வரலா்றுக்கு ஆபத்து
இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் கைகளில் பல்மைரா நகர் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடக்கூடும் என்கிற அச்சம் நிலவும் சூழலில், 2000 ஆண்டுகள் பழமை மிக்க பல்மைரா நகரின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து வார்விக் பல்கலைக்கழக பேராசிரியர் கெவின் புட்சரின் கட்டுரை
பல்மைரா நகரைப் பார்ப்பவர்களுக்கு முதலில் எழும் சந்தேகம் இந்த பாலைவனத்தின் மத்தியில் நீண்ட நெடிய தூண்களும், கலைநயமிக்க தோரணவாயில்களும் எப்படி வந்தன என்பது.
பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த வழியாகச் செல்ல நேர்ந்த பயணிகள் தாங்கள் பார்த்த காட்சியைக் கண்டு மீண்டும் மீண்டும் பிரமித்தனர். சிரியாவின் பாலைவனத்தின் மத்தியில் பாழடைந்த பழம்பெரும் நகரம்.
மத்திய தரைக்கடலுக்கும் யுப்ரடிஸ் நதிக்கும் இடையிலான வழியில் சரிபாதி தூரத்தில் பல்மைரா அமைந்திருக்கிறது.
பாலைவனத்தின் மத்தியில் இப்படியொரு செல்வச்செழிப்பு மிக்க பழம்பெரும் நகர் எப்படி உருவானது என்று வியப்பவர்களுக்கான பதில்--பாலையை ஒட்டிய பேரீச்சமர பசுஞ்சோலையின் எல்லையில் இது அமைந்திருக்கிறது.
மத்திய தரைக்கடலைப்பயனபடுத்திய வர்த்தகர்கள் தங்கி இளைப்பாறும் இடமாகவும், தங்கள் வழிப்பயணத்துக்குத் தேவையான தண்ணீரை நிரப்பிக்கொள்ளும் இடமாகவும்தான் ஆதியில் பல்மைரா உருவானது.
இந்த பகுதியெங்கும் வளர்ந்து நிற்கும் பேரீச்சம்பழ மரங்களின் பெயரான பல்மைரா என்பதே இந்த நகரின் பெயராகவும் அமைந்துவிட்டது.
எங்கோ ஒரு பாலைவனத்தின் மூலையில் பல்மைரா அமைந்திருந்தாலும் மத்திய கிழக்குப்பிராந்தியத்தின் சரித்திரத்தில் இதற்கு அதிமுக்கிய இடம் உண்டு.
இந்த நகரின் தோற்றம் ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக துவங்குகிறது.
ரோம சாம்ராஜ்ஜியத்தின்கீழ் படிப்படியாக வளர்ந்த பல்மைரா, கிறிஸ்து பிறந்த பிறகு மூன்றாம் நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து தனி சாம்ராஜ்ஜியம் அமைக்கும் அளவுக்கு வளர்ந்த்து.
பல்மைராவின் சாம்ராஜ்ஜியம் என்பது துருக்கியில் துவங்கி எகிப்துவரை படந்து வளர்ந்தது.
ரோமப்பேரரசன் அவ்ரெலியனை எதிர்த்து போரிட்ட பல்மைராவின் பேரரசி செனோபியாவின் கதை மிகவும் பிரசித்திபெற்றது. ஆனால் அந்த அளவுக்கு அதிகம் தெரியாத கதை ஒன்றும் உண்டு.
அது சாசேனிய பெர்சிய பேரரசையும் பல்மைரா எதிர்த்து போரிட்டது என்பது பலருக்கும் தெரியாது.
மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் சாசேனியர்கள் ரோமப்பேரரசை கைப்பற்றி அதன் பேரரசன் வலேரியனைக் சிறைப்படுத்தியபோது பல்மைரியர்கள் தான் அவர்களை போரில் வீழ்த்தி யூப்ரடீஸ் நதியை தாண்டி புறமுதுகிட்டு ஓட வைத்து ரோமானியப் பேரரசை மீட்டுக்கொடுத்தனர்.
அதன்பிறகும் பல நூற்றாண்டுகள் கிழக்கே சரிந்துவந்த தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்த ரோமப்பேரரசு, பல்மைரியர்களைத்தான் நம்பவேண்டியிருந்தது.
பல்மைரா
மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் மிகப்பெரும் சாதனை பல்மைரா. அந்தக்காலத்தில் இருந்த ரோமப்பேரரசின் மற்ற நகரங்களைப் போன்றதல்ல பல்மைரா.
காரணம் இந்த நகரம் கலை ரீதியிலும் கலாச்சார ரீதியாகவும் தனித்தன்மை கொண்டிருந்தது. மற்ற நகரங்களில் நிலச்சுவாந்தார்கள் தான் அந்த நகரின் அனைத்து அம்சங்களையும் நிர்ணயித்தனர்.
ஆனால் பல்மைராவில் வர்த்தகர்களே அந்நகரின் அரசியல் அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தினர். தமது பாலைவனத்தை கடக்கும் வர்த்தகர்களின் பொதிகள் சுமந்த வண்டித்தொடரணிகளை பாதுகாப்பதில் இவர்கள் தனிக்கவனம் செலுத்தினார்கள்.
வெனிஸ் நகரம் எப்படி உலக வர்த்தக கட்டமைப்பின் ஒரு அங்கமாக உருவாகி வளர்ந்ததோ, அதேபோல வர்த்தகத்தால் வளர்ந்தது பல்மைரா. வெனிஸுக்கு கடல் வழி வாணிபம் என்றால், பல்மைராவுக்கு பாலைவனத்துப் பாய்மரக்கப்பல்களாக இருந்தவை ஒட்டகங்கள்.
அதுமட்டுமல்ல, பல்மைராவுக்கும் கடல்வழிவாணிகத்துக்கும் தொடர்பு இருந்ததையும் தொல்லியல் சான்றுகள் காட்டுகின்றன.
பல்மைரா நகரவாசிகள் யூப்ரடிஸ் நதியில் பயணித்து வளைகுடாவுக்குச் சென்று அதன் வழியாக இந்தியா முதல் எகிப்தின் செங்கடல் வரை கடல்வழி வாணிபம் செய்தனர்.
கீழைத்தேய நாடுகளில் அவர்கள் வாங்கி வர்த்தகம் செய்த அரும்பொருட்களில் கிடைத்த மிகப்பெரிய செல்வத்தைப் பயன்படுத்தி, தங்களின் சொந்த ஊரில் மிகப்பிரம்மாண்டமான கலைநயமிக்க மாளிகைகளைக் கட்டினார்கள்.
இன்றுவரை பத்திரமாக பாதுகாக்கப்பட்டிருக்கும் பல்மைரைனிய கடவுளர்களுக்கான பிரம்மாண்டமான கோயில்கள், நெடுந்தூண்களைக் கொண்ட ராஜவீதிகள், திறந்தவெளி கலையரங்கம் போன்றவையெல்லாம் பல்மரைனியர்களின் கலைஉணர்வுக்கும், கட்டிடக்கலை நிபுணத்துவத்துக்கும் சான்றுகளாக நிலைத்து நிற்கின்றன.
பல்மைராவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தனித்துவ அடையாளத்துடனான கலாச்சாரம் நிலவியதை வெளிக்கொணர்ந்திருக்கின்றன.
பல்மைரேனியர்கள், அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த கிரேக்கம் அல்லது லத்தீன் மொழி வரி வடிவங்களுக்கு பதிலாக, தங்கள் கட்டிடங்களின் முகப்பில் செமெடிக் மொழி மற்றும் எழுத்துவடிவங்களைக் கொண்டு அலங்கரித்தார்கள்.
பல்மைரா தனக்கேயுரிய கலைவடிவங்களையும், கட்டிடக்கலையையும் உருவாக்கிக் கொண்டது. பல்மைரா நகரவாசிகளின் அலங்காரம் மற்றும் அவர்களின் கட்டிடங்களின் அலங்காரங்களை கவனிக்கும்போது அவர்களிடம் கீழைத்தேச நாடுகளின் தாக்கமும் மேற்கத்திய நாடுகளின் தாக்கமும் இணைந்தே காணப்பட்டன.
பல்மைராவின் கல்லறைகளில் புதைக்கப்பட்டிருந்த பாடம்செய்யப்பட்ட சடலங்கள் சீனத்துப் பட்டுத்துணியால் சுற்றப்பட்டிருந்தன.
ஆபத்தின் விளிம்பில் அரியதொரு சரித்திரம்
ஆனாலும் கூட, ஒப்பீட்டளவில் பல்மைரா குறித்து நமக்கு மிகவும் குறைவான தகவல்களே தெரியும்.
காரணம் பல்மைராவின் மிகச்சிறிய பகுதியே அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும், இந்த பிரதேசத்தின் தொல்லியல் சான்றுகள் பூமியின் ஆழத்தில் புதையுண்டு போய்விடவில்லை. நிலத்திற்கு அடியில் மேம்போக்காக தோண்டினாலே அதை வெளிக்கொண்டுவரமுடியும்.
அதனாலேயே, அதை யாரும் கொள்ளையடித்துச் செல்ல முடியும் என்கிற ஆபத்து நிலவுகிறது.
சிரியாவில் இருக்கும் எத்தனையோ வேறு இடங்களைப் போலவே தற்போதைய மோதல்களின்போது பல்மைராவிலும் சந்தேகமில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம், இராக்கில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நடந்துகொண்டதை வைத்துப் பார்க்கும்போது, பல்மைரா நகர் அவர்களின் வசமானால், இந்த ஒட்டுமொத்த நகரும் திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டு அழிக்கப்படும் என்று அஞ்சுவதற்கான காரணங்கள் இருக்கின்றன.
ஒருவேளை அப்படி நடந்தால், இந்த வேதனைமிக்க மோதலில், மத்திய கிழக்கின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முக்கியமான அத்தியாயம் அதில் மேலும் ஒரு பலியாடாவாகும்.
பின்குறிப்பு: இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் கைகளில் பல்மைரா நகர் எபோது வேண்டுமானாலும் விழுந்துவிடக்கூடும் என்கிற அச்சம் உலக அளவில் அதிகரித்துவருகிறது. இந்த பின்னணியில், உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும், பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமான, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை மிக்க பல்மைரா நகரின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து வார்விக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கெவின் புட்சர் பிபிசிக்கு எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்.
நன்றி:பிபிசி
========================================================================இன்று,
மே -22.
- சர்வதேச பல்லுயிர் பரவல் தினம்
- இலங்கை குடியரசு தினம்(1972)
- ஏமன் தேசிய தினம்
- விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது(1990)
- ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தை பெற்றனர்(1906)
========================================================================
வருமானத்துக்கு மீறி சொத்து
சேர்த்த வழக்கில்’ ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுவிட்டார்.
தீர்ப்பின் அடிப்படையையே அசைத்துப் பார்க்கும் கணக்குக் குளறுபடிகள் ஒரு பக்கம் இருக்க தீர்ப்பின் மற்ற அம்சங்களும் ஆச்சர்யம் அளிக்கின்றன!
`எனது மிகப்பெரிய வெற்றிகள் இனிமேல்தான் இருக்கின்றன’ - 1996ம் ஆண்டு தேர்தலில் படு தோல்வி அடைந்த பிறகு, ஜெயலலிதா சொன்னது இது.
18 ஆண்டுகளுக்கும் மேல் நடந்த வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,
100 கோடி ரூபாய்அபராதமும் பெற்ற ஜெயலலிதா, அதிலிருந்து முழுமையாக விடுபட்டதைப் பார்க்கும்போது, இது அவரது வாழ் வின் மிகப்பெரிய வெற்றிதான்!
ஆனால், நேர்மைக்கு... நியாயத்துக்கு?
இன்றைய இந்தியச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது ஊழல் விவகாரம். அது தொடர்புடைய வழக்கின் தீர்ப்பை இந்தியாவே உன்னிப்பாக கவனித் தது. `தீர்ப்பின் சாராம்சம் எப்படி இருக்குமோ?’
எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
நிஜத்தில் என்ன நடந்தது?
10 சதவிகிதப் பாதை!
`ஊழல் என்பதை, அளவின்படி தீர்ப்பிடவே முடியாது. ஏனென்றால், ஊழல்தான் ஒழுங்கீனங்களின் தாய். இது, வளர்ச்சிக்கான சமூக நோக்கத்தை அழிக்கிறது; தகுதி யற்ற ஆசைகளை விரைவுபடுத்துகிறது; மனசாட்சியைக் கொல்கிறது; நிறுவனங்களின் பெருமைகளைத் தூக்கி எறிகிறது; நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தைச் செயலிழக்கச் செய்கிறது; மதிப்பு மரியாதையை அழிக் கிறது; ஆளும் தன்மையின் உள்ளீடுகளை அழிக்கிறது’ என நிரஞ்சன் ஹிமாச்சல் சஷத்தல் வழக்கில், உச்சநீதிமன்றம் (2003) தீர்ப்பளித்துள்ளது. ஆனால், 8.12 சதவிகிதம்தான் வருமானத்தைவிட அதிகமாக இருந்துள் ளது என்கிறது இந்தத் தீர்ப்பு.
1988ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிப்புச் சட்டத்தில், இப்படி எதுவும் இல்லை.
அரசு ஊழியர் ஒருவரின் வருமானம் என்ன?
வருமானத்தைவிட கூடுதலாக எவ்வளவு வைத்திருந்தார்? இதைக் கணக்கிட்டு, கூடுதலாக வைத்திருந்தால் தண்டனை தர வேண் டும் என்கிறது இந்தச் சட்டம். இந்தத் தீர்ப்பு, `8.12 சதவிகிதம் தான் கூடுதலாக இருக்கிறது; 10 சதவிகிதத்துக்குள் இருக்கலாம்‘ என்கிறது.
`10 சதவிகிதத்துக்குள் வருமானம் கூடுதலாக இருந்தால் தவறு இல்லை’ என உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பில் கூறியது.
அந்த வழக்கு என்ன?கிருஷ்ணானந்த் அக்னிகோத்ரி என்பவர், 1949-62ம்ஆண்டு காலகட்டத்தில் வருமான வரித்துறை அலு வலராக இருந்தவர்.
தனது வருமானத்தைவிட 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் கூடுதலாகச் சம்பாதித்துவிட்டார் என் பது வழக்கு.
கீழ் நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை தரப்பட்டது.
அதை உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.
அந்த வழக்கு, உச்சநீதிமன்ற மேல்முறையீட்டுக்கு வந்தது.
`13 ஆண்டுகாலம் மத்திய அரசு அதிகாரியாக இருந்த அவர், 10 சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் கூடுதல் வருமானம் வைத்திருந்தார்’ எனச் சொல்லி விடுவித்தது உச்சநீதிமன்றம்.
அதற்கு அவர்கள் சொன்ன காரணம்தான் முக்கியமானது.
கணக்குவழக்கில் மேல்கீழ் வித்தியாசம் இருப்பது இயல்பு என்பதால், 10 சதவிகித கூடுதலைப் பெரிதுபடுத்தத் தேவை இல்லை என்ற அர்த்தத்தில் அந்தத் தீர்ப்பு எழுதப்பட்டது.
1 லட் சத்து 27 ஆயிரம் எங்கே... கோடிகள் எங்கே?
இந்த 10சதவிகித ஃபார்முலாவை உதாரணம் காட்டி, இனி பெட்டிகேஸ் முதல் வழிப்பறி வரை பயன்படுத்த ஆரம்பித்தால் என்ன ஆகும்?
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகின்றன. அவர்கள் எல்லோருமே இந்தச் சதவிகிதக் கணக்கில் தப்பிவிடலாமே?
ஆந்திரா ஃபார்முலா!`
ஆந்திர மாநில அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக் கை மூலம், பொது ஊழியரிடம் 10 முதல் 20 சதவிகி தம் வரை கணக்கில் வராத வருமானம் மற்றும் சொத்துக்கள் இருக்கலாம் என்பது நடைமுறைக்கு கொண்டுவரப் பட்டுள்ளது’ என்கிறது குமாரசாமி தீர்ப்பு. இப்படி ஒரு சர்க்குலர், தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் அல்லது வழக்கு நடந்த கர்நாடகாவில் இருந்திருக்க வேண்டும் அல்லது மத்திய அரசின் சர்க்குலராக இருக்க வேண்டும். மூன்றுமே இல்லாமல், ஆந்திராவின் சர்க்குலர் ஒன்று இங்கு எப்படிப் பொருந்தும்?
நாளை, வேறு ஓர் ஆட்சி இதைக் கூட்டலாம்.
அப்படிக் கூட்டினால் என்ன ஆகும்?
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையே தேவை இல்லையே!
சர்க்குலர் வேறு;சட்டம் வேறு. சர்க்குலர், குமாஸ்தாக்களால் உருவாக்கப்படுவது; சட்டம், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படு வது.
சட்டங்களுக்கு முரணாக சர்க்குலர்களை உரு வாக்கிவிட்டால், இனி எந்த வழக்குமே நிற்காதே!
பரிசும் சிபாரிசும்!
பரிசுப் பொருட்கள் அனைத்தையும், அங்கீகரிக்கப் பட்ட வருமானமாக நீதிபதி குமாரசாமி ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம் அதிரடி. `தங்களுடைய அபிமானத் தலைவர்களுக்கு இதுபோன்ற பரிசுப் பொருட்களை வழங்குவது, தமிழக அரசியல் கலாச்சாரத்தில் நடைமுறையில் உள்ள ஒன்றுதான். எனவே அதை அப்படியே நீதிமன்றம் ஏற்றுக் கொள் கிறது’ என்கிறார். அப்படியானால், கலாச்சாரப் பழக்க வழக்கங்கள் எல்லாமே சட்ட அங்கீகாரம் பெற்றவையா?
அரசு ஊழியரின் நடத்தை நெறிமுறைகள், பெரும்பாலும் இந்தப் பரிசுப் பொருட்களை வாங்குவதற்கு எதிராகவே பேசுகின்றன.
வைர நெக்லஸ் வாங்கிய ஐஏஎஸ் அதிகாரியும், கார் பரிசு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், அது அரசியல் கலாச்சாரம் எனச் சொல்லி தப்பிக்க முடியுமா? எந்தக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவது, எது பின்பற்றத் தக்கது அல்ல என உணர வேண்டும் அல்லவா?
அரசு ஊழியர் ஒருவர், தனது பணிக்காலத்தில் பெறப்பட்ட பரிசுப் பொருட்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. அதை பொது ஊழியர்கள், தார்மீகவிதியாக தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொள் கிறார்கள். அதை மதித்திருக்க வேண்டாமா?
பரிசுப் பொருட்களுக்கு அரசியல் கலாச்சாரம் காரணம் காட்டப்பட்டது மாதிரி, வளர்ப்பு மகன் திருமணத்துக்கு தமிழ்க் கலாச்சாரம் காரணம் காட்டப்படுகிறது. `தமிழ்க் கலாச்சாரத்தின்படி பெண் வீட்டார்தான் திருமணம் நடத்தி வைப்பார்கள். எனவே, சிவாஜி வீட்டார்தான் மொத்தச் செலவையும் செய்தவர்கள்’ எனச் சொல்கிறார் குமாரசாமி.
அரசுத் தரப்பும் எதிர்த்தரப்பும் என்ன ஆதாரங்கள், சாட்சியங்களை வைத்துள்ளார்கள் எனப் பார்க்காமல், தமிழ்க் கலாச்சார அளவுகோலைத் தேடினால், மாநிலத்துக்கு மாநிலம், மாவட்டத்துக்கு மாவட்டம் ஊழல் ஒழிப்புச் சட்டத்தை உருவாக்குவதை தவிர வேறு வழி இல்லையா?
ஒருவர் வீடு வாங்குகிறார்.
அதற்கான பணத்தை, கடனாகப் பெறுகிறார்.
அதாவது அவருக்குக் கடனாக பணம்வருகிறது. கடன் என்பது டயைடெடைவைல. அதாவது ஒருவர் மீது சுமத்தப்படும் பொறுப்பு. அதை வருமானமாகக் கொள்ள முடியாது. மாறாக, அந்தக் கடன் மூலம் தொடங்கப்படும் தொழில் வழியாக வரும் லாபத்தை வருமானமாகக் கருதலாம். கடனாகப் பெற்ற பணத்தை, கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிச் செலுத்திவிடுகிறோம். எனவே, கடன் அடைக்கப்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல முடியும். இரண்டுமே வேறு வேறு அல்லவா?
ஒருவர் `சும்மா’ கடன் வாங்குகிறார். 10 கோடி ரூபாய் கிடைக்கிறது.
அதை `எப்படியோ’ ஆறு மாதங்களில் கட்டியும் விடுகிறார். 10 கோடி ரூபாய் கடனாக வந்தது என்பதால், 10 கோடிக்கான வருமான வழியை கணக்கில்கொள்ள வேண்டுமா... கூடாதா?
கலைஞர் டி.வி. வாங்கிய கடனையும் இனி வருவாய் போலக் காட்டிவிடுவதை சுலபம் ஆக்கிவிடுமே இந்தத் தீர்ப்பு. குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட அடிப்படையாக அமைந்ததும் இதுவே.
`வருமான வரித்துறை ஏற்றுக் கொண்டுவிட்டது... எனவே அனைத்துமே ஏற்கத்தக்கது’ என்கிறது இந்தத் தீர்ப்பு.
பொதுவாக, கிரிமினல் வழக்குகளில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஆதாரங்களின் அடிப்படை யில் வழக்குகள் பதிவாகும்; வருமான வரித்துறை அறிக்கைப்படி அல்ல.
வந்த வருமானத்துக்கு வரி கட்டாமல் ஏமாற்றுவதைத்தான் வருமான வரித்துறை பிடிக்கிறது. வருமானம் எப்படி வந்தது என்பதை ஆராய்வது இல்லை. சந்தேகத்துக்கிடமான வருமானம் என்றால், சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்கிறார்கள்.
ஊழல் ஒழிப்புச் சட்டத் திலேயே, `அரசு ஊழியர்களுக்கான விதிமுறை 7ன்படிஅங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் ஏதாவது ஒருதுறை அந்த வருமானத்தை ஏற்றுக் கொண்டால்,
அதை வரு மானமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்‘ என இருக்கிறது. அதை வைத்துத்தான் இந்தத் தீர்ப்பும் தரப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்திய உதாரணம் மாறுபட்டதாக உள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, சுரேஷ்ராஜன் இருவரும் தங்கள் மீது தங்களது குடும்பத்தினர் மீதும் போடப் பட்ட வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் போனார்கள். தங்கள் உறவினர்கள் தனித்தனியாக வருமான வரி கட்டுபவர்கள்... அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றார்கள்.
இதை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
வழக்கு உச்சநீதிமன்றம் போனது (6.1.2014). இரண்டு வழக்குகளையும் ஒன்றாக விசாரித்தது உச்சநீதிமன்றம்.
`வருமான வரி கட்டிவிட்டார்கள் என்பதை வைத்து முடிவுக்கு வந்தால், மோசமான சூழ்நிலை உருவாகும்‘ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரமௌலி, இக்பால் பெஞ்ச் கூறியிருக்கிறது.
கூட்டுச்சதி!`
ஒரே வீட்டில் வசித்தார்கள் என்பதற்காக அவர்கள் நான்கு பேரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டார்கள் எனச் சொல்வது தவறு’ என்கிறது இந்தத் தீர்ப்பு. `ஒவ்வொருவரும் தனித்தனியாகக் கடன் வாங்கி யுள்ளனர்.
நிறுவனங்கள் நடத்தியுள்ளனர். வரவு-செலவு கணக்கு இருந்துள்ளது, வருமான வரி செலுத்தி யுள்ளனர். ஒருவருக்காக மற்றவர்கள் சொத்துக்களை வாங்கிக் குவித்தார்கள் என்பது எந்த இடத்திலும் நிரூபிக் கப்படவில்லை’ என எழுதியுள்ளார். ஊழல் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி என்பதுபோல் எதிர்த்தரப்பு சாட்சியும் கருத்தில் கொள்ளப்படும்.
அந்த வகையில் கூட்டுச்சதி செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் கூட்டுச்சதிகள், ஆதாரங்களை வைத்துக் கொண்டு செய்யப்படுபவை அல்ல!
அரசியல் பழிவாங்கலா?!
மொத்த வழக்கையுமே அரசியல் பழிவாங்கலாக நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு கணிக்கிறது. இது ஆபத் தான அனுமானம்.
கருணாநிதிக்கும் அன்பழகனுக்கும் நோக்கம் அரசியலாக இருக்கலாம். ஆனால், வழக்கு போடும் இடத்தில் அவர்கள்தானே இருந்தார்கள். இன்றுதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அதிமுக ஆட்சியால் வழக்கு போடப்படுகிறது. இவை அனைத்தை யுமே அரசியல் பழிவாங்கல் என ஒதுக்கிவிட முடியுமா?
அப்படி ஒதுக்கிவிட்டால், யார் மீதும் எவரும் வழக்கு போட முடியாது. கருணாநிதி காலமுறைகேடுகளை ஜெயலலிதா கட்சியும், ஜெ.ஆட்சி முறைகேடுகளை கருணாநிதி கட்சியும்தானே அம்பலப்படுத்த வேண்டும்.
அரசியல் நோக்கங்கள் இதில் இருந்தாலும் வேறு வழி இல்லை.
அரசியல் உள்நோக்கம் என்பதை ஆரம்பத்திலேயே உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. `ஒரு ஜனநாயகத்தில் அரசியல் எதிர்த்தரப்பினர், பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் முக்கியப்பங்கு வகிக்கின்றனர்.
அவர்கள் ஆட்சிக்குள் இருந்தபடி அரசாங்கத்தைக் கண்காணிக்கும் காவலர்கள் ‘ என (18.11.2003) உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. எனவே, அரசியல் பழிவாங்கல் என்பதே நொண்டியான வாதம்தான்!
தைரியம் தருகிறது
அரபு எழுச்சி முதல் அன்னா ஹசாரே எழுச்சி வரை ஊழலுக்கு எதிராக உலகமே ஒன்று திரண்டு நிற்கும் காலகட்டம் இது.
ஆனால், ஜனநாயக முகமூடியுடன் கஜானாக்களை கபளீகரம் செய்ய, தேர்தலும் அதிகாரமும் துணை போய்க்கொண்டிருக்கின்றன.
பணத்தால் தேர்தலில் வெல்வது, வென்ற அதிகாரத்தால் பணம் சம்பாதிப்பது என்ற சுழற்சியே நாடாளுமன்ற ஜனநாயகமாக மாறிப்போன சூழ்நிலையை கண் முன் காண்கிறோம். ஊழலுக்கு எதிரான `டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு, உலகம் முழுக்க எடுத்த கணிப்பில் ஊழல் என்பது இயல்பாக மாறிக் கொண்டிருப்பதை கண்டுபிடித்துச் சொல்லி இருக்கிறது.
அந்த இயல்பை நியாயப்படுத்தும் காரியங்களும் பச்சையாக நடக்கின்றன. லோக்பால், லோக் ஆயுக்தா போன்றவை `புலி வருது’ பூச்சாண்டிகளாக மட்டுமே மாறிவிட்டன.
எனவேதான் புலிக்குப் பயப்படுபவர்களே,
`புலி வருது’ என பயமுறுத்துகிறார்கள்.
`சட்டம் என்பது, மீறல்களுக்கான தண்டனைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசு ஆணை’ என்கிறார் சாணக்கியர்.
ஆனால், நிஜத்தில் அப்படியா இருக்கிறது?-
நன்றி : ஆனந்த விகடன் (27.5.15)
=================================================================================