2300கோடி ரூபாய்கள் போனது எங்கே?

வந்தது புதிய ஒய்வூதிய திட்டம் -
2300கோடி ரூபாய்கள் போனது எங்கே?

புதிய ஒய்வூதிய திட்டம் என்ற பெயரில் அரசு ஊழியர்களுக்கு ஒய்வூதியம் வழங்கும் கடமையில் இருந்து அரசுகள் கழண்டு கொள்ள மத்திய அரசு ஊழியர்கள்  பங்களிப்பு தொகையுடன் கூடிய புதிய ஒய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

திமுக அரசு அதை நடைமுறைக்கு கொண்டுவராமல் பழைய முறையையே கடை பிடித்து வந்தது.
ஆனால் அடுத்து வந்த ஜெயலலிதா 2003 இல் புதிய திட்டத்தை நடை முறைபடுத்தினார்.
அப்போது முதல் அரசு ஊழியர்கள் ஊதியத்தில் 10% இந்த ஒய்வூதிய  திட்டத்துக்கு ம் பிடித்தம் செய்யப்படுகிறது.

இன்று வரை பிடித்தம் செய்யப்பட தொகை 2300 கோடிகள் ஆகும்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி விவரம், நிதித்துறை மற்றும் தகவல் தொகுப்பு மையத்தில் இல்லாததால், இந்த திட்டத்தின் நிலை குறித்து, அரசு ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். 
இந்தத் திட்டத்தில், கடந்த ஆண்டு வரை, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் 
ஊழியர்களிடம், 2,300 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் எங்கே 
என்பது தான், இப்போதைய கேள்வி.

தமிழகத்தில், 2003 ஏப்ரல் முதல், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகமானது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுஉள்ளனர்.

இத்திட்டத்தில், அடிப்படை ஊதியம், தர ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில், மாதம், 10 சதவீதம் பிடிக்கப்படும். அதே அளவு தொகையை, அரசும் தன் பங்காக செலுத்தும். 
40 சதவீத முதலீடுபின், ஊழியர் ஓய்வுபெறும் போது, மொத்தத் தொகையில், 60 சதவீதம் வழங்கப்படும். மீதமுள்ள, 40 சதவீதம், பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கடந்த, 12 ஆண்டுகளில் ஓய்வு பெற்றுள்ளனர். பலர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்; சிலர் மரணமடைந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு, பிடிக்கப்பட்ட நிதி எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரும், ஆசிரியருமான பிரெட்ரிக் ஏங்கல்ஸ், தமிழக நிதித்துறை, தகவல் தொகுப்பு மையம் மற்றும் கணக்கு மற்றும் கருவூலத் துறைக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தகவல் கேட்டுள்ளார்.

இதில், 'தங்களிடம் எந்த விவரமும் இல்லை' என, நிதித்துறை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில், கடந்த ஆண்டு வரை, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம், 2,300 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக, மாநில தகவல் தொகுப்பு மையம் தெரிவித்துள்ளது. 

அதேநேரம், ஓய்வு பெற்றவர், இறந்தவர் போன்ற விவரங்களோ, அவர்களுக்கான நிதி விவரமோ, தங்களுக்கு தெரியாது என, நிதித்துறை, தகவல் தொகுப்பு மையம், கணக்கு மற்றும் கருவூலத்துறை ஆகியவை தெரிவித்துள்ளன.தெளிவான முடிவு இல்லை.இதற்கிடையில், 'தமிழக அரசின் நிதி, மத்திய அரசின் திட்டத்திலும் இந்த பணம் முதலீடு செய்யப்படவில்லை' என, மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் குழப்பத்தில் உள்ளனர். 
இதற்கிடையில் புதிய ஒய்வூதிய திட்டத்தில் பணம் கட்டி வந்து ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் எந்த வித தொகையும்,ஒய்வூதியமும் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.
ஆனால் தமிழக அரசோ ஒன்றும் செயல் படுவதாக தெரியவில்லை.
மற்ற விடயங்களில் மட்டும் செயல்படுகிறதா என்ன?

==============================================================================================
பப்பாளி 

பப்பாளியைப் பற்றி அடிக்கடி சொல்ல வெண்டிய நிலை  வந்து கொண்டேயிருக்கிறது.
காரணம் உடலுக்கு தேவையான அனைத்தும் அதில் உள்ளது.இளைமையை உங்களுக்கு மீட்டுத்தருகிறது.
உங்கள் தோலை அல்லது சர்மத்தை பளபளப்பாக்கி உங்கள் தோற்றத்தையே இளைமை மினுக்குடன் மிளிர வைக்கிறது.அதைத்தான் இன்றைய அழகு சாதனப் பொருட்கள் பப்பாளி சாரம் கலந்தது என்று விளம்பரங்கள் நமக்கு சொல்லுகிறது.
புற்று நோய் அணுக்களை நம்மை அண்டவிடாமல் செய்கிறது.
இன்றைய இந்திய மக்களிடம் வேகமாக பரவி வரும் கொலைகார நோய் புற்று நோய்தான் என்று உலக ஆய்வுகள் சொல்லுகின்றன.அதையே நம்மிடமிருந்து விரட்டும் பப்பாளியை பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
 உணவை இயற்கையான முறையில் செரிமானமடைய வைக்கும் பப்பாயின் என்சைம், பப்பாளிப் பழத்தில் உள்ளது. அதனால் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்ய இப்பழம் உதவும்.
பப்பாளியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் காரணமாக உடலில் மூப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கிறது. இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கிறது.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் இது. இதில் குறைந்த அளவு கலோரியும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் உள்ளதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.
நார்ச்சத்து மிக்கது, உடலில் கொழுப்பின் அளவை குறைக்கும். கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைவதைத் தடுக்கும் என்சைம்களைக் கொண்டிருப்பதால், மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்துகள் நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். காய்ச்சல், சளி, நாள்பட்ட காய்ச்சலுக்கு இது சிறந்த நிவாரணி.
டெங்கு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குப் பப்பாளி இலைச் சாறைப் பருகக் கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், டெங்கு நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரத்த அணுக்கள் பெருகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பப்பாளிப் பழத்தில் இருக்கும் அழற்சியைத் தடுக்கும் என்சைம்கள் மூட்டு வலியைக் குறைப்பதற்கு உதவுகின்றன. இதிலிருக்கும் மேலும் சில என்சைம்கள் புற்றுநோய் வருவதைத் தடுப்பதிலும் உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கல்லீரலில் உருவாகும் புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைப் பப்பாளி பழம் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெருங்குடலில் உள்ள சளி, சீழைப் பப்பாளி ஜூஸ் குணப்படுத்தும். 
பப்பாளி பழத்தின் விதைகளிலும் மருத்துவக் குணங்கள் நிறைய உள்ளன. குடல் புழுக்களை அகற்றுவதில் பப்பாளி விதைகள் பெரும் பங்காற்றுகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரான இடைவெளிகளில் வருவதற்குப் பப்பாளி பழம் உதவுகிறது.
சிலர் காலையில் எழுந்ததுமே மிகவும் சோர்வாக உணர்வார்கள். பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது போன்ற சோர்வு இருக்கும். இவர்கள் தினமும் சில துண்டு பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.
 பப்பாளிப் பழத்தில் இருக்கும் நச்சுத் தன்மையை நீக்கும் என்சைம்கள், சிறுநீரகத்தில் படிந்திருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதில் பெரும் பங்காற்றுகின்றன.
 பேன், பொடுகைப் போக்கும் திறன் பப்பாளிக்கு உண்டு. அதனால் தான் பெரும்பாலான ஷாம்புகளில் பப்பாளி பயன்படுத்தப்படுகிறது.
சருமத்தின் வறட்சித்தன்மையைப் போக்கும் திறன் கொண்டது பப்பாளி பழம். தோலின் மயிர்க்கால்களில் படிந்திருக்கும் கண்ணுக்குப் புலப்படாத அழுக்குகளைப் பப்பாளியில் உள்ள என்சைம்கள் அகற்றிச் சுத்தப்படுத்தும்.
பப்பாளிப் பழத்தின் தோல், சதைப் பகுதிகளை மசித்து முகத்தில் பூச்சாகப் பயன்படுத்தினால் கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்றவை மறைந்து, முகம் பளிச்சிடும். நாள்பட்ட காயங்கள், தொற்றுகளைக் கொண்டவர்கள் பப்பாளிப் பழத்தை மசித்துப் பூசிவந்தால் சருமம் புத்துணர்வையும் பளபளப்பையும் பெறும்.
இன்றைக்கு இவ்வளவு போதும்.இன்னமும் நிறைய பப்பாளி செய்திகள் பின்னர்.
===============================================================================================
இன்று,
செப்டம்பர்-20.

  • தாய்லாந்து இளைஞர்கள் தினம்
  • நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரிட்டன், மொரீசியசில் வெளியிடப்பட்டது(1847)
  • துருவ செயற்கைகோள் ஏவுகணையை இந்தியா ஏவியது(1993)
நேதாஜி மர்மங்கள் 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ரகசிய தகவல்கள் அடங்கிய 64 ஆவணங்களை மேற்கு வங்க மாநில அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. நேதாஜி குறித்த ஆவணங்கள் முதலில் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது. 
1. நேதாஜியின் தகவல் அடங்கிய 64 ஆவணங்கள் மொத்தம் 12,744 பக்கங்களை கொண்டுள்ளது. 70 ஆண்டாக பாதுகாக்கப்பட்ட ரகசியம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 1940ம் ஆண்டு முதல் நேதாஜியின் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. நேதாஜி தொடர்பான இன்னும் 130 ஆவணங்கள் மத்திய அரசிடம் உள்ளது. 
2. 1949ல் விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக கூறப்பட்டது தொடர்பாக ஹவுரா சிஐடி பிரிவு கேள்வி எழுப்பியபோது, விமான விபத்து நடக்கவில்லை என முகர்ஜி கமிஷன் கூறியது. 
3. இந்திய புலனாய்வு அமைப்புகள்,  விமான விபத்து தொடர்பாக பிரிட்டிஷ், அமெரிக்க நிறுவனங்களிடம் அறிக்கையை கேட்டுள்ளது. 
4. 1942ல் தொடங்கி 1944 வரை விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டார் என்பது தொடர்பான பல்வேறு வதந்திகளும் ஆவணத்தில் இடம்பெற்றுள்ளது. போர் நடந்தபோது ரேடியோவில் பேச நேதாஜி விரும்பியதும் அவரது சகோதரர் கடிதத்தில் தெரியவந்துள்ளது.
5. 1942 மார்ச்சில் ஜப்பான் கடற்பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாகவும் ஒரு வதந்தியில் உள்ளது. 
6. விமான விபத்து நிகழ்ந்ததாக கூறப்படும் அதே நாளில் நேதாஜியின் மூத்த சகோதரர் சரத் போஸ், பாங்காக்கில் இருந்த நேதாஜியுடன் பேசியதாக ஒரு தகவல் இடம் பெற்றுள்ளது. 
7. நேதாஜி இறந்ததாக வதந்திகள் எழுந்த பின்னரும் கூட, மதரிப்பூர் ஜூகன்தர் கட்சி பாங்காக்கில் இருந்த நேதாஜியுடன் ரகசிய டிரான்ஸ்மீட்டர் மூலம் பேசியுள்ளது.
8. கொல்கத்தாவில் வெளியிடப்பட்டு வந்த இந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் என்ற பத்திரிக்கை மட்டும் 1942ம் ஆண்டு  விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக கூறியதை ஏற்கவில்லை. அதற்கான இரங்கல் செய்தியையும் வெளியிட மறுத்துள்ளது.
9. 1945 டிச.27ல் அப்போதைய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான நேரு, இங்கிலாந்து பிரதமர் அட்லிக்கு எழுதிய கடிதத்தில், ‘‘போர் குற்றவாளி நேதாஜி, ரஷ்யாவில் நுழைய ஸ்டாலின் அனுமதித்துள்ளார். இது ரஷ்யர்கள் செய்யும் துரோகம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
10. தைவான் அதிகாரிகள் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி தாய்ஹோகு விமான நிலையத்தில் விமான விபத்து ஏதும் ஏற்படவில்லை என மறுத்துள்ளனர்.
===============================================================================================

அழிக்கும் வைகோ?

வைகோ திமுகவை அழிக்காமல் விடமாட்டேன் என்று சவால் விட்டுள்ளார்.
ஒரு பக்கம் அழிவின் விளிம்புக்கு கட்சியை கொண்டு சென்று விட்ட வரை பார்க்கையில் சிரிப்பு வருகிறது.
மறுபக்கம் தன்னை இன்று வைகோ என்று மக்கள் மத்தில் இந்திய அரசியலில் உருவாக்கி விட்ட திமுகவை அழிப்பதில்  அவருக்கு இருக்கும் ஆசையை கண்டு வருத்தமாகவும் இருக்கிறது.

இந்திய அரசியலில் இன்று வைகோ என்ற பெயரை உருவாக்கியதில் கருணாநிதிக்கு மட்டுமே பங்கு இருக்கிறது.
திமுக தரப்பில் இருந்து மாநிலங்களவைக்கு வை.கோபால்சாமி என்ற கலிங்கம்பட்டி உடன்பிறப்பை அவர்தான் மீண்டும்,மீண்டும் அனுப்பிவைத்தார்.
அங்கு அவர் கலந்து கொண்டு திமுகவின் கொள்கைகளை கணிர் குரலில் சொல்லுவதை கண்டுதான் திமுக வை.கோபால்சாமியை டெல்லிக்கு அனுப்பியது.அதில்தான் அவர் டெல்லி அரசியல்வாதிகள் இந்திரா முதல் மொரார்ஜி, என அனைவருடனும் அரசியல் செய்யும் அளவு உயர்ந்தார்.
அதனால் ஏறிய தலைப்பாரத்தால் தன்னை கலைஞரை விட தான்தான் பிரபலம்.தன்னைவைத்துதான் திமுக இந்திய அரசியலில் இருப்பது என்ற மாயக்காட்சிகள் வை.கோ வின்  கண் முன்னாள் வந்து சென்றது.
ஸ்டாலினை  மையமாக வைத்து ஒரு குழப்பத்தை உருவாக்கி திமுகவை விட்டு பிரிந்தார்.மதிமுக கண்டார்.
எல்லோரும் கருணாநிதி-எம்.ஜி.ஆர்.என ஆகி விட மடியுமா என்ன?
மறு மலர்ச்சி கட்சியின் பெயரில் இருந்ததே தவிர வைகோ வுக்கும்,அவரை நம்பி கட்சியில் இணந்தவர்களுக்கும் உண்டாகவே இல்லை.
கட்சி ஆரம்பித்தபின்னர் எத்தனையோ தேர்தல்கள் மதிமுக கண்டு விட்டது.ஒன்றும் பலனில்லை.
அப்போதுதான் திடீர் திருப்பம் அவரின் அன்பு சகோதரி ஜெயலலிதாவால் வந்தது.பொடாவில் வைகோ வைதூக்கி சிறையில் வைக்க கலங்கிய கருணாநிதி சிறையில் சென்று வைகோவை பார்க்க துடித்தார்.அனுமதி மறுக்கப்பட அங்கே உட்கார்ந்து மறியல் செய்தார் இது நடந்தது.
வைகோ கண் கலங்கினார் என் அண்ணன் கலைஞர் ,ஆகோ,ஓகோ என்று பேசித்தள்ளினார்.
அத்துடன் தேர்தல் கூட்டு வர பாஜக உடன் இணைந்து நான்கு மக்களவை உறுப்பினர்களை முதலும்,கடைசியுமாக மதிமுக பெற்றது.
மீன்டும் அடுத்ததேர்தல் திமுகவுடன்தான் கூட்டணி என்று சொல்லிக்கொண்டே அன்பு சகோதரியின் தோட்டத்துக்கும் காவடி எடுத்தார் .காவடி உபயம் தா.பாண்டியன்.
அப்போது நடை பெற்ற திமுக மாநாட்டில் சிறப்புரை ஆற்ற வருவதாக சொல்லிக்கொண்டே இருந்தார்.
மாநாடு ஆரம்பமாகி விட்டது.திமுக மாநாட்டில் வைகோவை வரவேற்று ஆளுயர கட அவுட்.
மாநாட்டில் ஒவ்வொருவராக பேச வை கோ தான் வந்து கொண்டே இருப்பதாக தொலை பேசியில் அறிவித்துக்கொண்டே இருந்தார் .இருந்த இடம் போயஸ் அணு சகோதரி இல்லம்.கிட்டத்தட்ட தொகுதி பங்கீடு முடிந்து விட்டது.
மதியம் தொலைக்காட்சிகளில் அதிமுக-மதிமுக தொகுதி பங்கீடு செய்திகள் ஒளிப்பரப்பாக மாநாட்டில் வரவேற்ற கட் அவுட் டுக்கு திமுக தொண்டர்கள் வைத்த தீ கெட் - அவுட் கொடுத்தது.
அப்போது வைகோ செய்த செயலுக்கு பெயர் தியாகமா?
இரண்டாவது முறை  அவர்  திமுகவுக்கு செய்த துரோகம். 
அதன் பின்னர் இடையிடையே திமுகவுடன் குலாவுவது,அடுத்து அதிமுகவுடன் நெருங்குவது,இரண்டு கட்சிகளையுமே திட்டுவது,பாஜகவுடன் இணைவது பின்னர் அதை திட்டுவது என வைகோ தமிழக ஏன் இந்திய அரசியலிலேயே மிக குழப்பமான அரசியல்வாதியாக புகழ் பெற்று விட்டார்.
அவரின் முடிவுகளை அவரின் மதிமுக தொண்டர்களே விமர்சனம் செய்யும் அளவு எல்லோரையும் மிகத்திறமையாக குழப்பினார்,குழப்பிக்கொண்டிருக்கிறார்.
தமிழரசு மகன் திருமணத்தில் சென்று ஸ்டாலின்,கருணாநிதியை கட்டிப்பிடித்து மீண்டும் கண்ணீர் சிந்தினார்.
நேரே தாயகம் வந்து வரும் தேர்தலை திமுகவுடன் கூட்டணி வைத்து சந்திப்போம் என்றார்.உற்சாகத்துடன் தொண்டர்கள் இப்போதாவது உங்களுக்கு புத்தி ஒழங்காக வேலை செய்கிறதே என்று கைத்தட்ட அதே வேகத்தில் பினாமி அதிமுக அரசியல் செய்யும் இரு கம்யுனிஸ்ட் கட்சிகளுடன் பேசினார். மீண்டும் முருங்கை மரம்.


ஏற்கனவே இவரது தவறான முடிவுகளால் கலகலத்துப்போன மதிமுக இன்னமும் ஆரம்பகால தொண்டர்கள் தலைவர்கள் விலகலால் ஒட்டகம் நுழைந்த கூடாரமாகி விட்டது.
தனது முடிவுகளால்தான் இந்த நிலை என்பதை இன்னும் உணராத வைகோ இப்போது திமுகவால்தான் இந்த நிலை.
திமுகவை  ஒழிப்பதுதான் இனி என் முதல் வேலை என்று கருத்துக் கொண்டிருக்கிறார்.
இதில் இன்னமும் வைகோ விழித்துக்கொள்ளவில்லை என்பதுதான் நாம் உணரும் பாடம்.
சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பவர் வைகோ என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.
திமுகவுடன் வைகோ மற்றும் கட்சிகள் சேர்ந்தால் பலம் அதிகரித்து விடும்.
தனது ஆட்சியில் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் அவர்களை அதாவது திமுக கூட்டணியை தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்று உளவுத்துறை ராமனுஜம் கொடுத்த தகவல்களின்படி தனது ஆதரவாளர்கள் தா.பாண்டியன்,ஜி,ராமகிருஷ்ணன் ஆகியோர் மூலம் திமுக கூட்டணியில் வைகோ சேர்வதை ஜெயலலிதா தடுத்து விட்டார்.தான் பலிகடா என்பதை தெரியாமலேயே பஞ்ச பாண்டவர் கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்தித்து வனவாசம் போக வைகோ தயாராகிவிட்டார்.
ஆனால் அதை புரியாமல்,தன் மதிமுக தொண்டர்கள் அறியாமல் கண்ணீர் விட்டுக்கொண்டும்,கருவிக்கொண்டும் அரசியல் நடத்துவதையே வைகோ கடை பிடிக்கிறார்.
திமுகவை அழிப்பதாக எண்ணி  மதிமுகவை நன்றாக அழித்துக்கொண்டிருக்கிறார்.
=================================================================================================
சமீபமாக 2G மற்றும் 3G அலைக்கற்றை 380+5=385 MHz. டெலிகாம் துறையால் ஏலம் விடப்பட்டது. அதில் அரசுக்கு 385 MHz க்கு 1,09000 கோடி கிடைத்துள்ளது. அதாவது ஒருMHz சராசரியாக. சுமார் 290 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.ஆனால் வினோத்ராய் ஒருMHzக்கு 3350 கோடிக்கு ஏலம் போகும் என கணக்கிட்டதன் அடிப்படையில் 385 MHzக்கு 12,89,750 கோடி வருமானம் ஏலத்தில் வந்திருக்க வேண்டுமே. ஆனால் வந்திருப்பது வெறும் 109000 கோடிதானே. இதன் மூலம் வினோத்ராய் என்னும் பொய்யனின் முகத்திரை கிழிந்துவிட்டது.
2007-08 ஆம் ஆண்டிலேயே ராஜாவால் டெலிகாம் துறைக்கு 52 MHz க்கு ஒரு MHzக்கு 269 கோடி வீதம் சுமார் 14000 கோடி வருமானம் வந்துள்ளது. 
ராஜா விற்பனை செய்த 52 MHz ஐ ஏலம் விட்டால் அரசுக்கு 174000 கிடைத்திருக்கும் என ஒரு மெகா பொய்யை திட்டமிட்டே சொன்ன வினோத்ராய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். எதிர்பார்க்கலாம்.

=================================================================================================
முகனூல் 


ராஜராஜன் கரூர்
 200 கோடி தந்து திமுக ஒவ்வொருத்தரையா இலுக்க அறிவு இல்லாத முட்டாளா?
அதுல 1 கோடிய உனக்கு தந்தாலே போதும் கூட்டணிக்கு நீயே ஓடி வந்திருப்ப

                                                                       Ashik Ali



                   இதோ திமுகவை அழிக்க அழகிரியும்,வைகோவும் கிளம்பி விட்டனர்.

===============================================================================================








இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?