மின்வெட்டுக்கும்,மின் தடைக்கும் உள்ள வித்தியாசங்கள்

தமிழகத்தில் தினசரி இரண்டு மணி முதல் நான்கு மணி நேரம் இருக்கும் மின்சாரம் இல்லா நேரத்துக்கு பெயர் மின்தடையா,மின் வெட்டா?குறைந்த பட்சம் தமிழகம் எங்கும் நான்கு மணிநேரம் மின்சாரம் இல்லா காலம் இருக்கிறது.அதற்கு என்ன பெயர் வைக்கலாம்?அமைச்சர் விசுவநாதனோ சட்ட மன்றத்திலேயே தமிழகத்தில் மின்சாரம் மிகையாக இருக்கிறது.மின்தடையே இல்லை என்று மனம்,வாய் கூசாமல் அறிக்கை படிக்கிறார்.சட்டப்பேரவையில் பதிவான வாசங்களை வாக்களித்த மக்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.நம்பிட்டோம்.ஆனால் இங்கு விலையில்லா போன்று மின்சாரமில்லா நேரங்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் அமைச்சர் அவர்களே வழமை போல் அம்மா பெயரை வைத்து விடலாமா?


 தமிழக சட்டப் பேரவையில் மின் துறை அமைச்சர் மின்வெட்டே கிடையாது என்று பலமுறை சொல்லியிருக்கிறார். 
ஆனால்  ஆங்கில நாளேட்டில் வந்த செய்தி, காற்றாலை மின் உற்பத்தி குறைவு காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு வந்துள்ளது. 
2 நாளில் 2400 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று எழுதப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நிலைமையை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நாளேடுகள் மறைத்த போதிலும்,  தினகரன் நாளேடு சற்று விரிவாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மீண்டும் 2 மணி நேரம் மின்வெட்டு நள்ளிரவில் பொதுமக்கள் மறியல் என்ற தலைப்பில் 25-9-2015ல் செய்தி வெளியிட்டுள்ளது. 
அந்தச் செய்தியில், தமிழகத்திற்கு சராசரியாக நாள்தோறும் 13,940 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 10,400 முதல் 10,500 மெகாவாட் என்ற அளவிலேயே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 

இதனால், தனியாரிடம் 500 முதல் 600 மெகாவாட் வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மின் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ள நிலையில் சென்னை தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் 2 மணி நேரம் மின்தடை செய்ய மின்வாரிய அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.  

இதற்கு முன்னர் மின் பற்றாக்குறை ஏற்பட்ட போது, எந்தெந்த பகுதிகளில் எப்போது மின்தடை செய்யப்படும்,  எவ்வளவு நேரம் மின்தடை நீடிக்கும் என்பதை முன்னதாகவே மின்வாரிய அதிகாரிகள் தெரிவிப்பார்கள்.  
மின்சாரத்தை வாங்கவுள்ள மின் வாரியமோ, மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர் வோரோ யாரும் கோரிக்கை விடுக்காத நிலையில், ஆணையம் தன்னிச்சையாக இவ்வாறு கட்டண ஆணையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க என்ன காரணம்?
ஒழுங்கு முறை ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் ஒருவரான திரு. நாகல்சாமி அப்போதே ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதை மீறி ஆணைப் பிறப்பிக்கப்பட்டதா இல்லையா?
மின்சாரத்தை வாங்கவுள்ள மின் வாரியமோ, மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர் வோரோ யாரும் கோரிக்கை விடுக்காத நிலையில், ஆணையம் தன்னிச்சையாக இவ்வாறு கட்டண ஆணையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க என்ன காரணம்? குஜராத் அதானிக்காகத் தானா? இவ்வாறு கட்டண ஆணையை நீட்டிப்பது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் விவாதிக்கப் படவில்லை. அதிக விலை கொடுத்து ஒப்பந்தப்படி 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்கினால் 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறதே, அதற்கு மின்துறை அமைச்சரின் பதில் என்ன?

மேலும் அமைச்சர் மற்ற மாநிலங்களின் கொள் முதல் விலை அதிகமாக உள்ளதாகக் கூறி குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் இதே அதானி குழுமம் ஒரு யூனிட் மின் சாரத்தை 6 ரூபாய் 4 காசுக்கு வாங்க ஒப்புதல் கொடுத் ததைப் பற்றி அமைச்சர் ஏன் வாய் திறக்கவில்லை? தனக்கு வசதியாக அதை மூடி மறைத்தது ஏன்?

அதானி குழுமத்தோடு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்கூட ஒரு யூனிட் மின்சாரம் 7.01 ரூபாய்க்கு வாங்கத்தான் முடிவு செய்யப்பட்டிருப்பதாகச் செய்தி வந்தது. வெளியிலே குறைவான விலைக்குக் கிடைக்கும்போது, அதிக விலை கொடுத்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது ஏன்?
29-3-2012 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விதி 110இன் கீழ் படித்த அறிக்கையில், “660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த எனது தலைமையிலான அரசு தற்போது முடிவு செய்துள் ளது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 3,960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும் இந்த அனல் மின் திட்டம், 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும்” என்று அறிவித்தார். 2015ஆம் ஆண்டு இறுதி வந்துவிட்டது. என்ன ஆயிற்று இந்தத் திட்டம்? ஏன் உற்பத்தியைத் தொடங்கவில்லை?
மின்துறை அமைச்சர் நேற்றைய தனது உரையில், சூரிய ஒளி மின் உற்பத்தி பற்றி நீண்ட நேரம் பேசியிருக் கிறார். 20-10-2012 அன்று ஜெயலலிதா சூரிய சக்தி மூலம் 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை வெளியிட்டு, 2013, 2014, 2015ஆம் ஆண்டு களில் தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தமிழக அரசால் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்தார். ஆனால் மூன்றாண்டுகளுக்குப் பிறகு பேரவையில் துறையின் அமைச்சர் 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார் என்றால் என்ன பொருள்? 2013ஆம் ஆண்டு 1000 மெகாவாட், 2014ஆம் ஆண்டு 1000 மெகாவாட் என்று அறிவித்ததெல்லாம் பொய்தானே?
12-9-2014 அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட ஆணையில் 12-9-2015க்குள் சூரிய சக்தி மின் நிலையம் அமைத்து, மின் உற்பத் தியை துவக்குவோரிடம், மின்வாரியம் ஒரு யூனிட் மின்சாரத்தை 7.01 ரூபாய் விலையில் வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆணையை 1-4-2016 வரை, அதாவது ஆறு மாத காலத்திற்கு நீட்டித்து, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. ஏன் இந்தக் கால நீடிப்பு என்று நான் அப்போதே கேட்டேன். வெளி மாநிலங்களில் சூரிய சக்தி மின்சாரம் ஒரு யூனிட் ரூ. 5.40க்குக் கிடைக்கும் போது, ரூ. 7.01 என்ற அதிக மான விலை கொடுத்து வாங்க கால நீடிப்பு செய்தது என்? அண்மையில் அதானி குழுமத்தோடு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்கூட ஒரு யூனிட் மின்சாரம் 7.01 ரூபாய்க்கு வாங்கத்தான் முடிவு செய்யப்பட்டிருப்பதாகச் செய்தி வந்தது. வெளியிலே குறைவான விலைக்குக் கிடைக்கும்போது, அதிக விலை கொடுத்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது ஏன்?
“ஆனந்த விகடன்” வார இதழில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிந்தனையாளர் கனகராஜ் கூறும்போது, “எப்போதும் அந்நிய நேரடி முதலீடு சொன்னபடி வந்துவிடுவதில்லை. ஏதோ இரண்டரை லட்சம் கோடி ரூபாயும் நாளை காலையே வந்து குவிந்துவிடும் எனக் கூறப்படும் பிம்பம் உண்மையல்ல.
முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் சலுகைகளில் முக்கியமானது - மூன்று நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப் பட்டால்கூட, அதற்கான இழப்பீட்டை அரசாங்கம் அளிக்கும்; தங்குதடையற்ற மின்சாரம் கிடைக்கும் மாநிலமாக தமிழ்நாடு இப்போது இருக்கிறதா? தடையற்ற மின்சாரம் வழங்க முடியாவிட்டால், அரசாங்கம் அளிக்க வேண்டிய இழப்பீட்டின் பிரமாண்டம் எவ்வளவு எனக் கணிக்க முடியுமா? குற்றம் சுமத்த வேண்டுமென்பதற் காகப் பொத்தாம் பொதுவாகச் சொல்லவில்லை.
தமிழ்நாடு அரசு அறிவித்த “தொலை நோக்குத் திட்டம் 2023”ன் மொத்த முதலீடு 15 லட்சம் கோடி. அதில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்குத் தொகையான நான்கரை லட்சம் கோடி ரூபாயை மின்சாரத் துறைக்கு என முதலீடு செய்தார்கள். அதன் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படும், அதுவும் 2017ஆம் ஆண்டுக்குள் 5,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதோ கண்ணுக்கு எட்டும் தொலைவில் வந்துவிட்டது 2017. ஆனால் மின்சாரம்? கடந்த மூன்று வருடங்களில் மின்சார உற்பத்தித் திட்டங்கள் எதுவும் உருப்படியாகச் செயல்படுத்தப்படவில்லை. ஆக 2017ஆம் ஆண்டுக் குள் 500 மெகாவாட் மின்சாரத்தைக்கூட இவர்களால் தயாரிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் “மின்தடை ஏற்பட்டால் இழப்பீடு” எனத் தமிழ்நாடு அரசு வாக்குறுதி கொடுக்கிறது?” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆட்சியினர்தான் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவதில்லையே, தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிடும் ஒரே ஒரு காரியத்தைத்தானே 
சளைக்காமல் செய்து வருகிறார்கள்! அதனால் அறிவிப்பு செய்ததற்காகவே பேரவையில் பாராட்டுத் தீர்மானம் வேறு! மின் உற்பத்தி குறித்து கடந்த நான்கரை ஆண்டு களில் இந்த ஆட்சியினர் செய்த அறிவிப்புகள்தான் எத்தனை? எத்தனை? குறிப்பாக சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியம் கடந்த 23ஆம் தேதி “தீக்கதிர்” நாளிதழில் ஒரு பக்கக் கட்டுரையே மின்துறை பற்றி எழுதியிருக்கிறார். அதில் இந்த ஆட்சியினர் 110வது விதியின் கீழ் பேரவையில் அறிவிக்கப்பட்ட மின் திட்டங்கள் பற்றியும், அந்தத் திட்டங்கள் எல்லாம் இன்னமும் தொடங்கப்படாமல் எந்த நிலையில் உள்ளன என்பதையும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது மின்தடை குறித்து எந்த அறிவிப்பையும் செய்யவில்லை. குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 1 மணி நேரத்திற்கு ஒரு முறை மின்சாரம் தடைபட்டுக் கொண்டிருந்தது. இது பக்ரீத் பண்டிகைக்கு தயாராகிக் கொண்டிருந்த இஸ்லாமிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 
தொடர் மின்வெட்டைக் கண்டித்து அழகிய மண்டபம் பகுதி பொதுமக்கள் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகளுடன் இரவு 8 மணிக்கு சாலையில் திரண்டனர். 

நாகர்கோவில் இடலாக்குடியில் இரவு 11 மணியளவில் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 12 மணிக்கு மின்சாரம் மீண்டும் வந்ததால் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கடந்த 4 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது என்று எழுதியுள்ளது. 

மின்துறை அமைச்சர் நேற்று தனது உரையில், சூரிய ஒளி மின் உற்பத்தி பற்றி நீண்ட நேரம் பேசியிருக்கிறார். 20-10-2012ல் ஜெயலலிதா சூரிய சக்தி மூலம் 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை  வெளியிட்டு, 2013, 2014, 2015ம் ஆண்டுகளில் தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தமிழக அரசால் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்தார். 
ஆனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பேரவையில் துறை அமைச்சர் 2015ம் ஆண்டு இறுதிக்குள் 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார் என்றால் என்ன பொருள்? 2013ம் ஆண்டு 1000 மெகாவாட், 2014ம் ஆண்டு 1000 மெகாவாட் என்று அறிவித்ததெல்லாம் பொய் தானே? 
இப்படி நாட்டில் நடப்பதையெல்லாம் மறைத்துவிட்டு மின்வெட்டே இல்லை என்று அமைச்சர் பேரவையில் உண்மைக்கு மாறான தகவலைச் சொல்வதால் மின்வெட்டால் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் குறைந்து விடுமா? 
சிலரைப் பல நாள் ஏமாற்றலாம், பலரைச் சிலநாள் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. அதுபோல அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு வரும் தமிழ்நாட்டு மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை அமைச்சர் உணரும் காலம் அண்மையில்தான் வெகு தொலைவில் இல்லை. 

                                                                                                       -கலைஞர் கருணாநிதி 


===========================================================================================
இன்று,
செப்டம்பர்-27.

  • உலக சுற்றுலா தினம்
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)
  • கூகுள் சர்ச் என்ஜின் ஆரம்பிக்கப்பட்டது(1998)
  • உலகின் முதலாவது பயணிகள் ரயில் இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது(1825)
  • மெக்சிகோ,ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது(1821)


===========================================================================================
===========================================================================================
6 s , 6+
ஆப்பிள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போன்கள் 6எஸ், 6எஸ் பிளஸ் ஆகிய இரண்தை வெளியிட்டது.
அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ முதல் ஆஸ்திரேலியாவின் சிட்னி வரை உலக நாடுகளில் இந்த இரு போன்களும் விற்பனைக்கு கடைகளில் குவிந்தன. 
ஆயிரக்கணக்கானோர் புதிய போன்களை அள்ளி சென்றனர். சில வாரம் முன் இந்த இரு ஸ்மார்ட் போன்கள் உட்பட ஆப்பிள் புதிய சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தலைவர் டிம் குக் எதிர்பார்த்தபடி, உலகம் முழுவதும் முன்னதாகவே ஆர்டர்கள் குவிந்து விட்டன. 
இதன்படி, இந்த வார இறுதியில் 2 நாளில் மட்டும் ஆப்பிள் ஐபோன்கள் விற்பனை 1.2 கோடி  எட்டும் என்பதில் சந்தேகம் இல்லை என்று ஆப்பிள் நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் சாதனங்கள் புதிதாக அறிமுகம் செய்ததும், செப்டம்பர் மாத இறுதியில்  தான் கடைகளுக்கு விற்பனைக்கு வரும். வார இறுதி நாட்களில் தான் அதன் விற்பனை சாதனை படைக்கும்.   கடந்தாண்டு ஆப்பிள் புதிய போன்கள் அறிமுகம் செய்தபோது வார இறுதியில் விற்பனை 1 கோடியை  எட்டியது. இந்த முறை அதையும் தாண்டும் என்று தெரிகிறது. 
=====================================================================================






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?