இந்திய வளர்ச்சிக்கு உதவுகிறதா அந்நிய முதலீடுகள்?
அந்நிய முதலீடு பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கே வித்திட்டிருக்கிறது
கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தித் துறையின் நிகர மூலதன உருவாக்கத்தில் அந்நிய நேரடி முதலீட்டின் பங்களிப்பு வெறும் 10% அளவில்தான் இருக்கின்றன என்பதை இந்திய ரிசர்வ் வங்கி அளிக்கிற தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
நிகர மூலதன உருவாக்கத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்களே பெரும் பங்களிப்பை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளே அனுமதிப்பதால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்தே வெளியேறிவிடக்கூடிய நிலைமை உருவாகும் என்ற எச்சரிக்கை உணர்வு அரசுக்கு இருப்பதாகவே தெரியவில்லை.
எங்கு நோக்கினும் வளர்ச்சி முழக்கங்கள். அந்நிய முதலீடு… அந்நிய முதலீடு… எனும் கோஷங்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் உண்மையிலேயே உதவி செய்கின்றனவா?
நிகர மூலதன உருவாக்கத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்களே பெரும் பங்களிப்பை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளே அனுமதிப்பதால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்தே வெளியேறிவிடக்கூடிய நிலைமை உருவாகும் என்ற எச்சரிக்கை உணர்வு அரசுக்கு இருப்பதாகவே தெரியவில்லை.
லாபம்தான் குறிக்கோள்!
எந்தவொரு முதலீடும் லாபத்தை முன்னிட்டே.
அதுவும் அந்நிய முதலீடு என்னும்போது சந்தேகத்துக்குச் சிறிதும் இடமின்றி அது மிகைலாபம் குவிக்கும் திட்டமே. அதிலும் அந்நிய நேரடி முதலீடு என்பது இட்ட முதலீட்டைத் திரும்பப் பெறுவதில் நீண்ட கால நடைமுறைக் கொள் கையை அடிப்படையாகக்கொண்டது.
அதனால், முதலீடு செய்யும் நாடுகள் முதலீடு செய்வதிலுள்ள நடைமுறை களை எளிமைப்படுத்துவதில் தொடங்கி, தொழில் சச்சரவு களுக்கு மாற்றுத் தீர்வழிகளை உருவாக்குவதுவரை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமது முதலீட்டின் உறுதியான பாதுகாப்புக்கு முயற்சிகளை மேற்கொள் கின்றன. முதலீடு செய்யப்படும் நாடுகளும் அதை மறுப்பின்றி ஏற்றுக்கொண்டாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக் கல்ல.
ஆனால், தமது பொருளாதாரம் மிக நூதனமான முறையில் சுரண்டப்படுகிறது என்பதை அறிந்ததைப் போலவே இந்திய அரசு காட்டிக்கொள்வதில்லை. மாறாக, முதலீட்டின் அளவு அதிகரிப்பதைத் தமது சாதனையாக முன்னிறுத்துகிறது.
1990-களுக்குப் பிறகு, அந்நிய முதலீட்டுக்கு இசைவாக இந்தியாவில் பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
1999-ல் கம்பெனிகள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, கம்பெனிகளுக்கு இடையேயான கடன்கள் மற்றும் முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
தொழில் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளின்படி, வெளிநாட்டு முதலீட்டாளர் தமது உள்ளூர் கூட்டாளிகளின் துணைகொண்டு கம்பெனி நடவடிக்கைகளில் வெட்டு அதிகாரத்தைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் - சட்ட விரோதம்!
இருவேறு நிறுவனங்களுக்கு இடையே எழும் வழக்குத் தகராறுகள் நீதிமன்றத்துக்குச் சென்று கால தாமதத்தை ஏற்படுத்துவதைத் தவிர்த்திட, இசைவுத் தீர்ப்பாயம் மற்றும் சமரச முறைகளை மாற்றீடாக அரசே பரிந்துரைக்கிறது. இவற்றோடு தொழிலாளர்களிடம் இருந்த ஒரே ஆயுதமான வேலைநிறுத்தம் செய்யும் உரிமை யும் சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைமுறை யிலுள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குப் பொருந்தாது. ஆனாலும் கூட, இவை எல்லாம் போதாது, இன்னும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று தாராளமயத்தை ஆதரிக்கும் சர்வதேசப் பொருளாதாரப் பத்திரிகைகள் ஆலோசனைகளை அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கின்றன.
இந்தியாவில் நடைமுறை யிலுள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குப் பொருந்தாது. ஆனாலும் கூட, இவை எல்லாம் போதாது, இன்னும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று தாராளமயத்தை ஆதரிக்கும் சர்வதேசப் பொருளாதாரப் பத்திரிகைகள் ஆலோசனைகளை அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கின்றன.
அண்டை நாடான சீனா, உலகளவிலான அந்நிய நேரடி முதலீட்டில் 10%-ஐப் பெற்றிருந்தாலும், இந்தியா அளவுக்குப் படுமோசமான சமரசங்களைச் செய்துகொள்ள வில்லை.
அந்நாட்டின் வலுவான உட்கட்டமைப்பு வசதிகள், சந்தைப் பரவலாக்கம், எளிதில் கிடைக்கும் உழைப்புச் சக்தி ஆகியவற்றின் காரணமாக ஈர்க்கப்பட்டே வெளிநாடுகள் சீனாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன. ஆனால், இந்தியா உள்ளிட்ட மற்ற எல்லா நாடுகளிலும் ஏறக்குறைய ஒரே நிலைதான். மிகக்குறைவான ஊதியத்தில் தொழிலாளர்களை அமர்த்திக்கொள்வதன் மூலம் முதலீட்டு நிறுவனங்கள் தமது உற்பத்திச் செலவைப் பெருமளவு குறைத்துவிடுகின்றன.
அதைப்போலவே அந்நிய முதலீடு செய்யப்படும் நாடுகளில் மட்டுமின்றி, அந்நாட்டோடு ஏற்றுமதி இறக்குமதி ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளையும் சேர்த்து, தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விநியோகிப்பதற்கான விரிந்து பரந்த சந்தைப் பரப்பையும் எளிதாகச் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு உற்பத்தி, விநியோகம் என்று இரண்டு நிலைகளிலும் கிடைக்கிற லாபம் அந்நிய நேரடி முதலீட்டை மேலும் ஊக்கப்படுத்துகிறது.
மீள்வது சுலபமல்ல
மீள்வது சுலபமல்ல
அந்நிய நேரடி முதலீட்டை ஏற்றுக்கொண்டுள்ள நாடுகள் தமது முதலீட்டாளர்களின் சந்தைப் பரப்பைக் கவனத்தில் கொள்ள நேரும்போது, தாம் வணிக உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ள நாடுகளுடனான அயலுறவுக் கொள்கையிலும் தன்னிச்சையாக முடிவெடுத்து விட முடியாது. அவசியமற்ற அரசியல் அழுத்தமொன்றை ஒரு நாடு வலிந்து ஏற்றுக்கொண்ட பின்னால், அதிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதில் சாத்தியமாகிவிடுவதில்லை.
பன்னாட்டு வணிகப் போட்டியைச் சமாளிக்க இயலாத நிலையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் வளரும், வேலைவாய்ப்புகள் பெருகும், பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதுதான் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவான ஒரே வாதம்.
ஆனால், உள்நாட்டிலேயே முதலீட்டைத் திரட்டுவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதித்து, இருக்கிற வாய்ப்புகளை இழந்துவிட்டதோடு, அதை அந்நியர்களுக்கு அளித்துவிட்டது இந்திய அரசு.
வங்கித் துறையில் 74% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டாகிவிட்டது.
காப்பீட்டுத் துறையிலோ 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளில் அந்நிய முதலீட்டாளர்களின் சந்தைப் பரப்பு விரிவடைந்துகொண்டே இருக்கிறது.
அவர்களது உற்பத்திப் பொருட்களின் விற்பனை அளவும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.
உதாரணத்துக்கு ஒன்றைப் பார்ப்போம்.
இரும்பு மற்றும் எஃகு உருக்காலைகள் உள்ளிட்ட ஆதாரத் தொழில் துறைதான் உற்பத்தித் துறை இயங்குவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. அதிகளவு முதலீட்டையும் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கிற இந்தத் துறைதான் அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் தேவையான இயந்திரங்களையும் கருவிகளையும் தயாரிக்கிறது.
இந்த ஆதாரத் தொழில்துறையின் தேவை என்பதும்கூட நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டும் ஒரு முக்கிய குறியீடாகக் கருதப்படுகிறது. இத்துறையில் 1985-யே 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுவிட்டது.
ஆனாலும் 2000 தொடங்கி 2012 வரையிலான 12 ஆண்டுகளில் இந்தியாவில் செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டில் இத்துறையில் செய்யப்பட்ட முதலீடு வெறும் 4% மட்டுமே.
அந்நிய நேரடி முதலீட்டால் தொழில்நுட்பப் பரிமாற் றங்கள் நடக்கும், அதன் காரணமாக உள்நாட்டுத் தொழில் துறையின் தொழில்திறன் மேம்படும் என்றும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. பன்னாட்டு உடன்படிக்கை களை அடிப்படையாகக்கொண்டு இயற்றப்பட்டுள்ள அறிவு சார் சொத்துரிமைச் சட்டங்களின்படி, காப்புரிமைச் சட்டங்கள் வணிகத்தில் ஏகபோக உரிமையைத் தக்கவைத்துக் கொள்ளவே உதவும்.
புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழில் நுட்பங்கள் யாவும் இனி அதன் கண்டுபிடிப்பாளருக்கே முழுவுரிமை கொண்டதாக இருக்கும். அத்தொழில் நுட்பத்தைப் பிறிதொருவர் பயன்படுத்த வேண்டுமெனின் அதற்கான காப்புரிமைத் தொகையை அளித்தாக வேண்டும். அதாவது, உற்பத்திப் பொருட்களை விநியோகிப்பது போலவே தொழில்நுட்பமும் அதற்கான விலையைப் பெற்றுக்கொண்ட பிறகே பரிமாற்றம் செய்யப்படும்.
அதுவும் ஒரு வணிகமே.
இன்றைக்கு ஏதாவது ஒரு வழியில், எப்படியாவது அந்நிய முதலீட்டைக் கவர்வது ஒன்றே மத்திய - மாநில அரசுகளின் முக்கியமான பணியாக இருக்கிறது. அந்நிய முதலீடு என்கிற நாற்றினை எங்கிருந்தோ கொண்டுவந்து இங்கே ஊன்றி, தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு, அறுவடையும் முடித்துப் பலனை எங்கோ கொண்டுபோவதில் வயல்காரனுக்கு என்னதான் பயன்?
இவனுக்கு குத்தகையும் இல்லை, கூலியும் நிரந்தரமில்லை!
- செல்வ புவியரசன்,
வழக்கறிஞர், வணிகச் சட்டத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர், தொடர்புக்கு:selvapuviyarasan@gmail.com
முகனூல்
வாக்கு வாங்க என்ன வேடமெல்லாம் போடவேண்டியிருக்குது ?
1,2,3.சாலையோரம் தட்டச்சு செய்து பிழைத்துக்கொண்டிருந்த முதியவரின் தட்டச்சு எந்திரத்தை உடைக்கும் காவலர்.
4.அதே முதியவருக்கு உடைந்த தட்டச்சு எந்திரத்துக்குப்பதில் புதிய தட்டச்சு வாங்கிக்கொடுக்கும் காவல் கண்காணிப்பாளர்.
மூஞ்சு மேலே என் பீச்சாங்கையை வைக்க.
ஜப்பானின் ஆளும் கட்சிக்கும் எதிர் கட்சிக்கும் இடையே பாராளுமன்றத்தில் கடும்' சண்டை' நிகழ்ந்தது. செனெட் அவையின் சிறப்புக் கமிட்டியின் பிரதிநிதிக் குழுத் தலைவர், எதிர் கட்சியின் உறுப்பினரால் சூழ்ந்துக்கொண்டு தாக்கப்படும் காட்சி
========================================================================
பிரம தேவனின் ஒரு தலை கிள்ளப்பட்டதற்கு காரணம்!
எச்சரிக்கை:இக்காரணம் நமது சொந்த சரக்கல்ல புராணங்களில் உள்ளவை.
பிரம்மா சகல சிருஷ்டிக்கும் வேதத்திற்கும் கர்த்தர். மனைவி சரஸ்வதி. ஆயுதம்-பாசம், கொடி-மறை, வாகனம்-அன்னம் முதலிய ஆசனம்-தாமரை, பொன்மேனியுடையவர் இந்த பிரமம் முதலில் 5 முகத்தோடிருந்தார். பிறகு நான்முகம் ஆனார். ஓர் முகம் இல்லாமைக்குக் காரணம் பல வாறு கூறப்படுகிறது.
தேவர் கூடிச்சிவனுக்குக் கல்யாணம் செய்யு முன் பிரமன் அக்கலியாணப் பெண்ணாகிய பார்வதியைக் காண நினைத்தார். அவள் பெருவிரலை மாத்திரம் காணமுடிந்தது. உடனே காமம் தலைக்கேறிற்று. விந்து வெளிப்பட்டுப் பூமியில் விழுந்தது. அதைப் பெருவிரலாலே தேய்த்தார். கோபி சந்தனப்பார்ப்பனர் உண் டாயினர்.
இருவிரலால் தேய்த்தார்; நாமக்காரப் பார்ப்பனர் உண் டாயினர். மூன்று விரலால் தேய்த்தார். விபூதிப் பார்ப்பனர் உண்டாயினர். அனைவரும் வேதகோஷம் செய்வது கேட்ட சிவன் யோசிக்க-பிரமனின் அயோக்கியத்தனம் தெரிந்தது. உடனே சிவன் பிரமனின் 5 தலையில் ஒரு தலையைக் கிள்ளினார்.
எவற்றையும் ஆக்கி அழிக்கும் ஒரு பெரும்பொருளின் அம்ஸமென்று அவ் வரலாற்றிற் குறிக்கப்படும் பிரமனை ஒப்புக்கொள்வது எங்ஙனம்? மனிதரிலும் கடைப்பட்ட மனிதனும் செய்தலில்லாத செயல்கள் இவ் வரலாற்றிற் குறிக்கப்படுகிறது. மக்களின் அறிவை மாய்க்கச்சிறிதும் யோக்கியப் பொறுப்பற்றவர்களால் இது உண்டு பண்ணப்பட்டி ருக்கிறது. இதுவன்றிப் பிரமனின் ஒரு தலை பறிபோனதற்கு மற்றொரு வரலாறும் வரைந்துள்ளனர்.
சிவனுக்கும் பிரமாவுக்கும் 5 தலைகள் இருந்ததால் சில வேளைகளில் இவர் மனைவிமார் அடையாளம் கண்டறியக்கூட வில்லை. ஆதலால் சிவன் பிரமனின் ஒரு தலையைக் கிள்ளினார். என்ன ஆபாசப்பொய்! பார்வதியிம் - சரஸ்வதியும் தம் கணவர் களை அடையாளம் கண்டறிய கூடவில்லையா?
அனைத்தும் சிருஷ்டித்த பிரமன் சிவனல் கிள்ளப்பட்ட தலையைச் சிருஷ்டிக்க முடியாதா? ஜீவர்கள் கதி இன்னசமயம் இவ்வாறு ஆகும் என்று தலையெழுத்தெழுதும் பிரமாவின் தலை கிள்ளப்பட்டது. இப்படி இவர் தலையில் எழுதியது யார்?
இதுவன்றிப் பிரமன் தலை காலியானதற்கு மற்றொரு கதை.
பிரமனின் மகள் ஊர்வசி, மகள் மேல் தகப்பன் காதல் கொண்டான். ஊர்வசி தந்தையைப் புணர நாணினள். ஆனால் இருவரும் மான்களின் உருவங்கொண்டு கலந்தனர். இந்த ஆபாச சேர்க்கையைக் கண்ட சிவன் பிரமன் தலையில் ஒன்றை வெட்டினான். இதனால் பிரமதேவன் யோக்கியதை நன்றய் விளங்கும்.
மக்களைச் சிருஷ்டித்த மகா பெரியாரின் யோக்கியதை இவ்வாறனால் பிறருக்குக் கேட்பானேன்? காமப்பித்துடைய மூடர் கட்டிவிட்ட கட்டுகளை நம்மவர் இன்னும் எத்தனை நாள் விட்டுவைத்திருக்க முடியும்? இதுவன்றி இன்னொரு காரணம்:-
பிரம்மாவுக்கும், சிவனுக்கும் சண்டை ஏற்பட்டது. நான் தான் உன்னைச் சிருஷ்டித்தேன் என்று பிரமன் சொன்னதால் சிவன் பிரம்மனின் ஒரு தலையை வெட்டினார். மற்றெல்லாவற்றிலும் இது அதிக வேடிக்கை! நன்று. நான் என்னும் அகந்தையும் இவர்களை விட்டபாடில்லை.
கர்வங் காரணமாகச் சண்டையும் ஒன்றா? பிரமனும், சிவனும் சேர்ந்து உலகு உய்ய நல்ல பாடங் காட்டியருளு கின்றனர். நன்று! அனைத்தையும் சிருஷ்டித்ததாய்ச் சொல்ல ஓர் பிரமனைச் சிருஷ்டிப்பானேன்? அப்பிரமாவுக்கு 5 முகம் என்பா னேன்? பிறகு நான்கு முகமாக்குவானேன்? ஒரு முகம் தீர்ந்ததற்கு கதை வளர்ப்பானேன்? அந்தக்கதையையும் பலவிதமாக ஒன்றுக்கொன்று முரண்பட உளறி வைப்பானேன்?
இதையெல்லாம் சொல்லி மக்களிடம் போர் கிளப்புவானேன்? இந்த புராணங்களைச் சொல்லும் சோம்பேறிகட்கு வஞ்சகர்கட்குப் பணத்தை விரயம் செய்யும் படி விடுவானேன்? இவைகளால் மக்கள் இந்நாள் மட்டும் அடைந்த பயன் என்ன? இனித்தான் என்னபயன் ஏற்படக்கூடும் என்பதை வாசகர்கள் யோசிக்க! அதனோடு இந்த ஆபாச நடனத்தையுடைய பிரமன் தந்ததாய்ச் சொல்லும் வேதம் எப்படிப் பட்டதாயிருக்கும் என்பதையும் யோசிக்க!
(புதுவை முரசு, 1930)
"2014ல் மோடி பிரதமராகி இந்தியாவை ஒளிர வைப்பார்" என்று 1555ம் ஆண்டே நாஸ்டர்டாம் சொல்லிட்டாராம், தினமலர் சொல்லுது. முடியலடா சாமி !
Surya Born To Win
========================================================================================