மாவீரன் பிரபாகரன் தபால் தலை.
பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள தபால் முத்திரைகளைக்[ஸ்டாம்ப்]மேலே காணலாம்.தமிழீழம் ,மாவீரன் பிரபாகரன்,விடுதலைப்புலிகள் கொடி,மற்றும் தமிழீழ தேசிய பறவை,மலர் ஆகியவற்றுடன் தபால் முத்திரைகளை பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.
_________________________________________________
சி.பி.ஐ.-நிலவரம்,
சி.பி.ஐ., 2011ம் ஆண்டிற்கான புள்ளிவிவரத்தின் படி, ஆகஸ்ட் மாதம் வரை, 689 வழக்குகள் மூலம், 911 அரசுப் பணியாளர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் மிக முக்கிய குற்றங்கள் அனைத்தும், மாநில அரசாலோ,நீதிமன்ற ஆணையினாலோ, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்படுகின்றன. சி.பி.ஐ.,யும், தன்னிடம் உள்ள சிறப்புப் பிரிவான, ஊழல் தடுப்புப் பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ், இந்த வழக்குகளை விசாரித்து வருகிறது.
அரசு துறைகளில் நடந்த முறைகேடு தொடர்பாக, இந்தாண்டில் மட்டும், 689 வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்துள்ளது. இதன் மூலம், 911 அரசு பணியாளர்கள் மீது, வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டில் மட்டும், 124 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதிகாரிகள் தவிர, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 1,433 பேர், வழக்குகளில் சிக்கியுள்ளனர்.
அரசு உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க, அந்தந்த துறையிடம் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்காததால், இந்தாண்டில் மட்டும், நாடு முழுவதும், 113 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், மத்திய அரசு அனுமதிக்காக, 97 வழக்குகளும், மாநில அரசு அனுமதிக்காக, 18 வழக்குகளும் காத்திருக்கின்றன. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை, சி.பி.ஐ.,யால் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில், 502 வழக்குகள், கோர்ட் நடவடிக்கையால் முடிவுக்கு வந்துள்ளன. மேலும், மாதந்தோறும், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலுவை வழக்குகள் முடிக்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில், கடந்த ஆகஸ்டில் மட்டும், 29 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வழக்குகள் விவரம் (2011 - ஆகஸ்ட் வரை)
பதியப்பட்ட மொத்த வழக்குகள் 689
அரசு ஊழியர்கள் 911 பேர்
1. "குரூப் ஏ' ஊழியர்கள் 285 பேர்
2. "குரூப் பி முதல் டி' ஊழியர்கள் 325 பேர்
3. வங்கி அதிகாரிகள் 157 பேர்
4. பொதுச்சேவை நிறுவன அதிகாரிகள் 137 பேர்
5. மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர்
தனியாட்கள் 1,433 பேர்
1. முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர்
2. தனியார் நிறுவனங்கள் 302
3. தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் 1,129 பேர்
நிலுவை வழக்குகள்
கடந்த 20 ஆண்டுகளில், சி.பி.ஐ.,யால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 9,996 வழக்குகள், கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இதில் 360 வழக்குகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றன.
முதல் ஐந்து மாநிலங்கள் [சி.பி.ஐ வழக்கு]
1 டில்லி 1,731
2 மகாராஷ்டிரா 1,094
3 உத்தரபிரதேசம் 868
4 மேற்கு வங்கம் 867
5 தமிழகம் 624
______________________________________________________________________
ஆகாஷ்.. மக்களுக்கான கணினி |
-பேராசிரியர் கே. ராஜு |
2011 அக்டோபர் 5 அன்று இந்திய அரசின் மனிதவள மேம் பாட்டு அமைச்சர் கபில் சிபல் ஆகாஷ் எனப் பெயரிடப்பட்டுள்ள மலிவு விலை ‘டாப்லெட்’ கணி னியை வெளியிட் டார். அந்நிய முதலீட்டுக்கு ஆரவார மாக ஆரத்திகள் எடுக்கப்படும் இந்த யுகத்தில், இந்தியாவில் இந் திய மக்களுக்காகத் தயாரிக்கப் பட்டு வெளிவந்திருக்கும் இந்தக் கணினியை இருகரம் நீட்டி வரவேற் போம். பட்டவகுப்பு மாணவர்களுக் குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் இது வெளியிடப்பட்டுள் ளது. தகவல் தொழில்நுட்பத் துறை யில் விலை உயர்ந்த கணினிகள் நுழைவினால் அந்தத் துறையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு ஆகாஷ் மிகப் பெரும் அளவில் பயன்பட இருக் கிறது. (மத்திய அரசு அபூர்வமான சில நேரங்களில் ஏழை எளிய மக் களைப் பற்றியும் கவலைப்படு வதுண்டு).
ஏழை மாணவர்களுக்குப் பயன்பட... மலிவு விலை காரணமாக நலிந்த பிரிவினர் அனைவருக் குமே ஆகாஷ் பயன்படும் என்றா லும், பிரதானமாக இப்பிரிவி லிருந்து வரும் மாணவர்களுக்குப் பயன்படவேண்டும் என்ற நோக்கி லேயே இது தயாரிக்கப்பட்டிருக் கிறது. ஐம்பது சத மானியம் காரண மாக தொடக்கத்தில் மாணவர் களுக்கு 1400 ரூபாய் விலையில் இது கிடைக்க இருக்கிறது. 10 லட் சத்துக்கும் மேல் ஆகாஷின் உற் பத்தி பெருகும்போது, 800-லிருந்து 1000 ரூபாய் விலையில் கூட அது கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இணையதளத் தேடல், இசைக் கருவிகளை இசைத்தல், வீடியோக் கள், வீடியோ விளையாட்டுகள், இ-புத்தகத்தோடு இணைப்பு என மாணவர்கள் ஆர்வத்துக்குத் தீனி போடக் கூடிய பல்வேறு பயன்பாடு கள் கொண்ட மென்பொருள் இணைக்கப்பட்டதாக ஆகாஷ் இருக்கும். கடைகளிலும் கிடைக்கும் ஆகாஷின் வணிகப் பெயர் யுபிஸ்லேட் அது கடை களில் 3000 ரூபாய்க்கு விரைவில் கிடைக்க இருக்கிறது. இன்று அதே அளவில் உள்ள சிறிய கணினி வாங்க வேண்டுமானால் அதன் விலை 10,000 ரூபாய். சற்று கூடு தல் விலையில் அலைபேசி, கேமரா இணைப்புகளுடன் 7 இன்ச்தொடு திரை, 4 ஜிபி நினைவாற்றலுடன் அது சந்தையில் கிடைக்கும் மற்ற கணினிகளின் தரத்திற்கு எந்த வகையிலும் குறையாமல் கிடைக்க இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மனிதவள மேம்பாட்டுத் துறை வகுத்த திட்டத்தின் விளைவாகவே ஆகாஷ் சாத்தியமாகியிருக்கிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை மூலம் கல்விக்கான தேசியத் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களை அடைந்தபிறகு இறுதி யாக இந்த சாதனை நிகழ்த்தப்பட் டிருக்கிறது. கணினியின் வடிவ மைப்பு, பயன்பாடுகள் பற்றி முடிவு செய்தபிறகு சோதனைகள் செய்து இறுதிப்படுத்தும் பணி ஜோத்பூர் ஐ.ஐ.டி.-யிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் டேட்டாவைண்ட் என்ற பிரிட்டிஷ் கம்பெனியின் ஹைதரா பாத் கிளையில் ஆகாஷ் தயாரிப்பு தொடங்கியது. ஐ.ஐ.டி. பட்டதாரியின் சிந்தனையில் உதித்ததிட்டம் ராஜஸ்தான் ஐ.ஐ.டி.யின் பட்ட தாரி ஒருவரின் சிந்தனையில் உதித்ததே மலிவு விலை கணினித் தயாரிப்புத் திட்டம் என்பது நம் மையெல்லாம் உற்சாகப்படுத்தும் தகவல். திட்டம் உருவாகி வளர்ச்சி பெறும் கட்டத்திலும் அவர் உறுது ணையாக இருந்தார். நம் நாட்டில் வளர்ந்து வரும் தொழில்முனை வோரையும் புதிய கண்டுபிடிப்பு களை உருவாக்குவோரையும் ஊக்கப்படுத்தும் செய்தி இது. இணையதளம் மூலம் கற்பிக் கும் திட்டத்தில் 25000 கல்லூரிகளை யும் 400 பல்கலைக்கழகங்களை யும் சூஆநு-ஐஊகூ இணைக்க இருக்கி றது. ஆகாஷின் உதவியுடன் ஒரு மாணவர் 70,000 புத்தகங்கள், 2100 பத்திரிகைகளிலிருந்து தான் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடியும். இணயதளத் தக வல்களின் அடிப்படையில் ஆய்வு களை மேற்கொள்ள முடியும். ஆகாஷ் கணினியின் செயல் பாட்டை மேம்படுத்தும் யோசனை களை தங்களது இணையதளத்தில் பின் னூட்டமாகத் தெரிவிக்க லாம் என மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்திருக்கிறது. கட்டுரை உதவி: சயன்ஸ் ரிப்போர்ட்டரில் ஆர்.டி. ரிக்காரி |
_______________________________________________________________________
காங்கிரஸ்கொண்டு வந்த லோக்பால் மசோதா நிலைதானா மீசைக்கும்?
_____________________________________________________________________
பூனைப் படம் நல்லாயிருக்கா?
______________________________________________________________________________
டென்மார்க்கில் ஒரு மாதத்திற்கு முன் பிறந்த பனிக்கரடி.
தாய்க் கரடிக்கு பால் சுரக்காததால் நம்ம ஊர் குழந்தைகள் போல் புட்டி பால்தானாம்.
_________________________________________________________________________________