4G க்குப் பின் 5G
4G தொழில்நுட்பத்தை விட அதிவேகமான 5G தொழில்நுட்பம் பற்றிய ஆராய்ச்சிகளை அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாக வெரிசோன் நிறுவனம் அறிவித்துள்ளது.
செப்டம்பர்-12.
முகனூல் :-
இப்படியும் ஒரு பஞ்சமா?
தற்போதுள்ள 4G தொழில்நுட்பத்தை விட 10 மடங்கு வேகமானதாக 5G தொழில்நுட்பத்தை உருவாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இணைய பயனாளர்களுக்கு உதவும் வகையில் 2G தொழில்நுட்பம் கடந்த 1991 ஆம் ஆண்டு பின்லாந்து நாட்டில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் பின்னர், 3G, 4G என்று வந்துவிட்டது.
தற்போது புழக்கத்தில் உள்ள 4G எனப்படும் 4வது தலைமுறை தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேக இணையவசதி, விளையாட்டுகள், துல்லியமான காட்சிகளை அளிக்கும் தொலைக்காட்சிகள் போன்ற சேவைகளை நாம் பெற்றுவருகிறோம்.
4G தொழில்நுட்பம் மூலம் அதிகபட்சமாக நொடிக்கு 200 Mbps வரையிலான தகவல்களை நாம் பெறலாம்.
இந்நிலையில் அமெரிக்காவின் தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன் 5G தொழில்நுட்பம் குறித்த தனது ஆராய்ச்சியை வரும் 2016ஆம் ஆண்டில் தொடங்கவுள்ளதாகவும், 2020ஆம் ஆண்டில் 5G தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்த முயற்சிப்பதாகவும் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு ரிமொர்ட் சர்ஜரி( ஒரு நாட்டில் இருந்தபடியே வேறு நாட்டில் உள்ள நோயாளிக்கு சிகிச்சையளிப்பது) தானாகவே இயங்கும் கார் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு புத்துயிர் ஊட்டியுள்ளது.
இதற்காக நோக்கியா, சாம்சங், எரிக்சன், போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ஒரு நொடிக்கு 2GB வேகத்தில் நாம் தகவலை பெற முடியும். அதாவது கண்ணிமைக்கும் வேகத்தில் ஒரு படத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த 5G தொழில்நுட்பம் சந்தைக்கு வந்தால் தற்போதைய தொழில்நுட்பங்களின் வடிவங்களே மாறி விடும்.நாம் இதுவரை எண்ணிப்பார்க்காத செயல்களை சாத்தியமாக்கிவிடலாம்.
======================================================================================================
இன்று,செப்டம்பர்-12.
- ஹென்றி ஹட்சன், ஹட்சன் ஆற்றலை கண்டுபிடித்தார்(1609)
- சுவிட்சர்லாந்து, கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது(1848)
- ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டது(1890)
- துருக்கியில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1980)
- ஹாங்காங்கில் ஹாங்காங் டிஸ்னிலாண்ட் திறக்கப்பட்டது(2005)
முகனூல் :-
இப்படியும் ஒரு பஞ்சமா?
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சம்பந்தமாக ஒரு தொலைக்காட்சி விவாதம்.மார்க்சிஸ்ட் சார்பாக தோழர் கனகராஜூம் அதிமுக சார்பில் திரு காசிநாதபாரதி என்ற வழக்கறிஞரும் கலந்து கொண்டார்கள்.ஒருகட்டத்தில் தோழர் கனகராஜ் ஒரு கேள்வி கேட்டார்.இந்த நான்காண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் புதிதாக ஒருதொழிற்சாலையாவது வந்திருக்கிறதா? என்று. அதெல்லாம் நிறையா வந்திருக்கிறது என்றார் கா.பாரதி. நிறையவேண்டாம் ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள் என்று மீண்டும் கேட்கிறார் கனகராஜ். 22,300 பேருக்கு அரசுவேலை கொடுத்திருக்கிறோம் என்றார் கா.பாரதி.அரசுவேலையும் தொழிற்சாலையும் ஒன்றா?நான் கேட்டது ஒருபுதிய தொழிற்சாலை என்று கனகராஜ் மீண்டும் கிடுக்கிப்பிடி போட, இப்பொழுதுதான் அரங்கமே அதிரக்கூடிய ஒரு உச்சகட்ட நகைச்சுவையை எடுத்துவிட்டார் காசிநாதபாரதி. பார்த்துக்கொண்டிருந்த எனக்கு சிரித்து சிரித்து வயிறெல்லாம் புண்ணாகிவிட்டது.“நீங்க புதுசா ஒரு தொழிற்சங்கம் வைக்கணும்கிறதுக்காக நாங்க புதுசா ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கணுமா?” என்றாரே பார்க்கலாம்... அத்தனைபேரும் சிரித்துவிட்டார்கள். ஜெயலலிதா பார்த்திருந்தால்கூட வாய்விட்டுச் சிரித்திருப்பார். நான் சிரித்தாலும் பின்பு வருந்தினேன் அதிமுகவில் இப்படியும் ஓர் அறிவுப் பஞ்சமா? என்று.
-மதுரை பாஸ்கரன்.
===============================================================================
===========================================================================================
இந்தியாவைப் பாதிக்குமா?
உலகப் பொருளாதார நெருக்கடி!
பொருளாதார வட்டங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிற கேள்வி இது.
“இந்தியாவைப் பாதிக் காது” என்று நிதியமைச்சகக் குழு சொல்லியிருப்பதாக பெரிய தலைப்பைப் போட்டு எகனாமிக் டைம்ஸ் செய்தி (11.09.2015) வெளியிட்டிருக்கிறது. நிதி நிலைத்தன்மை மற் றும் வளர்ச்சிக்கான குழு ) நிதியமைச்சரின் தலைமையிலானது.
ரிசர்வ் வங்கி, செபி, இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணையம், பென்சன் ஆணையம் ஆகியவற்றின் தலைவர்களும், நிதியமைச்சக செயலாளர்களும் இக்குழுவில் உள்ளனர்.செய்தித் தலைப்பு அப்படி இருந்தாலும் இக்குழுவே இரண்டு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
1. உண்மைப் பொருளாதாரத்தைப் பாதிக்காதே தவிர நிதிச்சந்தைகளைப் பாதிக்கக்கூடும்.
2. ஆனாலும் தொடர் கவனமும், கண்காணிப்பும் தேவைப்படுகிறதுநிதிச்சந்தையைப் பொறுத்தவரையில் அது எவ்வ ளவு பலவீனமாக உள்ளது என்பதற்கு ஆகஸ்ட் 24, 2015அன்று பங்குச்சந்தை அடித்த பல்டியே சாட்சி.
ஆறு ஆண்டுகளில் இல்லாத சரிவு.
ஒரே நாளில் 1625 சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சி, செப் 1, 2015 அன்று இன்னொரு அதிர்ச்சி. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல்- ஜூன் காலாண்டில் அரை சதவீதம் குறைந்தவுடன் 500புள்ளிகள் வீழ்ச்சி. ஆகஸ்டு-செப்டம்பரில் மட்டும் அந்நியநிறுவன முதலீட்டாளர்கள் 3.5 பில்லியன் டாலர்களை (ரூ. 22750 கோடிகள்) இந்தியாவை விட்டு வெளியே எடுத்துச் சென்றுள்ளனர்.
இது நிகர உள் வருகையை13.5 பில்லியன் டாலர்களிலிருந்து 10 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது.
சீனாவின் யுவான் மதிப்புக் குறைப்பு நடவடிக்கை எவ்வாறு டாலர் சொத் துக்களை நோக்கிய “மூலதன பரப்பிற்கு” வழிவகுக்கக் கூடும் என்பதை சி.பி.சந்திரசேகரின் ‘பீப்பிள்ஸ் டெ மாக்ரஸி‘ (செப் 6, 2015) பொருளாதாரக் குறிப்புகள் விளக்கியுள்ளது.உண்மைப் பொருளாதாரத்திற்கு வருவோம்.
2015-16ன் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7ரூ ஆகக் குறைந்துள்ளது. இது ஜனவரி-மார்ச் 2015 காலாண்டில் 7.5 சதவீதமாக இருந்தது.
பிபிசி செய்தி “நிறைய பேர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இச்செய்தியாளர் சந்தித்த பலர் 8 சதவீதத்தை எட்டுமென்றும், சீனாவை விஞ்சி விடுமென்றும் கூறி வந்தனர்” என்று கூறியுள்ளது.எனவே உள்நாட்டுச் சந்தை விரிவாக்கம், ஆதாரத்தொழில் வளர்ச்சி போன்ற அடிப்படைப் பிரச்சினை களைப் பற்றி விவாதிக்காமல் தீர்வுகள் கிடையாது.
பீதியில் சரிகிற பங்குச்சந்தைகளைத் தற்காலிகமாகச் சரிக்கட்ட வேண்டுமானால் இது போன்ற அரசுக் குழுக்களின் அறிக்கைகள் பயன்படலாம்.இச்செய்திக்கு எகனாமிக் டைம்ஸ் வாசகர்களின் எதிர்வினைகளில் ஒரு சில.....எ “முதலாவதும், முக்கியமானதும்.... இது அருண் ஜேட்லி வெளியேற வேண்டிய நேரம்”எ “எப்படிப் பாதிக்காது.... கடந்த ஓராண்டில் ரூபாய்வீழ்ச்சியடைகிறது... ஏற்றுமதி விழுகிறது.... தொழில் வளர்ச்சி சரிகிறது.... பாதிக்காது என்பதெல்லாம் பா வனை”எ “அடித்தளம் வலுவாக இருக்கிறது என்கிறார்கள்.
இப்படித்தான் சிதம்பரமும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்”மாற்றத்தைத் தேடிய நடுத்தரவர்க்கத்தின் ஏமாற்றங் களின் வெளிப்பாடே இந்த எதிர்வினைகள்.
ரிலையன்சுக்கு எதிரான ஓ.என்.ஜி.சியின் வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதாக “இந்து பிசினஸ் லைன்” (செப் 11, 2015) செய்தியின் தலைப்பு.
உள்ளே போனால் அதிலுள்ள விசயங்கள் நமக்குஅதிர்ச்சியைத் தருகின்றன.
ஓ.என்.ஜி.சியின் கிணறுகளிலிருந்து ரூ. 30000 கோடி இயற்கை வாயுவை ரிலையன்ஸ் நிறுவனம் அனுமதியின்றி ‘களவாடிவிட்டது’ என்பதுதான் வழக்கின் சாரம்.
இப்பிரச்சினையைப் பற்றி ஆராய்வதற்கு நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அறிக்கை இன்னும் வெளிவர வில்லை. இதற்கிடையில் சமீபத்தில் மத்திய அரசு ஓர்சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் மீது வழக்கு ஏதும் போட முடியாது.
ஓ.என்.ஜி.சி க்கு சந்தேகம்.
ஒரு வேளை நிபுணர்குழு சாதகமாக அறிக்கை தந்தாலும் அரசாங்கம் ரிலையன்ஸ் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் என்ன செய்வது?
அரசு சுற்றறிக்கை அதைத் தடுக்கிறதே!
இதை ஓ.என்.ஜி.சி நீதிமன்றத்திலேயே தெரிவிக்கிறது.நீதி மன்றம் என்ன சொல்லியிருக்கிறது?
நிபுணர் குழுவின் அறிக்கை வந்தவுடன் 6 மாதங்களுக்குள் அரசுமுடிவெடுக்க வேண்டும்.
அவ்வாறு அரசாங்கம் நடவ டிக்கை எடுக்காவிட்டால் ஓ.என்.ஜி.சி தனது வழக்கை மீண்டும் புதுப்பிக்கலாம்.
ஆனாலும் நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளதாம்.
என்ன?
சுற்றறிக்கை நீர்த்துப் போகாதாம்!
எப்படி யிருக்கிறது நிலைமை?
அரசாங்கம் மீது பொதுத்துறை நிறுவனத்திற்கே வருகிறது சந்தேகம். மக்களுக்கும் வருகிறது. இன்னும் என்னென்னவோ சந்தேகங்கள்.
=========================================================================================================