ஆண்ட்ராய்ட் வசதிகளை
முழுமையாகப் பயன்படுத்துகிறீர்களா?
அலைபேசி கையில் இல்லாதவர்கள் இல்லை என்ற நிலை போய் ஆண்ட்ராய்ட் போன் இல்லாதவர்கள் இல்லை என்ற நிலை வந்துள்ளது.
நம்மில் பலரும் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம்.
இதில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. ஏனென்றால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் நமக்குப் பல வசதிகளைத் தருகிறது.
ஆனால் நாம் இந்த ஆண்ட்ராய்ட் வசதிகளை முழுமையாகப் பயன் படுத்துகிறோமா?
90% இல்லைதான்.
நம்முடைய இதயத் துடிப்பினை ஓர் ஆண்ட்ராய்ட் போன் மூலம் அளக்கலாம். நம் படுக்கை அறையில் உள்ள விளக்கினை, மெத்தையில் படுத்த பின்னர், போனை ரிமோட் கண்ட்ரோலர் போலப் பயன்படுத்தி விளக்கை அணைக்கலாம்.
கேமரா ஒன்றை போகஸ் செய்து வைத்துவிட்டு, நீங்களும் அதன் முன் நின்று, கேமராவினை போன் வழியாக ஷூட் செய்திடலாம். ஏன், கேமராவில் எடுத்த படங்களை, உங்கள் போனின் வழியாகக் காணலாம்.
இதெல்லாம் சற்று உயர்நிலை வசதிகள்.
சற்று தொழில் நுட்பத் திறன் தேவைப்படுபவை.
ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில எளிய செயலிகளிலும் பல வசதிகளைத் தருகிறது. இங்கு எளிய வசதிகள் என்று குறிப்பிடப்படுவது அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான பயனைத் தரும் வசதிகளாகும். அவற்றை இங்கு காணலாம்.
வர்த்தகம் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு, மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை. அவை: போகிற போக்கில் நமக்கு வந்திருக்கும் மின் அஞ்சல் கடிதங்களைப் பார்த்து, அஞ்சல் அனுப்பியவர்களுக்குப் பதில் அளிப்பது.
ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில எளிய செயலிகளிலும் பல வசதிகளைத் தருகிறது. இங்கு எளிய வசதிகள் என்று குறிப்பிடப்படுவது அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான பயனைத் தரும் வசதிகளாகும். அவற்றை இங்கு காணலாம்.
வர்த்தகம் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு, மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை. அவை: போகிற போக்கில் நமக்கு வந்திருக்கும் மின் அஞ்சல் கடிதங்களைப் பார்த்து, அஞ்சல் அனுப்பியவர்களுக்குப் பதில் அளிப்பது.
அடுத்ததாக, காலண்டர். இதனைப் பயன்படுத்தி, முக்கிய நிகழ்வுகளை நமக்கு போன் நினைவு படுத்தும் வகையில் அமைப்பது. இறுதியாக, நம் தொடர்புகள். நாம் தொடர்பு கொள்ள விரும்பும் நபர்களைத் தொடர்பு கொள்வது.
மற்ற வசதிகளை நாம் போனைப் பயன்படுத்திப் பெறுகிறோமோ இல்லையோ, மேலே சொல்லப்பட்ட மூன்று பிரிவுகளில் நாம் பெறும் வசதிகளே, அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளாய் உள்ளவை.
மற்ற வசதிகளை நாம் போனைப் பயன்படுத்திப் பெறுகிறோமோ இல்லையோ, மேலே சொல்லப்பட்ட மூன்று பிரிவுகளில் நாம் பெறும் வசதிகளே, அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளாய் உள்ளவை.
எனவே, இந்த மூன்று பிரிவுகளில் நாம் எப்படி செயல்பட்டு அவற்றைச் சிறப்பானதாக, முழுமையாகப் பெறலாம் என்பதனை இங்கு காணலாம்.
குறிப்பு 1: மின் அஞ்சல்: ஆண்ட்ராய்ட் தரும் ஜிமெயில் அப்ளிகேஷன் (https://play.google.com/store/apps/details?id=com.google.android.gm) இப்போது POP மற்றும் IMAP அக்கவுண்ட்களை சப்போர்ட் செய்கிறது. வழக்கமான ஜிமெயில் அக்கவுண்ட் இயக்கத்தினை நாம் தொடக்கம் தொட்டு ஏற்கனவே பெற்று வருகிறோம். இந்த அப்ளிகேஷனில், கூடுதலாக ஒரு அக்கவுண்ட்டினை இணைக்க, திரையின் இடது மேலாக உள்ள ஐகானைத் தொடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Settings சென்று அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Add Account என்பதனை அடுத்து தேர்ந்தெடுக்கவும். அடுத்து, உங்களிடம் பல தகவல்கள் கேட்கப்படும். இங்கு நீங்கள் உங்களுடைய கூடுதல் POP அல்லது IMAP அக்கவுண்ட் குறித்த தகவல்களைத் தரவும்.
குறிப்பு 2: ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்டினை உங்களுடைய ஜிமெயில் அப்ளிகேஷனில் இணைத்தவுடன், அவை அவை அனைத்தையும் முதல் பக்கத்தில் காணலாம். அதே மெனு ஐகானில் தட்டி, உங்கள் அக்கவுண்ட்டுகளுக்கு இடையே நீங்கள் செல்லலாம். உங்கள் அனைத்து மின் அஞ்சல் அக்கவுண்ட்களிலிருந்து அனைத்து அஞ்சல்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், ஒரே இன்பாக்ஸில் பார்த்துத் தேர்ந்தெடுத்து படிக்க விரும்பினால், All Inboxes என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
குறிப்பு 3: அவுட்லுக் போலச் செயல்படும் மொபைல் இண்டர்பேஸ் ஒன்று இருந்தால் நல்லது என்று நினைக்கிறீர்களா! மைக்ரோசாப்ட் அண்மையில்https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.outlook என்ற முகவரி உள்ள தளத்தில், ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயக்குவதற்கென ஒரு சோதனைச் செயலியைத் தருகிறது. இது முழுக்க முழுக்க பல்வேறு செயலிகளின் செயல்பாட்டினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில் எக்சேஞ்ச் சப்போர்ட் (Exchange support) மற்றும் அவுட்லுக் காலண்டர் (Outlook Calendar) ஆகியவற்றை இயக்கலாம்.
குறிப்பு 4: ஜிமெயிலில் "conversation view" என்ற ஒரு வியூவினைக் காணலாம். ஓர் அஞ்சல் குறித்து அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட அனைத்தும், ஓர் உரையாடலைப் போல வழங்கப்படும். இதே வசதி, ஜிமெயிலில், வேறு அக்கவுண்ட்களுக்கும் தரப்படுகிறது. இதனைச் செயல்படுத்த, அப்ளிகேஷன் செட்டிங்ஸ் செல்ல வேண்டும். இதற்கு General Settings தேர்ந்தெடுக்கவும். அடுத்து Conversation View என்ற பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.
குறிப்பு 5: மெசேஜ் ஒன்றை முடித்துவிட்டீர்களா? இதனை உங்கள் இன்பாக்ஸிலிருந்து ஸ்வைப் செய்து எடுத்து, ஆர்க்கிவ் பிரிவில் சேர்த்துவிடலாம். இதனால், குறிப்பிட்ட முடிக்கப்பட்ட மெசேஜ் மற்றும் தொடர் அஞ்சல்கள், தேவையில்லாமல் இன்பாக்ஸ் பெட்டியில் இருக்க வேண்டாமே.
ஒன்றுக்கு மேற்பட்ட மெசேஜ்களைக் கையாள நினைத்தால், தேர்ந்தெடுக்க நினைக்கும் ஒவ்வொரு மெசேஜ் மூலையில் கிடைக்கும் சிறிய வட்டத்தில் தட்டவும். அதன் பின்னர் நீங்கள் என்ன செய்திட விரும்புகிறீர்களோ, அதற்கான ஆக்ஷன் பட்டனைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.
குறிப்பு 6: ஆர்க்கிவ் பிரிவில் குறிப்பிட்ட ஒரு மெசேஜை பத்திரப்படுத்தாமல், அதனை மொத்தமாக அழிக்க எண்ணினால், ஜிமெயிலின் ஸ்வைப் பயன்படுத்தும் விதத்தினை அதற்கேற்ற வகையில் சற்று மாற்றி அமைத்திடலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, Gmail Default Action பீல்டை Archive என்பதிலிருந்து Delete என்பதற்கு மாற்றிவிட வேண்டியதுதான்.
குறிப்பு 7: உங்கள் மொபைல் சாதனத்திலிருந்து ஒன்றை நிரந்தரமாக அழிக்க விரும்புகிறீர்களா? ஜிமெயில் ஜெனரல் செட்டிங்ஸ் பிரிவில்,கீழாகப் பார்க்கவும். அதில், இமெயில் ஒன்றை அனுப்பும் முன், அதனை உறுதி செய்திட ஆப்ஷன் ஒன்று தரப்பட்டிருக்கும். இதனை இயக்கி வைக்கவும். இமெயிலுக்கு மட்டுமின்றி, இந்த ஆப்ஷனை மெசேஜை ஆர்க்கிவ் பிரிவுக்கு அனுப்புகையிலும், அழிக்கும் போதும் கேட்கும் வகையில் செட் செய்திடலாம்.
குறிப்பு 8: ஆண்ட்ராய்ட் ஜிமெயில் அப்ளிகேஷன், உங்கள் மெசேஜ்களுடன் உங்களுடைய வடிவமைக்கப்பட்ட கையெழுத்தினை இணைக்க வழி இல்லை. இது உங்களுக்கு ஏமாற்றத்தைத் தரலாம். இதற்குப் பதிலாக, டெக்ஸ்ட் பக்கத்தினை செட் அப் செய்து, ஓர் அப்ளிகேஷனுக்கானது என தனித்தனியே கையெழுத்தினை உருவாக்கலாம்.
குறிப்பு9: இணைய தளப் பயன்பாட்டில் இருந்து, மொபைல் அப்ளிகேஷன் வழியாக, அதன் ஜிமெயில் அப்ளிகேஷனுக்கு வந்துள்ள ஒரு வசதி, ஜிமெயிலுக்கான தானாக இயங்கும் விடுமுறை செய்தி அனுப்பும் வசதி ஆகும். இதனை இயக்கி வைக்க, எந்த ஒரு அக்கவுண்ட் பெயரிலும் டேப் செய்திடவும். அதன் பின்னர், Vacation Responder என்பதனை இயக்க, அல்லது இயக்கத்தை நிறுத்த அல்லது உங்கள் விருப்பங்களை எடிட் செய்திட ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். தேவையானதைத் தேர்ந்தெடுத்து செட்டிங்ஸ் அமைக்கவும்.
குறிப்பு 10: ஜிமெயில் ஆண்ட்ராய்ட் செயலியில், அதிகம் பயன்படுத்தப்படாத ஒரு வசதி லேபிள்களுக்கான வழக்கமான நோட்டிபிகேஷன்களைச் சோதனை செய்திடும் அதன் திறன் தான். முக்கியமான மின் அஞ்சல் ஒன்று உங்கள் மெயில் பெட்டியை அடையும்போது, உங்கள் போன், உங்களை உஷார் படுத்த வேண்டும் என எப்போதாவது எண்ணியதுண்டா? அதுவும், வெவ்வேறு தன்மை கொண்ட அஞ்சல் செய்திகளுக்கு, வெவ்வேறு ஒலிகளில். லேபிள்களுக்கான நோட்டிபிகேஷன்ஸ்களில் தான் இந்த அருமையான வசதியை செட் செய்து பயன்படுத்தலாம்.
இந்த அருமையான வசதியைப் பயன்படுத்த, முதலில் லேபிள்கள் மற்றும் பில்டர்களை உருவாக்கும் செயல்பாடு குறித்து நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது, அதற்குப் பதிலாக, ஜிமெயில் தரும் Priority Inbox அல்லது categorized inbox பயன்படுத்தினால், மாறா நிலையில் உள்ள லேபிள் மற்றும் பிற செட்டிங்ஸ் கொண்டு இதனை அமைக்கலாம்.
இதனைப் பின்பற்றி, லேபிள் மற்றும் பில்டர்களை அமைத்த பின்னர், ஜிமெயில் ஆண்ட்ராய் செயலியின் செட்டிங்ஸ் பிரிவிற்குச் செல்லவும்.
தொடர்ந்து உங்கள் அக்கவுண்ட் பெயரில் டேப் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Manage Labels என்ற பிரிவினைக் காணவும். இதில், எந்த லேபிள் பிரிவினை உங்கள் வசதிப்படி அமைக்க விரும்புகிறீர்களோ, அதைக் கண்டறிந்து அதில் டேப் செய்திடவும். குறைந்தது 30 நாட்களுக்காவது அது, வருகின்ற மெசேஜ்களை ஒருங்கிணைக்க செட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தொடர்ந்து உங்கள் அக்கவுண்ட் பெயரில் டேப் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Manage Labels என்ற பிரிவினைக் காணவும். இதில், எந்த லேபிள் பிரிவினை உங்கள் வசதிப்படி அமைக்க விரும்புகிறீர்களோ, அதைக் கண்டறிந்து அதில் டேப் செய்திடவும். குறைந்தது 30 நாட்களுக்காவது அது, வருகின்ற மெசேஜ்களை ஒருங்கிணைக்க செட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தொடர்ந்து Label Notifications பாக்ஸ் செக் செய்திடவும். இங்கு எந்த மாதிரி ஒலி மற்றும் வைப்ரேஷன் அதிர்வு உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதனை செட் செய்திடவும். அவ்வளவுதான். உங்கள் ஆண்ட்ராய்ட் போன் இனி உங்களுடைய பெர்சனல் அசிஸ்டண்ட் போல செயல்படும். குப்பையாய் வரும் அஞ்சல்களைப் பிரித்துப் பார்த்து (நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் அமைப்புகளுக்கேற்ப) குறிப்பிட்ட வகை அஞ்சல் வரும்போது, நீங்கள் அமைத்த ஒலியை அல்லது அதிர்வைக் கொடுக்கும்.
குறிப்பு 11: உங்களிடம் உள்ள ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் பி.சி., அதனைத் தயாரித்தவரால், அதன் சாப்ட்வேர் சற்று மாற்றப்பட்டிருந்தால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய கூகுள் காலண்டர் செயலியை இன்ஸ்டால் செய்து பார்க்கவும். இது https://play.google.com/store/apps/details?id=com.google.android.calendar என்ற தளத்தில் கிடைக்கிறது. இந்த காலண்டர் செயல்பாடு மற்றவற்றைக் காட்டிலும், சிறப்பான தோற்றங்களைக் கொண்டதாகவும், பயன்படுத்துபவருக்கு மகிழ்ச்சியான அனுபவத்தினைத் தருவதாகவும் அமைந்துள்ளது.
நாம் குறிப்பிட்ட நிகழ்வினை, காலண்டரில் குறித்து வைத்தால், அதற்கேற்ற சிறிய படங்களை அத்துடன் தானாக இந்த செயலி இணைத்துக் கொள்கிறது. நிகழ்வுகளுக்கான இடங்களைச் சுட்டிக் காட்டும் வரைபடங்களைத் தருகிறது. நாம் ஏதேனும் நிகழ்வுகளை உறுதி செய்தால், நிகழ்வுகளை நினைவு படுத்தும் வகையில் அமைக்கிறது.
பயணம் என்றால், அதற்கான கால அட்டவணையைத் தொகுத்துத் தருகிறது.
குறிப்பு 12: காலண்டரில் அமைக்கும் நிகழ்வுகளுக்கேற்ப, நம்மை எச்சரிக்கும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இணைந்து தரப்படும் “கூகுள் நவ்” செயலி, நேரத்திற்கேற்றபடியும், நீங்கள் வசிக்கும் இடத்திற்கேற்ற வகையிலும், உங்களுக்கு நிகழ்வுகளை நினைவூட்டும்.
இதற்கு, ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஒலிவாங்கியை (microphone) செயல்படுத்தி, எப்போது உங்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்பதனை அறிவிக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, "Remind me to take out the trash when I get home" அல்லது "Remind me to call the doctor's office tomorrow morning எனக் கூறலம். இதே கட்டளையில், எங்கேனும் சரியான இடத்தில் “every” என்ற சொல்லைச் சேர்த்தால், குறிப்பிட்ட நினைவூட்டல், தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
எடுத்துக் காட்டாக, “Remind me to take my umbrella every Friday at noon” எனக் கட்டளை கொடுக்கலாம்.
குறிப்பு 13: கூகுள் நவ் நினைவூட்டல்களைச் செயல்படுத்த, Google Now செயலி தேர்ந்தெடுத்து, அதில், திரையின் மேலாக இடது பக்கம் உள்ள மெனு ஐகானைத் தட்டவும். பின்னர் Reminders என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
உடனே, உங்களுடைய இன்றைய, முந்தைய நினைவூட்டல்கள் அங்கு காட்டப்படும். அதிலேயே, நீங்களாகவே, ஒரு புதிய நினைவூட்டலையும் அமைக்கலாம்.
குறிப்பு 14: நீங்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்களை, எளிதில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்க வேண்டும்மா? இலவசமாகக் கிடைக்கும் 'கூகுள் கீப் ஆப்' (Google Keep app) என்ற செயலியைப் பெற்று இன்ஸ்டால் செய்திடவும். இதில் நீங்கள் செய்திட வேண்டிய செயல்களை, நீளமான வரிகளில், தெளிவாக அமைத்திடலாம்.
அவற்றிற்கான குறிப்புகளையும் இணைக்கலாம். இந்த அப்ளிகேஷன் கூகுள் நவ் சிஸ்டத்துடன் இணைந்து செயல்படும். எனவே, இந்த பட்டியலில் உள்ள செயல்பாடுகளுக்கும், நீங்கள் நினைவூட்டல்களை செட் செய்திடலாம்.
குறிப்பு 15: எந்த ஓர் ஆண்ட்ராய்ட் சாதனத்திலும் நீங்கள் அமைத்திடும் அழைப்பிற்கான தொடர்புகள், தானாகவே, கூகுளின் யுனிவர்சல் காண்டாக்ட் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.
இதன் மூலம், அண்மையில் திருத்தி வடிவமைக்கப்பட்ட Google Contacts Web app மூலம் அழைப்பு தொடர்புகளைப் பார்க்கலாம் மற்றும் திருத்தி அமைக்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் திருத்தங்களும், உங்களுடைய அனைத்து ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் மேம்படுத்தப்பட்டு கிடைக்கும்.
குறிப்பு 16: நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் ஒரு தொடர்பினை மிக எளிதாகக் கண்டறிய, அந்த தொடர்புக்குரிய நபரின் பெயர் அருகே உள்ள ஸ்டார் ஐகானை தட்டவும். உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனத்தின் காண்டாக்ட் பிரிவில் இதனை மேற்கொள்ளலாம்.
அல்லது Google Contacts Web அப்ளிகேஷனிலும் மேற்கொள்ளலாம். இதன் மூலம், அந்த குறிப்பிட்ட நபரின் பெயர் மற்றும் சார்ந்த தகவல்கள், பட்டியலின் மேலாகப் பார்க்கக் கிடைக்கும்.
குறிப்பு 17: எப்போதாவது, ஒரே நபரின் அதே தகவல்கள், ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளாக காண்டாக்ட் பட்டியலில் இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?
அவரின் பணி குறித்த மின் அஞ்சலுக்காக ஒன்றும், தனி நபருக்கான மின் அஞ்சலுக்கான ஒன்றுமாக, அவை இடம் பெற்றிருக்கலாம். இதனைச் சரி செய்வதற்கு கூகுள் எளிமையான வழியைத் தருகிறது. Contacts Web அப்ளிகேஷனில், திரையின் இடது புறத்தில் Find Duplicates என்று ஒரு பிரிவு கிடைக்கும்.
இதனைத் தட்டினால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளைக் கொண்டவற்றை, இனம் கண்டறிந்து காட்டும். இவற்றில் ஒரு முறை கிளிக் செய்து, அனைத்தையும் இணைத்து வைத்துக் கொள்ளலாம்.
இது போல, இன்னும் பல மேம்படுத்தல்களை மேற்கொள்ளலாம்.
இது போல, இன்னும் பல மேம்படுத்தல்களை மேற்கொள்ளலாம்.
செயல்பாட்டில் இருக்கும் செயலிகளை, கூடுதல் வசதிகள் கிடைக்கும் வகையில் பயன்படுத்தலாம்.
நன்றி:தினமலர்.
=============================================================================
இன்று,செப்டம்பர்-21.
- உலக அமைதி தினம்
- ஆர்மேனியா விடுதலை தினம்(1991)
- மோல்ட்டார் விடுதலை தினம்(1964)
- பிரான்சில் குடியரசு நிறுவப்பட்டது(1792)
- பக்ரைன்,பூட்டான், கத்தார் ஆகின ஐ.நா.,வில் இணைந்தன(1971)
திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மனசாட்சி வேலை செய்கிற அதிகாரிகள் நிம்மதியாக வேலை செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள் ளது.அதிமுக தலைமைக்கு ஜெயலலிதாவுக்கு ஜால்ரா தட்டுபவர்கள்,ஜெயலலிதாவை புகழ்ந்து கொண்டேயிருப்பவர்கள் தவிர மற்றவர்கள் ஒன்று வேலையை விட்டோ அல்லது உலகத்தை விட்டோ போகவேண்டிய நிலை உண்டாகியுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த வேளாண்மைத் துறை அதிகாரி முத்துக்குமாரசாமி, அமைச்சராக இருந்தஅக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். நியாய விலைக்கடை ஊழியர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டதும் நிகழ்ந்தது.இப்போது காவல்துறை அலுவலர் விஷ்ணுபிரியா.
தமிழகத்தில் பணியாற்றும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான உ.சகாயம் மதுரை மேலூர் கிரானைட் குவாரி முறைகேட்டை வெளியே கொண்டுவந்ததால் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அடுத்து கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில்அவர் பணியாற்றிய போதும் அமைச்சர் ஒருவரின் குறுக்கீட்டின் பேரில்முக்கியத்துவமற்ற பதவி ஒன்றில் நியமிக்கப் பட்டார்.
சென்னை உயர்நீதிமன்றம் அவரை கிரானைட் குவாரி முறைகேடு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு பணித்தது. இந்தப் பணியில் அரசு அதிகாரிகள் அவருக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
கிரானைட் குவாரியில் நரபலி கொடுக்கப் பட்டதாக எழுந்துள்ள புகாரை விசாரிக்கச் செய்யவும் சுடுகாட்டில் படுத்திருந்து பெரும் போராட்டத்தை அவர் நடத்த வேண்டியிருந்தது.
இந்தப் பின்னணியில்தான் திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.
இறப்பதற்கு முன்பு அவர் எழுதியதாக காவல் துறையினர் வெளியிட்டுள்ள கடிதம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்புவதாக உள்ளது. கோகுல்ராஜ் என்ற இளை ஞர் சாதி ஆதிக்க வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார் . இந்தக் கொலையில் பிரதான குற்றவாளி யாக கருதப்படுகிற யுவராஜ் என்பவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. வாட்ஸ்அப்பில் பகிரங்க மாக மிரட்டல் விடுத்துக்கொண்டு திரிகிறார்.
இந்த நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த விஷ்ணுபிரியாவுக்கு பல்வேறு நெருக்கடிகள் இருந்து வந்தது வெளிப்படையாகத் தெரிகிறது. விஷ்ணுபிரியாவின் தோழியும் டிஎஸ்பியு மான மகேஸ்வரி இதை உறுதி செய்துள் ளார்.
ஆனால்விஷ்ணுபிரியா தனது கடிதத்தில் கோகுல்ராஜ் கொலை வழக்குக்கும் தன்னுடைய தற்கொலைக்கும் தொடர்பு இல்லை என்று கடிதத்தில் கூறியுள்ளதாக ஒரு கடிதத்தை போலீசார் வெளி யிட்டுள்ளது பலத்தசந்தேகத்தை எழுப்புகிறது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக விஷ்ணுபிரியாவுக்கு உயரதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து நெருக்கடி தரப்பட்டதும். அதனால் அவர் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததும் தெளிவாகத் தெரிகிறது.
இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரிப்பதால் உண்மையை கண்டறிய முடியாது. மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணை அவசியமாகிறது.இந்தக் கோரிக்கையை அவருடைய பெற்றோர் களும் முன்வைத்துள்ளனர்.
உயர் அதிகாரிகள் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தமிழக காவல்துறையின் ஒரு பகுதி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை விசாரிப்பது எந்த வகையிலும் பொருத்தமாக இருக்காது.
காவல்துறை அலுவலர் விஷ்ணுபிரியாவின் மரணம் காவல்துறை உட்பட பல்வேறு துறைகளில் கெட்டிப்பட்டுப் போயுள்ள கேடுகெட்ட சாதிய சிந்த னையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள் ளது. இது நாகரிகமான சமுதாயத்துக்கு நல்லது அல்ல.
தமிழ்ச் சமூகம் தம்மை முழுமையான சுயபரிசோத னைக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டிய நேரம் இது.
=====================================================================================================