புதன், 28 டிசம்பர், 2011

லோக் பால் வரைவு,


 1968 முதல் இன்று வரை 
லோக்பால் மசோதா, உணவுப்பாதுகாப்பு மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. டிசம்பர் 27ம் தேதி துவங்கி மூன்று நாட்களும் விவாதம் நடைபெற உள் ளது. இதற்காக நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டுள்ளது.


இம் மசோதாக்கள் குறித்து பரபரப்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது இயல்பான தொன்றே. பிறப்பிலிருந்து இறப்பு வரை இந் தியாவில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பது ஊழல். இந்திய மக்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து நிலை களிலும் ஊழலைச் சந்தித்து வருகிறார்கள்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தான் முன்வைத்துள்ளபடி இம்மசோதா அமைய வேண்டுமென வலியுறுத்தி மும்பையில் மூன்று நாட்கள் உண்ணாவிரதப்போராட் டத்தை துவக்கியுள்ளார். தில்லி ராம்லீலா மைதானத்தில் ஹசாரே குழுவினர் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்து கின்றனர்.

லோக்பால் மசோதாவை பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் சட்டம், நீதித்துறை தொடர்பான நிலைக்குழு செப்டம்பர் 23 முதல் டிசம்பர் 2வதுவாரம் வரை சுமார் இரண்டரை மாதங்கள் செலவிட்டு உருவாக் கியுள்ளது. நிலைக் குழுவின் முன்பு 140 பேர் ஆஜராகி இம் மசோதா குறித்து சுமார் 40 மணி நேரம் தங்களது பரிந்துரைகள், ஆலோ சனைகளை முன்வைத்துள்ளனர்.


லோக்பால் மசோதாவின் பூர்வீகம் நீண்ட நெடிய ஒன்றாகும். 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர் திருத்த ஆணையம், லோக்பால் அமைப்பு உருவாக்கவேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தியது. அதன் பின்னர் மத்திய அரசு மாநிலங்களவையிலும் மக்களவையிலும் 1968, 1971,1977,1985,1989,1996,1998 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் லோக்பால் அமைப்பிற் கான மசோதாக்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

இந்தப் பின்னணியில்தான் 2011ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி அமைச்சரவை இம் மசோதாவை உருவாக்க ஒப்புதல் அளித்தது. லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட வேண் டுமென்று இடதுசாரிக்கட்சிகள் தொடர்ச்சி யாக குரல் கொடுத்து வந்துள்ளன. அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்களும் இந்தப் பிரச்சனையை சமீபத்தில் கையி லெடுத்தனர். இவர்களது பின்னணி என்ன வென்று அறியாவிட்டாலும் கூட மக்கள் இவர்களது கோரிக்கைக்கு ஆதரவளித் தனர். ஊழலுக்கு எதிராக மக்களிடம் எழுந் துள்ள விழிப்புணர்வு மற்றும் எதிர்ப்புணர் வின் வெளிப்பாடே ஆகும் இது.

லோக்பால் மசோதாவின் நகல் டிசம்பர் 22அன்று நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு வழங்கப்பட்டது. 62 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதாவில் 15 பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. மத்திய அளவில் லோக் பால் அமைப்பையும், மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பையும் உருவாக்குவதற் கான பரிந்துரைகள் இம் மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த மசோதா நிறைவேறுமா? என்ற ஐயப்பாட்டை ஊடகங்கள் எழுப்பிக்கொண் டிருக்கின்றன. மக்களவையில் இந்த மசோதா நிறைவேற வேண்டுமானால் 543 உறுப்பினர் களில் 277 உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். மக்களவையில் மசோதாவை நிறைவேற்றுவதற்கான பலம் ஐக்கிய முற் போக்குக்கூட்டணிக்கு உள்ளது. மசோதா எந்த வடிவில் வந்தாலும் அதை ஆதரிக்க திமுக, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட் சிகள் தயாராக உள்ளன. அரசுக்கு நெருக் கடி ஏற்படும்போதெல்லாம் கை கொடுக்கும் ஆர்ஜேடி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் மசோதாவை ஆதரிக்க வில்லை என்றாலும் கூட மசோதா நிறை வேறும் வாய்ப்பு உள்ளது.


ஆனால் மாநிலங்களவையில் மசோ தாவை நிறைவேற்றுவதற்கான பலம் ஐ.மு. கூட்டணிக்கு இல்லை. எதிர்க்கட்சியான பாஜக ஆதரித்தால்தான் மசோதாவை நிறை வேற்ற முடியும். சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால் மசோதாவை எதிர்ப் பதாக பாஜக கூறியுள்ளது. ஆர்ஜேடி போன்ற கட்சிகளும் வேறு சில காரணங் களைக் கூறி மசோதாவை எதிர்ப்பதாகக் கூறுகின்றன.

மகளிர் இடஒதுக்கீடு மசேதா மாநிலங் களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் இம் மசோதாவை நிறைவேற்ற விடாமல் ஆர்ஜேடி, சமாஜ்வாதி போன்ற கட் சிகள் தடுத்துவிட்டன என்பது முந்தைய அனுபவம். இதைச் சாக்காக வைத்து, கருத் தொற்றுமை ஏற்படுத்தப்போவதாககக் கூறி மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டது மன் மோகன்சிங் அரசு.

மசோதாவை தயாரிப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடத்தக்க பங்காற் றியுள்ளது. நிலையாணைக்குழுவில் இடம் பெற்றிருந்ததின் மூலம் பல்வேறு ஆலோ சனைகளை கட்சி முன்வைத்துள்ளது. எனி னும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத் துக்கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முன்மொழிந்த சில தீர்மானங் கள் ஏற்கப்பட்டன. அது எந்த வடிவில் உள் ளது என்பது விவாதத்தின்போதே வெளிச் சத்திற்கு வரும். மார்க்சிஸ்ட் கட்சி தமது ஆலோசனைகள், திருத்தங்களை எழுத்துப் பூர்வமாக அளித்துள்ளது.

இதே போன்று பல்வேறு கட்சிகள் தங் களது திருத்தங்கள், கருத்துக்களை முன் வைத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியை பொறுத்தவரை சில முக்கியமான ஆலோசனைகளை முன்வைத்தது.

1. பிரதமர் பதவியையும் லோக்பால் விசா ரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்.

2. நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். அதற்கு தடையாக உள்ள அரசியல் சாசனத்தின் 105வது பிரிவில் உரிய மாற்றம் செய்ய வேண்டும்.

3. மத்திய மற்றும் மாநில அரசு நிலை யில் குரூப்-ஏ, குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி அதிகாரிகளை விசாரணை வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். மத்திய அரசு அதிகாரிகளை லோக்பால் வரம்பிற்குள்ளும், மாநில அரசு அதிகாரிகளை லோக் அயுக்தா விசாரணை வரம்பிற்குள்ளும் கொண்டுவர வேண்டும்.

4. லோக்பால் அமைப்பின் தலைவர் உட்பட, சுதந்திரமான தேர்வுக்குழுவின் தேர்வு அடிப்படையிலேயே நியமிக்கப்பட வேண்டும்.

5. மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்க தனி மசோதா தாக்கல் செய் யப்பட வேண்டும்.

மத்திய புலனாய்வுத்துறை இயக்குநர் நியமனம், லோக்பால் தேர்வுக்குழு பரிந்துரை அடிப்படையிலேயே நடைபெற வேண்டும்.

6.ஊழல் குறித்த வரையறையில் தெளி வில்லை. 1988ஆம் ஆண்டு உருவாக்கப் பட்ட ஊழல் தடுப்புச்சட்டத்தின் அடிப்படை யிலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே உரிய வகையில் ஊழல் குறித்த வரையறை செய்யப்பட வேண்டும்.

7. மிக முக்கியமாக பெரும் முதலாளி களையும், அவர்களது நிறுவனங்களையும் லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். தவறிழைக்கும் நிறுவனங்களின் உரிமம் மற்றும் குத்தகையை ரத்து செய்யவேண்டும். இழப்பீட்டுத் தொகையை அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். ஊழலில் ஈடுபடும் நிறுவனங் களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அரசு கஜானாவில் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியத் திருத்தங்களை மார்க்சிஸ்ட் கட்சி முன்மொழிந்துள்ளது. விவாதத்தின்போதும் முன்வைக்கும்.

இம்மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பு அரசியல் சாசன திருத்தத்தை அரசு முன்மொழிந்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. பலவீனமான லோக்பால் அமைப்பையே அரசு விரும்பு கிறதோ என்ற ஐயப்பாடு எழும்புகிறது.


எதிர்க்கட்சியான பாஜக மற்றும் சில கட்சிகள் எதிர்க்கும் வேகத்தைப் பார்க்கும் போது மசோதா நிறைவேறுமா? என்ற கேள்வி வலுவாகவே எழுகிறது.

லோக்பால் அமைப்பை உருவாக்கு வதற்கான போராட்டம் 1968ல் அதாவது 20ம் நூற்றாண்டில் துவங்கி இந்த நூற்றாண்டு வரை நடைபெற்று வருகிறது. இம் மசோதா வலுவான லோக்பால் அமைப்பை உரு வாக்கும் வகையில் நிறைவேற்றப்பட வேண்டு மென்று இந்திய மக்கள் எதிர்பார்க்கி றார்கள். அவர்களது விருப்பம் நிறை வேறுமா? என்பது இரண்டொரு நாளில் தெரிந்துவிடும்.

                                                                                                                        - டி.கே.ரங்கராஜன் எம்.பி.,
______________________________________________________________

 'ஜன கண மன'-க்கு நூறு வயது.
 கொல்கத்தாவில் மிகச் சரியாக நூறு வருடங்கள் முன்புதான் இப்பாடல் பாடப்பட்டது. பின்பு இது பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் இந்தியாவின் தேசிய கீதமாக அங்கிகரிக்கப்பட்டது.

இந்தப் பாடலை இயற்றிய வங்காள கவி ரவீந்திரநாத் தாகூர்தான், இலக்கியத்துக்காக நோபெல் பரிசு வென்ற முதல் ஆசியர் ஆவார்.
1911ஆம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில்தான் இப் பாடல் முதன்முதலில் பாடப்பட்டது.
இப்போது அரசு நிகழ்ச்சிகளிலும் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் ஒரு பாடலாக 'ஜன கண மன' இருக்கிறது.
'ஜன கண மன'வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலாச்சார அமைப்பொன்று ஏற்பாடு செய்த வேளையில், இந்தியாவின் வட கிழக்குப் பகுதி இந்தப் பாடலில் இருந்து விடுபட்டுள்ளது அதனையும் இப்பாடல் வரிகளில் சேர்க்க வேண்டுமென அசாம் மாநிலத்தில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

"பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த இந்தியப் பகுதிகள்தான் இந்தப் பாடலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வட கிழக்கு பிரதேசத்தில் பெரும் பகுதி பிரிட்டிஷ் ஆட்சிக்கு வெளியில் இருந்ததால் அப்பிரதேசம் இப்பாடலின் வரிகளில் இடம்பெறவில்லை.வட கிழக்கு பிரதேசத்தையும் பாடலில் சேர்த்தால், அப்பகுதி மக்களுக்கு இருக்கக்கூடிய தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என்ற உணர்வு தணிய உதவும்’ என அஸ்ஸாமைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குமார் தீபக் தாஸ் கூறுகிறார்.
இந்தப் பாடல் வரியில் இருந்து சிந்துவை நீக்கிவிட்டு காஷ்மீரை சேர்க்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

தேசிய கீதப் போட்டி

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகஇந்தப் பாடல் பற்றி சர்ச்சை இருந்தது.இப்பாடல்பிரிட்டிஷ்இளவரசரை வரவேற்று எழுதப்பட்ட பாடல்,பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அடி
வணக்கும் பாடல் இது என்று ஆதாரக்களுடன் வாதிடப்பட்டது.எனவே இப்பாடலை தேசிய கீதமாக ஆக்கக்கூடாது என்று வாதிட்டனர்.பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' என்ற பாடலைத்தான் தேசிய கீதமாக அறிவிக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

ஆனாலும் காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரால்தான் 'ஜன கண மன' தேசிய கீதமாகவும் 'வந்தே மாதரம்' தேசியப் பாடலாகவும் அறிவிக்கப்பட்டன.
அது சரி.கீதத்திற்கும்,பாடலுக்கும் என்ன வித்தியாசம்?
____________________________________________________________________________________________________________
இளம் மேதை.
image photo : Maths formulas
கணித மேதை சீனிவாச ராமானுஜன்
எல்லாவிதமான விஞ்ஞான தத்துவங்களுக்கும் கணக்கே அடிப்படை. அப்படியான அடிப்படை விஞ்ஞானமான கணிதத்தில் அகில உலக கவனத்தையும் ஈர்த்த மேதை ராமானுஜன்.
தமிழ்நாட்டின் ஈரோட்டில் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து, கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை துவங்கிய ராமானுஜன் ஆரம்பம் முதலே கணிதத்தில் மிகப்பெரும் புலமையை வெளிப்படுத்தினார். பள்ளி செல்லும் மாணவனாக அவர் இருந்தபோதே, கல்லூரி மாணவர்களுக்கான கணித பாடங்களை சுயமாக படித்து எளிதில் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஆற்றல் பெற்றிருந்தார்.
ஆனால் அவரால் மற்ற பாடங்களுக்கான தேர்வுகளில் முறையாக தேர முடியாமல் தடுமாறிய சம்பவங்களும் நடந்தன. அத்தகைய தடைகளையும் மீறி, பிற்காலத்தில் உலக கணித மேதைகளில் ஒருவராக அவர் பரிணமித்தார்.
மிகச்சிறிய வயதில், அதாவது தனது 32வது வயதில் இறந்த அவருடைய கணித சூத்திரங்கள் இருபதாம் நூற்றாண்டு கணித வளர்ச்சியில் முக்கிய பங்காற்றின என்பது மட்டுமல்ல, இருபத்தியோராம் நூற்றாண்டிலும் கணித வல்லுநர்களுக்கு தூண்டுகோலாகவும் விளங்கி வருகிறது.


.கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் 125 ஆவது ஆண்டைகொண்டாடும் இப்போது கூட ஆயிரக்கணக்கான அவரது கணித புதிர்களுக்கு விடை காணமுடியவில்லை என்பதுதான் உண்மை.
_
_________________________________________________________________________________________________________
பனியிலான கிருத்துவ கோவில்.

உள்ளே......


வட கொரிய தலைவர் உடல் அடக்கம்,,,
ரஷ்யா விமானம் தீ விபத்து.இதில் 31 பயணிகள் காய மடைந்துள்ளனர்.     [இன்று மாலை 7.45]

__________________________________________________________________________________________________________
2011ம் ஆண்டு சாதனை படைத்த தொழில்நுட்பங்கள்

^ 2011ஆம் ஆண்டில் சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியையும், சில நிறுவனங்கள் கொண்டு வந்த தொழில் நுட்பங்கள் வெற்றியையும்பெற்றிருந்தன.  சிலவற்றை பார்ப்போம்:-
  
ஆப்பிள் நிறுவனத்தின் சிரி(Siri): ஆப்பிள் நிறுவனம் வழங்கிய ஐபோன் 4S மக்கள் எதிர்பார்த்த பல மாற்றங்களுடன் வரவேற்பைப் பெற்றது.
வேகமாக இயங்கும் ப்ராசசர், சிறந்த அம்சங்களுடன் கூடிய கமெரா ஆகியவை இருந்தன. ஆனால் ஒரு பெரிய மாற்றத்தைத் தந்து கொண்டிருக்கும் சிரி என்னும் தொழில்நுட்பத்தினை ஆப்பிள் இந்த போனில் கொடுத்தது.
நம் ஒலி வழி தரும்(Voice Command) கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயல்படுத்துவதுடன் பதில் அளிக்கவும் செய்கிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோ போன்களில் இந்த வகை வசதி இருந்தாலும், ஒலி வழி தருவதில் அவை பல வரையறைகளைக் கொண்டுள்ளன.

ஆனால் ஐபோன் இயற்கையான மொழி வழியை எளிதில் உணர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆர்ட்டிபிசியல் இன்டலி ஜென்ஸ்(Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன் இப்போது நம் பாக்கெட்டில் ஐபோன் 4S உடன் கிடைக்கிறது.
வரும் ஆண்டில் இது இன்னும் பல சாதனங்களில் கிடைக்கும். தொழில் நுட்பமும் மேம்பாடு அடையும். கணணகளில் இதனைப் பயன்படுத்துகையில் பேசியே கட்டளைகளைத் தர முடியும்.
 சாம்சங் கேலக்ஸி போன்கள்: ஸ்மார்ட் போன்களைத் தருவதில் ஆப்பிள் நிறுவனம் மட்டுமின்றி, சாம்சங் நிறுவனமும் சில சாதனைகளை ஏற்படுத்தியது.
மிகக் குறைவான தடிமனில் ஆண்ட்ராட்ய்ட் சிஸ்டத்துடன் வடிவமைக்கப்பட்டு இவை வெளிவந்து சாதனையை ஏற்படுத்தின. இது வரும் ஆண்டிலும் தொடரும். மேலும் பல மேம்பாடுகளை அடையும்.
 ஆப்பிள் ஐ-பேட் 2: தடிமன் குறைவாக, மிகக் குறைவான எடையில் ஐ-பேட் 2 சாதனத்தைக் கொண்டு வந்து தன்னுடைய போட்டியாளர்களைக் கதி கலங்க வைத்தது ஆப்பிள் நிறுவனம். ஏனென்றால் மற்ற நிறுவனங்கள் அப்போது தான் தங்களுடைய டேப்ளட் பிசியை எப்படி வடிவமக்கலாம் என்பது குறித்து சிந்தித்து வந்தன.
அந்த போட்டி நிறுவனங்கள் விழித்துக் கொண்டு தங்களுடைய டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வந்த போது ஆப்பிள் டேப்ளட் பிசி என்றால் ஐ-பேட் 2 தான் என ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்டோபர் 2011ல் இவற்றின் விற்பனை 4 கோடியை எட்டியது உலக சாதனை. இந்த ஆண்டிலும் இது தொடரும்.

 விண்டோஸ் போன்: மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் போன், ஆப்பிள் ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்ட் எதிர்த்து இடம் பெறுமா என்பது ஐயம் என்றாலும், விண்டோஸ் போன் அறிமுகம், இவற்றிற்கு எதிராக, சரியான காய் நகர்த்தல் என்றே அனைவரும் கருதுகின்றனர்.
2010ல் முழுமை அடையாத ஒரு விண்டோஸ் போன் மென்பொருள் தொகுப்பினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டாலும் அடுத்த ஆண்டில் முழுமையான போன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் போன் சிஸ்டத்தைக் கொண்டு வந்தது.
Copy and Paste வசதி, ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளை இயக்கும் திறன், எச்.டி.எம்.எல். 5க்கான சப்போர்ட், முன்பக்க கமெரா சப்போர்ட் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன.
நோக்கியா நிறுவனத்துடன் விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் போன்களைக் கொண்டு வர மைக்ரோசாப்ட் மேற்கொண்ட ஒப்பந்தம் இதனை இன்னும் வேகமாக மக்களிடையே கொண்டு வரும் முயற்சியானது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மொபைல் உலகில் ஒரு திருப்புமுனையை விண்டோஸ் போன் ஏற்படுத்தியது. வரும் ஆண்டில் இது ஓர் ஆதிக்க நிலையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 கூகுள் ப்ளஸ்: ஒருவழியாக 2011ல் பிரச்னை இல்லாத சமுதாய தளம் ஒன்றை கூகுள், கூகுள் ப்ளஸ் என்ற பெயரில் ஏற்படுத்தியது.
சிறிது நாட்களிலேயே இதற்கு 4 கோடி வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்தது. இந்த வகையில் முன்னணியில் இயங்கும் தளமான பேஸ்புக் தளத்திற்கு இணையான, போட்டியான செயலாக இது அறியப்பட்டது.

ஆர்குட் போன்ற தளங்கள் தர முடியாத போட்டியை கூகுள் ப்ளஸ், பேஸ்புக் தளத்திற்கு தந்தது. வரும் ஆண்டில் இவை இரண்டு மட்டுமே இந்த வகையில் போட்டியில் இருக்கும் நிலை ஏற்படும்.
 கூகுள் குரோம்: மெல்ல மெல்ல தன் நிலையை உறுதி செய்து இன்று, பயர்பொக்ஸ் பிரவுசருக்குப் போட்டியாக அதன் இடத்தைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது கூகுள் குரோம் பிரவுசர்.
நவம்பர் மாதம் பிரவுசர் போட்டியில் பயர்பொக்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது உண்மை. வரும் ஆண்டில், தன் பங்கினை மேலும் உயர்த்த பல புதிய பரிமாணங்களுடன் குரோம் பிரவுசர் வரலாம்.