ஊளைச்சதை. கரைப்பது எப்படி?
ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்னையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச்சதை.
இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது, பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது.
வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கி சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.
பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி போதுமான சத்தான உணவு இல்லாததும், ஒரு காரணமாக இருக்கிறது.
இது தவிர அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச்சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இது தவிர மந்தாரை வேரை நீர் விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.
அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச்சதை குறையும் மேலும் சதை போடுவதைச் தடுக்க வேண்டுமென்றால் தேநீரில் எலுமிச்சம்பழச்சாறு கலந்து காலையில் குடித்து வர வேண்டும்.
இது தவிர வாழத்தண்டு சாறு, அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றைொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக காலையில் அரைமணி நேர நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும் உடல் எடையும் குறையும். புத்துணர்வாகவும் இருக்கும்.
உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு படிவதாலேயே ஊளைச்சதை ஏற்படுகிறது.
பொதுவாகவே பல்வேறு காரணங்களை இதற்கு குறிப்பிடலாம். உடல் பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு உணவு வகைகளை உண்ணுதல் ஒரு முக்கிய காரணமாகும்.
இவ்வாறு அதிகமாக உண்ணப்படும் உணவால் கலோரிகள் கொழுப்புத் திசுவாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படுகின்றன. ஊளைச்சதையானது பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் ஊளைச்சதையுடன் இருக்கும் குழந்தைகள் வளர்ந்த பின்னரும் ஊளைச்சதையுடனயே இருக்கும்.
குழந்தைப் பருவத்தில் அளவிற்கு அதிகமாக உணவூட்டப்படும் ஒருவருடைய உடலில் வளர்ந்த பின்னரும் அதிகப்படியான கொழுப்பு செல்கள் உருவாகும்.
தற்போது ஆண்களை விட பெண்கள் தான் ஊளைச்சதையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இயல்பாகவே ஆண்களை விட பெண்களின் உடலில்தான் அதிக கொழுப்புத் திசுக்கள் இருக்கும்.
ஊளைச்சதை ஏற்படுவதற்கு காரணம் அவர்களுடைய உணவுப் பழக்கமும் வேறு சுற்றுப்புற காரணிகளும் தானே தவிர மரபுப் பண்பு அல்லது ஹார்மோன் கோளாறு அல்ல என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஊளைச்சதையால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய இதயத்தின் வேலைப்பாடு அதிகரிக்கப்பதே ஊளைச்சதையினால் ஏற்படும் கோளாறுகளுக்கான முக்கிய காரணம். உடலில் அதிகப்படியாக சேரும் ஒவ்வொரு கிலோ (1kg) கொழுப்பு திசுவுக்கும் மூன்று மீட்டர் நீள இரத்தக் குழாய்கள் வளர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஊளைச்சதை பொதுவாக ஒருவருடைய உடல் அழகை மட்டும் பாதிப்பதில்லை. மாரடைப்பை உண்டாக்கும் தன்மையை கொண்டது.
ஆந்திரா,தெலுங்கானாவில் வெயில் தாக்கி 216 பேர்கள் சாவு. |
மேக் இன் இந்தியா? =========================================================================================== |
மே-25.
- அர்ஜெண்டினா தேசிய தினம்
- லிபனான் விடுதலை தினம்(2000)
- அமெரிக்கா தனது முதல் அணுஆற்றலினால் இயங்கும் பீரங்கியைச் சோதித்தது(1953)
- ஆப்ரிக்க ஒன்றியம் உருவானது(1963)
- =======================================================================
முன்னாள்,இன்னாள் முதல்வரிடம் இருந்து விடை பெறும் இடை நாள் முதல்வர். =========================================================================================== |