அந்த மூன்று நாட்கள்....?
வணக்கங்கள்.
இதுவரை தினசரி ஏதாவது இடுகைகளை "சுரன்"-ல் எழுதி வந்துள்ளேன்.
இப்போது இருநாட்கள் விடுப்பு தேவைப் படுகிறது.
காரணம் நீர்க்கோவை தான்.சிவந்த மூக்கும்-நனைந்த கைக்குட்டையுமாக இருக்கிறேன்.[பயம் வேண்டாம்.இணையம் மூலம் இன்னமும் சளிக்கான வைரசை பர்ப்ப இதுவரை முடியவில்லையாம்]
பொதுவாகவே எந்த நோயையும் அதுவாகவே சரியாகட்டும் என்று விட்டு வேடிக்கைப்பார்ப்பது எனது பழக்கம்.மருந்து ,மாத்திரைகள் உட்கொள்வது கிடையாது.அதிலும் அலோபதிக்கு தடா.
ஒமியோபதி,ஆயுர் வேதம்,சித்த மருந்துக்கள்தான் கொடுரமான தாக்குதல்களில் உட் கொள்வேன்.
மற்றபடி காய்ச்சல் என்றால்காலையில் வழமை போல் எழுந்து குளிந்த்து விட்டு நடுக்கத்துடன் தலையை துவட்டி விட்டு அலுவலகம் கிளம்பி விடுவேன்.அலுவலகம் போய்சேருவதற்குள் காய்ச்சலா?யாருக்கு? என்றாகி விடும்.
சில வேளைகளில் அலுவலகத்துக்கு மட்டம் போடும் ஆசை வந்து விடும்.அப்போதுதான் விடுப்பு.மற்றபடி காய்ச்சலுக்கு என்று இடுப்பு போட்டதில்லை.
என்னை பார்த்து எனது மகன் உட்பட குடும்பத்தாரும் காய்ச்சலைக் கண்டு கொள்வதில்லை.
ஆனால் இப்போது நீர்க்கோவை அதுதான் ஜல்ப் .இது மூக்கில் இருந்து நீரை வடித்தால் மட்ட்ம் பரவாயில்லை.துடைத்துக்கொண்டே ஒருகையால் இடுகை ஏதாவது போட்டிடலாம்.
தலை,பிடரியோடு சேர்த்து வலி.எரிச்சலாக வருகிறது.[மனைவிஎன் நிலையை கண்டு அருகில் வருவதில்லை.அவள் பயம் அவளுக்கு]
இந்த எரிச்சலில் இடுகைகளில் எதாவது கோபம்-தாபத்துடன் செய்து விட்டால்?
நீர்க்கோவை ஆங்கில மற்றைய மருந்துக்களுக்கு வெறும் மூன்று நாட்களில் குணமாகி விடுமாம்.
ஒரு மருந்தையும் உட்கொள்ளாவிட்டால் மூன்றுறுறு நாட்களான பின் தான் தானே குணமாகிவிடுமாம்.[சயம் போன்ற காலங்களில் இது தவறாகி விடும்]
தானே குணமாகிவிடும் வரை ஒருகை பார்த்து விடுவது என்று இருக்கிறேன்.
மற்றபடி.நீங்களும் ஆங்கில மருந்துக்கள் பாரசிட்டமால்"போன்றவற்றை எதெற்கெடுத்தாலும் போடு வழமையை விடுங்கள்.
நோய் எதிர்ப்பு என்பது நம் உடலில் இயற்கையாக உள்ளது.மிருகங்கள் ,எந்த கடையில் பாரசிட்டமால் வாங்குகிறது.எந்த டாக்டரை பார்த்து இசிஜி,ஸ்கேன்,எடுத்துக்கொள்கிறது?
நோயை உள்ளே வர விட்ட நம் உடலே அதை அடித்து விரட்டவும் செய்து விடும்.
அதற்கு தகுந்தாற்போல் நாம் நடந்து கொள்ளவேண்டும்.அவ்வளவுதான்.
இன்னும் இரு நாட்களில் நீர்க்கோவை சரியாகி விடும் என்ற நம்பிக்கையில்
உங்கள் நண்பன்.