புதன், 6 மே, 2015

இளமை..இதோ!..இதோ..!!

 வைட்டமின் இயின் சிறப்புகளை இங்கே பார்ப்போம்...
ஒவ்வொரு வைட்டமினுக்கும் சில சிறப்பு குணங்கள் உள்ளன. 
வயதை மறைக்கும்  காரணியாக செயல்படும் காரணத்தால் எல்லோரிடமும்,குறிப்பாக கொஞ்சம் வயதேறிய 
 பெண்களிடையே பெருமவுசு பெற்று வரும் வைட்டமின்" இ"யின் 
சிறப்புகளை இங்கே பார்ப்போம்...
வைட்டமின் இ கொழுப்பில் கரையக்கூடியது. 
இது சிறந்த ஆன்டிஆக்சிடன்டாக செயல்பட்டு சருமத்தில் சுருக்கத்தை வரவைக்கும்  ஃப்ரீ ரேடிகல்ஸ் காரணிகளை தடுக்கிறது. 
 வைட்டமின் இ சத்து போதுமான அளவு உள்ளவர்களின் சருமம் சுருக்கம் ஏற்படாமல்  பொலிவாக காணப்படும். வைட்டமின் இ உடலில் சுரக்கும் என்சைம்களை ஊக்குவிக்கிறது. 
ஜீன்களின் செயல்பாடுகளிலும்  முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு களின் செயல்பாடுகளிலும் இதன் பங்கு முக்கியமானது.
 செல்களுக்கு இடையே தகவல்  பரிமாற்றத்துக்கும், வளர்சிதை மாற்றத்துக்கும்  உதவுகிறது. 
புரோட்டின் கைனேஸ் என்னும் என்சைமை சரியான முறையில் சுரக்கச் செய்து மிருதுவான தசைகளின் வளர்ச்சியை  ஊக்கப்படுத்துகிறது. காயங்களின் போது ஏற்படும் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தி ரத்தத்தை எளிதில் உறையவைக்கிறது.  
புண்களை விரைவில் ஆற்றும் செயலைச் செய்கிறது. 
திசுக்களில் ஏற்படும் சேதாரத்தைத் தடுத்து, புதிய செல்கள் உருவாக  உதவுகிறது. நல்ல கொழுப்புகளை உடலில் தங்கவைக்கிறது.
 உடலுக்கு நன்மை செய்யும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு  அமிலங்களை ஆக்சிடேசன் ஆகாமல் தடுக்கிறது.

வைட்டமின் இ குறைந்தால், உடலில் எதிர்ப்பு சக்தி குறையும். 
நரம்பியல் சார்ந்த நோய்கள் வரும். ரத்தம் உறையும் தன்மையும்  குறையும். சருமப் பிரச்னைகள் அதிகரிக்கும். முதுமை நோய்கள் அதிகரிக்கும்.

இக்குறைபாட்டை சரிசெய்ய மாத்திரைகளைவிட  இயற்கையாக உணவுப் பொருட்கள் மூலம் கிடைக்கும் வைட்டமின் இதான் சிறந்தது. 

பொதுவாக எண்ணை வகைகளில் வைட்டமின் இ கிடைக்கும்.ஆனாலும் கோதுமை தவிட்டு   எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் பருப்பு மற்றும் எண்ணெய், ஹேசல்நட், கிரீன் டீ, பசலைக்கீரை,  பீட்ரூட் இலைகள், டர்னிப் இலைகள், பப்பாளி, மாம்பழம், தக்காளி, வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு 
மற்றும் அவகடோ  போன்றவற்றில் வைட்டமின் இ  இருப்பதால் 
இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வைட்டமுன் இ உடலில் சேர,சேர உங்கள் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும் .வெளியே தெரியாது.தோலில் பளபளப்பு ஏறுவதால் உங்கள் வயது மற்றவர்களுக்கு இளைமையாக தெரியும்.
என்ன?
வைட்டமின் இ  உணவுப்பொருட்களை சாப்பிட ஆரம்பித்து விட வேண்டியதுதானே.அப்புறம் அம்மான்னு கூப்பிட்டவங்க்க அக்கான்னும் ,அய்யான்னு கூப்பிட்டவங்க்க அண்ணான்னு  கூப்பிட ஆரம்பித்து விடுவார்கள்தானே .
========================================================================

இன்று,

மே-06.

  • இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது(1854)
  • ஈபெல் டவர், பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்து விடப்பட்டது(1889)
  • இந்திய விடுதலை வீரர் மோதிலால் நேரு பிறந்த தினம்(1861)
  • பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேர் பிறந்த தினம்(1953)========================================================================
 இப்போது தகிக்கும் வெயில் போதாது என்று அக்னி நட்சத்திரம் வேறு சேர்ந்துள்ளது..

வெயில், பயங்கரமான சூடு, வெப்பம், வெளியில் தலை காட்ட முடியலை; ஆனாலும், வீட்டிலேயே உட்கார்ந்தும் இருக்க முடியாதே... வெயிலும், சூடும் நம்மை போட்டு தாக்கி ஒரு வழி செய்து விடும்.

 அதன் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள  ஒரு அனுபவ ஆலோசனை, மருதாணி இலைகளை அரைத்து கை, கால், உள்ளங்கால், நகம் என பூசிக் கொள்வது. 

 மருதாணிக்கு எங்கு செல்வது என்ற யோசனையா? உங்கள் பகுதியில் கீரை விற்பவர்களிடம்  சொல்லி வைத்தால் மருதாணி கிடைக்கும். 

செயற்கையான பாக்கெட் பவுடர்கள், கோன்கள் வேண்டாம். அவை ரசாயன கலப்பு உள்ளவி.கேடு செய்பவை.

 ஆண்கள் இரு உள்ளங்கால்களிலும் பூசிக்கொண்டால், உடல் சூடு குறைய ஆரம்பிக்கும்.

உடல் சூட்டினால்கோடை காலம் வந்து தொல்லை தரக்கூடிய பல வியாதிகள், நம் பக்கம் வராது. எட்டிப் பார்க்காது. 


மருதாணி பவுடர் – கால் கிலோ
கடுக்காய் – 25 கிராம்
துளசி பவுடர் – 25 கிராம்
நெல்லிக்காய் – 50 கிராம்
டீத்தூள் டிகாஷன் – 50 கிராம்
2 எலுமிச்சம்பழங்களின் சாறு
யூகலிப்டஸ் ஆயில் – 4 துளி
ஆலீவ் ஆயில் – 4 டீஸ்பூன்
இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கிரைண்டரில் அரைத்து பேஸ்ட்டாக்குங்கள்.
இதை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். மூன்று அல்லது நான்கு மாதம் வரை கெடாது. இந்த “பேக்”கை வாரம் ஒரு முறை தலைக்குப் போட்டு, அரை மணி நேரம் கழித்து அலசுங்கள்.

மருதாணி இலை – 250 கிராம்
கொட்டை நீக்கிய கடுக்காய் – 25 கிராம்
சுத்தம் செய்யப்பட்ட துளசி இலை – 25 கிராம்
கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் – 25 கிராம்
இவற்றை நன்றாக நசுக்கி கிரைண்டரில் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் யூகலிப்டஸ் ஆயில் – 10 துளி, ஆலீவ் ஆயில் – 4 டீஸ்பூன், 2 எலுமிச்சம்பழங்களின் சாறு, டீத்தூள் டீகாஷன் – 100 கிராம் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.
இந்த கலவை இரண்டு மாதம் வரை கெட்டுப்போகாது.

மருதாணி போடுவதால் வெள்ளை முடி நிறமாகும். 
தொடர்ந்து நரைக்காது. அதோடு, முடி கொட்டுவதும் நின்று போகும். 
ஆனால், வெறும் மருதாணி, முடியை வறட்சியாக்கிவிடும்.
 மருதாணியுடன் மேலே கண்ட பொருட்களையும்  சேர்த்தால் நல்ல பயன் கிடைக்கும்.
கூந்தல் மிருதுவாகும். 
சளி பிடிக்காது. சைனஸ் பிரச்னை இருப்பவர்களும் பயன்படுத்தலாம்.
நன்றி:தீக்கதிர்.

தற்கொலை செய்து கொண்டிருப்பது

 அரசு ஊழியர்கள் மட்டுமல்ல 

தமிழ் நாட்டில் நிர்வாகம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளே போனதில் இருந்து  முன்னை விட அதிகமாக சீரழிந்து விட்டது.ஆட்சியாளர்கள் இருக்கிறார்களா அவர்கள் பால்குடம்,காவடி வழிபாடு செய்வது, ஆட்சியில் முறைகேடுகளை செய்வதைத் தவிர வேறு மக்கள் நலத்திட்டங்கள் செய்வதும் கிடையாது.
அமைச்சர்கள்,கட்சிக்காரர்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர்களும் ஆலய வழிபாடு,காவடி என்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராக அலைகிறார்களே தவிர வாக்களித்த மக்கள் நலன் பற்றி சிந்தித்துப்பார்ப்பது இல்லை.பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்த வர்களால் மற்ற மக்களுக்கும் இந்த கொடுமை உண்டாகிறது.மக்கள் மனதில் ஒரு அதிருப்தி அலை 2005 ஆண்டில் உண்டானது போல் உண்டாகியுள்ளது.
ஆனால் அதை பயன் படுத்திக்கொள்ள முன் போல் எதிர்கட்சிகள் ஒற்றுமைதான் இன்று இல்லை.இதுதான் அதிமுகவுக்கும் ,அவர்கள் வாக்களிக்க கொடுக்க இருக்கும் பணத்துக்கும் நல்ல வாய்ப்பு..
நிர்வாகத்துறையில் லஞ்சமும் ஊழலும் எந்த அளவுக்கு ஊடுருவியுள்ளது என்பதை அடுத்தடுத்து நடைபெற்றுவரும் தற்கொலை நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. 
நெல்லை வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி, அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியால் மிரட்டப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். கடுமையான நிர்ப்பந்தத்திற்கு பிறகு அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
சென்னை எண்ணூரைச் சேர்ந்த ரேசன் கடை ஊழியர் இளங்கோ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
உயரதிகாரிகளின் நிர்ப்பந்தம் காரணமாக கூட்டுறவு சொசைட்டி ஊழியர்கள் கணேசன், நல்லமலை ஆகியோரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. 
அதிக அளவு முறைகேடு நடைபெறும் இடங்களில் ஒன்றாக ரேசன் கடைகள் விளங்குகின்றன. மேல் அதிகாரிகள் மற்றும்ஆளும் கட்சியினரின் கொள்ளைக்கு துணைபோ காத ஊழியர்கள் நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். சில சமயங்களில் அவர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர். 
இந்தப் பின்னணியில்தான் ரேசன் கடைஊழியர்களின் தற்கொலை நடந்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தி யில் தற்கொலை நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 

இந்த நிலையில் நன்னிலம் வட்டார ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக பணியாற்றிய முத்துக்கிருஷ் ணன் என்பவர் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

அவர் தனது மரண வாக்குமூலத்தில் அலுவலக செயற்பொறியாளர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். தான் கூறும் நபர்களுக்கு கம்பி மற்றும் சிமெண்ட்டை கணக்கில் காட்டாமல் கொடுக்க வேண்டும் என மேலதிகாரி நிர்ப்பந்தம் செய்துள்ளார். 

அவ்வாறு முறைகேட்டில் தொடர்ந்துஈடுபடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையிலேயே முத்துக் கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண் டுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் கூட்டுறவு பண்டக சாலை ரேசன் கடையில் அளவையாளராக பணியாற்றும் சக்திவேல் தற்கொலைக்கு முயன்றுள் ளார். ஆளும் அதிமுக கட்சிப் பிரமுகர் ஒருவர் கொடுத்த தொல்லை காரணமாகவே தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாக சக்திவேல் எழுதிவைத்துள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் தற்போது லஞ்சம் , ஊழல் இல்லாத இடமே இல்லை என்றநிலை உருவாக்கப்பட்டுவிட்டது.
பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி முதல், சத்துணவுக் கூட ஆயா பணி வரை அனைத்தும் லட்சக்கணக்கில் ஏலம்  போட்டு விற்கப்படுகிறது.
 இதுகுறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானாலும் ஆளும்கட்சியினர் அலட்டிக்கொள்வதும் இல்லை, கூச்சப்படுவதும் இல்லை.

ஆளுனர் மனுக்களை பெற்றுக்கொண்டும் ஒரு விசாரணையும் இல்லை.
 ஒருபுறத்தில் யாகங்கள் நடத்திக்கொண்டே மறுபுறத்தில் அமைச்சர்கள் துவங்கி ஆளும் கட்சியினர், ஜால்ரா அதிகாரிகள்  பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். 

அரசு நிர்வாக இயந்திரத்தை முற்றிலும் லஞ்சமயமாக்க முயன்றுள்ளனர். இதற்கு உடன்படாத மனச்சாட்சியுள்ள அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு தொல்லைக்கு உள்ளாகின்றனர்.
கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் தலைவராக பணீயாற்றிய ஐஏஎஸ் 
அதிகாரி சகாயம் பட்டபாடு இதற்கு ஒரு உதாரணம்.

 மறுபுறத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சித்ரவதை காரணமாக தற்கொலை செய்துகொள்வது அதிகரிக்கிறது. 
இந்த முறைகேடுகளில் சிக்க வைக்கப்பட்டு பாதிக்கப் பட்ட அரசு ஊழியர்களின் தற்கொலைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும்.

கீழிருந்து மேலேவரை நடக்கும் இந்த நிர்வாக சீர்கேடுகளை,லஞ்ச முறைகேடுகளை யாரிடமும் சொல்லி நிவாரணம் தேட இந்த அதிமுக 
பினாமி ஆட்சியில் வழியில்லாமல் மன உளைச்சலில் தான் இந்த தற்கொலைகள் தொடர்கின்றன.

இது அதிமுக அசிங்க ஆட்சிக்கு அடிக்கப்படும் சாவு மணி என்பதை ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களோ ,விடுதலையை மட்டும் இன்றைய முக்கிய பணியாக கொண்டுள்ள அதிமுக கட்சி பொது செயலாளர் ஜெயலலிதாவோ உணர்ந்ததாக தெரியவில்லை.

தற்கொலை செய்து கொண்டிருப்பது அரசு ஊழியர்கள் மட்டுமல்ல அதிமுக ஆட்சியும்தான்.
========================================================================
  •  ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், பப்பாளி பழங்களை, அதிக அளவில் உட்கொள்ள, ரத்த அழுத்தம் குறையும்.
  •  முள்ளங்கியை சமைத்து சாப்பிட, வாத வீக்கம் குணமாகும்.
  •  மூல வியாதி உள்ளவர்கள், அடிக்கடி பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் நல்லது.

============================================================================================================


========================================================================