சுகாதாரம் தேவையா?
இந்த ஆண்டு பட்ஜெட்டில் பொது சுகாதாரத்துறைக்கு 33,152 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இது 30,645 கோடி ரூபாயாக இருந்தது. உலகத்திலேயே இந்திய அரசு மட்டும்தான் இவ்வாறு மிகக்குறைவான தொகை-உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 1.2 சதம் ஒதுக்குகிறது.
சமீபத்திய மத்திய பட்ஜெட்டிலும், வழக்கம் போல மக்கள் நல்வாழ்வுத்துறையும் பொது சுகாதாரமும் வஞ்சிக்கப்பட்டு உள்ளது. நூற்றுக்கணக்கான பொதுநல அமைப்புகளும் தனிநபர்களும் (மைக்ரோ சாப்ட் முதலாளி கோடீஸ்வரர் பில்கேட் உட்பட) பல ஆண்டுகளாக கத்தியும் கதறியும் கூட பொது சுகாதாரத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு உயர்த்தப்படவில்லை.
மத்திய அரசு தன் புறக்கணிப்பையும் அலட்சியத்தையும் தொடர்கிறது. ஏன் எல்லா மத்திய அரசுகளும் இவ்வாறு செய்கின்றன?
ஏன் அவை மக்களின் வாழ்வா சாவா பிரச்சனையில் இப்படி விளையாடுகின்றன?
பட்ஜெட் ஒதுக்கீடு
இந்த ஆண்டு பட்ஜெட்டில் பொது சுகாதாரத்துறைக்கு 33,152 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இது 30,645 கோடி ரூபாயாக இருந்தது. உலகத்திலேயே இந்
திய அரசு மட்டும்தான் இவ்வாறு மிகக்குறைவான தொகை-உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 1.2 சதம் ஒதுக்குகிறது.
இதை இரட்டிப்பாக்க 2.5 சதமாக - உயர்த்தப்போவதாக நமது அமைச்சர்கள் ஒவ்வொரு ஆண்டும் வாக்குறுதி தர தவறுவதேயில்லை!
இந்த ஆண்டு ஒதுக்கீடு வாக்குறுதிப்படி 100 சதம் உயராவிட்டாலும் குறைந்தபட்சம் 10 சதமாவது உயர்த்தப்பட்டிருக்கிறதே என்று ஆசுவாசப்பட வேண்டாம்.
உண்மையில் என்ன நடக்கிறது தெரியுமா?
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கடந்த ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில் இந்தத்தொகை ரூ.24,400 கோடியா குறைந்திருக்கிறது. அதாவது சுமார் 20 சதவீதம் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட குறைவாக செலவிடப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கடந்த ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில் இந்தத்தொகை ரூ.24,400 கோடியா குறைந்திருக்கிறது. அதாவது சுமார் 20 சதவீதம் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட குறைவாக செலவிடப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, 12வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் 3 ஆண்டுகளில், சுகாதாரத்துறைக்கு செலவழிக்கப்பட்ட தொகை ரூ.70,000 கோடி எனவும் தெரியவந்துள்ளது. இது செலவிடப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையான ரூ.2,68,000 கோடியில் வெறும் 25 சதவீதமே ஆகும்!
அதாவது இலக்குக்கும் நடப்புக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கவைக்கும் 75 சதவீதம்!!
இப்போது நிம்மதிப்பெருமூச்சு விட முடியுமா உங்களால்?
சிலர் நாம் இந்தப் புள்ளி விபரங்களை பூதாகரமாக்கி காட்ட முயல்வதாகக் கருதக்கூடும். அப்படிப்பட்டவர்களின் சிந்தனைக்கு பின் வருபவனவற்றை சமர்ப்பிக்கிறோம்.
சமீபத்தில் நமது இந்திய அரசு தேசிய பொது சுகாதாரக் கொள்கை 2015ஐ வெளியிட்டது.
அதிலும் வழக்கம்போல் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2.5 சதம் பொது சுகாதாரத்துக்கு ஒதுக்கப்போவதாக உறுதிமொழி தர தவறவில்லை.
ஆனால் அந்த செலவினத்திற்கு வருவாய் எப்படி வருமாம் தெரியுமா?
புதிதாக ‘பொது சுகாதாரம் செஸ்’ என வரிவிதிக்கப்போகிறார்களாம்.
இதன் அர்த்தம் என்ன?
பொது சுகாதாரத்துக்கு செலவிட இன்றைக்கு கையில் பணமில்லை.
நாளை சம்பாதித்து செலவிடப் போகிறோம் என்பதுதான், இல்லையா?
இந்த புதுவரி ஏற்கெனவே 2005 முதல் நடைமுறையில் உள்ள ‘கல்வி செஸ்’ போன்றதாக இருக்கும் எனத் தெரிகிறது.
கடந்த பத்தாண்டுகளாக ‘கல்வி செஸ்’ வசூலித்ததால் நமது கல்வித்துறை முன்னேறிவிட்டதா?
ஆரம்பக்கல்வி முதல் தொழிற்கல்வி வரை தனியார்மயமாகிவிட்டதைத்தான் கடந்த பத்தாண்டுகளில் கண்டிருக்கிறோம்.
கல்வி முதலாளிகள் என்ற புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கியிருக்கிறோம்.
ஆசிரியரோ, உபகரணங்களோ, கழிப்பறையோ கூட இல்லாமல் அரசுப் பள்ளிகள் மூடப் படுவதை கண்டு வெதும்பியிருக்கிறோம்.
இந்த புது சுகாதார வரியாவது மக்களின் சுகாதார செலவுகளை நோய்களுக்காக கையில் இருந்தும் கடன் வாங்கியும் லட்சக்கணக்கில் செலவிட நேருவதை தடுக்குமா?
அதற்கு எந்த உத்தரவாதமோ, உருப்படியான திட்டங்களோ இந்த புதிய சுகாதார கொள்கையில் இல்லை.
அதற்கு எந்த உத்தரவாதமோ, உருப்படியான திட்டங்களோ இந்த புதிய சுகாதார கொள்கையில் இல்லை.
அது தற்செயலாக விடுபட்டு போயிருக்கும் என்று நினைக்க முடியுமா?
மத்திய அரசின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை என்பதற்கு இன்னுமொரு உதாரணத்தையும் தர முடியும்.
சமீபத்தில் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தாத்ரேயா ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி தொழிலாளர் ஈட்டுறுதி கழகம் நடத்திக்கொண்டிருககும் பதின்மூன்று மருத்துவக்கல்லூரிகளையும் மூடப் போகிறார்களாம். அதற்கு அவர் அறிவித்த காரணம் இஎஸ்ஐயில் பணம் இல்லை என்பது, அந்தத் தொகை ஏதோ பல்லாயிரம் கோடி ரூபாய் என்று நினைத்து விடாதீர்கள்.
அவரின் சொற்படியே அது வெறும் 80 கோடி ரூபாய்தான் (ஒரு மருத்துவக்கல்லூரியை நடத்த, ஒரு ஆண்டுக்கு) இஎஸ்ஐயில் இந்த பணம் இல்லை என்றே வைத்துக்கொண்டாலும் அதை மத்திய அரசு மானியமாக இஎஸ்ஐக்கு வழங்க முடியாதா?
ஆனால் அவர்கள் அந்த மருத்துவக்கல்லூரிகளை இழுத்து மூடு வதிலும் அல்லது மாநில அரசின் தலையில் கட்டுவதிலும் குறியாக இருக்கிறார்கள். இது எதைக்காட்டுகிறது?
பொது சுகாதாரத்துறைக்கு செலவிட மத்திய அரசுக்கு மனமில்லை என்பதைத்தானே?
(கடுமையான எதிர்ப்புகளுக்குப்பின் இந்தக் கல்லூரிகளை இஎஸ்ஐ கார்ப்பரேசன் தொடர்ந்து நடத்தும் என சமீபத்தில் அறிவித்து இருக்கிறார்கள்)
கடந்த ஆண்டு மே மாதவாக்கில் இந்திய கார்ப்பரேட் மருத்துவமனைகள் அடிக்கும் கொள்ளைகளும் அவை நோயாளிகளை எப்படி எல்லாம் ஏமாற்றுகின்றன என்பதும் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் பத்தரிகையில் கட்டுரையாக வெளிவந்த போது நாடே திகைத்துப்போனது.
தனியார் மருத்துவமனைகளின் கொள்ளையை தடுக்க அரசே இந்தியாவின் எல்லா மாவட்டங்களிலும் பெரிய மருத்துவமனைகளையும், மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
அதைத்தவிர மருத்துவத்துறையில் தனியார் லாப வேட்டையைத் தடுக்க வேறு வழியில்லை என்பதை இந்தக் கட்டுரையாசிரியர் மும்பையில் இருந்து வெளியாகும் வார பத்திரிகையில் எழுதியது.
வெளிவந்து ஆதரவைக் குவித்தது.
ஆனால் தற்போது நமது மத்திய அரசோ, நேர் மாறாக, செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு மருத்துவக்கல்லூரிகளையும் மூட எத்தனிக் கிறது. இவர்கள் நம்மை தனியார் மருத்துவக் கொள்ளை யிலிருந்து காப்பாற்றுவார்கள் என்று எப்படி நம்புவது?
ஒளிந்திருக்கும் உண்மை.
மீண்டும் மீண்டும் பொது சுகாதாரத்துக்கான பட்ஜெட்டை அதிகரிக்க வேண்டும் என கோஷங்கள் எழுவதால், மெதுவாக மத்திய அரசு தன் முகமடியை கழற்றி, தன் உள்ளக்கிடக்கையை வெளியிட ஆரம்பித்திருக்கிறது.
2015-16க்கான பட்ஜெட்டில் தனிநபர் சுகாதார காப்பீட்டுத்திட்டத்திற்கு செலுத்தப்படும் வருடாந்திர பிரீமியத்திற்கான வருமானவரி விலக்கை ரூ.15,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.
மத்திய அரசு, அதற்காக சந்தோஷப்படும் முன் இதுபற்றி பொருளாதார நிபுணர், திரு.ரவிடக்கல் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்.
“இந்த வருமானவரி சலுகை எளிய இந்தியர்களுக்கு நன்மை பயப்பதல்ல. இது “உங்கள் சுகாதாரம் உங்கள் பொறுப்பு”
என தட்டிக்கழிக்கும் மோடி அரசின் செய்தியை தெரிவிக்கிறது” என்கிறார் அவர் (டைம்ஸ் ஆப் இந்தியா 1.3.15)
நாங்கள், நீங்கள் செலுத்தும் மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு வருமான வரி சலுகை வேண்டுமானால் தருகிறோம்.
ஆகவே மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் நோய்க்கு உங்கள் செலவில் வைத்தியம் செய்து கொள்ளுங்கள்” என்பதுதான் இந்த அறிவிப்பில் மறைந்திருக்கும் செய்தி!
வெள்ளையானைநமது அரசுகளின் பொருளாதார ஆலோசகர்கள், அடிக்கடி ‘பற்றாக்குறை பட்ஜெட், வருவாய் இழப்பு, மானியச்சுமை’ என்று பேசுவதை படித்திருக்கிறோம். அவர்கள் எப்போதுமே பொது சுகாதாரத்துறையை ‘அதிகமாக தின்று தீர்த்து, பதிலுக்கு எதுவுமே தராத ‘வெள்ளையானையாகத்தான் கருதுகிறார்கள்.
அந்தத்துறைக்கு அதிகமாக ஒதுக்கீடு வேண்டாம் என அவர்கள்தான் அரசுகளுக்கு அறிவுரை கூறியிருப்பார்கள்.
ஒருவேளை பட்ஜெட் செலவுச்சுமையை (அல்லது மக்கள் தொகை சுமையை?) குறைக்க இதுவே அவர்களின் வழிமுறையாக இருக்கலாம்.
யார் கண்டது?
எது எப்படியாயினும் மோடி அரசின் உள்ளக்கிடக்கையை இந்திய இந்த பட்ஜெட் காட்டிவிட்ட து.
========================================================================
அடுத்த வாரம் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வு எழுத, மாடு ஒன்றுக்கு அனுமதி அட்டை வழங்கிய வினோதமான சம்பவம் காஷ்மீரில் நடந்துள்ளது.
பாலிடெக்னிக் டிப்ளமா படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு இந்த அனுமதிச்சீட்டை காஷ்மீர் மாநிலத்தின் தொழில்கல்விக்கான நுழைவுத் தேர்வு வாரியம் அனுப்பியுள்ளது.
பாலிடெக்னிக் டிப்ளமா படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு இந்த அனுமதிச்சீட்டை காஷ்மீர் மாநிலத்தின் தொழில்கல்விக்கான நுழைவுத் தேர்வு வாரியம் அனுப்பியுள்ளது.
அதில் கச்சீர் கா (பழுப்பு பசு) என்ற மாணவிக்கான அனுமதிச் சீட்டு என்றும் மாணவியின் தந்தையார் பெயருக்குண்டா பகுதியில் குரா தந்த் (செங்காளை) எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பசுவுக்கு பெமினாவில் உள்ள கவர்ண்ட்மெண்ட் டிகிரி காலேஜில் வரும் மே 10 அன்று தேர்வு எழுதுவதற்கான இருக்கை ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பசுவுக்கு பெமினாவில் உள்ள கவர்ண்ட்மெண்ட் டிகிரி காலேஜில் வரும் மே 10 அன்று தேர்வு எழுதுவதற்கான இருக்கை ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவி[மாட்டு]யின் கையொப்பம் பகுதியில் மாட்டின் வால் அச்சிடப்பட்டுள்ளது.
இதை அப்படியே கடைபிடியுங்க.கல்வித்தரம் ஓகோனு ஆயிடும்.
========================================================================
ஊளைச்சதையை குறைக்க,
ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் இன்று பெரும் பிரச்னையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச்சதை.
இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது, பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது.
வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கி சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.
பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி போதுமான சத்தான உணவு இல்லாததும், ஒரு காரணமாக இருக்கிறது. இது தவிர அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இது போன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்று பார்ப்போம்.
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு
பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி போதுமான சத்தான உணவு இல்லாததும், ஒரு காரணமாக இருக்கிறது. இது தவிர அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இது போன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்று பார்ப்போம்.
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு
[பெருஞ்சீரகம்]கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச்சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.
சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இது தவிர மந்தாரை வேரை நீர் விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
நன்றி:தினகரன். |
சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச்சதை குறையும் மேலும் சதை போடுவதைச் தடுக்க வேண்டுமென்றால் தேநீரில் எலுமிச்சம்பழச்சாறு கலந்து காலையில் குடித்து வர வேண்டும்.
இது தவிர வாழத்தண்டு சாறு, அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றைொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக காலையில் அரைமணி நேர நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும் உடல் எடையும் குறையும். புத்துணர்வாகவும் இருக்கும்.
======================================================================
இன்று,
மே -04.
- உலக தீயணைப்பு படையினர் தினம்
- சீனா இளைஞர் தினம்
- கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பிறந்த தினம்(1767)
- கனடா கடற்படை உருவாக்கப்பட்டது(1910)
- அமெரிக்காவில் பனாமா கால்வாய் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டது(1904)