வெள்ளி, 4 செப்டம்பர், 2015

'ஆண்ட்ராய்ட் மெதுமிட்டாய்'".Marshmallow"

கூகுள் தன்னுடைய ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மீண்டும் ஒரு இனிப்பு மிட்டாய் பெயரை வைத்துள்ளது. 
ஆங்கில அகர வரிசையில் C யில் தொடங்கி L வரை பெயரிட்ட கூகுள், அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பெயர் வைக்காமல் Android M எனப் பொதுவாகக் குறிப்பிட்டு வந்தது. 
மக்களும், இது அது எனப் பல பெயர்களை ஊகமாகச் சொல்லி வந்தனர். 
கூகுள் நிறுவனமே, எந்த எந்தப் பெயர் எல்லாம் உங்கள் நினைவிற்கு வரும் என நம்மை கேலி செய்திடும் தொனியில் பல பெயர்களைhttp://www.androidcentral.com/we-may-soon-find-out-what-android-m-stands என்ற முகவரியில் உள்ள தளத்தில் வெளியிட்டது. 
மக்களும் Milkshake, Mars, Macadamia, Milky Way, Meringue, Milk Dud எனப் பல பெயர்களில் ஒன்றை எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், ஸ்மார்ட் போன்களில் இயங்கும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் 
சிஸ்டத்தின் புதிய பதிப்பிற்கான பெயர் Android 6.0 Marshmallow எனக் கூகுள் அறிவித்துள்ளது. (காண்க:http://www.androidcentral.com/marshmallow). Marshmallow மேற்கத்திய மற்றும் அமெரிக்க நாடுகளில் மிகவும் பெயர் பெற்ற ஒரு தித்திப்பு மிட்டாய் எனலாம். 
அது நம் ஊரில் கிடைப்பது போல, சிறிய மிட்டாய் ஆகக் கெட்டியாக இல்லாமல், பஞ்சு போல மென்மையாக இருக்கும். 
ஆனால், நம் ஊர் பஞ்சு மிட்டாய் போல இருக்காது. 
எனவே இதனை நாம் 'மெதுமிட்டாய்' என அழைக்கலாம். எனவே, Android M என்பது நமக்கு 'ஆண்ட்ராய்ட் மெதுமிட்டாய்'.
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் முந்தைய பெயர்களாக Cupcake (1.5), Donut (1.6), Eclair (2.0-2.1), Froyo (2.2-2.2.3), Gingerbread (2.3-2.3.7), Honeycomb (3.0-3.2.6), Ice Cream Sandwich (4.0-4.0.4), Jelly Bean (4.1-4.3.1), KitKat (4.4-4.4.4, 4.4W-4.4W.2), மற்றும் Lollipop (5.0-5.1.1). புதியதாக இப்போது வந்திருப்பது Android Marshmallow (Version 6.0). இதனைத் தமிழில் சிலர் 'சீமை துட்டி' என அழைப்பார்கள். இருப்பினும் 'மெதுமிட்டாய்' என்ற சொல்லும் அழகாகப் பொருந்துகிறது. 
கூகுள் நிறுவனத்தின் வழக்கமான பழக்கப்படி, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதன் Nexus சாதனங்களில் பதிந்து வெளியிடப்படும். எனவே, வர இருக்கும் Nexus 5 மற்றும் Nexus 6 ஆகியவற்றில், இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டிற்கு வரும். 
இந்த 
இரு சாதனங்களையும், முறையே, எல்.ஜி. மற்றும் ஹுவே வெளியிட்டு உள்ளன. இன்னும் இந்த சிஸ்டத்திற்கான source code தரப்படவில்லை. சோதனைத் தொகுப்பாகவே கிடைக்கிறது. வழக்கம் போலவே, கூகுள் தன் அலுவலகத்தின் முன்புறத்தில், (Building 44 on the Google Campus, home of the Android team). புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான உருவப் பொம்மையை வைத்துள்ளது. இங்கு பழைய பதிப்புகளுக்கான பொம்மைகளும் காணக் கிடைக்கின்றன. 
இந்த உருவப் படத்தினை இப்போதே நீங்கள் உங்கள் போனில் பதிந்து வைக்கலாம். இது தொடர்பான, வால் பேப்பர்களைப் பெற விரும்புவர்கள் https://www.androidpit.com/android-marshmallow-wallpapers-download என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 
இந்தப் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சோதனை முறையில், சோதித்துப் பார்க்கும் புரோகிராம் எழுதுபவர்களுக்கென வழங்கப்படுகிறது. 
ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இந்த சோதனைத் தொகுப்பினைத் (Android 6.0 SDK) தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பொதுமக்களின் பயன்பாட்டிற்கான முறையான, முழுமையான பதிப்பு, வரும் அக்டோபரில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய 'மெதுமிட்டாய்' ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், வர இருக்கும் புதிய வசதிகள் குறித்து கூகுள் பல வலைப்பதிவுகளில் அறிவித்துள்ளது. அவற்றை இங்கு பார்க்கலாம்.
1. ஸ்மார்ட் போனில், மின்சக்தி பயன்பாட்டினைக் குறைக்கும் வகையில் Doze என்னும் வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனை இயக்கிவிட்டால், நம் செயல் நகர்த்தலை இது தொடர்ந்து கண்காணித்து, பேட்டரி சக்தி செலவிடப்படுவதைக் குறைக்கிறது. 
லாலிபாப் மற்றும் ஆண்ட்ராய்ட் எம் இயங்கும் இரண்டு வெவ்வேறு மொபைல் போன்களில், இந்த வசதியைப் பயன்படுத்தியபோது, ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டம் இயங்கும் போனில், மின் சக்தி இரு மடங்கு சேமிக்கப்படும் வகையில் செயல்பாடு இருந்தது.
2. அடுத்ததாக, விரல் ரேகை செயலாக்கம். 'மெதுமிட்டாய்' பதிப்பில் விரல்ரேகை அறிதலை, ஆண்ட்ராய்ட் சாதனங்களைத் திறப்பதற்கு மட்டுமின்றி, பயனாளர் போனில் தரப்படும் Android Pay வசதியைச் செயல்படுத்தும் போதும் பயன்படுத்த உதவுகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் புரோகிராம், கேம் மற்றும் பிறவற்றை வாங்குகையில், பணம் செலுத்த, பயனாளர் அடையாளத்தினை அறிவிக்க, இந்த விரல் ரேகை வசதியைச் செயல்படுத்தலாம். 
3. இந்த சிஸ்டத்தில், Google Now வசதியை இயக்கி, மொபைல் போனின் திரையில் வைக்கப்படும் எந்த ஒரு ஆப்ஜெக்ட்டையும் ஸ்கேன் செய்திடப் பயன்படுத்தலாம். டெக்ஸ்ட், பாடல், விடியோ படம் மற்றும் ஒரு கட்டுரை குறித்த, முக்கிய தகவல்களை இதன் மூலம் அறியலாம். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் ஒரு முக்கிய செயலாக்கமான, "Now on Tap" என்பதை, போனின் ஹோம் பட்டனை அழுத்தி, அல்லது "OK Google," என மைக்கில் சொல்லி, செயல்படுத்தலாம். இந்த செயல்பாடு, Now on Tap செயல்பாட்டினை ஸ்கேன் செய்து உதவும்படி சிக்னல் அனுப்பும். ஒரு பாடல் ஒலிக்கையில், "Who sings this?" எனக் கேள்வி கேட்டு அதற்கான பதிலைப் பெறலாம்.
4. Samsung Pay மற்றும் Apple Pay ஆகியவற்றிற்கு இணையாக, கூகுள் நிறுவனத்தின் Android Pay செம்மைப்படுத்தப்பட்டு, புதிய சிஸ்டத்துடன் தரப்படுகிறது. இது கூகுள் வாலட் (Google Wallet) எனப்படும் கூகுள் மணி பர்ஸ் செயல்பாட்டுக்குப் பதில் இணையாகத் தரப்படுகிறது. 2011ல் அறிமுகப்படுத்தப்பட்ட Google Wallet தொடர்ந்து இருவருக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கும் பயன்படும். ஆப்பிள் சிஸ்டத்தில் உள்ளது போல, Android Pay வசதியைப் பயன்படுத்தி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் குறித்த தகவல்களை, ஸ்மார்ட் போனில் பதிவு செய்து வைக்கலாம். அதன் மூலம், நாம் பொருள் வாங்கும் கடைகளில் உள்ள பணம் பெறும் சாதனங்கள் வழியாக பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். 'ஆண்ட்ராய்ட் பே' வசதி மூலம், கூகுள் மொபைல் வழி பணம் செலுத்துவதில், எளிமை, பாதுகாப்பு மற்றும் விருப்பம் போல் செயல்படும் வழிகள் ("simplicity, security, and choice") ஆகியவற்றைத் தருவதில் முழுமையாகச் செயல்படுகிறது என கூகுள் நிறுவன நிர்வாகி தெரிவித்துள்ளார். 
தற்போது, இந்த வகை மொபைல் சாதனங்கள் வழி நிதி பரிமாற்றம், அமெரிக்காவில் ஏறத்தாழ 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள்ளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. American Express, Visa, Mastercard, and Discover ஆகிய வர்த்தக நிதி நிறுவனங்கள், இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளன. என்.எப்.சி. எனப்படும், அண்மைக் கள தகவல் தொடர்பு தொழில் நுட்பம் (NFC -~Near Field Communication) வசதி உள்ள (ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் மற்றும் அதற்கும் பிந்தைய சிஸ்டம் உள்ள போன்களில்) சாதனங்களில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
5. இந்த புதிய 'மெதுமிட்டாய்' சிஸ்டத்தில், பயனாளர்கள், போனில் அப்ளிகேஷன்களை பதிவு செய்வதற்கான அனுமதி தருவதைச் சீரமைக்கிறது. அத்துடன், பயனாளர்களின் தனிநபர் தகவல்களை, போனில் பதிந்து இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் திருடுவதைத் தடுக்கும் வசதி தரப்பட்டுள்ளது. 
அதாவது, ஆண்ட்ராய்ட் பயனாளர்களிடம் பொதுவாக, எந்த ஒரு அப்ளிகேஷனை இயக்கத்தொடங்கும் போதும், பயனாளர்களின் காண்டாக்ட் பட்டியலில் உள்ள தகவல்கள் மற்றும் சார்ந்தவற்றைப் பகிர்ந்து கொள்ள நம் அனுமதி கேட்கப்படும். இது புதிய சிஸ்டத்தில் நடைபெறாது. 
6. Android Marshmallow இயக்கத்தில், கூகுள் USB Type- C வகை யு.எஸ்.பி. செயல்பாடு தரப்படுகிறது. இதனால், உங்கள் மொபைல் சாதனம், வழக்கத்திற்கு மாறாக, வேகமாக யு.எஸ்.பி. செயல்பாட்டினை மேற்கொள்ளும். இந்த சிஸ்டம் இயங்கும் மொபைல் போனில், Type -C port யு.எஸ்.பி.க்கென தரப்பட்டிருந்தால், யு.எஸ்.பி. கேபிளை எந்தப் பக்கமாகவும் இணைக்கலாம். இப்படித்தான் செருக வேண்டும் என்றில்லாமல், எந்தப் பக்கமாகவும் செருகும் வகையை யு.எஸ்.பி. டைப் சி போர்ட் கொண்டிருக்கும். 
அது மட்டுமின்றி, இந்த வகை போர்ட் கொண்ட சாதனைத்தைப் பயன்படுத்தி, 'மெதுமிட்டாய்' சிஸ்டம், போனில் உள்ள மின் சக்தியை, மற்ற 
சாதனங்கள் பயன்படுத்த அனுமதிக்கும்.
7. Direct Share என்று ஒரு வசதி, ஆண்ட்ராய்ட் மார்ஸ் மெல்லோ சிஸ்டத்தில் தரப்படுகிறது. இதனைக் கொண்டு, நம் காண்டாக்ட் போன்ற தகவல்களை, போனில் உள்ள மற்ற அப்ளிகேஷன்கள் பயன்படுத்தலாம். 
மொபைல் போன் பயனாளர், வேறு ஒரு சமூக வலைத்தளத்தில் உள்ள அப்ளிகேஷனப் பயன்படுத்தி, அதில் உள்ள ஒரு நபருக்குத் தன்னிடம் உள்ள தகவலைத் தர முடியும்.
8. https://code.google.com/p/android-developer-preview/issues/detail?id=2403#makechanges என்னும் தளத்தில் தரப்பட்டுள்ள குறிப்புகளின்படி, Visual Voicemail என்னும் வசதியை, டயலரிலிருந்து பெற்றுப் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது. 
முதன் முதலில், அமெரிக்காவில் இயங்கும் T Mobile மற்றும் பிரான்ஸில் இயங்கும் Orange France ஆகியவை தரும் போன்களில் மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என அறியப்படுகிறது. பின் நாளில், மற்ற நாட்டில் உள்ள ஸ்மார்ட் போன்களுக்கும் இது கிடைக்கும். அது என்ன “விசுவல் வாய்ஸ்மெயில்” என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். உங்களுடைய வாய்ஸ் மெயில் கட்டளையை, காணக்கூடிய இடைமுகத் தோற்றமாக இந்த விசுவல் வாய்ஸ்மெயில் தரும். தற்போது இயங்கும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில், இது ஆடியோ அடிப்படையிலான பதிவாக மட்டுமே நமக்குக் கிடைக்கிறது.
 இனி இது தோற்றமாகவே இருக்கும். இதற்கு, நமக்கு மொபைல் சேவையினை வழங்கும் நிறுவனத்தின் உதவியும் தேவைப்படும்.
9. அடுத்ததாக, ஹோம் ஸ்கிரீன் தோற்றத்தில், திரை சுழற்சி (Screen Rotation) வழங்கப்பட்டுள்ளது. இனி ஹோம் ஸ்கிரீன் தோற்றத்தினை, லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்ட்ரெயிட் வகையில் பயன்படுத்தலாம்.
10.பொதுவாக, ஸ்மார்ட் போன்களில், போன்களிலேயே கொடுக்கப்பட்டுள்ள தேக்க நிலை நினைவகம் (Storage Memory) சிக்கல்களைத் தருவதாக அமைக்கப் பட்டிருக்கும். மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம், இதன் திறனை அதிகப்படுத்தும் வசதி இருந்தாலும், நாம் இணையத்திலிருந்து நமக்குத் தேவையான, விருப்பப்பட்டவற்றைத் தரவிறக்கம் செய்திடுகையில், தேக்கக நினைவகத்திலும் ஒரு கண் வைத்திருப்போம். 
இடம் உள்ளதா, இல்லையா? என்ற கவலை பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும். 
இந்த புதிய 'மெதுமிட்டாய்' சிஸ்டத்தில், ஒரு சிறிய பார் கோடு தரப்படுகிறது. இதன் மூலம், போனில் உள்ள நினைவகத்தில் இன்னும் எவ்வளவு இடம் தேக்கிவைக்கக் கிடைக்கிறது என அறிந்து கொள்ளலாம். 
11.இணைய அனுபவத்தில் புதிய ஒரு வசதி, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்படுகிறது. பொதுவாகவே, கூகுள் இணையத்திலிருந்து நாம் விரும்பி இறக்கிக் கொள்ளும் விஷயங்களை, நமக்கு மனதிற்கு இதமாக வழங்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளும். 
புதிய சிஸ்டத்தில் உள்ள Chrome Custom Tabs இதனைச் சற்றுப் புதிய வகையில் தருகிறது. இதன் மூலம் குரோம் பிரவுசரின் திறன் அனைத்தையும், ஒருங்கிணைக்கும் வசதியை டெவலப்பர்கள் பெற்று தங்கள் அப்ளிகேஷன்களில் பயன்படுத்தலாம். இந்த வசதி, அப்ளிகேஷன்கள் இயங்கும்போது, அந்த இயங்கும் அப்ளிகேஷன் மேலாகவே, ஒரு சிறிய குரோம் விண்டோவினைக் காட்டும். 
இணையத்தில் இயங்குகையில், இந்த வசதி, பயனாளர்களுக்கு ஓர் எளிய வழியைத் தரும். அத்துடன், தானாகவே தளம் ஒன்றில் லாக் இன் செய்வது, பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்திருத்தல், தானாகவே படிவங்களில் தகவல்களை நிரப்புதல் மற்றும் பல முனை பாதுகாப்பினை இந்த வசதி கொண்டுள்ளது. 
12.அப்ளிகேஷன் சார்ந்த தொடர்பு: ஏதேனும் ஓர் அப்ளிகேஷனில் இயங்கக் கூடிய ஒரு லிங்க், இணைய தளப் பக்கத்தில் தரப்பட்டிருந்தால், நாம் அதனைக் கிளிக் செய்திடும்போது, முன்பு ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், ஒரு மெனு பட்டியல் கொடுக்கப்பட்டு, எந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள என்று கேட்கப்படும். (Open With என்பதைப் போல). புதியதாக வரும் ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டம், தானாகவே, அந்த செயலியை உணர்ந்துகொண்டு, அந்த லிங்க்கில் தரப்படும் பயன்பாட்டினை, அந்தச் செயலியின் வழியாகத் தருகிறது. 
எடுத்துக் காட்டாக, ட்விட்டர் தளம் சார்ந்த ஒரு லிங்க் இருப்பின், ஆண்ட்ராய்ட் எம், தானாக, ட்விட்டர் அப்ளிகேஷனைத் திறந்து செயல்படுத்திகிறது.
13.முற்றிலும் புதிய, பயனுள்ள வசதி என எடுத்துக் கொண்டால், ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ள Android Auto Backup மற்றும் Restore for Apps என்ற இரண்டு வசதிகளைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். கூகுளின் ஆண்ட்ராய்ட் மேடைக்கான டெவலப்பர் கருத்தரங்கில் வெளியான உரைகளில், இது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், சோதனைப் பதிப்பில் இவை அட்டகாசமாகச் செயல்படுகின்றன. கூகுள் ட்ரைவ் எப்படி, அப்ளிகேஷன் டேட்டா மற்றும் செட்டிங்ஸ் அமைப்பு நிலைகளைத் தானாக, 25 எம்.பி. அளவிலான பைல் ஒன்றில் பதிந்து வைக்கிறதோ, அதே போல வசதி இது. 
நாள் ஒன்றில், பேக் அப் செயல்பாடு ஒருமுறை மேற்கொள்ளப்படுகிறது. வை பி யுடன் இணைய இணைப்பில் இருக்கையில், போன் வேறு ஒரு செயல்பாட்டினையும் மேற்கொள்ளாத நிலையில், இந்த பேக் அப் வசதி செயல்படுத்தப்படுகிறது. 
இதன் வழியாக அனுப்பப்படும் டேட்டா, நம் கூகுள் ட்ரைவ் சேவ் செய்திடும் இட வசதியுடன் இணைக்கப்பட்டு கணக்கிடப்படுவதில்லை. நாம் நம் சாதனத்தை தொலைத்துப் பின்னர் புதிய சாதனம் ஒன்றை இயக்கும்போதும், அல்லது ஏதேனும் அப்ளிகேஷன் ஒன்றை அழித்துவிட்டு, புதியதாக அப்ளிகேஷனை நிறுவுகையில், நீங்கள் அந்த அப்ளிகேஷனில் செயல்பட்டு தேக்கி வைக்கப்பட்டிருந்த டேட்டா உடனே மீடேற்றம் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும்.
14.அப்ளிகேஷன் ட்ராயர்: புதிய சிஸ்டத்தில் தரப்படும் புதிய வசதிகளில், நம்மைக் கவரும் வகையில் தரப்பட்டிருப்பது, புதிய அப்ளிகேஷன் ட்ராயர் எனப்படும் வசதி ஆகும். இது படுக்கை வசத்தில் இயங்காமல், நெட்டு வாக்கில் செயல்படுகிறது. 
ஹோம் பேஜ் வால் பேப்பர் பின்னணியில், தெரியாத வகையில் தரப்படாமல், தனியே வெள்ளை நிறப் பின்னணியில் தரப்படுகிறது. இதற்கான மெனுவில் மேலாக, நீங்கள் அண்மையில் பயன்படுத்திய நான்கு அப்ளிகேஷன்கள் எவை என்று காட்டப்படுகின்றன.
15.புதிய எம் ராம் மேனேஜர் (Android M RAM manager): ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தில், முற்றிலும் புதிய வகையில் இயங்கும் ராம் நினைவக நிர்வாகம் தரப்பட்டுள்ளது. அப்ளிகேஷன்கள், ராம் நினைவகத்தில் பயன்படுத்தும் நினைவு அளவு துல்லியமாகக் காட்டப்படுகிறது. இதற்கான மெனுவினை Settings > Apps > Options (three dots button) > Advanced > Memory எனச் சென்று காணலாம். 
இதனைப் பார்த்து, எந்த அப்ளிகேஷன்கள் தேவையில்லாமல், இயங்கா நிலையிலும், அதிக இடத்தை எடுத்துக் கொண்டுள்ளன என்பதைப் பயனாளர்கள் காணலாம். தேவையற்றவற்றின் இயக்கத்தினை நிறுத்தலாம்.
16.கூகுள் எப்போதும், மைக்ரோ எஸ்.டி. கார்ட்கள் மூலம், நினைவகத்திறன் அதிகப்படுத்தப்படுவதனை விரும்புவதில்லை. அதனால் தான், தன்னுடைய நெக்சஸ் சாதனங்களில், மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் தருவதில்லை. 
ஆனால், ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தில், இந்த வகையில் சற்று இறங்கி வந்துள்ளது. கூடுதல் தேக்கக நினைவகத்திற்குப் (Addirional Storage Space) பதிலாக, மாற்றிக் கொள்ளக் கூடிய, வளைந்து கொடுக்கக் கூடிய நினைவகத்தினை (Adoptable Storage Space) ஏற்படுத்திக் கொள்கிறது. எஸ்.டி.கார்ட் மற்றும் யு.எஸ்.பி. ட்ரைவ்களை அந்த வகையில் நடத்துகிறது. 
அவற்றை, சிஸ்டத்தில் உள்ள, உள்ளார்ந்த ஸ்டோரேஜ் இடமாக பார்மட் செய்கிறது. இதன் மூலம், போனில் உள்ள ஸ்டோரேஜ் இடத்திற்கும், இந்த கூடுதல் வளைந்து கொடுக்கும் நினைவகத்திற்கும் இடையே, தகவல்களை மிக எளிதாகப் பரிமாற்றிக் கொள்ள இயலும். 
நீங்கள், உங்கள் நெக்சஸ் ஸ்மர்ட் போனில், ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தின் சோதனைப் பதிப்பினைப் பதிந்து இயக்கிப் பார்க்க விரும்பினால், உடனே https://www.androidpit.com/how-to-get-android-m-preview என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அங்கு தேவையான அறிவுரைகள் தரப்பட்டுள்ளன.
ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முதன் முதலில், 2008ல் வெளியானது. ஒவ்வொரு முறை, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகும்போது, பல வசதிகள் புதியனவாகவும், பழைய வசதிகள் மேம்படுத்தப்பட்டும் கிடைத்து வந்தன. இருப்பினும், ஒவ்வொரு புதிய சிஸ்டமும், சிலவற்றை அப்படியே, அடுத்த முறை மேம்படுத்தலாம் என விடப்படும். 
புதியதாக வந்திருக்கும் ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும், பேட்டரியை நீண்ட நாள் உழைக்க வைத்திடும் வசதி, மிகச் சிறந்த செயல்பாடு மற்றும் பல முன்னேற்றமடைந்துள்ள வசதிகள் ஆகியவற்றைப் பார்க்கையில், ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டம் நாம் மாற்றிக் கொள்ள உகந்ததாகவே உள்ளது.
ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமானது, உலக அளவில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில், 80% போன்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
சில போன்கள், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பழைய பதிப்புகளை, அவற்றிற்கான அப்கிரேட் வசதி இல்லாத போதும் பயன்படுத்தி வருகின்றன. 
அண்மையில் டேப்ளட் பி.சி. பயன்பாடு குறித்து எடுக்கப்பட்ட ஆய்வுமுடிவில், பெரும்பாலான சாதனங்களில், ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே இயங்குகிறது எனக் கண்டறியப் பட்டுள்ளது.
                                                                                                                                         நன்றி:தினமலர் 
=====================================================================================================
மின்சாரமும் 110ம்.

சட்டப்பேரவையில் முதலவர் 110 இன் கீழ் தமிழகத்தில் மின் தட்டுப்பாடே இல்லை என்கிறார்.
எதிர்கட்சிகளை கேள்விக்கு மின் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பிளக்கில் கையை வையுங்கள்.மிசாரம் வராவிட்டால் சொல்லுங்கள் என்கிறார்.
அனால் தமிழக நடைமுறையில் மின் வழங்கல் எப்படி உள்ளது.
காற்றாலை மின்சாரம் குறைந்ததால், தொழிற்சாலைகளில் ஜெனரேட்டர் பயன்படுத்தும்படி, மின் வாரிய அதிகாரிகள் வாய்மொழி உத்தர விட்டுள்ளனர்.

தமிழகத்தின் தினசரி மின் தேவை, 12 ஆயிரம் மெகாவாட். 

இதில், தொழிற்சாலைகளின் தேவை, 3,000 மெகாவாட். 
தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, அனல், 4,660 மெகாவாட்; 
நீர், 2,288; எரிவாயு, 
516 மெகாவாட் என, 7,464 மெகாவாட் திறனுடைய, மின் நிலையங்கள் உள்ளன. 
இவற்றில் இருந்து, நாள் ஒன்றுக்கு சராசரியாக, 5,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. 

இதுதவிர, மத்திய மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு, 5,518 மெகாவாட் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், தினமும், 3,000 மெகாவாட் தான் கிடைக்கிறது. 

இதுபோக, மீத தேவைக்கான மின்சாரம், காற்றாலைகள் உட்பட, தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படுகிறது. 
மே மாதம் முதல், காற்றாலைகளில் இருந்து தினமும், 2,500 - 3,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. மழையால் மின் தேவை குறைந்ததால், மின் பற்றாக்குறை ஏற்படவில்லை. 

தற்போது, கூடங்குளம், வல்லுார் போன்ற மத்திய மின் நிலையங்களில், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. 
சில தினங்களாக, காற்றாலைகளில் இருந்தும், 100 - 400 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. 
இதனால், தேவைக்கேற்ற மின்சாரம் கிடைக்காமல், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 
இதையடுத்து, தொழிற்சாலைகளில் ஜெனரேட்டர் பயன்படுத்தும்படி, மின் வாரிய அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

காற்றாலை மின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. 

இதை சரிகட்ட வேண்டும் எனில், வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு, பல மணி நேரம் மின்தடை செய்ய வேண்டியது நேரிடும். 
தற்போது தொழிற்சாலைகளை ஜெனரேட்டர் வைத்து மின்சாரம் வைத்து பிழைப்பை ஓட்ட மின் துறை அறிவுறுத்தியுள்ளது.
வீடுகளுக்கு வழங்க  தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டு வழங்கப்படுகிறது.ஆனால் அதுவும் இந்த தேர்தல் வரும் வரை தான் . ஆறுமாதங்களுக்குத்தான் .வாக்குகளுக்காக கடும் நிதிப் பற்றாக்குறையால் வழங்கப்படும்.
காரணம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே அரசு தள்ளாடும் நிலையில் கருவூலத்தில் பணம் வழிக்கப்படு விட்டது.
அரசின் கடன்-பற்றாக்குறை 6 லட்சம் கோடியை நெருங்கி விட்டது.கருணாநிதியை கருவூலத்தை காலியாக்கி விட்டார் என்று சொல்லி,சொல்லி திட்டிய நிலை உண்மையில் தற்போதுதான் வந்துள்ளது. 
இதில் ஜெயலலிதா அறிவித்த 24000 கோடிகளில் மின் உற்பத்தி நிலையம் வெறும் கண்துடைப்பு தீர்தளுக்கானது.தனது ஆட்சிக்காலத்தில்  அதற்காக தற்பொது ஒன்றும் செய்யப்போவதில்லை.மற்ற 110 அறிவிப்புகளுடன் அதுவும் சேர்ந்துவிட்டது.
அடுத்த ஆட்சியாலர்கள் தானே அதைப்பற்றி கவலைப்படவேண்டும்.
===========================================================================================
இன்று,
செப்டம்பர்-04.
  • அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1978)
  • அமெரிக்க செய்தித்தாள் தினம்
  • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது(1781)
============================================================================================
மருந்து வாங்கப் போறீங்களா?


மருந்துகளை, உரிமம் பெற்ற, சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். 
பெட்டிக்கடைகளில் வாங்குவதை தவிர்க்கவும்.அவைகளை அதிகம் போலியாக இருக்க வாய்ப்புள்ளது.அல்லது காலாவதியானதாக இருக்கலாம்.
அவர்கள் மருந்து பொருட்கள் வினியொகிப்பவர்களிடம் வாங்குவதில்லை தெரிந்தோ,தெரியாமலோ  ஹார்லிக்ஸ் முதல் பான்பராக் வரை போலிகளை விற்கும் வியாபாரிகளிடம் இருந்துதான்  வாங்குகிறார்கள்.
மருந்துகளை வாங்குபவர்கள் மருத்துவரின் சீட்டின் அடிப்படையில், அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே, வாங்க வேண்டும். மருந்து வாங்குவதில், ஒருபோதும் அவசரம் காட்டக்கூடாது.  பொறுமையுடன் வாங்க  வேண்டும். 
வாங்கிய மருந்துகளுக்கு, கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். 
இது, போலி மருந்துகளை கண்டறிய உதவும். 
மருந்துகளை வாங்கியவுடன், அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை, நன்கு கவனிக்க வேண்டும். 
மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும், ஒப்பிட்டு பார்த்து, இவற்றில் ஏதாவது தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம், புகார் செய்ய வேண்டும். 
மருந்து வாங்கி வந்த பின்னர் கவனிக்க வேண்டியவை;
மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத, உலர்ந்த இடத்தில் வைக்கவும். 
குறிப்பிட்ட சில மருந்து வகைகளை மட்டும், குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அவற்றை, பிரிட்ஜில் வைத்திருக்க வேண்டும். 
மருந்துகளை குழந்தைகளுக்கு, எட்டாத உயரத்தில் வைக்க வேண்டியது அவசியம்.
மருந்துகளை சமையல் அறை, குளியலறையில் உள்ள, அலமாரிகளில் வைக்காதீர்கள். 
மற்றவரது நோயின் தன்மை, உங்கள் நோயை போன்று இருந்தாலும், நீங்கள் பயன்படுத்தும் மருந்துகளை, மருத்துவர் கவனிப்பின்றி அடுத்தவர்களுக்கு கொடுக்கக்கூடாது. 
மருத்துவரின் சீட்டின் அடிப்படையில், அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகள் இல்லை இதுவும் அதே போன்றுதான் என்று  கடைக்காரர்  வேறு மருந்துகளை தந்தால் மருத்துவரிடம் பேசிய பின்னர் அந்த மருந்துகளை வாங்குங்கள்.. 
அப்புறம் சின்ன,சின்ன தானாகவே சரியாகிவிடும் வியாதிகளுக்கும் அதிக அளவு சக்தி கொண்ட மாத்திரைகளை கடைகளில் நீங்களாகவே வாங்கி உபயோகிக்காதீர்கள்.தானாகவே சரியாகிவிடு தலைவலியை இது போன்ற மாத்திரைகள் வேறு வியாதியாக்கி விடும் அபாயம் உள்ளது.
===========================================================================================
75000 இளைஞர்கள் பலி?
இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வண்ணம் உள்ளது. 
கடந்த ஆண்டுடில் மட்டும் சுமார் 75 ஆயிரம் இளைஞர்கள் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர்   தற்போது சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவு சாலை விபத்து குறித்து ஒரு அறிக்கை ஒன்றை தயார் செய்ததுள்ளது.

இதில் கடந்த ஆண்டு 75 ஆயிரம் இளைஞர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 
இவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
இதில் பெரும்பாலானோர் ஆண்கள். 
மொத்த எண்ணிக்கையில் இது 53.8 சதவீதமாகும். 
35 முதல் 64 வயதுடையவர்கள் 35.7 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். 

2013-ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தோடு 2014-ல் அதிகமான அளவில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. 
2013-ம் ஆண்டு 8.46 லட்சமாக இருந்த விபத்து 2014-ல் 4.89 லட்சமாக அதிகரித்துள்ளது.

 உ.பி., தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம் உள்பட 14 மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 83.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

================================================================================================
சீனா திடீரென தனது ராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது.
இதன் மூலம் உலகின் வல்லரசுகளை தன பக்கம் கவனிக்க வைத்துள்ளது.