27 செப்டம்பர் 2014.
நேற்று முதலாமாண்டு முடிவுற்றது.ஆமாம்.ஜெயலலிதா சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் குற்றவாளி.நான்காண்டுகள் சிறை என்று நீதியரசர் மைக்கேல் டி குன்கா தீர்ப்பளித்து முன்னாள் முதல்வராக ஜெயலலிதா சிறை சென்ற முதலாமாண்டு நினைவு நாள்.
ஆனால் அதன் பின் கணித மேதையும் நீதிக்கு அரசருமான குமாரசாமியின் கணித தேற்றம் மூலம் வெளியே வந்தது தனிக்கதை.சாண்டில்யனின் கதைகளை விட அதிகமான பக்கங்களையும் எதிர்பார்த்த திருப்பங்களையும் கொண்ட அக்கதை நம்மால் வெளியிட முடியாது.வெளியிட்டாலும் உங்களால் படிக்க காலம் போதாது.
எனவே முதல்வர் ஜெயலலிதா காரின் கொடி கழற்றப்பட்டு முன்னாள் முதல்வராக்கப்பட்ட தின நிகழ்வுகள் மட்டும் உங்கள் நினைவுகளுக்காக.
நன்றி:சவுக்கு தளம்.
இந்த நாளை ஜெயலலிதா எப்படி அணுகியிருப்பாரோ தெரியவில்லை, ஒரு மாதமாகவே இரவு உறங்க முடியவில்லை. துளியும் உறக்கம் இல்லாமல் பல்வேறு ஊடகவியலாளர்கள் மற்றும் அதிகாரிகளோடு இரவு நெடு நேரம் விவாதித்துக் கொண்டிருந்த நாட்கள் பல.
ஆனால் அதன் பின் கணித மேதையும் நீதிக்கு அரசருமான குமாரசாமியின் கணித தேற்றம் மூலம் வெளியே வந்தது தனிக்கதை.சாண்டில்யனின் கதைகளை விட அதிகமான பக்கங்களையும் எதிர்பார்த்த திருப்பங்களையும் கொண்ட அக்கதை நம்மால் வெளியிட முடியாது.வெளியிட்டாலும் உங்களால் படிக்க காலம் போதாது.
எனவே முதல்வர் ஜெயலலிதா காரின் கொடி கழற்றப்பட்டு முன்னாள் முதல்வராக்கப்பட்ட தின நிகழ்வுகள் மட்டும் உங்கள் நினைவுகளுக்காக.
நன்றி:சவுக்கு தளம்.
இந்த நாளை ஜெயலலிதா எப்படி அணுகியிருப்பாரோ தெரியவில்லை, ஒரு மாதமாகவே இரவு உறங்க முடியவில்லை. துளியும் உறக்கம் இல்லாமல் பல்வேறு ஊடகவியலாளர்கள் மற்றும் அதிகாரிகளோடு இரவு நெடு நேரம் விவாதித்துக் கொண்டிருந்த நாட்கள் பல.
என்ன ஆகும் இந்தத் தீர்ப்பு ? ஜெயலலிதா தப்பித்து விடுவாரா ? இது வரை மற்ற ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்ததுபோல தப்பித்து விடுவாரா ? அவரிடம் உள்ள அசாத்திய பண பலத்தை வைத்து, நீதிபதியை விலைக்கு வாங்கி விடுவாரோ ? மைக்கேல் டி குன்ஹாவும், சதாசிவம், கர்ணன், கேபிகே வாசுகி, சி.டி.செல்வம் போல இருந்து விடுவாரோ என்று பல்வேறு விவாதங்கள்.
ஒரு கோடி, இரண்டு கோடி கொடுத்தாலே வாயைப் பிளக்கும் நீதிபதிகள் இருக்கையில், 500 கோடியை வேண்டாம் என்று மறுக்கும் ஒரு மனிதன் இருக்க முடியுமா என்று பல்வேறு ஐயங்கள். இதற்கு நடுவே நாட்கள் செல்ல செல்ல தினம் ஒரு வதந்தியை அதிமுக அடிமைகள் கிளப்பி விட்டு வந்தார்கள். குன்ஹா கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். டீல் முடிந்து விட்டது. மோடியோடு டீல் செட் ஆகி விட்டது. உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரி, கடந்த வாரம் கேரளா சென்றிருந்தார். அங்கே உள்ள ஒரு பாதிரியார் மூலமாக மொத்த டீலும் முடிந்து விட்டது என்று எத்தனையோ வதந்திகள்.
ஆனால், நான் உறுதியாக நம்பினேன். நியாயம் வென்றே தீரும் என்று. இயற்கை நடக்கும் அநீதிகளை சமன்படுத்தியே வந்திருக்கிறது. உலகம் தட்டை என்று தேவாலயங்கள் ஆணித்தரமாக சொல்லி வந்தபோது, உலகம் உருண்டை என்று உறுதியாக கூறி தன் உயிரை இழந்தார் கலிலியோ. இது போல வரலாறு நெடுக, எதிர்ப்புக் குரல்கள் எழுந்தே இருந்துள்ளன.
எதிர்குரலை ஒட்டு மொத்த சமூகமும் சேர்ந்து அழுத்த நினைத்தாலும் அது வீரிட்டு எழுந்தே வந்துள்ளது. அப்படி வீரிட்டு எழுந்த ஒரு குரல்தான் மைக்கேல் டி குன்ஹா.
ஜெயலலிதா தமிழகத்துக்கும் அதன் மக்களுக்கும் செய்த அநியாயங்கள் கொஞ்ச நஞ்சங்கள் அல்ல. எத்தனையோ தாய்மார்களும், தகப்பன்மார்களும், வயிறெரிந்து சாபம் இட்டுள்ளனர். ஜெயலலிதாவும் இறுமாப்போடும், ஆணவத்தோடும், அகந்தையோடும், செறுக்கோடும் மட்டுமே வாழ்ந்து வந்திருக்கிறார். மனிதர்களை மனிதர்களாக ஜெயலலிதா ஒரு போதும் நடத்தியது கிடையாது. நாம் வீட்டில் வளர்க்கும் நாய், எப்படி நம் காலை நக்க வேண்டும் என்று விரும்புவோமோ, அது போல, அமைச்சர்களும், கட்சிப் பிரமுகர்களும், அரசு அதிகாரிகளும், தன் காலை கூட அல்ல….. கால் வைத்த இடத்தை நக்க வேண்டும் என்று நினைத்தார். அவர் நினைத்தது எப்போதும் நடந்தே வந்திருக்கிறது. அவ்வாறு அவர் நினைத்தது நடக்க நடக்க, ஜெயலலிதாவின் ஆணவம், மென்மேலும் கட்டுக்கடங்காத படி வளர்ந்து வந்தது.
இந்த ஆணவத்தோடுதான், 27 சனிக்கிழமை பரப்பன அக்ரஹாரா செல்வது என்று முடிவெடுத்தார். 27 சனிக்கிழமை 11.04 மணிக்கு, நீதிபதி மைக்கேல் நீங்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று சொல்லும் வரை, ஜெயலலிதாவுக்கு, நாம் தண்டிக்கப்படப் போகிறோம் என்பது துளியும் தெரியாது.
உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, இந்த வழக்கிலிருந்து தப்பிக்க, சசிகலா தனியாக ஒரு ஆப்பரேஷனை மேற்கொண்டதாகவும், அந்த ஆப்பரேஷனின் சூத்ரதாரி ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியின் வேந்தர் வெங்கடாச்சலம் என்றும் தெரிகிறது. வெங்கடாச்சலமும், சசிகலாவும் சேர்ந்து, டீல் முடிந்து விட்டதாகவும், மைக்கேல் குன்ஹா 27ம் தேதி பிறப்பிக்க உள்ள உத்தரவின் நகல் என்று 15 பக்கங்கள் கொண்ட ஒரு தீர்ப்பையும் வழங்கியதாகவும் தெரிகிறது. எப்போதும் எல்லோரையும் விலைக்கு வாங்கியே பழக்கப்பட்ட ஜெயலலிதா, அதை அப்படியே நம்பினார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான், எனக்கு பாதுகாப்பு சரியில்லை. விடுதலைப் புலிகளால் என் உயிருக்கு ஆபத்து, பரப்பன அக்ரகாரா சிறை வளாகத்தில் நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதா அவ்வாறு மனுத் தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், 20ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். அந்த வாரம் முழுக்க உயர்நீதிமன்றம் செயல்பட்டது. ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருக்கலாம். ஆனால் ஜெயலலிதாவின் மனு காரணமாக, வழக்கு 27ம் தேதிக்கு தள்ளிவைக்கப்ப்டடது. 6ம் தேதி வரை, தசரா விடுமுறை.
நாம் விடுதலைதான் செய்யப்படப் போகிறோம் என்று நம்பி விமானத்தில் ஏறினார் ஜெயலலிதா என்றால் மிகையாகாது.
ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி, ஒரே வாகனத்தில் வந்தனர். சுதாகரன் முன்னதாகவே ஒரு காரில் சென்றார். 10 45க்கு ஜெயலலிதா நீதிமன்றத்துக்குள் நுழைந்தார். நான்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
நான்கு பேரும் வரிசையாக போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்தனர். தனக்கு நேராக சுதாகரன் அமர்ந்திருந்ததைப் பார்த்த ஜெயலலிதா, கண்ணாலேயே, சுதாகரனை பின்னால் செல்லும்படி மிரட்டினார். சுதாகரன் உடனடியாக நாற்காலியை பின்னால் தள்ளி அமர்ந்தார்.
சரியாக 11 மணிக்கு கோர்ட் ஓபன் என்று டவாலி சத்தமிட்டார். தன் இருக்கையில் அமர்ந்தார் நீதிபதி குன்ஹா. அனைவரும் எழுந்து நின்றனர். சிசி நம்பர் 208 / 2004. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் என்று பெயர்கள் உரக்க அழைக்கப்பட்டது. அரசுத் தரப்பு இவ்வழக்கின் குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளது. இதனால் உங்கள் அனைவரையும் நான் குற்றவாளிகள் என்று அறிவிக்கிறேன் என்று நீதிபதி கூறிய அடுத்த வினாடி, ஜெயலலிதா அருகில் இருந்த சசிகலாவை பார்த்து முறைத்தார். அப்போதுதான் அங்கே இருந்தவர்களுக்கு, தான் தண்டிக்கப்படப் போகிறோம் என்பது துளியும் தெரியாது என்பது தெரிந்தது.
11.05க்கு காவல்துறையினர் அனைத்து குற்றவாளிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நீங்கள் ஓய்வு எடுப்பதென்றால், அருகில் உள்ள அறையில் ஓய்வெடுக்கலாம் என்றார் நீதிபதி. நான் என் காரில் காத்திருக்கிறேன் என்றார் ஜெயலலிதா. நீதிபதி அப்படி அனுமதிக்க முடியாது. தண்டனை எவ்வளவு என்பதை மதியம் 1 மணிக்கு அறிவிக்கிறேன் என்றார். அடுத்த ஐந்து நிமிடங்களில் ஜெயலலிதாவின் வாகனத்தில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டது.
மதியம் 1 மணிக்கு தீர்ப்பு குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்றார். ஜெயலலிதா, இந்த வழக்கு 18 வருடமாக நடக்கிறது. இந்த வழக்கு எனது அரசியல் எதிரிகளால் புனையப்பட்டது. இந்த வழக்கால் எனக்கு ரத்த அழுத்தம், மன உளைச்சல், மற்றும் நீரிழிவு ஆகிய நோய்கள் வந்துள்ளன. இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தண்டனை விதிக்க வேண்டும் என்றார், இதன் பிறகு, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் இதையே வேறு வார்த்தைகளில் சொன்னார்கள். சசிகலா கூடுதலாக எனக்கு கண் பிரச்சினை இருக்கிறது. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை, கண் மருந்து விட வேண்டும் என்று கூறினார்.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட நீதிபதி, ஆளுக்கு நான்காண்டுகள் சிறை, ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதம் மற்றும் இதர குற்றவாளிகளுக்கு தலா 10 கோடி அபராதம் என்று கூறினார். ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரை, அல்சூர் கேட் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அஞ்சுமலா டி நாயக் மற்றும் சேசாத்திரி நகர் உதவி ஆய்வாளர் ரம்யா ஆகியோர் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்றும், சுதாகரனை பரப்பன அக்ரஹாரா உதவி ஆய்வாளர் வாசு கட்டுப்பாட்டில் எடுத்து, மத்திய சிறையில் அடைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த விபரங்கள் எதுவும் வெளியே உள்ளவர்களுக்கு தெரியாது.
வெளியே வேறு உலகம். காவல்துறையினர் எவ்வளவோ முயற்சிகள் செய்து தடுத்தும், ஆயிரக்கணக்கில் பரப்பன அக்ரகாரா வளாகத்தின் அருகே அதிமுக அடிமைகள் கூடினர். ரயிலிலும், வாகனத்திலும், விமானத்திலும், ஆயிரக்கணக்கில் கூடினர். சரி….. இவ்வாறு கூடிய அடிமைகள், நீதிமன்றத்தில் வந்து என்ன செய்யப்போகிறார்கள் ?
ஆனால், எதற்காக வருகிறோம் என்றே தெரியாமல் ஏறக்குறைய 20 ஆயிரம் அடிமைகள் கூடினார்கள். சாரி சாரியாக வந்தார்கள். அழுதார்கள். புரட்சித் தலைவி வாழ்க என்று உரக்கக் கூவினார்கள். அம்மாவின் விடுதலை உறுதி என்று முழக்கமிட்டார்கள்.
கர்நாடக காவல்துறையினர் இந்த பாதுகாப்புக்காக செலவிட்ட தொகை 2 கோடி. 5000த்துக்கும் மேற்பட்ட காவல்துறையினரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தில் விவிஐபிக்களாக, சிகப்பு விளக்குகளில், தொண்டர்களும், அடியாட்களும் புடைசூழ வலம் வந்த அமைச்சர்களும், அதிமுக முக்கிய பிரமுகர்களும், கர்நாடக காவல்துறையினர் முன்பு பம்மினர். குழைந்தனர். கூழைக் கும்பிடு போட்டனர். சிகப்பு விளக்கில் வலம் வந்து கொண்டு, சாதாரண பாமர மக்களை ஆணவத்தோடும், அலட்சியத்தோடும் கையாண்ட அமைச்சர்களை, கர்நாடக காவல்துறையினர் கசக்கிப் பிழிந்தபோது ஏற்பட்ட இன்பம் இருக்கிறதே….
அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. கர்நாடக காவல்துறையினர், பரப்பன அக்ரகாரா வளாகத்துக்குள் நுழையும் சாலையின் முனையிலேயே அனைவரையும் நிறுத்தினர். வாகனம் உள்ளே செல்ல அனுமதிச் சீட்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று தெளிவாகக் கூறினர். மீறி விவாதத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், எங்கே அம்மாவின் விடுதலைச் செய்தியை அருகாமையில் இருந்து கேட்க முடியாமல் போய்விடுமோ என்று அரற்றினர்.
இறுதியாக உண்மை உறைக்க உறைக்க, முகம் தொங்கிய அதிமுகவினர் சிறிது நேரம் கோஷமிட்டனர். கலவரம் செய்யலாமா என்று அவர்கள் யோசிக்கும் முன்னதாகவே 144 தடைச் சட்டம் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு விரிவு படுத்தப்படுவதாக காவல்துறை அறிவித்தது. கூட்டமாக நின்றவர்களை கலைந்து செல்லச் சொன்னார்கள். இரண்டு வாகனங்களில் கைதுக்கு சம்மதித்தவர்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர். கைதுக்கும் தயாராக இல்லாமல் சும்மா கூடி நின்ற அடிமைகள் அடித்து விரட்டப்பட்டனர்.
அந்த சாலையில் அனைத்து கடைகளும் காலை ஆறு மணி முதல் அடைக்கப்பட்டிருந்தன. குடிக்கத் தண்ணீர் கூட கிடையாது. அங்கே இருந்த அத்தனைபேரும், பட்டினியோடும் தாகத்தோடும்தான் இருந்தனர். தண்டனையில் முழு விபரமும் அறிந்து, உணவு குடிநீர் இல்லாமல் தளர்ந்து நடந்து சென்றபோதும், மனதில் ஏற்பட்ட இனம் புரியாத மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
இந்த நீதித்துறையின் வரலாற்றின் மிகச்சிறந்த நாளான 27 செப்டம்பர் 2014 அன்று பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் நடந்த களேபரங்களை ஒளி ஓவியமாக உங்களுக்கு அளிக்கிறேன்.
இந்த ஒளி ஓவியங்களும், இந்தக் கட்டுரையும், வரலாற்றின் பொன்னேட்டில் தன் பெயரை பொறித்த நீதிபதி மைக்கேல் குன்ஹாவுக்கு அர்ப்பணம். அடிமைகளுக்கு, தர்ப்பணம்.
அனுமதி இல்லை என்ற காவல்துறை அதிகாரிகளை அதிர்ச்சியாக பார்க்கும் மதுரை மேயர் ராஜன் செல்லப்பா |
அடிமைகள் கூட்டத்தால் மைல் கணக்கில் வாகனங்கள் தேங்கின |
அய்யா நான் ஒரு அமைச்சருங்க என்று கெஞ்சும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி |
====================================================================================
இன்று,
செப்டம்பர்-28.
- இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)
- உலக ரேபிஸ் நோய் தினம்
- பசுமை நுகர்வோர் தினம்
சீன பகுத்தறிவாளர் கன்ஃபூசியஸ் பிறந்த தினம்(கிமு 551)
=====================================================================================