சனி, 30 ஜூன், 2012

ஊடகம்-இணையம் மீதான அடக்குமுறைகள்


-இ.பி.சிந்தன்
“நமக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று: ரசிக்கும்படியாக இருக்கிறதென்றால், நம் முடைய நண்பர்களுக்கு அனுப்புகிறோம்”

“ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் எரிச்சலூட்டினால், உடனே ஒரு பேஸ்புக் நிலைத்தகவல் போடுகிறோம்.”


“ட்விட்டரில் ஒரு குறிப்பிட்ட தலைப் பில் விவாதங்களை துவக்குகிறோம்”

இவற்றையெல்லாம் எவ்விதக்கட்டுப் பாடுமின்றி செய்துகொண்டிருக்கிற நம்மை ‘இனி இவையெல்லாம் தணிக் கைக்கு உட்படும்’ என்றும், நம்முடைய நட வடிக்கைகள் அனைத்தையும் பலரும் கண்காணித்துக்கொண்டே இருப்பார்க ளென்றும், கண்காணிப்பாளர்களுக்கு பிடித்தவற்றை மட்டுமே நாம் பேசவேண்டுமென்றும் சொன்னால் என்னவாகும்?
சுரன்


அதனைத்தான் இந்திய அரசு நிகழ்த் தத் துவங்கியிருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதலே கடுமையான சட்டங் களை இயற்றி தனிமனித சுதந்திரத்தை யும் கருத்துரிமையினையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவருகிறது.

சில கார்ப்பரேட் முதலாளிகளிடம் சிக் கிக்கொண்டிருக்கிற பெரும்பாலான தொலைக்காட்சி மற்றும் இன்னபிற செய்தி ஊடகங்களுக்கு மத்தியில், நமது எண் ணங்களை சகமனிதர்களுடன் நேரடி யாகப் பகிர்ந்து கொள்வதற்கு இன்றைக்கு நமக்கிருக்கிற ஒரே ஊடகம் இணையம் தான். அச்சு ஊடகங்களில் எழுதிடமுடி யாத கோடிக்கணக்கான மக்கள், தங்களது கருத்துக்களை எளிதில் எழுதிவிடமுடி கிறது இணையத்தில். அச்சு ஊடகங்கள் எழுதாமல் விட்டவற்றையெல்லாம் பதி வுலகில் பலரும் எழுதிவருவதைக் காண முடிகிறது.

சர்வாதிகார ஆட்சிகளில்தான், சுதந் திரமாக மக்கள் தங்களது கருத்துக்களை பேசுவதும் எழுதுவதும் தடைசெய்யப் படும். ஆனால் எதிர்பாராதவிதமாக, இணையத்தை தணிக்கை செய்யப் புறப் பட்டிருக்கிற இந்திய அரசு, அப்படியான ஒரு சூழலைத்தான் உருவாக்கிவருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்து விதிகளையும் மீறும்விதமாக இந்திய அரசு பல சட்டத்திருத்தங்களை கொண்டுவந்திருக்கிறது. 
சுரன்


தகவல் தொழில்நுட்ப சட்டதிருத்தம் - பிரிவு 69

(ஆண்டு - 2008 )

இச்சட்டப் பிரிவின் படி, உயர் அரசு அதிகாரிகளோ, காவல்துறையினரோ எவரொருவரின் அனுமதியுமின்றி, நம் முடைய தொலைபேசி அழைப்புகளை ஒட்டுகேட்கவோ, நமக்கு வருகிற குறுந்தகவல்களையும் மின்னஞ்சல் களையும் படிக்கவோ, நாம் பார்வையிடும் இணையதளங்களை பட்டியல் எடுக் கவோ அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு எந்த நீதிமன்றத்திடமிருந்தும் நீதிபதிகளிடமிருந்தும் அனுமதி வாங்கத் தேவையில்லை.

“முறையான சட்ட வழிமுறைகளை பின்பற்றாமல், நாட்டின் குடிமக்களின் தனிநபர் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது” என்கிற நம்முடைய அரசியல மைப்பின் “பிரிவு 21” ஐ முற்றிலும் மீறுவ தாக இருக்கிறது இச்சட்டத்திருத்தம்.

தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் - 2011

1. நம்முடைய பேஸ்புக் நிலைத்தகவல் களை தணிக்கை செய்யவும்

2 . நமது ஸ்கைப் உரையாடல்களை

ஒட்டு கேட்கவும்

3. ட்விட்டரிலும் ப்ளாகிலும் நாம் எழுது கிறவற்றை முழுவதுமாக கண்

காணிக்கவும்

4 . இணையத்தில் இருக்கிற நம்முடைய கோப்புகள், புகைப்படங்கள் ஆகிய வற்றை பார்வையிடவும்,

5 . நம்முடைய இருப்பிடத்தை நமது அலைபேசியின் வாயிலாக கண் காணிக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.

மொத்தத்தில், இணையத்தில் நம் முடைய நடவடிக்கைகளை ஒட்டு மொத்தமாக பிரதியெடுத்து தனிமனித சுதந்திரத்தை, அரசு அதிகாரிகள் கையில் ஒப்படைக்கிறது இச்சட்டம். 


இணையத்தில் இருக்கிற எதனையும் 36 மணிநேரத்திற்குள் தணிக்கை செய்து மக்களுக்குக் கிடைக்காமல் செய்துவிடும் அதிகாரத்தை அத்தகைய அதிகாரி களுக்கு வழங்குகிறது இச்சட்டம்.


“பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற் கான உரிமை” என்கிற நம்முடைய அர சியலமைப்பின் “பிரிவு 19” ஐ முற்றிலும் மீறுவதாக இருக்கிறது இச்சட்டத்திருத் தம். அதோடு மட்டுமின்றி, தனிமனித சுதந்திரத்திற்குள்ளும் மூக்கை நுழைக் கிறது இச்சட்டத்திருத்தம்.
சுரன்


சுய கட்டுப்பாட்டுச் சட்டம்

இணையம் தணிக்கை செய்யப் படுகிறது என்பது நாட்டு மக்களுக்கே தெரியாமல் செய்திடவேண்டும் என்பது தான் இந்திய அரசின் திட்டமாக இருக் கிறது. ஒரு இணையதளத்தையோ அல் லது இணையத்தில் இருக்கிற குறிப்பிட்ட தகவல்களையோ, அதனை உருவாக் கியவருக்கும் தெரிவிக்காமல், அந்த இணையதளத்தினை பார்க்க விரும்புகிற இணையப் பயனாளர்களுக்கும் சொல்லா மல், தணிக்கை செய்துவிடத்துடிக்கிறது இந்திய அரசு. அதற்காக “சுய கட்டுப் பாட்டு சட்டம்” ஒன்றினை இயற்றத் துடித் துக்கொண்டிருக்கிறது. முதற்கட்டமாக இந்தியாடைம்ஸ், பேஸ்புக், கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவ னங்களையே அவர்களது இணையதளங் களில் அவர்களையே தணிக்கை செய்யு மாறு நிர்ப்பந்தித்துவருகிறது இந்திய அரசு. அந்தந்த இணையதள நிறுவனங்களே தணிக்கையை செய்துவிட்டால், அரசிற்கு வேலைப்பளு குறையும் என்பதும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபலின் கருத்தாக இருக்கிறது. குடிமக் களின் பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக் கும் தடைவிதிக்க அரசிற்கே உரிமை யில்லை என்கிறபோது, சில தனிமுத லாளிகளிடத்தில் ஒப்படைக்க நினைக் கிறார் கபில்சிபல்.

புறவாசல் வழியாக

கொண்டுவரப்படும்
தணிக்கைச்சட்டம் (52(1)உ பிரிவு )

அரசிற்கு பிடிக்காதவற்றையெல்லாம் இணையத்தில் தணிக்கை செய்யும் சட்டத்தினை நேரடியாக நிறைவேற் றாமல், மறைமுகமாக காப்புரிமைச்சட்டம் என்கிற பெயரில் மாநிலங்களவையில் கொண்டுவந்திருக்கிறார் கபில்சிபல்.

இச்சட்டப்பிரிவின்படி, ஒரு இணைய தளத்தையோ அல்லது அதன் பகு தியையோ நீக்கவேண்டி யாரேனும் இணைய நிறுவனத்திற்கு விண்ணப்பம் அனுப்பினால், அதனை எவ்வித விசா ரணையுமின்றி, இணைய நிறுவனம் அவ் விணையதளத்தினை இணையத்தி லிருந்தே நீக்கலாம்.
சுரன்


 தவறுதலாக விண் ணப்பம் அனுப்பியவருக்கு எந்தவிதமான தண்டனையும் இல்லை. ஆனால், இணைய தளத்தை நீக்காவிட்டால், இணைய நிறுவனத்திற்கு தண்டனை உண்டு. இது நிச்சயமாக இணையத்தை ஒரு குழப்பமான நிலைக்குத்தான் கொண்டு செல்லும். யார் வேண்டுமானாலும் இணையத்தில் இருந்து எதனை வேண்டு மானாலும் நீக்கலாம் என்றாகிவிடும். 


எவரொருவரும், ஒரு இணையதளத் தில் இருக்கும் எதனையும் ஆதாரமே இல்லாமல், தனக்கு சொந்தமானது என்று கோரிக்கை வைத்து அதனை நீக்க வைத்துவிடமுடியும். இச்சட்டத்தின் மூலம், ஒட்டுமொத்த இணையமே உப யோகமற்றதாக மாறிவிடும் என்பதுதான் அதிர்ச்சியான தகவல்.

மன்னராட்சி, காலனிய ஆட்சி, சர் வாதிகார ஆட்சி என்று பல்வேறு வித மான கொடுங்கோல் ஆட்சிகளுக்கும் எதி ராக பல நூற்றாண்டுகளாக போராடிப் பெற்றதுதான் இன்றைக்கு இருக்கிற பேச்சுரிமையும், கருத்துரிமையும். அதனை மீண்டும் பறிக்கமுயல்கிற இச்சட்டங் களை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றுசேர குரல் எழுப்ப வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.
ஆனால் இதை இணையவாதிகள் யாரும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை.
_________________________________________________________________

மணவிலக்கு இணைகள்.
சுரன்


ஸ்பீடு.மிசன் இம்பாசிபில் மூலம் உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தனது மனைவியை மண விலக்கு செய்வதுதான் இப்போதைய ஹாலிவுட் பரபரப்பு செய்தி.அப்புறம் உங்களுக்கு தெரியாது என்று சொல்லி விடக்கூடாது.
டாம் குரூஸ்[49] அவரிடம் மணவிலக்கு பெறும் கேதி கோம்ஸ்[33] அவர்கள் மகள் சுரி[6],
இவர்களுக்கு மணவிலக்கு வாழ்த்துக்கள் உரித்தாகுக.மணவிழா அன்றுதான் வாழ்த்த இயலவில்லை.
ஹாலிவுட்டைப் பொருத்தவரை மணவிலக்கு பெறாவிட்டால்தான் ஏதோ குறை இவர்களுக்கு என்று எண்ணுவார்கள்.
_______________________________________________________________________________

சுரன்
பாகிஸ்தானில் உள்ள மலைப்பாதை

டெசோ -வும் சோபிதரும்

கருணாநிதியின் டெசோ மாநாடு ஒன்றும் செய்யப்போவதில்லை .இங்குள்ளவர்கள் கருத்து இதுதான்.
ஆனால் பக்‌ஷே அரசில் உள்ளவர்கள் கொஞ்சம் பயப்படத்தான் செய்கிறார்கள்.
ஓமல்பே சோபித தேரர்[எப்படித்தான் பெயர் வைக்க யோசிக்கிறார்களோ?]இவர் பக்‌ஷே அரசில் அமைச்சராக உள்ளார்.
இவர் நமது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் டெசோ மாநாடை இந்தியாவில் நடத்த அனுமதிக்க கூடாது.என்று வலியுறுத்தியுள்ளார்.
சுரன்

ஏன் கொழும்பில் நடத்த வேண்டும் என்கிறாரா?
அது 1976 ஆம் ஆண்டின் ஒப்பந்ததுக்கு எதிரானதாம்.இது வரை 1976 ஒப்பந்தப்படிதான் இலங்கை அரசு செயல் பட்டு வருகிறதா?
முள்ளி வாய்க்கால் உட்பட ஈழத்தமிழர்கள் கொன்று குவிப்பு எல்லாம் ஒப்பந்தத்தின் வரிகள் படிதான் செய்யப்பட்டுள்ளதா?
இவர் கட்சியை சார்ந்த மற்றொரு அமைச்சர் சம்பிக்க ரணவர்க்க தான் நூறு முள்ளிவாய்க்கால்கள் தமிழர்களுக்கு காத்திருக்கிறது.என்று ஈழத்தமிழர் மரணத்திற்கு சலுகைகள் அறிவித்தவர்.இவர்கள் இருவருமே "ஜாதிக ஹெல உறுமய"என்ற வாயில் நுழையாத கட்சியை வைத்துக்கொண்டு சிங்கள அரசில் நுழைந்தவர்கள்.
'எங்கள் இலங்கையில் இந்திய எதிர்ப்பு செயல்களுக்கு நாங்கள் இதுவரை ஆதரவு தந்ததில்லை.என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்"
என்ற அடிக்கோடிட்ட வரிகளை சேர்த்து ள்ளார்.இது இந்திய அரசை மிரட்டுவதுதானே?
இனி என்ன நடக்கும் என்று கூறுவது போல் உள்ளதல்லவா?
அது போல் இலங்கைக்கு எதிரான எந்த நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசு அனுமதி தரக்கூடாது என்று எச்சரிக்கை வேண்டுகோளிட்டுள்ளார்.
இந்தியாதான் இலங்கை கூறும் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஆதரவையும்-பாதுகாப்பையும் தருகிறதே.பின் எதற்கு இந்த மிரட்டல்?
கூண்டோடு அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு இன்னும் இந்தியா தடை தானே விதித்துள்ளது.
விடுதலைப்புலிகள் ஆதரவாக பேசுபவர்களை இன்னும் சிறையில்தானே அடைக்கிறது.

இலங்கையில் கூட[முன்னாள்] விடுதலைப்புலிகள் சுதந்திரமாக நடமாடும் போது இந்தியாவில் சிறையில்தான் உள்ளனர்.
குழந்தைகள் உட்பட பலரை கொன்று குவித்தவர்களுக்கு விடுதலையும்,மன்னிப்பும் வழங்கிய இந்திய அரசு ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை இன்னும் தூக்கு கயிற்று நிழலில்தானே வைத்துள்ளது.
'அப்படிப் பட்ட நிலையில் ஈழ மக்கள் படுகொலையில் குற்ற உணர்வுடன் இருக்கும் கருணாநிதி நடத்தும் டெசோ மாநாட்டினால் என்ன நடந்து விடப்போகிறது?
இந்த தேவையற்ற அச்சம் பக்‌ஷே க்கு வேண்டாம்.
சொல்லப் போனால் இந்த மாநாடு இலங்கையில் நடத்த அனுமதி அளித்து அதில் அவர் சிறப்பு விருந்தினராகக்கூட கலந்து கொள்ளலாம்.உடன் சம்பந்தம்,கருணா,பிள்ளையான்,ஏன் சிவசங்கர மேனன்,நிருபமா ராவ், டக்ளஸ் தேவானந்தாவை கூட பேச அழைத்து வரலாம்.
அதான் புலிகளை அடி யோடு அழித்து விட்டீர்களே?
இன்னும் என்ன பயம்?

மோசடிகள் தொடர்கின்றன.....

துக்கையாண்டி ஐ.பி.எஸ் தான் ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீதும் நில அபகரிப்பு மோசடிதான் குற்றமாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த மோசடிக்குப் பின்னாள் ஏதோ மோசடி இருக்கலாம் என்றே தெரிகிறது.
சுரன்

முதல்வர் ஜெயலலிதா தனது எதிரிகளை வீழ்த்தும் ஆயுதமாகவே நில அபகரிப்பு மோசடியை வைத்திருக்கிறார்.
கைது செய்து விட்டு பின்னர் யாரிடமாவது புகாரை முன் தேதியிட்டு பதிவு செய்து கொள்ளலாம்.
அது சரி .திமுக வினர் மீது நில அபகரிப்பு மோசடி வழக்கு போடுவதில் அர்த்தம் இருக்கிறது.
துக்கையாண்டி மீது ஏன்?
'டான்சி" நில மோசடி வழக்கு ஞாபமகமிருக்கிறதா? ஜெயலலிதாவுக்கு எதிரான அந்த மோசடி வழக்கில் விசாரணை அலுவலராக இருந்த குற்றத்தை துக்கையாண்டி செய்துள்ளார்.
அந்த விசாரணையில் அவர் நியாயமாக நடந்து குற்றத்தை வெளிக்கொண்டு வந்ததுதான் அவர் செய்த மன்னிக்க முடியாகுற்றம்.
இது போதாதா?அவர் மீதும் நில மோசடி வழக்கு வர .
_______________________________________________________________________________ 
அதிசயமாகும் வெற்றி....?

ஒன்று மட்டும் நிச்சயம் .சங்மா தனது தோல்வியை அறிந்து கொண்டுதான் இருக்கிறார்.
ஆனால் ஏதாவது அதிசயம் நடக்கும்.நான் வெற்றி பெறுவேன் என்கிறார் சங்மா.
அதிசயங்கள் நடப்பது பற்றி தனக்கு நம்பிக்கை அதிகம் என்றும் சொல்லுகிறார்.
பார்ப்போம்.அதிசயங்களை.
சுரன்

அவர் மேலும் கூறுகையில்:
"மன்னிப்பதே கிறிஸ்தவம். பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் முன்பு கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்பட்டுள்ள நிலையில் அந்த மதத்தைச் சேர்ந்த நீங்கள் அவர்களது ஆதரவைப் பெறுவது முறையானதுதானா என்று பலர் கேட்கின்றனர். "மதத்தை அரசியலுடன் இணைக்கும் பிரச்னை அனைத்து நாடுகளிலும் உள்ளது.
பிறர் செய்யும் தவறுகளை மன்னிப்பது என்பது கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை. எனவே நாங்கள் எந்த கசப்புணர்வுகளையும் மனதில் வைத்துக் கொள்வது இல்லை.
உலகிலேயே மிகப்பெரிய மதம் கிறிஸ்தவம். அதற்கு விசாலமான இதயம் உண்டு. எனவே இங்கும், அங்கும் நடக்கும் சிறு விஷயங்களைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை."
என்று கூறியுள்ளார்.
பேசாமல் குடியரசுத்தலைவர் பதவி போட்டியை விட்டு ,விட்டு மதப்பிரசாரம் செல்லலாம் சங்மா.தோற்கும் என்று தெரிந்தும் போட்டியிடுவதற்கு ஒரு வீரம் அல்லது வீராப்பு வேண்டும் அது சங்மாவிடம் அதிகம் இருக்கிறது.
அதுவும் சுப்பிரமணியன் சாமி,ஜெயலலிதாவை நம்பி களம் இறங்க ரொம்பவே துணிச்சல் வேண்டும்.
'பிதாவே .இவர் அறிந்தே செய்கிறார்.இவரை மன்னியும்.அதிசயங்களை நிகழ்த்திக்காட்டி இவரை வெற்றி பெறச்செய்யும்."
இதுதான் நாங்கள் செய்யக்கூடிய உதவி.
சங்மா ரொம்ப நல்லவர் என்பது தெரிகிறது.ஆனால் இந்திய அரசியலில் அது தேவையில்லாத ஒன்றாகிற்றே.
சுரன்    

டெங்கு கொசுவிடம் இருந்து தப்பிக்க இது சரி வருமா?

வெள்ளி, 29 ஜூன், 2012

வருங்கால இந்திய நிதியமைச்சர் யார்?

இதோ .பிரணாப் முகர்ஜி இன்னும் சில நாட்களில் குடியரசுத்தலைவராகி மாளிகையில் முடங்கி விடுவார்.இனி வெளிநாடுகளில்தான் நாம் அவரை அநேகமாக சந்திக்க இயலும்.
ஆனால் அடுத்ததாக இந்திய பொருளாதாரத்தை குழப்பிவைக்க காங்கிரசு யாரை நிதி அமைச்சராக்கும்?
இதோ நண்பர் கான் தனது எண்ணங்களை எழுதியிருக்கிறார்.இதில் நீங்கள் எண்ணும் நிதியமைச்சர் இருக்கிறாரா?என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
இவர் நிதியமைச்சரானால்......
-ஏ.கே.கான்
சுரன்

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன. சர்வதேச பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நிலவும் நிலையில் நாட்டின் பொருளாதார நிலைமை சரிந்து வரும் நிலையில் நிதியமைச்சகத்தை வழிநடத்த மிகத் திறமையான ஒருவர் தேவைப்படுகிறார்.
இந்தப் பதவியைப் பிடிக்க மத்திய அமைச்சர்களில் மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகளிடையே கூட பெரும் போட்டி நடந்து வருகிறது. நிதித்துறையில் பெரும்மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள்  முடுக்கி விடுவதோடு, அந்நிய முதலீட்டை இழுத்து வரும் திறமும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதோடு ரூபாயின் மதிப்பு சரிவதைக் கட்டுப்படுத்தும் திறமையும் கொண்ட ஒருவர் தான் இப்போதைய தேவை. அதே நேரத்தில் நிதித்துறை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் காங்கிரஸின் ஓட்டு வங்கியும் பாதிக்கப்படாத வகையில் நேக்கு போக்காக அரசியலையும் நிதி விவகாரங்களையும் கவனமாகக் கையாளும் திறன் கொண்ட ஒருவர் தேவைப்படுகிறார். அதில் முதல் சாய்ஸ் பிரதமர் மன்மோகன் சிங் தான். ஆனல், பிரதமர் பதவியோடு நிதியமைச்சர் பொறுப்பையும் வகிக்க முடியாத அளவுக்கு அவருக்க ஏராளமான பணி நெருக்கடி. இதனால் வேறு ஒருவரை நிதியமைச்சராக்கியே ஆக வேண்டிய நிலை உள்ளது.
ப.சிதம்பரம்:
அடுத்த குசாய்ஸாக இருப்பவர் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அடிப்படையில் வழக்கறிஞரான சிதம்பரத்துக்கு நிதி நிர்வாகம் அத்துப்படியான விடயம். 20042008 ஆம் ஆண்டில் இவர் நிதியமைச்சராக இருந்த போது தான் நாடு 9  சதவீத வளர்ச்சியைக் கண்டது.
சர்வதேச பொருளாதார தேக்கம் ஏற்பட்ட போது நிலைமையை சமாளித்து நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்து காட்டினார். ஆனால், அதே காலகட்டத்தில் இந்தியாவில் நடந்த வெடிகுண்டு சம்பவங்கள், தீவிரவாத தாக்குதல்களால் உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் மீது கடும் கோபம் கொண்ட சோனியா அவரை மாற்ற  வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.
சுரன்
உள்துறையை கொஞ்சமாவது செயல்படும் துறையாக மாற்ற ப.சிதம்பரமே சரி என்று மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முடிவு செய்து அவரை உள்துறை அமைச்சராக்கினர்.
உள்துறை அமைச்சராக  ப.சிதம்பரத்தின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாகவே உள்ளன. கிட்டத்தட்ட ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ. மாதிரி தான் உள்துறையை  கையாண்டு வருகிறார் சிதம்பரம். தினமும் ஐ.பி. உள்ளிட்ட  உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை, வாரந்தோறும் உள்துறைஉளவுப் பிரிவு அதிகாரிகளுடன் கூட்டாக  ஆலோசனை, கிடைக்கும் இரகசிய தகவல்கள் வெளியே லீக் ஆகிவிடாமல் கட்டிக் காத்து உடனடி நடவடிக்கைகள் எடுத்து உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிதம்பரத்தின் பங்கு மிகச் சிறப்பாகவே உள்ளது.
இதற்கு முன் இந்தத் துறையை கையாண்ட சிவராஜ் பாட்டீல்  அந்தத் துறையை சீரழித்து வைத்த நிலையில் அதை சரி செய்ய வே சிதம்பரத்துக்கு நெடு நாட்கள் பிடித்தன. இப்போது அந்தத் துறையிலிருந்து சிதம்பரத்தை மாற்ற சோனியாவுக்கும் ராகுல் காந்திக்கும் விருப்பமில்லை என்கிறார்கள். இதனால் சிதம்பரம் நிதியமைச்சராகுவது சாத்தியமில்லை.
ஆனந்த் சர்மா:
வர்த்தகத்துறை அமைச்சரான ஆனந்த் சர்மாவை 3 ஆவது சாய்ஸாக பார்க்கிறார்கள். மிகச் சிறந்த அமைச்சர்களில் ஒருவரான சர்மாவுக்கு பிடித்த துறை வெளியுறவுத்துறை தான். ஆனால், அவரை வலுக்கட்டாயமாக வர்த்தகத்துறைக்கு அமைச்சராக்கினர் சோனியாவும் மன்மோகன் சிங்கும்.
அவரும் அந்தத் துறையை நன்றாகவே நிர்வகித்து வருகிறார். தீவிரமான பொருளாதார சீர்திருத்த ஆதரவாளரான சர்மா சர்வதேச அளவில் நிதி நிலைமை சரியில்லாதபோதும் இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப்படாமல் இருக்க ஏராளமான முயற்சிகளை எடுத்து வருபவர்.
சுரன்

சர்வதேச அரசியல், பொருளாதார விவகாரங்களில் அதீத ஆர்வம் கொண்ட இவர் கடுமையான உழைப்பாளி. ஆனால், நிதித்துறையை நிர்வகிக்கும் அளவுக்கு இவரிடம் திறமை உள்ளதா என்பதில் சந்தேகங்கள் உள்ளன.
சி.ரங்கராஜன்:
முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரான சி.ரங்கராஜனுக்கு உடம்பெல்லாம் பொருளாதார மூளைதான். இப்போதும் காலையில் தினமும் பிரதமர் நாட்டின் நிதி விடயங்களை விவாதிக்கும் முக்கிய நபர் ரங்கராஜன் தான்.  பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ள இவர் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த போது தான் இந்திய நிதி நிலைமை நல்ல நிலைக்கு வந்தது. நாட்டின் பொருளாதாரத்தை காவு கொடுத்துத் தான் பணவீக்கம் பெற்றோல்டீசல் விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அது தவறு என்று சொல்பவர்.  மானியங்களுக்கு எதிரானவர்.
தீவிரமான பொருளாதார சீர்திருத்த ஆதரவாளர். ஆனால், அரசியல் பின்புலம் இல்லாதவர். அரசியல் ரீதியான நிதி விவகாரங்களைப்பார்க்க மறுப்பவர். ஓட்டு அரசியல் இவருக்குத் தேவையில்லை. ஆனால், காங்கிரஸுக்குத் தேவையாச்சே!
மான்டேக் சிங் அலுவாலியா:
நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது மன்மோகன் சிங்கை நிதியமைச்சராகவும் ப.சிதம்பரத்தை வர்த்தகத்துறை அமைச்சராகவும் வைத்துக் கொண்டு தான் பல மாயாஜாலங்களைச் செய்தார். இந்த குழுவுக்கு முதுகெலும்பாக இருந்தவர் மான்டேக் சிங் அலுவாலியா.
பிரதமர் மன்மோகன் சிங்கின் வலது கரமான இவர் திட்டக் கமிஷன் துணைத் தலைவராக உள்ளார். இவரும் சி.ரங்கராஜன் மாதிரியே முழு பொருளாதார வல்லுனர் தான். அரசியல்வாதி இல்லை. இதனால் நாட்டுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை பட்டவர்த்தனமாக சொல்லிவிடும் இயல்புடையவர். மானியங்களைக் கட்டுப்படுத்தி அரசின் செலவைக் குறைத்து அந்தப் பணத்தை நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சிக்குப் பயன்படுத்தச் சொல்பவர். பெற்றோல், டீசலை விலையை மானியத்தைக் கொடுத்து குறைக்க வேண்டியதில்லை என்பவர். இவர் சொன்னதில் பல விடயங்களை மன்மோகன் சிங்கால் கேட்க முடியவில்லை. காரணம், அரசியல். இவர் சொன் னபேச்சைக் கேட்டிருந்தால் இப்போது நாடு சந்திக்கும் பல பொருளாதார  நெருக்கடிகள் வந்தே இருக்காது. இவர் நிதியமைச்சரானால் பங்குச் சந்தைகளில் பணம் புரண்டோடும் என்கிறார்கள். அந்த அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக இருப்பார். ஆனால், காங்கிரஸுக்கு  ஓட்டுகள் அல்லவா புரண்டு ஓட வேண்டும்...
ஜெய்ராம் ரமேஷ்:
சுரன்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் எல்லோருக்குமே நண்பர். முதலீட்டாளர்களுக்கு ஆதரவான, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவான நபர் தான் என்றாலும் பக்கா அரசியல்வாதி.
கடந்த 2 முறையும் மத்தியில் காங்கிரஸ் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர். சோனியாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். பா.ஜ.க. ஆட்சியின் கடைசி ஆண்டில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த போது, “இந்தியா ஒளிர்கிறது’ என்று ஒரு போலி பிரசாரம் முன்வைக்கப்பட்டு கோடிக்கணக்கான பணம் செலவில் டி.வி., பத்திரிகைகளில் விளம்பரம் வந்தபோது அதை சமாளிக்க சோனியாவால் உத்தரவிவிடப்பட்ட நபர் ஜெய்ராம்.
“காங்கிரஸ் கா ஹாத்... ஆம் ஆத்மி கே சாத்’ (காங்கிரஸின் கை எப்போதும் சாதாரண மக்களுடனே கைகோர்த்து நிற்கும்... இது எனக்குத் தெரிந்த இந்தி என்று பிரமோத் மகாஜனும் வெங்கய்யா நாயுடுவும் டிவியில் மாறி மாறி பேசி வெறுப்பேற்றி வந்த நிலையில் மிக அமைதியாக முன்வைக்கப்பட்ட “காங்கிரஸ் கா ஹாத்’ ஆம் ஆத்மி கே சாத்’ கோஷம் ஏழைகளை காங்கிரஸ் பக்கமாகத் திருப்பியது.
இதையடுத்து கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போதும் காங்கிரஸ் பிரசாரத்துக்குத் தலைமை தாங்கினார் ரமேஷ். இதற்காக மத்திய அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு வந்தார்.
கையை மடித்துவிட்ட வெள்ளை ஜுப்பா, நுனி நாக்கு ஆங்கிலம், அலைபாயும் வெள்ளை முடி, லேட்டஸ்ட் டெக்னாலஜியைப் பயன்படுத்துவதில் முன்னோடி, பஞ்சாயத்து ராஜ் விவகாரங்களிலும் சர்வதேச பொருளாதார விவகாரங்களிலும் அலாதி ஆர்வம், சர்வதேச சுற்றுச்சூழல் சட்டங்களில்  தீவிர ஞானம், சுற்றுச் சூழல் விவகாரங்களில் எந்த நாடுடனும் மோதும் திறன் என எல்லாம் தெரிந்த எல்லாம் கலந்த மேதாவி தான் ஜெய்ராம் ரமேஷ்.
அரசியலும் தெரியும், டெக்னாஜியும் தெரியும், நிதி விவகாரங்களும் அத்துப்படி. ஆனால், ஓவராக ரூல் பேசுவார். சட்டப்படி தான் எல்லாம் என்பார். தவறு செய்தால் சொந்தக் கட்சி முதல்வரையே விமர்சிப்பார், நல்லது செய்யும் எதிர்க்கட்சி முதல்வரை வெளிப்படையாகவே பாராட்டுவார்.
சுரன்

இந்தியாவில் ரூ.60,000 கோடியை நிலக்கரித்துறையில் முதலீடு செய்ய வந்த வேதாந்தா நிறுவனத்துக்கு சுற்றுச் சூழல் விதிகளைக் காட்டி ஏராளமான தடைகளைப் போட்டார் ரமேஷ். இதனால் இவர் மீது முதலீட்டாளர்களுக்கு கோபம் உண்டு. இவரது செயல்களால் கடுப்பான பிரதமர் இவரை ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றினார். ஆனால், அதிலும் தன்னால் முடிந்த அளவுக்கு மாற்றங்களைக் கொண்டு வந்தவர். கார்களுக்கான டீசல் விலையைக் குறைக்கக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளவர்.


நன்றி:தினக்குரல், 

வியாழன், 28 ஜூன், 2012

வடக்கு தேய்கிறது.


இலங்கையின் வடபகுதியில்தமது சொந்த மண்ணில் வாழும் தமிழ் மக்களை வெளியேற்றி அவர்களின் நிலங்களை இந்தியா, மற்றும் அமெரிக்க கம்பனிகளுக்கு விற்பனை செய்வதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் பின்னணியில்இருந்து இந்தியாவே செய்கிறது. அதன் பலத்துடன் தான் இந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
சுரன்

தமிழ் மக்களை அழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா இன்று அவர்கள் வாழ்ந்த சொந்த இடங்கள்,நிலங்களையும் பறித்து வருகிறது. வடபகுதியில் சிங்கள மக்களையும் குடியேற்றுவோம் என்ற “மாயையை’ தென்பகுதியில் அரசாங்கம் அரங்கேற்றுகின்றது.
ஆனால் இதில் உண்மையில்லை. இந்திய, அமெரிக்க கம்பனிகளுக்கு காணிகளை விற்றுவிட்டு எஞ்சிய நிலங்களில்இலங்கை இராணுவத்தினரைக் குடியேற்றும் திட்டமேஈலங்கை அரசிடம் உள்ளது.

உலகின் இரண்டாவது பாலஸ்தீனமாக இலங்கையில் தமிழர்களின் வடபகுதி உருவாகி வருகிறது. 
இதற்கு இஸ்ரேலின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படுகிறது.
அதற்காகவே இலங்கையில் இஸ்ரேலிய தூதரகமும் இரகசியமாக இயங்கி வருகிறது. எனவே தமிழ் மக்கள் தங்களின் மண் மீட்புப் போராட்டத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும்.
அதன்மூலம் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.. தமிழ் மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் செய்து வருகின்றோம்.
இதை கூறியுள்ளவர் இலங்கை நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன.
சுரன்

அவர் கூறியுள்ளது போல் சமீப காலமாக சிங்களர் குடியேற்றத்துக்கு என அரசு ஈழத்தமிழர் பலரின் நிலங்களை வலுக்கட்டாயமாக வாங்கி வருகிறது.
ஈழத்தமிழர் படு கொலையில் இந்திய அரசின் கைகள் இருந்தது போல் இந்நில அபகரிப்பிலும் இந்தியா பின்னாள் இருக்கிறதா?என்பதை ஈழத்தமிழருக்காக கண்ணீர் வடிக்கும் தமிழகத்தலைவர்கள் கண்டு பிடித்து அம்பலப் படுத்த வேண்டும்.
ஏற்கனவே வடபகுதியை தங்கள் சொந்த பகுதியாக எண்ணக்கூடாது.என சிங்கள வெறியர்கள் பேசி வரும் வேளையில் கருணா ரத்ன கூறுவது உண்மையாகி விடக்கூடாது.
__________________________________________________________

டாஸ்மாக்கில் இனி கோக கோலா?

கோக்க கோலா,பெப்சி பற்றியும் அதன் விடத்தன்மையை பற்றியும் பல பதிவுகள் போட்டுள்ளோம்.ஆனால் அதை அருந்தும் போதை அடிமைகள் பலர் அதிகரித்து வருகிறனர்.
உலகம் முழுக்க தினசரி கோக கோலா அருந்துபவர்கள் எண்னிக்கை 6,00,00,000 கோடிக்கும் மேலாம்.
சுரன்

அவர்களை இப்படி தனக்கு அடிமையாக்கும் கோக கோலாவில் 10% அளவுக்கு சாராயம் அதாங்க ஆல்ஹகால் கலக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.
அதனால்தான் கோக கோலா அருந்துபவர்கள் மிதமான போதைக்கு அடிமையாகி மீண்டும்,மீண்டும் அதை அருந்தி வருகின்றனராம்.
இப்போது கோக கோலாவை மதுபான வகை பட்டியலில் சேர்த்திடலாமா என்று பிரான்ஸ் யோசனையில் உள்ளதாம்.
_____________________________________________________________

மின் வெட்டும்---

தின மலரின் ஜால்ரா தட்டும்.

மே மாதம் வரை, தமிழக மக்களுக்கு, பெரும் தலைவலியை கொடுத்து வந்த விஷயம், மின் வெட்டு. இது, தற்போது படிப்படியாக குறைந்து, பொதுமக்களை சற்று நிம்மதி பெருமூச்சுவிடச் செய்து வருகிறது. தமிழகத்தில், ஒரு சில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், 27ம் தேதி நிலவரப்படி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மின் வெட்டு என்பதே இல்லை என்ற நிலையிலும், சென்னை, மதுரை, ஈரோடு பகுதிகளில் அறிவித்தபடி மின் வெட்டும், மற்ற இடங்களில் அறிவித்ததை விட, அதிக நேரம் மின்வெட்டும் அமலில் உள்ளது.
சுரன்

இது தினமலர் செய்தி.அதிலும் நெல்லைப்பதிப்பில் வராத செய்தி.
ஜெயலலிதா அரசுக்கு லாலி பாட வேண்டியதுதான்.அதற்காக இப்படியா?
தூத்துக்குடி பகுதியில் மின் வெட்டே இல்லையாம்.
நாங்கள் இருப்பது தூத்துக்குடி பகுதிதான்.இங்கு காலை 10 மணியளவில் மின்வெட்டு ஆரம்பிக்கிறது.அது உடனேயும் வரும் இரண்டு மணி நேரம் கழித்தும் வருகின்றது.
இரவு கண்டிப்பாக பல முறை மின் வெட்டு நிகழ்கிறது.எப்படியும் இரு முறை ஒரு மணி நேர அளவில் போய் வருகிறது.
அனல் மின் நிலையப்பகுதி என்பதால் முன்பு மின்வெட்டு குறைவாக இருக்கும்.ஆனால் ஜெ ஆட்சியில் அனைவருக்கும் சமமான மின் வெட்டுதான்.
இது போன்ற செய்தியை வெளியிட்டு ஜெயலலிதாவுக்கு லாலி பாடினாலும்.தினமலருக்கும் ஒரு நாள் ஜூனியர் விகடன் போல் ஆப்பு தயாராகிக்கொண்டுதான் இருக்கிறது.
எப்படியாவது கைதவறி செய்தியை போட்டு அம்மாவை கோபப்படுத்ததான் போகிறார்கள்.அம்மா வழக்கு போடத்தான் போகிறார்கள்.
____________________________________________________

சுரன்

உப்பிட்டவர்களை உள்ளளவும் நினைத்தது அக்காலம்.
சாப்பாடு உள்ளளவும் மட்டும் நினைப்பது இக்காலம்.

கொளுத்தும் வெயிலில் ஒடி கூடை அள்ளிப்போட்டால்தான் 
இன்று உப்பிட்ட சோறு உண்ணலாம்.

காலி குத்தும் உப்புமணிகள்- கண்ணை கூசச்செய்யும் 
அதன் வெண்ணிற வெளிச்சங்கள்.

ஓடி உப்பள்ளவே நேரமில்லா நேரத்தில் பேசி பிழைப்பைக்
கெடுத்திட நேரமில்லை .இங்கு யாருக்கும்.கை பேசியால் உண்டான விபரீதமா?


    iPiccy: Loading picture
சென்னைஅண்ணா சாலையில் ஜெமினி அருகே உள்ளது அண்ணா மேம்பாலம். சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் இந்த மேம்பாலமும் ஒன்று.கருணாநிதி கட்டியது.அதனால் ஜெயலலிதாவுக்கு பிடிக்காதது. எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதி இது.
நேற்று பிற்பகல் இந்த மேம்பாலத்தின் வழியே 17 எம் என்ற பேருந்து பிராட்வேயிலிருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்தது. பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது வடபழனி செல்ல இடதுபுறமாக பஸ்சைத் திருப்பியுள்ளார் டிரைவர். அப்போது திடீரென கட்டுப்பாடு இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு கீழே விழுந்தது.
பஸ் மேலிருந்து தலைகுப்புற விழுந்ததால் பஸ்சில் இரு்ந்தவர்கள் அலறித் துடித்தனர். பஸ் மேலிருந்து விழுவதைப் பார்த்த கீழே சென்று கொண்டிருந்தவர்கள் ஸ்தம்பித்துப் போய் நின்றனர்.
இதனால் அந்தப் பகுதியே பரபரப்பாகியது. விபத்தை நேரில் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து பேருந்தையும் பயணிகளையும் மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் பலருக்கும் காயம் பலமாக இருந்தது. காயமடைந்த அனைவரும் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகதெரிகிறது. 
இந்த விபத்தின் போது பேருந்து ஓட்டுநருக்கு கைப்பேசியில் அழைப்பு வந்ததாகவும்,அவர் அதை எடுத்துக்கொண்டே ஓட்டியதால் சரியாக வளைவில் திருப்ப இயலாமல் விபத்து ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.
அப்படி நடந்திருந்தால் அந்த ஓட்டுநர் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாகனங்களில் செல்லும் போது கைப்பேசியில் பேசக்கூடாது.அதிலும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் கைப்பேசியை உடன் கொண்டு செல்லக்கூடாது என்றெல்லாம் இருக்கும் போது இவர் கொண்டு சென்றதுடன் பேசவும் முற்பட்டு இவவளவு பெரிய விபத்தை ஏற்படுத்தியதுக்கு கொலை முயற்சி,கொலைக்கு திட்டமிடல் போன்ற வழக்குகளின் பிரிவுகளில்தான் இவருக்கு தண்டனை வழங்க வேண்டும்.
அதுதான் மற்ற ஓட்டுநர்களுக்கும் பாடம் கற்றுத்தரும்.
ஒருவர் பாலத்தின் உறுதித்தன்மையை பரிசோதிக்க வேண்டும் அதனால் விபத்து உண்டாகியிருக்கலாம் .என எழுதியிருக்கிறார்.வேடிக்கையானது. ஆடத்தெரியாதவர்கள் மட்டுமின்றி -வாகனம் ஓட்டத்தெரியாதவர்களும் தெருவை கோணம்-பாலம் கோணம் என்று ஆரம்பிப்பது சரியா?
எற்கனவே அது கருணாநிதி கட்டிய பாலம் இந்த விபத்துக்கு அதை கட்டிய அவர்தானே மூலக் காரணம்.அவர் சிறை நிரப்பும் முன் அவரை பிடித்து உள்ளே போட அம்மாவிடம் சொல்லுங்கள்.

புதன், 27 ஜூன், 2012

இவர் அவரில்லை ...?


சுரன்
வெளிவருவது இவரல்ல.

பாகிஸ்தானின் உள்ளடி வேலைகளால் பஞ்சாப் மக்களின் மகிழ்ச்சியில் மிக குழப்பம்.
பாக் சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் வாடும் சரப்ஜித் சிங் விடுதலை என்று செய்தியை பாகிஸ்தான் வெளியிட்டது.
சரப்ஜித் சிங் 1990 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டிருந்தார் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
அந்தத் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 14 பேர் பலியானதாக பாகிஸ்தான் கூறியது.
எனினும் தான் குற்றமற்றவர் என்றும், தவறுதலாக தான் கைது செய்யப்பட்டதாகவும் சரப்ஜித் சிங் தொடர்ந்து வாதாடி வந்தார்.
அவர் ஆயுள் தண்டனை காலத்தை நிறைவு செய்திருந்தால், அவரை விடுவிக்கும்படி அதிபர் ஸர்தாரி உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பாகிஸ்தானின் சட்ட அமைச்சர் ஃபரூக் நேயக் அவரை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்தை கேட்டுள்ளார் எனவும் பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
சரப்ஜித் சிங் லாகூர் நகரிலுள்ள கொட் லக்பட் சிறைச்சாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளார்.

அவர் சிறையிலிருந்து விடுதலையாவது தவிர்க்க முடியாததாகி விட்டது.
இந்திய நீதிமன்றம் ஒன்று, அண்மையில் பாகிஸ்தானின் நுண்ணுயிர் விஞ்ஞானியான முகமது கலீல் சிஸ்தியை மனிதாபிமான அடிப்படையில் விடுவித்திருந்து குறிப்பிடத்தகுந்தது
சுரன்


கிட்டதட்ட 30 ஆண்டுகளால் வெடி குண்டுவைப்பு வழக்கில் தவறுதலாக உள்ளே வைக்கப்பட்ட தங்கள் சரப்ஜித் சிங் தான் வருகிறார் என்று இரவு முழக்க பாட்டு-ஆட்டம்-வெடி என்று மகிழ்வுடன் கொண்டாடப்பட்டது.
ஆனால் காலையில் நாங்கள் கூறியது அவரல்ல சுர்ஜித் சிங் என்றஇவர் பெயர் குழப்பம்  என்று ஆளை மாற்றி காண்பித்துள்ளது.பஞ்சாப் காரர்களின் மகிழ்வு அனைத்தும் வடிந்து விட்டது.
அந்த சர்ப்ஜித் சிங் தூக்குத்தண்டனை பெற்றவர்.இவர் ஆயுள்தண்டனை பெற்றவர்.இருவருமே 30 ஆண்டுகள் பாக் சிறையில் வாழ்ந்துள்ளன்ர.
இவர் வெளிவருவதில் மகிழ்ச்சிதான்.ஆனால் கொண்டாட்டங்கள் எல்லாம் அவருக்குத்தானே.அவரை வெளிக்கொணரத்தானே அரசும்,பஞ்சாப் சிங்[கங்]களும் போராடினர்.
அது சரி .பாகிஸ்தானில் இன்னும் எத்தனை சரப்ஜித் சிங்-சுர்ஜித் சிங்குகள் சிறையில் இருக்கிறார்கள்.முதலில் அதை சொல்லுங்கப்பா?


=====================================================================
இந்தியாவில் இப்போது பொருளாதார சிக்கல் ஆரம்பமாகி இருக்கிறது.ஆனால் ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளில் ஏற்கனவே சிக்கல் இருக்கிறது.
பிரிட்டனைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் இணையத்தளம் மூலம் 20 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்களுக்கு தன்னைத்தானே ஏலத்தில் விற்பனை செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சுரன்


ஒரு மாத காலத்திற்குள் தான் வேலையை இழக்கப்போவதாலேயே அன்டி மார்ட்டின் தன்னை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது ஏலத்திற்கான காலவரையறை 30நாட்களாக நிர்ணயித்துள்ளார். மார்ட்டின் தனது எதிர்கால பொருளாதார தேவைகள் கருதியே தன்னைத் தானே ஏலத்தில் விடத் தீர்மானித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
நான் தொழிலை இழக்கும்போது மற்றவர்களிடம் தங்கிவாழ வேண்டிய நிலை ஏற்படும்.அந்நிலையை தவிர்க்கவே என்னையே ஏலமிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கழிவு முகமைத்துவ நிறுவனத்தில் போக்குவரத்து திட்ட அதிகாரியாக தற்போது மார்டின் பணியாற்றுகிறார்.


இவரை ஏலத்தில் எடுப்போர் தங்கள் விருப்பம் போல் வேலை கொடுக்கலாம்.
இது ஒரு வேலையை முன் பணத்துடன் செய்வதற்கு ஒப்பம்தானே.


ஆனால் அடிமை முறை ஒழிக்கப்பட்ட இங்கிலாந்து சட்டம் இப்படி அடிமை போல் விலைக்கு மனிதனை வாங்குவதை ஒப்புக்கொள்ளுமா?
=========================================================================================================================================
சுரன்

திங்கள், 25 ஜூன், 2012

தனியே தன்னந் தனியே ....,


"லோன்சம் ஜார்ஜ்" முதலில் 1972ல் கேலப்பகோஸ் தீவான பிண்டாவில் ஒரு ஹங்கேரிய நாட்டு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது.
லோன்சம் ஜார்ஜ் ஒரு ஆமை.இது அதன் இனத்திலேயே கடைசியான ஒன்றே ஒன்று என்பதாலே லோன்சம் என்ற பெயர்,

அப்போதெல்லாம், இந்த வகை ஆமைகள் அழிந்து விட்டதாகவே பலரும் கருதியிருந்தனர்.
லோன்சம் ஜார்ஜ் இந்த தேசியப் பூங்காவின் ஆமை விருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டது.
சுமார் 15 வருடங்கள் ஒரு பெண் ஆமையோடு சேர்ந்து வாழ்ந்த பின்னர், ஒரு வழியாக லோன்சம் ஜார்ஜ் அந்தப் பெண்ணோடு சேர்ந்தது.
ஆனால் அந்தப் பெண் ஆமை பொரித்த முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவரவில்லை.
லோன்சம் ஜார்ஜ் இறந்ததை அடுத்து, அந்த பிண்டோ உட்பிரிவு ஆமைகள் இல்லாதொழிந்து விட்டதாக கேலப்பகோஸ் தேசியப் பூங்கா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இது போன்ற பெரிய ஆமை ரகங்கள் கேலப்பகோஸ் தீவுகளில் 19ம் நூற்றாண்டின் பிற்காலம் வரை மிகவும் அதிகமாகக் காணப்பட்டன.
ஆனால் சுவையான இதன் இறைச்சிக்காக மீனவர்கள் இந்த ரக ஆமைகளை வேட்டையாடிதன் விளைவாக அவை மிகவும் அரிதாகிவிட்டன.
அவை வாழும் இடங்களில் , எக்வடோர் பெருநிலப்பரப்பிலிருந்து, ஆடுகளை அறிமுகப்படுத்திய பின்னர், அவைகளின் வசிப்பிடங்கள் மேலும் பாதிப்படைந்தன.
சுரன்
கேலப்பகோஸ் தீவுக்கூட்டங்களில் இருக்கும் பல்வேறு தீவுகளில் காணப்பட்ட வெவ்வேறு ஆமையினங்களின் தோற்றங்களை வைத்துத்தான், பிரிட்டிஷ் இயற்கை விஞ்ஞானியான சார்லஸ் டார்வின், பிரபலமான தனது பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை உருவாக்கினார்.
கேலப்பகோஸ் தீவுகளில் மற்ற ஆமையின உட்பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 20,000 ஆமைகள் இன்னும் வாழ்கின்றன.
இப்போது இறந்த லோன்சம் ஜார்ஜ் இன ஆமைகளின் சராசரி வயது காலம் 250 ஆனால் ஜார்ஜுக்கு 100 வயதுதான் ஆகிறது.இவ்வளவு இளமையில் இறப்புக்கான காரணம் தெரியவில்லை.குட்டைக்குப் போகு படிக்கட்டுகளில் இந்த கடைசி ஆமை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒருவேளை தனிமையின் கொடுமையில் இறந்திருக்கலாமோ.? 
உலகில் இருந்து பல இனங்கள் அழிந்து கொண்டே வருகிறது.பல இனங்கள் அழிவுக்கு மனிதன் காரணமாக இருந்திருக்கிறான்.
கடைசியில் அழியும் இனமாக மனிதன் தான் இருப்பனா?
_____________________________________________________________________________
அண்மை ஆய்வுகளின்படி உலகில் உள்ள மதங்களைப் பின்பற்றுவோர் பட்டியல்.
1. கிறித்துவர்கள் : 2.1. பில்லியன் (210 கோடி)
2. இசுலாமியர்கள்: 1.3 பில்லியன் (130 கோடி)
3. நாத்திகர்கள்: 1.1. பில்லியன் (110 கோடி)
4. இந்துக்கள்: 900 மில்லியன் (90 கோடி)
5. சீனாவின் பழைமைவாய்ந்த மதங்கள்: 394 மில்லியன் (39.4 கோடி)
6. புத்தமதம்: 376 மில்லியன் (37.6 கோடி)
7. பிரைமல் இன்டிஜினியஸ்: 300 மில்லியன் (30கோடி)
8. ஆப்பிரிக்காவின் பழைமையான மதங்கள்:  100 மில்லியன் (10 கோடி)
9. சீக்கியர்கள்: 23 மில்லியன் (2.3 கோடி)
10. ஜுக்: 19 மில்லியன் (1.9 கோடி)
11. ஸ்பிரிடிசம்: 15 மில்லியன் (1.5 கோடி)
12. ஜுடாய்சம்: 14 மில்லியன் (1.4 கோடி)
13. பஹாய்: 7 மில்லியன் (70 லட்சம்)
14. ஜைனமதம்: 4.2 மில்லியன் (42 லட்சம்)
15. ஷின்டோ: 4 மில்லியன் (40 லட்சம்)
16. கா டோய்: 4 மில்லியன் (40 லட்சம்)
17. ஜோரோஸ்டிரினிசம்: 2.6 மில்லியன் (26 லட்சம்)
18. டென்ரிக்யோ: 2 மில்லியன் (20 லட்சம்)
19. நியோ-பக்னிசம்: 1 மில்லியன் (10 லட்சம்)
20. யுனிட்ரியன்-யுனிவர்சலிசம்: 8 லட்சம் பேர்
21. ராஸ்டாஃபாரினிசம்: 6 லட்சம் பேர்
22. சயின்டாலஜி: 5 லட்சம் பேர்
இந்த ஆய்வின்படி உலகில் கடவுள் நம்பிக்கையற்று நாத்திகம் பேசுபவர்கள், எந்த மதத்தையும் பின் பற்றாதவர்கள்,110கோடி பேர் உள்ளனர், உலகளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்கள் என்று இந்த ஆண்டு வெளிவந்துள்ள மனோரமா இயர் புக் [2012]கில் உள்ளது.
தகவல்: மருதூர் சு.செம்மொழிமணி


சுரன்

ஞாயிறு, 24 ஜூன், 2012

அந்த மூன்று நாட்கள்....?


சுரன்

வணக்கங்கள்.
இதுவரை தினசரி ஏதாவது இடுகைகளை "சுரன்"-ல் எழுதி வந்துள்ளேன்.
இப்போது இருநாட்கள் விடுப்பு தேவைப் படுகிறது.
காரணம் நீர்க்கோவை தான்.சிவந்த மூக்கும்-நனைந்த கைக்குட்டையுமாக இருக்கிறேன்.[பயம் வேண்டாம்.இணையம் மூலம் இன்னமும் சளிக்கான வைரசை பர்ப்ப இதுவரை முடியவில்லையாம்]
பொதுவாகவே எந்த நோயையும் அதுவாகவே சரியாகட்டும் என்று விட்டு வேடிக்கைப்பார்ப்பது எனது பழக்கம்.மருந்து ,மாத்திரைகள் உட்கொள்வது கிடையாது.அதிலும் அலோபதிக்கு தடா.
சுரன்

ஒமியோபதி,ஆயுர் வேதம்,சித்த மருந்துக்கள்தான் கொடுரமான தாக்குதல்களில் உட் கொள்வேன்.
மற்றபடி காய்ச்சல் என்றால்காலையில் வழமை போல் எழுந்து குளிந்த்து விட்டு நடுக்கத்துடன் தலையை துவட்டி விட்டு அலுவலகம் கிளம்பி விடுவேன்.அலுவலகம் போய்சேருவதற்குள் காய்ச்சலா?யாருக்கு? என்றாகி விடும்.
சில வேளைகளில் அலுவலகத்துக்கு மட்டம் போடும் ஆசை வந்து விடும்.அப்போதுதான் விடுப்பு.மற்றபடி காய்ச்சலுக்கு என்று இடுப்பு போட்டதில்லை.
என்னை பார்த்து எனது மகன் உட்பட குடும்பத்தாரும் காய்ச்சலைக் கண்டு கொள்வதில்லை.
ஆனால் இப்போது நீர்க்கோவை அதுதான் ஜல்ப் .இது மூக்கில் இருந்து நீரை வடித்தால் மட்ட்ம் பரவாயில்லை.துடைத்துக்கொண்டே ஒருகையால் இடுகை ஏதாவது போட்டிடலாம்.
தலை,பிடரியோடு சேர்த்து வலி.எரிச்சலாக வருகிறது.[மனைவிஎன் நிலையை கண்டு அருகில் வருவதில்லை.அவள் பயம் அவளுக்கு]
சுரன்

இந்த எரிச்சலில் இடுகைகளில் எதாவது கோபம்-தாபத்துடன் செய்து விட்டால்?
நீர்க்கோவை ஆங்கில மற்றைய மருந்துக்களுக்கு வெறும் மூன்று நாட்களில் குணமாகி விடுமாம்.
ஒரு மருந்தையும் உட்கொள்ளாவிட்டால் மூன்றுறுறு நாட்களான பின் தான் தானே குணமாகிவிடுமாம்.[சயம் போன்ற காலங்களில் இது தவறாகி விடும்]


தானே குணமாகிவிடும் வரை ஒருகை பார்த்து விடுவது என்று இருக்கிறேன்.

மற்றபடி.நீங்களும் ஆங்கில மருந்துக்கள் பாரசிட்டமால்"போன்றவற்றை எதெற்கெடுத்தாலும் போடு வழமையை விடுங்கள்.

நோய் எதிர்ப்பு என்பது நம் உடலில் இயற்கையாக உள்ளது.மிருகங்கள் ,எந்த கடையில் பாரசிட்டமால் வாங்குகிறது.எந்த டாக்டரை பார்த்து இசிஜி,ஸ்கேன்,எடுத்துக்கொள்கிறது?
நோயை உள்ளே வர விட்ட நம் உடலே அதை அடித்து விரட்டவும் செய்து விடும்.
அதற்கு தகுந்தாற்போல் நாம் நடந்து கொள்ளவேண்டும்.அவ்வளவுதான்.
இன்னும் இரு நாட்களில் நீர்க்கோவை சரியாகி விடும் என்ற நம்பிக்கையில்

உங்கள் நண்பன்.
சுரன்சனி, 23 ஜூன், 2012

வாதமும் -பிடிவாதமும்


குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான சங்மா மற்றொரு வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை பொருளாதாரம் பற்றி விவாதம் நடத்த கூப்பிட்டுள்ளார்.இந்த விவாதத்தை பிரணாப் நிதியமைச்சர் ஆகும் முன்பு நடத்தியிருக்க வேண்டும்.
சுரன்
இது ரொம்பதாமதம்.இந்திய பொருளாதாரம் குழிக்குள் போன பின் தேவையா?அதன் பின் சங்மா கூறியது மிக முக்கியமான தகவல்.அவர் இதுவரை எந்ததேர்தலிலும் தோற்ற தாக சரித்திரம்-பூகோளம் எதுவும் கிடையாதாம்.அதற்காக கவலை வேண்டாம் .குடியரசுத்தேர்தலில் அதற்கு ஒரு முடிவு கிடைத்து விடும் என்று தெரிகிறது.மனசாட்சி படிதானே வாக்களிப்பார்கள் நான் வென்று விடுவேன் என்றும் சங்மா கூறியுள்ளார்.ஒரு அரசியல்வாதியாக இருந்து கொண்டு மனசாட்சியை எல்லாம் இன்னமும் நம்புகிறார்.இவர் இதற்கு சரிபட்டு வரமாட்டார்.பிரனாப்புடன் விவாதம் செய்வதை விட குடியரசுத்தலைவர் போட்டியில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று பிடிவாதம் செய்யாமல் இருந்தால் நல்லது.
____________________________________________________________________________________________________

ஜெர்ரி சான்டஸ்கி ன்னாள் கால்பந்து பயிற்றுவிப்பாளர் .இவர் 45 க்கும் மேற்பட்ட பாலின முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.

இப்போது குற்றம் நிருபனமாகி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.மொத்தம் 440ஆண்டுகள் அவர் சிறையில் காலந்தள்ள விதிக்கப்பட்டுள்ளார். அவர் சரியாக 440 ஆண்டுகள் சிறையில் இருந்தாரா என்று பார்க்க ஆள் நியமித்தாகி விட்டதா?
_____________________________________________________________________________________________________

தங்கம் வந்தது எப்படி?
=====================
தங்கம் போன்ற அதிக விலைமதிப்பு வாய்ந்த கனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.

இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது. 
சுரன்

இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அனுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
இப்போதைய தங்கம் விலை அதிகரிப்புக்கு இன்னொரு மோதல் வந்தால்தான் விலை குறையும் என்று தெரிகிறது.
பொதுவாக சைக்கிள்களில் செல்பவர்கள் குறைந்தபட்ச வேகத்திலேயே செல்ல முடியும். ஆனால், 80 கி.மீ., வேகத்திலும் செல்லலாம் என்று சவால் விட்டுள்ளது, ஆடி கார் நிறுவனம். இந்த நிறுவனம், இ - பைக் என்ற பெயரில் ஒரு சைக்கிளை உருவாக்கியுள்ளது. ரேஸ் கார்களுக்கு இணையாக, இந்த சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.


 இதை சாதாரண சைக்கிள் போல, கால்களால் பெடலை மிதித்தும் ஓட்டலாம். இரண்டாவதாக, எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்கும் போது, அதிகபட்சமாக, மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் செல்லும். மூன்றாவதாக, பெடல் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் என இரண்டு வசதியையும் பயன்படுத்தும் போது, மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் சிட்டாக பறந்து செல்லும். இந்த சைக்கிளில், ஸ்மார்ட்ஃபோன் வடிவில் ஒரு கம்ப்யூட்டரும் பொருத்தப்படடுள்ளது. சைக்கிள் ஓட்டியின் ஹெல்மட்டில், பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் படங்கள் எடுத்து, இந்த கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொள்ளலாம். இத்துடன், இணைய தள வசதியையும் பயன்படுத்த முடியும்.
______________________________________________________________________


சுரன்
தலைப்பைச் சேருங்கள்


வெள்ளி, 22 ஜூன், 2012

நானே வர வேண்டுமா...?


மதுரை ஆதீன மட வளாகத்தில் புனித நீரைக் குடித்து விட்டு மதுரை ஆதீனம், நித்தியானந்தா, வைஷ்ணவி உள்ளிட்டோரும், ஆண்களும், பெண்களும் நடனம் ஆடியது தொடர்கஇந்து மக்கள் கட்சி சார்பில் சோலைக்கண்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
சுரன்
அவர் அதில், மதுரை ஆதீனம் என்னை மடத்திற்கு அழைத்திருந்தார். பிறகு அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் என்னை கலந்து கொள்ளக் கூறினார்கள்.
அப்போது புனித நீர் என்ற பெயரில் போதை கலந்த பானத்தை அங்கிருந்தவர்களுக்கு கொடுத்தார்கள், எனக்கும் கொடுத்தார்கள். அடுத்து நித்தியானந்தாவும், ஆதீனமும் மூன்றுக்கும் மேற்பட்ட புலித்தோலை கீழே போட்டு அதில் அமர்ந்திருந்தனர். அங்கு யானைத் தந்தங்களும் இருந்தன. அதன் பிறகு நித்தியானந்தா, மதுரை ஆதீனம், ஆதீனத்தின் பெண் உதவியாளர் வைஷ்ணவி மற்றும் ஆண்களும், பெண்களும் போதையில் நடனம் ஆடினர் கேட்டால் ஆனந்த நடனம் என்றனர்.
இந்த நடவடிக்கையால் மதுரை ஆதீனத்தின் புனிதம் கெட்டு விட்டது. ஆதீனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. 
இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். 
சுரன்
ஆனால், இன்றுவரைஎனது புகாரின் மீது அவர்கள் நடவடிக்கை எதையும் எடுக்காமல் உள்ளனர். புகாரைப் பதிவு செய்யவும் இல்லை.
காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திட அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்.மேலும் புலித்தோல்,மான்தோல்,யானைத்தந்தம் வைத்து அலங்கரித்திருந்தனர்.அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைதும் செய்ய வேண்டும்"என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி செல்வம், மதுரை ஆதீனம், நித்தியானந்தா, வைஷ்ணவி உள்ளிட்ட 6 பேர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஜூன் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். 
இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி செல்வம், புகாரில் முகாந்திரம் இருக்கிறது. எனவே உடனடியாக போலிசார் உடனே  வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் அதைச் செய்யஇனியும்  மறுத்தால் நானே வந்து வழக்குப் பதிவு செய் வேன்.அது தேவையா?"என்று கோபத்துடன் கூறினார்.
உயர்நீதிமன்றக்கிளை அனுப்பிய அழைப்பாணையை வாங்க மதுரை ஆதீனம் அருணகிரி மறுத்து விட்டார். நித்தியானந்தாவும், வைஷ்ணவியும் வாங்கியுள்ளனர்.
சுரன்

கர்நாடக காவல் துறையினர் நித்தியானந்தா மீதான குற்ற சாட்டுகளின் மீது நடவடிக்கைகள் எடுக்கும் போது தமிழ் நாடு காவல் துறையினர் நித்தியானந்தா மீது கூறப்படும் குற்ற சாட்டுகளை கண்டு கொள்ளாமல் இருக்க காரணம் என்ன வென்று தெரியவில்லை.மேலிடம் அவருக்கு ஆதரவாக இருக்கிறதோ?
இப்போது கூட ஒரு வார இதழில் மதுரை ஆதினத்தில் கார்களில் கன்னியர் இறங்குவதும் ,போவதுமான காணொளியைப்பற்றி செய்திகள் வந்துள்ளது.ஆனால் ந்மது காவல்துறை மற்றோரு பிடதியாகி விட்டதோ என்ற சந்தேகம் வருகிறது.புனித நீர் நித்தியானந்தா அனைவருக்கும் விநியோகிக்க ஆரம்பித்தால் அரசுக்கு வருமானம் தரும் டாஸ்மாக் கடும் நட்டத்தை சந்திக்க வேண்டியது வரும்.அதற்காவது நடவடிக்கை எடுக்க கூடாதா?
சுரன்

புண்ணியவதி..............,


ஓவ்வொரு குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து விடைபெறும்போது, அவர்களது பதவிக்காலத்தில் நிகழ்த்திய சாதனைகள் என்று சொல்லிக் கொள்ள ஒரு சில முக்கியமான நிகழ்வுகள் இருக்கும். சுதந்திர இந்தியாவின் 12-வது குடியரசுத் தலைவராக ஐந்தாண்டுகள் பதவி வகித்துவிட்டு விடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முதல் பெண்மணி என்கிற பெருமைக்குரிய பிரதிபா பாட்டீலின் சாதனை பெருமிதப்படத் தக்கதுதானா என்பதில்தான் நமக்குச் சந்தேகம் ஏற்படுகிறது.


கொலைக் குற்றவாளி உள்ளிட்ட எந்தக் குற்றவாளியாக இருந்தாலும் அவருக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. சாதாரணமாக, குடியரசுத் தலைவர்களாகப் பதவி வகித்தவர்கள் அனைவருமே, கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவின் மீது முடிவெடுப்பதில் மிகுந்த எச்சரிக்கை காட்டி வந்திருக்கிறார்கள். முந்தைய குடியரசுத் தலைவர்களில் கே.ஆர். நாராயணன் ஒரு குற்றவாளிக்குக்கூட மன்னிப்பு வழங்கவில்லை. அப்துல் கலாம் இரண்டு பேருக்கு மட்டும் மரண தண்டனையை ரத்து செய்யக் கையொப்பமிட்டார்.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் சாதனை, இதுவரை பதவி வகித்த எந்தவொரு குடியரசுத் தலைவரும் செய்யாத சாதனை, கடந்த 28 மாதங்களில் 30 தூக்குத் தண்டனைக் கைதிகளுக்குக் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவர்களது தண்டனையை ஆயுள் தண்டனையாகச் சுருக்கி இருப்பதுதான். 
இந்திய வரலாற்றில் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனைக் கைதிகளில் 90 விழுக்காடு பேர் பிரதிபா பாட்டீலுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள். உண்மையிலேயே பெரிய சாதனைதான் இது!


பிரதிபா பாட்டீலால் மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் தூக்குத் தண்டனைக் கைதிகள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்த்தால் அதைவிடத் திடுக்கிட வைக்கிறது .திகைக்கவைக்கிறது.அவர்கள் நிச்சயம் இந்தியாவில் மனிதர்களாக வாழ த்குதியற்ற மிருகத்தை விடகொடுரமானவர்கள்.
பிரதிபா பாட்டீலால் மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் 30 பேரில் 22 பேர் கொடூரமான கூட்டுப் படுகொலை, கதறக் கதறக் கற்பழிப்பு, குழந்தைகளை ஈவு இரக்கமின்றிக் கொல்வது, சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவும், கிரிமினல் குற்றங்களுக்காகவும் சிறைச்சாலைக்குப் போவதைப் பொழுதுபோக்காகக் கொள்வது போன்றவற்றில் ஈடுபட்டவர்கள்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகைச் சேர்ந்த ஒன்பது வயது பாலகன் சிர்க்கு பேஸ்ரா. அவனைக் காணவில்லை என்று பெற்றோர் தேடிக் கொண்டிருக்க, 1996-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி சுசீல் முர்மு என்பவன் அந்தச் சிறுவனைக் கடத்திக் கொண்டுபோய், காளி தேவிக்குப் பலி கொடுத்துப் பூஜை நடத்தி இருக்கிறான். பிறகு அந்தச் சிறுவனின் சடலத்தை ஒரு சாக்குப் பையில் கட்டி ஒரு ஏரியில் வீசி எறிந்திருக்கிறான். இது ஒன்றும் முர்முவுக்கு முதல் கொலை அல்ல. அவன் ஏற்கெனவே தனது சகோதரனையே காளிக்குப் பலி கொடுப்பதற்குக் கொன்றிருப்பவன்.
2004-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் "இது மனித குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றம்' என்று குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்ட சுசீல் முர்முவின் தூக்குத் தண்டனையை கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி, பிரதிபா பாட்டீல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நரேந்திர யாதவ் 15 வயது சிறுமி ஒருத்தியைக் கற்பழிக்க முயற்சித்திருக்கிறான். அவள் தப்பி ஓடிவிட்டாள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாத நரேந்தரும் அவனது நண்பன் தர்மேந்திர சிங்கும், 1994-இல் அந்தக் குடும்பத்தையே கொன்று குவித்து விட்டனர். அந்த 15 வயது சிறுமியும் பெற்றோரும் தலை வேறு உடல் வேறாக வெட்டிச் சாய்க்கப்பட்டனர். அந்தச் சிறுமியின் 10 வயது சகோதரன் உயிருடன் எரிக்கப்பட்டான். கொலைகாரர்கள் இருவருக்கும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஜூன் 2010-இல் மன்னிப்பு வழங்கிப் புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறார்.
பிரதிபா பாட்டீலால் தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கும் பெருவாரியான பேர்கள் நமது ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரமான கொலைகளை ஈவு இரக்கமில்லாமல் செய்திருப்பவர்கள். இவர்களுக்குக் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கக் குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு என்பதற்காக, 28 மாதங்களில் 30 கொலையாளிகளின் தூக்குத் தண்டனையை ரத்து செய்திருக்க வேண்டுமா என்ன?


ஒரு குற்றத்தின் பல்வேறு அம்சங்களையும், சாட்சிபூர்வமான ஆதாரங்களையும் அலசி ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவதுடன் நீதிமன்றத்தின் வேலை முடிந்து விடுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிபாரிசின் பேரில்தான் குடியரசுத் தலைவர் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்குகிறார் என்றாலும், மன்னிப்பு வழங்காமல் தவிர்க்கும் உரிமை நிச்சயமாகக் குடியரசுத் தலைவருக்கு இருக்கத்தானே செய்கிறது.
அரசியல் சட்டத்தில் 72-வது சட்டப் பிரிவு, தூக்குத் தண்டனை உள்ளிட்ட எந்தவொரு தண்டனையையும் நிறுத்தி வைக்கவோ, குறைக்கவோ, ரத்து செய்யவோ, மன்னிப்பு வழங்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கி இருக்கிறது. அப்படியானால், குடியரசுத் தலைவரோ அவருக்கு வேண்டியவர்களோ, விலைபேசப்பட்டு அந்த அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் கேள்வி முறையே கிடையாதா?
ஏன் கிடையாது? நிச்சயமாக உச்ச நீதிமன்றத்துக்கு அதற்கான அதிகாரம் உண்டு. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலால் மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் கருணை மனுக்கள் தொடர்பான எல்லா ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் கோரி இருப்பதாகத் தெரிகிறது. 


குடியரசுத் தலைவரேயானாலும் மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்பட்டால், அதைக் கேள்வி கேட்கும் உரிமை உச்ச நீதிமன்றத்துக்கும், மக்கள் மன்றத்துக்கும் உண்டு என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
மிக அதிகமான கொலைகாரர்களுக்கும், சமூகவிரோதிகளுக்கும் தூக்குத் தண்டனையிலிருந்து கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி சாதனை புரிந்திருக்கும் பிரதிபா பாட்டீல், நிச்சயமாக நினைவுகூறப்படுவார். 
குற்றவாளி கொலை காரர்களாலும்-அவர்களின் கொடுரத்தில் உயிர்களை இழந்தவர்கள் குடும்பத்தாலும்.இதை அநியாயம் என்று உணர்ந்த இந்திய மக்களாலும்.
நன்றி;தினமணி