இடுகைகள்

மே, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வைரஸ் வந்த பென் டிரைவ்..

படம்
சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது பென்டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்து விடுகிறது.  இதுபோன்று வைரஸ் உள்ள பென்டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது. பென்டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை “பார்மட்” செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒரு வேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய? கவலையில்லை. அதனை எந்த விதமான மென்பொருளும் இன்றி சுலபமாக மீட்டு விடலாம். அது எவ்வாறு என காணலாம். பென் டிரைவை  கணினியில் இணைத்தப்பின் 1. START > RUN சென்று அதில் CMD என டைப் செய்து ENTER கீயினை அழுத்தவும் 2. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென்டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்து கொண்டு Command Promptல் அந்த டிரைவிற்கு செல்ல வேண்டும்.(உ.ம்) H டிரைவ் எனில் H:\> என மாற்றிக் கொள்ள வேண்டும். 3. பின்பு H:\>attrib sh/s/d *.* என டைப் செய்ய வேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதி செய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து பென்டிரைவினை திறந்து பார்த்

தாமதம் காட்டக் கூடாது.

படம்
ஜெயலலிதாவை தனது தவறான கணக்கீடு முறையில் தவறாக ஊழல் வழக்கில் இருந்து நீதியரசர் குமாரசாமி அய்யா வெளியே விட்டதையும்,10% வரை லஞ்சம் வாங்குவது சட்டபடி சரிதான் ஜெயலலிதா 8.60% தான் ஊழல் செய்துள்ளார் எனவே அவர் பரிசுத்தமானவர் என்று சான்றும் வழங்கியது இந்தியா முழுக்க அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த வழக்கை அனைவரும் உடனே மேல் முறையீடு செய்ய வேண்டும். அதுவும் கர்நாடக அரசு செய்யவதுதான் முறை என்று சொல்லிய பின்னரும் சில,பல காரணங்களால் கர்நாடக அரசு மேல் முறையீடை தள்ளி போட்டுக்கொண்டே போனது அதுவும் கடைசியில் அவசரப்பட மாட்டோம். ஆலோசித்து மூன்று மாதங்களுக்குள் செய்ய முயற்சிப்போம் என்று கையை கழுவி விட்டது. கர்நாடகா மாநில அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் ஏற்கனவே அரசு வழக்குரைஞர் ஆச்சார்யா,அட்வகேட் ஜெனரல் ரவி வர்ம குமார் ஆகியோர் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு அறிக்கைகள் அனுப்பியும் காங்கிரசு அரசு ஜெயலலிதா  தனிப்பட்ட முறையில் அனுப்பிய முயற்சிக்கு ஆதரவாக நடந்து கொள்கிறது என்ற ஐயத்தை இந்தியா முழுக்க கிளப்பி விட்டது. ஆனால் கர்நாட்க அரசின் அட்வகேட் ஜெனரல் இன்று கர்நாடக அரசுக்கு உடனே ஜெய

புற்றுநோய்க்கு மருந்து

படம்
சளி  கிருமி.?  லண்டனைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள், சளியை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளைக் கொண்டு புற்று நோயைக் குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறையை கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆட்கொல்லி நோயான புற்று நோயிலிருந்து மனிதனை காப்பாற்ற இன்று வரை முறையான சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை.  உடல் உள் உறுப்புகளிலும் தோலிலும் ஏற்படும் புற்று நோய்கள் பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தில் முடிகிறது. சளிக்கு காரணமான வைரஸ் கிருமிகள், உயிருக்கு ஆபத்து விளைவிக்காதவை. இவற்றை மரபணு மாற்றத்தின் மூலமாக புற்று நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் வகையில் விஞ்ஞானிகள் மாற்றியிருக்கிறார்கள்.  "வைரஸ் இம்யுனோதெரபி' எனப்படும் இச்சிகிச்சை முறையில் மரபணு மாற்றம் பெற்ற வைரஸ்.  இரண்டு வழிகளில் புற்று நோயை எதிர்த்து போராட உதவுகிறது.  முதலாவதாக, கேன்சரை ஏற்படுத்தும் கிருமிகளில் தங்கி அவற்றை அழிக்கிறது.  இரண்டாவதாக, உடம்பில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி புற்று நோய் குணமாக உதவுகிறது. புற்று நோய்க்கு முறையான சிகிச்சை குறித்து தீவிரமான ஆராய்ச்சி உலகெங்கும் நடந்து வரும் வேளையில் இச்செய்தி

இடைத்தேர்தல்.

படம்
இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்ற திமுக முடிவு சரியானது.எதிர்பார்த்தது. இந்த முடிவினால் பாதிக்கப் பட்டவர்கள் அத தொகுதி வாக்காளர்களும் , ஊடகங்களுமாகத்தான் இருப்பார்கள். வாக்காளர்களுக்கு இந்த தேர்தலில் திமுக போட்டியிட்டால் அதிக அளவு கைமாறு[ரூ  10000 வரை] கிடைக்கும் என்று எதிர்பார்த்ததில் மண். திமுக ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டால் காப்புத்தொகையை இழக்க வைக்க எந்த அளவுக்கும் போக ஆளுங்கட்சியினர் தயாராகி இருப்பார்கள். சாதாரண ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுகவில் முன்பு போட்டியிட விண்ணப்பித்த மனோகரன் என்பவரை தேர்தல் அதிகாரியாக நியமித்தனர்.மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவே இல்லை. பிரச்னை டெல்லிவரை சென்ற பின்னரும் கூட வாக்குப்பதிவுக்கு இரு நாட்களுக்கு முன்னர் தான் மாற்றினர். அதற்கு முன்னர் நடந்த தேர்தலில் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு  பணம் கொடுப்பதற்காக 144 தடை உத்திரவையே போட்டு  எதிர்கட்சியினர்கள் மட்டும் கூட்டமாக வருவதை தடை செய்தது இதே தேர்தல் ஆணையம். மத்திய பாதுகாப்பு படையினரை கையை கட்டிக் கொண்டு ஆளுங்கட்சியின் வாக்களிப்பு தின அத்து மீறல்களை ப

தொகுதிக்கு சேவை?

படம்
மக்களவை,மாநிலங்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு  நிதி 1993-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.  அன்றைய காலக் கட்டத்தில் தொகுதிக்கு 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.  பி்ன்னர் 1994-95-ல் ஒரு கோடி ரூபாயாக ஒதுக்கப்பட்டது.  1998-ல் அவை இரண்டு கோடியாக உயர்த்தப்பட்டது.  கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இந்நிதி5 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. நாட்டின் பெரும்பாலான எம்.பிக்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்காமல் இருப்பதாக புள்ளியியல் துறை தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள 542 தொகுதிகளில் ஆண்டு தோறும் தொகுதி மேம்பாட்டிற்காக சுமார் 5 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.  இந்த நிதி மூலம் எம்.பி ஒருவர் தனது தொகுதியில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியும்.  இருப்பினும் கடந்த 15-ம் தேதி வரையில் எவ்வித பணியையும் மேற்கொள்ளாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆளும் பா.ஜ.க,கட்சியை சேர்ந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சட்டத்துறை அமைச்சர் சதானந்தாகவுடா, ரசாயணத்துறை அமைச்சர் அனந்த குமார் சிறு மற்றும் குறுந்தொழில் துறை அமைச்சர் கல்ராஜ்மிஸ்ரா, நீர்வளத்துறை அமைச்சர்

எண்ணெய் கொப்பளித்தல்

படம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்“ வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்” என்பது பழமொழி.  இ தே போல மற்றொரு அனுபவ உண்மை என்னவெனில், வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால் நோய்கள் பல நீங்கும். நல்லெண்ணெய் மருத்துவம், நல்லெண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துகிறது.  சிரமம் ஏதுமின்றி மிக எளிதாக செய்யக் கூடிய எண்ணெய் கொப்பளித்தலை செய்து வருவது நமது உடல் நலத்தைப் பேணிக்காக்கும். எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 21 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும் படி செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப்போகும். அப்போது அதை உமிழ்ந்து விட வேண்டும். அதன் பிறகு வாயை நன்கு கழுவிக்கொள்ளவும். எந்தநேரத்தில் செய்யவேண்டும்? இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை. நாம் பல் தேய்த்த பிறகு, உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல பலன் கிடைக்கும். எவ்வளவு காலம் செய்ய வேண்டும்? நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம்,