புதன், 9 செப்டம்பர், 2015

ஆர்.எஸ்.எஸ்,-பூர்வாசிரமம்.

அல்லது ஆபத்தின் அறிகுறி
சமீபத்தில் தில்லியில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பிரதமரும் அவரதுஅமைச்சரவை சகாக்களும் கலந்து கொண்டதும், அவர்களின் பணிகள் குறித்து ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆய்வு செய்ததும், பாஜக-வானது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அரசியல் அங்கம்தானே தவிர, வேறெதுவும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக்குடியரசை தங்களுடைய குறிக்கோளான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’ ஆக மாற்ற வேண் டும் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்கு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளஅமைச்சர்கள் எப்படி முன்வந்தார்கள்என்றுநியாயமாகவே கேள்விகள் எழுந்துள்ளன. 
ஆர்எஸ்எஸ் மாநாடு நடைபெற்றஅதே சமயத்தில் வேறு பல இடங்களில்நடைபெற்ற தொழில் முனைவோர் சங்கங்களின் கூட்டங்களில் பங்கேற்றஅமைச்சர்கள் இவ்வாறான விமர்சனங் களைப் புறக்கணித்திருக்கிறார்கள்.
முந்தைய ஐமுகூ அரசாங்கத்தை ஒரு‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அடிக்கடி பிரதமர் நரேந்திரமோடி குறை கூறிக் கொண்டிருப்பார். 
அதுபோல் அல்லாமல் இப்போதைய பாஜக தலைமையிலான அரசாங்கத்தை ஆர்எஸ்எஸ் இயக்கம் நேரடி யாகவே தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கிறது. 
ஆர்.எஸ்.எஸ்,வரலாற்றைப் பார்ப்போம். 
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்ச ராக இருந்த சர்தார் பட்டேல்,  காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்தார். 
1948 பிப்ரவரி 4 அன்று வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் அறிக் கையில் அவர் கூறியிருந்ததாவது: “சங் பரிவாரத்தின் ஆட்சேபணைக்குரிய மற்றும் தீங்கு பயத்திடும் நடவடிக்கைகள் எவ்விதத் தடைகளும் இன்றி தொடர்ந்திருக் கின்றன. 
சங் பரிவாரத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட வன்முறைக் கலாச்சாரம் பல அப்பாவி உயிர்களைப் பலிவாங்கி இருக் கிறது.
ஆர்எஸ்எஸ் இயக்கம் தங்கள் மீது விதித்துள்ள தடையை விலக்கிக் கொள் வதற்காக பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும் என்று அரசாங்கத்தைக் கோரி வந்தது. 
1948 நவம்பர் 14 அன்றுபட்டேலின் உள்துறை அமைச்சகம் ஆர்எஸ்எஸ் தலைவர் எம்எஸ் கோல்வால்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து, ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது கோல்வால்கர் அளித்த பல வஞ்சகமான வாக்குறுதிகள் குறித்தும் அதில் குறிப்பிடப் பட்டிருக் கிறது. 
“ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கூறு வதற்கும், அவர்களைப் பின்பற்றுவோர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது,’’ என்று குறிப்பிட்டு, பட்டேல் தடையை விலக்கிட மறுத்துவிட்டார்.
ஆர்எஸ்எஸ் இயக்கம்ஒரு ‘கலாச்சார ஸ்தாபனமாக’ மட்டுமேஇருந்திடும் என்றும், ‘ரகசிய நடவடிக்கைகளைக் கைவிடும்’ என்றும், ‘வன்முறை யைத் துறந்திடும்’ என்றும் அரசாங்கம் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் மிகவும் வளைந்து கொடுத்து, ஏற்றுக் கொண்ட பிறகுதான், 1949 ஜூலை 11 அன்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. 
அன் றையதினம் அது அளித்திட்ட அத்தனை ‘நிபந்தனைகளையும்’ இன்றைய தினம் அது அப்பட்டமாக மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆர்எஸ்எஸ் இயக்கம் அரசியல் அரங் கில் செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையைப் புறந்தள்ளுவதற்காக, தனக்கென்று ஓர் அரசியல் கட்சியை மேற் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கி யது.
 நேருவின் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்திட்ட ஷியாமா பிரசாத்முகர்ஜியின் உதவியுடன் பாரதிய ஜனசங் கத்தை ஆரம்பித்திட தன் ஊழியர்களை அனுப்பி வைத்தது. 
அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் தீன தயாள் உபாத்யாயா, அடல் பிகாரி வாஜ்பாயி, எல்கே அத்வானி மற்றும் எஸ்எஸ் பண்டாரி ஆகி யோர் அடங்குவர்.
 (ஆதாரம்: பாசு, தத்தா, சர்க்கார் மற்றும் சென், காக்கி அரைக் காலா டைகள்: காவிக்கொடிகள் 1993, ப, 48)
1977இல் ஜன சங்கம் ஜனதா கட்சி யுடன் இணைந்தது. 
இந்திராகாந்தி கொண்டு வந்த அவசரநிலை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமைந்த மத்திய அரசாங்கத்தில் அதன் தலைவர்களும் அமைச்சர்களானார்கள். 
இந்தஅமைச்சர்கள் மற்றும் இவ்வியக்கத்தைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்களும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திலிருந்து வெளியேற மறுத்ததாலும், தங்கள் ‘இரட்டைஉறுப்பினர்பதிவு’ பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க மறுத்ததாலும், ஜனதா அரசாங்கம் கவிழ்ந்தது. 
அதன்பின்னர் ஜனதாகட்சியுடன் இணைந்திருந்த முந்தைய ஜன சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தனியே வந்து பாரதிய ஜனதா கட்சியை அமைத்தார்கள். 
இவ்வாறுதான் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகவழுவாது செயல்பட்டுக் கொண்டிருக் கிறது. 
இது இப்போது மிகவும் தெளிவாகி விட்டது. 
2014 தேர்தலின்போது பாஜக மக்களுக்கு அளித்திட்ட பல வாக் குறுதிகளையும் அமல்படுத்துவதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் ஆர்எஸ் எஸ் இயக்கத்தின் நிகழ்ச்சிநிரல் ஒன்றை மட்டுமே முன்னெடுத்துச் செல்ல தீவிர மாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு செய்வதற்கான கட்டளையை அது மக்களிடமிருந்து பெறவில்லை. 
புதியசாலை அல்லது புதிதாகப் பெயர் வைக்க வேண்டிய இடங்களில், ஒளரங்கசீப் சாலையை, முன்னாள் குடியரசுத் தலை வர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவைப் போற்றுவதற்காக மாற்றி இருக்கிறது. இதன்பின்னால் உள்ள மதவெறி நோக்கம் மிகவும் தெளிவானது.
மற்றவர்கள் பெயரை மாற்றினால் எதிர்ப்புகள் எழலாம் என்று காத்திருந்து தங்களுடன் ஒத்துப்போன அப்துல் கலாம் பெயரை  முஸ்லீம் பெயரை வைத்துள்ளனர்.
 இந்தியாவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று யார் குரல் கொடுத்தாலும், உலக நாடுகள் பலவற்றில் மரண தண்டனைகள் கிடையாது, அந்த நாடுகளுடன் இந்தியாவும் சேர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் அவ்வாறு கோரிய போதிலும்கூட, யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட பின்னணியில், அவ்வாறு கூறுவோர் அனைவரும் பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் என்று முத் திரை குத்தப்பட்டார்கள். 
நாட்டிலுள்ள நீதிபரிபாலன அமைப்புகள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்றும், பாபர் மசூதி தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, பம்பாயில் நடைபெற்ற வகுப்புவாதக் கலவரங்களில் ஈடுபட்ட கயவர்கள் மீது, ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் அடையாளம் காட்டியபடி, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருபவர் கள் எல்லாம் ‘தேச விரோதிகள்’ என முத்திரைகுத்தப்பட்டார்கள். 
முஸ்லிம் பிரச் சனை ஓர் இந்தியப் பிரச்சனை என்று நினைவுகூர்ந்து அற்புதமானமுறையில் உரையாற்றியுள்ள நம் குடியரசுத் துணைத்தலைவர் அவ்வாறு பேசியமைக்காகக்குறிவைத்துத் தாக்கப்பட்டுக்கொண் டிருக்கிறார். 
நம் நாட்டின் மக்கள் தொகை யில் முஸ்லிம்கள் 14 சதவீதமாகும். அதாவது 180 மில்லியன். (18 கோடி பேர்)
உலகில் இரண்டாவது பெரிய அளவிலானவர்களாக, நாட்டின் சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டின் சுதந்திர இயக்கத்தின் போதும், இப்போது நவீன இந்தியாவிலும், முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர் கள் நாட்டின் பிரிக்கமுடியாத அங்கமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 
சீத்தாராம் யெச்சூரி
இந்தஉரை, நம் அனைவரையுமே உள்ளாய்வு செய்து, செயல்படத் தூண்டியிருக்கிறது. குடியரசுத் துணைத் தலைவரைக் கடிந்து கொண்டிருப்பதன் மூலம், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, மீண்டும் ஒருமுறை, இந்தியாவின் மிக உயர்ந்த அளவிலான நாகரிகத்தின் வீரியத்தையே, குலைத்திடக்கூடிய விதத்தில் துளையிட்டுக் கொண்டிருக்கிறது. 
பல மதங்கள் சங்கமித்த இந்திய நாகரிக வளர்ச்சி ஆர்எஸ்எஸ்பரிவாரத்தால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. வளமான நம் நாகரிகத்தின் உள்ளடக்கம் பேணிப் பாதுகாக்கப்பட்டாக வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, அதனைத்தகர்க்கக்கூடிய விதத்தில் அனைத்து விதமான முயற்சிகளிலும் இன்றைய தினம்இவர்கள் இறங்கியிருக்கிறார்கள். 
ஒளரங் கசீப் அன்றைய தினம் அனைவராலும் ‘பாது ஷா’ என்று அன்புடன் அழைக்கப் பட்டு சிம்மாசனம் ஏறியவர். வகுப்புவாதம் இன்று மனிதகுல நாகரிகத்தில் உயர்ந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த நாட் டை அவ்வாறு மேலே செல்லாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறது. 
பாஜக அரசாங்கம் மேற்கொண்டிருக்கிற மாபெரும் கயமைத்தனமாகும் இது. 
ஆட்சியைப் பிடிப்பதற் காக அது மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளுக்குத் துரோகம் செய்திருப் பதைவிட மிகவும் மோசமான விஷயம் இதுவாகும். 

                                                                                                                        -சீத்தாராம் யெச்சூரி .

நன்றி: தி இந்துஸ்தான் டைம்ஸ், 8-9-15தமிழில்: ச.வீரமணி.
==================================================================================================
இன்று,
செப்டம்பர்-09.
  • வட கொரியா குடியரசு தினம்(1948)
  • கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி  பிறந்த தினம் 
  • ஜான் ஹோர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்(1839)
  • கலிபோர்னியா, 31வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது(1850)
  • அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி., எனப் பெயரிடப்பட்டது(1791)
உலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா., சார்பில்  உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
எழுத்தறிவு மற்றும் நீடித்த சமூகம் என்பது இந்தாண்டு மையக்கருத்து. ஒரு நாட்டின் எழுத்தறிவு சதவீதத்தை பொறுத்தே அந்நாட்டின் சமூக வளர்ச்சி அமைகிறது. ஒரு மொழியில்புரிதலுடன் சரியாக பேசவும்எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். இது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமைகுழந்தை திருமணம்மக்கள் தொகை பெருக்கம்,வேலைவாய்ப்பின்மைபாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும்.
எழுத்தறிவு மூலம்அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். உலகளவில் 18வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கையில், 75.7 கோடி பேர் எழுத்தறிவு இல்லாதவவர்களாக உள்ளனர். எழுத்தறிவு பெறாதவர்களில் மூன்றில் பங்கு பேர் பெண்கள். பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும். இந்தியாவின் நிலைகடந்த 2011ன் படிஇந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது. 
இதில் ஆண்கள் 82.14 சதவீதம்பெண்கள் 65.46 சதவீதம். இது 2001 கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகம். தமிழக எழுத்தறிவு சதவீதம், 80.4 சதவீதமாக உள்ளது. இது 2001ஐ விட 6.9 சதவீதம் அதிகம்.


==================================================================================================
மிரட்டி பணம் பறிக்கும் செயலி.
ஆண்ட்ராய்ட் செல்பேசி உபயோகிப்பவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமத்தனமான ஆண்ட்ராய்ட் திறன் பேசி செயலி ஒன்று தற்போது செல்பேசி உபயோகிப்பவர்களை அதுவும் இணையத்தை நோண்டிக்கொண்டிருப்பவர்களை குறிவைத்து இயங்க்கிகொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. 
'அடல்ட் பிளேயர்' என்ற இந்த செயலி பயனாளிகளுக்கு ஆபாசப் படங்களைக் காட்டும், அதில்  மூழ்கி வாயில் நீர் ஒழுக பார்த்து ரசித்துக்கொண்டிருக்கையில்  அது செல்பேசியின் முன்பக்க செல்பி காமிராவை  ரகசியமாக இயக்கி பயனாளியை படம் பிடித்துவிடும்.
பின்னர் இந்த செயலி உங்கள் செல்பெசியையே  செயலற்றுப்போகச் செய்துவிடும். 
சொல்கிற கணக்கில் ஐநூறு டாலர் பணம் செலுத்தினால்தான் உங்கள் அலை பேசி மீண்டும்  இயங்கும்  என்று அச்செயலி அனுப்பும் செய்தி மட்டும் உங்கள் அலை பேசியில் அடிக்கடி வந்து  எச்சரிக்கும். 
அதன் படி பணம் செலுத்தாமல் மறுபடியும் உங்கள் அலைபேசியை  பயன்படுத்துவது  சிரமம்.
இப்படியாக மிரட்டிப் பணம் பறிக்கும் செயலிகளை உருவாக்குவது ஒரு லாபகரமானஇணையக் குற்றதொழிலாக   பரவி வருகிறது. 
தனிப்பட்ட தரவுகளை அழித்துவிடுவோம், வெளியில் பரவவிட்டு விடுவோம் அல்லது அலைபேசியை  முடங்கச் செய்துவிடுவோம் என்று மிரட்டுகிற இப்படியான செயலிகளுக்கு  'ரேன்சம்வேர்' என்று பெயர் வைத்துள்ளனர்.
எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்?
==================================================================================================
மும்பை மலபார் ஹில்சில் உள்ள பழமையான பங்களாவை 425 கோடி ரூபாய்க்கு  ஆதித்யா பிர்லா குரூப் அதிபர் குமாரமங்கலம் பிர்லா வாங்குகிறார். 

மும்பையில் உள்ள மலபார் ஹில்ஸ், வசதியானவர்கள் வசிக்கும் பகுதி. 
இங்குள்ள ஜாசியா ஹவுஸ் என்ற பழமையான பங்களா. 
ஒரு ஏக்கர் இடத்தில் 30000 சதுர அடியில் இரண்டு மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது. 
பழமையான இந்த பங்களா அங்கு மிக பிரபலம். இதன் உரிமையாளர்கள் அருண் மற்றும் ஷியாம் ஜாசியா ஆகியோர் பேப்பர் மில் உரிமையாளர்கள். 
இந்த பங்களாவை   விற்பனைசெய்ய அதன் உரிமையாளர்கள் முடிவு செய்தனர். 

இதை விற்கும் பொறுப்பு ஜேஎல்எல் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 
பங்களாவை வாங்க பல கோடிகளில் ஒப்பந்த புள்ளிகளை மூன்று பேர்கள் கொடுத்தனர். பங்களாவுக்கு 425 கோடி ரூபாய் விலை எனக் குறிப்பிட்டு, மோகன்குமாரமங்கலம் பிர்லா விண்ணப்பித்தார்.  குமாரமங்கலத்தின் விலை தான் அதிகம் . 
எனவே அப்பங்களா அவருக்கே முடிவாகியுள்ளது., சமீபத்தில் மும்பையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட சொத்தாக இது கருதப்படும்.
===================================================================================================
ஆப்பிள் நிறுவனம், ஒரு முறைக்கு ஏதாவது ஒரு தயாரிப்பை மட்டும் அறிமுகம் செய்வது வழக்கம்.இன்று  நடைபெற உள்ள நிகழ்ச்சியில், ஒன்றுக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம், இதுவரை சான்பிரான்ஸ்சிஸ்கோ மாஸ்கோன் சென்டரில், தனது தயாரிப்புகளுக்கான அறிமுக நிகழ்ச்சிகளை நடத்திவந்தது. நாளை நடக்க உள்ள நிகழ்ச்சியை, பிரமாண்டமாக நடத்த எண்ணி, பில் கிரகாம் சிவிக் ஆடிட்டோரியத்தை தேர்வு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில், 2 புதிய வகை ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 
3டி டச் டிஸ்பிளே, போர்ஸ் டச் டிஸ்பிளே வசதியுடன் கூடிய இந்த ஐபோன்களுக்கு ஸ்டான்டர்ட் 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் மாடல் என்று பெயர் வைக்கப்படலாம். 
ஐஓஎஸ் 9 அப்டேட் உடன் மல்டி விண்டோ மல்டிடாஸ்க்கிங் திறன் பெற்ற ஐபேட் ப்ரோவும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சுபிரீயர் ஏ8 புராசசர், டச் பேடுடன் கூடிய ரிமோட் மற்றும் புதிய யூசர் இன்டர்பேஸ் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய ஆப்பிள் டிவியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதேபோன்று, ஆப்பிள் வாட்ச், ஹோம் கிட் என மேலும் சில புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
========================================================================================================
முகனூல் .

Antony Parimalam
என்ன பதில் சொல்வது ?
சென்னையில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் துறைமுகத்திற்கு செல்ல நல்ல சாலை வேண்டும். அதைதான் முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பார்கள்.
ஆனால் தற்போதைய அரசு துறைமுகம் - மதுரவாயல் சாலைப்பணிக்கு நான்கரை ஆண்டுகளாக தடையை ஏற்படுத்தி நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் நான்கு வழிச்சாலைகளே போடப்படவில்லையே.


புதிதாக ஏதாவது துறைமுகமோ விமான விரிவாக்கப்பணியோ தொடங்கி பணிகள் நடைபெறுகிறதா?
இந்த நான்காண்டுகளில் அரசு எத்தனை மெகாவாட் மின்சாரம் உற்பத்தி சுயமாக செய்துள்ளது?
அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருந்தால் முதலீட்டாளர்கள் தானாக வந்திருப்பார்களே .
நாளை முதலீட்டாளர்கள் அடிப்படை கட்டுமானம் தொடர்பான கேள்விகள் எழுப்பினால் என்ன பதிலை இந்த அரசால் சொல்லமுடியும்? ??