எஷ்டு தொகண்டிதிரி குமாரசாமி ?
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு விசாரணையின் முடிவில் நீதிபதி குமாரசாமி கொடுத்த தீர்ப்பு சாதாரணமா னவர்களுக்கு மட்டுமல்ல அதிமுக கட்சியினருக்கு கூட அதிர்ச்சிதான். வேண்டுமானால் தண்டனை கொஞ்சம் குறைக்கப்பட மட்டும் செய்யப்படலாம் என்று எதிர் பார்ப்பில் இருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.இந்த வழக்கின் தீர்ப்பு வழங்க்கப் பட்டதா?வாங்கப்பட்டதா?என்பது தான் இன்றைய பரபரப்பு .இதோ சவுக்கு புலன் விசாரணை கட்டுரை மீள் பதிவு.
என்னடா சவுக்கில் புரியாத தலைப்பில் கட்டுரை வருகிறதே என்று பார்க்கிறீர்களா ? இது கன்னடம். குமாரசாமிக்கு புரியும்படி எழுத வேண்டுமானால் கன்னடத்தில்தானே தலைப்பு வைக்க வேண்டும் ?
தலைப்புக்கு என்ன பொருள் என்றால் எவ்வளவு வாங்கினீர்கள் குமாரசாமி ?
பச்சையாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை எவ்வளவு லஞ்சம் வாங்கினீர்கள் என்று கேட்கும் அளவுக்கு அப்படி என்ன துணிச்சலான ஆதாரம் சவுக்கிடம் இருக்கிறது என்ற கேள்வி எழக்கூடும். அந்த கேள்விக்கான விடை, இக்கட்டுரையின் இறுதியில்.
சரி. விஷயத்துக்கு போவோம். நாடே எதிர்ப்பார்த்த ஒரு தீர்ப்பு இன்று நொடியில் வழங்கப்பட்டுள்ளது. ஒரு புறம், அதிமுகவினர் வெடி வெடித்துக் கொண்டாட மறுபுறம், அரசியல் நோக்கர்களும், எதிர்க்கட்சிகளும், ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்துள்ளன.
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு, இந்தியாவில் மற்ற எல்லா சொத்துக் குவிப்பு வழக்குகளுக்கும் ஒரு உதாரணம். இது போன்ற ஒரு வழக்கே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த வழக்கு அனைத்து வழக்குகளுக்கும் உதாரணமாக இருந்தது. ஏனென்றால், நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பின்படி,
சோதனைக்காலம் தொடங்குகையில்
ஜெயலலிதாவின் சொத்து (30.04.1996) 55,02,48,215.00
சோதனைக் காலத்தில் ஜெயலலிதாவின்
செலவு 8,49,06,833,00
மொத்தம் 63,51,55,048.00
சோதனைக் காலத்தில் ஜெயலலிதாவின்
வருமானம் 9,91,05,094.00
வருமானத்துக்கு அதிகமான சொத்து 53,60,49,954.00
வருமானத்துக்கு அதிமான சொத்தின் சதவிகிதம்.
53,60,49,954 X 100
9,91,05,094
ஜெயலலிதா சேர்த்துள்ள வருமானத்துக்கு அதிகமான சொத்தின் சதவிகிதம் 540.89. இதுதான் எல்லா ஆதாரங்களையும், ஆவணங்களையும் அலசி ஆராயந்த பிறகு, நீதிபதி மைக்கேல் குன்ஹா அளித்த தீர்ப்பு.
இன்று ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமான சொத்து என்று குறிப்பிடுவது எவ்வளவு தெரியுமா ? 8.12%.
540.89 சதவிகிதம் எப்படி வெறும் 8.12 சதவிகிதம் ஆனது ? அங்கேதான் நீதிமான் குமாரசாமி நிற்கிறார். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு மொத்தம் 919 பக்கங்கள். இவ்வளவு விரிவாக தீர்ப்பும் விளக்கமும் அளித்திருக்கிறார் என்று நினைத்து விடாதீர்கள்.
முதல் பகுதி, சாட்சிகள் சொன்னது, அவர்கள் குறுக்கு விசாரணையில் சொன்னது, சென்னையில் பிறழ் சாட்சிகளாய் மாறி சொன்னது, பிறகு மீண்டும் மறு விசாரணையில் சொன்னது ஆகியவற்றை வைத்து 500 பக்கங்களை நிரப்பி விட்டார். நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை 300 பக்கங்களில் நிரப்பி விட்டார். உச்சநீதிமன்றம், பேராசிரியர் அன்பழகன், மற்றும் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வமான வாதங்களையும், சுப்ரமணிய சுவாமி வாதங்களையும் வைத்து, 90 பக்கங்களை நிரப்பி விட்டார். மீதம் உள்ள 30 பக்கங்கள்தான் தீர்ப்பு. அதிலும் 28 பக்கங்களுக்கு, ஜெயலலிதா ஊழல் செய்து சொத்து சேர்க்கவேயில்லை என்பதற்கு ஏற்றார்ப்போல, 1947ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டியுள்ளார். இதற்காகவா இந்த மங்குணிப்பாண்டியனுக்கு இத்தனை காலம் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆனால் நீதியரசர் ஆயிற்றே…. ? அப்படியெல்லாம் கேட்க முடியுமா ?
சரி. இவர் தீர்ப்பில் சில முக்கிய பகுதிகளை பார்த்து விடுவோம். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பை குறைத்து, அவருக்கு வருமானம் அதிகமாக இருந்தது என்பதற்காக என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்திருக்கிறார்.
பொதுப்பணித்துறை ஒரு கட்டிடத்தின் மதிப்பை உறுதியாக கூற முடியாதாம். ஏனென்றால், கட்டிடம் கட்டும் கான்ட்ராக்டர்கள் சிலர், சொந்தமாக செங்கற்சூளை வைத்திருப்பார்களாம். செங்கல், மணல், ஜல்லி போன்றவற்றை அவர்கள் சொந்த வாகனத்தில் எடுத்து வந்தால், மிக மிக மலிவாக வீடு கட்டலாமாம். (குமாரசாமி நீதிபதியா கொத்தனாரா ?) ஆகையால் பொதுப்பணித்துறையின் கணக்கை எடுத்துக் கொள்ள முடியாதாம்.
பொதுப்பணித்துறையின் பொறியாளர்கள் அனைவரும், அரசுக் கட்டிடங்களை கட்டியும், மேற்பார்வை செய்தும் பழக்கப்பட்டவர்களாம். அவர்களுக்கு தனியார் கட்டிடங்களை ஆய்வு செய்ய அனுபவம் போதாதாம். மேலும், கட்டிடங்களை ஆய்வு செய்கையில், குறிப்பு எடுத்திருப்பார்கள் அல்லவா -? அந்த குறிப்புகளை ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் வெறும் அறிக்கைகளை மட்டும் சமர்ப்பித்துள்ளார்களாம். அதனால் அந்த அறிக்கைகள் செல்லாதாம். மேலும் ஆய்வு நடக்கையில் ஏராளமான லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இருந்ததனால், பொறியாளர்கள் சரியான ஆய்வு செய்திருக்க வாய்ப்பு இல்லையாம்.
அதே போல 94ல் கட்டிய கட்டிடத்தை 96ம் ஆண்டு ஆய்வு செய்கையில், அதில் உள்ள வயர்கள், சுவிட்சுகள் ஆகியவை தேய்மானம் ஆகி பழையதாகி இருக்குமாம். அதனால், அதற்கு உண்டான கழிவை லஞ்ச ஒழிப்புத் துறை கழிக்கத் தவறி விட்டதாம். சோதனைக்காலத்தில் கட்டிடம் கட்டுகையில் ஏற்படும் செலவைத்தானே லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கிடும். தேய்மானத்துக்கு கணக்கு போடுவதற்கு லஞ்ச ஒழிப்புத் துறை என்ன ஜெயலலிதாவின் வீட்டை விலைக்கா வாங்கப் போகிறது ?
நகை மதிப்பீட்டாளர்களின் அறிக்கை குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடக்கையில், அந்த நகைகளை அவர்கள் பார்க்கவில்லையாம். அதனால், பார்க்காத நகைகளுக்கு அவர்கள் அளித்த மதிப்பீடு செல்லாதாம்.
அதிமுகவில், எம்ஜிஆர் இளைஞர் பேரவை, ஜெயலலிதா பேரவை, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, மகளிர் அணி உள்ளிட்ட 16 பிரிவுகள் உள்ளதாம். இவர்கள் அத்தனை பேரும் நமது எம்ஜிஆர் வாங்கியதால், நமது எம்ஜிஆர் சந்தா திட்டம் முழுக்க முழுக்க உண்மையான திட்டமாம். நமது எம்ஜிஆர் இதழுக்கு 1991 முதலே கணிசமான வருமானம் வந்ததாம்.
அதே போல மகா சுப்புலட்சுமி என்ற சுதாகரனுக்கு சொந்தமான திருமண மண்டபத்துக்கு வாடகைக்கு விட்ட வழியில் ஏராளமான வருமானம் வந்தது என்று கூறுகிறார். ஆனால் இதே குமாரசாமிதான் அவரது தீர்ப்பின் பக்கம் 852ல், சுப்புலட்சுமி திருமண மண்டபத்துக்காக, 17 லட்சத்து, 85 ஆயிரத்து 274 ரூபாய் கடன், இந்தியன் வங்கியில் இருந்து வாங்கியதாக கூறுகிறார். ஏகப்பட்ட வருமானம் வரும் கல்யாண மண்டபத்துக்கு எதற்காக கடன் வாங்க வேண்டும் ?
அதன் பிறகு குமாரசாமி கூறுவதையெல்லாம் கேட்டீர்கள் என்றால் தலை சுற்றும்.
அரசியல் ஆதாயத்துக்காகவும், அரசியல் கணக்குகளை தீர்த்துக் கொள்வதற்கும், சட்டத்தின் போர்வையில் வழக்கு தொடுப்பதை அனுமதிக்கக் கூடாது. அரசியல் அமைப்புச் சட்டம், மற்றும் இதர சட்டங்களின் அடிப்படையில் அன்றி, வேறு எந்த வகையிலும், ஒரு குற்றவாளியின் உரிமை பறிக்கப்படக் கூடாது. ஒரு நேர்மையான புலனாய்வு, ஒரு குற்றவாளி எந்த வகையிலும் விபரம் பற்றித் தெரியாமல் இருக்க அனுமதிக்கக் கூடாது. வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்து பற்றி, குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பு என்ன என்பதை புலனாய்வு அதிகாரி கேட்டு அறிய வேண்டும். இதையெல்லாம் வக்கணையாக பேசும் குமாரசாமி, இந்த வழக்கில் புகார்தாரராக இருந்த சுப்ரமணிய சுவாமியே பின்னாளில் ஜெயலலிதாவோடு கூட்டு சேர்ந்தார் என்பதை தனது தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருக்கிறாரே ? அப்படியே அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்தால்தான் என்ன ? ஒரு ஜனநாயகத்தில் அரசியல் காரணங்களுக்காகவோ, அல்லது வேறு எந்த காரணத்துக்காகவோ வழக்கு தொடர்ந்தால் அதில் ஆதாரம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டியதுதானே ஒரு நீதிமன்றத்தின் வேலை….?
இதை விட ஒரு பெரிய நகைச்சுவையைப் பாருங்கள். சாதாரணமாக ஒரு விபரமறிந்த ஒருவர், பொதுப் பணித் துறையின் விலையை அடிப்படையாக எடுத்துக் கொள்ள மாட்டார்களாம். ஏனென்றால், பொதுப்பணித் துறையின் விலைகள், காண்ட்ராக்டர் செய்யும் தாமதம், கடன் வாங்கிய தொகை, இதர செலவுகள் எல்லாவற்றையும் சேர்த்து கணக்கிடப்படும். ஆகையால், பொதுப்பணித் துறையின் விலைகள், சந்தை விலையை விட அதிகமாக இருக்கும். இந்த வழக்கில், பொதுப்பணித் துறையின் விலைகள்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அதனால் பொதுப்பணித் துறையின் மதிப்பீடுகளை கணக்கில் கொள்ளக் கூடாது என்று சூசகமாக சொல்கிறார் குமாரசாமி. பொதுப்பணித் துறையின் விலைகள், எப்போதுமே சந்தை விலையை விட குறைவானதாகவே இருக்கும் என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், இந்த மங்குணிப் பாண்டியர் புதிதாக ஒரு கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்.
ஒரு அரசு ஊழியர் செய்யும், பணம் அல்லது சொத்து தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தும், அவர் பணியில் சேர்ந்த நாள் முதலாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. உரிய அதிகாரிக்கு தெரியப் படுத்தாமல் அவர் ஒரு சொத்தை வாங்கினார் என்றால், அவர் சிக்கலை சந்திக்க நேரிடும்.
ஆனால், ஒரு அமைச்சருக்கோ, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கோ, சட்டமன்ற உறுப்பினருக்கோ, இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை என்பது முரணான விஷயம். சிலர் தாமாக முன்வந்து, இது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். உதாரணத்துக்கு தற்போதைய பிரதமர் தனது அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும், பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது போல. ஆனால், இது போன்ற முயற்சிகள் கட்டாயம் இல்லை என்பதனால் பெரிய அளவில் பயன் தருவதில்லை.
அரசியலில் உள்ளவர்களில் பலர் தொழில் அதிபர்களாகவும், முக்கிய தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களாகவும் இருப்பதால், ஏற்கனவே அவர்களுக்கு பல்வேறு வகைகளில் பெரிய வருமானம் இருப்பதால் இது போன்ற சொத்துக் கணக்குகளை ஆண்டுதோறும் தாக்கல் செய்வது அவர்களுக்கு சிரமம் அளிக்கக் கூடும், அதில் நடைமுறைச் சிக்கல்களும் இருக்கக் கூடும்.
எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா ? அரசியலில் உள்ளவர்கள் பல்வேறு முக்கிய தொழில்களில் ஈடுபட்டு வருவார்களாம். அதனால், சொத்துக் கணக்கை தாக்கல் செய்வது கடினமாம். பொது ஊழியர் என்றால், அது எம்எல்ஏ மற்றும் எம்.பி உட்பட அனைவருக்கும் பொருந்தும் என்பது, பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், இந்த குமாரசாமி, ஒரு சாதாரண அரசு ஊழியரையும் ஜெயலலிதாவையும் ஒப்பிடுகிறார். அரசு ஊழியர்களுக்கு நடத்தை விதிகள் உள்ளன. பொது ஊழியருக்கு இல்லை என்று ஜெயலலிதாவுக்காக தவில் வாசிக்கிறார்.
அடுத்ததாக குமாரசாமி சொல்வது ஒட்டுமொத்த கட்டுமானத் தொகையில் விசாரணை நீதிபதி இருபது சதவிகிதத்தை குறைத்திருக்கிறார். ஆனால் இது போதாது. லஞ்ச ஒழிப்புத் துறை கட்டுமான செலவாக மொத்தம் 27 கோடி என்று குறிப்பிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை, பொதுப்பணித் துறையின் மதிப்பீடுகளின்படி, ஒரு சதுர மீட்டர் கட்டுவதற்கு ரூபாய் 31,580.19 என்று மதிப்பிட்டுள்ளது. ஆனால் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 28,000 தான் ஆகியிருக்க முடியும். இந்த அடிப்படையில் கணக்கிட்டால், மொத்த கட்டுமான செலவு 5.10 கோடிதான் ஆகிறது. எப்படி துல்லியமாக சென்டி மீட்டரில் கணக்கு போடுகிறார் பார்த்தீர்களா ? பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் நீதிபதிகள் கருத்தே கூறக்கூடாது. அந்த அந்த துறையில் நிபுணர்களாக இருப்பவர்களின் கருத்தே இறுதியானது என்று பல தீர்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த ஆள் என்னவென்றால், கொத்தனார் போலவே கணக்கு போட்டுக் கொண்டுள்ளார்.
அடுத்த ஐட்டம்தான் இன்னும் சிறப்பு. ஒரு நாற்காலிக்கு நான்கரை சதுர அடி இடம் வேண்டும். விஐபி நாற்காலி என்றால் ஆறு சதுர அடி வேண்டும். விஐபி நாற்காலிகளுக்கு மட்டும் 15 ஆயிரம் சதுர அடி வேண்டும். சாதாரண நாற்காலிகளுக்கு 4500 சதுர அடி வேண்டும். ஆனால் பந்தல் அமைப்பது தொடர்பாக பேசிய சாட்சி, பந்தல் எத்தனை நீளம், எத்தனை அகலம், எத்தனை நீள கூரை, எத்தனை அடி விரிப்பு பயன்படுத்தப்பட்டது என்று விரிவாக எடுத்துரைக்கவில்லை என்று வளர்ப்பு மகன் திருமணம் குறித்து ஆராய்ச்சி செய்கிறார் குமாரசாமி. இன்னும் ஏன், திருமண வீடியோவை காண்பிக்கவில்லை என்று குமாரசாமி கேட்காதது மட்டுமே பாக்கி.
திருமண செலவுகள் குறித்து சாட்சியம் அளித்ததில் முக்கியமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தான் இலவசமாக இசைக் கச்சேரி நடத்தித் தந்துள்ளதாக கூறியுள்ளார். மொத்தம் 12,500 நாற்காலிகள் போடப்பட்டதாக சாட்சிகள் கூறியுள்ளனர். ஆனால் அந்த 12,500 நாற்காலிகளும் நிரம்பினவா என்பது குறித்து, சாட்சியம் இல்லை. அலங்காரம் செய்ய வைக்கப்பட்ட பூந்தொட்டிகளும், கொரியன் புல்லும் என்ன விலை என்பது தெளிவாக கூறப்பட வில்லை. குமாரசாமி கேட்காமல் விட்டது என்ன தெரியுமா ? திருமணத்தில் வைக்கப்பட்ட பூந்தொட்டியை ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. அந்த பூந்தொட்டிக்கு தண்ணீர் ஊற்றியவரை ஏன் சாட்சியாக சேர்க்கவில்லை என்பது மட்டுமே.
மண்டபத்துக்கான கிச்சன், மற்றும் சமன்படுத்த பயன்படுத்தப்பட்ட ஜேசிபி பதிவு எண்கள் குறிப்பிடப்படவில்லை. அந்த மைதானத்துக்கு அருகில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் உள்ளவர்களிடம், அந்த மைதானத்தில் ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து விசாரிக்கவில்லை. பள்ளியில் படிக்கும் மாணவர்களும் ஆசிரியர்களும், கல்வியை கவனிப்பார்களா, அல்லது பக்கத்து கட்டிடத்தில் ஜேசிபி இயந்திரம் வந்ததா இல்லையா என்பதை கவனிப்பார்களா ? இந்த குமாரசாமியின் நீதிமன்ற அறை 14. பக்கத்து நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பது குமாராசாமிக்கு தெரியுமா ? இதையெல்லாம் ஒரு கேள்வியாக எழுப்பியிருக்கிறார்.
வழக்கமாக திருமணத்துக்கு பெண் வீட்டார்தான் செலவழிப்பார்கள். இது குறித்து பெண்ணின் அண்ணன் ராம்குமார் ஒரு வங்கிக் கணக்கி திறந்து அதன் மூலமாக 92 லட்ச ரூபாய் செலவழித்ததாக கூறியுள்ளார். இதற்காக ஒரு ஜெராக்ஸ் நகலை சமர்ப்பித்துள்ளார். மணப்பெண், நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தி. அவர் தந்தையின் பெயர் நாராயணசாமி. தன் மகளின் திருமணச் செலவு குறித்து, நாராயணசாமிதான் பேச வேண்டும். ஆனால், அவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்கவில்லை. இந்த திருமணத்துக்கு அதிமுக கட்சியினர் பலர் செலவழித்திருப்பதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால், இந்த திருமணத்துக்கு ஜெயலலிதா ரூபாய் 28,68,000/- மட்டுமே செலவழித்திருக்கிறார் என்று கூறுகிறார் குமாராசாமி. ஜெராக்ஸ் நகலை ஆவணமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று பல்வேறு தீர்ப்புகள் உள்ளன. மூன்று முறை, லஞ்ச ஒழிப்புத் துறை முன்பு ஆஜராகியும், பெண்ணின் அண்ணன் ராம்குமார், அசல் பாஸ்புக்கை சமர்ப்பிக்கவில்லை, மேலும் அதில் உள்ள 94 லட்ச ரூபாயை யார் முதலீடு செய்தது என்பதையும் தெரிவிக்கவில்லை என்பது குன்ஹாவின் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், மாவட்ட நீதிபதியாக இருந்து உயர்நீதிமன்றம் வந்துள்ள இந்த குமாரசாமிக்கு, ஜெராக்ஸ் ஆவணத்தை, சான்றாவணமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படைக் கூட தெரியவில்லை.
அடுத்ததாக குமாரசாமி சொல்வதுதான் வேடிக்கை. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்கத் தவறியது, கர்நாடக அரசின் தவறு. இந்த மேல் முறையீடு நடக்கிறது என்பதை கர்நாடக அரசு நன்கு அறிந்தும், இது குறித்து ஊடகங்களில் செய்திகள் பல வந்திருந்தும், இவ்வழக்குக்காக அரசு வழக்கறிஞரை நியமிக்காமல் விட்டது, கர்நாடக அரசின் தவறே. ஆகையால், இந்த காரணத்தால் இந்த மேல் முறையீட்டை நிராகரிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில்தான் குமாரசாமி பணியாற்றுகிறார். அரசு தலைமை வழக்கறிஞரை அழைத்து, உடனடியாக இந்த வழக்கில் ஆஜராகுங்கள் என்று உத்தரவிட இவருக்கு எத்தனை நேரம் பிடித்திருக்கும் ? நான்கு மாதங்களாக, மொக்கைத்தனமான கேள்விகளை கேட்டுக் கொண்டு வழக்கை நடத்தியவருக்கு, அரசு வழக்கறிஞரை அழைக்கத் தெரியாமல் போய் விட்டதா ?
இதற்கு அடுத்தபடி ஒரு வக்காலத்து வாங்குகிறார் பாருங்கள். அதுதான் இருப்பதிலேயே சிறப்பு. பல்வேறு சொத்துக்களை பதிவு செய்வதற்காக பத்திரப் பதிவாளர் 15 முதல் 20 முறை வரை ஜெயலலிதாவின் வீட்டுக்கு வருகை தந்திருக்கிறார். பத்திரம் பதிவு செய்வதற்காக சொத்து வாங்குபவர்கள் வீட்டுக்கு பத்திரப் பதிவாளர் செல்வது சட்டவிரோதம் அல்ல.
ஜெயலலிதாவுக்கு பிறந்த நாளுக்கு வந்த பரிசுகளின் தொகை மட்டும் 1.5 கோடி. இதையும் லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கில் சேர்க்கத் தவறி விட்டது. ஒரு பொது ஊழியர் தான் பதவியில் இருக்கும் காலத்தில் வரும் பரிசுப் பொருட்கள், நன்கொடைகள் அனைத்தையும் அரசு கஜானாவில்தான் சேர்க்க வேண்டும் என்பது விதி. இதை குமாரசாமி அறியாதது அல்ல. ஆனால், இந்த பரிசுப்பொருட்களையும், வெளிநாட்டில் இருந்து வந்த 77 லட்சம் பெறுமானமுள்ள அமெரிக்க டாலர்களையும், ஜெயலலிதாவின் வருமானமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் என்றால், இந்த நபர் எந்த அளவுக்கு விலை போயிருப்பார் என்று எண்ணிப் பாருங்கள். மேலும், இந்த அமெரிக்க டாலர்களை வாங்கியதற்காக சிபிஐ தொடர்ந்த வழக்கு, இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இணைப்பு
குமாரசாமி இழைத்த மிகப் பெரிய தவறு, நமது எம்ஜிஆர் நாளிதழ் சந்தா திட்டத்துக்காக செலுத்திய பணம் மட்டுமே 13,89 கோடி. இதை வருமானவரித் துறை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இதை லஞ்ச ஒழிப்புத் துறை ஏற்றுக் கொள்ள தவறியுள்ளது என்று கூறியதே. நமது எம்ஜிஆர் சந்தா என்ற திட்டமே, இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு உருவான திட்டம் என்பது, குன்ஹாவின் தீர்ப்பில் ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், நமது எம்ஜிஆர் திட்டத்துக்காக அப்படி வக்காலத்து வாங்குவதோடு, அந்த வருமானத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். நமது எம்ஜிஆர் பத்திரிக்கையை கன்னடத்தில் மொழிபெயர்த்து படித்தால், அதே நீதிமன்றத்தில் குமாராசாமி தூக்கு மாட்டிக் கொள்வார். அந்த பத்திரிக்கையைப் பற்றி விபரம் தெரியாமல், இப்படி வக்காலத்து வாங்குகிறார்.
குமாரசாமி இந்தத் தீர்ப்பை இயல்பாக வழங்கவில்லை. வேறு பின்னணியில் வழங்கியிருக்கிறார் என்பதை நிரூபிக்கும் பகுதி இதுதான்.
“இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோமாக சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டவை என்று கூற முடியாது. இந்த சொத்துக்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கடன் வாங்கி வாங்கப்பட்ட சொத்துக்கள். இந்த சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத் துறை இணைத்ததே தவறு.”
எத்தனை அக்கறை பார்த்தீர்களா ?
அடுத்ததாக குமாரசாமி சொல்வது, கிட்டத்தட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நேரடியாக மீறுவதற்கு ஒப்பாகும்.
“சென்னையில் இந்த வழக்கு நடந்தபோது, பிறழ் சாட்சிகளாக மாறியவர்களை, பெங்களுருவுக்கு வழக்கு மாற்றப்பட்ட பிறகு மீண்டும் விசாரித்துள்ளார்கள். அப்படி விசாரிக்கப்பட்டவர்களை, பிறழ் சாட்சிகளாக கருதாமல், சாதாரணமாக விசாரித்ததே தவறு என்று குற்றவாளிகள் தரப்பு கூறியது ஏற்றுக் கொள்ளத்தக்கது.”
இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களுருக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், எந்த சாட்சிகளை விசாரிக்கலாம், எப்படி விசாரிக்கலாம், யாரை மீண்டும் அழைக்கலாம் என்று தெளிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறது. ஆனால், குமாரசாமிக்கு பிறழ் சாட்சியாக கருதாமல் சாட்சிகளை விசாரித்தது, ஏற்புடையதாக இல்லையாம். உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பித்த பிறகு, இது குறித்து கேள்வி கேட்க இவர் யார் ?
குமாரசாமியின் தீர்ப்பில் இந்தப் பகுதிதான் தீவிரமாக ஆராய வேண்டிய ஒரு பகுதி.
“ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் இளவரசி மற்றும் அவர்கள் நடத்திய நிறுவனங்கள், கடனாக 24 கோடி வாங்கியிருக்கின்றன. இந்த தொகையை அவர்களின் வருமானமாக சேர்த்திருக்க வேண்டும். வங்கிகளில் வாங்கிய கடன் தவிர, குற்றவாளிகள் தனியாரிடம் இருந்தும் 7 கோடிக்கு மேல் கடன் வாங்கியிருக்கிறார்கள்.”
குமாரசாமி குறிப்பிடும் முதல் கடன், இந்தியன் வங்கியிலிருந்து ஜெயா பப்ளிகேஷன்ஸ் சார்பாக வாங்கிய ஒன்றரை கோடி.
ஒரு அரசு ஊழியர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு போடுகிறோம். அவர் மீதான குற்றகாலம் 1 ஜனவரி 2001 முதல் 31 டிசம்பர் 2001 என்று வைத்துக் கொள்வோம். இந்த காலத்தில் அவர் 2 லட்ச ரூபாய் கடன் வாங்குகிறார். அந்த கடனை திருப்பியும் செலுத்துகிறார். வட்டியோடு சேர்த்து 60 ஆயிரம் கட்டியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இறுதியில் கணக்கிடுகையில் குற்ற காலத்தில் அவரது வருமானம் என்ன ? ஒரு லட்சத்து நாற்பதாயிரம்தானே ? 60 ஆயிரத்தை திருப்பிச் செலுத்தியிருக்கிறார் அல்லவா ?
ஆனால் குமாரசாமி, ஜெயா பப்ளிகேசன்ஸ் வாங்கிய ஒன்றரை கோடி கடனையும் அப்படியே ஜெயலலிதாவின் வருமானமாக சேர்க்கிறார். குன்ஹாவின் தீர்ப்பில், இதே கடன் எப்படி விவரிக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.
ஒன்றரை கோடி கடன் வாங்கியது உண்மை. ஆனால், அந்தக் கடன் முழுமையும், 25 ஜுன் 1994ல் மூடப்படுகிறது. அதாவது முழுக் கடனும் அடைக்கப்படுகிறது. ஆகையால், கடனுக்காக வட்டியாக செலுத்திய 50,93,21 என்ற தொகையை மட்டும் செலவில் சேர்க்கிறார் குன்ஹா.
குற்ற காலத்தில் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்ட ஒன்றரை கோடி எப்படி வருமானமாகும் ?
இந்தக் கடனில் எட்டாவது வரிசையில், குற்றவாளிகளின் வருமானமாக ஒரு கோடியே 50 லட்சம் என்று கூறுகிறார் குமாரசாமி. ஆனால், குன்ஹா தனது தீர்ப்பில், ஒன்றரை கோடியில், திருப்பி செலுத்திய தொகை போக மீதம் உள்ள 83 லட்சம் மட்டுமே வருமானம் என்று குறிப்பிடுகிறார் திருப்பிச் செலுத்திய தொகை எப்படி வருமானம் ஆகும் என்பதை குமாரசாமிதான் விளக்க வேண்டும்.
சரி தோழர்களே… இதையெல்லாம் விட்டு விடுவோம். படிக்கும் பள்ளிப் பருவத்தில் ஒரு கணக்கு வாத்தியார் இருந்தார். கணக்கு சரியாக போடவில்லையென்றால், “கணக்கு வரலன்னா, நீ கழுதை மேய்க்கக் கூட லாயக்கு இல்ல. கழுதை எத்தனை இருக்குன்னு எண்ணணும்.” என்று கடுமையாக திட்டுவார். எப்போது கழுதையைப் பார்த்தாலும் அந்த கணக்கு வாத்தியாரின் நினைவு வரும்.
சமீபத்தில் எண்ணூர் அனல்மின் நிலைய டெண்டர் சம்பந்தமான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராமசுப்ரமணியம், இந்த டெண்டரில் கணக்கு வழக்கு தொடர்பான பல நுணுக்கமான விஷயங்கள் இருக்கின்றன. அதை ஆராய்வது நீதிபதியின் வேலை அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
சரி ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி கணக்கு போடலாமா கூடாதா என்றால், சொத்துக் குவிப்பு வழக்கு போன்ற முக்கிய வழக்குகளில் கணக்கு போட்டே தீர வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கு என்பது, மிக மிக எளிமையானது. குற்ற காலத்தில் குற்றவாளியின் வருமானம் என்ன ? செலவு என்ன ? சொத்து எவ்வளவு வாங்கியிருக்கிறார். அவர் வருமானத்திற்குள் அந்த சொத்து இருந்தால், குற்றமில்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியிருந்தால் சொத்துக் குவிப்பு வழக்கு. இவ்வளவுதான் விஷயம்.
குமாரசாமியும் அப்படி கணக்கு போட்டிருக்கிறார். ஆனால், அப்படி போட்ட கணக்கில் அடிப்படையான தப்பை செய்யலாமா ? அதுவும் குற்றவாளியை விடுவிக்கும் அளவுக்கு தப்பைச் செய்யலாமா ?
ஜெயலலிதாவை விடுவிக்கும் ஆர்வத்தில் குமாராசாமி, ஜெயலலிதா மற்றும் அவர் சார்பாக வாங்கிய கடன்களையெல்லாம் வருமானமாக சேர்த்திருக்கிறார். அது கூட தப்பு அல்ல. அதில் உள்ள கூட்டல் கணக்கை சரியாக போட வேண்டுமா இல்லையா ? ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகளான சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் வாங்கிய மொத்த கடனகாக குமாராசாமி அவரது தீர்ப்பின் பக்கம் 852ல் குறிப்பிட்டுள்ள தொகை 24 கோடியே, 17 லட்சத்து 31 ஆயிரத்து ரூபாய். இந்த வருமானத்தை அடிப்படையாக வைத்துத்தான் ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு 8.22 சதவிகிதம் என்று குறிப்பிடுகிறார்.
சரி. இவ்வளவு விபரமாக ஜெயலலிதாவை தான் வாங்கிய பணத்துக்கு விசுவாசமாக கணக்கு போடும் குமாரசாமி, குறைந்தபட்சம் கூட்டல் கணக்கையாவது சரியாக போட வேண்டாமா ? அவர் போட்டுள்ள பட்டியலில் உள்ள கடன் தொகையின் மொத்தமே கூட்டுத்தொகை எவ்வளவு தெரியுமா ? 10,67,31,274.00 ஆனால் குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிடும் தொகை எவ்வளவு தெரியுமா ? இதன் பிறகு, குமாரசாமியின் கணக்குப்படியே, லஞ்ச ஒழிப்புத் துறை கடன் வருமானமாக குறிப்பிட்டுள்ள 5,99,85,274.00 கழிக்கிறார் குமாரசாமி.
சரியானபடி கணக்கிட்டால், வரும் தொகை 4,67,46,000.00.
24 கோடியே, 17 லட்சத்து 31 ஆயிரத்து ரூபாய் என்ற கழுதை கணக்கை வைத்துத்தான் குமாரசாமி ஜெயலலிதா வெறும் 8.22 சதவிகிதம் சொத்து சேர்த்துள்ளதாக கூறுகிறார்.
குமாரசாமியின் கணக்குப்படி ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் மொத்த வருமானம், 34,76,65,654.00. ஆனால் குமாரசாமி சரியான கணக்கு வாத்தியாரிடம் பயின்று, இந்த கணக்கை போட்டிருந்தால், இதில் வந்திருக்க வேண்டிய தொகை, 16,59,19,654.00. குமாரசாமி லஞ்சம் வாங்கி விட்டு, போட்டிருக்கும் கணக்குப்படியே, ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் மொத்த வருமானம் 34,76,65,654.
இந்த அடிப்படையில், ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் மொத்த சொத்துக்களை 37,59,02,466.00. என்று முடிவு செய்து, அதில் குமாரசாமி, தனது கழுதை கணக்கு வருமானமான 34,76,65,654 வகுத்து வருமானத்துக்கு அதிகமான சொத்தாக 2,82,36,812 என்று முடிவு செய்கிறார். அந்த அடிப்படையில், ஜெயலலிதா வெறும்8.22 சதவிகிதம் சொத்து சேர்த்துள்ளதாக கூறியுள்ளார் குமாரசாமி.
அவர் போட்ட கணக்கை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, ஒழுங்காக கணக்கு போட்டால், மொத்தமாக ஜெயலலிதா உள்ளிட்டோர் வாங்கிய கடன் 10,67,31,274.00. லஞ்ச ஒழிப்புத் துறை ஏற்றுக் கொண்ட கணக்கான 5,99,85,274.00 கழித்தால் மீதம் உள்ள தொகை, 4,67,46,000.00.
ஜெயலலிதாவின் வருமானமாக குமாரசாமி போட்ட தப்புக் கணக்குப் படி, கடன் தொகை உள்ளிட்டு, குமாரசாமி கணக்கிடும் மொத்த தொகை, 34,76,65,654.00
குமாரசாமி இந்த கூட்டலில் தவறு செய்யாமல் இருந்திருந்தால், இந்த தொகை 34 கோடி அல்ல. இந்த கூட்டுத் தொகை 21,26,65,654.00
இதன்படி, குமாரசாமி போட்டுள்ள ஃபார்முலாவின் படியே, மதிப்பீடுகளை கழித்து, 55.6 கோடியில் இருந்து குமாரசாமி ஏற்றுக் கொண்டுள்ள மொத்த சொத்தான 37,59,02,466.00ஐ குமாரசாமி ஏற்றுக் கொண்டுள்ள மொத்த வருமானமான 21,26,65,654.00ல் வகுத்து, சதவிகிதமாக போட்டால் வரும் மொத்த சதவிகிதம் 77 %.
கிருஷ்ணானந்த் அக்னிஹோத்திரி என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 10 சதவிகிதத்துக்கும் கீழ் வருமானத்துக்கு அதிகமான சொத்து இருந்தால், ஒரு பொது ஊழியரை விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று குமாரசாமியே சொல்கிறார்.
ஆனால், அவசரத்தில் அவர் போட்ட தப்புக் கணக்கை சரி செய்தால், ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமான மொத்த சதவிகிதம் 77%
இப்படி ஒரு அரை குறையான தீர்ப்பை தருவதற்காக குமாரசாமி உங்களுக்கு நான்கு மாதங்கள் ? இப்படி ஒரு தீர்ப்பை, சசிகலாவே எழுதியிருப்பாரே…..!!!!
இதனால்தான் கேட்கிறோம் எஷ்டு தொகண்டிதிரி குமாரசாமி ?