உலக இணையம்..., & வெங்காயம்..
உலகத்தையே இணையம் ஆட்டிப்படிக்கலாம் இந்தியாவை இணையத்துடன் சேர்ந்து ஆட்டி படைப்பது வெங்காயம்தான்.
அதானால் இரணடியும் ஒரே தரப்பில் வைக்கலாம் தவறில்லை.
* இண்டர்நெட் இயங்க சுமார் 50 கோடி குதிரைத்திறன் கொண்ட மின்சாரம் தேவைப்படும்.
* ஒரே ஒரு மின்னஞ்சலை தயாரிக்க 200 கோடி மின் அணுக்கள் (எலக்ட்ரான்) தேவைப்படும்.
* உலகின் 700 கோடி மக்கள் தொகையில் சுமார் 240 கோடி பேர் இண்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர்.
* ஸ்ட்ராபெர்ரி பழத்தின் எடையும் இண்டர்நெட் எடையும் ஒன்று தான் என்கின்றார் ரஸ்ஸல் செய்ட்ஸ் எனும் இயற்பியலாளர்.
* தற்சமயம் 870 கோடி கணினிகள் இண்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
* உலகம் முழுக்க சுமார் 60 நொடிகளில் 72 மணி நேரத்திற்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
* இண்டர்நெட் பயன்படுத்தும் கருவிகள் அனைத்தும் சிக்னல்களை மின்னணுக்களாக மாற்றுகின்றன, இதன் மூலம் மின்னணுக்கள் சிறிய தூரம் வரை பயணம் செய்யும். இவை அனைத்தும் சில நொடிகளில் நடைபெற்று விடும்.
* இண்டர்நெட்டில் இருக்கும் 50 லட்சம் டெராபைட்கள் ஒரு கைப்பிடி மண் எடையை விட குறைவு தான்.
* வட அமெரிக்காவில் சுமார் 78 சதவீதம் பேர் இண்டர்நெட் பயன்படுத்துகின்றனர்.
* ஆசிய கண்டத்தில் சுமார் 170 கோடி பேர் இண்டர்நெட் பயன்படுத்துகின்றனர்.
வெங்காயம்
இந்திய மக்களை அவ்வப்போது தங்கத்துடன் சேர்ந்து விலையில் பயப்படுத்துவது வெங்காயம்.ஆனாலும் வெங்காயமின்றி உணவை பற்றி யோசிக்கவே இயலவில்லை.அதானால்தான் வெங்காயம் டெல்லி மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தையே கொண்டு வந்து உரித்தவர்களை மட்டுமின்றி பதவி இழந்தவர்களையும் கண்ணீர் சிந்த வைத்தது.
நம் அன்றாட உணவில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது.
வெங்காயம் சிறுவெங்காயம் அல்லது நாட்டு வெங்காயம் என்று ஒரு வகையாகவும், பெரிய வெங்காயம் அல்லது பெல்லாரி வெங்காயம் என்று காரம் குறைவாக கொண்ட இன்னொரு வகையாகவும் உள்ளது.
சைவ உணவில் மட்டுமல்ல... அசைவ உணவிலும் நல்ல பலன் தரும் வெங்காயம், நமது நரம்புகளில் ரத்தம் கட்டியாக உறைவதைத் தடுக்கிறது.
தினசரி இரவு உணவுக்குப் பிறகு மூன்று, நான்கு சிறு வெங்காயத்தைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் புகை பிடிப்பவர்கள் ஓரளவு விஷம் இறங்குவதைத் தடுக்க வழி உள்ளது.
பெரிய வெங்காயத்தை சிறப்பான தனி இயந் திரத்தில் காய வைத்து, ஆனியன் பிளேக்ஸ், ஆனியன் பவுடர் போன்ற ஏற்றுமதிக்கு உகந்த பொருள்களை தயார் செய்கின்றனர்.
பெரிய வெங்காயப் பவுடரில் இருந்து வெங்காய உப்பு தயாரிக்கலாம். இது மேல்நாடுகளில் உணவுகளில் நன்கு பயன்படுத்தப்படுகிறது.
வெங்காயத்தை உணவோடு உண்டால் நல்ல ஆரோக்கியம் பெருகும். உணவின் சுவை கூட்டி ஜீரணம் ஆகும். தலைமுடி கொட்டுவதை தடுத்து வழுக்கை விழாது தடுக்கும். வெங்காயம் நரை ஏற்படுத்துவதை தள்ளிப் போடவும் உதவும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் வெங்காயம் வீரிய சக்திகளையும், வெப்பத்தையும் மிதமாகத் தூண்டும், வாத உபாதைகளைப் போக்க வல்லது. கபத்தை வளர்ப்பது, வலுவூட்டுவது பித்தத்தை தூண்டுவது மற்றும் அக்னி மந்தத்தைப் போக்குவது என பல நன்மைகள் வெங்காயத்தால் கிடைக்கிறது.
ரத்த விருத்தி தரும் வெங்காயம், எலும்புகளுக்கும் நல்ல வன்மையைத் தரும். குஷ்டம், குன்மம், மேகநீர் வியாதி, வாதரோகம், வலிப்பு நோய், மூலநோய், ஜலதோஷம் தொற்று நோய் இவற்றை எல்லாம் சமனப்படுத்தும் வெங்காயம், உலகெங்கும் பயிரிடப்பட்டு உலக மக்கள் அனைவராலும் உண்ணப்படுகிறது.
வெங்காயத்தை நீண்ட நாள் இருப்பில் வைத்திட வினிகரில் (ஜாடியில்) ஊற வைப்பது வழக்கம்.
புரதம் வெங்காயத்தில் இல்லை.
இருப்பினும் இதில் காரம், ஜீவ சத்து உண்டு. சற்று இனிப்பு சுவையும் உண்டு. மசாலாவுக்கு ஏற்ற வாசனை அதிகம்.
இளமையுடன் வாழ நறுக்கிய வெங்காயத்தை நெய்யில் வதக்கி உணவுடன் சேர்த்து திடமான சரீரம் பெறலாம். இழந்த சக்தியை மீட்க உதவும் வெங்காயம் உறைந்த ரத்தத்தை கரைத்து விடுவதாலும், இருதயத்தின் சுற்றுச் சுவர்களை நன்கு வலிமையடையச் செய்வதாலும் இதய நோய் வராது காக்கிறது.
தாகம் எடுக்கும் பொழுதெல்லாம் இரண்டு, மூன்று வெங்காயத்தை உண்டால் பாலைவனத்தில் கூட தண்ணீர் தட்டுப்பாட்டில் பாதிப்பின்றி தப்பலாம்.
பித்தம் அதிகமாகி வாய்க் கசக்கும் தருணம், தோலை உரித்து வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் பித்தம் சரியாகி விடும்.
வெங்காயப் பூவில் கூட இதன் சத்துக்கள் அபரிதமாக உள்ளது. வெங்காயத் தழையும் சத்துள்ளதாக, கோழிகளுக்குக் கூட நல்ல தீனியாக உள்ளது.
நல்ல பெரிய முட்டை பெற உதவும் வெங்காயத்தழையை உண்ட கோழியின் முட்டை மஞ்சள் கரு சிதையாமலும் கெட்டியாக இருக்கும்.
பழுப்பு தங்க நிறச்சாயம் செய்யும் தொழிலுக்கு வெங்காயத் தோல் நன்றாகப் பயன்படுகிறது.
சிறுகுடலின், ஜீரண உபாதை உள்ளவர்களுக்கும் வெங்காயம் கை கண்ட மருந்தாகும். இருமினாலும், ஜலதோஷமானாலும் வேக வைத்த வெங்காயத்தின் சாற்றை ஒரு ஸ்பூன் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் சரியாகி விடும்.
வெங்காயத்தின் முழுப் பயனை அடைய வேண்டுமென்றால் பச்சையாக சாப்பிட வேண்டும். பச்சை வெங்காயத்துக்கு நல்ல தூக்கத்தையளிக்கும் தன்மை உண்டு.
கீல் வாயுவினால் மூட்டு வீங்கி வலி வந்தால் வெங்காயம் உதவும். காமாலை நோய் போக்கவும், கண்பார்வை மங்கல் போக்கவும் உதவும் வெங்காயம், காலை பலகாரத்துக்கு தேங்காய் சட்னியை விட வெங்காயச் சட்னி பயன்படுத்தலாம்.
"பிளேக்' நோயினால் மக்கள் மாண்டு கொண்டிருந்த பொழுது வெங்காய, வெள்ளைப் பூண்டு வியாபாரிகள் வீட்டில் ஒருவரும் இறக்காமல் இருந்ததை கண்டு, வியப்படைந்த வரலாறும் உண்டு.
படுக்கை அறையில் வெங்காயத்தை நறுக்கி வைத்து விட்டால் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் உள்ளே நுழையாத அளவிற்கு வெங்காய நெடி சிறந்த விரட்டியாக பயன்படுகிறது.
ரத்த அழுத்தம் உடையவர்கள் தினசரி காலையும், மாலையும் பத்து சிறு வெங்காயங்களை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகி விடுகிறது.
வெங்காய லேகியம் மேக நோயிலிருந்து விடுவிக்கும். இதற்கு வெள்ளை வெங்காயம் சிறந்தது.
சதை போட்டு பெரிய மலை போல உள்ளவர்களை சரியாக்கும் அற்புதம் கொண்டது வெங்காயம். இதற்கு காரணம் வெங்காயத்தில் கொழுப்புச் சத்து கிடையாது.
வெங்காயத்தை பயன்படுத்தி மருந்து தயாரித்து தொண்டைப்புண், வாய்ப்புண், மாந்தம், மகோதரம் சீறுநீரக கல் முதலிய உபாதைகளைப் போக்கலாம்.
வெங்காயச் சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட்டால் சீத பேதி சரியாகும். குல்கந்துடன் கூட இதனை உண்ணலாம். தாது புஷ்டி ஏற்பட வெங்காய விதைகளை தேன் அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
========================================================================================
இந்த விண்கல் நாளை பூமியுடன் மோதலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.அப்படி மோதினால் அடுத்த நாள் சுரன் பதிவேற்றம் இராது.படிக்கவும் .............,
நாசா வெளியிட்ட ஒரு பெரு வெடிப்பு[சூப்பர் நோவா] படம்.
===========================================================================================

இந்திய செயற்கைக் கோள் மங்கள்யான் செவ்வாய் கிரகம் சென்றடைந்த முதலாம் ஆண்டு.