இவர் அவரில்லை ...?


சுரன்
வெளிவருவது இவரல்ல.

பாகிஸ்தானின் உள்ளடி வேலைகளால் பஞ்சாப் மக்களின் மகிழ்ச்சியில் மிக குழப்பம்.
பாக் சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் வாடும் சரப்ஜித் சிங் விடுதலை என்று செய்தியை பாகிஸ்தான் வெளியிட்டது.
சரப்ஜித் சிங் 1990 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டிருந்தார் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
அந்தத் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 14 பேர் பலியானதாக பாகிஸ்தான் கூறியது.
எனினும் தான் குற்றமற்றவர் என்றும், தவறுதலாக தான் கைது செய்யப்பட்டதாகவும் சரப்ஜித் சிங் தொடர்ந்து வாதாடி வந்தார்.
அவர் ஆயுள் தண்டனை காலத்தை நிறைவு செய்திருந்தால், அவரை விடுவிக்கும்படி அதிபர் ஸர்தாரி உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பாகிஸ்தானின் சட்ட அமைச்சர் ஃபரூக் நேயக் அவரை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்தை கேட்டுள்ளார் எனவும் பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
சரப்ஜித் சிங் லாகூர் நகரிலுள்ள கொட் லக்பட் சிறைச்சாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளார்.

அவர் சிறையிலிருந்து விடுதலையாவது தவிர்க்க முடியாததாகி விட்டது.
இந்திய நீதிமன்றம் ஒன்று, அண்மையில் பாகிஸ்தானின் நுண்ணுயிர் விஞ்ஞானியான முகமது கலீல் சிஸ்தியை மனிதாபிமான அடிப்படையில் விடுவித்திருந்து குறிப்பிடத்தகுந்தது
சுரன்


கிட்டதட்ட 30 ஆண்டுகளால் வெடி குண்டுவைப்பு வழக்கில் தவறுதலாக உள்ளே வைக்கப்பட்ட தங்கள் சரப்ஜித் சிங் தான் வருகிறார் என்று இரவு முழக்க பாட்டு-ஆட்டம்-வெடி என்று மகிழ்வுடன் கொண்டாடப்பட்டது.
ஆனால் காலையில் நாங்கள் கூறியது அவரல்ல சுர்ஜித் சிங் என்றஇவர் பெயர் குழப்பம்  என்று ஆளை மாற்றி காண்பித்துள்ளது.பஞ்சாப் காரர்களின் மகிழ்வு அனைத்தும் வடிந்து விட்டது.
அந்த சர்ப்ஜித் சிங் தூக்குத்தண்டனை பெற்றவர்.இவர் ஆயுள்தண்டனை பெற்றவர்.இருவருமே 30 ஆண்டுகள் பாக் சிறையில் வாழ்ந்துள்ளன்ர.
இவர் வெளிவருவதில் மகிழ்ச்சிதான்.ஆனால் கொண்டாட்டங்கள் எல்லாம் அவருக்குத்தானே.அவரை வெளிக்கொணரத்தானே அரசும்,பஞ்சாப் சிங்[கங்]களும் போராடினர்.
அது சரி .பாகிஸ்தானில் இன்னும் எத்தனை சரப்ஜித் சிங்-சுர்ஜித் சிங்குகள் சிறையில் இருக்கிறார்கள்.முதலில் அதை சொல்லுங்கப்பா?


=====================================================================
இந்தியாவில் இப்போது பொருளாதார சிக்கல் ஆரம்பமாகி இருக்கிறது.ஆனால் ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளில் ஏற்கனவே சிக்கல் இருக்கிறது.
பிரிட்டனைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் இணையத்தளம் மூலம் 20 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்களுக்கு தன்னைத்தானே ஏலத்தில் விற்பனை செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சுரன்


ஒரு மாத காலத்திற்குள் தான் வேலையை இழக்கப்போவதாலேயே அன்டி மார்ட்டின் தன்னை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது ஏலத்திற்கான காலவரையறை 30நாட்களாக நிர்ணயித்துள்ளார். மார்ட்டின் தனது எதிர்கால பொருளாதார தேவைகள் கருதியே தன்னைத் தானே ஏலத்தில் விடத் தீர்மானித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
நான் தொழிலை இழக்கும்போது மற்றவர்களிடம் தங்கிவாழ வேண்டிய நிலை ஏற்படும்.அந்நிலையை தவிர்க்கவே என்னையே ஏலமிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கழிவு முகமைத்துவ நிறுவனத்தில் போக்குவரத்து திட்ட அதிகாரியாக தற்போது மார்டின் பணியாற்றுகிறார்.


இவரை ஏலத்தில் எடுப்போர் தங்கள் விருப்பம் போல் வேலை கொடுக்கலாம்.
இது ஒரு வேலையை முன் பணத்துடன் செய்வதற்கு ஒப்பம்தானே.


ஆனால் அடிமை முறை ஒழிக்கப்பட்ட இங்கிலாந்து சட்டம் இப்படி அடிமை போல் விலைக்கு மனிதனை வாங்குவதை ஒப்புக்கொள்ளுமா?
====================================================================



=====================================================================
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?