அத்திப் பழம்




உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
அத்தி நல்ல மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள்,
புழுக்கள் இருக்கும். அவற்றை நீக்கி  பதப்படுத்தாமல் உண்ண முடியாது.

பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.
பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன.
இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள் சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.
அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள்,
வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்துவெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.
மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், மூலம் குணம் பெற அத்திப் பழங்கள் சாப்பிடுங்கள் என்று
இறைத் தூதர் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
* தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
* மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
* நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
* போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க
அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு
பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
* இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.
* உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும்.
வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.
* மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய்,
மூட்டுவலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்.
பயன்கள்: அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.
மேலும் இவை கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.
கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது.
இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.
                                           1937 ம் ஆண்டு திரைப்படத்தில் எந்திர துப்பாக்கி.
======================================================================================================
இன்று,
செப்டம்பர்-10.
  • உலக தற்கொலை தடுப்பு தினம்
  • சீனா ஆசிரியர் தினம்
  • சுவிட்சர்லாந்து ஐநா.,வில் இணைந்தது(2002)
  • 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1858)


                                           உலக முதலீட்டாளர்களா ? உலக  ஜொள்ளீட்டாளர்களா ?



====================================================================================================
சுய கட்டுப்பாடு.
பிஞ்சு பருவத்திலேயே உங்கள் பிள்ளைக்கு சுய கட்டுப்பாட்டை கற்றுக்கொடுக்கலாம். 
ஜெனரேஷன் மீ என்ற புத்தகம் சொல்கிறது: “கடையில் ஒரு மிட்டாய்காக குழந்தை அடம்பிடித்து அழும்போது நீங்கள் உடனே வாங்கி கொடுத்துவிட்டால் ‘அழுதா நமக்கு எல்லாம் கொடுத்துடுவாங்க’ என்று அந்த பிள்ளை நினைக்கும். 
அடுத்த முறையும் குழந்தை அதேபோல் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும். அதற்கு பதிலாக, குழந்தை சொல்பேச்சு கேட்டு நடக்கும்போது அதுக்கு பிடித்ததை வாங்கிக்கொடுங்கள். நிறைய பெற்றோர் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக கேட்டதை கொடுத்துவிடுகிறார்கள். 
அப்படி கொடுக்காவிட்டால் குழந்தையின் மனம் கஷ்டப்படும் என்று நினைக்கிறார்கள், ஆனால் அப்படி செய்தால், வளர்ந்த பிறகு அந்த பிள்ளைதான் ரொம்ப கஷ்டப்படும். 
குழந்தை மரியாதையோடு கேட்கும்போது, அதற்கு பிடித்ததை செய்யுங்கள் அல்லது பரிசு கொடுங்கள். அப்போது நல்ல பழக்கவழக்கங்களையும் சுய கட்டுப்பாட்டையும் பிள்ளை கற்றுக்கொள்ளும்.”
======================================================================================================



உலகின் முஸ்லீம்கள் அதிகமாகக் கொண்ட மூன்றாவது  நாடு  இந்தியா தான் .
நாடெங்கிலுமிருந்து 100 பள்ளிவாசல்கள், இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக குழுக்களைச் சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர்கள், ஐஎஸ் ஆயுதக்குழுவின் நடவடிக்கைகள்
இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானவை என்று தீர்ப்பளித்துள்ளனர்.
ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளின் தலைவர்களுக்கு இந்த ஃபத்வா- ஆணை அங்கீகாரத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக முஸ்லீம் சமூகத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
=====================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?