பாலியல் குற்றவாளி சங்கராச்சாரி
மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
கருநாடக மாநிலத்தில் ஹோசாநகர் ராமச்சந் திரபூர் மடாதிபதியாக உள்ள சங்கராச்சார்யா ராகவேஷ்வர பாரதி என்பவர்மீதான பாலியல் வழக்கு ஓராண்டாக கிடப் பில் போடப்பட்டுள்ளது.
மடாதிபதி ராகவேஷ் வர பாரதி, பிரேமலதா சாஸ்திரி என்பவரை அரித்துவார், ஜோத்பூர் போன்ற பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலி யல் வன்முறை செய்தார் என்று கருநாடக காவல் துறையினரிடம் கடந்த ஜனவரியில் புகார் கொடுத் திருந்தார். கருநாடக காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்தனர். உளவுப்பிரிவினரின் விசா ரணையில் அலைபேசிகள் பதிவுகளைக் கொண்டு அவர் அளித்த புகார் உண்மை என்று கண்டு பிடிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். ரிஷிபாலுக்கு நெருக்கமானவர்
மடாதிபதிக்கு நெருக் கமாக இருந்து வருபவர் ஆர்.எஸ்.எஸ். அமைப் பைச் சேர்ந்த சேவா பாரதியின் தேசிய பொதுச் செயலாளரான ரிஷிபால் தாத்வால் என்பவர் ஆவார். அவரும் இவ்வழக் கில் முக்கிய சாட்சி ஆவார்.
ராகவேசுவர பாரதி என்கிற சாமியார்மீதான பாலியல் குற்ற வழக்கில் உரிய நடவடிக்கை எடுக் காத கருநாடக காவல் துறையின்மீது தேசிய மகளிர் ஆணையத் தலை வர் கண்டனத்தைத் தெரி வித்துள்ளார்.
தேசிய மகளிர் ஆணை யத் தலைவர் லலிதா குமாரமங்கலம் சாமியார் மீதான பாலியல் வழக்கில் கருநாடக காவல்துறை யினரின் மெத்தனப்போக் கைக் கடுமையாக கண்டித் துள்ளார். தேசிய மகளிர் ஆணை யத்தின் தலைவர் லலிதா குமாரமங்கம் பெங்களூரு வந்திருந்தபோது, இவ் வழக்கில் சாமியார்மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்த கரு நாடக காவல்துறையினர் தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மெத் தனமாக இருந்து வந்துள் ளனர். இரண்டாம் முறை யாக பெங்களூரு வந்த மகளிர் ஆணையத் தலை வர், சாமியார்மீதான பாலியல் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய் யாத கருநாடகக் காவல் துறையினருக்கு கடும் கண் டனத்தைத் தெரிவித்துள் ளார்.
காவல்துறையினர், சாமியார்மீது உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறியதாலேயே மகளிர் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியுள்ளது. ஆனா லும், அதன்பின்னரும் குற்ற அறிக்கைகூட தாக் கல் செய்யாமல் இருந் துள்ளனர்.
மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமார மங்கலம் கூறுகையில், இப்போது வளர்ந்து வரும் சூழ்நிலைகள் பெண்களுக்கு மாநிலத் தில் பாதுகாப்பு இல்லாத நிலையையே உணர்த்து கின்றன. குற்ற அறிக்கை அளிப்பதற்கு ஓராண்டு காலத்தை எடுத்துக் கொண்டு, ரகசியமாக வழக்கை நடத்த வேண்டிய அவசியம் என்ன? அரசி யல் தலையீடுகள் காரண மாகவே காவல்துறையினர் இவ்வழக்கில் அலட்சியத் துடன் நடந்துகொண்டுள் ளார்கள். பாதிப்புக்கு உள்ளானவர்கள் முகத்தை மூடிக்கொண்டு செல்லக் கூடிய நிலையில், குற்ற வாளி சுதந்திரமாக நட மாடுவதா? இந்த வழக் கின்மூலம் பெண்களுக்குப் பாதுகாப்பின்றி அச்சத் துடன் இருக்கின்ற நிலையே உள்ளது என்பது தெரிகிறது. இதில் அரசி யல் தலையீடுகள் இருப் பது என்பது வேதனை யானதாகும்.
கடந்த முறை நான் காவல்துறை உயர் அலு வலர்களை சந்தித்தபோது, கூடிய விரைவில் குற்ற அறிக்கையை அளித்து விடுவதாக உறுதி கூறினர். ஆனால், இன்றுவரை எதுவுமே செய்யவில்லை. பிணையில் வெளியே வந்துள்ள சாமியார் தன் ஆட்கள்மூலமாக பாதிக் கப்பட்ட பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வரு கிறார். பாதிப்புக்கு உள் ளான பெண்கள் என்னி டம் தங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ரூ.1.3 கோடிக்கு பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் தந்தை டார்வினின் கடிதம் விற்பனை!
பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் சார்லஸ் டார்வின் எழுதிய கடிதம், அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் 1.97 லட்சம் டாலர்களுக்கு (சுமார் ரூ.1.3 கோடி) விற்பனையானது.
நியூயார்க் நகரிலுள்ள ஏல மையத்தில் அந்தக் கடிதம் ஏலத்துக்கு வரும்போது, அது 90,000 டாலர்களுக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், எதிர்பார்த்ததைவிட இரு மடங்குக்கும் அதிக விலையில் அந்தக் கடிதம் விற்பனையானது. 1880-ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், பைபிள் புத்தகத்தை தாம் புனித நூலாகக் கருதவில்லை எனவும், இயேசு கிறிஸ்துவை கடவுளின் குழந்தை என நம்பவில்லை எனவும் டார்வின் குறிப்பிட்டுள்ளார்.
நியூயார்க் நகரிலுள்ள ஏல மையத்தில் அந்தக் கடிதம் ஏலத்துக்கு வரும்போது, அது 90,000 டாலர்களுக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், எதிர்பார்த்ததைவிட இரு மடங்குக்கும் அதிக விலையில் அந்தக் கடிதம் விற்பனையானது. 1880-ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், பைபிள் புத்தகத்தை தாம் புனித நூலாகக் கருதவில்லை எனவும், இயேசு கிறிஸ்துவை கடவுளின் குழந்தை என நம்பவில்லை எனவும் டார்வின் குறிப்பிட்டுள்ளார்.
மத நம்பிக்கையற்ற டார்வின், மத நம்பிக்கை கொண்ட தனது நண்பர்கள், உறவினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அது குறித்து வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில், மதம் குறித்து தனது கருத்தைத் தெரிவிக்குமாறு டார்வினின் நண்பர் மெக்டெர்மட் என்பவர் அவருக்கு கடிதம் எழுதினார்.
அது குறித்து ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னால் அதனை யாருக்கும் தெரிவிக்காமல் இருப்பதாகவும் மெக்டெர்மட் வாக்குறுதி அளித்தார்.
இதையடுத்து, பைபிள் மீதும், இயேசு கிறிஸ்து மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை கடிதம் மூலம் டார்வின் தெளிவுபடுத்தினார்.
மெக்டெர்மட்டும் அந்தக் கடிதத்தை யாரிடமும் காட்டாமல் தனது வாக்குறுதியைக் காப்பாற்றினார்.
100 ஆண்டுகள் கழித்து அந்தக் கடிதம் குறித்து வெளியுலகுக்குத் தெரிய வந்தது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++
இன்று,
செப்டம்பர்-25.
- மொசாம்பிக், பாதுகாப்பு படையினர் தினம்
- தமிழ் நாடக எழுத்தாளர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம்(1899)
- அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது(1962)
- பாஸ்கோ நூனியெத் தே பால்போவா, பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவர்(1513)
மெக்காவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 717-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 719-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஹஜ் புனித யாத்திரையின் போது கூட்டம் அதிகமானதால் திடீரென நெரிசல் ஏற்பட்டு இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. ஹஜ் புனித யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் மினாவில் கூடியிருந்த போது நெரிசல் ஏற்பட்டது. மினாவில் சாத்தானின் மீது கல் எறியும் நிகழ்ச்சியின் போது இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.
2 வாரத்தில் இரண்டாவது முறையாக மெக்காவில் மிகப்பெரிய துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. செப்டம்பர் 11-ம் தேதி மெக்காவில் கிரேன் விழுந்து 107 பேர் உயரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மெக்காவில் 1990-ம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் 1,426 பேர் உயிரிழந்தனர்.
1994-ம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் 270 பேரும்,
1998-ம் ஆண்டு 118 பேரும்,
2001-ம் ஆண்டு35 பேரும் மெக்கா மசூதி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++