சனி, 23 மே, 2015

எப்படி செய்வது நீர் சிகிச்சை ?’நீர் சிகிச்சை செய்வதால் நல்ல பலனுண்டு,நான் நீர் சிகிச்சை செய்து பயனடைந்தேன் என்றெல்லாம் சிலர் கூற கேட்டிருக்கலாம்.ஆனால் அது என்ன நீர் சிகிச்சை என்று மலைத்திருக்கலாம்.”

 நமது உடலில் தட்ப-வெப்பநிலை, உணவு பழக்கம், மாசு உள்பட பல காரணங்களால் நீரிழிவு, ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, மூலம், சிறுநீரக பாதிப்பு, தோல் வியாதி உள்பட பல நோய்கள் தாக்கு கிறது. 
அந்த பாதிப்பில் இருந்து குணமாக மருத்துவரை தேடி செல்கிறோம். 
அவர்கள் கொடுக்கும் மருந்துகளை ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்கி பயன்படுத்துகிறோம். 

ஒரு நோய் குணமாக பயன்படுத்தும் மருந்து மூலம் மற்றொரு நோய் உருவாகுவதும் தவிர்க்க முடியாததாகும்.

இந்த நோய்கள் வராமல் தடுப்பதும், வந்திருந்தால், அதிகரிக்காமல் தடுக்கும் மாமருந்தாக தண் ணீர் உள்ளது. 

நாம் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் சப்ளை செய்கிறோமோ அவ்வளவு ஆரோக்கிய மாக இருக்க முடியும். 

அதற்கு கீழ்காணும் வழிமுறைகள் தினமும் பின்பற்ற வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் 1.25 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 

அதன்பின் ஒரு மணி நேரம் எதுவும் சாப்பிடக் கூடாது. 
பின்காலை சிற்றுண்டி எடுத்து கொள்ளவேண்டும். 

சாப்பிட்ட பின் உடனடியாக தண்ணீர் குடிக்காமல், 2 மணிநேரம் கழிந்தபின் தண்ணீர் குடிக்க வேண்டும். 
பகல் உணவு எடுத்து கொள்வற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் மீண்டும் 1.25 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 
சாப்பிட்டபின் 2 மணிநேரம் கழித்து 1.25 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல் இரவு உணவு எடுத்து கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1.25 லிட்டர் தண் ணீர் குடிக்க வேண்டும். 

தினமும் குறைந்த பட்சம் 4 லிட்டர் அதிக பட்சம் 6 லிட்டர் தண்ணீர் குடித்தால், எந்தநோயும் தாக்காமல் ஜீரோமெடிஷன் என்ற நிலையில் ஆரோக்கியமான வாழ்க்கை அனுபவிக்கலாம்.

இப்படி தினமும் தவறாமல் பயன்படுத்துவதின் மூலம் இருதய பாதிப்பு, ஆஸ்துமா, மூச்சுதிண றல், ரத்தஅழுத்தம், நீரிழிவு, சிறுநீரகம், கை, கால் வீக்கம், உடல் எடை கூடுதல், உடல் பருமன், நெஞ்சு எரிச்சல், கண் பாதிப்பு போன்ற மனி தரை வாட்டும் பல நோய்களில் இருந்து முழுமை யாக குணமடையலாம். 
மேலும் நமது உடலில் உள்ள கை, கால் மணி கட்டு, மூட்டு பகுதியில் ஒருவிதமான பசை உரு வாகிறது. அதுகெட்டியாக மாறினால், கை, கால்கள் மடக்க முடியாது. 

சிலருக்கு நடப்பது, கை, கால்கள் அசைக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். மேலே குறிப்பிட்டுள்ளபடி தினமும் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டால் கெட்டியாக இருக்கும் பசைகள் மிருதுவாகும். 

அதன் மூலம் ரத்த நாளங்களில் சீரான ரத்த ஓட்டமும், தசைப்பிடிப்பு, எலும்பு இருக்கம் உள்பட பல உபதை களில் இருந்து முழுமையாக விடுபடலாம். 

நன்றி:தினகரன்.
===========================================================
எப்படி தருவது.தீர்ப்பை...?
------------------------------------------
கடைசி வார்த்தை மிச்சம் இருக்கிறது!
---------------------------------------------------------------
                                                                       - வெ.ஜீவகுமார்


கடந்த இரண்டு மாதமாக இதுதான் நடந்தது;பையோ துண்டு காகிதமோ உள்ளே கொண்டு போக முடியாது.
கேமரா, கைபேசி உள்ளிட்ட எந்த மின்சாதனத்துக்கும் அனுமதி இல்லை. உள்ளே இருந்தும் சிறு துண்டு தாளும் வெளியே வர முடியாது பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் காலை 9.30க்கு நீதிபதியின் கார் நுழையும்.
 மாலை 6.50க்கு தான் திரும்ப புறப்படும்.
நீதிபதி சிக்கராசப்பா குமாரசாமி தன் அறையில் (சேம்பர்) தீர்ப்பு எழுதிக் கொண்டே இருந்தார்.
இயற்கை உபாதைகளைத் தவிர வேறு எதற்கும் அவர் எழுந்துபோகமாட்டார்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்தப் பணி நடந்தது. இந்தப் பணிக்கு 7 பேரை தேர்ந்தெடுத்தார்.
அதிலும் நம்பிக்கையான 3 பேர்களையே தட்டச்சுக்கு பயன்படுத்தினார். கணக்கு கூட்ட கழிக்க தனியாக ஆடிட்டர் குழு இருந்தது.
 தீர்ப்பின் கடைசி 2 பக்கங்களை மட்டும் தீர்ப்பு தேதியன்று காலை 7.30க்கு அவரே தயாரித்துள்ளார்.
 11.5.2015 காலை 11 மணிக்கு நீதிமன்ற அறை எண் 14ல் 3 நிமிடங்களில் தீர்ப்பை சொல்லி முடித்துவிட்டார்.
எப்படியோ தீர்ப்பு கூறிய அடுத்த 24 மணி நேரத்தில் கூட்டல் கணக்கில் தவறு நடந்துவிட்டதாக கர்நாடக அரசு தரப்பு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா கூறிவிட்டார்.
வருமானத்தைவிட கூடுதலாக 20 சதவீத சொத்து இருக்கலாம் என்று நீதிபதி குமாரசாமி பெருந்தன்மையாக கூறியிருந்தார்.

முறையாக கணக்கு போட்டால் இந்த அளவு 76.75 சதவீதம் வரும் என்று ஆச் சார்யா திடுக்கிட வைத்தார்.
கிருஷ்ணானந்த் அக்னி கோத்ரிவழக்கின் 10 சதவீதம் அளவீடோ ஆந்திர அரசின் சுற்றறிக் கையான 20 சதவீதம் எல்லையோ இப்போது இல்லை. 1988ல் ராஜீவ் காலத்தில் அவை காலாவதியாகிவிட்டன என்ற வாதமும் இப்போது முன்வருகிறது. ஆயிரம் இருந்தும் என்ன கூட்டலில் கோட்டைவிட்டோமே என்பதும் ஒரு தரப்பு பிரச்சனையாக இருக்கிறது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு 1136 பக்கம். பெங்களூரு உயர்நீதிமன்றம் தீர்ப்பு 919 பக்கம்.
எனினும் கடைசி 30 பக்கங்களில் தாம் வழக்கு புதிதாக விவாதிக்கப்படுகிறது.
மற்றவை பழைய வரலாறுதான்.இவை ஒரு புறம் இருக்க இந்த தீர்ப்பு வழங்கப்படு வது குறித்து கடைசியாக உச்சநீதிமன்றம் சில ஆணை களை வழங்கி இருந்தது.
அதற்கான பின்னணியை பார்ப்போம்.
18 ஆண்டுகள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. சுமார் 160 முறை வாய்தா மாற்றப்பட்டது. இதற்கு 90 சதவீதம் ஜெயலலிதா தரப்பினர்தான் காரணம். இறுதியில் நீதிபதி குன்ஹா 27.9.2014ல் ஜெயலலிதா தரப்பினரை தண்டித்தார்.
 பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் பிணை கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றம் போயினர். 
உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து ஆர்வத்துடன் வழக்கை எடுத்துக் கொண்டார்.
நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு ஜெயலலிதா தரப்பினருக்கு பிணை வழங்கியது.
2 மாதங்களில் ஜெயலலிதா தரப்பினர் ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
பெங்களூரு உயர்நீதிமன்றம் தனி அமர்வு ஏற்படுத்தி மேல்முறையீடு வழக்கை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 17.10.2014ல் உத்தரவிட்டது.
பெங்களூரு உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வில் ஜனவரி 5 துவங்கி மார்ச் 11 வரை மேல்முறையீடு விசாரணை நடந்தது. 41 நாட்கள் நடந்ததில் ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர்கள் 35 நாட்கள் நீதிபதி முன்பு நேரில் வாதம் செய்தனர். ஜெயலலிதாவுக்காக உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞர் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வரராவ், பி.குமார், சசிகலாவுக்காக கேரள முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பசந்த் சுதாகரன், இளவரசிக்காக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதந்திரம் ஆகியோர் நேரில் தோன்றி வாதிட்டனர்.
ஜெயலலிதா தரப்பினர் 400 பக்கங்கள் எழுத்து மூலமாக வாதுரை தாக்கல் செய்தனர்.
 மீதம் நாட்களில் ஜெயலலிதா தரப்பில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் அந்த பணியினை செய்தார். 
ஆக 41 நாட்களும் ஜெயலலிதா வகையறாவுக்குத்தான் சொந்தம். சுப்பிரமணியசுவாமி பவானிசிங்காலும் விரும்பப்பட்டவராக இருந்தார். சொற்ப அளவு அவர் வாதமும் இருந்தது.
தொடர் நிகழ்வுகளில் பவானிசிங் அரசு வழக்கறிஞர் என்பது இல்லா நிலையாக்கப்பட்டது.
க.அன்பழகன் மனுமீது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கிவிட்டது.
அதன்படி எதிர் தரப்பில் பேராசிரியர் க.அன்பழகன் 81 பக்கத்திலும் கர்நாடக அரசின் தரப்பில் பி.வி.ஆச்சார்யா 18 பக்கங்களிலும் எழுத்து மூலமான வாதுரை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஒன்றரை நாள் அவகாசம் தந்தது.
அவர்கள் நேரில் வாதம் செய்ய 
ஒரு வினாடி கூட நேரம் தரப்படவில்லை.
இதனை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு (நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி.பந்த் அடங்கியது) உணர்ந்து இருந்தது. இதனால்தான் தீர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்று சில கருத்துக்களை கூறியது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றத்தின் முக்கியத்துவத்தை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்தில் கொள்ள வேண்டும். ஊழல், சமூகத்தை எப்படி (கரையான் போல) அரித்து வருகிறது என்பது குறித்து உயர்நீதிமன்றம் விழிப் புணர்வோடு இருக்க வேண்டும். நீதிமன்றத்தின் முன்னுள்ள சாட்சியங்களை முழுமையாகவும் ஒருங்கிணைத்தும் மதிப்பீடு செய்து தீர்ப்பளிக்க வேண்டும். விருப்பு, வெறுப்பின்றி அளிக்கும் தீர்ப்பு பாரபட்சமின்றி தீர்க்கமாக எடுத்துரைக்கப்பட வேண்டும்.
உச்சநீதிமன்றம் ஏன் இவ்வாறு அசாதாரணமாக தலையிட்டது?செப்டம்பர் 27ல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அரசு தரப்பில் கர்நாடகம்தான் வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்.
தமிழக அரசு இந்த உரிமையை பறித்தது.
அடுத்த 48 மணி நேரம் முடிவதற்குள் செப்டம்பர் 29ல் தமது எதிரி வழக்கறிஞராக பவானிசிங்கை அஇஅதிமுக அரசு தானே நியமித்தது.எதிர்காலம் பற்றிய அச்சத்தில் தமிழக அரசு செயல்பட்டது. தமிழக அரசு செய்தது விஷத்தை பாய்ச்சும் செயல்.
அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று உச்சநீதிமன்றம் கூறியது.சசிட்டால் - எதிர் - மகாராஷ்டிரா அரசு, சுப்பிரமணிய சாமி எதிர் சிபிஐ வழக்கு போன்ற வழக்குகளை தம் உத்தரவில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
 “ஒரு நீதிபதி அளிக்கும் தீர்ப்புதான் அவருக்கான ஆன்ம பரிசோதனை.
நீதிபதி தன் கடமையிலிருந்து தவறக்கூடாது. பலவீனத்தையும் தடுமாற்றத்தையும் தவிர்க்க வேண்டும் என்று அந்த தீர்ப்பு பகர்ந்தது.இவ்வழக்கில் அரசியல் சாசன அமர்வுக்கு வித்திட்ட மூலத்தீர்ப்பு மேல்முறையீட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், பானுமதி வழங்கிய தீர்ப்பாகும். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு போனது.
முந்தைய தீர்ப்பில் நீதிபதி மதன் பி.லோகுர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
ஒரு கிரிமினல் வழக்கை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு இந்த மேல்முறையீடு வழக்கு ஒரு சான்று.
கிரிமினல் வழக்குகளில் நீதி வழங்கும் முறை தோற்றுவிட்டது.
இதை சீர்படுத்த வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது என்று கூறினார்.
இவ்வளவு எச்சரிக்கைகளுக்குப்பிறகு நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கி உள்ளார்.
உயர்நீதிமன்ற அறை 14லிலேயே ஜெயலலிதா தரப்பினர் வாழ்க கோஷம் எழுப்பினர்.உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணையில் உச்சநீதிமன்றம் விவாதித்த மையக்கருத்து பவானிசிங் பற்றியதுதான்.
பவானிசிங் எழுத்து மூலம் தாக்கல் செய்த வாதங்களை ஏற்கக்கூடாது என்று அரசியல் சாசன அமர்வு கூறியது.
பவானிசிங் நியமனம் கர்நாடக சட்ட அதிகாரி (நியமனம் மற்றும் பணி நிபந்தனை) விதிகள் 1977ன்பிரிவு 30க்கு எதிரானது என்றும் இந்த தீர்ப்பு கூறியது.இவை எல்லாம் விபத்தா?
வேடிக்கையா?
பெங்களூரு உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு சிறப்பு விசாரணையில் பவானிசிங் வாதிட்டதை துவக்கத் திலேயே தவிர்த்திருக்க முடியாதா?
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தரப்பில் இதற்கு தொடர்ந்து முறையீடு இருந்தது.
அக்டோபர் 17.10.2014ல் இந்த மேல் முறையீட்டுக்கான தனி அமர் விற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
5.1.2015ல் விசாரணை துவங்கியது.
 இதற்கு முன்பாகவே 26.12.2014ல் மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங் அரசு வழக்கறிஞராக இருக்கக்கூடாது என்பதற்கான முயற்சிகள் க.அன்பழகன் தரப்பில் துவங்கப்பட்டன.
இதற்கான கடிதத்தை க.அன்பழகனின் வழக்குரை ஞர்கள் கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் கவுஷிக் முகர்ஜியிடமும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவிடமும் நேரில் கொடுத்தனர். இதன் நகல்கள் உயர்நீதிமன்ற பதிவாளர் தேசாய், மாநில அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரிடமும் கொடுக்கப்பட்டது.
 பலன் இல்லை.
இதேபோல் நீதித்துறையில் பெங்களூரு உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமியிடமும் இந்த முறையீடு நடந்தது.
 வழக்கு விசாரணை துவங்கிய 5.1.2015ல் நீதிபதியிடம் இதற்கான மனுவை க.அன்பழகனின் வழக்கறிஞர் குமரேசன் தாக்கல் செய்தார்.
எனினும் நீதிபதி இந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.
பிறகு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நாசீர் அமர்வு,
ஆனந்த பைரா ரெட்டி அமர்வு, தலைமை நீதிபதி வகேலா மற்றும் அசோக் பி.இன்செகரி அமர்வு மற்றும் நீதிபதிகள் என்.குமார், பி.வீரப்பா அமர்வு என்று எல்லா அமர்வுகளிலும் (நீதிபதி வகேலா அமர்வில் மட்டும் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றச் சொல்லி பவானிசிங் கோரிக்கை வைத்தார். இந்த அமர்வும் மாற்றப்பட்டது).
பவானிசிங்குக்கு சாதகமான உத்தரவுகளே கிடைத்தன.
இதற்கு பிறகுதான் உச்சநீதிமன்றத்திற்குள் க.அன்பழகனின் இந்த முறையீடு வழக்கு நுழைகிறது. அங்கும் நீதிபதிகள் மதன் பி.லோகுர், பானுமதி அமர்வு பிறகு அரசியல் சாசன அமர்வு என்று இந்த மனு மீண்டும் பயணித்தது. பவானிசிங் நியமனம் முறைகேடு என்று கடைசியில் உத்தரவிடப்பட்டது.
சொல்லப்போனால் பவானிசிங் அரசு வழக்கறிஞராக இருக்க முடியாது என்பதை நீதிபதி குமாரசாமியே வழக்கு விசாரணைகளில் குறிப்பிட்டார். ஒருமுறை நீதிபதி பவானிசிங்கிடம் பின்வருமாறு கூறினார்.
அரசு வழக்கறிஞர் சிவில் வழக்காக இருந்தால் மட்டும்தான் கீழ் நீதிமன்றத்தில் இருந்து தொடர்ந்து மேல்முறையீடு விசாரணையிலும் ஆஜராகலாம். ஆனால் கிரிமினல் வழக்கில் அப்படி தொடர்ந்து ஆஜராக முடியாது.
சட்டத்துக்கு புறம்பாக எப்படி இந்த வழக்கில் ஆஜரானீர்கள். கிரிமினல் அப்பீல் வழக்குகளில் அரசு சிறப்பு வழக்கீலாக நீங்கள் ஆஜராக கர்நாடக மாநில அரசின் அனுமதி பெற வேண்டும்.
 எந்த அடிப்படையில் இன்று ஆஜராகிறீர்கள்?ஒரு புறம் இவ்வாறு கேட்டாலும் நீதிபதி குமாரசாமி பவானிசிங்கை ரசித்தார்.
பவானிசிங்கை பெருமைப்படுத்தினார். திமுக தரப்பு வழக்கறிஞர்களை விரட்டினார். நீதிபதி குமாரசாமி திமுக வழக்கறிஞர் குமரேசனிடம்... நீங்கள் அரசு வழக்கறிஞராக ஆசைப்படுகிறீர்களா?
வக்கீல் : அதற்கு சட்டத்தில் இடம் இல்லை.
நீதிபதி : அப்புறம் எதற்கு இங்கு உட்கார்ந்து இருக்கிறீர்கள்?
வக்கீல் : அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இருக்கிறேன்.
நீதிபதி : அவருக்கு 30 வருட அனுபவம் உள்ளது.
பவானிசிங்தான் மேல்முறையீட்டு விசாரணை நடந்த 41 நாட்களும் அரசு வழக்கறிஞர்.

ஜெயலலிதா தரப்பை எதிர்த்து வழக்கு நடத்த யாருக்கும் அனுமதி இல்லை. இதனால் தான் தீர்ப்பு முடிந்த பிறகு கர்நாடக அரசு வக்கீல் ஆச்சார்யா கூறினார்.
“ஒரே நாளில் பரிசீலித்து மிக வலுவான எழுத்துப்பூர்வ வாதங்களை நாங்கள் செய்வது மனித சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம்... வாய்மொழி வாதத்தில் விரிவாக விளக்கம் அளிக்க வாய்ப்பு கிடைக்கும். இது இல்லாமல் போனது கர்நாடக அரசு தரப்புக்கு பெரும் பலகீனம். இது ஒரு தலைப்பட்ச விசாரணை. 18 ஆண்டுகள் இழுத்த வழக்குக்கு மேலும் 6 மாதம் அவகாசம் கொடுத்தால் என்ன தவறு?...

தொடர்ச்சி நாளை
நன்றி:தீக்கதிர்.
=================================================================================