சனி, 30 மே, 2015

தாமதம் காட்டக் கூடாது.

ஜெயலலிதாவை தனது தவறான கணக்கீடு முறையில் தவறாக ஊழல் வழக்கில் இருந்து நீதியரசர் குமாரசாமி அய்யா வெளியே விட்டதையும்,10% வரை லஞ்சம் வாங்குவது சட்டபடி சரிதான் ஜெயலலிதா 8.60% தான் ஊழல் செய்துள்ளார் எனவே அவர் பரிசுத்தமானவர் என்று சான்றும் வழங்கியது இந்தியா முழுக்க அதிர்வலைகளை உண்டாக்கியது.
இந்த வழக்கை அனைவரும் உடனே மேல் முறையீடு செய்ய வேண்டும்.
அதுவும் கர்நாடக அரசு செய்யவதுதான் முறை என்று சொல்லிய பின்னரும் சில,பல காரணங்களால் கர்நாடக அரசு மேல் முறையீடை தள்ளி போட்டுக்கொண்டே போனது அதுவும் கடைசியில் அவசரப்பட மாட்டோம்.
ஆலோசித்து மூன்று மாதங்களுக்குள் செய்ய முயற்சிப்போம் என்று கையை கழுவி விட்டது.
கர்நாடகா மாநில அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார்
ஏற்கனவே அரசு வழக்குரைஞர் ஆச்சார்யா,அட்வகேட் ஜெனரல் ரவி வர்ம குமார் ஆகியோர் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு அறிக்கைகள் அனுப்பியும் காங்கிரசு அரசு ஜெயலலிதா  தனிப்பட்ட முறையில் அனுப்பிய முயற்சிக்கு ஆதரவாக நடந்து கொள்கிறது என்ற ஐயத்தை இந்தியா முழுக்க கிளப்பி விட்டது.
ஆனால் கர்நாட்க அரசின் அட்வகேட் ஜெனரல் இன்று கர்நாடக அரசுக்கு உடனே ஜெயலலிதா  ஊழல் வழக்கில் உடனே மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி அறிக்கை  அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில்
”சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தான், இறுதியானது என்று கருதுவது தவறு.
 தீர்ப்பில் முன்னுக்குப் பின் முரணாக பல தவறுகளை கொண்டுள்ள அந்த வழக்குமேல் முறையீடுக்கு முற்றிலும் ஏற்றது தான்.

சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, சரியான கோணத்தில் விசாரிக்கப்பட வேண்டுமென்று தான், உச்சநீதிமன்றம், கர்நாடகா நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து, மாற்றியது. 
ஆனால் விசாரணை முறையிலேயே பல தவறுகள்.கர்நாடக அரசு வழக்குரைஞர் இல்லாமலே வழக்கு நடந்துள்ளது. கடைசியாக நியமிக்கப்பட்ட அரசு வழக்குரைஞர் ஆச்சாரியா வாதுரையை கேட்காமலேயே ,அறிக்கையை ஏற்காமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த தீர்ப்பிலும் பக்கத்துக்குப்பக்கம் முரண்கள்.கணக்கீட்டிலும் தீர்ப்பையே கேலிக்கூத்தாக்கும் தவறுகள்.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், மாநில அரசு மேல் முறையீடு செய்ய வேண்டுமென்று, பரிந்துரை செய்கிறேன். 

ஒரு வேளை, மாநில அரசுமேல் முறையீடு செய்யவில்லை என்றால், உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்ற எண்ணத்தை மக்கள மனதில் உருவாக்கலாம்.
இந்த வழக்கில், அப்பீல் செய்யவும், வாதாடுவதற்கு சிறப்பு வக்கீலை நியமிக்கவும் கர்நாடகா அரசுக்கு, சட்டப்படி உரிமை உள்ளது. 

கர்நாடகா சார்பில் வாதாட, மூத்த வக்கீல் ஆச்சார்யாவையே, சிறப்பு வக்கீலாக நியமிக்கலாம். 
வேறு யாரையும் நியமிக்க வேண்டிய அவசியமில்லை.
 சிறப்பு வக்கீலை நியமிக்க, கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை. 

"1977 கர்நாடகா சட்ட அதிகாரிகள் விதிமுறை' படி, சிறப்பு வக்கீலை நியமிக்கும் உரிமை, கர்நாடகா அரசுக்கே உள்ளது. 
இந்த வழக்கில்,மேல் முறையீடு செய்வதில், இனியும் அரசு தாமதம் காட்டக் கூடாது. 

இது, கர்நாடகா அரசின் தார்மீகக்  கடமை.

இவ்வாறு ரவிவர்ம குமார், பரிந்துரை அறிக்கையில் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கர்நாடகா அமைச்சரவை கூட்டம், ஜூன் முதல் தேதி, காலை 11 மணிக்கு கூடுகிறது. 
இக்கூட்டத்தில், அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமாரின் பரிந்துரை குறித்து விவாதிக்கப்படலாம், ஏற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
========================================================================
இன்று,
மே -30.
  • அல்பேனியா தனி நாடாகியது(1913)

  • இந்தியாவில் கோவா தனி மாநிலமாகியது(1987)

  • பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது(1635)

  • திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்(1845)

========================================================================


சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனையிலிருந்து மீண்ட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை வாழ்த்தி, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பாக கோவை மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அரசு துறையைச் சார்ந்தவர்கள் ஒரு அரசியல் தலைவருக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது மிக அநாகரிகமான நிகழ்வு.அரசு ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற நன்னடத்தை விதிகளின் படி இவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?
வெளியெ ஜெயலலிதாவை விட்டதற்கு எதிர்ப்பு  தெரிவித்து நீதித்துறை பெயரில் சுவரொட்டி அடித்தால் இவர்கள் ஒத்துக்கொள்வார்களா?


ஆஸ்துமாவுக்கு


குளிர் காலத்திலும் மழைக் காலத்திலும் கடுமையைக் காட்டும் ஆஸ்துமா, வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்தியாவில் சுமார் 2 கோடிப் பேருக்கு ஆஸ்துமா நோய் இருப்பதாகக் கூறுகின்றன புள்ளிவிவரங்கள்.
நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் தசைகள் சுருங்குவதாலும், மூச்சுக்குழலில் உள்ள உள்சவ்வு வீங்குவதாலும் மூச்சு செல்லும் பாதை சுருங்கக்கூடும். அந்தச் சவ்விலிருந்து நீர் சுரப்பதால் மூச்சுப் பாதை மேலும் அடைபட்டு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. அதுதான் ஆஸ்துமா.
எப்படி வரும்?
ஒருவருக்கு அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை இருக்கிறதென்றால், அந்த ஒவ்வாமை தொடர்ந்து தூண்டப்படும்போது ஆஸ்துமா வந்துவிடலாம். உணவு, தூசி, புகை, தொழிற்சாலை மாசுபாடு, மருந்துகள் என ஒவ்வாமையைத் தூண்டும் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது. முறையாகச் சிகிச்சை எடுக்காவிட்டால், ஆஸ்துமா வர வாய்ப்பு உள்ளது.
கட்டுப்படுத்துதல்
ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், புழங்கக்கூடிய இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். தூசு, குப்பை, அழுகிய உணவுப் பொருட்கள் போன்றவை அருகே இருக்கக்கூடாது. வீட்டில் ஒட்டடை சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அழுக்கான உடைகள், படுக்கைகள், தலையணைகளைப் பயன்படுத்தக் கூடாது. அழுக்குகளில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் உருவாகும். அவை ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆகாது.
குளிரூட்டப் பட்ட அறை களைத் தவிர்ப்பது நல்லது. குளிர்ச்சியான காற்றும் ஆகாது. சுழல் விசிறிக்கு மிக அருகே படுக்கக் கூடாது.
வாசனை திரவியங்கள், ஊதுவத்திகள், கொசுவிரட்டிகள், சாம்பிராணி புகை, கற்பூரம், அடுப்பு புகை ஆகியவை ஆஸ்துமா நோயாளிகளுக்கு எதிரிகள்.
ஆஸ்துமா உள்ளவர்கள் வீட்டில் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அவற்றின் ரோமம், துர்நாற்றம், கழிவு ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆகாது.
செய்யக் கூடாதது
ஆஸ்துமா நோயாளிகள் புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். புகைபிடிப்பவர்கள் அருகேயும் இருக்கக் கூடாது.
வீட்டைச் சுத்தப்படுத்துதல், ஒட்டடை அடித்தல், கழிவறைகளில் ஆசிட் பயன்படுத்துதல், வண்ணம் பூசுதல், அதிக நறுமணப் பூக்கள் அருகே புழங்குவது போன்றவற்றைச் செய்யக் கூடாது. வெளியில் வாகனங்களில் செல்லும்போது முகமூடி அணிய வேண்டும்.
சில தொழிற்சாலைகளும்கூட ஆஸ்துமாவுக்குக் காரண மாகின்றன. ரசாயனத் தொழிற்சாலைகள், பஞ்சு மில், அரிசி மில், மாவு மில், சிமெண்ட் தொழிற்சாலை, நூற்பாலைக் கழிவுகளில் இருந்து வெளிப்படும் புகையும் தூசும் ஆஸ்துமாவுக்கு ஆகாது. இந்த இடங்களில் பணிபுரிவதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
தயிர், சர்பத், ரோஸ் மில்க், லஸ்ஸி, குளிர்பானங்கள், குளிர்ந்த தண்ணீர் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இளஞ்சூடான தண்ணீரைப் பருகுவது மிகவும் நல்லது.
ஏற்ற உணவு
சில உணவுப் பொருட்கள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது என மருத்துவ ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. குறிப்பாக வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்கள். ஆரஞ்சு, எலுமிச்சை, சிவப்பு மிளகு ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இவை ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆப்பிளும்கூட ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறுகின்றன ஆய்வுகள்.
தினமும் காலையில் மூச்சுப் பயிற்சி செய்வது மிகவும் நல்லது. பலூனை ஊதிப் பார்க்கலாம். காற்றுத் தலையணைக்குள் காற்றை ஊத முயற்சிக்கலாம். சிறுவர்கள் ஊதி விளையாடும் சோப்புக் குமிழ் ஊதுகுழலைக்கூட இதற்குப் பயன்படுத்தலாம்.