வியாழன், 14 மே, 2015

தினமணி இப்போது ஜெயா மணி.

தினமணி மேல் நம்பிக்கையில்லை

 – தினமணி வாசகர்கள்

த்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? நடுநிலை வேடம் போட்டு நமது எம்.ஜி.ஆருக்கு போட்டியாக எழுதி வந்த தினமணியை அம்பலப்படுத்தி வினவு தளத்தில் சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 
தற்போது தினமணி இணைய தளத்திலேயே , ஜெயாவை ஆதரித்து ஆசிரியர் வைத்தி எழுதிய தலையங்கங்களின் கீழேயே தினமணி வாசகர்கள் கண்டித்து எழுதியிருக்கின்றனர்.
தினமணி கண்டிக்கப்பட்டது
வைத்தி அவர்களின் வேடம் இனியும் தெரியாது என்று யாரும் கருத முடியாது
ஆகவே வைத்தி அவர்களின் வேடம் இனியும் மறைக்க முடியாத ஒன்று. ஒரு சில வாசகர்கள் வினவு தளத்தில் வந்த கட்டுரைகளையே அங்கு பகுதி பகுதியாக போட்டிருக்கின்றனர். தினமணியின் இரு தலையங்கங்களுக்கு இணையத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
தமிழ் இணைய உலகில் பெரும் பத்திரிகைகளை அம்பலப்படுத்தி எழுதும் பணியினை நாம் மட்டும் செய்யவில்லை என்பதை இவ்வாசகர்கள் நிரூபித்திருக்கின்றனர். அவர்களின் உதவியோடு கைக்கூலிகளை தொடர்ந்து தோலுரிப்போம்.
இனி தினமணி என்பது நமது எம்.ஜி.ஆரின் இரண்டாவது பதிப்பு என்றே அறியப்படும். இதை சாதித்த இணைய  தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள்!
வினவு ஃபேஸ்புக்கில் பதியப்பட்ட கருத்துக்கள்
Balakrishnan Ammaiappan
நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்!!! தினமணி இப்படியா மாறவேண்டும்! அம்மாவிற்கு வாழ்த்துக் கூறுவதில் தவறில்லை. ஆனால்,நிமிர்ந்த நன்னடை கூனிக் குறுகிய நடையாக மாறிவிட்டதே! தினமணியின் நீண்ட கால வாசகன் என்ற முறையில் வருந்துகிறேன்.
May 12 at 4:16pm
வைத்தி
“தினமணி மேல் நம்பிக்கை இழந்து விட்டேன்… கடவுளே…..”
Muthaiah MuthusamyI feel shame that I have purchased Dinamon (e) y..in 1960s itself
(1960களிலிருந்து தின"மணி"யை வாங்கி படிப்பதற்கு வெட்கப்படுகிறேன்.)
இனி  ஜெயலலிதா  விடுதலையை ஒட்டி தினமணி வைத்தி எழுதிய தலையங்கத்திற்கு தினமணி இணையத் தளத்தில் வந்த கருத்துக்கள்.
Ram 12-05-2015 | 21:41:37
Shocking review by dinamani…. Lost faith on dinamani for first time….good…good…oh my god
(தினமணியின் அதிர்ச்சியூட்டும் விமர்சனம்….. முதன்முறையாக தினமணி மேல் நம்பிக்கை இழந்து விட்டேன்… கடவுளே…..)
____________
செ.நாராயணசாமி 12-05-2015 | 21:10:04
அவரவு செல்வுக் கணகில் கூட்டல் கழித்தலில் ஏற்பட்ட வெளிப்படையான தவற்றைக் கருநாடக அரசு வழக்குரைஞ்சர் ஆச்சாரியார் சுட்டிக் காட்டியுள்ளார். அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு மறு ஆய்விற்கு உரியது.
_____
M.Guna 12-05-2015 | 20:21:07
என்னடா பத்திரிகை நடத்துரிங்க? ஊழல் அரசியல்வாதியும் ,கூட்டாளிகளும் ஒரு ஊழல் நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டதை பாராட்டுகிராய்? உன் இனத்தை சேர்ந்தவன் ஊழல் செய்தால் அது சரி. ஆனால் மற்றவர்கள் ஊழல் செய்தால் தவறு. இந்த நிலை எடுக்கும் நீ வேறு தொழில் செய்து பணம் சேர்க்கலாம்.
______________
வைத்தி - ஜெயா
உன் இனத்தை சேர்ந்தவன் ஊழல் செய்தால் அது சரி. ஆனால் மற்றவர்கள் ஊழல் செய்தால் தவறு. இந்த நிலை எடுக்கும் நீ வேறு தொழில் செய்து பணம் சேர்க்கலாம்.
mohanan 12-05-2015 | 18:58:11
மீண்டும் தினமணி பதிவு செய்யும், ஜெயலலிதா குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும்பொழுது. சங்கரராமன் கொலை வழக்கு போன்ற இந்த தீர்ப்பும் வளைக்கபட்டுள்ளது ஒரு குறிப்பிட்ட இனத்தினரால். இந்த தீர்ப்பு நீதிக்கு ஒரு பெரிய பின்னடைவு.
______________
babu 12-05-2015 | 18:06:57
தினமணியே நீ பத்திரிகை தொழில் செய்வதைவிட வேறு ………….தொழில் செய்வது நல்லது
______________
nontha indian 12-05-2015 | 17:34:17
தினமணி அவசரப்பட்டு தலையங்கம் தீட்டியிருக்கிறது. இன்று , திரு. ஆச்சார்யா அவர்கள் தீர்ப்பை எல்லாம் படித்து பார்த்து, கூட்டலில் ஒரு தவறை கண்டு பிடித்திருக்கிறார். குமாரசாமி ,ஒரு கூட்டலை கூட சரியாக verify செய்ய வில்லையா? ஒரு சாதாரண ஐந்தாம் வகுப்பு பையன் கூட இதை சரியாக கூட்டுவானே. கேவலம்.
Devar 12-05-2015 | 16:11:16
மீண்டும் முதல்வராவதன் மூலம் ஜெயலலிதா சமன் செய்தால் வியப்படையத் தேவையில்லை’ என்பதுதான் அது. மீண்டும் ஜயிலுக்கு போவது உறுதி. எனென்றால் தவறான தீர்ப்பு. இந்தியாவே திகைப்பில் உள்ளது. கோடிக்கும் ஜெயாவுக்கு திருமணம் என பத்திரிக்கைகள் ஏளனம் செய்கிறது. குருட்டு தினமணி மட்டும் ______ காட்டுகிறது . இனத்தின் பற்று . மீண்டும் ஜெயில் உறுதி.
siva sydeny 12-05-2015 | 15:55:37
is this dinamani or namathu mgr. இது தினமணியா இல்லை நமது எம்.ஜி.ஆரா? (நமது எம்.ஜி.ஆர் – அ.தி.மு.கவின் தினசரி.)
ஜெயாவுக்கு வைத்தி ஆதரவு
“முதலில் தீர்ப்பை படித்து விட்டு பேசலாமே? தினமணியின் பெயரை கெடுக்காதீர்கள். “
selvanathan 12-05-2015 | 18:58:37
After seeing the Judgment copy, you must give your comments. How many years you are in the field of publication. Do not say in hurry manner to give your open comments. Please apply your mind in the judgment copy and tell your open comments. Do not spoil your name of the publication. Please Publish your apologies in the next edition, otherwise, you will loose your name.
(தீர்ப்பை நேரடியாக படித்து விட்டே நீங்கள் உங்களது விமரிசனங்களை தெரிவிக்க வேண்டும். ஊடகத்துறையில் நீங்கள் எவ்வளவு ஆண்டுகளாக இருக்கிறீர்கள்? அவசர அவசரமான கருத்துக்களை வெளியிடாதீர். முதலில் தீர்ப்பை நிதானமாக படித்து விட்டு பேசலாமே? தினமணியின் பெயரை கெடுக்காதீர்கள். அடுத்த நாளாவது உங்களது மன்னிப்பை வெளியிடுங்கள், இல்லையேல் உங்களது பெயர் கெட்டுப் போகும்.)
Ranganathan Thirunavukkarasu 12-05-2015 | 13:26:40
ஏண்டா மானகெட்ட மாங்கா நீ எல்லாம் திருந்தமாட்டியா? நடுநிலை நாளேடு என்று கூறாமல் அ.தி.மு.க நாளிதழ் என்று மாற்றிகொண்டால் என்போன்றோர் கவலைபடமாட்டோம். இங்கேதான் ஜாதிபுத்தி தெரிகின்றது.
Ravanan Ramachandran 12-05-2015 | 12:34:32
10 ரூபாய் வாங்கினாலும் 100 ரூபாய் வாங்கினாலும் குற்றம் குற்றமே. இதே மாதிரி திருடன் ஒரு வீட்டில் புகுந்து சிறிய பொருட்களை திருடினால் நீதிமன்றம் அவனை விடுதலை செய்து விடுமா? வசதி படைத்தவர்களுக்கு ஒரு நீதி …ஏழை பாமரனுக்கு ஒரு நீதியா?. நமது இந்திய நாட்டில் தான் இந்த மாதிரி தீர்ப்புகள் எல்லாம் வரும். கர்நாடக அரசு நீதிபதி கூறியது போல அவருக்கு விளக்கமளிக்க ஏன் ஒரே ஒரு நாள் வழங்கப்பட்டது?. கலைஞர் கூறியது போல எல்லா முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டு முடிவுகள் கிடைக்க பெற்றனவா?
வைத்தி குற்றக் கூண்டில்
entha ஒரு மாநில முதல்வரும் இதுவரையில் படைக்காத சாதனையை இந்த முன்னாள் முதல்வர் படைத்ததை தினமணி ஆசரியர் ஏன் மறைத்து vittaar?
குமாரசாமி ஜனவரி மாதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் விடைகள் கிடைத்துவிட்டதா?. மாத சம்பளம் 1 ரூபாய் வாங்கிய முதல்வருக்கு இவ்வளவு சொத்துக்கள் எப்படி கிடைத்தது என்று நீதிபதி கணிக்க தவறியது ஏன்?, இந்தியாவில் உள்ள அனைத்து சட்ட நிபுணர்களும் எதிர்பார்க்காத அளவுக்கு இந்த மாதிரி தீர்ப்பு எப்படி இவரால் மட்டும் வழங்க முடிந்தது?. இடையில் நடந்தது என்ன?.
entha ஒரு மாநில முதல்வரும் இதுவரையில் படைக்காத சாதனையை இந்த முன்னாள் முதல்வர் படைத்ததை தினமணி ஆசரியர் ஏன் மறைத்து vittaar? . பதவியில் இருக்கும்போதே ஊழலுக்கு தண்டிக்கபட்டு சிறை சென்ற முதல் முதல்வர் என்ற சாதனையை. இதற்கு பெயர்தான் நமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையோ?.ஊழலுக்கு குற்றம் சாற்றபட்டவர் வேறு ஒருவருக்கு இந்த மாதிரி தீர்ப்பு வெளி வந்தால் ஆசிரியர் இதே மாதிரி தலையங்கம் எழுத முன் வருவாரா? எழுத மனம் இடம் கொடுக்குமா? dinamaniyaal இந்த மாதிரியாக தான் தலைஅங்கம் எழுத mudiyum என்று அனைத்து வாசகர்களுக்கும் தெரிந்த ஒன்றுதான்.
KUMAR 12-05-2015 | 11:49:01
SIR, YOUR DAILY USED TO HAVE A GOOD RESPECT AND VALUE AMONG PEOPLE. BUT TODAY THE WAY YOU WROTE THE EDITORS COLUMN,IT IS REALLY PATHETIC TO WATCH YOUR SUBMISSION. IT SEEMS THAT YOU WANT TO SAVE YOUR SKIN FOR ANY BACKLASH YOU STARTRED APPEASEMENT. IT HAS BECOME A TREND. LONG LIVE .SUCH DEVOTION TO CONTINUE AND MAKE THE COUNTRY FOOL.
(ஐயா, உங்கள் பத்திரிகை மக்களால் மரியாதையுடன் மதிக்கப்பட்டு வந்த ஒரு இதழ். ஆனால் இன்று உங்களால் எழுதப்பட்டிருக்கும் தலையங்கத்தின் வாத முறைகளை பார்க்கும் போது, உங்கள் அடிபணிதலைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது. இதைப் பார்க்கும் போது உங்களது தோலை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியிலேயே இந்த சரணடைதல் ஆரம்பிக்கிறது போலும். இதுதான் இன்றைய பாணி போலும். வாழ்க. இந்த அர்ப்பணிப்பு இந்த நாட்டை நாசமாக்கட்டும்!
தினமணியை புறக்கணிக்க...
“ஆக மொத்தம் தினமணியை புறக்கணிக்கும் தருணம் வந்து விட்டது.”
Manoharan Iyyadurai 12-05-2015 | 11:07:31
நண்பர் சீனிவாசன் கருத்தை வரவேற்கிறேன். அ.தி.மு.க பிரச்சார பீரங்கியாகவே மாறிவிட்டது. ஒரு வேளை மனு தர்மம் வேலை செய்கிறதோ என்னவோ. ஆக மொத்தம் தினமணியை புறக்கணிக்கும் தருணம் வந்து விட்டது.
Jothikrishnan 12-05-2015 | 10:25:32
யாரெல்லாம் இதுவரைக்கும் இந்த பத்திரிக்கைக்கு ஆதரவு குடுதிங்கலோ…..இனிமே இந்த குப்பைய தூக்கி எறியுங்கள் ….. வெக்கமே இல்லாம ஒரு தலையங்கம் வேற…
Jothikrishnan 12-05-2015 | 10:22:40
இந்த ஒரு பத்திரிக்கை தான் உருப்படின்னு நெனச்சேன்…..__ங்க எல்லாருக்குமே ஊழல்ங்கறது சாதரணமா போச்சு….கேவலமான தலையங்கம்… இதுக்கு நீகல்லாம் போயி பிச்சை எடுங்க__….நிரபராதி அம்மா தான் 18 வருசமா வாய்தா வாங்கி இழுத்தடிச்சுதா….தூ …
sk 12-05-2015 | 10:16:51
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை — இதை முதலில் தூக்கி எறியுங்கள் …தினமணியிடம் இந்த மாதிரி ஒரு கேவலமான தலையங்கத்தை நாம் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் குன்ஹா அவர்கள் கொடுத்த தீர்ப்பு சரியில்லை என்று எந்த விதத்தில் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை…இவ்வளவு காலம் தினமணி என்ற பத்திரிகையை படித்ததற்கு வேதனை படுகிறேன் …பணத்திருக்கு பிணம் தின்னும் கூட்டத்தில் தினமணியும் ஒன்று இப்போது புரிகிறது ….
FIRTHOUSE ALI 12-05-2015 | 10:14:36
ஊடகங்கள்
திரு வைத்தியநாதன் அய்யர் அவர்களே! 
பலே! பலே! …. என்ன ஒரு அற்புதமான தலையங்கம்…….. மிக்க மகிழ்ச்சி…
வழக்கை சீக்கிரம் முடித்து இருந்தால் அது அவருக்குத்தானே நன்மையாக அமைந்து இருக்கும்………. பின் தேதியிட்ட சட்டத்தால் பாதிக்கபட்டது அந்த அம்மையார் தானே!!!! தலையங்கத்தை கட்சிகளுக்காக எழுதாமல் மக்களுக்கு பயன்பெறும் வகையில் எழுந்துங்கள்………. ஒரு அரசு மக்கள் நலப்பணிகள் எதையும் செய்யாமல் ஆறு மாதம் வாழ இருந்தந்தை குறை இல்லை என்று கூற ஒரு மதிப்பு மிகுந்த பத்திரிக்கையின் ஆசிரியரான உங்களுக்கு எப்படி மனது வந்தது…………….
srinivasan 12-05-2015 | 10:14:22
தினமணி என்பதை நமது எம்ஜிஆர்,என்று மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்
Muthukumaran 12-05-2015 | 09:33:56
” ஒருதலைபட்சமான விசாரணை, தீர்ப்பு: அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து ” – இதுக்கு பெயர்தான் தினமணியின் நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையா !!!???
கீழ்க்கண்ட கருத்துக்கள் பவானி சிங் நீக்கத்தை ஒட்டி தினமணி எழுதிய தலையங்கத்தை ஒட்டி வாசகர்கள் எழுதியவை.
A.ARUNAGIRI 13-05-2015 | 17:16:09
mannikkavum ithupondra oruthalai patchamaana thalaiyangathai dinamaniyil ethirpaarkkavillai, nadunilamai thavariyathaal eni dinamani vendaam ena enathu paperkaararidam sollivitten. dinamanin peyaaaaaaaril karuppu,vellai sigappu saayam
poosikollavendiyathuthane innum thayakkam. aasiriyarukku viravil maavatta seyalaalar pathavi kidaikkum.
தினமணி கார்ட்டூன்
ஜெயாவுக்கு தண்டனை வழங்கிய தீர்ப்பு வெளியானதும் தினமணி வெளியிட்ட கார்ட்டூன்
மன்னிக்கவும் இதுபோன்ற ஒருதலைபட்ச்சமான தலையங்கத்தை தினமணியில் எதிர்பார்க்கவில்லை. நடுநிலைமை தவறியதால் இனி தினமணி வேண்டாம் என எனது பேப்பர்காரரிடம் சொல்லிவிட்டேன். தினமணியில் கருப்பு வெள்ளை சிவப்பு சாயம் (அ.தி.மு.க வண்ணம்) பூசிக் கொள்ள வேண்டியதுதானே இன்னும் தயக்கம் ஏன். ஆசிரியருக்கு விரைவில் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும்.
GOTHANDARAMAN R 29-04-2015 | 14:59:12
மட்டமான தலையங்கம். தினமணி தரம் தாழ்ந்து வருகிறது.
சிவ.தணிகாசலம், நாமக்கல்கவிஞர் பேரவை, நாமக்கல் 28-04-2015 | 21:14:53
மாநில அரசின் விளம்பரம் வேண்டுமெனில், அதை நேரடியாக மக்களின் முதல்வர் அம்மா அவர்களைச் சந்தித்தே, தினமணி ஆசிரியர் கேட்டுக் கொண்டிருக்கலாமே? அதை விடுத்து.., நீதிபதியை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பைத் தினமணி விமரிசிப்பது எங்கே போய்முடியப் போகிறதோ? பாரதியாரின் வரிகளைத் தினமணியின் முகப்பில் அச்சிடுவதை தயவு செய்து முதலில் நிறுத்திவிட்டு எதை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள்!
KARTHIKEYAN 28-04-2015 | 19:02:25
தலையங்கம் எழுதிய ஆசிரியர்க்கு தெரியாதா, ஜெயலலிதா இந்த வழக்கு நீர்த்து போக எத்தனை ரிட், எத்தனை பெடிசென், எத்தனை வாய்தா போட்டார் என்று. பொது மனிதராக யோசியுங்கள் , உங்கள் வாசகரை முட்டாள் ஆக்காதீர்கள் . மனசாட்சி படி எழுகுங்கள் .
Mohanan 28-04-2015 | 17:46:45
இது தலைமை நீதி மன்றத்தை அவமதிக்கும் செயல். பவானி சிங் தவறாக வழக்கை வழிநடத்தும் போதோ அல்லது TANSI வழக்கின் தீர்ப்பின் போதோ இதுபோல் தலையங்கம் வந்திருந்தால் உங்கள் தலையங்கம் நடு நிலையானது என்று ஏற்க்கலாம். இது ஒரு சார்பான, ஜெயலலிதாவிற்கு சாதகமான தலையங்கம்.
Deivasahayam 28-04-2015 | 16:36:51
ஆசிரியரின் வாதம் ” ஜெயலலிதா வழக்கை இழுத்தடிக்கிறார் என்று எதிக்கட்சிகள் குற்றம் சாட்டினர் ” என்பது . அறிவுஜீவி ஆசிரியரே நீங்கள் அப்படி எண்ணவில்லையா அல்லது எண்ண விருப்பம் இல்லையா அல்லது தாங்கள் அ.தி. மு. க வில் உறுப்பினரா?
மரமண்டை 29-04-2015 | 10:44:33
என்ன தீர்ப்பு சொல்றீங்களா? நீங்க எப்ப  லா படிச்சி முடிச்சீங்க? இல்லை கோர்ட்லே ஒரு டவாலியாவது இருந்திருக்கிறீங்களா? உச்ச நீதி மன்றத்துக்கே அறிவுரை சொல்லுமளவுக்கு நம்ம வைத்தி வளர்ந்துள்ளதை பார்த்து ரொம்ப பெருமையா இருக்குங்க.
Ranganathan Thirunavukkarasu 28-04-2015 | 13:42:10
நீதிபதிகள் குறிபிட்ட கருத்தை தவிர்த்திருக்கலாம் என்று தலையங்கம் எழுதி ஜால்ரா என்பதை அப்பட்டமாக காட்டிகொள்ளும் நீங்கள் இந்தபணிக்கு தகுதியுடையவர்கள்தானா?
devar 28-04-2015 | 12:24:21
அதாவது என்ன சொல்கிறான் இந்த தினமணி. குற்றவாளி ஜெயலலிதா எதை செய்தாலும் அதை கண்டிக்க கூடாது. எதிர்களைமட்டுமே கண்டிக்கனும். முட்டபய தினமணிக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி (தமிழ்நாடு ) அவர்களை எதிர்க்க அவர்களே வக்கிலை நியமிக்க வேண்டுமாம். என்னே நீதி. இந்த பாவாடை சிங்க ஏற்கனவே எத்தனை முறை கண்டித்தார்கள் அடங்கினான இந்த பவானி. ஜெயலலிதா அட்டுழியம் செய்யவில்லையா . அதற்குதானே இதே ஜெய குற்றவாளி தேர்தலிலும் தொற்கடிக்கபட்டார். அடிபட்டும் புத்தி வராத தினமணி. எவ்வளவு முறை கலைஞர் மீது வேண்டும் என்றே ஊழல் குற்ற சாட்டு சொன்ன கும்பல் எதையும் நிருபிக்க வில்லை .
=================================================================================