டெசோ -வும் சோபிதரும்

கருணாநிதியின் டெசோ மாநாடு ஒன்றும் செய்யப்போவதில்லை .இங்குள்ளவர்கள் கருத்து இதுதான்.
ஆனால் பக்‌ஷே அரசில் உள்ளவர்கள் கொஞ்சம் பயப்படத்தான் செய்கிறார்கள்.
ஓமல்பே சோபித தேரர்[எப்படித்தான் பெயர் வைக்க யோசிக்கிறார்களோ?]இவர் பக்‌ஷே அரசில் அமைச்சராக உள்ளார்.
இவர் நமது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் டெசோ மாநாடை இந்தியாவில் நடத்த அனுமதிக்க கூடாது.என்று வலியுறுத்தியுள்ளார்.
சுரன்

ஏன் கொழும்பில் நடத்த வேண்டும் என்கிறாரா?
அது 1976 ஆம் ஆண்டின் ஒப்பந்ததுக்கு எதிரானதாம்.இது வரை 1976 ஒப்பந்தப்படிதான் இலங்கை அரசு செயல் பட்டு வருகிறதா?
முள்ளி வாய்க்கால் உட்பட ஈழத்தமிழர்கள் கொன்று குவிப்பு எல்லாம் ஒப்பந்தத்தின் வரிகள் படிதான் செய்யப்பட்டுள்ளதா?
இவர் கட்சியை சார்ந்த மற்றொரு அமைச்சர் சம்பிக்க ரணவர்க்க தான் நூறு முள்ளிவாய்க்கால்கள் தமிழர்களுக்கு காத்திருக்கிறது.என்று ஈழத்தமிழர் மரணத்திற்கு சலுகைகள் அறிவித்தவர்.இவர்கள் இருவருமே "ஜாதிக ஹெல உறுமய"என்ற வாயில் நுழையாத கட்சியை வைத்துக்கொண்டு சிங்கள அரசில் நுழைந்தவர்கள்.
'எங்கள் இலங்கையில் இந்திய எதிர்ப்பு செயல்களுக்கு நாங்கள் இதுவரை ஆதரவு தந்ததில்லை.என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்"
என்ற அடிக்கோடிட்ட வரிகளை சேர்த்து ள்ளார்.இது இந்திய அரசை மிரட்டுவதுதானே?
இனி என்ன நடக்கும் என்று கூறுவது போல் உள்ளதல்லவா?
அது போல் இலங்கைக்கு எதிரான எந்த நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசு அனுமதி தரக்கூடாது என்று எச்சரிக்கை வேண்டுகோளிட்டுள்ளார்.
இந்தியாதான் இலங்கை கூறும் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஆதரவையும்-பாதுகாப்பையும் தருகிறதே.பின் எதற்கு இந்த மிரட்டல்?
கூண்டோடு அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு இன்னும் இந்தியா தடை தானே விதித்துள்ளது.
விடுதலைப்புலிகள் ஆதரவாக பேசுபவர்களை இன்னும் சிறையில்தானே அடைக்கிறது.

இலங்கையில் கூட[முன்னாள்] விடுதலைப்புலிகள் சுதந்திரமாக நடமாடும் போது இந்தியாவில் சிறையில்தான் உள்ளனர்.
குழந்தைகள் உட்பட பலரை கொன்று குவித்தவர்களுக்கு விடுதலையும்,மன்னிப்பும் வழங்கிய இந்திய அரசு ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை இன்னும் தூக்கு கயிற்று நிழலில்தானே வைத்துள்ளது.
'அப்படிப் பட்ட நிலையில் ஈழ மக்கள் படுகொலையில் குற்ற உணர்வுடன் இருக்கும் கருணாநிதி நடத்தும் டெசோ மாநாட்டினால் என்ன நடந்து விடப்போகிறது?
இந்த தேவையற்ற அச்சம் பக்‌ஷே க்கு வேண்டாம்.
சொல்லப் போனால் இந்த மாநாடு இலங்கையில் நடத்த அனுமதி அளித்து அதில் அவர் சிறப்பு விருந்தினராகக்கூட கலந்து கொள்ளலாம்.உடன் சம்பந்தம்,கருணா,பிள்ளையான்,ஏன் சிவசங்கர மேனன்,நிருபமா ராவ், டக்ளஸ் தேவானந்தாவை கூட பேச அழைத்து வரலாம்.
அதான் புலிகளை அடி யோடு அழித்து விட்டீர்களே?
இன்னும் என்ன பயம்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?