ஒசாமா பின் லேடனை விற்றுவிட்டார்கள்
அல் கைதா இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவரான ஒசாமா பின் லேடன், அமெரிக்கப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு கடந்த 2 ஆம் திகதியுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன.
இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளே அமெரிக்காவுக்கு ஒசாமா பின் லேடனை விற்பனை செய்ததாக வெளியான கட்டுரையொன்று சர்வதேச ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரான செய்மர் ஹேர்ஸ், பிரிட்டனில் வெளியாகும் லண்டன் ரிவியூ ஒவ் புக்ஸ் எனும் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையொன்றில் மேற்படி தகவலை வெளியிட்டிருந்தார்.
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்துக்கு அருகிலுள்ள அபோதாபாத் நகரிலுள்ள வீடொன்றில் குடும்பத்தினருடன் மறைந்திருந்த ஒசாமா பின்லேடனை, 02.05.2011 ஆம் திகதி ஹெலிகொப்டர்களில் இரகசியமாக வந்திறங்கிய அமெரிக்க கடற்படையின் சீல் எனும் விசேடப் படைப்பிரிவினர் சுட்டுக்கொன்றதாக அறிவிக்கப்பட்டது.
பின்லேடன் அவ்வீட்டில் இருப்பது பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தெரிந்திருந்ததா என்பது குறித்தும், பாகிஸ்தான் அரசுக்கு அறிவிக்காமல் அமெரிக்கப் படையினர் உள்நுழைந்து தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தானின் இறைமை மீறப்பட்டுள்ளதாகவும் சர்ச்சைகள் எழுந்திருந்தன. ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் இருந்தமை தமக்குத் தெரியாது என பாகிஸ்தான் அரசாங்கம் மறுத்தது.
பின் லேடனின் குடும்பத்தின் மரபணுவைப் பெறுவதற்காக போலியோ தடுப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டு அமெரிக்கப் புலனாய்வாளர்களுக்கு உதவியளித்த குற்றச்சாட்டில் மருத்துவர் ஒருவரும் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஆனால், பாகிஸ்தான் இராணுவ ஜெனரல்களும், ஐ.எஸ்.ஐ. எனும் பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகளும் ஒசாமா பின் லேடனை, 2006 ஆம் ஆண்டிலிருந்து அபோதாபாத்தில் வேண்டுமென்றே தங்கவைத்திருந்து, பணத்துக்காக அவரை அமெரிக்காவிடம் காட்டிக்கொடுத்துவிட்டார்கள், அதாவது விற்றுவிட்டார்கள் என்கிறார் செய்மர் ஹேர்ஸ்.
ஒசாமா பின் லேடன் தலைக்கு அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்டிருந்த 25 மில்லியன் டொலர் சன்மானத்துக்காக பாகிஸ்தான் அதிகாரிகள் இவ்வாறு செய்ததாக செய்மர் ஹேர்ஸ் கூறுகிறார்.
அபோதாபாத்திலுள்ள வீட்டில் அமெரிக்க சீல் படையினர் மாத்திரமே துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இம்முற்றுகை குறித்து பாகிஸ்தானின் அப்போதைய இராணுவத் தளபதிக்கும் ஜெனரல் அஷ்ஃபாக் பர்வேஸ் கயானிக்கும் ஐ.எஸ்.ஐ. தலைவர் அஹமட் சுஜா பாஸாவுக்கும் அமெரிக்காவினால் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்பதும் மிகப்பெரிய பொய் எனவும் ஹேர்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகில் அதிக கவனத்தை ஈர்த்த சம்பவங்கள் குறித்து பரபரப்பான புதிய தகவல்களை பலர் வெளியிடுவது வழக்கம். அவற்றில் சில தகவல்கள் கற்பனையானவையாகவும் இருக்கும்.
ஆனால், செய்மர் ஹேர்ஸ் சாதாரண ஒரு ஊடகவியலாளர் அல்லர். 78 வயதான செய்மர் ஹேர்ஸ் உலகப் புகழ்பெற்ற புலனாய்வு செய்தியாளர் ஆவார்.
வியட்நாம் யுத்தத்தின்போது ‘மைலாய்’ எனும் இடத்தில் இடம்பெற்ற மைலாய் படுகொலைகள், அவற்றை அமெரிக்கா மூடி மறைத்தவிதம் ஆகியவற்றை அம்பலப்படுத்தியவர் இவர்.
இதற்காக ஊடகத்துறையின் அதி உயர் விருதுகளில் ஒன்றான புலிட்சர் விருதும் 1970 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஈராக்கிய அபு கிறைப் சிறைச்சாலையில் அமெரிக்கப்படையினரால் ஈராக்கிய கைதிகள் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதை அம்பலப்படுவதிலும் இவர் பங்காற்றினார்.
இதனால், ஒசாமா பின் லேடன் மரணம் குறித்து, செய்மர் ஹேர்ஸ் தெரிவித்துள்ள விடயங்களை முற்றாக புறக்கணிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
இந்நிலையில், செய்மர் ஹெய்சின் கூற்றுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வெள்ளை மாளிகையும் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகனும் செய்மர் ஹேர்ஸின் கூற்றுகளை நிராகரித்துள்ளன.
பாகிஸ்தானின் உதவியின்றி தனியாகவே அமெரிக்கா அபோதாபாத்தில் மேற்படி முற்றுகையை நடத்தியது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புச் சபை பேச்சாளரான நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
இம்முற்றுகைக்கு பாகிஸ்தான் உதவியளிக்கவில்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் தெரிவித்துள்ளது.
பின்லேடனை தானே சுட்டுக்கொன்றதாக கூறும், மேற்படி முற்றுகையில் பங்குபற்றிய ‘சீல்’ படைப்பிரிவின் 6 அங்கத்தவர்களில் ஒருவரான ரொபர்ட் ஓ நீலும், ஹேர்ஸின் கூற்றுகள் அபத்தமானவை எனத் தெரிவித்துள்ளார்.
ரொபர்ட் ஓ நீலின் துப்பாக்கிப் பிரயோகத்தில்தான் ஒசாமா இறந்தார் என உறுதியாகக் கூற முடியாது என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது இவர் சீல் படைப்பிரிவிலிருந்து விலகிவிட்டார்.
ஆனால், ஹேர்ஸின் கட்டுரையை தான் முதலில் வாசித்தபோது அது ஒரு ஜோக் எனக் கருதியதாக ரொபர்ட் ஓ நீல் கூறுகிறார்.
கதவுக்கூடாக வந்த துப்பாக்கித்தோட்டாக்களை எதிர்கொண்ட எனது நண்பர்கள் ஹேர்ஸின் கருத்துடன் உடன்பட மாட்டார்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பிலிருந்து விலகிச் சென்ற ஒருவர், பின் லேடன் முற்றுகையில் அமெரிக்காவுக்கு உதவியளித்தார் என பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
===================================================================
செப்டம்பர்-03.
- ஆஸ்திரேலிய கொடி நாள்
- கத்தார் விடுதலை தினம்(1971)
- சீனா ராணுவ படை தினம்
- உலகின் மிகச் சிறிய நாடான சான் மரீனோ, புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது(301)
இந்தியாவுடன் சேர பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதி மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயணம் மேற்கொண்ட அஞ்சுமென் மென் ஹெச் ரசூல் அமைப்பின் தலைவரான சையத் அத்தர் ஹுசேன் ஹெலாவி இதனை தெரிவித்துள்ளார். அங்குள்ள மக்கள் பாகிஸ்தானில் அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகளால் வெறுப்படைந்துள்ளதாகவும், அமைதியான வாழ்க்கையை நடத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாய்ப்பு வழங்கப்படுமானால் இந்தியாவுடன் மீண்டும் சேர விரும்பும் அவர்கள் இது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விரும்புவதாக ஹெலாவி கூறியுள்ளார்.
வாய்ப்பு வழங்கப்படுமானால் இந்தியாவுடன் மீண்டும் சேர விரும்பும் அவர்கள் இது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விரும்புவதாக ஹெலாவி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தங்கள் பகுதியை புறக்கணித்து வருவதாக கூறியுள்ள மக்கள் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு மட்டுமே தங்கள் பகுதியை அரசு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு காஷ்மீரில் நிகழ்ந்த வெள்ளம், இந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ஆகிய நிகழ்வுகளில் இந்திய அரசு மேற்கொண்ட நிவாரண நடவடிக்கைகளையும், பாகிஸ்தான் அரசு எடுத்த நடவடிக்கைகளையும் அவர்கள் ஒப்பிட்டு இந்தியாவை புகழ்நதுள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பை திரும்பி செல்லுமாறு மக்கள் முழக்கமிட்டதையும் ஹெலாவி சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பாகிஸ்தான் ஊடகங்களே செய்தி வெளியிட்டுள்ளதால் அந்நாட்டு தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பை திரும்பி செல்லுமாறு மக்கள் முழக்கமிட்டதையும் ஹெலாவி சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பாகிஸ்தான் ஊடகங்களே செய்தி வெளியிட்டுள்ளதால் அந்நாட்டு தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
========================================================================
இதயம் பலவீனமானவங்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:
- மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும்.
- ஒரு முட்டைல 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கிறதால, அது கூடவே கூடாது.
- பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்ல அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.
- ‘ஊறுகாயும் அப்பளமும் இருந்தா போதும், வேற எதுவும் வேணாம்’னு சாப்பிறவங்க பலர். இந்த ரெண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம், அதுல சேர்க்கப் படற உப்பு. அந்தக் காலத்துல அப்பளம் நல்லா விரிஞ்சு பொரியணும்னு பிரண்டை சாறு விடுவாங்க. இப்ப அதுக்குப் பதில் சோடியம். ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும்.
- கீரை, முழு தானியங்கள், காய்கறிகள்,
- அசைவத்துல மீன் மட்டும் (அதுல உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது)
- ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.
- தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடம்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடம்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.
========================================================================