ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் மூன்றாவது முயற்சியாக முதலிடத்துக்கு தகுதி பெற்றிருக்கிறார் ஜோ பைடன். ஆனால், அதற்கு அவர் கொடுத்த விலைகள் ஒன்றிரண்டு தசாப்தங்கள் அல்ல. 1987ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2008ஆம் ஆண்டில் இரண்டாவது முறையும் அதிபராகும் போட்டியில் இருந்த அவரால், தனது 77ஆவது வயதில்தான் அப்பதவிக்கான போட்டியில் முதலிடத்துக்கு முன்னேற முடிந்திருக்கிறது. ஐயோவா மாகாணத்தில் மறைமுக தேர்வு (காகசஸ்), நியூ ஹாம்ஷையரில் நேரடி தேர்வு (பிரைமரி) மூலம் அதிபர் வேட்பாளராக தேர்வாக முடியாத நிலை பைடனுக்கு சில தசாப்தங்களுக்கு முன்பே உண்டு. அந்த பின்னடைவு தந்த வலிகளும் அரசியலில் நீடிக்கும் அவரது பழுத்த அனுபவமும்தான் இம்முறை மூன்றாவது முயற்சியாக நில்லாமல் ஓடி மறைமுக தேர்வு, நேரடி தேர்வு என இரண்டிலும் ஒருமித்த ஆதரவை பெற்று ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரானார் ஜோ பைடன். இதற்கு அவருக்கு 14 மாகாணங்களில் இருந்து அவரது முன்மொழிவை ஜனநாயக கட்சியினர் ஆதரித்தனர். எளிய தேர்தல் பரப்புரை, மக்களை கவர்ந்திழுக்கும் வசீகர வார்த்தைகள், அனுதாப பார்வையுடன் அடித்தட்டு மக்களை அணுகும் போக்கு பைடனுக்கு அமெரிக்க வாழ் மற்ற நா...