்றிருந்தார்.
ஆனால் அவரால் மற்ற பாடங்களுக்கான தேர்வுகளில் முறையாக தேர முடியாமல் தடுமாறிய சம்பவங்களும் நடந்தன. அத்தகைய தடைகளையும் மீறி, பிற்காலத்தில் உலக கணித மேதைகளில் ஒருவராக அவர் பரிணமித்தார்.
மிகச்சிறிய வயதில், அதாவது தனது 32வது வயதில் இறந்த அவருடைய கணித சூத்திரங்கள் இருபதாம் நூற்றாண்டு கணித வளர்ச்சியில் முக்கிய பங்காற்றின என்பது மட்டுமல்ல, இருபத்தியோராம் நூற்றாண்டிலும் கணித வல்லுநர்களுக்கு தூண்டுகோலாகவும் விளங்கி வருகிறது.


.கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் 125 ஆவது ஆண்டைகொண்டாடும் இப்போது கூட ஆயிரக்கணக்கான அவரது கணித புதிர்களுக்கு விடை காணமுடியவில்லை என்பதுதான் உண்மை.
_
_________________________________________________________________________________________________________
பனியிலான கிருத்துவ கோவில்.

உள்ளே......


வட கொரிய தலைவர் உடல் அடக்கம்,,,
ரஷ்யா விமானம் தீ விபத்து.இதில் 31 பயணிகள் காய மடைந்துள்ளனர்.     [இன்று மாலை 7.45]

__________________________________________________________________________________________________________
2011ம் ஆண்டு சாதனை படைத்த தொழில்நுட்பங்கள்

^ 2011ஆம் ஆண்டில் சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியையும், சில நிறுவனங்கள் கொண்டு வந்த தொழில் நுட்பங்கள் வெற்றியையும்பெற்றிருந்தன.  சிலவற்றை பார்ப்போம்:-
  
ஆப்பிள் நிறுவனத்தின் சிரி(Siri): ஆப்பிள் நிறுவனம் வழங்கிய ஐபோன் 4S மக்கள் எதிர்பார்த்த பல மாற்றங்களுடன் வரவேற்பைப் பெற்றது.
வேகமாக இயங்கும் ப்ராசசர், சிறந்த அம்சங்களுடன் கூடிய கமெரா ஆகியவை இருந்தன. ஆனால் ஒரு பெரிய மாற்றத்தைத் தந்து கொண்டிருக்கும் சிரி என்னும் தொழில்நுட்பத்தினை ஆப்பிள் இந்த போனில் கொடுத்தது.
நம் ஒலி வழி தரும்(Voice Command) கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயல்படுத்துவதுடன் பதில் அளிக்கவும் செய்கிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோ போன்களில் இந்த வகை வசதி இருந்தாலும், ஒலி வழி தருவதில் அவை பல வரையறைகளைக் கொண்டுள்ளன.

ஆனால் ஐபோன் இயற்கையான மொழி வழியை எளிதில் உணர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆர்ட்டிபிசியல் இன்டலி ஜென்ஸ்(Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன் இப்போது நம் பாக்கெட்டில் ஐபோன் 4S உடன் கிடைக்கிறது.
வரும் ஆண்டில் இது இன்னும் பல சாதனங்களில் கிடைக்கும். தொழில் நுட்பமும் மேம்பாடு அடையும். கணணகளில் இதனைப் பயன்படுத்துகையில் பேசியே கட்டளைகளைத் தர முடியும்.
 சாம்சங் கேலக்ஸி போன்கள்: ஸ்மார்ட் போன்களைத் தருவதில் ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி, சாம்சங் நிறுவனமும் சில சாதனைகளை ஏற்படுத்தியது.
மிகக் குறைவான தடிமனில் ஆண்ட்ராட்ய்ட் சிஸ்டத்துடன் வடிவமைக்கப்பட்டு இவை வெளிவந்து சாதனையை ஏற்படுத்தின. இது வரும் ஆண்டிலும் தொடரும். மேலும் பல மேம்பாடுகளை அடையும்.
 ஆப்பிள் ஐ-பேட் 2: தடிமன் குறைவாக, மிகக் குறைவான எடையில் ஐ-பேட் 2 சாதனத்தைக் கொண்டு வந்து தன்னுடைய போட்டியாளர்களைக் கதி கலங்க வைத்தது ஆப்பிள் நிறுவனம். ஏனென்றால் மற்ற நிறுவனங்கள் அப்போது தான் தங்களுடைய டேப்ளட் பிசியை எப்படி வடிவமக்கலாம் என்பது குறித்து சிந்தித்து வந்தன.
அந்த போட்டி நிறுவனங்கள் விழித்துக் கொண்டு தங்களுடைய டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வந்த போது ஆப்பிள் டேப்ளட் பிசி என்றால் ஐ-பேட் 2 தான் என ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்டோபர் 2011ல் இவற்றின் விற்பனை 4 கோடியை எட்டியது உலக சாதனை. இந்த ஆண்டிலும் இது தொடரும்.

 விண்டோஸ் போன்: மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் போன், ஆப்பிள் ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்ட் எதிர்த்து இடம் பெறுமா என்பது ஐயம் என்றாலும், விண்டோஸ் போன் அறிமுகம், இவற்றிற்கு எதிராக, சரியான காய் நகர்த்தல் என்றே அனைவரும் கருதுகின்றனர்.
2010ல் முழுமை அடையாத ஒரு விண்டோஸ் போன் மென்பொருள் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டாலும் அடுத்த ஆண்டில் முழுமையான போன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் போன் சிஸ்டத்தைக் கொண்டு வந்தது.
Copy and Paste வசதி, ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை இயக்கும் திறன், எச்.டி.எம்.எல். 5க்கான சப்போர்ட், முன்பக்க கமெரா சப்போர்ட் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன.
நோக்கியா நிறுவனத்துடன் விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் போன்களைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் மேற்கொண்ட ஒப்பந்தம் இதனை இன்னும் வேகமாக மக்களிடையே கொண்டு வரும் முயற்சியானது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மொபைல் உலகில் ஒரு திருப்புமுனையை விண்டோஸ் போன் ஏற்படுத்தியது. வரும் ஆண்டில் இது ஓர் ஆதிக்க நிலையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 கூகுள் ப்ளஸ்: ஒருவழியாக 2011ல் பிரச்னை இல்லாத சமுதாய தளம் ஒன்றை கூகுள், கூகுள் ப்ளஸ் என்ற பெயரில் ஏற்படுத்தியது.
சிறிது நாட்களிலேயே இதற்கு 4 கோடி வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்தது. இந்த வகையில் முன்னணியில் இயங்கும் தளமான பேஸ்புக் தளத்திற்கு இணையான, போட்டியான செயலாக இது அறியப்பட்டது.

ஆர்குட் போன்ற தளங்கள் தர முடியாத போட்டியை கூகுள் ப்ளஸ், பேஸ்புக் தளத்திற்கு தந்தது. வரும் ஆண்டில் இவை இரண்டு மட்டுமே இந்த வகையில் போட்டியில் இருக்கும் நிலை ஏற்படும்.
 கூகுள் குரோம்: மெல்ல மெல்ல தன் நிலையை உறுதி செய்து இன்று, பயர்பொக்ஸ் பிரவுசருக்குப் போட்டியாக அதன் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது கூகுள் குரோம் பிரவுசர்.
நவம்பர் மாதம் பிரவுசர் போட்டியில் பயர்பொக்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது உண்மை. வரும் ஆண்டில், தன் பங்கினை மேலும் உயர்த்த பல புதிய பரிமாணங்களுடன் குரோம் பிரவுசர் வரலாம்.