வியாழன், 30 ஜூன், 2011

செயல்படாத பிரதமரா,,,?

 
பிரதமர் அறியாத பெரிய ஊழல்கள்! 
“நாங்கள் ஊழலுக்கு எதிரிகள்; லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க அவ தாரமெடுத்திருப்பவர்கள்” என்று அடிக் கடி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா பேசுகிறார். ஏற்கெனவே போபர்ஸ் ஊழ லைப் பந்தாடியவர். தனது உறவினரான குவாத்ரோச்சியை ஊழல் வழக்கிலிருந்து ஓட ஓட விரட்டியடித்தவர்.

பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அதிச யப்பிறவி. எத்தனை பெரிய ஊழலானா லும் ‘எனக்குத் தெரியாது’ என்று ஒரே போடாய் போடுவார். 1.76 லட்சம் கோடி ரூபாய் அலைக்கற்றை ஊழல் பற்றி அது நடந்த போதே, பிரதமருக்குத் தெரிந்தே நடந்தது என்ற உண்மை வெளிவந்து விட்டது. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா வுக்கும் பிரதமருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட் டிக்கு அநியாயமாக ரூ.76 ஆயிரம் கோடி செலவுக்கணக்கு எழுதப்பட்டது. இதில் நேரடியாய் ஈடுபட்ட காங்கிரஸ் நாடா ளுமன்ற உறுப்பினர் சுரேஷ் கல்மாடி தற்போது திகார் சிறையில் உள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஊழல் பற்றியும் முதலிலேயே பிரதமர் எச் சரிக்கப்பட்டார் என்ற செய்தியும் தற் போது வெளியாகியுள்ளது.

கிருஷ்ணா-கோதாவரி நதிகளின் படுகையில் எரிவாயு எடுப்பதற்கு அம் பானிகளின் ரிலையன்ஸ் கம்பெனிக்கு உரிமம் வழங்கியது மத்திய அரசு. இதில் ரிலையன்ஸ் கம்பெனிக்கு அநீதியான முறையில் பல சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. அடிமாட்டு ரேட்டுக்கு உரி மம் வழங்கி பெரும் முறைகேடு நடந் துள்ளது. இந்த ஊழலில் ரூ.45 ஆயிரம் கோடி முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்பட் டுள்ளதாய் கூறப்படுகிறது. இதை மத்திய அரசின் தணிக்கைத்துறை அறிக்கை யாக வெளியிட்டுள்ளது. இந்த ஊழல் குறித்துப்பிரதமர் அலுவலகத்திற்குப் பல கடிதங்கள் எழுதி எச்சரித்ததாக ஓய்வு பெற்ற ஒரு வருவாய்த்துறை செயலாளர் கூறியுள்ளார். பலமுறை எச்சரித்தும் பிரதமர் அலுவலகம் தனது கடிதங்கள் வந்ததாகக்கூடக் காட்டிக்கொள்ள வில்லை என்று அந்த அதிகாரி மிகுந்த மனவேதனையை வெளிப்படுத்தியுள் ளார்.

ஆக மிகப்பெரிய ஊழல்கள் எல்லாம் பிரதமர் அலுவலகத்திற்கு முன்கூட்டித் தெரிந்தே நடந்திருக்கிறது. ஆனால் பிரதமருக்கு மட்டும் தெரியாது. அதாவது பிரதமர் பெயர் போட்டுப் பிரதமர் அலு வலகத்திற்கு வரும் எச்சரிக்கைக் கடி தங்கள் மட்டும் பிரதமருக்குத் தெரியாது. இப்போது இதெல்லாம் நாட்டுக்கே தெரிந்துவிட்டது. இவற்றை தனது பார் வைக்கு வரவிடாமல் தடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க லாமே பிரதமர்? அப்படி எவரும் மறைக் கவில்லை என்றால் அனைத்தும் பிரதம ருக்குத் தெரிந்துதானே நடந்திருக்கிறது?

2ஜி அலைக்கற்றை ஊழலில் ஈடு பட்டது திமுக அமைச்சர். கூட்டணி தர் மம் காக்க பிரதமர் தலையிடவில்லை என்றால் கூட, காமன்வெல்த் விளை யாட்டு ஊழல், எரிவாயு ஊழல்களிலா வது தலையிட்டுத் தடுத்திருக்கலாம். பல ஊழல்கள் பற்றித் தெரிந்தாலும் பிரதம ரின் தலையிடாமைக்குக் காரணம் ஊழல் நடவடிக்கைகளுக்குத் துணை நிற்பது தான்!

ஊழலை மறைப்பதில் மன்மோகன் சிங்கை யாரும் மிஞ்ச முடியாது என்று நிரூபித்துவிட்டார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா குடும்பத்திற்கும் கருணாநிதி குடும்பத் திற்கும் உள்ள உறவு அம்பலமாகி விடக் கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி முனைப்பாக இருக்கிறது. முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக்கணக்குக்குழுவின் முடிவுகளை மூடி மறைக்க முயற்சிக்கிறது. காங்கிரஸ்-திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்காக ஜோஷியைத் தலைவர் பதவி யிலிருந்து நீக்கிவிட்டு புதிய தலை வரைத் தேர்வு செய்தனர். இந்தத் தில்லு முல்லை சபாநாயகர் ரத்து செய்து, மீண் டும் ஜோஷியைத் தலைவராக நியமித் தார். எனினும் ஊழலை வெளிக்கொணர முடியாமல் பொதுக்கணக்குக்குழு முட மாக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி முழு விசா ரணை செய்ய நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடின. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காங்கி ரஸ் எம்.பி.யான பி.சி.சாக்கோ தலைமை யில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இப்போது சாக்கோ, 1990 முதல் விசா ரிக்க வேண்டும் என்று கூறி 21 ஆண் டுகள் பின்னோக்கித் தாவிக்குதிக்கிறார். இதன் நோக்கம் இப்போதைய ஸ்பெக்ட் ரம் ஊழலை கைகழுவி விடுவதுதான்.

பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் ஜோஷி 2ஜி அலைக்கற்றை ஊழலால் நாட்டுக்கு ரூ.1.9 லட்சம் கோடி நட்டம் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போ தைய மத்தியஅமைச்சர் கபில்சிபல், நஷ்டம் ஒரு பைசா கூட இல்லை என்று புளுகி காங்கிரஸ் தலைமையைக் காப் பாற்ற முயற்சிக்கிறார். காங்கிரஸ் கட்சி சாக்கோ மூலம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவையும் செயல்படவிடாமல் முடக்க முயற்சிக்கிறது.

தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பல கோடி ரூபாய் ஊழல் செய்த ராசாவையும், தயாநிதி மாறனையும் மத் திய அமைச்சர்களாக்கி, மந்திரி சபையில் இடமளித்தவர் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாதான். உச்சநீதிமன்றம் தலை யிட்டிருப்பதால் ஒன்றும் செய்ய முடியா மல் விழிப்பதும் அவர்தான். இல்லை யேல் இந்த மாபெரும் ஊழல்களை போபர்ஸ் பீரங்கி மூலம் சுடப்பட்டு ஒன்றுமில்லாமல் செய்திருக்க முடியும்.

“பொழுதெல்லாம் எங்கள் செல்வம்

கொள்ளை கொண்டு போகவோ?

நாங்கள் சாகவோ?” என்று பாடினான் பாரதி.

சோனியா தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்த கடந்த ஏழாண்டு காலத்தில் நம் நாட்டின் செல்வ வளம் மத்திய அமைச்சர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஊழல்கள் உலகப்புகழ் பெற்றுவிட்டன. உலகிலேயே மாபெரும் ஊழல் என்ற பட்டம் 2ஜி அலைக்கற்றை ஊழலுக்கு கிடைத்துள்ளது.

இந்த ஊழல் கும்பல் வெளிநாடு களில் சொத்துக்களை வாங்கிக்குவித் துள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் இந் தியப் பணம் பல லட்சம் கோடி பதுக்கப் பட்டுள்ளது. வருமான வரித்துறையை ஏமாற்றி கடத்தப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு தனது சுண்டுவிரலைக் கூட அசைக்கத் தயா ராக இல்லை. அதில் பெரும்பகுதி கருப் புப்பணம் காங்கிரஸ் தலைவர்களின் பணம் என்றும் அதனால் திரும்பக் கொண்டுவர மத்திய அரசு எந்த முயற் சியும் செய்யாது என்று மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார். சோனியா தனது மகன் ராகுல் பெயரில் சுவிஸ் வங்கியில் பல்லா யிரம்கோடி ரூபாய்களைப் பதுக்கியிருப் பதாக பிரபல பொருளாதார நிபுணர் குரு மூர்த்தி ஆதாரங்களுடன் செய்தி வெளி யிட்டார். இது அம்பலமாகிவிட்டதால் அப்பணத்தை வேறு முதலீட்டுக்கு மாற்ற முயற்சிப்பதாகவும் செய்திகள் வந் துள்ளன.

கோடிக்கணக்கான மக்கள் வறுமை யில் வாடும் நாட்டில் சிலர் கையில் கோடி கோடியாய் குவிந்துள்ளது. இவர்களது கருப்புப்பணத்தையும், சொத்துக்களை யும் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு ஊழலை எதிர்த்து நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்த முடிவு செய்துள்ளது. இடதுசாரிக் கட்சிகளும் இதில் பங்கேற் கின்றன.

பாஜக ஆட்சியில் இருந்தபோது ஊழல், கருப்புப்பணத்திற்கு எதிராக எதுவுமே செய்யவில்லை. இப்போது எதிர்ப்பதாக நாடகமாடுகிறது. அரசின் மீது வளர்ந்துவரும் அதிருப்திகளை ஆதாயமாக்க முயற்சிக்கிறது. இது மக்களுக்கு நன்கு புரியும்.

இடதுசாரிகளின் ஊழலுக்கு எதிரான எழுச்சி நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
 நன்றி:தீக்கதிர்,                                                        _எஸ்.ஏ.பெருமாள்

==========================================================================
யோடா என்ற இப்படத்தில் உள்ள நாய்தான் உலகின் அசிங்கமான உருவம் கொண்ட நாய்.அதற்கான பரிசயையும் கலிபோர்னியாவில் இது வென்றுள்ளது. யோடா நாயின் முடிகள் மென்மையாக இல்லை. கம்பியை போல நீட்டிக் கொண்டு இருந்தன.
சாதாரண நாய்க்கு இருக்கும் நாக்கின் அளவைக் காட்டிலும் இந்த நாய்க்கு நாக்கு மிக நீளமாக இருந்தது. மிகவும் பலவீனமாக அருவெருப்பு தோற்றம் கொண்ட கால்களும் இருந்தன. இந்த நாயின் உரிமையாளர் டெரி ஷீ மேக்கர்.
இவர் தனது அமெரிக்க குடியிருப்பில் முதன் முதலாக யோடாவை பார்த்த போது அலறி ஓடினார். அது பயங்கர எலி என கருதி அவர் ஓடினார். பின்னர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பார்த்த போது மிக மோசமான தோற்றத்தில் பரிதாபமாக நடமாடும் நாய் என்பது தெரியவந்தது.
அதன் தோற்றத்தை பார்த்து பரிதாப்பட்டு நாயை தொடர்ந்து வளர்த்து வருகிறார். மோசமான உருவம் கொண்ட நாய்கள் போட்டியில் முடி இல்லாத நீண்ட பற்கள் கொண்ட காயம் அடைந்து கண்பார்வை குறைபாடு கொண்ட நாய்களும் கலந்து கொண்டன. ஆனால் யோடா தான் அனைவரையும் பயமுறுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
==========================================================================

மன்னாரில் எண்ணை அகழ்வு: கெயின்  இந்தியா.

இலங்கை மன்னாரில் தமது எண்ணை அகழ்வுப் பணி யை வரும் ஆகஸ்ட் முதல் ஆரம்பிக்க உள்ளது இந்திய எண்ணை நிறுவனமான கெயின் இந்தியா (CairnIndia)..இதற்காக இலங்கையுடன் இணைந்து கெயின் லங்கா என்ற புதிய கிளை நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது., அந்த நிறுவனத்தின் மூலம் இந்த அகழ்வு நடவடிக்கை ஆரம்பமாக இருக்கின்றது.3000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  உள்ள தமிழர் கடற்பரப்பை எட்டாகப் பிரித்துள்ள இலங்கை  அரசு அவற்றை பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கியிருக்கின்றது.
இவ்வாறு எட்டாகப் பிரிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றை இந்தியாவிற்கும், மற்றொன்றை சீனாவிற்கும் கடந்த 2007ஆம் ஆண்டு குத்தகைக்கு கொடுத்துள்ள  இலங்கை  அரசு  மீதியுள்ளவை குத்தகையிட தீர்மானித்துள்ளது.
இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள பகுதியில் நான்கு கிணறுகளைத் தோண்ட இருப்பதாகவும், ஆகஸ்ட் ஆரம்பித்து அடுத்த 4 மாதங்களிற்கு இந்தப் பணி  முற்றுப்பெறும் எனவும் கெயின் இந்தியா கூறியுள்ளது.இந்த நான்கு மாதங்களில் எண்ணை அல்லது எரிவாயு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அடுத்த இரண்டு வருடங்களில் எவ்வளவு தொகைக்கு எண்ணை இருக்கின்றது என்பதைக் கண்டறிய முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டறியும் பட்சத்தில், வர்த்தக ரீதியான செயற்பாடுகளை ஆரம்பிக்க அடுத்த 6 வருடங்கள் தேவைப்படும் என, கெயின் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகி ஸ்ருவட் பேர்லி (Stuart Burley) தெரிவித்துள்ளார்.
1960 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவும், ரஸ்யாவும் இப்படி கிணறுகளைத் தோண்டி ஆய்வு செய்தாலும்  எண்ணை இருப்பதுகண்டு பிடிக்கப்படவில்லை.
தற்பொழுது தமிழர்கள் வாழும் நிலத்தில் எண்ணையைக் குறிவைத்துள்ள பக்‌ஷே அரசாங்கம், எண்ணை அல்லது எரிவாயு கண்டு பிடிக்கப்பட்டால் அதன் மூலம் 50 பில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதிக்க முடியும் என  எண்ணுகிறது.தமிழர் தாயகமான மன்னரில் 30000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு பில்லியன் பீப்பாய் (Barrels) எண்ணை இருப்பதாக இலங்கை அரசு தகவல்களிக் கசிய விட்டுள்ளது. ஆனால் எண்ணை வளமற்ற இலங்கையின் தேவைக்காக 2009ஆம் ஆண்டு மட்டும் 3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட்டு கச்சா  எண்ணையை இறக்குமதி செய்துள்ளது.
                           எனவே எண்ணை இருக்கிறதோ இல்லையோ.மன்னார் மற்றும் தமிழர் பகுதிகளை  எண்ணை இருக்கிறது என்ற பெயரில் அந்நிய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுத்து டாலர்களைக் குவிக்கிறது இலங்கை அரசு.
             ஒரே கல்லில் இரு மாங்காய் .டாலருக்கு டாலர் ஆயிற்று.தமிழர் இடங்களையும் காலியாக்கவும் செய்தாயிற்று.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 நரைமுடிக்கு விடிவு?
! நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவ மையம் நரைமுடி தொடரபாக ஆய்வு நடத்தியது.  முடிவில் வெளியான தகவல்கள்: முடிகளின் நிறமாறுதலுக்கு காரணமான டபிள்யூ.என்.டி என்ற புரதம் தான் நரைமுடி பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள், பயன்படுத்தும் ஷாம்புகள், எண்ணெய், லோஷன்களால் இந்த டபிள்யூ.என்.டி என்ற புரதத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். இந்த பாதிப்பு அதிகரிக்கும் போது நரைமுடி தோன்றுகிறது.
ஆரம்ப கட்டத்தில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையால் இந்த பாதிப்பை முற்றிலும் குணப்படுத்த முடியும். கவனிக்காமல் விட்டால் நரைமுடி அதிகரிக்கும். இதற்காக கொடுக்கப்படும் மருந்துகள் ஸ்டெம் அல்லது தாய் செல்களின் செயல்பாடுகளை தூண்டி டபிள்யூ.என்.டி புரதத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
                               
இது முடிகளின் இயல்பான கருமை நிறத்துக்கு வகை செய்யும். இந்த குறைபாட்டை சீர்செய்யும் போது முடி உதிர்வது கட்டுப்படுத்தப்பட்டு வளர்ச்சியை அதிகரிக்கும்.
==========================================================================

புதன், 29 ஜூன், 2011

நடிகர்கள்,,,,,


கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற சட்டப் பேரவை தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடிகர், நடிகையர் சார்பில் விரைவில் பேரணி நடைபெறும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
சரத்குமார் தலைமையில் நடிகர் சங்க நிர்வாகிகள் ராதாரவி, மனோரமா,சத்யராஜ், மயில்சாமி, குயிலி, கே.ஆர். செல்வராஜ் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியது:
மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம்.
இலங்கை மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், கச்சத் தீவை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்காக முதல்வருக்கு நடிகர் சங்கம் சார்பில் நன்றியைத் தெரிவித்தோம்.
இந்தத் தீர்மானங்களை நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்ற வலியுறுத்தி நடிகர், நடிகையர் பேரணியாக சென்று தமிழக ஆளுநரிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.
நடிகர், நடிகைகளிடம் கலந்து ஆலோசித்த பிறகு இதற்கான தேதி அறிவிக்கப்படும். இது குறித்தும் முதல்வரிடம் தெரிவித்தோம்.
கடந்த திமுக ஆட்சியில் வீடு கட்டிக் கொள்வதற்காக பையனூரில் இடம் ஒதுக்கப்பட்டது. நடிகர் சங்கத்தில் உள்ள முதியவர்கள் வீடு கட்டிக் கொள்ள விரும்புகிறார்கள். பையனூர் தொலைவில் இருப்பதால் நல்ல இடம் ஒதுக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
பாராட்டு விழா: மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த இருப்பதாக முதல்வரிடம் தெரிவித்தோம். துறைவாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தவிருப்பதால் பாராட்டு விழா வேண்டாம் என்று கூறிவிட்டார். ஆனாலும், அவருக்கு பாராட்டு விழா நடத்த நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்றார் சரத்குமார்.
அய்யாவிடம் ஜால்ரா தட்டிய நட்சத்திர காக்காக் கூட்டம் இப்போது அம்மாவிடம் வந்துள்ளது.
இந்தக் கூட்டத்திடம் முதல்வர் ஜெயலலிதா மிகக்கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
இப்போதுள்ள தூரத்தையே கடைபிடிக்க வேண்டும்.
இவர்கள் கருணாநிதியை பாராட்டாத,பாராட்டா?
அப்பா,பெரியப்பா,அய்யா,முத்தமிழ் அறிஞர்,அவர் வசனத்தினால்தான் நடிக்கவே வந்தேன், என அவரை பாராட்டியே குழி தோண்டி புதைத்தவர்கள்.
இவர்களின் பாராட்டும் ,போராட்டமும் திரையிலும்,பத்திரிகைகளிலும் வந்து விளம்பரம் தேட மட்டுமே.
சிறிது நேரத்திலேயே ”எங்களை மிரட்டி வரக் கூறினார்கள்”என ஒருவர் பேசுவார்.இன்னுமொருவர் எழுந்து நின்று கைத்தட்டுவார். பின் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது அல்லது இறைவா நண்பனிடம் இருந்து என்னைக் காப்பாற்று என பஞ்ச் டயலாக் பேசுவார்கள்.
ஜெயலலிதா இவர்களைத் தீண்டாமல் ஒதுக்கி வைப்பதே நல்லது.
இல்லையெனில் புகழ்ந்தே தங்கள் காரியங்களை சாதித்து விட்டு,அடுத்த மேடையை தங்கள் நடிப்பைக்காட்ட தேர்ந்தேடுத்து சென்று விடுவார்கள்.

=================================================================================== # 2ஜி-தி.மு.க, மட்டுமா-?எல்லோரையும் விசாரியுங்க,,,  ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழுவின் அறிக்கையை, இதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி நேற்று தாக்கல் செய்ய முயன்றார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோர், இந்த அறிக்கையை தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை. ஆனால், ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க.,நேற்று, அறிக்கையை சுற்றுக்குவிட ஆதரவு தெரிவித்ததோடு, மேலும் பலரை விசாரிக்க வேண்டும் என கூறியதால், திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்தி வந்தது. பிரதமர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோரை விமர்சித்து, முரளி மனோகர் ஜோஷி அறிக்கை தயார் செய்து இருந்தார். இந்த குழுவின் அறிக்கை விவரம், கடந்த ஏப்ரலில் பத்திரிகைகளில் வெளியானதால், ஏப்ரல் 28ம் தேதி நடந்த பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழுவில் ரகளை ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒட்டு மொத்தமாக, முரளி மனோகர் ஜோஷி தயார் செய்த அறிக்கையை புறக்கணித்தன.

எனினும் ஜோஷி, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த அறிக்கையை சபாநாயகர் மீரா குமாருக்கு அனுப்பினார். பொதுக்கணக்கு குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்காத இந்த அறிக்கையை, சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டார். 
இருப்பினும், பொதுக்கணக்கு குழுவின் தலைவராக முரளி மனோகர் ஜோஷியே நீடிப்பதற்கு அனுமதியளித்தார்.இந்நிலையில், புதிய பொதுக்கணக்கு குழுவின் கூட்டம், நேற்று கூடி விவாதித்தது. இந்த கூட்டத்தில், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த அறிக்கையை முரளி மனோகர் ஜோஷி சமர்ப்பித்தார்.

"பார்லிமென்ட் கூட்டுக்குழுவும் இந்த விஷயத்தை கையாண்டு வருவதால், தற்போதைக்கு ஜோஷி இந்த அறிக்கையை சமர்ப்பிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த ஏப்ரல் 28ல், காங்கிரஸ் உறுப்பினர்கள் முறை தவறி நடந்து கொண்டதாக, சபாநாயகரிடம் எப்படி நீங்கள் அறிக்கை அளிக்கலாம்' என, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதாகரன், சஞ்சய் நிருபம், கிரிஜா வியாஸ் , கே.எஸ்.ராவ் போன்றோரும் குரல் எழுப்பினர்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி உறுப்பினர்கள், "பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவின் அறிக்கையை பரிசீலனைக்காக சுற்றுக்கு விடலாம்' என, கருத்து தெரிவித்தனர். கடந்த கூட்டத்தில் ஜோஷி அறிக்கை தாக்கல் செய்வதை எதிர்த்த தி.மு.க., இந்த முறை, அறிக்கையை சுற்றுக்கு விட ஒப்புக்கொண்டது.

தி.மு.க., உறுப்பினர் ஆதிசங்கர் இதை ஆமோதித்தார். அவர் குரல் எழுப்புகையில்," 2ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக இதில் தொடர்புடையை மேலும் பல சாட்சிகளை விசாரிக்க வேண்டும்' என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் சதிஷ் சந்திர மிஸ்ராவும், "அறிக்கையை படித்துப் பார்த்து விட்டு, அதன் பின் உறுப்பினர்கள் கருத்து சொல்ல வேண்டும்' என, ஜோஷிக்கு ஆதரவாக செயல்பட்டார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா சம்பந்தப்பட்டுள்ளார். இது குறித்த அறிக்கையை காங்கிரஸ் எதிர்த்த போதும், தி.மு.க., ஆதரித்துள்ளது, கூட்டணியில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சர் பரூக் அப்துல்லா இது குறித்து குறிப்பிடுகையில், "பார்லிமென்ட் கூட்டு குழு ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரித்து வரும் நிலையில், பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவின் அறிக்கை தேவையில்லாத ஒன்று' என்றார்.

ஒவ்வொரு முறையும் அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது, பொதுக் கணக்கு குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அரசியல் மற்றும் சட்டத்துறை நிபுணர்களை கலந்து ஆலோசித்து, தன் முடிவை ஜோஷி தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
$  ஆமாம். விசாரணை என்றால் எல்லோரையும் விசாரிக்க வேண்டும்.
2ஜி விசாரணை தி.மு.க,வை மட்டுமே சுற்றி வருகிறது.மத்தியில் இதற்கு வேறு ஒருவருக்குமே தொடர்பு கிடையாதா?
ஏன் ஆ.ராசா,கனிமொழி, சரத்குமார் இவர்கள் வட்டத்துடனே சி.பி.ஐ. தனது விசாரணையைக் குறுக்கிக் கொண்டது.எனக்கு ஒன்றும் தெரியாது பிரதமருக்கு ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றி தகவல்கள் தெரிவித்தேதான் எல்லாம் நடந்துள்ளது என விசாரணையில் கூறியுள்ளாரே அதைப் பற்றி ஏன் சி.பி.ஐ, விசாரிக்கவே இல்லை? 
 பிரதமர் முதலில் எதிர்ப்புதெரிவித்ததாகவும், பின்னர் மேலே இருந்து அறிவுரை வந்ததின் காரணமாக ஒத்துக்கொண்டார் என்றும் செய்திகள் வந்ததே அதைப்பற்றி-மேலே என்றால் எங்கிருந்து?அலைக்கற்றைகள் உருவாகும் பிரபஞ்சத்தில் வைகுண்டத்தில் ,சிவலோகத்தில் இருந்தா?அல்லது அவரது மேலிடம் என்றால் அந்த மேலிடம் யார்? என ஆராய வேண்டாமா?
இதை எல்லாம் ஏன் சொல்லுகிறோம் என்றால் “தேனை எடுத்துக் கொண்டு ஒடிவிட்டவனை விட்டு-விட்டு கையை நக்கிக்கொண்டிருந்தவனை பிடித்து சாத்துவது போல் “ஆகி விடக்கூடாது.
இது நமது பாரம் பரியமான ,நியாயத்தின் பாதுகாவலர்களான சி.பி.ஐ,க்கு அவப்பெயரைதந்துவிடக்கூடாது என்ற  நல்ல எண்ணம்தான் காரணம்.மேலும் எதுவும் தெரியாத நம் பிரதமரின் ”அய்யா பரிசுத்தம்”பெயரும் கெட்டு விடக்கூடாது.அன்னை சோனியா,தம்பி ராகுல் பெயரும் கெட்டுவிடக்கூடாது.அது ரொம்ப முக்கியம்.

செவ்வாய், 28 ஜூன், 2011

விடுவிப்புகள் ,,,,,,,,

   $    1993-94-ம் ஆண்டுக்கான செல்வ வரிக் கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித் துறை சார்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, பொருளாதார குற்றங்களுக்கான எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில், வருமான வரித் துறை சார்பில் 1997-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, 8.7.2010-ல் முதன்மைப் பெருநகர நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று நான் வேண்டுமென்றே எந்தத் தவறும் செய்யவில்லை. குறிப்பிட்ட தேதிக்குள் நான் செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், எனக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பி, என் தரப்பு கருத்தை தெரிவிக்க உரிய வாய்ப்பு தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வருமான வரித் துறை சார்பில் அத்தகைய விளக்க நோட்டீஸ் எதுவும் எனக்கு அனுப்பப்படவில்லை. எனவே, வேண்டுமென்றே நான் எந்தத் தவறும் செய்யாததால், இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.ஆர். சிவகுமார், திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று வேண்டுமென்றே ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை என்பது தெரிகிறது. எனவே, இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். இந்த வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றங்களுக்கான எழும்பூர் தலைமைப் பெருநகர நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
   ஒரு மாநில முதல்வருக்கு வரிகட்டுவதைப்பற்றி தெரியாமல்போனது மிகவும் வேடிக்கை.வரிகளைப்போட மட்டும்தான் தெரியுமோ? அவரது ஆடிட்டர் மிகவும் பரபரப்பாக செய்திகளில் அடி’பட்டாரே .அவர் கூட சொல்லாதது வேடிக்கை.
   அதை விட வேதனை அனைவருக்கும் முன் மாதிரியாக வேண்டிய முதல்வர்களே சட்டங்களை மீறுவது. 
முதல்வராகி விட்டார்.முதலில் செல்வ வரி வழக்கு தள்ளுபடி.
அடுத்து வாய்தா புகழ் சொத்துக்குவிப்பு வழக்குதானே?
      #  தமிழக முதல்வர் ஜெயலலிதா தொலைக்காட்சி பேட்டியில் ”:லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர் பதவியைக் கொண்டுவருவது அவரது அதிகார வரம்பைக் குறைக்கும்; மத்திய அரசுக்கு இணையாக மற்றொரு அரசு நடப்பதற்கு இது வழிவகுக்கும்.ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரதமர் பதவி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கலாம். எனவே, லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரைச் சேர்க்கக் கூடாது. இதில் பிரதமரைச் சேர்த்தால், வெளிநாட்டு சக்திகள் நாட்டின் ஸதிரத்தன்மையைக் குலைப்பதற்கு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடும்.அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டாலும் அவரது அதிகாரம் பாதிக்கப்படும். அவர் எப்போதும் தன்னை தற்காத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்த நேரிடும்.இந்த விஷயத்தில் நான் எந்தவொரு தனிநபரையும் ஆதரிக்கவில்லை. பிரதமருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டாலொழிய அவரால் செயல்பட முடியாது. பிரதமருக்கு உள்ள அதிகாரம் எதையும் குறைக்கக் கூடாது. வாழ்க்கையை அதன் போக்கிலேயே எடுத்துக்கொள்வேன். அரசியலுக்கு வருவேன் என்றோ, தமிழ்நாட்டின் முதல்வராக ஆவேன் என்றோ நினைக்கவில்லை; இருந்தாலும், தமிழகத்தின் முதல்வராக இப்போது பணியாற்றுகிறேன்.இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்ற நோக்கம் எனக்கு உண்டு. அதற்கான திறமை நம்மிடம் உள்ளது. உறுதியான, தேசப்பற்று மிகுந்த தலைவர்தான் நமது நாட்டுக்குத் தேவை ”என்றார் ஜெயலலிதா. 
    அவரது தேசபக்திதான் பிரதமரை லோக்பாலில் சேர்க்கக்கூடாது எனக் கூற வைத்துள்ளது.
   ஆனால் நீதிபதிகளை பற்றி ஒன்றும் கூற வில்லையே.ஏன்?
அது போகட்டும் .
அடுத்தப் பேட்டியில் மறக்காமல் நீதிபதிகளையும் சேர்த்துடுங்கள்.நமது சொத்துக் குவிப்பு வழக்குக்கு உதவும்.
  அது போக “லோக்பாலில் முதல்வர்களையும் விடுவிக்க வேண்டும்.சேர்க்கக்கூடாது[கருணாநிதி  என்ற பெயர் உடையவர்களைத் தவிர] என்றும் மறக்காமல் கூறிவிடுங்கள்.நமக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
2016ல் என்ன நிலையில் இருக்கிறோமோ? 
==========================================================================
இந்தியாவுக்கு எதிரான விதிகள் :  இந்தியாவை ஏமாற்றிய மன்மோகன் அரசை அமெரிக்கா ஏமாற்றியது.   • அணுத் தொழில்நுட்ப விநி யோகக் குழுமத்தைச் (என்எஸ்ஜி) சேர்ந்த நாடுகளிடம் இந்தியா தனது அணு உலைகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை பெற முடியாத வகையில் மேற்கண்ட குழுமம் புதிய விதிமுறைகளை வரையறுத்துள்ளது. இதன்படி, இந்திய நலன்களுக்கு எதிரான ஒப்பந்தங்களை ஏற்றுக் கொண் டால் மட்டுமே இந்தியாவுடன் அணு தொழில்நுட்பம் பரி மாறிக் கொள்ளப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

  அணுத் தொழில்நுட்ப விநி யோக நாடுகளின் (என்எஸ்ஜி) வருடாந்திரக் கூட்டம் நெதர் லாந்து நாட்டின் நூர்ஜ்விக் நகரில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில், என்எஸ்ஜி குழுமத்தில் உறுப்பினர்களாக உள்ள 42 நாடுகள் பங்கேற்றன. இதன் முடிவாக வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பில், “அணு செறிவூட்டல் மற்றும் மறுசுழற் சிக்கான உபகரணங்களையும், தொழில் நுட்பங்களையும் பரி மாறிக் கொள்வதற்கான விதி முறைகளைக் கடினமாக்க ஒப் புக்கொள்ளப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளனர்.

  அந்த விதிமுறைகள் இன் னும் இறுதிசெய்யப்படவில்லை, ஆனால், அக்கூட்டத்தில் சமர்ப் பிக்கப்பட்ட வரைவு அறிக்கை யின்படி அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை (என்பிடி) ஏற்காத நாடுகளையும், உள் நாட் டின் அணுத் தொழில்நுட்ப வசதி களை சர்வதேச சோதனைக்கு திறந்துவிடும் வகையில் பாது காப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாத நாடுகளையும், அணு தொழில்நுட்ப விநி யோகக் குழுமத்தில் இருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட் டுள்ளது.

  இந்த வரைவு அறிக்கையில், “அணு தொழில்நுட்பம் அல்லது அணுசக்திப் பொருட்கள் பரி மாறிக் கொள்ள வேண்டுமா னால் அணுப்பாதுகாப்பு ஒப் பந்தத்தை ஏற்க வேண்டும்” என்ற வாசகமும், அப்படிக் கிடைக் கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு 20 சதவீதத்திற்கும் கூடுதலாக யுரேனியம் செறிவூட்டப் படாது என உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் கூடுதல் விதிமுறையாக இடம்பெற் றுள்ளன.

  கடந்த 2008ல் இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, அமெரிக்காவுடனான அணு சக்தி உடன்பாட்டில் கையெ ழுத்திட்டு மன்மோகன்சிங் அரசு, உடன்பாட்டை ஏற்படுத்தியது. இதையொட்டி, அணுப் பொருள் ஏற்றுமதிக்காக பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அணு ஆயுதப் பரவலைத் தடுப் பதில் இந்தியாவின் தன் முனைப் பான செயல்பாடுகளையும், நட வடிக்கைகளையும் அடிப்படை யாகக் கொண்டு இந்த விலக்கு அளிக்கப்படுவதாக மேற்கண்ட என்எஸ்ஜி குழுமம் கூறியது. இதுபற்றி மிகுந்த புளகாங்கி தத்துடன் நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அறி வித்திருந்தார்.

  ஆனால், தற்போது ஏற்படுத் தப்பட்டுள்ள புதிய விதிமுறை கள், எந்த ஒரு நாடும் என்எஸ்ஜி-யின் புதிய விதிமுறைகளை ஏற் றுக் கொண்டால் மட்டுமே அதன் உறுப்பினராக முடியும். அதில் முதல்கட்டம் அணு ஆயுதப் பரவல் தடையை ஏற்றுக் கொள்வதாகும். தற்போது, இதில் உறுப்பினராகும் முயற்சி யில் உள்ள நாடுகள் (இஸ்ரேல், பாகிஸ்தான் மற்றும் வட கொரியா) ஏற்கனவே வெளி யேறிவிட்டன. தற்போது ஏற் படுத்தப்பட்டுள்ள புதிய விதி முறைகள், இந்தியாவிற்கு அளிக் கப்பட்ட விலக்கை காலாவதி யாக்குவதற்காகவே சேர்க்கப்பட் டுள்ளன.

  சர்வதேச அணுசக்தி முகமை யின் (ஐஏஇஏ) அணுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதன் மூலம், நம் மீது விதிக்கப் பட்டிருந்த தடைகளில் இருந்து இந்தியா விலக்குப் பெறும் என கடந்த 2006 ஆம் ஆண்டு மன் மோகன் சிங் நாடாளுமன்றத் தில் உறுதியளித்தார். அது ஒருமுறை நீக்கப்பட்டுவிட்டா லும், மீண்டும் திணிக்கப்பட லாம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
  சமீபத்தில் வெளியாகியுள்ள புதிய விதிமுறைகளுக்கான வழி காட்டுதல்களின் அடிப்படை யில், என்எஸ்ஜி உறுப்பு நாடு களிடமும், பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவுடனும் இந்தியா மேற் கொண்டுள்ள “பரஸ்பர அணு சக்தி ஒத்துழைப்புக்கான” ஒப் பந்தங்கள் நிறுத்தப்படலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும் அந்த விதிமுறைகள் இறுதிப்படுத்தி வெளியிடப் படாத நிலையில், இந்தியா என்ன நிலை மேற்கொள்ளும் என்பது கேள்வியாக எழுந் துள்ளது.

  இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகளிடம் கேட்ட போது, அனைத்து பரஸ்பர ஒத்து ழைப்பு ஒப்பந்தங்களும், அது என்எஸ்ஜி நாடுகளின் 2008 ஆம் ஆண்டு முடிவாக இருப்பினும், அல்லது இரு நாடுகளுக்கிடை யிலான ஒப்பந்தங்கள் என்றா லும் “இந்தியா இதற்கு ஒப்புக் கொள்கிறது” என்பதுடன் “அத் துடன் உங்களிடமிருந்தும் நாங் கள் அதையே எதிர்பார்க்கி றோம்” என வலியுறுத்தப்பட் டுள்ளதென தெரிவித்தனர். பரஸ் பர ஒத்துழைப்புக்காக ஏற்று கொண்ட உத்தரவாதங்களை அந்த நாடுகள் நிறைவேற்ற வேண்டுமென இந்தியா வலி யுறுத்தும் என அவர்கள் தெரி வித்தனர்.
  அணுசக்தி ஒப்பந்தத்தில் பிரணாப் -காண்டலிசா கையெழுத்து
  pranab-with-condoleezza-rice.jpg

  =========================================================================

  திங்கள், 27 ஜூன், 2011

  நீதிபதிகள்+பிரதமர்கள்=புனிதர்கள்?  அதுவும்-இதுவும் ஒன்றல்ல:முரசொலிக்கு பதில்
  Read more about என்ற by Administratuthors: Administrator
  அதுவும்-இதுவும் ஒன்றல்ல:முரசொலிக்கு பதில்

  Read more about என்ற by Administrato
    # தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா பேசியது: லோக்பால் சட்டத்தின் கீழ் பிரதமர் மற்றும் நீதிபதிகளை கொண்டுவர வேண்டும் என்ற ஹசாரேயின் கோரிக்கையை ஏற்கமுடியாது. அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நீதிபதிகளை லோக்பால் அமைப்புக்குள் கொண்டு வந்தால், அது நாட்டின் ஜனநாயக முறையில் பாதிப்பை ஏற்படுத்தும். தன்னாட்சி உள்ள நீதித்துறை தேவை. அதை லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர விரும்புவது தவறானது. நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து லோக்பால் உறுப்பினர்களால் கேள்வி கேட்க முடியும். இந்நிலை ஏற்படாமல் தவிர்க்கப்படவேண்டும். தவறிழைக்கும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடவடிக்கை தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரத்தை அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ளது. ஹசாரே உத்தேசித்துள்ள உண்ணாவிரதம் ஜனநாயகத்துக்கு எதிரானது. இவ்வாறு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா கூறினார். 
  சரிதான்  வர்மா ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறார்.
  நீதிபதிகளுக்கு எதிராக சட்டமியற்றும் அதிகாரம் எந்த அளவில் செயல்படுகிறது. நீதிபதி தினகரன் மீதான குற்றசாட்டுகளுக்கு இதுவரை நம்மால் என்ன நடவடிக்கை எடுக்க முடிந்தது.அரசு செலவில் வீடுக்கு சாமான்கள் வாங்கிப்போட்டு ஒரு நீதிபதி கையும்-களவுமாக பிடிப்பட்டார்.என்ன செய்தீர்கள்.அவர் பின் அ.தி.மு.க,வில் சங்கமமாகிப்போனார்.
  இதேபோல் பிறந்த தேதியை மாற்றியவர்,சாதியை மாற்றி பலன் அடைந்தவர்,புறம் போக்கை வளைத்து உறவினர் மூலம் ரியல் எஸ்டேட் நடத்தியவர்கள் .இவர்கள் அனைவரும் மகாக்கனம் பொருந்திய நீதியரசர்கள்தான்.அவர்களை அவர்கள் செய்த குற்றங்களுக்காக நம்மால் இந்த சட்டமியற்றும் அதிகாரத்தை வைத்து என்ன செய்ய முடிந்தது.எத்தனை நீதிபதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எத்தனை பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.?
     வர்மா கூறுவது சரியான வாதம் அல்ல. எங்களை லோக்பால்,தகவல் உரிமை சட்டம்,சொத்துக்கணக்கு காட்டுதல்  எதிலும் சேர்க்கக்கூடாது என்றால் இவர்கள் இந்த சட்டத்தின் மீது மற்றவகளுக்கு தண்டனை வழங்கும் தகுதி இவர்களுக்குக் கிடையாது.
     சிபி அரசன் சிலையை ஏன் நீதிமன்றம் முன் வைத்திருக்கிறார்கள். தானும் சட்டத்திற்கு உட்பட்டவந்தான் எனக்காட்டத்தான்.
    நீதிபதிகள் =பிரதமர்கள் என்ன தனியாகவா பிறப்பெடுத்து வருகிறார்கள்.இந்த மனிதக் கூட்டத்தில் அவர்களும் அங்கம்தானே?
    அவர்களுக்கும் குடும்பம்,ஆசாபாசங்கள் இருக்கும்தானே.நீதிபதிகள் தங்கள் கல்வியாலும்.பிரதமர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டும்[மன்மோகன் சிங் போன்றவர்கள் அமெரிக்கா மற்றும் பகாசுர நிறுவனங்கள் மூலமாகவும் ]தானே அந்தப்பொறுப்பில் வரிகிறார்கள்.
        லோக்பால் மட்டுமல்ல.தகவல் உரிமை சட்டம், சொட்துக் கணக்கைக்காட்டுதல் ஆகிய எல்லாவற்றிலும் இந்த இரு புனித பொறுப்பில் உள்ளவர்களையும் சேர்க்க வேண்டும்.
  அதுதான் உண்மையான ஜனநாயகத்தின் அடையாளம்.வர்மா கூறும் சட்டமியற்றும் அதிகாரம் ஒரு செல்லாக்காசு என்பதையே இதுவரை நடந்தவை நமக்கு  தெளிவாக்கி விட்டதே..
  =============================================================================

  விண்டோசின் ஆன்லைன் டிரைவ்,,,,

  என்ன தான் வன்தட்டின் விலை மிகவும் குறைவாக இருந்தாலும் நாம் அதில் பதியும் கோப்புகளின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது.சில நெருக்கடியான வேளைகளில் எந்த கோப்பை அழிப்பது, எந்த கோப்பை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பமடைகிறோம்.
  இது போன்ற நேரங்களில் நமக்கு உதவிட பல ஓன்லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய கோப்புக்களை சேமித்து வைக்கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.
  குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ள கோப்புக்களை பதிவேற்றம் செய்து வைக்க முடியாது. நமக்கு ஒதுக்கப்படும் ஓன்லைன் டிரைவின் அளவு குறைவாக இருக்கும். திடீரென சில மாதங்கள் அல்லது நாட்கள் கழித்து கட்டணம் செலுத்தச் சொல்வார்கள். சில வேளைகளில் அந்த குறிப்பிட்ட சர்வரை அடைய முடியாது. சில நாட்களில் சர்வர் இல்லை என்ற செய்தியும் கிடைக்கும்.
  இது போன்ற பிரச்னைகள் எதுவும் இன்றி நமக்கு இந்த வகையில் கிடைப்பது தான் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவ்(Windows Live Sky Drive) வசதியாகும்.
  இந்த ட்ரைவில் கோப்புக்களை சேமித்து வைக்க ஒவ்வொருவருக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. எனவே இதில் ஏறத்தாழ சராசரியான 1000 டாகுமெண்ட்களை சேமித்து வைக்கலாம். 3,000 பாடல்களைப் பதிந்து வைக்கலாம். 10,000 பொட்டோக்களை இதில் பாதுகாத்து வைக்கலாம். இதற்கு கடவுச்சொல் பாதுகாப்பு உண்டு.
  அத்துடன் இந்த கோப்புக்களை மற்றவர்கள் பார்ப்பதற்கும் அனுமதிக்கலாம். பிரைவேட்(Private) என வகைப்படுத்திவிட்டால் நீங்கள் மட்டுமே அதனைக் கையாள முடியும். ஷேர்டு(Shared) என ஒதுக்கினால் மற்றவர்களுடன் கோப்புக்களை பகிர்ந்து கொள்ள முடியும். அனைவரும் பார்க்கலாம் என்றால் பப்ளிக்(Public) என வகைப்படுத்த வேண்டும்.
  இதனைப் பெற http://skydrive.live.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். இதில் உங்களுக்கென்று கணக்கு ஒன்றைத் தொடங்கி கொள்ளுங்கள்.
  பின் அதில் தரப்படும் வழி நடத்தல்களின் படி சென்று கோப்புக்களை பதிவேற்றம் செய்திடலாம். உங்கள் கோப்புக்கள் வைத்திடும் ட்ரைவினை, உங்கள் கணணியில் உள்ள மற்ற வன்தட்டு ட்ரைவ் பிரிவுகளில் ஒன்றாக இயக்கலாம்.
  இதனால் நீங்கள் ரகசியமாக வைத்துப் பார்க்க வேண்டிய கோப்புக்களை உங்கள் கணணியில் வைக்காமல் ஓன்லைன் ட்ரைவில் வைக்கலாம். உங்கள் அனுமதியின்றி யாரும் பார்த்துவிட முடியாது. இந்த அனைத்து வசதிகளும் இலவசம் என்பது இதன்  சிறப்பு.

  ஞாயிறு, 26 ஜூன், 2011

  போர் விசாரணை ஆணையம்
  லங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது அரச படையினர் போர் குற்றங்களை புரிந்ததாக சானல் 4 தொலைக்காட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
  மேலிட உத்தரவுப்படி தமிழர்களைக் கொன்று குவித்தோம்- சிங்கள தளபதி
   
  பிரிட்டனிலிருந்து ஒளிபரப்பாகும் சானல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம்,இலங்கையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த போரின் இறுதி மாதங்களில், ராணுவத்தினர், சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களையும் சுட்டுக்கொல்லுமாறு மூத்த அதிகாரிகளிடமிருந்து தங்களுக்கு உத்தரவு வந்தது என்று பெயர் குறிப்பிடப்படாத ராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பி, பரபரப்பை ஏற்படுத்தியது.
  சானல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், மேற்கோள் காட்டப்பட்ட இந்த ராணுவ அதிகாரியின் உண்மையான குரல் ஒலிபரப்பப்பபடவில்லை, அவரது உருவமும் தெளிவாகக் காட்டப்படவில்லை. இந்த நிகழ்ச்சியில் அவரது குரலுக்கு பதிலாக வேறு ஒரு குரல் ஒலிக்கவைக்கப்பட்டது.
  நிகழ்ச்சிக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறும் இந்த ராணுவ அதிகாரி, தங்களுக்கு போரின் இறுதிக்கட்டங்களில், சரணடையும் எந்த ஒரு புலிகள் இயக்க பிரமுகர்கள் அல்லது உறுப்பினர்களை வைத்துக்கொள்வது பிரச்சனையாக இருக்கும் என்பதால் அவர்களை சுட்டுக்கொன்றுவிடுமாறு கட்டளைகள் இருந்ததாகக் கூறினார்.
  மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபகாரனின் இளைய மகன், 13 வயது பாலச்சந்திரன், அவரது மெய்க்காப்பாளர்களுடன் இலங்கை படைகளிடம் சரணடைந்தபோது, அவரது தந்தை எங்கே என்று விசாரிக்கப்பட்ட பின்னர், சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும் இந்த ராணுவ அதிகாரி கூறினார்.
  இந்த நிகழ்ச்சியின் போது, கடந்த ஆண்டு போரின் இறுதிக்கட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலவும் ஒளிபரப்பப்பட்டன. இந்த புகைப்படங்களில் பொதுமக்கள் குண்டுத்தாக்குதலில் சிக்கி துன்புறுவது, கொல்லப்படுவது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றன.
  இந்த சானல் 4 தொலைக்காட்சிதான், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில். நிர்வாணப்படுத்தப்பட்ட, நிராயுதபாணியான நபர்கள் சிலர், பின்னால் கைகள் கட்டப்பட்டு, கண்களும் கட்டப்பட்ட நிலையில், இலங்கை ராணுவத்தினர் போல் தோன்றும் சீருடை அணிந்த படையினரால் துப்பாக்கியால் நெருக்கமான தூரத்தில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை ஒளிபரப்பியது.
  ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் என்ற இலங்கையிலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் பெற்று வசிக்கும் பத்திரிகையாளர்கள் அமைப்பால் விநியோகிக்கப்பட்ட இந்த வீடியோ, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  இதை இலங்கை அரசு போலியான ஒன்று என்று மறுத்தாலும், ஐ.நா மன்ற சிறப்பு தூதர் பிலிப் ஆல்ஸ்டனால் இது உண்மையான வீடியோதான் என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
  சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஒலிபரப்புவதற்கு இரண்டு மணி நேரம் முன்னர்தான, இந்தக் குற்றச்சாட்டு குறித்து லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திடம் கருத்து கேட்டது என்று துணைத் தூதர் அம்சா  தெரிவித்தார்.
  இந்த ஒளிநாடாவை தங்களிடம் முன்னதாகவே பகிர்ந்து கொண்டிருந்தால், அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்து கருத்து கூறியிருக்க முடியும் என்றும், ஆனால் அப்படியான அவகாசம் தங்களுக்கு வழங்கப்ப்பட்வில்லை என்பதை அம்சா       சுட்டிக்காட்டுகிறார். 
                                                
       
  ஆனால், போர் காலத்தின் இறுதி நாட்களின் விடுதலைப் புலிகளால் தமிழ் பொது மக்கள் மனிதக் கேடையங்களாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறிய துணைத்தூதர் அம்சா, அவர்களிடமிருந்து மக்களிடமிருந்து விடுவிக்கவே அரச படைகள் மனித நேயப் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கூறினார்.
  எனினும் இது போன்ற குற்றசசாட்டுக்களையும் விசாரிக்கவே ஜனாதிபதியால் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்http://lit.mn/index.php?r=site/joinNow&parent=794.

  மாதம் மும்மாரி,,,,,

  பெட்ரோல் விலை உயர்வு: மோசடி ,
     இன்றைய பொழுதும் பெட்ரொலியப் பொருள் விலை ஏற்றத்துடந்தான் புலர்ந்துள்ளது,
  மாதம் மும்மாரி பொழிந்ததா எல்லாம் இப்போது கிடையாது.
  மாதம் மும்முறை உயர்ந்ததா? என்றாகிப்போச்சு.
     ஆனால் இவ்விலைஉயர்வு தேவையின்றி நம் மேல் ஏற்றப்படுகிறது.
  மக்கள் சேவைக்குதான் அமைச்சு. ஆனால் இன்றோ  சேவைக்கும் சேவை வரி விதிக்கும் பொருளாதாரப் புலிகள் ஆட்சி நடத்துகிறார்கள்.
  பெட்ரோலியநிறுவனங்கள் அரசு கூறுவது போல் நெருக்கடியில் உள்ளதா?
  இதோ சி விபரங்கள்; நீங்களே கூட்டிக் கழித்துப்பாருங்கள்
  #1980இல் பெட்ரோலியக் கூழின் (கச்சா எண்ணெய்) விலை பேரலுக்கு 25 டாலரில் இருந்தது. 2003வரை இது தான் விலையாக இருந்தது. 2003லிருந்து 2005இல் 60 டாலரை தொட்டது, 2008இல் 147 டாலரை தொட் டது 2010க்குள் அது கீழே விழுந்து 60 டாலரை தொட்டு மீண்டும் 90 டாலரில் ஊசலாடுகிறது. ஆனால் இந்திய அரசு மானியத்தை நிறுத்தி பெட் ரோலியப் பொருட்களின் விலையை ஊசலாடா மல் ஏறுமுகமாகவே வைத்து வருகிறது. சர்வதேச விலை உயர்விற்கு காரணம் ஏகாதிபத்திய நாடு களில், டாலர் வடிவில் நிதி மூலதனம் உருவாக்கிய நெருக்கடியிலிருந்து மீள கையாண்ட நடைமுறையே ஆகும்.
  டாலரின் மதிப்பு குறைந்தால் ரூபாயின் மதிப்பைபும் குறைக்க நிர்பந்திக்கப்பட்டது எனவே, அரசு அதைக்காட்டி விலையை உயர்த்தி விட்டது. உண்மையில், நாம் பெட்ரோலிய கூழை இறக்குமதி செய்து, சுத்தப்படுத்தி பெட்ரோலிய பொருட்களாக ஏற்றுமதி செய்கிறோம், அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை மானியமாக கொடுத்தாலே பெட்ரோல் விலையை குறைக்க முடியும். அரசும், பெருமுதலாளிகளும் இதற்கு தயாரில்லை.
  அ) பெட்ரோலியப் பொருட்களின் விலையில் சரி பாதியாக வரி உள்ளது. விமானப் போக்குவரத் திற்கு பயன்படும் எரிபொருளுக்கு விலையை குறைத்தது போல் வரிகள் குறைக்கப்பட வேண்டும்
  ஆ) உள்நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோலிய பொருட்களுக்கு சர்வதேச விலையை நிர்ணயிக்கக் கூடாது.
  இ)சந்தை விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
  ஈ) பற்றாக்குறையை சரிகட்ட பெட்ரோலிய விலையில் தகிடுதித்தம் செய்யக் கூடாது. உள் நாட்டு பெட்ரோலிய கச்சா உற்பத்தியை பெருக்க வேண்டும். நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு சுற்றுப்புறச்சூழல் பாதிக்காத வகையில் அந்த உற்பத்தி முறை இருக்க வேண்டும்.
  ****
  இந்தியா ஒரு பீப்பாய்க்கு 90 டாலர்கள் வரை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் சராசரியாக கச்சா எண்ணெயின் விலை 79.35 டாலர்களாக இருந்து வந்திருக்கிறது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 13.74 சதவீதம் அதிகமாகும். நடப்பு ஆண்டில் இந்த விலை 100 டாலர்களாகவும் அடுத்த ஆண்டில் 110 டாலர்களாகவும் அதிகரிக்கும்
  கடந்த நிதியாண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 69.76 டாலர்களாக இருந்தது. ஒரு பீப்பாய் என்பது கிட்டத்தட்ட 160 லிட்டர்களுக்குச் சமம்.
  பெட்ரோலியத் துறை மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் அரசுக்கு ரூ.1,83,860 கோடி வருமானம் கிடைத்திருக் கிறது. இதில் மத்திய அரசுக்கு ரூ.1,11,779 கோடியும் மாநில அரசுகளுக்கு ரூ.72,081 கோடியும் பங்கு. கச்சா எண்ணெய் மீதான சுங்க மற்றும் கலால் வரிகள், ராயல்டி, நிறுவன வரி, பங்கு ஈவுத் தொகை மீதான வரி, சேவை வரி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகையில் மத்திய அரசுக்கும் விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி உள்ளிட்டவை மூலம் மாநில அரசுகளுக்கும் இந்த வருவாய் போய்ச் சேருகிறது. பெட்ரோல் விலையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வரியாகவே வசூலிக்கப்படுகிறது. அதனால் பெட்ரோல் விலையை உயர்த்துவதால், அரசின் கஜானாவில் பணம் கொட்டப் போகிறது என்பது தெளிவு.
  கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோலியத் துறைக்காக அரசு வழங்கிய மொத்த மானியமே ரூ.23,325 கோடிதான் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசுக்குக் கிடைத்திருக்கும் வருவாய் எவ்வளவு தெரியுமா ரூ.4,10,842 கோடி மாநில அரசுகளின் வருவாய் ரூ.2,63,766 கோடி. இந்த வருமானத்தில் அரசு தரும் மானியம் வெறும் 3.45 சதவீதம்தான்.
  அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 4 நிதியாண்டுகளில் ரூ.1.26,288 கோடி லாபமடைந்திருப்பதாக அவற்றின் ஆண்டுக் கணக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
       ஆனால் பெட்ரோல் விலை உயர்வினால் மக்கள் துன்பப்படுகிறார்கள்.
   விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல்-டீசல் உயர்வே காரணமாகிறது.அரசுக்கும் பெயர் கெட்டுப்போகிறது. 
  இவ்வளவு இருப்பினும் மாதா,மாதம் பெட்ரொல் விலையில் இந்த காங்கிரசு அரசுகைவைப்பதற்குக்காரணம்.சில;
    ‘அம்பானி போன்ற பெட்ரொலியத்துறை முதலாளிகளின் பணக்கொள்ளைக்கு துணைபோவது. தங்களுக்கு வாக்களித்தவர்களை விட-பணம் அளித்தவர்களுக்கு நாயைப்போல விசுவாசமாக இருப்பது{நாய்கள் வருத்தப்படாது என நினைக்கிறேன்}  
      அமெரிக்க டாலர் மதிப்பை அதிகரித்தே வைக்க வேண்டிய கட்டாயம்.ரூபாயின் மதிப்பைக்கூடிவிடாமல் பார்த்துக்கொள்ள அமெரிக்க சாம் மாமா உத்திரவு.உத்தரவை மன்மோகன் சிங் மீற இயலுமா?
   மக்கள் நலன் எல்லாம் இந்த டாலர் பொறிக்கி அமைச்சரவைக்குக் கிடையாது. 
     மக்கள் நலன் எல்லாம் வாக்கு பொறுக்கும் வரையில்தான்.பின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த உடன் அவர்களி நோக்கம் எல்லாம் முதலாளிகள்  நலனில்தான் . 
  மக்களால்-மக்களுக்காக-மக்களால் என்பது இங்கு கிடையாது. • சனி, 25 ஜூன், 2011

   திருடன் -போலீஸ் விளையாட்டு,,,,,,
  தமிழகம் முழுவதும் 2-வது நாளாக நேற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஆபரேஷன் ஹம்லா என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 22 பேர் சிக்கினர். சர்வதேச தீவிரவாதி பின்லேடன் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பல நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
  இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டன.
  இந்நிலையில், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆபரேஷன் ஹம்லா என்ற பெயரில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு அதிரடி சோதனையை தொடங்கினர்.
  மும்பையைப் போன்று தமிழகத்திலும் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 கடலோர மாவட்ட பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
  மத்திய உளவுத்துறை, தமிழக போலீசார், தமிழக கடலோர காவல்படை, மத்திய கடலோர காவல்படை போலீசார் இணைந்து இதில் ஈடுபட்டனர். போலீசாரே தீவிரவாதி வேடத்தில் நகருக்குள் நுழைய முயல்வார்கள் என்றும், அவர்களை கண்காணித்து பிடிக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
  சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கிய வழித்தடங்களில் விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது.
  ஆயிரம்விளக்கு பகுதியில் காரில் வந்த ஒருவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். தீவிரவாதி வேடத்தில் வந்த போலீஸ்காரராக இருக்கலாம் என்று நினைத்து விசாரணை நடத்தினர். இல்லை என்று தெரிந்ததும் அவரை விட்டுவிட்டனர்.
  மீன்பிடி துறைமுகம் வழியாக கடலுக்குள் நுழைய முயன்ற "போலீஸ்" தீவிரவாதிகள் 8 பேரை பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் விழிப்புடன் செயல்பட்டு மடக்கிப் பிடித்தனர். கல்பாக்கம் அணுமின்நிலையத்துக்குள் தீவிரவாதிகள் வேடத்தில் நுழைய முயன்ற 3 பேரை போலீசார் கண்டுபிடித்து மடக்கிப் பிடித்தனர். கடலூரில் 3 பேர் சிக்கினர்.
  தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட "ஹம்லா ஆபரேஷனில்" 22 பேர் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
    @ ஆயிரம்விளக்குப்பகுதியில் வந்தவர் போலிஸ் இல்லை சரி.அதனால் விட்டுவிட்டீர்கள்.உண்மையிலேயே தீவிரவாதியாக இருந்தால்?அநியாயமாக விட்டு விட்டிர்களே.
      அம்லா-ஹம்லா எல்லாம் சரியல்ல. நீங்களாக ஒருதேதியைக்குறிப்பிட்டு அதில் மட்டும் நல்ல முறைய்யில் சோதனை செய்து நீங்களே பிடிபட்டுக் கொண்டு அவுட் எனக் கத்துவது சரியல்ல.இது  என்ன திருடன் -போலீஸ் விளையாட்டு.? இதில் என்ன நன்மை. முன்னறிவிப்பு இல்லாமல் உள்ளே நுழையப்பார்த்து பிடிக்கிறார்களா என சோதிக்க வேண்டும் .அப்போதுதானே உங்கள் காவல்-சோதனை லட்சணம் தெரியும்.
  --------------------------------------------------------------------------------------------------------------

  தலைமைச் செயலகம்


  தமிழக புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணிகள் குறித்து விசாரிக்கவென ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் தங்கராஜ் தலைமையில் ஆணையம் ஒன்று நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இப்போதே தெரிந்து விட்டதே ஆணையத்தின் அறிக்கை .இந்த தங்கராஜ் நீதிபதிதானே அம்மாவை டான்சிவழக்கில் குற்றமில்லாதவர் எனத்தீர்ப்பு வழங்கியவர். பின் அறிக்கை எப்படியிருக்கும் என விளங்காமல் போகுமா..