அந்த 14 -வது நபர்,.?


அமெரிக்காவை எதிர்த்தால் புற்றுநோய் வரும்?


அமெரிக்கா தனக்கு வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு ரகசியமாக புற்றுநோயைப் பரப்பி வருகின்றது என தான் சந்தேகம் கொண்டுள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி ஹூகோ சாவேஸ் கூறிள்ளார்.
இடதுசாரியும்-அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளரான சாவேஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரைப் போன்றே இடது சாரிகளும்,அமெரிக்க எதிர்ப்பாளர்களுமான தென் அமெரிக்க நாடுகள் அதிபர்களான பரகுவே ஜனாதிபதி பெர்ணான்டோ லுகோ, பிரேசில் ஜனாதிபதி டில்மா ரௌசெப், பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வா ஆகியோரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுஆர்ஜென்டீனா ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்ணான்டஸிற்கும் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இடது சாரிகள்-அமெரிக்க எதிர்ப்பாளர்கள் என கூறப்படும் அனைவரையும் குறி வைத்து புற்று நோய் தாக்கி வருவதை அடுத்து” எவர் மீதும் குற்றச்சாட்டு கூற நான் விரும்பவில்லை.அமெரிக்கா நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இவ்வாறு நோயைப் பரப்பியிருந்தால், அது மிகக் கொடூரமான செயல். உண்மையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாதுமேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள இடதுசாரித் தலைவர்களுக்கு மட்டும்தொடர்ந்து இதுபோன்று நிகழ்ந்து வருவதை இயல்பானது என்று கூறி முற்றிலுமாக ஒதுக்கிவிடவும் முடியாதுகடந்த 1946- 48-ம் ஆண்டுகளில் கௌதமலா சிறையில் கைதிகளை வைத்து பாலியல் தொடர்பான நோய்களைப் பரப்புவது எப்படி என்று ஆய்வு செய்த நாடுதான் அமெரிக்கா .கிய்ய்பா அதிபர் காஸ்ட்ரோவை பல விடம்,கிருமிகள் பரப்பி கொல்ல முயன்றது அமெரிக்கா என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.என்று சாவேஸ் கூறியுள்ளார்.
______________________________________________________________________
அந்த 14 வது மனிதர் யாராயிருக்கும்?
அயல் நாட்டு வங்களில் கருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஒருவரின் பெயர் இடம்பெற்றுள்ளது என்று மாநிலங்களவையில் ராம் ஜெத்மலானி குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் ஊழலை ஒழிக்கும் லோக்பால் சட்ட வரைவின் மீது  பேசியபோது ராம் ஜெத்மலானி இவ்வாறு கூறினார்.வழக்கம் போல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.
“அயல் நாட்டு வங்கியில் இரகசியக் கணக்கு வைத்து அதில் கருப்பு பணத்தைப் போட்டு வைத்திருப்பவர்கள் 14 பேரின் பட்டியலை சுவிட்சர்லாந்து இதழ் ஒன்று வெளியிட்டது. அதில் வெட்கட்கேடான விடயம் என்னவெனில் அப்பட்டியலில் இருந்து 14வது மனிதர் இந்தியாவின் முன்னாள் பிரதமர்” என்று ஜெத்மலானி தகவல்வெளியிட்டார்.
ஜெத்மலானி குறிப்பிடுவது காங்கிரசின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைத்தான் என்பதைகாங்கிரஸ் உறுப்பினர்கள் அறிந்து கொண்டனர். புரிந்துகொண்ட காங்கிரஸ் கட்சியினர், அவர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கூச்சலிட்டனர்.ஆனால் பத்திரிக்கையில் வெளிவந்த ஆதாரபூர்வ செய்தியைத்தான் கூறியதாக ஜெத்மலானி அமைதியுடன் கூறிவிட்டார்.
ஆமாம்.அந்த 14 வது நபர் அதுவும் முன்னாள் பிரதமர் யாராயிருக்கும்?
________________________________________________________________________
புதிய தலைவர்,
வடகொரியாவின் தலைநகர் பியொங்யாங்கில் பெருமளவு மக்கள் முன்பாக கிம் யாங் இல் அவர்களின் இளைய மகன் நாட்டின் தலைவராக பிரகடனம் செய்யப்பட்டார்.

தனது தந்தையின் நினைவு ஆராதனைக்கு தலைமையேற்ற கிம் யாங் உன் அவர்களுக்கு இராணுவ மற்றும் கட்சியின் உயர் தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
லட்சக்கணக்கான மக்கள் முன்பாக அவரைப் போற்றும் பிரகடனம் படிக்கப்பட்டது. அப்போது மைய சதுக்கத்தில் மக்கள் எல்லாம் தலை சாய்த்து வணக்கம் செலுத்தினார்கள்.
தேசம், இராணுவம் மற்றும் ஆளும் தொழிலாளர் கட்சியின் புதிய அதியுயர் தலைவராக கிம் யாங் உன் போற்றப்பட்டார்.
தனது தந்தையைப் போன்ற கொள்கை மற்றும் குணாதிசயங்களை கொண்டவர் அவர் என்று விவரிக்கப்பட்டார்.
 முப்பது வயதுக்குட்பட்டவர் கிம் யாங் உன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகத்தான் நாட்டு மக்களுக்கு அறிமுகமானார்.
கிம் யாங் உன்னிற்கு ஒரு நாட்டை வழிநடத்தும் தகுதி, திறமை, அனுபவம் பற்றி மக்களுக்கு சந்தேகம் உள்ள போதும் இவரை தனது வாரிசாக அறிவித்திருந்தார் கிம் யாங் இல்.

நாட்டின் அதியுயர் தலைவர் பதவியில் கிம் யாங் உன் இருந்தாலும் அவரது அதிகாரம் மிக்க மாமாவான ஜங் சொங் தேக் தான் உண்மையான அதிகார மையமாக விளங்குவார் என்று தென்கொரியா கருத்து வெளியிட்டுள்ளது.
________________________________________________________________________________
அதிரவைக்கும் மின்கட்டண உயர்வுதேவையா?
         தமிழகத்தில் மின் நுகர் வோர் எண்ணிக்கையும், மின் சாரத் தேவையும் ஆண்டுக் காண்டு அதிகரித்து வருகிறது. 1996 ஆம் ஆண்டு 108 லட்ச மாக இருந்த மின் நுகர்வோர் கள் எண்ணிக்கை 2010ல் 212 லட்சமாக அதிகரித்துள்ளது. இதோடு சேர்ந்து மின்சாரத் தேவையும் அதிகரித்து வரு கின்றது. 

தமிழ்நாடு மின்சார வாரி யம், மின் நுகர்வோர்கள் 75 காசு, 85 காசு என மின்சார கட்டணத்தை செலுத்தியவர் கள், இன்றைக்கு குறைந்தபட் சம் 2 ரூபாய் செலுத்த வேண் டும் என்றும் இதுவரை மின் நுகர்வோர்கள் 5 படிகளாக பிரித்து மின்சார கட்டணத்தை செலுத்தியவர்கள், 3 படிகளாக மாற்றப்பட்டும். 600 யூனிட் வரை மின்சாரத்தை நுகர்ந்த வர்களுக்கு மின் கட்டணத் தை செலுத்துவதில் மானியம் என்று இருந்ததை 500 யூனிட் டுகளாக குறைத்தும் 600 யூனிட்டுகளுக்கு மேல் மின் சாரத்தை நுகர்ந்தவர்களுக்கு ரூ.1,100-ஐ மின் கட்டணமாக செலுத்தியவர்கள், கட்டண உயர்வுக்கு பின்னர் ரூ.2,375-ஐ மின் கட்டணமாக செலுத்த வேண்டி அதிரடி உயர்வை அறிவித்து, மின்வாரியத்திற்கு ரூ.8,200 கோடியை நிதியாக திரட்ட மின் கட்டண உயர்வை அனுமதிக்க மின்வாரிய ஒழுங் குமுறை ஆணையத்தை அணுகியுள்ளதை ஏற்று மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார் கள். 

தமிழ்நாடு மின்சார வாரியம் மாநில அரசின் பொதுத்துறை என்ற அடிப்படையில் சேவைத் துறையாக செயல்பட்டு வருகி றது. மேற்கண்ட அதிகரித்து வரும் மின் தேவையை கணக் கில் கொண்டு மாநில அரசு மின் உற்பத்திக்கு திட்டமிட வேண்டியது அவசியமாகும். 


கடந்த 15 ஆண்டுகால (1996-2010) அனுபவத்தை பரி சீலித்தால் தேவைக்கேற்ப மின் உற்பத்திக்கு திட்டமிடாத தும், இதனால் ஏற்படும் மின் பற்றாக்குறையை போக்க தனி யார் மின் உற்பத்தி நிலையங் களில் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கியதும் தான் மின்வாரிய நிதிப்பற்றாக்குறைக்கு காரண மாக அமைந்துள்ளது. 

இவைகளை எல்லாம் பரிசீலிக்காமல் மின் கட் டணத்தை 100 சதவீதத்தி லிருந்து 200 சதவீதம் வரை உயர்த்திட வேண்டுமென மின் வாரியம் ஒழுங்குமுறை ஆணையத் திற்கு மனு செய் துள்ளது ஏற்கத்தக்கதல்ல.

மின்சார வாரியத்திற்கு ரூ.42,175 கோடி நிதிப்பற்றாக் குறைஏற்பட்டிருப்பது உத்தேச மின் கட்டண உயர்வுக்கு கார ணம் என மின்வாரியம் கூறுகி றது. மேலும் இந்தப் பற்றாக் குறை அடுத்த ஆண்டு ரூ. 53,000 கோடியாக உயருமென கூறுகிறது. 

மின் பற்றாக்குறைக்கும், மின் வாரியத்திற்கு ஏற்படும் நிதி பற்றாக்குறைக்கும் நுகர்வோர்கள் காரணம் அல்ல. மின் பற்றாக்குறைக்கும், நிதிப்பற்றாக்குறைக்கும் கடந்த 15 ஆண்டுகாலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசுகள்தான் காரணம்.


அதிகரித்து வரும் மின் தேவையும், மின் பற்றாக்குறையும்

மின்சார உற்பத்தி, மின்நுகர்வோர், மற்றும் மின்உற்பத்திக்கான கடந்த 15 ஆண்டு காலத்திற்கான விவரங்கள்

1996 ஆம் ஆண்டு தமிழக மின்வாரியத்தின் மின் நிறுவுத் திறன் 6,908 மெகாவாட் ஆக இருந்தபோது, மின் பற்றாக்குறை 100 மெகாவாட். 1996 ஆம் ஆண்டு கூடுதல் மின் உற்பத்திக்கு திட்டமிடப்பட்டாலும், அடுத்த 4 ஆண்டுகளில் திட்டம் அமலாக்கப்படவில்லை. ஆனால் ஆண்டுதோறும் தேவை அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. 

2000 ஆம் ஆண்டில் மொத்த மின் உற்பத்தி நிறுவுத்திறன் 7,750 மெகாவாட்டாக இருந்த போது, மின்சாரத்தேவை என்பது 8,050 மெகாவாட்டாக அதிகரித்தது. 1996ல் 100 மெகாவாட் பற்றாக்குறையாக இருந்தது, 2000ல் 300 மெகாவாட்டாக பற்றாக்குறை அதிகரித்துவிட்டது. இதை போன்று கடந்த 15 ஆண்டுகளில் மாநிலத்தை ஆண்ட மூன்று அரசுகளும் மின் தேவைக்கேற்ப கூடுதல் மின் உற்பத்திக்கு திட்டமிடாததும், திட்டமிட்டதை குறிப்பிட்ட காலத்தில் அமலாக்காததுமே 2010ல் 2000 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. இன்றளவும் இந்த பற்றாக்குறை நீடிக்கின்றது.


மின்பற்றாக்குறைக்கும், நிதிப்பற்றாக்குறைக்கும் காரணம் யார்?

நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் யூனிட் ரூ.4.50 காசு என நிர்ணயித்து வாரியம் வசூலிக்கிறது. மின்பற்றாக்குறை உள்ளபோது தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து, அதாவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காயங்குளம் மின் நிலையத்திலிருந்து மின்சார வாரியம் யூனிட் ஒன்றுக்கு ரூ.9.40 காசுக்கும் மேலும் சில தனியார் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ.15, ரூ.17 வரை செலுத்தி மின்சாரத்தை வாங்கி, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்குவதால் வாரியத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. வேறு வகையில் சொன்னால், நடுத்தர மற்றும் உள்நாட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரியம் மானியம் அளிப்பது, வாரிய நிதிப்பற்றாக்குறைக்கு ஒரு காரணமாக உள்ளது.


உதாரணமாக
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கி பன்னாட்டு நிறுவனங்கள் 

உள்பட உயரழுத்த மின் நுகர்வோர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பதால் ஏற்படும் இழப்பு விவரம்:-

1. 2010-2011 ஆம் ஆண்டில் உயர் அழுத்த மின் 

நுகர்வோர்களின் மொத்த மின் நுகர்வு - 20,623 அர

2. உயர் அழுத்த மின் நுகர்வோர்களுக்கு வாரியம்

நிர்ணயித்துள்ள மின்சார கட்டணம் - ரூ. 4.50 

3. 2010-2011 ஆம் ஆண்டில் உயர் அழுத்த மின் 

நுகர்வோர்களிடமிருந்து வாரியத்திற்கு மின் 

கட்டணமாக வசூலானத் தொகை - ரூ.9,280 கோடி


20,623 மில்லியன் யூனிட் மின்சாரம் இதர நிறுவனங்களிடமிருந்து 

வாங்க வாரியம் செலவிடும் தொகை விவரம்


1. வெளி ஆதாரங்களிலிருந்து மின்சாரம்

வாங்குவதற்கு சராசரி 1 யூனிட்டிற்கு 

செலவிடும் தொகை - ரூ. 9

2. 20623 மில்லியன் யூனிட் மின்சாரம் வாங்க

செலவிட்ட தொகை - ரூ.18,650 கோடி

3. மின்நுகர்வோரிடமிருந்து மின் கட்டணமாக

வசூலான தொகை - ரூ.9,280 கோடி

4. வாரியத்திற்கு ஏற்ற இழப்பீடு - ரூ.9,370 கோடி 
மேற்கண்ட விவரத்திலிருந்து வாரியத்திற்கு ரூ.9,320 கோடி நஷ்டம் ஏற்படு கிறது. இந்த நஷ்டத்தை அரசு ஈடுசெய்யாத போது நிதிப்பற்றாக்குறை ஏற்படுகிறது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது வரவேற்கத்தக்கது. அதனால் வாரியத்திற்கு ஏற்படும் வருமான இடைவெளியை அரசு மானியத் தொகை யாக வாரியத்திற்கு முழுமையாக வழங்காததாலும் நிதிப்பற்றாக்குறை ஏற்படுகின்றது. இலவச மின்சாரம் என்ற கொள்கையை வகுத்திட்ட மாநில அரசு தான் மின் வாரியத் திற்கு ஏற்படும் நிதிப்பற்றாக்குறைக்கு பொறுப்பேற்க வேண்டும்.
இலவச மின்சாரம் வழங்குவதை அரசு ஈடுசெய்ய வேண்டும்.
தமிழகஅரசின் கொள்கையின்படி தமிழக விவசாயிகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் இலவச மின்சாரம் வழங்குகிறது. இலவச மின்சாரம் வழங்கிய வகையில் தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்க வேண்டிய மானியம்.
2008-2009 ஆம் ஆண்டிற்குஅரசு வழங்க வேண்டிய மானியம் - ரூ. 4,118 கோடி.
அரசு வழங்கியது - ரூ. 263 கோடி

2009-2010 ஆம் ஆண்டிற்குஅரசு வழங்க வேண்டிய மானியம் - ரூ. 5,828 கோடி.
அரசு வழங்கியது - ரூ. 267 கோடி

தேவைகேற்ப மின் உற்பத்தி செய்யாமல் கூடுதலான விலைக்கு தனியாரிடம் மின்வாரியம் மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் நிதிப்பற்றாக்குறைக்கு மின் நுகர்வோர்கள் பொறுப்பாக முடியாது. எனவே நடுத்தர உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்குவதால் ஏற்படும் நிதிப்பற்றாக்குறையையும், விவசாயிகள் மற்றும் குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு உண்டான தொகையை ஈடுசெய்யாததாலும் ஏற்படும் நிதிப்பற்றாக்குறைக்கு ஏழை, எளிய, நடுத்தர மின் நுகர்வோர்களை மின்வாரியம் தண்டிக்கக் கூடாது. 


மின்சாரத் திருட்டு, இழப்பை கட்டுப்படுத்துவதின் மூலம் பல கோடி ரூபாய் வருமானமாக வரும். கம்பியிழப்பை 17.9 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைத்திட மின் வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வேறுஒரு மனுவில் குறிப்பிட்டுள்ளது. அதற்கான ஆக்கபூர்வமான ஏற்பாட்டைச் செய்தாலே 3 சதவீத மின்சாரம் நமக்கு சேமிப்பாகும். இதனால் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் கூடுதல் விலை கொடுத்து வாங்குவது தவிர்க்கப்படும்.

வாரியத்தின் வருவாயை உறுதிப்படுத்துகின்ற வகையில் தரமான மின் அளவிகளை (மீட்டர்) தேவையான அளவிற்கு பிரிவு அலுவலகங்களுக்கு கிடைக்கச்செய்ய வேண்டும். அதேபோல் வாரியத்தின் பணிகளை அவ்வப்போது கவனிக்க தேவையான மனித உழைப்பை உறுதிசெய்ய வேண்டும். 

நிலக்கரி கூடுதல் விலை கொடுத்து 20 லட்சம் டன் வரை இறக்குமதி செய்கின்றோம். நமது உள்நாட்டு நிலக்கரி ரூ.500 ஆக இருக்கும். 8 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து வாங்குவதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.


இந்த வகையில் செலவினங்களை குறைத்து நிர்வாக திறமையை அதிகரிப்பதின் மூலம் வாரியத்தில் ஏற்பட்டுள்ள நிதி இழப்பை சரிசெய்ய இயலும்.

தமிழகத்தில் தற்சமயம் ஏற்பட்டுள்ள கட்டுக்கடங்காத விலைவாசி ஏற்றம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து நிற்கின்ற நிலை, மின்பற்றாக் குறையும், மின்வெட்டும் தமிழக மக்களை வாட்டி வதைத்துக்கொண்டுள்ள இச்சூழ்நிலையில், இந்த மின்கட்டண உயர்வு ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையாக மாறிவிடும். 


இந்த சூழ்நிலையில் மின்சார வாரியம் உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வு என்பது தமிழக மக்களுக்கு கூடுதலான சுமையாக அமைந்துவிடும் என்பதால் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண உயர்வுக்கு அனுமதி அளிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.                                                                                                                                  
                                                                                                                      ஜி.ராமகிருஷ்ணன்,
_______________________________________________________________________

              தண்ணீர் சிக்கனம் தேவைதான்.இப்படியா மூஞ்சைக் கழுவணும்?
          இதைத்தான் வானில் இருந்து தேவதூதன் இறங்குவதாகக் கூறுகின்றனரோ?
_________________________________________________________________________
இது என்ன ? கண்டு பிடிக்க முடியாதவர்கள் படத்தின் கீழே பாருங்கள்!


 

யானை.தலைப்பகுதியில் தும்பிக்கை முனை வைத்து பிளிறுகிறது.
__________________________________________________________________________________


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?