வைரஸ் வந்த பென் டிரைவ்..

சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது பென்டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்து விடுகிறது. 
இதுபோன்று வைரஸ் உள்ள பென்டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது. பென்டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை “பார்மட்” செய்து வைரஸினை நீக்கிவிடலாம்.

ஒரு வேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய? கவலையில்லை. அதனை எந்த விதமான மென்பொருளும் இன்றி சுலபமாக மீட்டு விடலாம். அது எவ்வாறு என காணலாம்.

பென் டிரைவை  கணினியில் இணைத்தப்பின்


1. START > RUN சென்று அதில் CMD என டைப் செய்து ENTER கீயினை அழுத்தவும்

2. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென்டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்து கொண்டு Command Promptல் அந்த டிரைவிற்கு செல்ல வேண்டும்.(உ.ம்) H டிரைவ் எனில் H:\> என மாற்றிக் கொள்ள வேண்டும்.

3. பின்பு H:\>attrib sh/s/d *.* என டைப் செய்ய வேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதி செய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து பென்டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும். II அழிக்க முடியாத பைல்களை அழிக்க சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக் குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம்.
அது போன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்க முடியும்.

1. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்து கொள்ள வேண்டும் 

2. எடுத்துக் காட்டாக சி டிரைவில் mydoc என்ற போல்டரில் உள்ளதெனில் அதன் சரியான Path தினை அறிந்து கொள்ள வேண்டும். C:\Documents and Settings\mydoc.txt 03. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரீஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options Menu தெரியும். அதில் Safemode With Command Prompt என்பதில் கிளிக் செய்து டாஸ் ப்ரம்ப்டில் நுழைய வேண்டும்.

4. இனி Command Promptல் துடிக்கும் புள்ளியில் cd C:Documents and Settings என டைப் செய்ய வேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிக்கின்றது. 

5. மேலே கூறியவாறு டைப் செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரி யில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும்.
=======================================================================
இன்று,
மே -31.

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்
  • தென்னாப்பிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது(1910)
  • டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது(1911)
  • மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது(1962)
  • தென்னாப்பிரிக்க குடியரசு அமைக்கப்பட்டது(1961)

மே 31 புகையிலை மறுப்பு தினம்.

ஏனெனில், நம்மை சுற்றிலும் மற்றவர்கள் புகைபிடிப்பதன்  மூலம் நம்மை சுற்றிலும் மாசு படிந்த காற்று நிறைந்து காணப்படுகிறது. 
நம்மிடையே புகை பிடிப்பதன் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதை விலக்குவதற்காக நாம்  எடுக்க வேண்டிய தடுப்பு முறைகள் குறித்தும் சர்வதேச அளவில் ஏராளமான கட்டுரைகளும் நூல்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. 
இன்னொரு பக்கம், புகை  பிடித்தல் குறித்த ஆராய்ச்சிகள் மருத்துவதுறையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டிருக்கிறது. இதுகுறித்த ஆராய்ச்சி முடிவுகள் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன.
எந்த ஆராய்ச்சி முடிவுகளுமே ‘புகை பிடித்தல் நல்லது’ என்று கூறாதபோதும், நம்மிடையே பலருக்கு புகை பிடித்தல் பழக்கம் ஒழியவில்லை என்பது நாம் கண்கூடாக  பார்க்கும் ஒன்றாகும்.

உலகளவில் மனிதனின் இறப்புக்கு இரண்டாவது மிக முக்கிய காரணமாக புகையிலை அமைந்துள்ளது. புகைப்பிடிப்போரும், புகையிலை பொருட்களான பான்பராக், குட்கா,  ஹான்ஸ் போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்தும் 60 சதவீதத்துக்கும் மேலானவர்களும் புற்றுநோய் சம்பந்தப்பட்ட நோய்களினாலேயே இறக்கின்றனர்.

தவிர, புகைப்பவர்களினால் அவர்களது வீட்டிலுள்ளவர்களும் மாசுபட்ட காற்றை சுவாசித்து பாதிக்கப்படுகின்றனர். 
சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள்,  மற்றவர்கள் விடும் புகையினால் இறந்து போவதாக உலக தொழிலாளர் நிறுவனம் கூறுகிறது.
 ‘புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருப்பதில்லை, புகை பிடித்துப்  பார்த்தவர்கள் அனைவரும் புகைக்கு அடிமையாவதில்லை.

முதன்முதலாக புகை பிடிக்கும்போது, நமது மூளையில் அந்த புகை ஏற்படுத்தும் வேதி மாற்றங்களே, நாம் புகைக்கு அடிமை ஆவோமா, இல்லையா என்பதை  நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதே சமீபத்தில் வெளியான மருத்துவ ஆராய்ச்சியின் முடிவு.
 ‘பத்து வயதுகளில் திருட்டுத்தனமாக புகை இழுத்துப்  பார்க்கும்போது, யார் மிக ஓய்வாகவும், இன்பமாகவும் இருப்பதாக உணர்கிறார்களோ, அவர்களே புகைபிடித்தலுக்கு அடிமையாகின்றனர்’ என்று ஆராய்ச்சி முடிவுகள்  கூறுகின்றன. 
புகைபிடிப்பதினால் மூளையில் பரவும் நிக்கோட்டின் புகை, எல்லோருடைய மூளையிலும் ஒரே வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. ஒருசிலருக்கு  அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், பலரிடம் அதிகப்படியான மாற்றத்தை நிகழ்த்திவிடுகிறது. 
இதனால்தான் முதன் முறையாக புகை பிடிக்கும்போது வரும்  உணர்ச்சிகள் இனம்புரியாத கலவையாக உள்ளன.

இந்த முதல் முயற்சி தரும் கிளர்ச்சியே, பிற்காலத்தில் நாம் புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமை ஆவோமா, இல்லையா என்பதை நிர்ணயிக்கிறது. இந்த கிளர்ச்சி நம்  உடலுக்கு கிடைத்தால், மீண்டும் அவற்றை மூளை எதிர்நோக்க ஆரம்பித்துவிடுகிறது. 
நமது செயல்பாடுகளின் பின்னணியில் இருக்கும் மூளையின் நேரடி கட்டளைகள்,  அந்த கிளர்ச்சி சுகத்தை நம் மனக்கண்ணில் அடிக்கடி நிகழ்த்திக் காட்டி, நம்மை புகைக்கு அடிமையாக்கி விடுகிறது.
 ‘சிறுவயதிலேயே குழந்தைகள் புகைபிடித்தலை  விளையாட்டாகக் கூட முயற்சித்துப் பார்க்கக்கூடாது என்பதற்கான முக்கியமான காரணமாக இதை எடுத்துக் கொள்ளலாம். 
வாரத்துக்கு நாற்பது மணி நேரம் சிகரெட் புகை  உலவும் இடங்களில் இருப்பவர்கள், அத்தகைய ஒரு சூழலில் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் இருக்க நேர்ந்தால், அவர்களை நுரையீரல் புற்றுநோய் உட்பட பல்வேறு  நோய்கள் தாக்குகின்றன.

‘புகை பழக்கத்துக்கு அடிமையான பலர், அதிலிருந்து விடுபடுவதற்காக புகையிலை மெல்லும் பழக்கத்துக்குத் தாவிவிடுகின்றனர். 
அது புகைபிடிப்பதைவிட, அதிக ஆபத்தான  பின்விளைவுகளை ஏற்படுத்தும்’ என்று அமெரிக்க ஆராய்ச்சி மருத்துவ நிறுவனம் தெரிவிக்கிறது.
 மனித சமுதாயத்தை சீரழிக்கும் இந்த புகைபிடித்தலை ஒழிப்பதற்காக,  1987-ல் உலக சுகாதார நிறுவனம் ஏப்ரல் 7, 1988-ஐ ‘உலக புகைக்காத நாளாக’ கொண்டாடத் தீர்மானித்தது.
 பின்னர், 1988-ல் முதல் ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம்  தேதியை ‘உலக புகையிலை மறுப்பு தினமாக’ கடைப்பிடிக்க தீர்மானம் நிறைவேற்றியது.
இன்றைய தினம் புகையிலை உபயோகிப்பதன் மூலம் ஏற்படும் ஆபத்துகளையும்  பின்விளைவுகளையும், அதைத் தவிர்ப்பதால் நோய்களில் இருந்து தப்பிப்பது பற்றியும் நாம் எடுத்துக் கூறுவோம்.

புகை பிடித்தலின் தீமைகளும், அதை தவிர்க்கும் முறைகளும் நம் அனைவருக்கும் தெரிந்திருந்தும், இளைய தலைமுறையினருக்கு பல சந்தர்ப்பங்களில் நாம் அதுகுறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை. ஒருசில ஊடகங்களின் மலிவான பிரசாரங்களை மீறி, நமக்கு சமூகத்தைக் காக்கும் கடமை உண்டு’ என்பதை உணர்ந்து, நாம்  விழிப்புடன் செயல்படுதல் அவசியம். 
இன்றே புகைபிடிப்பதை விலக்குவீர். 
நோயின்றி பல்லாண்டு காலம் வாழ்வீர்!

========================================================================

அரசு செலவில் ஆரம்பிக்கப்படும் திட்டங்களுக்கெல்லாம் தனது பெயரையும்,படத்தையும் மட்டுமே போட்டு அழகு பார்க்கும் ஆள்வோர் தமிழ் நாட்டில்.ஆனால் சிங்கப்பூரில் த்ண்ணீர் பாட்டலில் அழகாக திருக்குறளை அச்சிட்டு அதுவும் தமிழில் விற்பனை செய்கிறார்கள்.
என்ன செய்வது அம்மாவைத்தவிர அய்யனையோ வேறு எவனையோ  ஆளும் அம்மாவுக்கு பிடிக்காதே?ஆனால் தான் ஒரு காலத்தில் தூக்கி எறிந்த கண்ணகி சிலைக்கு தன அடிமைகளை வைத்து பூசை செய்யும் அளவு காலம் மாறியதை கருத்தில் கொள்ள வேண்டும் .
========================================================================
காதல் கைகூட காதல் பூட்டு.வேண்டுதல் இது பாரீஸ் கூத்து .

1947 இந்திய பிரிவினையின் போது அகதிகளுக்காக விடப்பட்ட  தனி ரெயில்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?