இடைத்தேர்தல்.
இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்ற திமுக முடிவு சரியானது.எதிர்பார்த்தது.
இந்த முடிவினால் பாதிக்கப் பட்டவர்கள் அத தொகுதி வாக்காளர்களும் , ஊடகங்களுமாகத்தான் இருப்பார்கள்.
வாக்காளர்களுக்கு இந்த தேர்தலில் திமுக போட்டியிட்டால் அதிக அளவு கைமாறு[ரூ 10000 வரை] கிடைக்கும் என்று எதிர்பார்த்ததில் மண்.
திமுக ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டால் காப்புத்தொகையை இழக்க வைக்க எந்த அளவுக்கும் போக ஆளுங்கட்சியினர் தயாராகி இருப்பார்கள்.
சாதாரண ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுகவில் முன்பு போட்டியிட
விண்ணப்பித்த மனோகரன் என்பவரை தேர்தல் அதிகாரியாக நியமித்தனர்.மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவே இல்லை.
பிரச்னை டெல்லிவரை சென்ற பின்னரும் கூட வாக்குப்பதிவுக்கு இரு நாட்களுக்கு முன்னர் தான் மாற்றினர்.
அதற்கு முன்னர் நடந்த தேர்தலில் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக 144 தடை உத்திரவையே போட்டு எதிர்கட்சியினர்கள் மட்டும் கூட்டமாக வருவதை தடை செய்தது இதே தேர்தல் ஆணையம்.
மத்திய பாதுகாப்பு படையினரை கையை கட்டிக் கொண்டு ஆளுங்கட்சியின் வாக்களிப்பு தின அத்து மீறல்களை பார்க்க வைத்ததும்,தேர்தல் பார்வையாளர் அதிமுகவினரின் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் பற்றி அறிவித்தவைகளைகண்டு கொள்ளாமல் குப்பையில் போட்டதுதான் பிரவீண்குமாரின் தேர்தலாணையம்.
அந்த தேர்தல் ஆணையம் தான் இப்போதும் உள்ளது.
மக்களவை தேர்தலிளேயே வாக்குப்பதிவு எந்திரங்களை செயற்கைக்கோள்,மென்பொருள் ரிமொட் இயக்கம் மூலம் சாதகமாக செயல்பட வைத்ததாக குற்ற சாட்டுகள் பரவலாக எழுந்து பின் ஊடகங்களால் அப்படியே அமுக்கப்பட்டது.
காவல்துறையினர் அதிமுகவின் கிளைக்கழகம்.
மாவட்ட ஆட்சியர்களோ ஜெயலலிதா விடுதலைக்காக மண் சோறு சாப்பிடும் அளவுக்கு தரம் தாழ்ந்து போன கழக ரத்தத்தின் ரத்தங்கள்.
ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் எடுக்க வாக்குகளை குவிக்க எந்த ளவுக்கும் போகும் கட்சியின் தலைவர்கள் ஜெயலலிதாவே போட்டியிடும் போது எப்படி செயல்படுவார்கள்?
இடைத்தேர்தலில் தான் அறிவித்த வேட்பாளர் வெல்லவும் எதிர்கட்சிகள் காப்புத்தொகை இழக்கவும் அதிகாரம்,காவல்துறை,அமைச்சர் படை ,ச.ம.உ, கூட்டம்,திரையுலக [பொலிவற்ற]நட்சத்திரங்கள் போன்ற வற்றை களமிறக்கும் ஜெயலலிதா ,தானே வேட்பாளராக இருக்கையில் எப்படி நடந்து கொள்வார்?
இவைகளை எல்லாம் மீறி யாரால் வெல்ல முடியும்?
வென்றாலும் கூட அவர் சட்டமன்றம் சென்று என்ன செய்ய முடியும்?
பத்தொடு பதினொன்றாக வெளியேற்றப்படுவார்.அதுதான் அவரின் மக்கள் சேவையாக இருக்கும்.
ஆனால் ஒரு முதல்வரை வென்ற பெருமை,மக்கள் மனதை வெளியுலகிறகு எடுத்து காட்டிய புகழ் கிடைக்கும்.
ஆனால் அது கானல் நீர்.
அந்த வேட்பாளர் கூட தேர்தல் நாளில் தனது வாக்கை செலுத்த முடியாமல் போய் விடும் சூழல்தான் இருக்கும்.மிரட்டல்,உருட்டலில் தேர்தலுக்கு முதல் நாளில் அம்மா காலில் விழுந்து கட்சியில் சேரும் அவல அரிக்கை படத்துடன் வரும் நிலை கூட வரலாம்.
காரணம் இது அதிமுகவினர் அரசியலாகப் பார்க்காமல் தங்கள் வாழ்வா,சாவா என்ற முடிவாக பார்க்கப்படுவதுதான்.
திமுக தவிர மற்ற கட்சிகள் போட்டியென்றால் அதிமுகவினரின் செயல்பாடுகள் கொஞ்சம் வெப்பம் குறைவாக இருக்கும்.
திமுக களம் இறங்கினால் ஆர்.கே .நகர் அனல் பல உயிர்களை பலிவாங்கும அளவு கூட போய் விடும்.
தமிழ் நாடு கைப்புள்ள கூறிய ரத்த பூமியாக மாறிடும் அபாயமும் உண்டு.
இது கலைஞரின் அறிக்கை.
----------------------------------------
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவுக்கு 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து, சிறையில் அடைத்ததும், அவருடைய ஜாமீன் வழக்கு, மேல் முறையீடு வழக்கு எல்லாம் மின்னல் வேகத்தில் ஏற்கனவே அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் தொடர்ச்சியாக நடைபெற்று முடிந்து விட்டன. எப்படியோ ஜெயலலிதா முதல்வராகிவிட்டாலும், சட்டப் பேரவை உறுப்பினராக இல்லை என்பதால், இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவரை ராஜினாமா செய்யச் சொல்லி, அந்த ராஜினாமாவின் தொடர்ச்சியாக இப்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 27-9-2014ல் ஜெயலலிதா தண்டனைக்காளாகி, ரங்கம் தொகுதியில் இடைத் தேர்தல் வந்தபோது, தேர்தல் ஆணையம் 12-1-2015ல்தான் தேர்தல் அறிவிப்பினை செய்தது.
ஆனால் ஆர்.கே. நகர் தொகுதியில் கடந்த 17ம் தேதிதான் வேட்பாளர் ராஜினாமா செய்கிறார். 10 நாட்களில் இடைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. நீதித் துறையிலும், தேர்தல் ஆணையத்திலும் மிகப் பெரிய செல்வாக்கினைப் பெற்றிருப்பவர்கள் நடத்தும் ஆட்சியில் இடைத் தேர்தல் நடைபெற்றால் அது எப்படி இருக்கும் என்பதை அனைவரும் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம். 2014ல் இவர்கள் ஆட்சியில் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலையே நேரில் பார்த்தவர்கள் தானே நாம்.
ரங்கம் இடைத்தேர்தல் நேரத்தில் பணம் எப்படியெல்லாம் திருவிளையாடல் செய்தது என்பது நமக்குத் தெரியாதா காவல் துறையினர் எந்த
அளவுக்கு நியாயமாகவும், நேர்மையாகவும் அந்தத் தேர்தல்களில் நடந்து கொண்டார்கள் என்பதை நாம் பார்க்கவில்லையா. எனவே இந்த இடைத் தேர்தலில் ஜனநாயகம் எந்த அளவுக்கு மதித்துப் போற்றப்படும் என்று நமக்குத் தெளிவாகத் தெரிகின்ற நிலையில், பேரவைக்கான பொதுத் தேர்தல் ஓராண்டுக்குள் நடைபெறவுள்ள சூழ்நிலையில், திமுக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்து விடுவதே நல்லது என்பதால், ஆர்.கே. நகர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது.
சேலம் மானகராட்சி கூட்டத்தில் அதிமுகவினரால் தாக்கப்பட்ட திமுக உறுப்பினர் தெய்வலிங்கம் அரங்கு நுழைவாயில் அருகே நிலை குலைந்து விழுந்தார். அப்போதும் அதிமுக கவுன்சிலர்கள் மாரியப்பன், பாலு, தியாகராஜன் ஆகியோர் சரமாரியாக காலில் எட்டி உதைத்தனர். கவுன்சிலர் தங்கம்மாள் மகன் கருணாகரன் என்பவர் தெய்வலிங்கத்தின் கழுத்தில் காலால் மிதித்தார். அங்கிருந்த அஸ்தம்பட்டி போலீசார் தடுக்கவில்லை. வேடிக்கைதான் பார்த்தனர். |
இன்று,
மே -28.
- ஆர்மீனியா குடியரசு தினம்
- பிலிப்பைன்ஸ் கொடி நாள்
- நேபாள் குடியரசு தினம்
- கிரீசில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது(1952)
- தமிழ் மருத்துவ முன்னோடியான சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் இறந்த தினம்(1884)