செவ்வாய், 26 மே, 2015

எண்ணெய் கொப்பளித்தல்நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்“ வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்” என்பது பழமொழி. 
இ தே போல மற்றொரு அனுபவ உண்மை என்னவெனில், வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால் நோய்கள் பல நீங்கும். நல்லெண்ணெய் மருத்துவம், நல்லெண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துகிறது. 
சிரமம் ஏதுமின்றி மிக எளிதாக செய்யக் கூடிய எண்ணெய் கொப்பளித்தலை செய்து வருவது நமது உடல் நலத்தைப் பேணிக்காக்கும்.

எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை


சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 21 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும் படி செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப்போகும். அப்போது அதை உமிழ்ந்து விட வேண்டும். அதன் பிறகு வாயை நன்கு கழுவிக்கொள்ளவும்.

எந்தநேரத்தில் செய்யவேண்டும்?

இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை. நாம் பல் தேய்த்த பிறகு, உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல பலன் கிடைக்கும்.

எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?

நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல மனநிலை ஆகியவை வரும் வரைக்கும் எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் 9 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

நன்மைகள்:

வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகள்.  தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி , பற்கள் வெள்ளையாகவும் , ஆரோக்கியமானதாகவும் காணப்படும்

வாய்துர்நாற்றம்:


தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.

ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு:


ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும். பல் கூச்சம் நின்று பல் வலி மறையும்.

உடலின் எனர்ஜி அதிகரிக்கும்:


ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

ஒற்றை தலைவலி:
 
ஒற்றை தலை வலியால் அவஸ்தைப் படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.
சைனஸ் ஆஸ்துமா:

சைனஸ் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்தால் , இந்த பிரச்சனைகள் குணமாகும்.

நிம்மதியான தூக்கம்:

தூக்கமின்மையால் அவஸ்தைப் படுபவர்கள் ஆயில் புல்லிங் செய்தால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
 
பொலிவான சருமம்:

ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்க உதவும்.

தைராய்டு:

தைராய்டு உள்ளவர்கள், ஆயில் புல்லிங் செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்க செய்து, தைராய்டு பிரச்சனையைக்க ட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

பார்வைக்கோளாறு:

பார்வைக்கோளாறு இருந்தால், ஆயில் புல்லிங் செய்து வர பார்வைக் கோளாறானது சரியாகும்.

மூட்டுபிரச்சனைகள்:


மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குணமாக்கும்.

சிறுநீரக செயல்பாடு:

தினமும் ஆயில் புல்லிங் செய்தால், சிறுநீரக கோளாறு ஏற்படாமல் , சிறுநீரகமானது சீராக செயல்படும். தோலின் மீது குழிகளும் வெடிப்புகளும் மறைந்து தோல் பளபளப்பாகிறது. கை ,கால், விரல்கள் மெருகுற்று ரத்த ஓட்டம் பெருகியதற்கான அறிகுறிகள் தெரியும். தோல் அரிப்புகள் படிப்படியாக குறைந்து 3 மாதங்களில் மறையும். பொடுகு தொல்லை தீரும். பருக்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவு பெறும்.

வலி நிவாரணியாகும் 

லவங்கப் பட்டை பொடி


மூட்டு வலிகள்:

ஒரு பகுதி தேனுக்கு இரண்டு பகுதி தண்ணீர் எடுத்து அதில் ஒரு சிறிய தேக்கரண்டி அளவு பட்டை பொடியை கலந்து குழைத்து கொண்டு வலியுள்ள பகுதியில் மெதுவாக தேய்த்து வந்தால், இரண்டு நிமிடங்களில் வலி குறையத் தொடங்கும். ஆர்த்தரடிஸ் நோயாளிகள், தினமும் காலையில் ஒரு கப் சுடு தண்ணீரில் , 2 ஸ்பூன் தேன், ஒரு சிறிய டீ ஸ்பூன் பட்டைப் பொடியை கலந்து தினமும் குடித்து வந்தால் போதும்.

முடி உதிர்தல்:


முடி உதிர்வு மற்றும் வழுக்கை தலையுள்ளவர்கள் சிறிதளவு ஹாட் ஆலிவ் ஆயில் , ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் பட்டை பவுடர் மூன்றையும் கலந்து பேஸ்ட்டாக கலந்து, குளிப்பதற்கு , 15 நிமிடத்திற்கு முன்பு தேய்த்து அதன் பிறகு வார்ம் வாட்டரில் தலையை கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கொலஸ்டிரால்: 

இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் , மூன்று டீ ஸ்பூன் பட்டை பவுடரை , 16 அவுன்ஸ் டீத்தண்ணிரில் கலந்து கொலஸ்டிரால் நோயாளிகளுக்கு கொடுத்தால் , இரண்டு மணி நேரத்தில் ரத்தத்திலுள்ள கொலஸ்டிரால் , 10% குறைந்து விடும். தினசரி மூன்று முறை கொடுத்தால் நாள் பட்ட கொலஸ்டிராலும் குணமாகிவிடும்.

ஜலதோஷம்: 

ஜல தோஷத்தால் அவதிப்படுகிறவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன் வார்ம் தேன், 1/4 டீஸ்பூன் பட்டை பவுடர் கலந்து மூன்று நாட்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ஜலதோஷம், இருமல், சைனஸ் குணமாகிவிடும். 

வயிற்றுக் கோளாறு:


தேனுடன்பட்டை பவுடரை கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும் . அது போல சரி சம அளவு இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால் வாயு பிரச்னையும் குணமாகும்.

நோய் எதிர்ப்பு தன்மை:


தேனையும் பட்டை பவுடரையும் தினமும் உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு தன்மை கூடி உடம்பை பாக்டீரியா மற்றும் வைரஸ் அட்டாக்கிலிருந்து காப்பாற்றும்.

நீண்ட வாழ்வு:

நான்கு ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் பட்டை பவுடர் மற்றும் 3 கப் சூடான நீருடன் கலந்து தேனீர் தயாரித்து குறைந்தது தினசரி மூன்று வேளை 1/4 கப்பாவது அருந்த வேண்டும். இது உங்கள் தோலை புதுப்பொலிவுடன் வைத்து கொள்வதோடு மட்டுமல்லாமல் முதுமையடைவதை தடுக்கும்.

உடல் எடை குறைய:


அதிகம் வெயிட் போட்டவர்கள் , தினசரி தேனையும் பட்டை பவுடரையும் கொதித்த தண்ணிரில் கலந்து , அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும். ரெகுலராக குடித்து வந்தால், உடம்பில் கொழுப்பு சேரவே சேராதாம்.

நன்றி;தினகரன்.
========================================================================
இன்று,
மே -26.
  • ஜார்ஜியா தேசிய தினம்
  • போலந்து அன்னையர் தினம்
  • ஜார்ஜியா மக்களாட்சி குடியரசு அமைக்கப்பட்டது(1918)
  • பிரிட்டன் கலானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது(1966)
  • ஐரோப்பிய கொடி, ஐரோப்பிய சமூகத்தால் பெறப்பட்டது(1986)
========================================================================
 வினவு தளத்தில்  ஓவியர் முகிலன் கைவண்ணம்.

இன்னமும் ஆலோசித்துக் கொண்டேயிருக்கும்  கர்நாடகா.

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டு, முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டு விட்டார். 
ஆனால், அவரது வழக்கில் மேல்முறையீட்டுக்கு செல்வது தொடர்பான இழுபறி இன்னும் நீடிக்கிறது.
ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவித்து, நீதிபதி குமாரசாமி அளித்துள்ள தீர்ப்பில், மிகப்பெரிய கணக்கீட்டுத் தவறு இருப்பதை, குமாரசாமி உள்பட அனைவருமே உணர்ந்துள்ளனர்.
இந்த தவறு ஒன்றேமேல்முறையீட்டுக்குச் செல்வதற்குப் போதுமானது என்பதை சட்ட வல்லுநர்கள் பலரும் தெளிவுபடுத்தியுள்ளனர். 
எனினும், மேல்முறையீட்டுக்கு செல்ல கர்நாடக அரசுக்கே முதல் உரிமை உள்ளதால், அனைவரும் கர்நாடக அரசின் முடிவையே எதிர்நோக்கி இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றே, இது எதிர்பாராத தீர்ப்பு என்று கர்நாடக அரசின் வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா குறிப்பிட்டார். 
ஆலோசனைத்திலகம்.
ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ. 16 கோடியே 32 லட்சம் சொத்து சேர்த்துள்ள நிலையில்- சதவிகித கணக்கில் பார்த்தால், 76.7 சதவிகிதம் கூடுதல் சொத்து வரும் நிலையில், நீதிபதி குமாரசாமியோ ரூ. 2 கோடி அளவிற்கே (8.12) ஜெயலலிதா கூடுதல் சொத்து சேர்த்திருப்பதாக தவறாக கணக்கிட்டு தீர்ப்பு அளித்துள்ளார் என்று அவர் கூறியிருந்தார்.
மேலும் குமாரசாமியின் தீர்ப்பில் ஒன்றல்ல; ஓராயிரம் தவறுகள் உள்ளன என்று கூறிய பி.வி.ஆச்சார்யா, இவ்வழக்கில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்திற்கு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
இதேபோல ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்யலாம் என்று, கர்நாடக அரசுதலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமாரும், அம்மாநில அரசுக்குப் பரிந்துரை செய்தார்.
இவ்வாறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டு ஒருவாரத்திற்கு மேலாகியும் கர்நாடக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. 
இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.ஜெயலலிதா சொத்துக் குவிப்பு தொடர்பாக முதன்முதலில் நீதிமன்றத்திற்கு சென்றசுப்பிரமணியசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜூன் 1-ம் தேதிக்குள் கர்நாடக அரசு மேல்முறையீட்டுக்குச் செல்லவில்லை என்றால், தான் கட்டாயம் மேல்முறையீடு செய்வேன் என்று தெரிவித்தார்.
புதுதில்லியில் இரண்டு நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது பற்றி, கர்நாடக சட்டத்துறை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டதுடன், சட்டத்துறையின் பரிந்துரை வந்த பிறகே மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மறுபுறத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும், இவ்வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக மேல்முறையீட்டுக்குச் செல்லக் கூடாது என்று கருத்து தெரிவிக்கத் துவங்கினர்.
குறிப்பாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சி.எம்.தனஞ்செய் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று குறிப்பிட்டார்.
இனிமே இப்படித்தான்.
இதன் உச்சகட்டமாக கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு சார்பில், அம்மாநிலஅரசுக்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளது. 
அதில், ‘ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை, கர்நாடக அரசின் பங்கு என்பது நிர்வாகரீதியானதே தவிர; சட்டப்பூர்வமானது அல்ல’ என்றும், மேலும்,‘இவ்வழக்கில் கர்நாடகம் நேரடியாக பாதிப்படாத நிலையில், இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யத் தேவையில்லை’ என்றும் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சட்டப்பிரிவு தலைவர் தனஞ்செய், கர்நாடக முதல்வர் சித்தாராமையாவை, நேரில் சந்தித்தும் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார்.இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, பி.வி.ஆச்சார்யாவின் பரிந்துரையை ஏற்று, ஜெயலலிதா வழக்கில்கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தான் நம்புவதாகவும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் திமுக சார்பில் கட்டாயம் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு திமுகவுக்கு உரிமைஉள்ளது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உறுதிப்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, மேல்முறையீடானது கர்நாடக அரசின் முடிவைப் பொறுத்தே அமையும்.
ஆனால், காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசுக்கு, காங்கிரஸ் கட்சியிலிருந்தே, ‘மேல்முறையீடு கூடாது’ என்று நெருக்கடி அளிக்கப்படுகிறது. அதற்காக ஜெயலலிதா தரப்பு பல்வேறு நடவடிக்கைககளை எடுத்து வருகிறது.
பணம் பாதாளமட்டும் பாயும் 

சுப்பிரமணியசாமி மேல்முறையீடு செய்வேன் என்று கூறினாலும், அவர் சார்ந்த பாஜக வாயைஇறுக்கமாக மூடிக் கொண்டிருக்கிறது.
உலகமே இது பொய்யடா.வெறும் காசடைத்த பையடா என்றுதான் பாடத் தோன்றுகிறது .அந்த அளவுக்கு கொள்கைகள்,கட்சிகள் தலைவர்கள் எல்லோரும் காசுக்கு விலை போகின்றனர்.
காரணம் பதவி என்றாவது வரலாம் போகலாம் லட்சுமி கதவை தட்டும் போது திறந்து விட வேண்டும் என்ற உண்மைதான்.
========================================================================
நன்றி:தீக்கதிர்.
மே .வங்க அமைச்சர் காலணி கயிறு கட்டும் பாதுகாவலர்.
நம்ம ஊர்ல காலில் விழுந்து கிடப்பதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை.