பங்கு நெருக்கடி

தென்னை மரத்தில் தேள் கொட்டி னால் பனை மரத்திற்கு நெறிகட்டுமா என்று கேட்பது போல் சீன பங்குச் சந்தை யில் உருவாகும் நெருக்கடி, இந்திய நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்குமா என்றுவிவரம் அறிந்தோர் கேட்கமாட்டார்கள். 
ஏன் எனில் இன்றைய உலக நாடு களின் பங்குச் சந்தைகள் உலக பணஅமைப்பால் இணைக்கப்பட்டு இருக் கிறது.

இந்த பண அமைப்பு இரண்டாம் உலக யுத்தம் முடிந்தவுடன் வெற்றி பெற்ற மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் தங்களது ஆதிக்கம் நீடிக்க உருவாக்கிய உலகம் தழுவிய அமைப்புக்களில் ஒன்று. 
அன்று நாடுகளிடையே நிலவும் உறவில் பகைமையை நீக்கி வர்த்தக உறவால் நேசமயமாக்க உலக பண அமைப்பு அவசியம், அந்த அமைப்பு நாடுகளிடையே பாகுபாடு இல்லாமல் சம உரிமைகொண்டதாக இருக்க வேண்டும் என்று சோவியத் யூனியன் வலியுறுத்தியது.
ஆனால் ஒரு நாட்டின் மொத்த வருவாய் அடிப்படையில் வாக்குகளை கொண்ட அமைப்பாக ஆக்கி அமெரிக்க டாலரை பொது நாணயமாக்கி சோவியத் யூனியனை ஒதுக்கி பண அமைப்பையும் உலக வங்கியையும் அன்றைய வெற்றிபெற்ற ஏகாதிபத்திய வாதிகள் அமைத்துக் கொண்டனர். 
வளர்ச்சியுறாத நாடுகளை வேட்டை யாடலாம், சோவியத்தை முடக்கலாம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் என்றும் மகிழ்ந்தனர்.
1971க்குப் பிறகு அந்த அமைப்பை அந்நிய செலாவணியை வாங்கி விற்கிற சந்தையாக மாற்றினர். அதோடு அந்நிய செலவாணி சந்தையும் உலக நாடுகளின் பங்கு சந்தைகளும் காந்தத்தின் இரு துருவம் போல் பிரிக்க முடியாதபடி இணைந்து விட்டது, 
இந்த அமைப்பு பின் நாளில் அவர்களுக்கே உலைவைக்கும் என்று ஏகாதிபத்திய வாதிகள் எதிர்பார்க்க வில்லை.

ஒரு கட்டத்தில் மேற்கத்திய முத லாளித்துவ நாடுகள் புகுத்திய தாராளமய அணுகு முறை பணக்கொழுப்பு உள்ள வர்களை பங்குகள், நிலம், தங்கம் சரக்கு வர்த்தக சீட்டு போன்ற சொத்துக்களின் விலைகளை செயற்கையாக ஏற்றி இறக்கி பணத்தை குவிக்க பங்குச் சந்தையிலும் அந்நிய செலாவணி சந்தையிலும் சூதாடும் சுதந்திரத்தை கொடுத்துவிட்டது, 
அமெரிக்கா விற்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த சூதாட்டம் வள்ளு வர் குறிப்பிட்ட தூ ண்டிற்பொன் மீன்விழுங்கிய கதையாகிவிட்டது. 
2008ல் முதலாளித்துவ உற்பத்தி முறை நீடிக்குமாஎன்ற கேள்வி எழுகிற அளவிற்கு இந்த சூதாட்டம் வெடித்து நெருக்கடியை அந்த நாடுகள் சந்தித்தன. 
அது தந்த அதிர்ச்சி யிலிருந்து உலகில் பல நாடுகள் இன்றும் மீளவில்லை. அன்று 45 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று இருந்தது ஒரு டாலருக்கு 60 ரூபாய் என்று ரூபாயின் மதிப்பை ரிசர்வ்வங்கியால் குறைக்க நேர்ந்தது. 
போர்ச்சுக் கல், ஸ்பெயின், கீரிஸ் போன்ற நாடுகள் கடன் சுமையை ஏற்க நிபந்தனைகளை விழுங்க நேர்ந்தது. அது இப்பொழுதும் தொடர்கதையாக இருப்பதை காண் கிறோம்.இந்த சூதாட்டம் நமக்கும் புதிதல்ல பல ஆண்டுகளுக்கு முன்னால் ஹர்சத் மேத்தா கேத்தன் பரேக் போன்ற பங்குச் சந்தை தரகர்களால் குறுக்கு வழியில் பணத்தை குவிக்க ஆசைப்பட்ட பலரைசூதாட வைத்து ஏமாற்றினர். 
கடன் கொடுத்த பொதுத் துறை வங்கிகளுக்கு பங்கு விலைகளின் தி டீர் சரிவால் நட்டம் ஏற்படுத்தியதை அறிவோம்.
2008 அதிர்ச்சிக்குப் பிறகே முதலாளித்துவ பொருளாதார தத்துவ முகாமிலேஜால்ரா சத்தம் குறைந்தது, முதலாளித் துவ முறையை கண்டித்த காரல் மார்க்சை விரோதியாக பார்க்காமல் அவரும் நம்மஆளுதான் என்று பார்க்கும் தாமஸ் பிக்கெட்டி போன்ற நிபுணர்கள் தோன்றிஉலக பண அமைப்பின் முதலாளித் துவ சுரண்டல் தன்மையை விமர்சிக்க தொடங்கினர்.
இன்று முதலாளித்துவ பொருளாதார தத்துவ முகாமிலே விரிசல் ஏற்பட்டு இன்றைய முதலாளித்துவ பண அமைப்பை பாதுகாக்கும் முகாமிற்கு எதிராக மாற்றங்கள் தேவை என்று சொல் லுகிற முகாம் மோதுவதை காணலாம், உலக வங்கி நிபுணர் நோபல் பரிசு பெற்ற ஜோசஃப் ஸ்டிக்கிளிட்ஸ் உலக வங்கியை கடுமையாக விமர்சிப்பதை அறிவோம்.அதோடு இன்னொன்றும் கண்ணில் படுகிறது.
 மார்க்சிய பொருளாதார நிபுணர்களும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் 2008க்கு பிறகு டாலர் ஆதிக்க உலக பண அமைப்பை மாற்றிட குரல் கொடுத்து வருகிறார்கள். 
அது மட்டுமல்ல எந்த நாட்டு நாணயமும் ஆதிக்கம் செலுத்தாத ஒரு அமைப்பை உருவாக்கிட குரல்கொடுக்கிறார்கள். பிரிக்ஸ் என்ற அமைப்பையும் துவங்கியுள்ளனர்.
இந்த பங்குச் சந்தைநெருக்கடியை பொருளாதார பலம் உள்ள நாடுகளில் சமாளிப்பது அவ்வளவு கடினமல்ல. சுய சார்பு இல்லாத அந்நிய மூலதனத்தை சார்ந்த தொழில் அமைப்பு உள்ள நாடுகள் கடன் வலையில் விழநேரிடுகிறது. இந்த பின்னணியோடு இப்பொழுது சீன வர்த்தக சூதாடிகளின் லீலைகளால் சீன பங்குச் சந்தை நெருக்கடியில் மாட்டிக்கொண்டதை பரிசீலிப்பது அவசியம். நெருக்கடியை சமாளிக்க சீனா தனது நாணயத்தின் மதிப்பை 2சதவீதம் குறைத்தது. உலக மயமும் கடன் சுமையும் இந்த குறைப்பு உலக பண அமைப்பு வழியாக இந்தியா உட்பட பல நாடுகளின் நாணயச் சந்தைகளில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 
நமது தொழில் உற்பத்தி நூறு சத அந்நிய மூலதனத்தையும் அந்நிய செலா வணியையும் அதிகம் சார்ந்து இருக்கிறது. நமது ஏற்றுமதி வருமானம் கடந்த 50 ஆண்டுகளாக இறக்குமதியை விட குறைவாக இருந்து வருகிறது. 2015 ஜூலை நிலவரப்படி நமது ஏற்றுமதி குறைந்து அந்நியச் செலாவணி பற்றாக்குறை 10.8 பில்லியன் டாலரிலிருந்து 12.8 பில்லி யனாக உயர்ந்துவிட்டது.
 நிலக்கரி முதல் பெட்ரோலிய பொருட் கள் மற்றும் இரும்பு வரை இறக்குமதிசெய்யாமல் நமது தொழில் சக்கரம் சுழலாது என்ற நிலை உள்ளது.
அரசு இந்நிலையில் மோடி அரசும் நமது பெருமுதலாளிகளும்,நெருக்கடியில் மாட்டி இருக்கும் சீனாவை தாக்குகின்றனர். 
சீனா நாணயத்தின் மதிப்பைகுறைத்து கரன்சி யுத்தத்தை துவக்கி வைப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். சீனா ஆதிக்க நோக்குடன் செயல்படுவதாக அமெரிக்க பத்திரிகைகளும் தாக்கு கின்றன. 
கடன் சுமை இல்லாமல் பிரிக்ஸ் அமைப்புமூலம் சமாளிக்க வாய்ப்பு இருந்தும் அதை நாடாமல், அதற்கு வேட்டு வைக்கிற வேலையில் இந்திய அரசு இறங்கியுள்ளது. 
மோடியின் சாணக் கியத்தால் ஒரு வேளை ஐ.எம்.எஃப் சிபாரிசில் இறக்குமதிக்கு தேவையான கடன் கிடைக்கலாம். 
சுயசார்பை பலப்படுத்தாமல் ஏற்படுகிற வளர்ச்சி மக்களுக்கு உதவாது அது தூண்டில்பொன் மீனை விழுங்கியதற்கு ஒப்பாகும்.
நன்றி:வே,மீனாட்சி சுந்தரம்.
============================================================================================================
இன்று,
செப்டம்பர்-07.
  • பிரேசில் விடுதலை தினம் (1822)
  • கூகுள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1998)
  • கிரான் கொலம்பியா குடியரசு உருவானது(1821)

============================================================================================================
தமிழ் நாடு மின்சார வாரியம்?
   o   திராட்சைக் கொடியில் தொங்கும் திராட்சைப் பழத்தைப் பார்த்தால், திராட்சைக் கொத்து நுரையீரல் போலவும், அதில் உள்ள ஒவ்வொரு திராட்சையும் ஆல்வியோலி எனப்படும் நுண்காற்று அறைகள் போலவும் தோன்றும். 
ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடைச் சுத்திகரித்து, சுவாசக் காற்றில் உள்ள ஆக்சிஜனைப் பிரித்து, ரத்த அணுக்களில் நிறைத்து அனுப்புகிறது நுரையீரல். 
இந்தச் செயல்பாட்டை மேம்படுத்தும் திறன், திராட்சைப் பழத்துக்கு உண்டு. நுரையீரலில் வரக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் திராட்சைக்கு உண்டு. கர்ப்பிணிகள் திராட்சையை 23-வது வாரத்தில் இருந்து சாப்பிட்டுவந்தால், குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். 
திராட்சையில் உள்ள ப்ரோஆந்தோசயனிடின் (Proanthocyanidin) ஆஸ்துமா பிரச்னையின் வீரியத்தைக் குறைக்கும்.
திராட்சையில் உள்ள பாலிபீனால் நுரையீரல், வாய், சுவாசப் பாதை, மூச்சுக்குழாய், கணையம் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்.                    
ஆப்பிள் மட்டுமல்ல, தக்காளியும் உடலுக்கு மிக நல்லது. 
தினமும் எந்த வகையிலாவது உணவில் தக்காளி சேர்த்து கொண்டால் போதும், வயதான தோற்றமே தெரியாமல் இளமை நீடிக்கும்.
முகத்தில் சுருக்கம் விழாது. சருமம் பளபளவென்று இருக்கும். தக்காளி சாப்பிட்டு வந்தால், உடலில் "கொல்லெஜன்' என்ற புரோட்டீன் உற்பத்தி அதிகரிக்கிறது. 

சருமம் சுருங்காமல், வழவழப்பு தன்மை தருவது இந்த புரோட்டீன் தான். நாம், சாப்பிடும் உணவுகளை ஜீரணம் செய்து அவற்றில் இருந்து சத்துக்களை பிரித்து பல உறுப்புகளுக்கும் அனுப்பும் வேலையை செய்து, "மிடோசோன்ட்ரியா' என்ற செல் பகுதிதான். 
வயதான தோற்றம் தெரியாமல் இருக்க இந்த செல் மிகவும் பயன்படுகிறது.
தக்காளி சாப்பிட்டால், இந்த செல் வளர்ச்சி அதிகமாக இருக்கும். நம் உடலுக்கு ஆரோக் கியத்தை தருவதில் முக்கிய பங்காற்றுகிறது. 
"இக்டோபென்' என்ற "ஆன்டி-ஆக்சிடென்ட்!' பல வகை புற்றுநோய்கள் வராமல் தடுப்பதில் இதன் பங்கு அதிகம். ஆண்களுக்கு இது முக்கிய உணவுப் பொருளாகும். தினமும் தக்காளி சாப்பிடு வதால் இந்த "ஆன்டி-ஆக்சிடென்ட்'டும் அதிகரிக்கிறது.
தக்காளியை பச்சையாக சாப்பிடுவதை விட, சமைத்து சாப்பிடுவதில் தான் அதிக சத்துக்கள் கிடைக்கும். 

மற்ற காய்கறிகள் போல சமைத்த பின் தக்காளியின் சத்துக்கள் குறைவதில்லை. 
அதனால் உடலுக்கு முழு சத்துக்கள் கிடைக்கின்றன.

               'முதல்வரை வரவேற்று அல்ல. முதலீட்டாளர் மாநாடு அரங்கிற்கு, வரவேற்பு பேனர்கள்'
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு