ஒவ்வாமையை ஓட்டிட...,
வெயில் பட்டால் அலர்ஜி, தலைமுடிக்கு சாயம் பூசினால் அலர்ஜி, நகை அணிந்தால் அலர்ஜி, செருப்பு அணிந்தால் அலர்ஜி.... என உடுத்தும் உடை முதல், உண்ணும் உணவு வரை அத்தனையிலும் அலர்ஜி அலற வைத்துக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் பொதுவான அலர்ஜி வகைகள் மற்றும் அதிலிருந்து குணமாவதற்கான தீர்வுகள் குறித்து பார்க்கலாம்.
• இளநரை தொல்லையை மறைக்க கலரிங், டை பயன்படுத்துகிறார்கள். அலர்ஜி உள்ளவர்கள் தங்கள் தலை முடிக்கு டை போட்டதுமே, வகிடு பகுதியில் அரிப்பு, சிவப்பாக பொரி பொரியாகத் தோன்றுதல்.... மாதிரியான அலர்ஜி அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிடும்.
முகம் கருமை படர்ந்ததுபோல் இருக்கும். ‘ஹெர்பல் ஹேர் டை’ என்ற பெயரில் விற்பனைக்கு வரும் பெரும்பாலான டைகளில் மூலிகைப் பொருட்கள் சேர்க்கப்படுவதே இல்லை. அதுதான் பிரச்னைக்கு காரணம். மூலிகைகள் சேர்க்கப்பட்ட டையை அலசி ஆராய்ந்து வாங்குவது நல்லது.

அல்லது ‘லெஸ் பொட்டென்ஷியல் ஹேர் டை’ என்கிற பெயரில் கிடைக்கும் டைகளை பயன்படுத்தலாம். எந்த டையானாலும் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு முறை அலர்ஜி டெஸ்ட் செய்து கொள்வது அவசியம்.
• நெற்றியில் வைத்துக் கொள்ளும் சாந்து, தரமற்ற குங்குமம் மற்றும் ஸ்டிக்கர் பொட்டில் உள்ள பசையினால் வரக்கூடிய அலர்ஜி இது. இதனால் நெற்றிப் பகுதி தோல் உரிந்து சிவப்பாகத் தடித்துவிடும்.
நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில், வாஸ்லின் தடவி, அதன் மேலாக வீட்டில் உள்ள காபிப் பொடியை பொட்டு வடிவில், தொட்டு வைத்துக் கொள்ளலாம். அலர்ஜி பிரச்சனை தீரும்.
• முகம், கை, கால்களில் உள்ள முடியை நீக்குவதற்காக பல்வேறு க்ரீம்களை பயன்படுத்துவதால் இந்த அலர்ஜி ஏற்படலாம். இந்த வகை க்ரீம்களில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களால் அலர்ஜி ஏற்பட்டு, தோலில் கோடு போட்டது போல் பொரி பொரியாக சிவந்து தடித்துப் போகும்.
நாளடைவில், அந்த இடம் வெள்ளையாகவே மாறிவிடும். இதை முழுமையாக சரி செய்யவும் முடியாது. எனவே உடனடியாக அந்த க்ரீம்களை தவிர்த்துவிடுவது தான் நல்லது.
• அழகழகாக மின்னும் சில நவீன வகை மெட்டல் நகைகளை அணியும்போது கை, கழுத்து, காது பகுதிகளில் அரிப்பு, கொப்பளங்கள் ஏற்படக்கூடும். இன்னும் சிலருக்கு தங்கம்கூட அலர்ஜியை ஏற்படுத்தும்.
இவர்கள் உலோகத்தால் ஆன ஆபரணங்களைத் தவிர்த்து, மர வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்களையோ, தோலினால் செய்யப்பட்ட நகைகளையோ பயன்படுத்தலாம்.
If it is air dye allergy, wear jewelry allergy, wear dress shoes to wear an allergy .... First,
=========================================================================================தமிழகம் மின் மிகை மாநிலமான கதை.
அல்லது
தொடரும் மி[ன்]கா ஊழல்.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி மின் தேவை 12,500 மெகாவாட் என கணக்கிடப்பட்டுள்ளது. அனல், புனல் மற்றும் காற்றாலை என மின்சார உற்பத்திக்கு பல வழிகள் இருந்தாலும், தனியாரிடம் கொள்முதல் செய்வதிலேயே கவனம் செலுத்துகிறது மின் வாரியம்.
கடந்த 2012ம் ஆண்டு, 5 ஆண்டுகளுக்கு 1000 மெகாவாட் வீதம் மின் கொள்முதல் செய்யப்படும் என்றது; அதுவே 2013ம் ஆண்டு கூறும் போது, 15 ஆண்டுகளுக்கு 1000 ஆயிரம் மெகாவாட் வீதம் ெகாள்முதல் ெசய்யப்படும் என தெரிவித்து விட்டு, அதே ஆண்டில், 3,300 மெகாவாட் அளவுக்கு மின் கொள்முதல் செய்ய 11 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க கொள்முதல் விதிகளை மீறி கையெழுத்தாகியுள்ளது. அதுமட்டுமின்றி சந்தை விலையை விட மிக அதிக விலை கொடுத்து இந்த 11 நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க கொள்முதல் விதிகளை மீறி கையெழுத்தாகியுள்ளது. அதுமட்டுமின்றி சந்தை விலையை விட மிக அதிக விலை கொடுத்து இந்த 11 நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்கப்படுகிறது.
இந்த நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் வெளி மாநிலங்களை சேர்ந்தவை. இதில் எத்தனை நிறுவனங்களிடம் மின் கொள்முதல் செய்யப்படுகிறது என்ற முழு தகவலை மின்வாரியம் வெளியிட மறுக்கிறது.
பெறப்படாத மின்சாரத்துக்கும் யூனிட் ஒன்றுக்கு 2 செலுத்தி வருகிறது.
மின்சாரத்தின் சந்தை விலை ஒரு யூனிட் மின்சாரம் 2.60 தான்; இந்த விலையில் தான் பல மாநிலங்கள் கொள்முதல் செய்கின்றன; தமிழக மின்வாரியம் இந்த 11 நிறுவனங்களுக்கு கொள்முதல் விலையாக யூனிட் 4.91 என்று மிக அதிக விலை தருகிறது.
மேலும், இந்த 11 தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதற்காக ஒழுங்குமுறை ஆணையத்திடம் தவறான பல தகவல்களை மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஒழுங்குமுறை ஆணையமும் கண்டும் காணாதது போல் இருக்கிறது.
மேலும், இந்த 11 தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதற்காக ஒழுங்குமுறை ஆணையத்திடம் தவறான பல தகவல்களை மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஒழுங்குமுறை ஆணையமும் கண்டும் காணாதது போல் இருக்கிறது.
இதனால் மின்வாரியத்துக்கு 40 ஆயிரத்து 327 கோடி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஜிஎம்ஆர் நிறுவனம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்த மின்சாரத்தின் விலை யூனிட் 12.50 என்பதால் அதை வாங்க வேண்டாம் என்று ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டும், வாரியம் நீண்ட காலமாக வாங்கி வந்துள்ளது.
ஒப்பந்தம் முடிந்த பிறகு, மேலும் ஓராண்டுக்கு யூனிட் 12.50 விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. இதனால் பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளது. இதை மின்வாரியம் தான் விளக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பு தலைவர் காந்தி கூறினார்.
மின் கட்டணம் உயர வாய்ப்பு
மின்தேவை இல்லாத நேரங்களிலும் தனியார் நிறுவனங்களுடன் விதிகளை மீறி ஒப்பந்தம், சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு மின் கொள்முதல், கட்டண நிர்ணயம் மற்றும் மின் கொள்முதல் விஷயங்களில் மாநில அரசின் தலையீடு என்று பல சிக்கல்களில் தமிழக மின்வாரியம் தள்ளாடி வருகிறது.

இதே நிலை நீடித்தால் இதன் சுமை நுகர்வோர் தலைமேல் விடியும் எனவும், மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மின் பொறியாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மின்கட்டணம் 15 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெண்டர் விதிமீறல் பின்னணி
தமிழக மின்வாரியம் 11 தனியார் நிறுவனங்களுடன் 3,300 மெகாவாட் மின்கொள்முதல் செய்ய கடந்த 2013ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது.
டெண்டர் விதிமீறல் பின்னணி
தமிழக மின்வாரியம் 11 தனியார் நிறுவனங்களுடன் 3,300 மெகாவாட் மின்கொள்முதல் செய்ய கடந்த 2013ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த 11 நிறுவனங்களில் 3 நிறுவனம் தமிழகத்தை சேர்ந்தவை. 3,300 மெகாவாட்டில் 35 சதவீத மின்சாரத்தை இந்த 3 நிறுவனங்கள் விற்கின்றன.
மேலும், தமிழகத்தில் ரூ.57 ஆயிரம் கோடியை முதலீடு செய்வதாக முதலீட்டாளர் மாநாட்டில் இந்த மூன்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
=====================================================================================இன்று.
செப்டம்பர்-24.
- கம்போடியா அரசியலமைப்பு தினம்
- அமெரிக்க சுப்ரீம்கோர்ட் நிறுவப்பட்டது(1789)
- இலங்கை வங்கி அமைக்கப்பட்டது(1840)
1861 - செப்டம்பர் 24 :
பிகாஜி ருஸ்தம் கே.ஆர்.காமா
இந்திய விடுதலைக்காக போராடிய புரட்சியாளர்களுக்கு, லண்டனில் இருந்து, கிறிஸ்துமஸ் பரிசுப் பொருள் என்ற பெயரில், பொம்மைகளுக்குள் கைத்துப்பாக்கிகளை மறைத்து அனுப்பி வைத்தவர், மேடம் பிகாஜி ருஸ்தம் கே.ஆர்.காமா.
இவர் அனுப்பிய கைத்துப்பாக்கி மூலமாகத்தான், வாஞ்சிநாதன், கலெக்டர் ஆஷ் துரையை சுட்டு, படுகொலை செய்தார்!
கடந்த, 1861ல், மும்பையில், பார்சி குடும்பத்தில் பிறந்தவர் பிகாஜி; 1885ல், வழக்கறிஞர் ருஸ்தம் கே.ஆர்.காமாவை மணந்தார்.
உடல்நிலை காரணமாக, 1902ல், மீண்டும் லண்டனுக்கு பயணமானார்.லண்டனில், பல இந்திய தலைவர்களை சந்தித்தார்; அங்கிருந்தபடியே, இந்திய புரட்சியாளர்களுக்கு உதவினார்.
சுதந்திர இந்தியாவிற்கென்று, கொடியை உருவாக்கினார். மேலே, பச்சை வண்ணப் பட்டையில், இந்திய மாநிலங்களை குறிக்கும், எட்டு மலர்ந்த தாமரைகள் பொறிக்கப்பட்டிருந்தன.
நடுவில், மஞ்சள் நிற பட்டையில், வந்தே மாதரம் என, தேவநாகரி வரி வடிவில், எழுதப்பட்டிருந்தது. அடியில், சிவப்பு நிறப் பட்டையில், இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும், பிறை சந்திரனும், சூரியனும் இடம் பெற்றிருந்தன.
இந்திய மண்ணில், 1936, ஆக., 13ம் தேதி மரணமடைந்தார்.
மேடம் பிகாஜி ருஸ்தம் கே.ஆர்.காமா பிறந்த தினம் இன்று!
======================================================================================
முகனூல்..................,
மற்ற கட்சிகளுக்கு தான் இது தேர்தல், எங்களுக்கு இது போர்களம் - சீமான்