சனி, 9 மே, 2015

ஆட்சியாளர்களுக்கு சத்து ணவு .

* மூக்கை பிடித்து சாப்பிடும் மாணவர்கள்
* சாராயக் கடையில் முட்டை விற்பனை
* சாப்பாட்டையும் விட்டு வைக்கவில்லை
* காய்கறி, முட்டையில் கோடிக்கணக்கில் முறைகேடு
‘‘ஒரு வேளை உணவு வழங்குவதின் மூலம் வறுமையில் வாடும் குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தையை பள்ளிக்கு வர வழைக்க முடியும். கல்வி  அறிவு மூலம் வளமான எதிர்கால சமுதாயத்தை உருவாக்க முடியும் என்கிற தொலைநோக்கு சிந்தனை அடிப்படையில் மதிய உணவு திட்டம்  கொண்டு வரப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பள்ளிக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இடைநிற்றல்  பெருமளவு குறைந்தது. இதற்கு காரணம் மதிய உணவு திட்டம்.  
மதிய உணவு திட்டம் சத்துணவு திட்டமாக என்று மாற்றப்பட்டதோ, அன்றில் இருந்து அரசியல்வாதிகள் மற்றும் ஊழல் வாதிகளின் கையில் சிக்கி  சீரழிந்து போனது. 
அதுவரை மதிய உணவு பொருப்பு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் கையில் இருந்தது. ஆனால், ஊழல் மலிந்துவிட்ட நிலையில்  முட்டையில் ஊழல், காய்கறியில் ஊழல்,  பருப்பில் ஊழல், மாணவர்களின் எண்ணிக்கையில் ஊழல் என்று ஊழல் முடைநாற்றம் காரணமாக  சத்துணவு துறையே நாறிப்போய் இருக்கிறது. 
குறிப்பாக மாணவர்களின்  சாதம் பெரும்பாலும் தரம் இல்லாமலும் சுவை இல்லாமலும் இருப்பதுதான்.  அதற்கு  அரசு வைத்திருக்கும் நிதி அளவுகோள் மற்றும் அரசியல்வாதிகளின் சுரண்டல்தான்.

தமிழகம் முழுவதும் உள்ள 42,619 அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 54 லட்சத்து 63 ஆயிரம் மாணவ - மாணவிகளுக்கு  சத்துணவு வழங்கப்படுகிறது. 
மதிய உணவுக்காக மாணவர்களும் தங்கள் பையில் புத்தகங்களுக்கு அடுத்தப்படியாக தட்டுகளை வைத்திருந்தனர். 
 காரணம், வறுமை. 1980க்கு முன்புவரை, கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளிக்கு செல்லும் மாணவனின் பையில், மகன் புத்தகம் எடுத்து  வைத்திருக்கிறானா என்று சோதனை செய்த அன்னையர்களின் எண்ணிக்கை குறைவே. மகன் சாப்பிட தட்டு எடுத்துச் செல்கிறானா என்று பார்த்து,  பையில் தட்டு போட்டு அனுப்பும் தாய்மார்கள் உள்ளனர்.

சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சத்துணவு திட்டத்திற்காக மட்டும் தமிழக அரசு ஆண்டுக்கு சுமார் ரூ.1,500 கோடி வரை நிதி ஒதுக்கி  வருகிறது.
சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கான அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறி, முட்டை, பச்சை பயிறு, மூக்கு கடலை போன்ற உணவு  பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. 
45 கிராம் முட்டையும்; கூமுட்டையும்..
சத்துணவு சாப்பிடும் சுமார் 55 லட்சம் மாணவ - மாணவிகளுக்கு  வாரத்திற்கு 5 நாட்கள்  முட்டை வழங்கப்படுகிறது. 
இந்த முட்டையின் அளவு 45 கிராம் எடை இருக்க வேண்டும். இவ்வளவு எடையுள்ள முட்டை  வழங்கினால்தான் அந்த மாணவனுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 
ஆனால், 25 கிராம் அளவு உள்ள  முட்டைகளும், தோல் முட்டை என்று கூறப்படும் கூமுட்டைகளும், அழுகிய முட்டைகளும், அளவு குறைந்த முட்டைகளுமே பெரும்பாலான  நேரங்களில் கொள்முதல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

கொள்முதலில் கோடிக் கணக்கான ரூபாய் ஊழல்
சத்துணவிற்கு முட்டை கொள்முதல் செய்யப்படுவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. எந்த சத்துணவு  மையத்துக்கும் 45 கிராம் எடையுள்ள முட்டைகள் வருவதேயில்லை. தற்போது வழங்கப்படும் முட்டையின் எடை 25 கிராம் முதல் 30 கிராம் எடை  மட்டுமே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  
இப்படி குறைந்த எடையுடன் முட்டை அனுப்பி வைக்கப்பட்டால், அந்த முட்டைகளை திருப்பி  அனுப்ப சத்துணவு அமைப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 ஆனால், முட்டை பற்றியோ அதன் அளவு பற்றியே அமைப்பாளர்கள் எதுவும்  வெளியில் சொல்லக்கூடாது என்று உயர் அதிகாரிகளால் மிரட்டப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
 இப்படி குறைந்த எடை கொண்ட முட்டையின்  மூலம், மாதம்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் சமூகநலத்துறையில் நடைபெறுவதாக சத்துணவு பணியாளர்கள் கூறுகிறார்கள்.
டெண்டர் முறை மாற்றம்

திமுக ஆட்சியில் சத்துணவுக்கு தேவையான முட்டைகளை அந்தந்த மாவட்ட அளவில் டெண்டர் கோரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. 
ஆனால்  அதிமுக ஆட்சியில், தமிழகம் முழுவதற்கும் ஒரே டெண்டர் கோரப்பட்டு, ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டு,  சத்துணவுக்கு தேவையான முட்டைகளை கொள்முதல் செய்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
இதனால், அதிக முறைகேடுகள் நடைபெறுகிறது.  மேலும், முட்டையின் விலையிலும் அதிக வித்தியாசம் இருப்பதாக கூறுகிறார்கள். 
கடைகளில் வாங்கும் முட்டை விலையைவிட சத்துணவுக்காக  கொள்முதல் செய்யப்படும் முட்டையின் விலை அதிகமாக உள்ளது. இதன்மூலம் அந்த துறை மூலம் ஆட்சியாளர்களுக்கு கோடிக்கணக்கில்  மிஷனாக கிடைக்கிறது.

விரல் அளவு  வாழைப்பழம்


முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்க ஒருவருக்கு, 1.25 பைசா ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 
இப்போதுள்ள விலைவாசியில்  ரூ.1.25க்கு யார் வாழைப்பழம் தருவார்கள். ஒரு பள்ளியில் 50 மாணவர்கள் முட்டை சாப்பிடாதவர்கள் இருந்தால், அனைவருக்கும் கூடுதல் பணம்  போட்டு நாங்கள் எப்படி வாழைப்பழம் வாங்கி கொடுக்க முடியும். அதனால் அரசு திட்டங்களை அறிவிக்கும் முன்னால், இதை செயல்படுத்த முடியுமா  என்று ஆய்வு செய்து அறிவிக்க வேண்டும். ஆண்டுக்கு ஆண்டு விலைவாசி உயர்ந்து கொண்டே வருகிறது. 
இன்னும் வாழைப்பழத்துக்கு ரூ.1.25  மட்டுமே வழங்கப்படுகிறது. 
இந்த காசு கொண்டுபோய் வாழைப்பழம் விற்பவரிடம் கொடுத்தால், 5ம் கிளாஸ் மாணவியின் விரல் சைஸ் உள்ள  வாழைப்பழத்தை தருகிறான். அதை வாங்கி கொடுத்து மாணவர்களிடம் நாங்கள் வாங்கி கட்டி கொள்ளவா? என்று நம்மையே திருப்பி கேள்வி  கே ட்கின்றனர்.

 உருளை கிழங்கு


காய்கறிகளின் விலை தினசரி உயர்ந்து கொண்டே இருக்கிறது. 
ஆனால், அரசு அதிகாரிகள் கடந்த  5 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த அதே  தொகையை மட்டுமே வழங்கி வருவதால் சத்துணவின் தரம் குறைந்து கொண்டே வருகிறது. தற்போது ஒரு மாணவனுக்கு 20 கிராம் உருளைக்கிழங்கு  16 பைசாவில் வாங்கி வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு நடைமுறையில் உள்ளது. 
அதன்படி ஒரு கிலோ உருளைக்கிழங்கு 8 ரூபாய்க்கு வாங்க  வேண்டும். எந்த மார்க்கெட்டில் இப்போது உருளைக்கிழங்கு ரூ.8க்கு வழங்கப்படுகிறது. எனவே, உருளைக்கிழங்கு கொள்முதல் விலையை மாணவர்  ஒருவருக்கு 16 பைசா என்று இருப்பதை 60 பைசாவாக அனுமதிக்க வேண்டும். 
அதேபோன்று மற்ற காய்கறிகள் வாங்குவதற்கு கூடுதல் நிதி  ஒதுக்கினால் மட்டுமே தரமான சத்துணவு வழங்க முடியும்.
 கடந்த மாதம் நடந்த பேச்சுவார்த்தை உருளைக்கிழங்குக்காக மாணவர் ஒருவருக்கு 40  பைசா வரை உயர்த்தி வழங்க அரசு சம்மதித்துள்ளது. 
ஆனால் இந்த நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை.

பருப்பு சாம்பார் என்று சொல்லி மாணவர்களுக்கு ஊற்றப்படும் சாம்பாாில் பருப்பே இருக்காது. 
ஆனால், அதை பருப்பு சாம்பார் என்றே  சொல்கின்றனர். காரணம், பருப்பு சப்ளை இல்லாததே. ஏறக்குறைய ரசம் போன்ற தரத்தில்தான் சாம்பார் இருக்கும். அமைப்பாளரை கேட்டால்,  பருப்புக்கு ஒதுக்கப்பட்ட பணம் மிகவும் குறைவு. 
அந்த பணத்தில் 10 மாணவர்களுக்குதான் சாம்பார் வைக்க வேண்டும். ஆனால், அரசு 100 பேருக்கு  வைக்கச் சொல்கிறது. இது எப்படி சாத்தியம்.
 கலங்கடிக்கும் கலவை சாதம்

கலவை சாதம் என்று அறிவிக்கப்பட்டு, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், வெயிஜ்டபுள் சாதம், கீரை சாதம், கருவேப்பிலை சாதம் என தினசரி மாற்றி  மாற்றி வழங்கப்படுகிறது. 
இதுபோன்ற கலவை சாதம் வழங்கப்படுவதற்கு காரணம், பருப்பு விலை உயர்வுதான் காரணம் என்று சொல்வதைவிட,  சத்துணவுக்காக வாங்கப்படும் பருப்பில் காசு பார்ப்பதிலேயே அதிகாரிகள் அதிக அக்கறை காட்டினர் என்று சொன்னால் அது மிகையாகாது. 
தரமில்லாத  பருப்பை வாங்கி, சத்துணவு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதனால், அந்த சாப்பாட்டை சாப்பிட முடியாமல் மாணவ - மாணவிகள் கஷ்டப்பட்டனர். 
 இதை அறிந்துதான், பருப்பு மூலம் வைக்கப்படும் சாம்பார் சாதத்தை நிறுத்தி விட்டு, தினசரி ஒரு சாதம் என்று அறிவிப்பதற்கு காரணம்  என்று சத்துணவு பணியாளர்கள் கூறுகிறார்கள்.
மகா ஊழல்

இது குறித்து சத்துணவு பணியாளர்கள் கூறுகையில், ‘‘ எதிர்கால இந்தியாவான மாணவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.  எனவே, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு சத்துள்ள உணவாக இருக்க வேண்டும். 
வாரத்துக்கு ஐந்து முறை முட்டை போடப்பட்டாலும் அவை சத்து  இல்லாத புல்லட் முட்டையாகவே இருக்கிறது. 
மாவட்ட அளவில் இருந்த கொள்முதல் நடைமுறை மாற்றப்பட்டுள்ளதால், ஆண்டுக்கு பல கோடி  ரூபாய் ஊழல் பணம் மேலே உள்ளவர்கள் பைக்கு  செல்கிறது. 
இதனால், சத்துணவு அமைப்பாளர்கள் முட்டையின் தரத்தை கண்டுகொள்வதில்லை. மேலும்  காய்கறி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களிலும் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுகிறது. 
குறிப்பாக அரசியல்வாதிகள் மற்றும் உயர்  மட்டத்தில் செல்வாக்குள்ள அதிகாரிகள் மாணவர்களின் வருகைப் பதிவேட்டை அதிகரித்து காட்டி அதன் மூலம் அரசு பணத்தை சுருட்டி வருகின்றனர்.  
சில இடங்களில் அரசியல்வாதிகள், சத்துணவு ஊழியர்களை மிரட்டி பணத்தை வாங்கிச் செல்லும் அவல நிலையும் உள்ளது என்றனர். 
நன்றி:தினகரன்.

========================================================================
பாசிஸத்தை செஞ்சேனை 

வெற்றிகொண்ட 70ம் ஆண்டு

-ஆர். அருண்குமார்
இரண்டாம் உலகயுத்தம் நிறைவடைந்த 70ஆம்ஆண்டு உலகெங்கும் மே9 அன்று கடைப்பிடிக்கப் படுகிறது. 
இதற்குஒருநாள் முன் 1945 மே8அன்று ஜெர்மனியின் ரீச் ஸ்டாக்கில் உயர்ந்துஎழுந்த செங்கொடி இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததையும், பாசிஸ நாஜிப்படைகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டதையும் உறுதி செய்தது.
சோவியத் செஞ்சேனை பெர்லின் நகருக்குள் புகுந்து சிலதெருக்களுக்குள் நெருங்கிவருவதை அறிந்த கொடிய நாஜிப்படையின் தலைவனான அடால்ஃப் ஹிட்லர் 1945 ஏப்ரல் 30அன்று தனதுமறைவிடத்தில் தற்கொலை செய்துகொண் டான். தனது கனவுகளும், பேராசைகளும் தகர்ந்து போவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
வரலாற்றைத் திரிக்கும் முயற்சி‘
வெற்றிக்கு ஆயிரம் சொந்தங்கள்’ என்ற கூற்றுப்படி கடந்த 70ஆண்டுகளாக நாஜிப்படையைத் தோற்கடித்ததற்கு- இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக்கொண்டுவந்ததற்குப் பலநாடுகள் சொந்தம் கொண்டாடிவருகின்றன. உண்மையில் பாசிஸத்தை நோக்கி எறியப் பட்ட ஒவ்வொரு கல்லும் அதன் தோல்விக்குக் காரணமாயிருந்தது. 
ஆனால், தங்களைவிட மற்றவர்களைக் குறைத்து மதிப்பிட வேண்டும் என்பது இதன் பொருளல்ல. போலாந்தின் தலைவர் எழுத்துப்பூர்வமாக, போலாந்தை விடுவித்தவர்கள் ‘உக்ரேனியர்கள்’தான்: சோவியத் செஞ்சேனை அல்ல,’என்றார். 
ஐரோப்பிய யூனியனும்,
அமெரிக்க ஐக்கிய நாடுகளும் வரலாற்றைத் திரிப்பதை ஊக்குவிக்கும் வகையில்சோவியத்செஞ்சேனையின் முக்கியத் துவத்தைக் குறைத்து, அமெரிக்கா,பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பங்கை மிகைப்படுத்தின.அவர்களது திட்டமிட்டசெயல்கள் துரதிர்ஷ்டவசமாக மக்களின் கருத்துக்கள்மீது சிலவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் எடுக்கப்பட்ட ஓர்ஆய்வு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனியின் மக்களில் 13 சதவீதம் பேரே ஐரோப்பாவைப் பாசிஸத்தின் பிடியிலிருந்து விடுவித்தது சோவியத் செஞ்சேனை என்று உண்மையாக நம்புகிறார்கள் என்கிறது. கடந்த பல மாதங்களாக சோவியத்யூனியனுக்கும், ரஷ்யாவுக் கும் எதிரான பிரச்சாரங்கள் சோவியத் செஞ்சேனை பாசிஸத்தை வீழ்த்தியதையும், ஐரோப்பாவைப் பாசிஸத்திலிருந்து விடுவித்ததையும் மக்களின் பார்வையிலிருந்து மறைத்துவருகின்றன. 
43 சதவீதம் பேர் அமெரிக்காவும், 20 சதவீதம் பேர் பிரிட்டனும்,
முக்கியப் பங்கு வகித்ததாகவும், ஐந்தில் ஒருபங்கினர் .
அதாவது 22 சதவீதம் பேர் இந்தக்கேள்விக்குப் பதில்சொல்ல முடியாமல் இருப்பதாகவும் தெரிய வருகிறது. வரலாற்றைத் திரித்தலும், வரலாற்று உண்மைகளை மூடிமறைத்தலும் பி.ஜே.பி.க்குமட்டுமே சொந்தமான ஒன்றுஅல்ல போலிருக்கிறது! பி.ஜே.பி.யைப் போலவே கறைபடிந்த கரங்களைக்கொண்ட தங்கள் அரசியல் ஆதாயங்களுக் காக வரலாற்றை (துஷ்)பிரயோகம் செய்யும் பி.ஜே.பி.யின் நண்பர்கள் உலகெங்கும் இருக்கவே செய்கிறார்கள்!
உண்மை நிகழ்வுகள்
வரலாற்று ஆவணத்தை நேர்படுத்தச் சில உண்மை நிகழ்வுகளைப் பதிந்தாக வேண்டும். 1939 செப்டம்பர் 1ல் வெடித்த இரண்டாம் உலகப்போர் 6 ஆண்டுகள் நடைபெற்றது. அது அன்றைய உலகமக்கள் தொகையில் 80சதவீதம்பேரான 170கோடி மக்களைக்கொண்ட 61 நாடுகளை ஈடுபடுத்தியது. அந்த நேரத்தில் இந்த உலகயுத்தம் ஏகாதிபத்திய சக்திகளால் உலகெங்கும் உள்ள செல்வ ஆதாரங்கள் மீது தங்கள் கட்டுப்பாட்டைச் செலுத்த ஒரே சோசலிச சக்தியான சோவியத் யூனியன்மீது பேரழிவுத்தாக்குதலை நிகழ்த்தத் துவக்கப்பட்டது என்பதையும் நினைவு கூரவேண்டும்.
இந்தப்போர் ஏராளமான மனித உயிர்களைப் பலிகொண்டது. இறந்த 7 கோடிப் பேரில் 40சதவீதம் பேர் சோவியத்யூனியனை மட்டுமே சார்ந்தவர்கள். ஜெர்மனியின் பாசிஸப்போரில் சோவியத் யூனியனில் 1710 மாநகரங்கள், நகரங்கள், குடியிருப்புக்கள், 70,000க்கும் மேற்பட்ட கிராமங்கள், 32,000 தொழிற்சாலைகள், 65,000கி.மீ. ரயில் பாதைகள்அழிக்கப்பட்டன. பொருளாதார இழப்பு26,00,000 ரூபிள்களாக இருந்தது.மனிதகுல வரலாற்றில் எந்தவொரு நாடும்இந்த அளவுக்கு அழிவுகளையும்,
இழப்புக்களையும் சந்தித்ததில்லை. 
சோவியத் யூனியனும், கம்யூனிஸ்டுகளும்தான் நாஜிப்படைகளின் தாக்குதல்களைத் தாங்கிப்பிடித்து, வடுக்களைஏற்று நாஜிப்படைகளை வீழ்த்தியதில் பெரும்பங்கு வகித்தனர். பலபுள்ளிவிவரங்களில் இவை ஒருசில மட்டுமே. இன்று இந்தஉண்மைகள் உறைபனிக் குள் மூழ்கடிக்கப்பட்டாலும், ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்கள் அன்று இந்த உண்மைகளை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக் கப்பட்டார்கள்.
ரூஸ்வெல்ட் , சர்ச்சில் கருத்து
அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட். “செஞ்சேனையும், ரஷ்யமக்களும் மிக உறுதியாக ஹிட்லரின் படைகளைத் தெருக்களில் நிறுத்தி ஒப்பற்ற தோல்வியை அவர்களுக்கு அளித்தார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்களின் நீடித்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளார் கள்” என்று குறிப்பிட்டார். ரூஸ்வெல்ட்டின் அரசு செயலாளர் எட்வர்ட்.ஆர்.செட்டினியஸ், ‘போர்முனையில் சோவியத்யூனியன் தோல்வி அடைந்திருந்தால் ஜெர்மானியர்கள் கிரேட் பிரிட்டனைக் கைப்பற்றிவிடும் நிலையில் இருந்தார்கள்.
அதைத்தொடர்ந்து அவர்கள் ஆப்பிரிக்காவையும் கைப்பற்றியிருப் பார்கள். அதுமட்டுமல்ல, இந்த நிகழ்வில் அவர்கள் லத்தீன் அமெரிக்காவிலும் கூடத்தங்கள் கால்களைப் பதித்திருப்பார்கள்” என்று எழுதினார். 
அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், ‘ரஷ்யப் படைகள்தான் ஜெர்மனி ராணுவ இயந்திரத்தின் பலத்தைக் கிழித்தெறிந்தன” என்றார்.நாஜிப்படைகளின் ஜெனரல் போடோஜிம்மர்மேன் ‘இது மிகைப்படுத்திச்சொல்லப்படுவது அல்ல.
கிழக்குப்போர் முனையில் தொடர்ச்சியாக ஆற்றல்வாய்ந்த மனிதசக்தியைச் செலுத்தி, மேற்கில் இருந்த ஜெர்மனிப்படைகளின் ஆயுதங்களைப் போராடிவென்றது. 1943லிருந்து மேற்குப்போர் முனை வயதான வீரர்களையும், காலாவதியானஆயுதங்களையும் கொண்டி ருந்தது.’ என்று குறிப்பிட்டான். ஜெர்மா னிய வரலாற்றாளரான கே.ரெய்க்கா மிகவெளிப்படையாக,’1944ன் கோடைகாலத்தில் ஜெர்மனிக் கூட்டுப்படைகள் ’ஐரோப்பாவின் கோட்டையை’ப் பலமாகத் தாக்கியபோது இரண்டாம் உலகப்போரின் முடிவு ரஷ்யாவிடம் ஜெர்மனி தோல்வியுற்றதில் நடைமுறை சாத்தியமானது....
 மூன்று ஆண்டுகள் கிழக்கு ஐரோப்பா வில் நடைபெற்ற கடுமையான போருக்குப் பின் ஜெர்மானியப் படை மிகவும் பலமிழந்துவிட்டது. அதனால், நார்மண்டியில் வந்திறங்கிய அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகளோடு நீண்டகாலம் எதிர்த்துப் போராடமுடியாமல் இருந்தது”.
உலக நாகரிகத்தைக் காப்பாற்றியது
இதன் இணைப்பாக அன்றைய போலாந்துஅரசு, ‘ நாங்கள் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறோம்.
 உங்கள்மூலம் ஒட்டுமொத்த சோவியத் மக்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். நாஜி ஜெர்மனிக்கு எதிரான போரில் அற்புதமான வெற்றிபெற்றதன் மூலம், பாசிஸக் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து உலக நாகரிகத்தை யும், கலாச்சாரத்தையும் காப்பாற்றியுள் ளீர்கள்”என்று கூறியது.இவைகளே உண்மையான நிகழ்வுகள்.
 இருந்தபோதிலும் சோவியத்யூனியனோ,
கம்யூனிஸ்டு களோ நாஜிப்பாசிஸத்துக்கு எதிரான போரில் தங்களது கூட்டாளிகள் எவருடைய பங்கையும் சிறிதும்குறைத்து மதிப்பிடவில்லை. இது ஏகாதிபத்தியத்தின் உள்நோக்கங்களை ஹாரிட்ரூமன் வார்த்தை களிலிருந்து தெளிவாக அறிந்திருந்த போதும்கூட!
 ட்ரூமன்,’ ஜெர்மனி வெற்றி பெறுவதை நாம் பார்த்தால் நாம் ரஷ்யாவுக்கு உதவி செய்தாக வேண்டும்: ரஷ்யா வெற்றி பெறுமானால், நாம் ஜெர்மனிக்கு உதவவேண்டும். இதன்மூலம் அவர்கள் தங்களுக்குள் எத்தனை பேரைக் கொல்லமுடியுமோ அவ்வளவு பேரைக்கொல்லட்டும்’ என்றார்!
இந்தத் தத்துவ வழிகாட்டப்பட்ட பிரிட்டனும், அமெரிக்காவும் தான் 1934ல் போரைத் தடுக்க முயன்ற சோவியத் யூனியனின் முயற்சிக்கு எந்தவித ஆர்வத்தையும் காட்டவில்லை. 
அப்போது அவர்கள் தங்களது காலம் தாழ்த்தும் நடவடிக்கைகளால் பேச்சுவார்த்தைகள் முறிந்துபோகவே முழுமையான முயற்சிகளை மேற்கொண்டார்கள்.ஏகாதிபத்திய நாடுகளின் பெருத்த முயற்சிகளுக்கு மாறாக உலகமக்களும், பல ஐரோப்பிய நாடுகளும் சோவியத் செஞ்சேனையின் தலைமைப் பாத்திரத்தை நினைவில் கொண்டுள்ளார்கள். சோவியத் படைகள் ஐரோப்பாவில் 11 நாடுகளின் எல்லைகளை முழுமையாக அல்லது பகுதியாக விடுவிக்கவும் 11.3கோடி மக்கள் விடுதலை பெறவும் உதவியது. அத்தோடு ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டங்களை ஊக்குவித்துப் பல்வேறு நாடுகள் விடுதலை பெறவும் உதவியது.
இன்னும் சில எதிர்ப்புஇந்த வரலாற்றுப் பதிவுகளை அழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஐரோப்பாவில் உள்ள பல அரசுகள் செஞ்சேனை மாஸ்கோவிலிருந்து பெர்லினுக்குப் போர்ப்பயணம் மேற்கொண்ட பாதை வழியாகப் பேரணிகளை நடத்த அனுமதி மறுக்கின்றன. தங்கள்அரசுகளின் போக்கை அறிந்த இந்த நாடுகளின் மக்கள் பேரணிக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளார்கள்.
வரலாற்றைத் திரித்து எழுதுவதில் இன்றைய ஐரோப்பிய அரசுகள் மட்டும் முயற்சிக்கவில்லை.
 ஜப்பானின் தற்போதைய பிரதமர் அபே குறுகிய தேசவெறியை ஊட்டியும்,
ஜப்பானின் போர்க்கால நடவடிக்கைகளுக்குப் புனிதச்சாயம் பூசியும் மக்களிடம் வெறியுணர்வை ஏற்படுத்தி வருகிறார். 
சீனா மற்றும் கொரியாவின் சிலபகுதிகளைக் கைப்பற்றியுள்ளதை ஆக்கிரமிப்பாகப் பார்க்கக்கூடாது: ஜப்பானின் பாதுகாப்புக்காக அமெரிக்காவோடு செய்து கொண்ட ஏற்பாடு என்கிறார். 
சீனாவோடு ஏதாவது சச்சரவு ஏற்பட்டால் அமெரிக்கா தனது பாதுகாப்புக்கு வர அரசியல் சாசனத்தை வியாக்கியானம் செய்து புதிய வழிமுறைகளைக் கொண்டு வருவது பாசிஸத்துக்கு ஆதரவாக ஜப்பானை மென்மைப்படுத் தும் அபேயின் முயற்சிகளில் ஒன்றே.உலகம் முழுவதும் வலதுசாரிகளின் வளர்ச்சியை நாம் பார்க்கிறோம். 
அவர்கள் உலகின் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து எழும் அதிருப்திகளை அறுவடை செய்யமுயற்சிக்கிறார்கள். பிரிட்டனில் பெரும் பணக்காரர்களின் சொத்து கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆகியுள்ளதை அறிக்கைகள் காட்டுகின்றன.
இந்த ஆண்டுபெரும் பணக்காரத்தனி நபர்கள் மற்றும் குடும்பங்களின் சொத்துமதிப்பு 547 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. 
இது 2005ல் 250 பில்லியன் டாலர்களாக இருந்தது.
 இதுவே அமெரிக்காவிலும் உண்மையாகி வருகிறது. 2009 ஜூனில் பொருளாதார வீழ்ச்சியின்போது 1 சதவீதம் மட்டுமே உள்ள பெரும் பணக்காரக் குடும்பங்கள் 99 சதவீத இலாபங்களைப் பெற்றுள்ளார்கள் என அதிகாரவட்டாரங்கள் கூறுகின்றன. 
அதேநேரத்தில் நடுத்தரக் குடும்பங்களின் வருமானம் 2009 முதல் ஆண்டுதோறும் 1 முதல் 2 சதவீதம் வீழ்ச்சியடைந்து வருகிறது. நடுத்தரத்துக்கும் கீழ் உள்ளவர் கள் உண்மை வருமானத்தின் வீழ்ச்சியோ பெருமளவுக்கு உள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுவது என்ன? தொழிலாளர்கள் ஊதியம் ஒவ்வொரு நாளும் குறையக்குறைய பெரும்பணக்காரர்களின் இலாபம் உயர்ந்துவருகிறது.
இது 21ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவம். இது மக்களின் வாழ்வில் துன்பதுயரங்களை உருவாக்கிக் கொள்ளை இலாபங்களைப் பெருமுதலாளிகளுக்கு அளிக்கிறது.இதனால் ஏற்படும் கோபங்கள் தங்கள் மேலாதிக்கத்துக்கு எதிராக வருவதை ஆளும் வர்க்கங்கள் விரும்பமாட்டா. இந்தக் காரணத்துக்காக வரலாறு கற்பித்த பாடங்களைப் புறக்கணித்துவிட்டு வலதுசாரிப் பாசிச சக்திகள் வளர்ந்து வருவதை ஊக்குவிக்கத் தயங்குவதில்லை. இதை உக்ரெய்னில் பார்க்கிறோம். 
.(பீப்பிள்ஸ் டெமாக்ரஸி ஏப்ரல் 27 இதழிலிருந்து) தமிழில்: செ.நடேசன்
========================================================================
இன்று,

மே -09.
 • ரோமானிய சுதந்திர தினம்(1877)
 • கான்பராவில் ஆஸ்திரேலிய பார்லிமென்ட் திறந்து வைக்கப்பட்டது(1927)
 • காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது(1985)
 • குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி, பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது(1874)
 • ஹிட்லரை {பாசிஸத்தை} ரஷ்யா  செஞ்சேனை வெற்றிகொண்ட நாள்.
   இரண்டாவது உலக யுத்தம். 1939ல் துவங்கி ஆறு ஆண்டு காலம் நீடித்து கோடிக்கணக்கான மக்களை பலி கொண்ட அந்தக் கோரமான போர் சோவியத் நாட்டின் செஞ்சேனையால் ஸ்டாலின் தலைமையில் முறியடிக்கப்பட்டது.
  1945 ஏப்ரல் 30ல் இட்லர் தற்கொலை செய்து கொண்டான். 1945 மே 7ம் தேதி ஜெர்மனியின் நாடாளுமன்றக் கட்டித்தின் மீது (ரீச் ஸ்டாக்) அரிவாள் சுத்தியல் பொறித்த
   செங்கொடி ஏற்றப்பட்டது. பெர்லின் வீழ்ந்தது. ஜெர்மனி நாஜிப் படைகள் சரணடைந்தன. மே 9ம் தேதியை சோவியத்நாடு வெற்றி தினமாகக் கொண்டாடியது.
==============================================