குறைந்த பட்சம் 45 நிமிடம் உடற்பயிற்சி,

ஒரு மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு இதயம் சரியாக வேலை செய்ய வேண்டும். 
இதில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டாலும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். 

இதய நோய் பிரச்னையால் அவதிப்பட முக்கிய காரணம் நம்முடைய முறையற்ற உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை. 

துரித உணவின் காரணமாக பலர் ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளை சாப்பிட தவறிவிடுகிறார்கள். இதனால் நீரிழிவு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஒவ்வொன்றாக தலை தூக்க ஆரம்பிக்கிறது. இது நாளிடைவில் இதய பிரச்னையாக மாறும். 
இந்த பிரச்னையில் இருந்து விடுபட உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும். 

தினமும் ஏதாவது ஒரு முழு தானியங்கள், பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவது அவசியம். பழம் மற்றும் காய்கறியில் ஆண்டி ஆக்சிடென்ட்ஸ் உள்ளது. 
இவை உடல் பருமன் மற்றும் தேவையற்ற கொழுப்பை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

அதிக கொழுப்பு சார்ந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. கொழுப்பில் இரண்டு வகை உள்ளது. 

எச்.டி.ஏ என்று அழைக்கப்படும் நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு. 
கெட்ட கொழுப்பு வெண்ணை, நெய், சீஸ், எண்ணைகளில் இருப்பது. 
இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. 
எச்.டி.ஏ என்ற நல்ல கொழுப்பு உடற்பயிற்சி செய்வதால் அதிகரிக்கும். 
அதே சமயம் உடலில் உள்ள தசைகளை வலுவாக்கும்.
பொதுவாக நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் உருளை, கேரட், பீட்ரூட் போன்ற உணவுகளை தவிர்த்து விடுவார்கள். 
அவர்கள் அதை சாப்பிடக்கூடாது என்றில்லை. அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பது தான் முக்கியம். 
உருளையை வேகவைத்து காய்கறிகளுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடலாம். எண்ணையில் பொரித்து சாப்பிடக் கூடாது. 

அதே போல் பீட்ரூட், கேரட்டையும் பொரியல் செய்து சாப்பிடலாம். இதனை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். வாழைப்பழத்தை உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாது. மதிய உணவுக்கு முன் அல்லது மாலை நேரங்களில் டீ சாப்பிடும் சமயத்தில் சாப்பிடலாம். 
அதே போல் சப்போட்டாவை தோலுடன் சாப்பிடலாம். 

பழங்களை சாறு பிழியாமல் அப்படியே சாப்பிடுவதால் அதில் உள்ள நார்சத்து நமக்கு குறையாமல் கிடைக்கும். 
நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் தினமும் 50 கிராம் பழங்கள் சாப்பிடுவது நல்லது. 
அதே போல் எல்லாரும் தினமும் குறைந்த பட்சம் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்வது அவசியம். 
சரியான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதய நோய் வராமல் நம்மை நம்மால் பாதுகாக்க முடியும்.
===============================================================================================
எலுமிச்சை பற்றி...,!

நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது எலுமிச்சை 

வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து கொண்டுள்ள எலுமிச்சை பல்வேறு பலன்களை தருகிறது.

*நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், தகுந்த நிவாரணம் பெறலாம்.

*மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

*தேள்கொட்டினால், அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

*சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள், மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

*சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

*எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

*சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி இலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர படர்தாமரை குணமாகும்.

*சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

*கழிச்சலுக்காக மருந்துகள் உட்கொண்டு, அதனால் அடங்காத கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால், சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக வறுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால் உடனே வாந்தியும், கழிச்சலும் நிற்கும்.

*எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும்.

*அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

*நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.

*எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.


===============================================================================================
தமிழக காவல்துறையும் சிபிசிஐடியும் வேறு ,வேறா?

போலீசார் தற்கொலை செய்து கொள்வது அனைத்து மாநிலங்களிலும் இருந்தாலும் தமிழகத்தில் அதிகமான போலீசார் மன உளைச்சல் மற்றும் உயர் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 
கடந்த சில தினங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக பணி செய்து வந்த விஷ்ணுபிரியா என்ற இளம் பெண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பில் மர்மம் நிறைந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மன உளைச்சல், உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக போலீசார் அதிகம் தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் 216 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 
சட்டங்களை மீறுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது காவல் துறையின் கடைமை. பொது மக்களுக்கு பாதுப்பை உறுதி செய்வது காவல்துறையின் நோக்கம். ஆனால், பல நேரங்களில் காவல்துறையில் இருப்பவர்களே இன்னல்களை அனுபவிக்கின்றனர். 
இதுபற்றி வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் மனதிற்குள் புழுங்கி... புழுங்கி... இறுதியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாக பெண் அதிகாரிகள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
போலீசார் தற்கொலை செய்து கொள்வது அனைத்து மாநிலங்களிலும் இருந்தாலும் தமிழகத்தில் அதிகமான போலீசார் மன உளைச்சல் மற்றும் உயர் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 
கடந்த சில தினங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக பணி செய்து வந்த விஷ்ணுபிரியா என்ற இளம் பெண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். 
அவரது இறப்பில் மர்மம் நிறைந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

போலீசார், போலீஸ் அதிகாரிகள் அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தை பிடித்துள்ளது. 
இரண்டாவது இடத்தை தமிழ்நாடு தன்வசப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த 2013ல் 31 போலீசாரும், 2012ல் 58, 2011ல் 31, 2010ல் 19, 2009ல் 17, 2008ல் 12, 2007ல் 16, 2006ல் 32 என கடந்த 8 வருடங்களில் 216 போலீசார் உயிரை மாய்த்துள்ளனர். 
இப்படி தொடரும் உயிர் இழப்புகளுக்கு காரணமான அதிகாரிகள் கடைசிவரை தண்டிக்கப்படுவது இல்லை என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.தமிழ் நாடு காவல்துறை அதிகாரிகள் கொடுமைக்கு பலியானவர்களை பற்றி விசாரிக்க சிபி சிஐடி சரி வருமா?அவர்களும் தமிழ் நாடு காவல்துறையை சேர்ந்தவர்கள்தானே?அவர்கள் விசாரணை எப்படியிருக்கும்.அதில் இந்த அதிகாரிகள் அரசியல்வாதிகள் தலையீடே இராது என்று நம்ப முடியுமா?முத்துக்குமாரசாமி  வழக்கில் எப்படியெல்லாம் குழப்பப் பார்த்தது சிபிசிஐடி.
மொத்தத்தில் ஜெயலலிதா சிறைக்குப் போனால் கறுப்புக் கொடி குத்தும்,வெளியெ வந்தால் மொட்டையடிக்கும் பணியை செய்யும் தமிழகக் காவல்துறை ,அரசியல் கட்சிகளின் கூட்டணியை உடைக்கும் திருப்பணியை செய்து கொண்டிருக்கும் காவல்துறை விசாரணையின் முடிவை சாதாரண பாமரன் கூட தெரிந்து வைத்துள்ளான்.
அதைப்போல் சிபிசிஐடி விசாரணையும் தற்போது விஷ்ணு பிரியா மரணமர்மத்தை கண்டு பிடிக்க கோகுல்நாத் ரெயில் அடிபட்ட இடத்தை போய் ஆய்வு செய்துள்ளதாம்.இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடினால் மர்மம் விலகுமா?அல்லது குழப்பும் முயற்சியா?
சிபிஐ விசாரணையே கொஞ்சம் நமபகத்தன்மை இருக்கும்.


தொழிற்துறையில் தமிழ் நாடு 13 வது இடம் போனாலும் இதில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது சாதனைதானே?
===============================================================================================
இன்று,
செப்டம்பர்-22.
  • ஆட்டோமொபைல் இல்லா தினம்
  • மாலி விடுதலை தினம்(1960)
  • இந்திய-பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது(1965)
  • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆட்டோமொபைல் முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது(1893)
1791 - செப்டம்பர் 22
வேளாண்மை, தொழில், மின்னியல், மின்னணுவியல், அணுயுகம் என்று, அறிவியல் அடிப்படையில், உலகின் காலகட்டத்தை பிரிப்பது நம் வழக்கம். இதில், மின்சாரம் கண்ட, மின்னியல் துறையின் துவக்கம் தான், உலகின் இருள் கிழித்தது!லண்டனில், கொல்லரான ஜேம்ஸ் பாரடேக்கு மகனாக பிறந்தவர், மைக்கேல் பாரடே; 14 வயதிற்கு மேல் படிப்பதற்கு, வறுமை வழி கொடுக்கவில்லை. புத்தக வியாபாரியிடம் வேலைக்கு சேர்ந்தார்; அங்கு வரும் புத்தகங்களை படித்தார்; அவை அவருக்கு, மின்சாரம் மீது ஆர்வத்தை திணித்தது.விஞ்ஞானி ஹம்பிரி டேவியின் ஆய்வுக் கூடத்தில், 'எடுபிடி' வேலை செய்தார்.அதன்பின், 'காந்தத்தின் மூலமாகவும், மின்சாரத்தை இயக்க முடியும்' என்ற, காந்தத் துாண்டல் என்ற இயற்பியல் உண்மையை கண்டறிந்தார். பாரடே விதிகள் தோன்றின! மின்சாரம் உற்பத்தி செய்யும், டைனமோவையும், மின்சாரத்தை சேமித்து, தேவைக்கு பயன்படுத்தும் டிரான்ஸ்பார்மரையும் கண்டுபிடித்தார்.மின்சாரம் இன்றி இவ்வுலகு இல்லை என்றால், அதற்கான விதையை பாதுகாத்தவர் பாரடே.எலக்ட்ரோ மேக்னட் துறையின் தந்தை மைக்கேல் பாரடே, பிறந்த நாள் இன்று!

முகனூல்..................,

ரோம் தீப்பிடித்து எரிந்த போது நீரோ வயலின் வாசித்ததாக சொல்வார்கள்.இதோ சிரியா கலவரத்தில் பியானோ வாசிக்கும் தனி ஒருவன்.====================================================================
                               மதுரையில் ஸ்டாலின் நுழைய தடை : கவுன்சிலர்கள் தீர்மானம்.
                                                ராஜராஜன் கரூர்
===============================================================================================
"மாட்டுச் சாணி"யும்      " டெட்டாலு'ம் !
மத்தியிலும், சில மாநிலங்களிலும் பிஜேபி ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் போதும் மக்கள் அனுபவிக்கு துயரங்களும் போதும் - போதும் என்கிற நிலைக்குக் கீழிறக்கத்திற்கு வேக வேகமாகச் சென்று கொண்டு இருக்கிறது.
மாட்டுக்கறியைச் சாப்பிடக் கூடாது என்றார்கள் - அதனைத் தொடர்ந்து இப்பொழுது அரசு மருத்துவ மனைகளில் கிருமிகளைக் கொல்லுவதற்கு (Disinfectant)
கிருமி நாசினியாக இதுவரை விஞ்ஞான ரீதியாகப் பயன்படுத்தி வந்த பினைல் டெட்டால் போன்ற மருந்து களுக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தை (அதில்கூட பசு மூத்திரத்தை) பயன்படுத்த வேண்டும் என்று ராஜஸ் தானில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பிஜேபி அரசு சுற்றறிக்கை விட்டுள்ளது என்பது மிகப் பெரிய அதிர்ச் சியான செய்தியாகும். 
முதற்கட்டமாக ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப் படுமாம்.
எதில் பரிசோதனை? 
நோய் வாய்ப்பட்ட மக்களின் உயிரோடு விளையாடிப் பார்க்க விரும்புகிறார்களா? இது ஒரு வகையான விஷப் பரிட்சை Acid Test)
அல்லவா!
இந்த மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்திய காரணத் தால் நோயாளிகள் தொற்றுநோய்க்கு ஆளாகி மரணிக்க நேர்ந்தால் அதற்கான பொறுப்பினை ராஜஸ்தான் அரசு ஏற்றுக் கொள்ளுமா? அப்படியே ஏற்றுக் கொண்டாலும் போன உயிரைத் திருப்பிக் கொடுப்பார்களா?
அரசாங்கங்கள் ஒன்றைத் தயாராக வைத்துக் கொண்டிருக்கின்றன. எதற்கெடுத்தாலும் இழப்பீடு என்பதுதான் அந்தக் கை வந்தகலை!
எதையும் விலை பேசி விடலாம் என்பது எவ் வளவுக் கேவலமானது மனித உயிரைத் துச்சமாகக் கருதக் கூடியது.
1870ஆம் ஆண்டிலே என்ன நடந்தது? 
இந்தியக் கிராமங்களில் குழந்தைகளுக்குத் தொடர்ந்து சுவாசம் தொடர்பான கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுவதற்குக் காரணமே வீடுகளில் தெளிக்கப்படும் சாணமும், மாட்டு மூத்திரமும்தான் என்று அறிவியல் ரீதியாகக் கண்டறியப்பட்டு, மாட்டுச் சாணத்தையும், மாட்டு மூத்திரத்தையும் தவிர்க்குமாறு ஆங்கில அரசு விளம்பரங்கள் மூலமாகவே நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
பிஜேபி ஆளும் ராஜஸ்தான் அரசு மேற்கொள்ள விருக்கும் இந்த அஞ்ஞான நடவடிக்கையில் மருத் துவத் துறை உடனடியாக தலையிட்டாக வேண்டும்; ஏனெனில் இது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை உயிர்ப் பிரச்சினை.
இவர்கள் மேற்கொள்ளும் இந்த முறையை விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அது வரை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு அறுவைச் சிகிச்சைப் பிரிவுகளில் மாட்டு மூத்திரத்தைத் தெளிப்பதைத் தடை செய்ய வேண்டும்.
பிஜேபியின் அபிமான சாமியாரான ராம்தேவ் என்பவர் ஒரு மருந்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வந்தார். அவர் உற்பத்தி செய்யும் அந்த மருந்தை வாங்கிச் சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இது விஞ்ஞானப் பூர்வமான வகையில் ஏற்றுக் கொள்ளப் படக் கூடிய ஒன்றா?
செவ்வாய்க் கோளில் தண்ணீர் இருக்கிறது. 
பனி உறைந்த நிலை காணப்படுகிறது - எனவே மனிதர்கள் வசிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது - 
நிலா உலகில் வாழலாம் என்கிற அளவுக்கு அறிவியல் உச்ச நிலை யில் உலா வரும் கால கட்டத்தில் இப்பொழுது போய், மாட்டுச் சாணி, மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்துங்கள் என்று சொல்லுவது - மனிதன் இன்னும் காட்டு விலங் காண்டிக் காலத்தில் சஞ்சரிக்க ஆசைப்படுவதாகத்தான் பொருள்படும்.
பக்ரா நங்கல் அணை கட்டப்பட்டு, அதற்கான திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் - இவைதாம் நமது உண்மையான கோவில்கள் மற்றவையல்ல  - நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று கூறியதோடு அவர் நிற்கவில்லை We are not living in the Cow Dung Age
(நாம் சாணியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்க வில்லை என்று) - நம்மிடையே நிலவும் மூடநம்பிக்கைப் புத்தியையும் ஒரு தட்டுத் தட்டி விட்டார்.
நேரு போன்ற பிரதமர் இருந்த இடத்தில் தான் மாட்டு மூத்திரப் புத்தியோடு ஆட்சிக் கட்டிலில் அமர்பவர்களும் இருக்கிறார்களே, என்ன சொல்ல!
இவ்வளவுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) ) பிரிவு மக்களிடையே விஞ்ஞான மனப் பான்மையை வளர்ப்பது- ஒவ்வொரு குடி மகனின் கடமை என்று வலியுறுத்துகிறது. ஆனால் பிஜேபி ஆட் சியாளரோ மாட்டு மூத்திரத்திலும் மாட்டுச் சாணியிலும் விஞ்ஞானத்தைத் தேடிக் கொண்டு திரிகிறார்கள்.
பொதுவாக இந்துத்துவாவாதிகள் என்பவர்கள் பழைமை விரும்பிகள்தான் முற்போக்கான பாதையில் அவர்களின் சிந்தனைகள் பயணிக்காது.
மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் என்று மாட்டிலிருந்து கிடைக்கும் அய்ந்து பொருள் களையும் ஒரு கலக்குக் கலக்கி அதற்குப் பஞ்சகவ்யம் என்ற நாமகரணமும் சூட்டி, பக்தி நோயால் பாதிக்கப் பட்ட மக்களை பார்ப்பனப் புரோகிதர்கள் குடிக்கச் செய் வதில்லையா! அப்படிக் குடிப்பவர்களிடம் தட்சிணை யையும் கணிசமான அளவுக்குக் கறந்து கொள்வ தில்லையா!
விவேகானந்தர் ஒரு முறை இந்துத்துவாவாதி களைப் பார்த்துக் கூறியதுபோல பசுவைத் தாயாகக் கொண்டவர்களுக்கு அந்த மாட்டுப் புத்தி தானே இருக்கும்?
மக்களிடம் பகுத்தறிவுச் சிந்தனை இல்லை என்றால் மிகப் பெரிய ஆபத்துதான் - வீண் சங்கடங்கள் தான்!
================================================================================================
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு