நீதி தேவதை யின் கண்கட்டு .விலகியுள்ளதா?

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதுள்ள சொத்துகுவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நாளை ( திங்கள் கிழமை) வெளியாக உள்ளது. 18 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருக்குமா என அனைவரின் மனதிலும் கேள்வி எழுந்துள்ளது. இப்போது இந்த வழக்கில் தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்று தெரிவதற்கு முன், வழக்கின் போக்கு எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.
====================================================
 ஜெயலலிதா முதல் அமைச்சராக ஆவதற்கு முன்பு அவருக்கு இருந்த சொத்து மதிப்பு அதாவது 1-7-1991 அன்றைய தேதியில் 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய். ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை ஐந்தாண்டுகள் அனுபவித்து முடிந்த பிறகு 12-5-1996 அன்று ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 ரூபாயாகும். வரும்மானமே இல்லாமல் எப்படி இவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்பதுதான் வழக்கு...
பதவிக்கு வரும் முன் இவர்களுக்கு 17 சொத்துகள் மட்டுமே இருந்தன. வழக்கு காலம் என்று குறிப்பிடப்படும் 1991-96 காலகட்டத்தில் இது 306 சொத்துகளாக உயர்ந்துள்ளன. இதில் 289 சொத்துகள் பல வழிகளில் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டவை....
ஜெயாவும் அவர் தோழி சசிகலாவும் சேர்த்துவைத்துள்ள சொத்தின் மதிப்பு பல நூறு கோடிகள் பெரும்.... பல ஏக்கர் பரப்புள்ள பையனூர், சிறுதாவூர் பங்களாக்கள், ஹைதராபாத் திராட்சை தோட்டம், பல நூறு ஏக்கர் பரப்பளவிலான கொடநாடு தேயிலை தோட்டம்....என்று பட்டியல் நீளுகிறது.....இந்த சொத்துக்களின் மதிப்பும் ஐந்தாயிரம் கோடியை தாண்டும்..
.=======================================================================
குற்றவாளி ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியிடம் வைக்கப்பட்ட வாதங்கள்:


1. சுதாகரன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் இல்லை; சுதாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக வைத்திருந்தார். அதன் மூலம்தான் அவர் சுதாகரனின் திருமணத்திற்கு செலவு செய்ததாக அரசு தரப்பு வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானது. சுதாகரன் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் இல்லை.

2. சுதாகரன் திருமணத்திற்கு ஜெயலலிதா செலவு செய்யவில்லை. சுதாகரனின் திருமண செலவுகள், பந்தல் செலவுகள் என அனைத்து விதமான செலவுகளையும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர்தான் செய்தனர். உணவு தயாரிப்பு உட்பட அனைத்து செலவுகளையும் சிவாஜி குடும்பத்தினரே செய்தனர்.

3. ஜெயலலிதா - சசிகலா இடையே கூட்டுச்சதி என்பது இல்லை. ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் ஒரே வீட்டில் குடியிருந்ததால் அவர்கள் கூட்டுச்சதி செய்தனர் என்று யூகித்து தீர்ப்பு வழங்கியுள்ளது தவறானது. கூட்டுச்சதிக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை.

4. ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் அனைத்தும் வழக்கின் காலத்திற்கு முன்பு வாங்கப்பட்டவை. இந்த வழக்கின் காலமான 1991 - 1996க்கு முன்பே ஜெயலலிதாவிடம் தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்துள்ளன.மேலும் 91 விதமான கை கடிகாரங்கள் என்பது சுத்த பொய்யானது. ஜெயலலிதாவிடம் மொத்தம் 70 கை கடிகாரங்கள் மட்டுமே உள்ளன.

5. வீட்டை புதிப்பிக்க செய்யப்பட்ட செலவுகள் அனைத்தும் மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டுள்ளன. வீட்டில் பதித்துள்ள கிரானைட் மற்றும் டைல்களின் விலை மதிப்பு மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டுள்ளது. ஒரு கிரானைட் கல்லின் மதிப்பு 150 முதல் 250க்குள் தான் இருக்கும். அதை 850 ரூபாயாக மிகைப்படுத்தி காண்பித்துள்ளனர்.
குற்றவாளி உட்கார சொகுசு தனி நாற்காலி 
6. நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் சார்பாக மாத சந்தாக்கள் பெறப்பட்டுள்ளன. அதன் படிதான் கணக்குகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. கடந்த நீதிமன்றத்தில் அப்படி ஒரு நாளிதழே இல்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பதிப்புகள் இன்றளவும் கூட வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

7. ஜெயலலிதாவுக்கும் 9 நிறுவனங்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஜெயலலிதாவுக்கும் 9 தனியார் நிறுவனங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அங்கு அவருக்கு பங்குகள் கூட இல்லை. அவர்களுக்கு பங்கு உள்ளது என தவறான வாதங்கள் அரசு தரப்பில் வைக்கப்பட்டுள்ளன. பங்கு உள்ளதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

8. ஜெயலலிதா தனது இளமை பருவத்தில் இருந்தே வருமான வரி கட்டி வருகிறார். அப்படி இருக்கையில் வருமான வரித்துறையின் வரி ரசீதுக்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

9. திராட்சை தோட்டம் மூலம் கிடைத்த வருமானங்கள் மூலம்தான் வருமான வரி கணக்குகளில் ஜெயலலிதா வரி கட்டி வருகிறார். வழக்கு காலத்திற்கு முன்பே தோட்டம் அவருக்கு சொந்தமானது.

10. ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு கட்சியினர் பல்வேறு பரிசு பொருட்களை தருவது வழக்கம். அந்த வகையில் வந்த பரிசு பொருட்களை கூட கணக்கில் இணைத்துள்ளனர். மேலும் கட்சிக்கு சொந்தமான சொங்கோலினையும் இதில் இணைத்துள்ளனர்.

இவ்வாறு ஜெயலலிதா தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன.


எதிர் தரப்பு அன்பழகன்  கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியிடம் எழுத்துப்பூர்வமாக வைக்கப்பட்ட வாதங்கள் விபரங்கள்….

ஜெயா                                     -பவானி 
1991-1996ல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா, தன்னுடைய தோழி சசிகலா, இளவரசி, வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோரை வைத்துக்கொண்டு அரசு பணத்தை தன் கணக்கிற்கு மாற்றியுள்ளார். அதனை தீர விசாரித்த பின்பே 18.09.1996 ஜெயலலிதா மீது ஊழல் தடுப்பு சட்டம் 13 (2) 13 (1) (இ) படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
1991ல் ஜெயலலிதா பதவியேற்றபின் தன் பங்குகள் உள்ள நிறுவனங்களுக்காக அவர் வாங்கிய சொத்துக்கள் விபரங்கள்:

1. ஜெ., பண்ணை வீடு
2. ஜெ.எஸ். வீட்டமைப்பு அபிவிருத்தி
3. ஜெய் ரியல் எஸ்டேட்
4. ஜெயா கட்டிட ஒப்பந்த நிறுவனம்
5. பச்சை பண்ணை வீடு
6. மெடல் கிங்
7. சூப்பர் டூப்பர் டிவி.பிரைவேட்.லிமிடட்.
8. ஆஞ்சனேயா பிரின்டர்ஸ்
9. ராம்ராஜ் ஆக்ரோ மில்ஸ்
10. சிக்னோரா தொழில்முனை நிறுவனம்
11. லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மென்ட்
12. ரிவர்வே ஆக்ரோ பொருட்கள்
13. மீடோ ஆக்ரோ பண்ணை
14. இந்தோ - தோஹா மருந்தக தயாரிப்பு நிறுவனம்
15. ஏ.பி. விளம்பர நிறுவனம்
16. விக்னேஷ்வரா கட்டுமான நிறுவனம்
17. லக்க்ஷ்மி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்
18. கோபால் பிரமோட்டர்ஸ்
19. சக்தி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்
20. நமசிவாயா ஹவுசிங் டெவலப்மென்ட்
21. அய்யப்பா பிராபர்டி டெவலப்மென்ட்
22. கடல் எல்லை நிறுவனங்கள்
23. நவசக்தி கட்டுமான பணி நிறுவனம்
24. கடல்சார் கட்டுமான பணி நிறுவனம்
25. பச்சை தோட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்
26. மார்பில் மார்வெல்ஸ்
27. வினோத் வீடியோ விஷன்
28. பாக்ஸ் யுனிவர்சல்
29. ப்ரெஷ் மஷ்ரூம்ஸ்
30. கோடநாடு டீ எஸ்டேட்

இத்தனை சொத்துக்களை தன் பெயரிலும்,சசிகலா பெயரிலும் வைத்திருந்தார் ஜெயலலிதா.

01.07.1991 முதல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, தன் பெயரில் மட்டும் சொத்துக்கள் வாங்காமல், மற்ற மூன்று குற்றவாளிகளின் பெயரிலும் சொத்துக்களை வாங்கியுள்ளார். இதனை மறைக்க பல வங்கி கணக்குகளும் வைத்திருந்தார். இச்சூழலில் அவர் வருமானத்தில் காட்டிய தொகைக்கும் அவர் கட்டிய வருமான வரிக்கும் உள்ள வேறுபாடுகள் அதிகமாக உள்ளன. இதை எல்லாம் கணக்கில் வைத்தும், ஜெயலலிதா தன்னுடன் இருக்கும் மூன்று பேர் மீதும் சொத்துக்களை சேர்த்து குவித்துள்ளதை வைத்தும் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பினாமி என்று குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாது ஜெயலலிதா தன் பெயரிலும் மற்ற மூன்று நபர்களின் பெயரிலும் வாங்கிய சொத்துக்களின் மொத்த மதிப்பு 1.7.91 முதல் 30.4.96 காலத்தில் ரூ.64,42,89,616/- ஆகும்.இதில் அவர்களது வருமானம்,வங்கி காசோலை வட்டி ஆகியவையும் சேர்த்து தான் இக்கணக்கை ஊழல் தடுப்புத்துறை நிர்ணையித்தது. மேலும் இதன் மூலம் 1988ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டம் 13(1)(இ)ன் படி இவர்கள் நான்கு பேரும் கூட்டுச்சதி செய்துள்ளனர் என்பதும் தெளிவாகிறது.

வழக்கு குறிப்பிட்ட காலத்தில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட செலவு ரூ.10,62,94,190/- ஆகும்.ஆனால் வரவு என்னவோ ரூ.9,19,75,956/- தான்.ஆக வரவுக்கும் அதிகமாக ரூ.1,43,18,234/- செலவாகியுள்ளது என்பதை தமிழக ஊழல் தடுப்பு துறை உறுதிப்படுத்தியுள்ளது.ஆக அவரது சொத்து மதிப்பு மற்றும் அவரது வரவுக்கு அதிகமான செலவுகள் ஆகியவையை சேர்த்த மொத்தம் ரூ. 65,86,07,850/- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர் என்பது ஊழல் தடுப்பு துறை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.அதனால் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை தாங்களும் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு தனது வாதங்களை முடித்துள்ளார் திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன்.


 கர்நாடக அரசு  அரசு வழக்கறிஞராகஅறிவித்த வழக்கறிஞர் ஆச்சாரியா தரப்பு :-


ஜெயா-                            ஆச்சாரியா 
 ''கர்நாடக மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட பின் கர்நாடக அரசு தான் இதில் முக்கிய பிரதிவாதி. இந்த மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு தரப்பை இணைக்காததே தவறு.

நமது எம்ஜிஆர் நிறுவன வைப்பு திட்டம் என்பது போலியானது.

அது கேலிக்கூத்தாக உள்ளது.

இதை கீழமை நீதிமன்றம் போலி என்று உறுதி செய்துள்ளது.

இதில் கணக்கில் வராத 13 கோடி ரூபாயும் ஊழல் செய்ததே என்று கீழமை நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. 
இந்த வழக்கில் ஜெயலலிதாவை தவிர்த்து வேறு யாருக்கும் வருமானம் என்பது துளி அளவு கூட இல்லை. 
ஆனால் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இவர்கள் நால்வரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். 
இதுவே கூட்டுச்சதிக்கு ஆதாரம்.மேலும் 50க்கும் மேலான வங்கி கணக்குகளை வைத்து பணபரிமாற்றம் செய்து ஊழலை மறைக்க முயற்சித்துள்ளனர்.

ஆகவே கீழமை நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினையே மீண்டும் கொடுக்கவேண்டும் என்றும், குற்றங்கள் ஆதாரங்களுடன் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன'' 
என்றும் தெரிவித்துள்ளார்.

அனால் இவைகளையெல்லாம் நீதிபதி குமாரசாமி தீர்ப்பை தயார் செய்தபின்னர் வைக்கப்பட்டவை.அதனால் தீர்ப்பில் மாறுதல் செய்யப்பட்டதா என்பது கேள்விக்குறி.
மைக்கேல் டி  குன்கா
[உண்மையிலேயே ]நீதியரசர்.

அன்பழகன் தரப்பை முன்பிருந்தே எற்றுக்கொள்ள மறுத்து நீங்கள் யார் என்று கேட்டவர்தான் நீதிபதி குமாரசாமி.

பவானிசிங் முறையற்ற நியமனத்தையும்,அவரின் குற்றவாளிகளுக்கு ஆதரவான வாதிடலையும் ,இதற்காக முன்பே நீதிபதி மைக்கேல்டி  குன்கா விடம் கண்டனம் வாங்கியதை தெரிவித்தும் ,மனு செய்தும் நீதிபதி குமாரசாமி கண்டு கொள்ளவில்லை.அதானால்தான் அன்பழகன் தரப்பு உச்ச நீதிமன்றம் செல்லவேண்டிய நிலை.உச்ச நீதிமன்றம் தெளிவாக [வேறு வழியின்றி ]பவானி சிங்க நியமனம் செல்லாது என்று சொல்லி யது,ஆனால் மீண்டும் விசாரணை செய்ய வேண்டாம் என்றும் சொல்லி வழக்கை குழப்பியது.
எப்படியோ தீர்ப்பு குற்றவாளிக்கு ஆதரவாக வரும் என்ற எதிர்பார்ப்பு ஜெயலலிதா தரப்புக்கு 99%உள்ளது.

அதுதான் சரியாக இருக்கும் என்று இன்றைய  சூழல் .
ஜெயலலிதா ஊழல் வழக்கில் நீதி தேவதை என்ற கண்கட்டப்பட்ட சிலையின் கருப்புத்துணி விலகிய நிலையில்தான் இருப்பதாக தெரிகிறது.
மூண்ரு முறைக்கு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகதவர்களுக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்படும் நிலையில் 134 முறை முன்னிலையாகாமல் வாய்தா வழங்கி இவழக்கில் சரித்திர சாதனை செய்யப்பட்டுள்ளது.

லாலு,சவுதால வழக்கில் பிணைக்கு ஆண்டுக்கணக்கில் விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா வுக்கு கேட்ட உடனே கைமேல் கொடுத்துள்ளது.
அதுமட்டுமா மேல் விசாரணைக்கு உடனடி ஆணை,தீர்ப்புதேதிக்கும் காலக்கெடு .

மைக்கேல் டி குன்காவின் தீர்ப்பைத்தவிர சொத்துக்குவிப்பு வழக்கில் 
இதுவரை நடந்தவை அனைத்தும் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு உதவும்படிதான் நடந்துள்ளது.

நீதிபதிகுமாரசாமி தீர்ப்பு அந்த வரிசையில் வந்து விடுமோ என்ற பயம் நடுநிலையாளர்களுக்கு வந்துள்ளது.எதிராக வந்தாலும் இரண்டாவது மேல் முறையீடு ஜெயலலிதா போய் வர வாய்ப்பு வழங்கப்படும்.அதாவது தான் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு வரும் வரை முறையீடு,பிணை.ஆனால் தேர்தலில் நின்று முதல்வராகும் கனவுதான் அதுவரை தள்ளிப்போகும்.
இப்போது ஜெயலலிதா கவனம் எல்லாம் தனது தீர்ப்பில்தான் உள்ளது.தனது பினாமி ஆட்சியின் அலங்கோலத்தில் தமிழ் நாடு இன்று இருக்கும் சீரழிந்த நிலை பற்றி ஜெயலலிதா கொஞ்சமும் கவலை படுவதாக தெரியவில்லை.அரசியல் துறவறம் பூண்டவர் போல் நடந்து கொள்கிறார்.அது அப்படியே உண்மையானால் தமிழ் நாட்டுக்கு நல்லது.
========================================================================
இன்று,

மே-10.

  •  முதல் விடுதலைப்போர் எனக் கூறப்படும் சிப்பாய்கள் கலகம் துவங்கியது(1857)
  • நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்(1994)
  • அன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது(1908)
  • ருமேனியா, துருக்கியிடம் இருந்து விடுதலை பெற்றது(1877)


கலைஞர் கச்சத் தீவை 
விட்டுக்கொடுத்துவிட்டார்.
என்று கூறுபவர்களுக்காக:-
கச்சத்தீவை கருணாநிதிதான் தாரை வார்த்தார் என்று கூறப்படுவது உண்மையா ?
 1970 களில் பண்டாரநாயகா இலங்கையில் ஆட்சியில் இருந்தார். அப்போது அவருக்கு கடுமையான உள்நாட்டு எதிர்ப்பு. மக்களை திருப்தி படுத்த விரும்பி இந்திரா காந்தியின் உதவியை நாடினார். 
இந்திரா காந்தி அவருக்கு உதவி செய்ய இருதரப்பு உறவை பலப்படுத்த போவதாகச்சொல்லி 1974இல் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். 
அந்த ஒப்பந்தத்தை கலைஞர் எதிர்த்தபோதும் கட்சத்தீவு ஒப்பந்தம் விதிகளை மீறி செய்யப்பட்டது. இந்திய பார்லிமென்டின் அனுமதி பெறாமல் இந்திய சட்டவிதிகளையே மதிக்காத இந்திரா காந்தி சாதரண ஒரு மாநில முதல்வர் கலைஞருக்கு என்ன மரியாதையை கொடுத்திருப்பார்?
மேலும் இந்திரா தன் முடிவுகளில் இருந்து பின்வாங்கியதில்லை.
1974 ஒப்பந்தத்தில் தமிழர்களின் பாரம்பரிய உரிமைகள் உறுதிசெய்யப்பட்டதுடன் கட்சதீவில் வலைகளை உலர வைக்கும் உரிமையும் அந்தோனியார் கோயில் வழிபாட்டு உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் 1976 ஜனவரி 31 இல் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 1976 இல் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டு திமுகவினர் அடக்கி ஒடுக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்
அந்த சமயத்தில்தான் 1976 புதிய கட்சதீவு ஒப்பந்தம் இந்திராகாந்தி - பண்டாரநாயகே இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.அப்போது தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. 
இந்த ஒப்பந்தத்தில்தான் மன்னார் வளைகுடா பகுதியில் கடலில் எல்லைகள் வரையறுக்கப்பட்டது. தமிழர்களின் மீன்பிடி உரிமையும் நீக்கப்பட்டது.
1976 ஒப்பந்தம்தான் தமிழக உரிமையை பறித்தது. அப்போது கலைஞர் ஆட்சியில் இல்லை. 
அதன் பின்னர் 1977 இல் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் ஏன் 1976 ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை. அப்போது இந்திராவுடன் நெருக்கமாக இருந்தவர் எம்ஜிஆர்தானே.
 அதன் பின்னர் தமிழ்நாட்டில் 13 வருடங்கள் ஆட்சி செய்தது அதிமுகதானே.
மேற்கண்ட விபரப்படி கச்சத்தீவை தாரை வார்த்தது எம்ஜிஆர் என்பது புரியும்
மேலும் 1991 க்கு பின் இரண்டு முறை ஜெயா ஆட்சியில் இருந்த போது கட்சதீவை மீட்க ஏன் மீட்க முயற்சியே செய்யவில்லை?
தமிழ்நாட்டில் எது நடந்தாலும் கலைஞர் வீட்டு பாத்ரூம் தண்ணீரை குடித்தால்தான் சில மடையர்களுக்கு திருப்தி.
1974 இல் போடப்பட்ட கட்சதீவு ஒப்பந்தத்தில் உள்ளது இதுதான்.இதில் வரும் பாரம்பரிய உரிமை( Traditional rights ) என்ற வார்த்தைதான் குழப்பமே. தமிழக மீனவர்கள் இதை தங்களது உரிமையாக சொல்கிறார்கள். இலங்கை மீனவர்கள் தங்களது உரிமை என்கின்றனர்.
1974 ஒப்பந்தம்
விபரம்
The exact statement of the 1974 agreement (Maritime boundary in Palk Strait) was, "Each country shall have sovereignty and exclusive jurisdiction and control over the waters, the islands, the continental shelf, falling on its own side of boundary. The vessels of Srilanka and India will enjoy in each other's waters such rights as they have traditionally enjoyed therein". There was an apparent ambiguity in this statement, because the two countries interpret the the phrase "traditional rights" differently. Tamil Nadu claims that traditional rights include fishing while Srilanka claim it doesn't.

                                                                                                               
                                                                                                                 
-பிரகாஷ் .ஜே.பி,

======================================================================== 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?