மாதம் மும்மாரி,,,,,
பெட்ரோல் விலை உயர்வு: மோசடி ,
இன்றைய பொழுதும் பெட்ரொலியப் பொருள் விலை ஏற்றத்துடந்தான் புலர்ந்துள்ளது,
#1980இல் பெட்ரோலியக் கூழின் (கச்சா எண்ணெய்) விலை பேரலுக்கு 25 டாலரில் இருந்தது. 2003வரை இது தான் விலையாக இருந்தது. 2003லிருந்து 2005இல் 60 டாலரை தொட்டது, 2008இல் 147 டாலரை தொட் டது 2010க்குள் அது கீழே விழுந்து 60 டாலரை தொட்டு மீண்டும் 90 டாலரில் ஊசலாடுகிறது. ஆனால் இந்திய அரசு மானியத்தை நிறுத்தி பெட் ரோலியப் பொருட்களின் விலையை ஊசலாடா மல் ஏறுமுகமாகவே வைத்து வருகிறது. சர்வதேச விலை உயர்விற்கு காரணம் ஏகாதிபத்திய நாடு களில், டாலர் வடிவில் நிதி மூலதனம் உருவாக்கிய நெருக்கடியிலிருந்து மீள கையாண்ட நடைமுறையே ஆகும்.
இன்றைய பொழுதும் பெட்ரொலியப் பொருள் விலை ஏற்றத்துடந்தான் புலர்ந்துள்ளது,
மாதம் மும்மாரி பொழிந்ததா எல்லாம் இப்போது கிடையாது.
மாதம் மும்முறை உயர்ந்ததா? என்றாகிப்போச்சு.
ஆனால் இவ்விலைஉயர்வு தேவையின்றி நம் மேல் ஏற்றப்படுகிறது.
மக்கள் சேவைக்குதான் அமைச்சு. ஆனால் இன்றோ சேவைக்கும் சேவை வரி விதிக்கும் பொருளாதாரப் புலிகள் ஆட்சி நடத்துகிறார்கள்.
பெட்ரோலியநிறுவனங்கள் அரசு கூறுவது போல் நெருக்கடியில் உள்ளதா?
இதோ சி விபரங்கள்; நீங்களே கூட்டிக் கழித்துப்பாருங்கள். #1980இல் பெட்ரோலியக் கூழின் (கச்சா எண்ணெய்) விலை பேரலுக்கு 25 டாலரில் இருந்தது. 2003வரை இது தான் விலையாக இருந்தது. 2003லிருந்து 2005இல் 60 டாலரை தொட்டது, 2008இல் 147 டாலரை தொட் டது 2010க்குள் அது கீழே விழுந்து 60 டாலரை தொட்டு மீண்டும் 90 டாலரில் ஊசலாடுகிறது. ஆனால் இந்திய அரசு மானியத்தை நிறுத்தி பெட் ரோலியப் பொருட்களின் விலையை ஊசலாடா மல் ஏறுமுகமாகவே வைத்து வருகிறது. சர்வதேச விலை உயர்விற்கு காரணம் ஏகாதிபத்திய நாடு களில், டாலர் வடிவில் நிதி மூலதனம் உருவாக்கிய நெருக்கடியிலிருந்து மீள கையாண்ட நடைமுறையே ஆகும்.
டாலரின் மதிப்பு குறைந்தால் ரூபாயின் மதிப்பைபும் குறைக்க நிர்பந்திக்கப்பட்டது எனவே, அரசு அதைக்காட்டி விலையை உயர்த்தி விட்டது. உண்மையில், நாம் பெட்ரோலிய கூழை இறக்குமதி செய்து, சுத்தப்படுத்தி பெட்ரோலிய பொருட்களாக ஏற்றுமதி செய்கிறோம், அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை மானியமாக கொடுத்தாலே பெட்ரோல் விலையை குறைக்க முடியும். அரசும், பெருமுதலாளிகளும் இதற்கு தயாரில்லை.
அ) பெட்ரோலியப் பொருட்களின் விலையில் சரி பாதியாக வரி உள்ளது. விமானப் போக்குவரத் திற்கு பயன்படும் எரிபொருளுக்கு விலையை குறைத்தது போல் வரிகள் குறைக்கப்பட வேண்டும்
ஆ) உள்நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோலிய பொருட்களுக்கு சர்வதேச விலையை நிர்ணயிக்கக் கூடாது.
இ)சந்தை விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
ஈ) பற்றாக்குறையை சரிகட்ட பெட்ரோலிய விலையில் தகிடுதித்தம் செய்யக் கூடாது. உள் நாட்டு பெட்ரோலிய கச்சா உற்பத்தியை பெருக்க வேண்டும். நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு சுற்றுப்புறச்சூழல் பாதிக்காத வகையில் அந்த உற்பத்தி முறை இருக்க வேண்டும்.
****
இந்தியா ஒரு பீப்பாய்க்கு 90 டாலர்கள் வரை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் சராசரியாக கச்சா எண்ணெயின் விலை 79.35 டாலர்களாக இருந்து வந்திருக்கிறது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 13.74 சதவீதம் அதிகமாகும். நடப்பு ஆண்டில் இந்த விலை 100 டாலர்களாகவும் அடுத்த ஆண்டில் 110 டாலர்களாகவும் அதிகரிக்கும்
கடந்த நிதியாண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 69.76 டாலர்களாக இருந்தது. ஒரு பீப்பாய் என்பது கிட்டத்தட்ட 160 லிட்டர்களுக்குச் சமம்.
பெட்ரோலியத் துறை மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் அரசுக்கு ரூ.1,83,860 கோடி வருமானம் கிடைத்திருக் கிறது. இதில் மத்திய அரசுக்கு ரூ.1,11,779 கோடியும் மாநில அரசுகளுக்கு ரூ.72,081 கோடியும் பங்கு. கச்சா எண்ணெய் மீதான சுங்க மற்றும் கலால் வரிகள், ராயல்டி, நிறுவன வரி, பங்கு ஈவுத் தொகை மீதான வரி, சேவை வரி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகையில் மத்திய அரசுக்கும் விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி உள்ளிட்டவை மூலம் மாநில அரசுகளுக்கும் இந்த வருவாய் போய்ச் சேருகிறது. பெட்ரோல் விலையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வரியாகவே வசூலிக்கப்படுகிறது. அதனால் பெட்ரோல் விலையை உயர்த்துவதால், அரசின் கஜானாவில் பணம் கொட்டப் போகிறது என்பது தெளிவு.
கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோலியத் துறைக்காக அரசு வழங்கிய மொத்த மானியமே ரூ.23,325 கோடிதான் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசுக்குக் கிடைத்திருக்கும் வருவாய் எவ்வளவு தெரியுமா ரூ.4,10,842 கோடி மாநில அரசுகளின் வருவாய் ரூ.2,63,766 கோடி. இந்த வருமானத்தில் அரசு தரும் மானியம் வெறும் 3.45 சதவீதம்தான்.
அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 4 நிதியாண்டுகளில் ரூ.1.26,288 கோடி லாபமடைந்திருப்பதாக அவற்றின் ஆண்டுக் கணக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் பெட்ரோல் விலை உயர்வினால் மக்கள் துன்பப்படுகிறார்கள்.
விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல்-டீசல் உயர்வே காரணமாகிறது.அரசுக்கும் பெயர் கெட்டுப்போகிறது.
இவ்வளவு இருப்பினும் மாதா,மாதம் பெட்ரொல் விலையில் இந்த காங்கிரசு அரசுகைவைப்பதற்குக்காரணம்.சில;
‘அம்பானி போன்ற பெட்ரொலியத்துறை முதலாளிகளின் பணக்கொள்ளைக்கு துணைபோவது. தங்களுக்கு வாக்களித்தவர்களை விட-பணம் அளித்தவர்களுக்கு நாயைப்போல விசுவாசமாக இருப்பது{நாய்கள் வருத்தப்படாது என நினைக்கிறேன்}
அமெரிக்க டாலர் மதிப்பை அதிகரித்தே வைக்க வேண்டிய கட்டாயம்.ரூபாயின் மதிப்பைக்கூடிவிடாமல் பார்த்துக்கொள்ள அமெரிக்க சாம் மாமா உத்திரவு.உத்தரவை மன்மோகன் சிங் மீற இயலுமா?
மக்கள் நலன் எல்லாம் இந்த டாலர் பொறிக்கி அமைச்சரவைக்குக் கிடையாது.
மக்கள் நலன் எல்லாம் வாக்கு பொறுக்கும் வரையில்தான்.பின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த உடன் அவர்களி நோக்கம் எல்லாம் முதலாளிகள் நலனில்தான் .
மக்களால்-மக்களுக்காக-மக்களால் என்பது இங்கு கிடையாது.