புதன், 30 செப்டம்பர், 2015

அப்பாக்களுக்கு டாஸ்மாக்-அம்மாக்களுக்கு அலைபேசி?மகளிர் சுய உதவிக் குழுவினர்களுகெல்லாம் அம்மா அலை பேசியாம் .
தமிழ் நாடு மிகவும் வேகமாக முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறது.
இரண்டு நாள் முதலீட்டாளர் மாநாட்டில் 2 .5 லட்சம் கோடி முதலீடு.
தமிழ் நாட்டில் மின் மிகை மாநிலமாகி மூன்று ஆண்டுகளாகி விட்டது.
 பிள்ளைகளுக்கு மடிக்கணினி கொடுத்தாகி விட்டது.
அம்மாக்களுக்கு  பாலூட்ட தனி இடம்.
இப்போது அலை  பேசி  ஏற்கனவே அப்பாக்களுக்கு டாஸ்மாக் அரசு  உற்சாகப் பானம் கொடுத்தாகி விட்டது.

மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு சுழல் நிதியோ ,வங்கிக்கடனோ கொடுக்காத  அம்மா அரசு இப்போது அலைபேசி கொடுக்க காரணம்?

அப்போது இல்லாத பணம் 13000கோடிகளில் அலை பேசி கொடுக்க எங்கிருந்து வருகிறது?
சுய உதவிக் குழு பெண்கள் எல்லோரும் அலை பேசியில் தன்னிடம் குறைகளை உடனுக்குடன் சொல்லவா?
தமிழகத்தை வாட்டும் மின் வெட்டை நீக்க  இதுவரை 100 கூட செலவிடாத ஜெயலலிதா அரசு கோடிகளில் இலவசம் கொடுக்க பணம் உள்ளது.
அமைச்சர்களும்,அதிகாரிகளும் கால்கடுக்க போயஸ் தோட்டத்தில் தவம் இருந்த பின்னர் இன்டர்காம் மூலம் மட்டுமே பேசும் முதல்வரை அவர்கள் அப்படி எளிதாக தொடர்பு கொள்ள முடியுமா?
ஸ்டாலின் ஊர்,ஊராக போய் மகளிர் குழுவினர்களை சந்திப்பதை அதை வாக்குகளாக மாற்றி விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில்தான் அம்மாவின் மனதில் இந்த அலைபேசி திட்டம் உதித்திருக்க வேண்டும்.
அல்லது திமுக தயாரிக்கும் தேர்தல் அறிக்கையில் இந்த அலைபேசி இலவசம் என்று இருப்பதாக காதில் விழுந்திருக்க வேண்டும்.
அரசுக்கு வருமானம் தருவதாலும்,அதன் வருமானம் மூலம்தான் இலவசங்கள் அல்லது விலை இல்லா பொருட்களை கொடுக்கிறோம்.அதானால் மதுக்கடைகளை மூடுவது இயலாத காரியம் என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியுள்ளார்.

இவர் இதில் உண்மையை கூறியுள்ளார்.அதானால் தமிழ் நாட்டில் மின்வெட்டே இல்லை என்று இவர் சட்டப்பேரவையில் கூறியது உண்மையாகி விடாது.
அந்த மதுக்கடை வருமானத்தில்  வரும் அம்மா அரசு இலவசமாக தரும்  அலைபேசியை   மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிக் கொண்டால் மதுக்  கடைகளை டாஸ்மாக்கை மூடு என்று சொல்லுவது,அதானால் தங்கள் குடும்பம் சீரழிகிறது என்று சொல்வதற்கே அவர்களுக்கு தகுதியோ,உரிமையோ இல்லாமல் போய் விடும்.
இலவசத்துக்கு  ஒடி போய் வரிசையில் நின்றால் அந்த இலவசம் வரும் வழியையும் நாம் ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும்.
மக்களின் மன நிலையை நன்கு தெரிந்து கொண்ட  வாக்குகளைப்பெற எதையும்செய்யத்துணிந்த அரசுதான்,கட்சிதான் ம்மா திமுக.
இப்பொது ஸ்டாலின் எவ்வாள்வுதான் ஊர்,ஊராக போய்,தெருத்தெருவாகப் போய் ஜெயலலிதா அரசின் அவலங்களை ,ஊழல்களை சொன்னாலும் தேர்தலில் பணத்தைக்கொடுத்தும்,தேர்தல் ஆணையம்,அலுவலர்கள்,காவல்துறையினர் உதவியுடன் வெற்றிப்பெற்று விடலாம் என்பதுதான் ஜெயலலிதாவின் கணக்கு.
அவருக்கு கூட்டணி கட்சிகள் எல்லாம் தேவை இல்லை.வானத்தில் பறந்து கீழே இறங்காமல் பரப்புரை செய்தாலும் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை அதிகம் உள்ளது.
அந்த நம்பிக்கையை ஜெயலலிதாவுக்கு தந்தது சென்ற மக்களவை தேர்தல்தான்.
அதிமுக வைத்திருக்கும் கூட்டணி அந்த அளவு வலிமையானது.
ஆர்.கே.நகரில் மொத்தம்  3200 வாக்குகள் உள்ள தொகுதியில் 4100 வாக்குகளை பெற்று அமோகமான வெற்றியை ஜெயலலிதாவுக்கு அக்கூட்டணி பெற்று தந்தது.[இந்த சரித்திரம் படைத்த வாக்குப் பதிவுக்கு இதுவரை தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை?]
அதிமுக+காவல்துறை+தேர்தல் ஆணையம் = வெற்றி.
இதுதான் இன்றைய வெற்றிக்கான சூத்திரம்.இது இருக்கும் வரை ஸ்டாலின்  என்ன கருணாநிதியே சக்கர நாற்காலியில் வளம் வந்தால் கூட வெற்றி சந்தேகம்தான்.
மதுக்கடை வருமானத்தில் வரும் அலைபேசியை வாங்கும் ஒவ்வொரு மகளிரும் மதுக்கடைகளை மூட வேண்டாம் ,யார் குடும்பம் குடித்து சீரழிந்தாலும் பரவாயில்லை எமக்கு தேவை விலையில்லா,இலவசங்கள் என்று உறுதி கூறுபவர்கள்தானே?
அம்மா திட்டம்,அம்மா குடிநீர்,அம்மா உப்பு,அம்மா உணவகம்,அம்மா அலைபேசி,அம்மா விருது என்று தனது புன்னகை ததும்பும்  படத்துடன் எல்லாவற்றிற்கும் அம்மா என்று தனது பெயர் வைக்கும் ஜெயலலிதா ஏன் தனது வருமான வழியான டாஸ்மாக்கிற்கு அம்மா பெயரை சூட்டவில்லை?
மகளிர் சுய உதவிக்குழுவினர் சிந்திப்பார்களா?
========================================================================================
இன்று,
செப்டம்பர்-30.
 • தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது(2003)
 • சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்
 • போட்ஸ்வானா விடுதலை தினம்(1966)
 • உலகின் முதலாவது நீர்மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1882)
 • பாகிஸ்தான், ஏமன் ஆகியன ஐநாவில் இணைந்தன(1947)

========================================================================================

கலப்பட பெரிய நிறுவனங்கள்.

கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் பிரபல நிறுவனங்கள் விற்றுவரும் பல பாக்கெட்களில் பாமாயில், பருத்திவிதை எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருப்பது நுகர்வோர் அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘தூய்மையான கடலை எண்ணெய், நல்லெண்ணைய்யை சமையலில் சரியான அளவில் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது’ என்று சமீபகால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஒருசில எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் விலை குறைவான பாமாயில், பருத்திவிதை எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்து கடலை எண்ணெய் என்ற பெயரில் விற்பது இந்திய நுகர்வோர் சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை, விழுப்புரம், சேலம், தருமபுரி, திருச்சி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் 14 நிறுவனங்களின் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்களை சோதனை செய்தனர். 
தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இயங்கிவரும் சென்னை கிண்டி கிங்க்ஸ் பரிசோதனைக் கூடம் உட்பட 3 பரிசோதனைக் கூடங்களில் இவை சோதனை செய்யப்பட்டன. அவற்றின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
‘கடலை எண்ணெய்’ என்று விற்கப்பட்ட 4 பிராண்டுகளின் பாக்கெட்களில் முழுக்க பாமாயில் மட்டுமே இருந்தது. 
ஒரு பாக்கெட் டில் பருத்திவிதை எண்ணெய் மட்டுமே இருந்தது. 
ஒரு பாக்கெட் டில் 90 சதவீதம் பாமாயில், 10 சதவீதம் கடலை எண்ணெய் இருந் தது. 
ஒரு சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்டில் 50 சதவீதம் பாமாயில், 50 சதவீதம் பருத்திவிதை எண்ணெய் இருந்தது.
சமையல் எண்ணெய் பாக்கெட்டில் அக்மார்க் முத்திரை கட்டாயம் என உணவு பாதுகாப்பு விதிமுறை உள்ளது. 
ஆனால், 42 சதவீத சமையல் எண்ணெய் பாக்கெட்களில் அக்மார்க் முத்திரை இல்லை. 
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகள் 2011-ன்படி அனைத்து உணவுப் பொருள் பாக்கெட்களிலும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) குறியீடு, உரிமம் எண் குறிப்பிடப்பட வேண்டும். 
ஆனால், 79 சதவீத சமையல் எண்ணெய் பாக்கெட்களில் அந்த குறியீடு இல்லை. 64 சதவீத பாக்கெட்களில் உரிமம் எண் இல்லை. கலப்படம் இல்லாத சுத்தமான கடலை எண்ணெய் ஒரு லிட்டர் விலை ரூ.105 முதல் ரூ.120 வரை உள்ளது. 
ஒரு லிட்டர் பாமாயில் விலை ரூ.52 மட்டுமே. அதனால், பாமாயிலை நிறம், மணம் நீக்கி ரீஃபைண்டு செய்து, கடலை எண்ணெய் என்ற பெயரில் அதிக விலைக்கு விற்று மோசடி செய்கின்றனர்.
ஒரு லிட்டர் கடலை எண்ணெய் தயாரிக்க 2.5 கிலோ கடலை தேவை. ஒரு கிலோ கடலை விலை ரூ.100 முதல் ரூ.110 வரை. 
எனவே, கலப்படமின்றி சுத்தமாக ஒரு லிட்டர் கடலை எண்ணெய் தயாரிக்க குறைந்தபட்சம் ரூ.250 ஆகும். 
இதனால், செக்குகளில் ஆட்டப்படும் கடலை எண்ணெய் விலை அதிகமாக இருந்தது. 
மேலும், செக்கில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் எண்ணெயில்தான் உடலுக்கு நன்மை தரும் புரதம், நல்ல கொழுப்புச் சத்துகள் ஆகியவை சிதையாமல் கிடைக்கும். பாக்கெட்களில் குறைந்த விலையில் கிடைக்கிறதே என்று தரமற்ற எண்ணெயை மக்கள் வாங்கத் தொடங்கியதால், வருமானமின்றி செக்குகள் மூடப்பட்டுவிட்டன. 
நம் கண் முன்பாகவே கடலையைப் போட்டு எண்ணெய் எடுத்து தரும் செக்குகள் இப்போது இல்லை. கண்ணுக்குத் தெரியாமல் நடக்கிற இயந்திர சுத்திகரிப்பு முறை நடைமுறைக்கு வந்ததில் இருந்தே, கலப்படமும் தொடங்கிவிட்டது.
பிரபல நிறுவனங்களும் மக்களை இப்படி ஏமாற்றினால்?
இதையெல்லாம் கவனிக்க வேண்டிய உணவுத்துறை ஆய்வு அரசு அலுவலர்கள் அப்படி என்னதான் முக்கிய பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்?


செவ்வாய், 29 செப்டம்பர், 2015

விண்டொஸ் 10 ம்,விண்டொஸ் 7 ம்


பலர் இன்னும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறாமல், நாங்கள் விண்டோஸ் 7 சிஸ்டமே பயன்படுத்தி வருகின்றனர் . 
புதிய லேப்டாப் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், விண் 7 சிஸ்டத்தினையே தளவிறக்கம் செய்து பயன் படுத்துகின்றனர்.
அவர்களுக்காக விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கிடைக்கும் சில மாறுதலான வசதிகள் குறித்த டிப்ஸ்கள் இங்கு தரப்படுகின்றன.
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயனாளர்களிடையே ஊன்றி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் முடிவிற்கு வந்த பின்னர், பெரும்பாலானவர்கள் இதற்கு மாறிக் கொண்டு, இது தரும் வசதிகளை மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் குறித்த இயக்கக் குறிப்புகளை சில நூல்கள் வாயிலாகவும், தங்கள் பயன்பாட்டின் மூலமும் தெரிந்து கொள்கின்றனர். ஆனாலும், விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ள பல விஷயங்கள் இன்னும் பலருக்குத் தெரியாமலேயே உள்ளன. 
இதற்குக் காரணம் எந்த நூல்களும் இது குறித்து எழுதாமல் இருப்பதுதான். பொதுவாகவே, கம்ப்யூட்டர் இயக்கத்தில், Undocumented Features எனச் சில உண்டு. இவற்றைப் பற்றி ஒரு சிலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள் மற்றவர்களுக்கு டாகுமெண்ட் செய்து வெளியிட்டால் தான் உண்டு. மேலும், இந்த சிஸ்டத்தினை வடிவமைத்தவர்கள், அவர்களுக்கு மட்டுமே தெரிந்திடும் வகையில் சில விசேஷ அம்சங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அவற்றை Easter Eggs என அழைப்பார்கள். அப்படிப்பட்ட சில வசதிகள் குறித்தும், Easter Eggs குறித்தும் இங்கு காணலாம்.

1. சில ஷார்ட்கட் கீகள்: புரோகிராமிற்கான ஐகான் ஒன்றில் கிளிக் செய்திடும் முன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கிளிக் செய்தால், அந்த புரோகிராமின் விண்டோ ஒன்று ஏற்கனவே திறந்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், புதியதாக ஒரு செயல்பாட்டு விண்டோ திறக்கப்படும். எடுத்துக் காட்டாக, வேர்ட் புரோகிராமினைத் திறந்து, டாகுமெண்ட் ஒன்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். புதிய விண்டோ ஒன்றில், புதிய டாகுமெண்ட் அல்லது பழைய டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில், இவ்வாறு செய்திடலாம். புதிய வேர்ட் விண்டோ ஒன்று திறக்கப்படும்.
2. ஐகான் அழுத்துகையில், ஷிப்ட்+ கண்ட்ரோல் கீகளை அழுத்திக் கொண்டு செய்தாலும், மேலே கூறிய செயல்பாடு மேற்கொள்ளப்படும். இதில் என்ன வேறுபாடு என்றால், இந்த விண்டோ, முற்றிலும் அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமையுடன் திறக்கப்படும்.
3. கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு, இதே போல புரோகிராம் ஐகான் ஒன்றில் கிளிக் செய்தால், திறந்து செயல்படுத்தப்படும் விண்டோக்களில், இறுதியாகத் திறந்த விண்டோ திறக்கப்படும். 
திறக்கப்பட்ட விண்டோவின் மேல் பட்டியில் கர்சரை வைத்து கிளிக் செய்தால், அது மினிமைஸ் செய்யப்படும். இதனை மானிட்டர் திரையில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று அமைக்கலாம். இதன் அளவினை நாம் விரும்பும் வகையில் சிறிதாக்கலாம்; பெரியதாகவும் அமைக்கலாம். இதனை மவுஸ் தொடாமலும் அமைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதோ அவை:
விண்டோஸ் லோகோ கீயினை அழுத்திக் கொண்டு அப் (UP) அம்புக்குறியினை அழுத்தினால், விண்டோவின் அளவைப் பெரிதாக்கலாம்.
அதே போல, விண்டோஸ் லோகோ கீயினை, வலது அல்லது இடது அம்புக் குறியுடன் அழுத்த, விண்டோ திரையின் இடது அல்லது வலது பக்கமாக நகர்த்தப்படும்.

பிரச்னைகளை மற்றவருக்குத் தெரிவிக்க: கம்ப்யூட்டரில் பிரச்னை ஒன்று ஏற்படுகையில், அதனை மற்றவருக்கு இதனால் தான், அல்லது இந்த செயல்பாட்டின் போதுதான் பிரச்னை ஏற்பட்ட து என்று சொன்னால் தான் புரியும். இதனை எப்படி சொல்வது? பிரச்னை ஏற்படுகையில், கம்ப்யூட்டர் செயல்பாட்டில், என்ன என்ன ஏற்பட்ட்து என நமக்குத் தெரியுமா? இதனைப் பதிவு செய்திடும் வகையில், டூல் ஒன்றை விண்டோஸ் 7 கொண்டுள்ளது. இந்த டூலின் பெயர் Problems Step Recorder. இதனை அணுக, ஸ்டார்ட் மெனுவில் கிளிக் செய்து, தேடல் கட்டத்தில் “Problem Record” என டைப் செய்து எண்டர் தட்டவும். அடுத்து, Record steps to reproduce a problem என்பதில் கிளிக் செய்திடவும். இது Problem Steps Recorder டூலை இயக்கத் தொடங்கும். உடன் என்பதில் அழுத்த, நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் அனைத்தும், டெஸ்க்டாப்பில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு முறை மவுஸால் கிளிக் செய்திடும்போதும், டெஸ்க்டாப் திரை, ஸ்கிரீன் ஷாட் ஆகப் பதிவு செய்யப்படும். இவை அனைத்தும் “problem steps” என்றபடி வரிசையாக, தானாகவே பதிவு செய்யப்படும். பதிவு செய்தது போதும் என்று அதை நிறுத்தினால், பைலை ZIP file ஆக, சேவ் செய்திடும்படி நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். அதே போல் பதிவு செய்திடலாம். பின்னர், தேவைப்படுகையில், இதனை விரித்து, ஸ்கிரீன் ஷாட்களை ஒவ்வொன்றாகப் பார்த்து, எப்போது பிரச்னை ஏற்பட்டது என்று அறியலாம். அல்லது, பிரச்னைகளை அறிந்து தீர்க்கக் கூடிய தொழில் நுட்பவியலாளருக்கு, இந்த பைலை அனுப்பலாம். அவர் அதனை விரித்துப் பார்த்து, பிரச்னையை உணர்ந்து கொண்டு, அதற்கான தீர்வினைத் தருவார். இப்படி ஒரு டூல் உள்ளது என, பல தொழில் நுட்ப வல்லுநர்களுக்கே தெரியாது.
அடுத்து சில விந்தையான, ஆனால் அதே சமயம் பயனுள்ள விண்டோஸ் 7 ஈஸ்டர் எக்ஸ் எனப்படும் சில குறுக்கு வசதிகளைக் காணலாம்.

1.GodMode: இது ஒரு மிக மிகப் பயனுள்ள டூல். விண்டோஸ் 7 சிஸ்டத்தின் இயக்க செயல்பாடுகள் அனைத்தையும் இதன் மூலம் செட் அப் செய்திடலாம். ஏறத்தாழ 270 சிஸ்டம் அமைப்பு செயல்பாடுகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம். இதற்கு டெஸ்க்டாப்பில், புதிய போல்டர் ஒன்றை உருவாக்கவும்.இதன் பெயராக “GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}” என்பதனை அமைக்கவும் (மேற்கோள் குறிகள் இல்லாமல்). இந்த போல்டரின் ஐகான் படம் மற்றவற்றிலிருந்து 
சற்று வித்தியாசமாக நீல நிறத்தில் அமைந்திருக்கும். கண்ட்ரோல் பேனலுக்கான ஐகான் போலக் காட்சி அளிக்கும். பின்னர் அந்த போல்டரைத் திறந்து பார்க்கவும். கம்ப்யூட்டர் இயக்க செயல்பாடுகள், ஏறத்தாழ 45 பிரிவுகளில் 
பிரிக்கப்பட்டுத் தரப்படும். 
அட்மினிஸ்ட்ரேட்டிவ் டூல்ஸ், பாண்ட்ஸ், விண்டோஸ் பயர்வால், அப்டேட், யூசர் அக்கவுண்ட்ஸ் எனப் பல பயனுள்ள பிரிவுகளில், 270க்கும் மேற்பட்ட செட் அப் செயல்பாடுகளுக்கான லிங்க் கிடைக்கும். இவற்றில் தேவையானதில் கிளிக் செய்து, நாம் புதிய செட் அப் வழியை மேற்கொள்ளலாம். இந்த டூல் அதன் பெயருக்கேற்ப, நம்மை நம் கம்ப்யூட்டரின் கடவுளாக மாற்றுகிறது.
2. பைல்களைச் சுவடு இன்றி அழிக்க: நாம் அலுவலகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிற கம்ப்யூட்டரை, அடுத்து நம் இருக்கையில் அமர்ந்து செயல்படப் போகும் இன்னொருவரிடம் தர வேண்டியதிருக்கும். நம் கம்ப்யூட்டரில் நம் சொந்த பைல்களைப் பதிந்து வைத்திருக்கலாம். என்ன தான் அழித்தாலும், Recuva போன்ற புரோகிராம்களால், அவற்றை மீண்டும் பெற்றுவிடலாம். இவ்வாறு இல்லாமல் சுவடே இல்லாமல், மொத்தமாக, முழுமையாக நீக்க விண்டோஸ் 7 வழி ஒன்று கொண்டுள்ளது. இதற்கு கமாண்ட் ப்ராம்ப்ட் (Command Prompt) செல்லவும். ஸ்டார்ட் தேடல் கட்டத்தில் cmd என டைப் செய்து எண்டர் அழுத்தினால், இந்த கட்டளைப் புள்ளி கொண்ட விண்டோ கிடைக்கும். இதில் “cipher /w:C” என டைப் செய்து எண்டர் தட்டவும். அழிக்கப்பட்ட அல்லது அழிக்கப்படாத பைல்கள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படும். இந்தக் கட்டளையை எந்த ட்ரைவில் உள்ள பைல்களுக்கு என செயல்படுத்துகிறோமோ, அதற்கான ட்ரைவ் எழுத்தினை, கட்டளையில் அமைக்க வேண்டும். 
இன்னும் சில ஷார்ட் கட் கீகளை இங்கு குறிப்பிடலாம். 
உங்கள் கம்ப்யூட்டரில் நிறைய விண்டோக்கள் திறந்த நிலையில் உள்ளதா? ஒவ்வொன்றிலும் ஏதேனும் புரோகிராம் ஒன்று திறக்கப்பட்டு, பைல் ஒன்று செயல்பாட்டில் உள்ளதா? அல்லது எந்த செயல்பாடும் இன்றி திறக்கப்பட்ட நிலையில் உள்ளதா? இவற்றை மூடிட, Windows Logo + Home என்ற கீகளை அழுத்தவும். ஒவ்வொரு முறை அழுத்தும்போதும், 
ஒவ்வொரு விண்டோ மூடப்படும். நீங்கள் அப்போது டெஸ்க்டாப்பில் திறந்து வைத்து செயல்படும் விண்டோ மட்டும் திறந்தபடியே இருக்கும்.
திரையில் உள்ள சிறிய எழுத்துக்களைப் பார்க்க இயலவில்லையா? விண்டோஸ் கீயை அழுத்திக் கொண்டு, நம் லாக் பட்டன் அழுத்திய நிலையில் + கீயை அழுத்தவும். விண்டோஸ் இயக்கத்தின் மேக்னிபையர் செயல்படத் தொடங்கும். 
முதலில் இருந்த விண்டோவிற்கு மேலாக ஒரு சிறிய விண்டோ காட்டப்படும். பழைய விண்டோவில் கர்சர் இருக்கும் பகுதி மட்டும் இங்கு பெரிது படுத்தப்பட்டு காட்டப்படும். மைனஸ் கீ அழுத்தினால், காட்டப்படும் அளவு குறைத்துக் காட்டப்படும்.
                                                                                                                                        நன்றி:தினமலர் 
==========================================================================================
இன்று,
செப்டம்பர்-29.

 • உலக இதய தினம்
 • சர்வதேச காபி தினம்
 • அர்ஜெண்டீனா கண்டுபிடிப்பாளர்கள் தினம்
 • ஓமன், அரபுக் கூட்டமைப்பில் இணைந்தது(1971)
 • ஜான் ரொக்பெல்லர், உலகின் முதலாவது கோடீஸ்வரர் ஆனார்(1916)

==========================================================================================திங்கள், 28 செப்டம்பர், 2015

27 செப்டம்பர் 2014.

நேற்று முதலாமாண்டு முடிவுற்றது.ஆமாம்.ஜெயலலிதா சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் குற்றவாளி.நான்காண்டுகள் சிறை என்று நீதியரசர் மைக்கேல் டி குன்கா தீர்ப்பளித்து முன்னாள் முதல்வராக ஜெயலலிதா சிறை சென்ற முதலாமாண்டு நினைவு நாள்.
ஆனால் அதன் பின் கணித மேதையும் நீதிக்கு அரசருமான குமாரசாமியின் கணித தேற்றம் மூலம் வெளியே வந்தது தனிக்கதை.சாண்டில்யனின் கதைகளை விட அதிகமான பக்கங்களையும் எதிர்பார்த்த திருப்பங்களையும் கொண்ட அக்கதை நம்மால் வெளியிட முடியாது.வெளியிட்டாலும் உங்களால் படிக்க காலம் போதாது.
எனவே முதல்வர்  ஜெயலலிதா காரின் கொடி கழற்றப்பட்டு முன்னாள் முதல்வராக்கப்பட்ட தின நிகழ்வுகள் மட்டும் உங்கள் நினைவுகளுக்காக.
நன்றி:சவுக்கு தளம்.
இந்த நாளை ஜெயலலிதா எப்படி அணுகியிருப்பாரோ தெரியவில்லை, ஒரு மாதமாகவே இரவு உறங்க முடியவில்லை. துளியும் உறக்கம் இல்லாமல் பல்வேறு ஊடகவியலாளர்கள் மற்றும் அதிகாரிகளோடு இரவு நெடு நேரம் விவாதித்துக் கொண்டிருந்த நாட்கள் பல.
என்ன ஆகும் இந்தத் தீர்ப்பு ?  ஜெயலலிதா தப்பித்து விடுவாரா ?  இது வரை மற்ற ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்ததுபோல தப்பித்து விடுவாரா ?  அவரிடம் உள்ள அசாத்திய பண பலத்தை வைத்து, நீதிபதியை விலைக்கு வாங்கி விடுவாரோ ?  மைக்கேல் டி குன்ஹாவும், சதாசிவம், கர்ணன், கேபிகே வாசுகி, சி.டி.செல்வம் போல இருந்து விடுவாரோ என்று பல்வேறு விவாதங்கள்.
avd
ஒரு கோடி, இரண்டு கோடி கொடுத்தாலே வாயைப் பிளக்கும் நீதிபதிகள் இருக்கையில், 500 கோடியை வேண்டாம் என்று மறுக்கும் ஒரு மனிதன் இருக்க முடியுமா  என்று பல்வேறு ஐயங்கள்.   இதற்கு நடுவே நாட்கள் செல்ல செல்ல தினம் ஒரு வதந்தியை அதிமுக அடிமைகள் கிளப்பி விட்டு வந்தார்கள்.  குன்ஹா கடந்த வாரம் சென்னை வந்திருந்தார்.  டீல் முடிந்து விட்டது.  மோடியோடு டீல் செட் ஆகி விட்டது.  உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரி, கடந்த வாரம் கேரளா சென்றிருந்தார்.  அங்கே உள்ள ஒரு பாதிரியார் மூலமாக மொத்த டீலும் முடிந்து விட்டது என்று எத்தனையோ வதந்திகள்.

நீதிபதி மைக்கேல் குன்ஹா
ஆனால், நான் உறுதியாக நம்பினேன்.   நியாயம் வென்றே தீரும் என்று. இயற்கை நடக்கும் அநீதிகளை சமன்படுத்தியே வந்திருக்கிறது. உலகம் தட்டை என்று தேவாலயங்கள் ஆணித்தரமாக சொல்லி வந்தபோது, உலகம் உருண்டை என்று உறுதியாக கூறி தன் உயிரை இழந்தார் கலிலியோ.   இது போல வரலாறு நெடுக, எதிர்ப்புக் குரல்கள் எழுந்தே இருந்துள்ளன.
எதிர்குரலை ஒட்டு மொத்த சமூகமும் சேர்ந்து அழுத்த நினைத்தாலும் அது வீரிட்டு எழுந்தே வந்துள்ளது. அப்படி வீரிட்டு எழுந்த ஒரு குரல்தான் மைக்கேல் டி குன்ஹா.
ஜெயலலிதா தமிழகத்துக்கும் அதன் மக்களுக்கும் செய்த அநியாயங்கள் கொஞ்ச நஞ்சங்கள் அல்ல.  எத்தனையோ தாய்மார்களும், தகப்பன்மார்களும், வயிறெரிந்து சாபம் இட்டுள்ளனர். ஜெயலலிதாவும் இறுமாப்போடும், ஆணவத்தோடும், அகந்தையோடும், செறுக்கோடும் மட்டுமே வாழ்ந்து வந்திருக்கிறார்.  மனிதர்களை மனிதர்களாக ஜெயலலிதா ஒரு போதும் நடத்தியது கிடையாது.  நாம் வீட்டில் வளர்க்கும் நாய், எப்படி நம் காலை நக்க வேண்டும் என்று விரும்புவோமோ, அது போல, அமைச்சர்களும், கட்சிப் பிரமுகர்களும், அரசு அதிகாரிகளும், தன் காலை கூட அல்ல….. கால் வைத்த இடத்தை நக்க வேண்டும் என்று நினைத்தார்.  அவர் நினைத்தது எப்போதும் நடந்தே வந்திருக்கிறது.  அவ்வாறு அவர் நினைத்தது நடக்க நடக்க, ஜெயலலிதாவின் ஆணவம், மென்மேலும் கட்டுக்கடங்காத படி வளர்ந்து வந்தது.
இந்த ஆணவத்தோடுதான், 27 சனிக்கிழமை பரப்பன அக்ரஹாரா செல்வது என்று முடிவெடுத்தார்.   27 சனிக்கிழமை 11.04 மணிக்கு, நீதிபதி மைக்கேல் நீங்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று சொல்லும் வரை, ஜெயலலிதாவுக்கு, நாம் தண்டிக்கப்படப் போகிறோம் என்பது துளியும் தெரியாது.
உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, இந்த வழக்கிலிருந்து தப்பிக்க, சசிகலா தனியாக ஒரு ஆப்பரேஷனை மேற்கொண்டதாகவும், அந்த ஆப்பரேஷனின் சூத்ரதாரி ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியின் வேந்தர் வெங்கடாச்சலம் என்றும் தெரிகிறது.  வெங்கடாச்சலமும், சசிகலாவும் சேர்ந்து, டீல் முடிந்து விட்டதாகவும், மைக்கேல் குன்ஹா 27ம் தேதி பிறப்பிக்க உள்ள உத்தரவின் நகல் என்று 15 பக்கங்கள் கொண்ட ஒரு தீர்ப்பையும் வழங்கியதாகவும் தெரிகிறது.  எப்போதும் எல்லோரையும் விலைக்கு வாங்கியே பழக்கப்பட்ட ஜெயலலிதா, அதை அப்படியே நம்பினார்.  அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான், எனக்கு பாதுகாப்பு சரியில்லை. விடுதலைப் புலிகளால் என் உயிருக்கு ஆபத்து, பரப்பன அக்ரகாரா சிறை வளாகத்தில் நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.   ஜெயலலிதா அவ்வாறு மனுத் தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், 20ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும்.   அந்த வாரம் முழுக்க உயர்நீதிமன்றம் செயல்பட்டது.  ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருக்கலாம்.   ஆனால் ஜெயலலிதாவின் மனு காரணமாக, வழக்கு 27ம் தேதிக்கு தள்ளிவைக்கப்ப்டடது.  6ம் தேதி வரை, தசரா விடுமுறை.
நாம் விடுதலைதான் செய்யப்படப் போகிறோம் என்று நம்பி விமானத்தில் ஏறினார் ஜெயலலிதா என்றால் மிகையாகாது.
ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி, ஒரே வாகனத்தில் வந்தனர்.  சுதாகரன் முன்னதாகவே ஒரு காரில் சென்றார். 10 45க்கு ஜெயலலிதா நீதிமன்றத்துக்குள் நுழைந்தார்.  நான்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
நான்கு பேரும் வரிசையாக போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்தனர்.   தனக்கு நேராக சுதாகரன் அமர்ந்திருந்ததைப் பார்த்த ஜெயலலிதா, கண்ணாலேயே, சுதாகரனை பின்னால் செல்லும்படி மிரட்டினார்.  சுதாகரன் உடனடியாக நாற்காலியை பின்னால் தள்ளி அமர்ந்தார்.
சரியாக 11 மணிக்கு கோர்ட் ஓபன் என்று டவாலி சத்தமிட்டார். தன் இருக்கையில் அமர்ந்தார் நீதிபதி குன்ஹா.     அனைவரும் எழுந்து நின்றனர்.  சிசி நம்பர் 208 / 2004.  ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் என்று பெயர்கள் உரக்க அழைக்கப்பட்டது.  அரசுத் தரப்பு இவ்வழக்கின் குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளது.   இதனால் உங்கள் அனைவரையும் நான் குற்றவாளிகள் என்று அறிவிக்கிறேன் என்று நீதிபதி கூறிய அடுத்த வினாடி, ஜெயலலிதா அருகில் இருந்த சசிகலாவை பார்த்து முறைத்தார். அப்போதுதான் அங்கே இருந்தவர்களுக்கு, தான் தண்டிக்கப்படப் போகிறோம் என்பது துளியும் தெரியாது என்பது தெரிந்தது.
11.05க்கு காவல்துறையினர் அனைத்து குற்றவாளிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.  நீங்கள் ஓய்வு எடுப்பதென்றால், அருகில் உள்ள அறையில் ஓய்வெடுக்கலாம் என்றார் நீதிபதி.  நான் என் காரில் காத்திருக்கிறேன் என்றார் ஜெயலலிதா.  நீதிபதி அப்படி அனுமதிக்க முடியாது.  தண்டனை எவ்வளவு என்பதை மதியம் 1 மணிக்கு அறிவிக்கிறேன் என்றார். அடுத்த ஐந்து நிமிடங்களில் ஜெயலலிதாவின் வாகனத்தில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டது.
மதியம் 1 மணிக்கு தீர்ப்பு குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்றார்.  ஜெயலலிதா, இந்த வழக்கு 18 வருடமாக நடக்கிறது. இந்த வழக்கு எனது அரசியல் எதிரிகளால் புனையப்பட்டது.  இந்த வழக்கால் எனக்கு ரத்த அழுத்தம், மன உளைச்சல், மற்றும் நீரிழிவு ஆகிய நோய்கள் வந்துள்ளன.  இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தண்டனை விதிக்க வேண்டும் என்றார், இதன் பிறகு, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இதையே வேறு வார்த்தைகளில் சொன்னார்கள். சசிகலா கூடுதலாக எனக்கு கண் பிரச்சினை இருக்கிறது. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை, கண் மருந்து விட வேண்டும் என்று கூறினார்.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட நீதிபதி, ஆளுக்கு நான்காண்டுகள் சிறை, ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதம் மற்றும் இதர குற்றவாளிகளுக்கு தலா 10 கோடி அபராதம் என்று கூறினார். ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரை, அல்சூர் கேட் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அஞ்சுமலா டி நாயக் மற்றும் சேசாத்திரி நகர் உதவி ஆய்வாளர் ரம்யா ஆகியோர் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்றும், சுதாகரனை பரப்பன அக்ரஹாரா உதவி ஆய்வாளர் வாசு கட்டுப்பாட்டில் எடுத்து, மத்திய சிறையில் அடைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த விபரங்கள் எதுவும் வெளியே உள்ளவர்களுக்கு தெரியாது.
வெளியே வேறு உலகம்.   காவல்துறையினர் எவ்வளவோ முயற்சிகள் செய்து தடுத்தும், ஆயிரக்கணக்கில் பரப்பன அக்ரகாரா வளாகத்தின் அருகே அதிமுக அடிமைகள் கூடினர்.  ரயிலிலும், வாகனத்திலும், விமானத்திலும், ஆயிரக்கணக்கில் கூடினர்.  சரி….. இவ்வாறு கூடிய அடிமைகள், நீதிமன்றத்தில் வந்து என்ன செய்யப்போகிறார்கள் ?
ஆனால், எதற்காக வருகிறோம் என்றே தெரியாமல் ஏறக்குறைய 20 ஆயிரம் அடிமைகள் கூடினார்கள்.  சாரி சாரியாக வந்தார்கள்.   அழுதார்கள்.  புரட்சித் தலைவி வாழ்க என்று உரக்கக் கூவினார்கள். அம்மாவின் விடுதலை உறுதி என்று முழக்கமிட்டார்கள்.
கர்நாடக காவல்துறையினர் இந்த பாதுகாப்புக்காக செலவிட்ட தொகை 2 கோடி.  5000த்துக்கும் மேற்பட்ட காவல்துறையினரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தில் விவிஐபிக்களாக, சிகப்பு விளக்குகளில், தொண்டர்களும், அடியாட்களும் புடைசூழ வலம் வந்த அமைச்சர்களும், அதிமுக முக்கிய பிரமுகர்களும், கர்நாடக காவல்துறையினர் முன்பு பம்மினர்.   குழைந்தனர்.  கூழைக் கும்பிடு போட்டனர்.  சிகப்பு விளக்கில் வலம் வந்து கொண்டு, சாதாரண பாமர மக்களை ஆணவத்தோடும், அலட்சியத்தோடும் கையாண்ட அமைச்சர்களை, கர்நாடக காவல்துறையினர் கசக்கிப் பிழிந்தபோது ஏற்பட்ட இன்பம் இருக்கிறதே….
அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. கர்நாடக காவல்துறையினர், பரப்பன அக்ரகாரா வளாகத்துக்குள் நுழையும் சாலையின் முனையிலேயே அனைவரையும் நிறுத்தினர்.  வாகனம் உள்ளே செல்ல அனுமதிச் சீட்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று தெளிவாகக் கூறினர். மீறி விவாதத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர்.   இதனால் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், எங்கே அம்மாவின் விடுதலைச் செய்தியை அருகாமையில் இருந்து கேட்க முடியாமல் போய்விடுமோ என்று அரற்றினர்.
இறுதியாக உண்மை உறைக்க உறைக்க, முகம் தொங்கிய அதிமுகவினர் சிறிது நேரம் கோஷமிட்டனர்.  கலவரம் செய்யலாமா என்று அவர்கள் யோசிக்கும் முன்னதாகவே 144 தடைச் சட்டம் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு விரிவு படுத்தப்படுவதாக காவல்துறை அறிவித்தது.  கூட்டமாக நின்றவர்களை கலைந்து செல்லச் சொன்னார்கள்.  இரண்டு வாகனங்களில் கைதுக்கு சம்மதித்தவர்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர்.   கைதுக்கும் தயாராக இல்லாமல் சும்மா கூடி நின்ற அடிமைகள் அடித்து விரட்டப்பட்டனர்.
அந்த சாலையில் அனைத்து கடைகளும் காலை ஆறு மணி முதல் அடைக்கப்பட்டிருந்தன.  குடிக்கத் தண்ணீர் கூட கிடையாது.  அங்கே இருந்த அத்தனைபேரும், பட்டினியோடும் தாகத்தோடும்தான் இருந்தனர்.  தண்டனையில் முழு விபரமும் அறிந்து, உணவு குடிநீர் இல்லாமல் தளர்ந்து நடந்து சென்றபோதும், மனதில் ஏற்பட்ட இனம் புரியாத மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
இந்த நீதித்துறையின் வரலாற்றின் மிகச்சிறந்த நாளான 27 செப்டம்பர் 2014 அன்று பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் நடந்த களேபரங்களை ஒளி ஓவியமாக உங்களுக்கு அளிக்கிறேன்.
இந்த ஒளி ஓவியங்களும், இந்தக் கட்டுரையும், வரலாற்றின் பொன்னேட்டில் தன் பெயரை பொறித்த நீதிபதி மைக்கேல் குன்ஹாவுக்கு அர்ப்பணம். அடிமைகளுக்கு, தர்ப்பணம்.
காலை 7 மணிக்கே வந்திறங்கிய ராஜ்ய சபா எம்.பி சசிகலா
ஆடி காரில் ஆணவத்தோடு வந்த சாருலதா, அனுமதி இல்லை என்றதும் அதிர்ச்சி அடைகிறார்
அனுமதி இல்லை என்ற காவல்துறை அதிகாரிகளை அதிர்ச்சியாக பார்க்கும்
மதுரை மேயர் ராஜன் செல்லப்பா
அடிமைகள் கூட்டத்தால் மைல் கணக்கில் வாகனங்கள் தேங்கின
அய்யா நான் ஒரு அமைச்சருங்க என்று கெஞ்சும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

====================================================================================
இன்று,
செப்டம்பர்-28.
 • இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)
 • உலக ரேபிஸ் நோய் தினம்
 • பசுமை நுகர்வோர் தினம்

 • சீன பகுத்தறிவாளர்
  கன்ஃபூசியஸ் பிறந்த தினம்(கிமு 551)=====================================================================================
ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

அதிர்ச்சி பிரதமர்& தொழிலதிப நண்பர்.


பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளதை
யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (business delegation)
சென்றுள்ளது.
அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல்
வெளியாகி இருக்கிறது. 
வர்த்தகக் குழுவில் இடம்
பெற்றுள்ளவர்களில் ஒருவர் – மோடிஜியின் நெருங்கிய நண்பர்.
குஜராத்தில் பல முதலீடுகளை செய்துள்ள தொழிலதிபர்
(அதானி க்ரூப்ஸ் தலைவர் ) கௌதம் அதானி.
இவரது கம்பெனிக்கு ஆஸ்திரேலியாவில் Carmichael (Queensland )என்கிற இடத்தில் சுரங்க கம்பெனி ஒன்றைத் துவக்க
ஆஸ்திரேலிய அரசு இன்று அனுமதி கொடுத்திருக்கிறது.
இந்த அதானி கம்பெனி, ஆஸ்திரேலியாவில் துவங்கும்
நிலக்கரி சுரங்கத்திற்கு, இந்தியாவின் முன்னணி அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India )
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனாகக் கொடுக்கிறது.
கோடிக்கணக்கான டாலர்களில் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போகிறதே என்கிற அச்சத்தில் கூகுளில்
தேடினேன் – ஒரு பில்லியன் அமெரிக்க டாலரின் மதிப்பு
இந்திய ரூபாயில் எவ்வளவு என்று -
1 billion US dollars are equal to how many Indian rupees?
அதிர்ச்சியளிக்கிறது கிடைக்கும் பதில் - As of October 2014, $1,000,000,000 =
61,532,000,000 Indian Rupees.
இத்தனை கோடி ரூபாய் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு
போவது மட்டும் அல்ல -
ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் நஷ்டத்தில்
இயங்குவதால், சுமார் 4000 ஆஸ்திரேலிய சுரங்கத் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதால் – இந்த சுரங்கத்தை கூடிய விரைவில் தோண்ட ஆரம்பிக்க ஆஸ்திரேலிய அரசு ஆர்வம் காட்ட,2017 -ல் முதல் துவக்கப்பட்டு விடும் என்று அதானி சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல – நிலக்கரி சுரங்கம் அமையும் இடத்திலிருந்து
அது ஏற்றுமதி செய்ய அமையவிருக்கும் துறைமுகம்
400 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால், இந்த நிலக்கரிச்
சுரங்கத்திலிருந்து – துறைமுகம் வரையிலான 400 கி.மீ.
தூரத்திற்கு அதானி கம்பெனியே ரெயில் பாதையும் போடப்போகிறது. இந்த ஷரத்தும் – இன்றைய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
“Make in India” என்று இங்கே இந்தியாவில் மிகப்பெரிய
கோஷத்தை உருவாக்கிவிட்டு, ஆஸ்திரேலியா வளம்பெற
மிகப்பெரிய அளவில் அங்கு இந்திய முதலீட்டை கொண்டு செல்வதும், அங்குள்ள வேலையிழந்த சுரங்கத்
தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கொடுப்பதும் எதில் சேர்த்தி …???
ஒன்றுமே புரியவில்லை….
உண்மையாகவே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
மேலும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஸ்டேட் வங்கி - இவ்வளவு பிரம்மாண்டமான அளவு தொகையை எப்படி ஒரு தனிப்பட்ட முதலாளிக்கு / தொழில் நிறுவனத்திற்கு கடனாகக் கொடுக்கிறது?
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்க கம்பெனியான Glencore ( இதற்கு ஆஸ்திரேலியாவிலேயே
13 சுரங்க கம்பெனிகள் உள்ளன ) தற்போது அதன் 8000 ஊழியர்களுக்கு வேலையின்மை/ நஷ்டம் காரணமாக – கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் புதிதாக நிலக்கரிச் சுரங்கங்களைத் தோண்டுவது லாபகரமாக இருக்காது என்று துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் 1 பில்லியன் கோடி டாலர் பணத்தை அங்கு இந்திய முதலீடாகப் போட ஒரு தனிப்பட்ட கௌதம் அதானியை நம்பி State Bank of India கொடுப்பது அறிவுடைமையா …? இந்த கடன் கொடுக்கப்படுவதற்கான காரணம் யார் …???
Kingfisher விஜய் மல்லையாவிற்கு கொடுத்தது போல், இத்தனை கோடி ரூபாயையும் கௌதம் அதானிக்கு தத்தம் செய்தால், நான்கு – ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நஷ்டம் காரணமாக அவர் சுரங்கத்தை மூடினால் – அத்தனை நஷ்டமும் யார் தலையில் வந்து விடியப்போகிறது…..???
முட்டாள் இந்தியன் தலையிலா ….?
இதே வங்கிப் பணத்தைக் கொண்டு, இதே முயற்சிகளை,
இந்திய நிலக்கரி சுரங்களில் மேற்கொண்டு, உள்நாட்டு
உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை
உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளாதது ஏன்…..?
ஆமாம் – பிரதமருடன் செல்லும் வர்த்தகக் குழு அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சிப்பதற்காக செல்கிறதா அல்லது இந்திய பணத்தை (அதுவும் அவர்களது சொந்தப்பணம் அல்ல - அரசு வங்கிப் பணம் – இந்த நாட்டு மக்களின் சேமிப்பு ) அயல்நாடுகளில் கொண்டு சென்று முதலீடு செய்யவா …?

தகவல்;
முகனூலில் 


M Nesan Anbu"சுரன் "
தரும் ஆன்மீகப் பக்கங்கள்.!
மின்வெட்டுக்கும்,மின் தடைக்கும் உள்ள வித்தியாசங்கள்

தமிழகத்தில் தினசரி இரண்டு மணி முதல் நான்கு மணி நேரம் இருக்கும் மின்சாரம் இல்லா நேரத்துக்கு பெயர் மின்தடையா,மின் வெட்டா?குறைந்த பட்சம் தமிழகம் எங்கும் நான்கு மணிநேரம் மின்சாரம் இல்லா காலம் இருக்கிறது.அதற்கு என்ன பெயர் வைக்கலாம்?அமைச்சர் விசுவநாதனோ சட்ட மன்றத்திலேயே தமிழகத்தில் மின்சாரம் மிகையாக இருக்கிறது.மின்தடையே இல்லை என்று மனம்,வாய் கூசாமல் அறிக்கை படிக்கிறார்.சட்டப்பேரவையில் பதிவான வாசங்களை வாக்களித்த மக்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.நம்பிட்டோம்.ஆனால் இங்கு விலையில்லா போன்று மின்சாரமில்லா நேரங்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் அமைச்சர் அவர்களே வழமை போல் அம்மா பெயரை வைத்து விடலாமா?


 தமிழக சட்டப் பேரவையில் மின் துறை அமைச்சர் மின்வெட்டே கிடையாது என்று பலமுறை சொல்லியிருக்கிறார். 
ஆனால்  ஆங்கில நாளேட்டில் வந்த செய்தி, காற்றாலை மின் உற்பத்தி குறைவு காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு வந்துள்ளது. 
2 நாளில் 2400 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று எழுதப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நிலைமையை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நாளேடுகள் மறைத்த போதிலும்,  தினகரன் நாளேடு சற்று விரிவாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மீண்டும் 2 மணி நேரம் மின்வெட்டு நள்ளிரவில் பொதுமக்கள் மறியல் என்ற தலைப்பில் 25-9-2015ல் செய்தி வெளியிட்டுள்ளது. 
அந்தச் செய்தியில், தமிழகத்திற்கு சராசரியாக நாள்தோறும் 13,940 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 10,400 முதல் 10,500 மெகாவாட் என்ற அளவிலேயே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இதனால், தனியாரிடம் 500 முதல் 600 மெகாவாட் வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மின் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ள நிலையில் சென்னை தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் 2 மணி நேரம் மின்தடை செய்ய மின்வாரிய அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.  

இதற்கு முன்னர் மின் பற்றாக்குறை ஏற்பட்ட போது, எந்தெந்த பகுதிகளில் எப்போது மின்தடை செய்யப்படும்,  எவ்வளவு நேரம் மின்தடை நீடிக்கும் என்பதை முன்னதாகவே மின்வாரிய அதிகாரிகள் தெரிவிப்பார்கள்.  
மின்சாரத்தை வாங்கவுள்ள மின் வாரியமோ, மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர் வோரோ யாரும் கோரிக்கை விடுக்காத நிலையில், ஆணையம் தன்னிச்சையாக இவ்வாறு கட்டண ஆணையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க என்ன காரணம்?
ஒழுங்கு முறை ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் ஒருவரான திரு. நாகல்சாமி அப்போதே ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதை மீறி ஆணைப் பிறப்பிக்கப்பட்டதா இல்லையா?
மின்சாரத்தை வாங்கவுள்ள மின் வாரியமோ, மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர் வோரோ யாரும் கோரிக்கை விடுக்காத நிலையில், ஆணையம் தன்னிச்சையாக இவ்வாறு கட்டண ஆணையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க என்ன காரணம்? குஜராத் அதானிக்காகத் தானா? இவ்வாறு கட்டண ஆணையை நீட்டிப்பது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் விவாதிக்கப் படவில்லை. அதிக விலை கொடுத்து ஒப்பந்தப்படி 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்கினால் 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறதே, அதற்கு மின்துறை அமைச்சரின் பதில் என்ன?

மேலும் அமைச்சர் மற்ற மாநிலங்களின் கொள் முதல் விலை அதிகமாக உள்ளதாகக் கூறி குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் இதே அதானி குழுமம் ஒரு யூனிட் மின் சாரத்தை 6 ரூபாய் 4 காசுக்கு வாங்க ஒப்புதல் கொடுத் ததைப் பற்றி அமைச்சர் ஏன் வாய் திறக்கவில்லை? தனக்கு வசதியாக அதை மூடி மறைத்தது ஏன்?

அதானி குழுமத்தோடு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்கூட ஒரு யூனிட் மின்சாரம் 7.01 ரூபாய்க்கு வாங்கத்தான் முடிவு செய்யப்பட்டிருப்பதாகச் செய்தி வந்தது. வெளியிலே குறைவான விலைக்குக் கிடைக்கும்போது, அதிக விலை கொடுத்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது ஏன்?
29-3-2012 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விதி 110இன் கீழ் படித்த அறிக்கையில், “660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த எனது தலைமையிலான அரசு தற்போது முடிவு செய்துள் ளது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 3,960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும் இந்த அனல் மின் திட்டம், 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும்” என்று அறிவித்தார். 2015ஆம் ஆண்டு இறுதி வந்துவிட்டது. என்ன ஆயிற்று இந்தத் திட்டம்? ஏன் உற்பத்தியைத் தொடங்கவில்லை?
மின்துறை அமைச்சர் நேற்றைய தனது உரையில், சூரிய ஒளி மின் உற்பத்தி பற்றி நீண்ட நேரம் பேசியிருக் கிறார். 20-10-2012 அன்று ஜெயலலிதா சூரிய சக்தி மூலம் 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை வெளியிட்டு, 2013, 2014, 2015ஆம் ஆண்டு களில் தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தமிழக அரசால் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்தார். ஆனால் மூன்றாண்டுகளுக்குப் பிறகு பேரவையில் துறையின் அமைச்சர் 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார் என்றால் என்ன பொருள்? 2013ஆம் ஆண்டு 1000 மெகாவாட், 2014ஆம் ஆண்டு 1000 மெகாவாட் என்று அறிவித்ததெல்லாம் பொய்தானே?
12-9-2014 அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட ஆணையில் 12-9-2015க்குள் சூரிய சக்தி மின் நிலையம் அமைத்து, மின் உற்பத் தியை துவக்குவோரிடம், மின்வாரியம் ஒரு யூனிட் மின்சாரத்தை 7.01 ரூபாய் விலையில் வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆணையை 1-4-2016 வரை, அதாவது ஆறு மாத காலத்திற்கு நீட்டித்து, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. ஏன் இந்தக் கால நீடிப்பு என்று நான் அப்போதே கேட்டேன். வெளி மாநிலங்களில் சூரிய சக்தி மின்சாரம் ஒரு யூனிட் ரூ. 5.40க்குக் கிடைக்கும் போது, ரூ. 7.01 என்ற அதிக மான விலை கொடுத்து வாங்க கால நீடிப்பு செய்தது என்? அண்மையில் அதானி குழுமத்தோடு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்கூட ஒரு யூனிட் மின்சாரம் 7.01 ரூபாய்க்கு வாங்கத்தான் முடிவு செய்யப்பட்டிருப்பதாகச் செய்தி வந்தது. வெளியிலே குறைவான விலைக்குக் கிடைக்கும்போது, அதிக விலை கொடுத்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது ஏன்?
“ஆனந்த விகடன்” வார இதழில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிந்தனையாளர் கனகராஜ் கூறும்போது, “எப்போதும் அந்நிய நேரடி முதலீடு சொன்னபடி வந்துவிடுவதில்லை. ஏதோ இரண்டரை லட்சம் கோடி ரூபாயும் நாளை காலையே வந்து குவிந்துவிடும் எனக் கூறப்படும் பிம்பம் உண்மையல்ல.
முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் சலுகைகளில் முக்கியமானது - மூன்று நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப் பட்டால்கூட, அதற்கான இழப்பீட்டை அரசாங்கம் அளிக்கும்; தங்குதடையற்ற மின்சாரம் கிடைக்கும் மாநிலமாக தமிழ்நாடு இப்போது இருக்கிறதா? தடையற்ற மின்சாரம் வழங்க முடியாவிட்டால், அரசாங்கம் அளிக்க வேண்டிய இழப்பீட்டின் பிரமாண்டம் எவ்வளவு எனக் கணிக்க முடியுமா? குற்றம் சுமத்த வேண்டுமென்பதற் காகப் பொத்தாம் பொதுவாகச் சொல்லவில்லை.
தமிழ்நாடு அரசு அறிவித்த “தொலை நோக்குத் திட்டம் 2023”ன் மொத்த முதலீடு 15 லட்சம் கோடி. அதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்குத் தொகையான நான்கரை லட்சம் கோடி ரூபாயை மின்சாரத் துறைக்கு என முதலீடு செய்தார்கள். அதன் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படும், அதுவும் 2017ஆம் ஆண்டுக்குள் 5,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதோ கண்ணுக்கு எட்டும் தொலைவில் வந்துவிட்டது 2017. ஆனால் மின்சாரம்? கடந்த மூன்று வருடங்களில் மின்சார உற்பத்தித் திட்டங்கள் எதுவும் உருப்படியாகச் செயல்படுத்தப்படவில்லை. ஆக 2017ஆம் ஆண்டுக் குள் 500 மெகாவாட் மின்சாரத்தைக்கூட இவர்களால் தயாரிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் “மின்தடை ஏற்பட்டால் இழப்பீடு” எனத் தமிழ்நாடு அரசு வாக்குறுதி கொடுக்கிறது?” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆட்சியினர்தான் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவதில்லையே, தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிடும் ஒரே ஒரு காரியத்தைத்தானே 
சளைக்காமல் செய்து வருகிறார்கள்! அதனால் அறிவிப்பு செய்ததற்காகவே பேரவையில் பாராட்டுத் தீர்மானம் வேறு! மின் உற்பத்தி குறித்து கடந்த நான்கரை ஆண்டு களில் இந்த ஆட்சியினர் செய்த அறிவிப்புகள்தான் எத்தனை? எத்தனை? குறிப்பாக சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியம் கடந்த 23ஆம் தேதி “தீக்கதிர்” நாளிதழில் ஒரு பக்கக் கட்டுரையே மின்துறை பற்றி எழுதியிருக்கிறார். அதில் இந்த ஆட்சியினர் 110வது விதியின் கீழ் பேரவையில் அறிவிக்கப்பட்ட மின் திட்டங்கள் பற்றியும், அந்தத் திட்டங்கள் எல்லாம் இன்னமும் தொடங்கப்படாமல் எந்த நிலையில் உள்ளன என்பதையும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது மின்தடை குறித்து எந்த அறிவிப்பையும் செய்யவில்லை. குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 1 மணி நேரத்திற்கு ஒரு முறை மின்சாரம் தடைபட்டுக் கொண்டிருந்தது. இது பக்ரீத் பண்டிகைக்கு தயாராகிக் கொண்டிருந்த இஸ்லாமிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 
தொடர் மின்வெட்டைக் கண்டித்து அழகிய மண்டபம் பகுதி பொதுமக்கள் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகளுடன் இரவு 8 மணிக்கு சாலையில் திரண்டனர். 

நாகர்கோவில் இடலாக்குடியில் இரவு 11 மணியளவில் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 12 மணிக்கு மின்சாரம் மீண்டும் வந்ததால் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கடந்த 4 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது என்று எழுதியுள்ளது. 

மின்துறை அமைச்சர் நேற்று தனது உரையில், சூரிய ஒளி மின் உற்பத்தி பற்றி நீண்ட நேரம் பேசியிருக்கிறார். 20-10-2012ல் ஜெயலலிதா சூரிய சக்தி மூலம் 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை  வெளியிட்டு, 2013, 2014, 2015ம் ஆண்டுகளில் தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தமிழக அரசால் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்தார். 
ஆனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பேரவையில் துறை அமைச்சர் 2015ம் ஆண்டு இறுதிக்குள் 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார் என்றால் என்ன பொருள்? 2013ம் ஆண்டு 1000 மெகாவாட், 2014ம் ஆண்டு 1000 மெகாவாட் என்று அறிவித்ததெல்லாம் பொய் தானே? 
இப்படி நாட்டில் நடப்பதையெல்லாம் மறைத்துவிட்டு மின்வெட்டே இல்லை என்று அமைச்சர் பேரவையில் உண்மைக்கு மாறான தகவலைச் சொல்வதால் மின்வெட்டால் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் குறைந்து விடுமா? 
சிலரைப் பல நாள் ஏமாற்றலாம், பலரைச் சிலநாள் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. அதுபோல அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு வரும் தமிழ்நாட்டு மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை அமைச்சர் உணரும் காலம் அண்மையில்தான் வெகு தொலைவில் இல்லை. 

                                                                                                       -கலைஞர் கருணாநிதி 


===========================================================================================
இன்று,
செப்டம்பர்-27.

 • உலக சுற்றுலா தினம்
 • இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)
 • கூகுள் சர்ச் என்ஜின் ஆரம்பிக்கப்பட்டது(1998)
 • உலகின் முதலாவது பயணிகள் ரயில் இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது(1825)
 • மெக்சிகோ,ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது(1821)


===========================================================================================
===========================================================================================
6 s , 6+
ஆப்பிள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போன்கள் 6எஸ், 6எஸ் பிளஸ் ஆகிய இரண்தை வெளியிட்டது.
அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ முதல் ஆஸ்திரேலியாவின் சிட்னி வரை உலக நாடுகளில் இந்த இரு போன்களும் விற்பனைக்கு கடைகளில் குவிந்தன. 
ஆயிரக்கணக்கானோர் புதிய போன்களை அள்ளி சென்றனர். சில வாரம் முன் இந்த இரு ஸ்மார்ட் போன்கள் உட்பட ஆப்பிள் புதிய சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தலைவர் டிம் குக் எதிர்பார்த்தபடி, உலகம் முழுவதும் முன்னதாகவே ஆர்டர்கள் குவிந்து விட்டன. 
இதன்படி, இந்த வார இறுதியில் 2 நாளில் மட்டும் ஆப்பிள் ஐபோன்கள் விற்பனை 1.2 கோடி  எட்டும் என்பதில் சந்தேகம் இல்லை என்று ஆப்பிள் நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் சாதனங்கள் புதிதாக அறிமுகம் செய்ததும், செப்டம்பர் மாத இறுதியில்  தான் கடைகளுக்கு விற்பனைக்கு வரும். வார இறுதி நாட்களில் தான் அதன் விற்பனை சாதனை படைக்கும்.   கடந்தாண்டு ஆப்பிள் புதிய போன்கள் அறிமுகம் செய்தபோது வார இறுதியில் விற்பனை 1 கோடியை  எட்டியது. இந்த முறை அதையும் தாண்டும் என்று தெரிகிறது. 
=====================================================================================